Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டொ அமைப்பில் பின்லாந்தின் இணைவு வரமா சாபமா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலொன்றான பின்லாந்து "நாட்டொ" அமைப்பில் இணைவதற்கான அனைத்துத் தடைகளையும் தாண்டி வெற்றியடைந்துள்ளது.
வியாழக்கிழமை மாலையில் துருக்கி நாட்டின் நாடாளுமன்றில் அதன் அங்கத்தவர்களால் பின்லாந்தை இணைத்துக்கொள்வதில் எமக்கு எந்தத் தடையுமில்லை எனும் பிரேரணை நிறைவேறியதன் பின்னராக, அந்நாட்டில் அதிபருக்கு அந்தப்பிரேரணையில் நகல் அனுப்பப்பட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அந்நாட்டு அதிபர் ஏற்றுகொண்ட கடிததை அமெரிக்கவிலுள்ள நாட்டொ தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
நாட்டொவில் இணைவதற்கான தடைகள் நீங்கிவிட்டதாக பின்லாந்து நாட்டின் அதிபர் திரு செளலிநீனிஸ்தோ அவர்கள் வெள்ளி காலையில் தனது "டுவீற்றர்" செய்தியின்மூலம் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்திருந்ததுடன் அதற்காகப் பணிசெய்த அனைத்து அதிகாரிகளுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் அமைசரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
இன்னும் ஒரு சில சம்பிரதாயமான செயற்பாடுகள் முடிவடைந்ததும் உயிர்த்தந்ஜாயிறுக்கு முன்பு இந்த அங்கத்துவ அறிவிப்பை நாட்டோ அதிகாரபூர்வமாக அறிவுக்கும் என பின்லாந்தின் அரசியல் விவகாரங்களை உற்றுநோக்கும் சிறப்பியல்புள்ளோர் ஊகம் தெரிவிக்கிறார்கள்.
இதன்மூலம் நாட்டொ அமைப்பு நாடுகளில் ஐரொப்பிய ஒன்றிய நாடு ஒன்று தற்போது அப்பிராந்தியத்தில் அச்சுறுத்தல் செய்யும் ரஸ்யாவுடன் மிக நீண்ட எல்லையை வைத்திருக்கும் நாடாகப் பின்லாந்து இணைவது பிராந்தியத்தில் மிகவும் முக்கிய நிகழ்வாகக் கணிக்கப்படுகிறது.
தவிர நாட்டோவுடனான தனது அங்கத்துவத்துக்காக பின்லாந்து, வருடம் ஒன்றுக்கு தனது தேசிய வருமானத்தில் இரண்டு விகித்ததுக்குச் சிறிது அதிகாமகச் செலுத்தவேண்டிவரும்.
அனைத்தும் நிகழ்ச்சி நிரலுடன் நடந்தால் கூடியவிரைவில் பலம்மிக்க நாட்டொ அங்கத்துவ நாடுகள் தனது படையணியையும் இராணுவத்தளபாடங்களையும் பின்லாந்தில் ரஸ்ய எல்லைக்கு அருகாமையில் இலகுவாக நாகத்துவதற்கு ஏதுவான பிரதேசங்களில் சேமிக்கும்.
முக்கியமாக இரண்டாம் உலக யுத்தத்தின்போது ரஸ்யாமீது படையெடுக்க கிட்லரது நாஜிப்படைகள் பின்லாந்தில் நிலையெடுத்த பின்பு ஜேர்மனி, வரலாற்றில் இரண்டாவது தடவையாக பின்லாந்து நாட்டில் தனது படையணிகளை நிலைநிறுத்தும்.
மாறாக நாட்டொ அமைப்பில் சேர்வதற்காக பின்லாந்து தனது நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்று வாழும் குர்திஸ்தான் விடுதலைப் படையின் போராளிகளைத் தங்களிடம் ஒப்படைக்கவேண்டுமெனும் கோரிக்கைக்கு இணங்கியதும் இவ்விடையம் இலகுவாகியதற்கான ஒரு காரணமாகும்..
அதேவேளை சுவீடனின் தலைநகர் ஸ்ரொகொல்ம்மின் புறநகர்ப்பகுதியில் கம்யூனிஸ்டுகள் எனச்சொல்லப்படுபவர்கள் இஸ்லாம் மதத்தின் குரானை எரித்த சம்பவம் துருக்கியை எரிச்சலையச் செய்ததும், பின்லாந்து நாட்டொ அமைப்பில் இணைவதற்கு விண்ணப்பித்த அதே காலப்பகுதியில் சுவீடனும் தனது விண்ணப்பத்தை சமர்பித்திருந்தாலும் சுவீடன் நாட்டோ அமைப்பில் இணைவதில் காலதாமதமாவதற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Elugnajiru said:
 
வரமே….

பினிஷ் தேசிய இனத்துக்கு நிகழ்த்தபட்ட ஆண்டாண்டு கால அவமரியாதை இனி தொடராது.

கரலியன், சல்லா பகுதிகளை அடாத்தாக பிடித்து வைத்தபடி…Finlandisation என்ற ஒரு அவமானகரமான அடை மொழிக்கு உள்ளாக்கி, அவர்களின் சுய ஆதிக்கத்தில் வலுகட்டாயமாக தலையிட்டு வந்த ரஸ்யாவின் ஆதிக்க மனோ நிலைக்கு தருணம் வரை காத்திருந்து ஆப்பு அடித்துள்ளனர் பின்லாந்து மக்கள்.

ஒரு ஆதிக்க சக்தி, ஒரு எதிரி என ரஸ்யா, ஹிட்லரை எப்படி சமாளித்தது பின்லாந்து என @Justin ஒரு தொடரை எழுதினார்.

இப்போ காத்திருந்து, தந்திரமாக செயல்பட்டு, நடப்பு நிகழ்வுகளை சாதகமாக்கி அந்த ஆதிக்க சக்தியின் வட்டத்தில் இருந்து முழுமையாக எப்படி  விடுபடுவது என்ற அடுத்த அத்தியாயத்தை சுப முடிவாக எழுதியுள்ளனர் பினிஷ் தேசிய இன மக்கள்.

விடுதலை கோரி நிற்கும் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பினிஷ் மக்கள் காத்திருந்து காரியம் சாதித்தமை ஒரு பாடம். 

இனி பின்லாந்தின் மீது கைவைத்தால் ஒட்டு மொத்த நேட்டோவில் கை வைத்தமைக்கு சமன்.

அருகில் இருக்கும் சாத்தானுக்கு அடக்கி வாசிப்பதை தவிர வேறு வழியில்லை.

பினிஷ் மக்களின் நீண்டகால ஓர்மம், செல்லா குட்டி சானாவின் சமயோசித, விட்டுக்கொடாத தலைமை இரெண்டுக்கும் வாழ்த்துக்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக பினிஷ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அவர்களை தள்ளிய புட்டினுக்கும், செலன்ஸிக்கும் நன்றிகள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Elugnajiru said:

நாட்டொ அமைப்பில் சேர்வதற்காக பின்லாந்து தனது நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்று வாழும் குர்திஸ்தான் விடுதலைப் படையின் போராளிகளைத் தங்களிடம் ஒப்படைக்கவேண்டுமெனும் கோரிக்கைக்கு இணங்கியதும் இவ்விடையம் இலகுவாகியதற்கான ஒரு காரணமாகும்..

சிறிலங்கா அரசு புலம்பெயர் தேசங்களில் தங்கியிருக்கும் புலிகள் சார்ந்தோரையும்,அதற்கு பணம் சேர்த்தோரையும் நாம் தடைப்பட்டியலில் வைத்திருக்கின்றோம். அவர்கள் அனைவரையும் சிறிலங்காவிற்கு அனுப்புங்கள் நாம் ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்கின்றோம் என்றால் தியாகிகளாக தயாரா?  :rolling_on_the_floor_laughing:

கொழுப்பு பிடித்த உக்ரேன் பிரச்சனையால் எம் இனத்தைப்போல் நாடு நாடாக அலையும் குர்திஷ் இன போராளிகள் மீண்டும் காட்டிக்கொடுக்கப்படுகின்றார்கள். :pouting_face:

நேட்டோ எனும் அழிவு இயந்திரம் தன்னை விரிவு படுத்த மாற்று சக்தி உருவாவது இயல்புதானே? :beaming_face_with_smiling_eyes:

Bild

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டொ அமைப்பில் பின்லாந்தின் இணைவு புரின் தனது ஆட்சிகாலத்தில் செய்த உருப்படியான செயல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

சிறிலங்கா அரசு புலம்பெயர் தேசங்களில் தங்கியிருக்கும் புலிகள் சார்ந்தோரையும்,அதற்கு பணம் சேர்த்தோரையும் நாம் தடைப்பட்டியலில் வைத்திருக்கின்றோம். அவர்கள் அனைவரையும் சிறிலங்காவிற்கு அனுப்புங்கள் நாம் ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்கின்றோம் என்றால் தியாகிகளாக தயாரா?  :rolling_on_the_floor_laughing:

கொழுப்பு பிடித்த உக்ரேன் பிரச்சனையால் எம் இனத்தைப்போல் நாடு நாடாக அலையும் குர்திஷ் இன போராளிகள் மீண்டும் காட்டிக்கொடுக்கப்படுகின்றார்கள். :pouting_face:

நேட்டோ எனும் அழிவு இயந்திரம் தன்னை விரிவு படுத்த மாற்று சக்தி உருவாவது இயல்புதானே? :beaming_face_with_smiling_eyes:

Bild

முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் 

பின்லாந்து நாட்டில் இரண்டாவது உலக யுத்தத்தில் ரஸ்யா போரிட்டபோது எல்லோரும் நினைத்தது பின்லாந்து சரணடைந்துவிடும் என ஆனால் அப்போதிருந்த பின்லாந்தின் அதிபர் "மன்னர்கெய்ம்" ( இஅவருக்கு பின்னிஸ் மொழி சரளமாக வராது சுவீசும் ரஸ்யாவும்தான் சரளமாகத் தெரியும்) எடுத்த போர்க்கால காய் நகர்த்தல்கள் முக்கியமாக இருந்தாலும், பின்லாந்துமக்களது வீரம் மற்றும் அவர்களது போரிடும் திறனும் ஓர்மமும் அப்போது கண்டுகொள்ளாத போதும், உலகின் மிகச்சிறந்த போர் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் தற்போது கூறுகிறார்கள். 

குர்திஸ் போராளிகளது ஒப்படைப்பு என்பது மிகவும் துரதிஸ்டவசமானது, இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இங்கு நாடாளுமன்றத்தேர்தல் நாளாக இருக்கு இத்தேர்தலில் ஒரு குர்திஸ் பெண்மணியும் போட்டியிடுகிறார் அவரிடம் நான் வினவினேன் ஆனால் அவர் பின்லாந்தை ரஸ்யாவிலிருந்து பாதுகாக்க நாமும் ஏதவது செய்யவேண்டும் அப்படி குர்திஸ் இனம் தன்னை பின்லாந்தின் பாதுகாப்புக்காகத் தன்னை விட்டுக்கொடுத்ததாக கருதிக்கொள்ளலாமே என என்னிடம் வினவினார். 

அதிலும் எதுவுமே இயலாத நிலையிலேயே கனத்த மனதுடன் பின்லாந்து இதைச் செய்தது என்பதையும் அவர் விளக்கினார் இதுபற்றி வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலமுறை கலந்துரையாடல்களைத் தம்முடன் மேற்கொண்டிருந்தனர் எனக் கூறியிருந்தார்.

தவிர சாதாரண பின்னிஸ் மக்களுடன் நான் பேசும்போது நாட்டொவுக்கு முன்னரே அவர்கள் போர்முனைக்குச் செல்லவேண்டும் எனும் மணோ நிலைக்கு வந்துவிட்டனர், நாட்டொ என்பது பின்லாந்து மக்களுக்கு துணை மட்டுமே தவிர முழுமையான நம்பிக்கை இல்லை. எனினும் நாட்டோவுடன் பின்லாந்து இணைந்தது வல்லாதிக்க நாடுகளுக்கு ரஸ்யாவை அச்சுறுத்துவதற்கான வாய்ப்பு. காரணம் எஸ்தோனியா, லத்வியா இப்போது பின்லாந்து என சுத்தியுள்ள எல்லைகளில் அந்நிய இருப்பு அச்சுறுத்தலே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

உலகிலேயே வெண்பனி (snow) இல் போரிடுவதில் பின்லாந்தை மிஞ்ச யாரும் இல்லையாம். 

நேட்டோவுக்கும் கூட பின்லாந்தின் இணைவு ஒரு வரமே.

2 hours ago, Elugnajiru said:

குர்திஸ் போராளிகளது ஒப்படைப்பு என்பது மிகவும் துரதிஸ்டவசமானது, இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இங்கு நாடாளுமன்றத்தேர்தல் நாளாக இருக்கு இத்தேர்தலில் ஒரு குர்திஸ் பெண்மணியும் போட்டியிடுகிறார் அவரிடம் நான் வினவினேன் ஆனால் அவர் பின்லாந்தை ரஸ்யாவிலிருந்து பாதுகாக்க நாமும் ஏதவது செய்யவேண்டும் அப்படி குர்திஸ் இனம் தன்னை பின்லாந்தின் பாதுகாப்புக்காகத் தன்னை விட்டுக்கொடுத்ததாக கருதிக்கொள்ளலாமே என என்னிடம் வினவினார். 

இந்த அணுகுமுறை குர்தீக்களுக்கு பல புதிய கதவுகளை திறக்க கூடும்.

பினிஷ் மக்களை போலவே, குர்தீக்களும் உணர்ச்சிவசப்படாமல், புத்தியை பாவிக்கிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சியே.

  • கருத்துக்கள உறவுகள்

@nochchi இன்று உங்களின் தேசிய தேர்தல் தினம் அல்லவா?

பிந்திய கருத்துக்கணிப்புகளின் படி மூன்று முக்கிய கட்சிகளும் அருகருகே உள்ளனவாமே?

இவற்றில் ஒன்று - தீவிர வலதுசாரி என அறிகிறேன்.

இந்த மூன்றில் ஏதாவது ஒன்று, ரஸ்ய சார்பானதா ?

சனாவின் approval rate 65% என்கிறனர், மீண்டும் ஒரு கூட்டணிக்கு தலைமை ஏற்க வாய்புள்ளதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இங்கு இப்போதைய தேர்தலின் வெற்றி தோல்வி நிலை கட்சிகளுக்கிடையில்

முதலில் கூட்டமைப்பு எனும் கட்சியும் இரண்டாவதாக அடிப்படை பின்லாந்தியர் எனும் கட்சியும் அதற்கு அடுத்ததாக மத்திய கட்சி ஏனும் கட்சியும் மூன்றாவதாக எஸ் டி பி எனும் சோசலிஸ்ட் ஜனநாயஜகக் கட்சியும் அதற்க்கு அடுத்து பசுமைக்கட்சியும் உள்ளது அதாவது வெள்ளிக்கிழமை எதிர்வு கூறலின்படி  கிட்டத்தட்ட 19% 19.5% அதற்கு சிறிது மேலாகக் கீழாக மேற்குறிபிட்ட முக்கிய அநாஙு கட்சிகளும் உள்ளன இதில் "பின்லாந்தின் தேவதை" யும் எம்போன்றோரது கனவுக்கன்னியுமான சனா மரின் அவர்களது கட்சியாகிய சோசியலிஸ் டெமோக்கிரட்டிஸ் கட்சி மூன்றாவதாக உள்ளது.

ஆனால் இதில் நடப்பு அரசாங்கத்தில் மூன்று கட்சிகளுக்கு மேற்பட்ட  குடிவரவாளர்களை எதிர்க்கும் கட்சியான அடிப்படைப் பின்லாந்தியர் எனும் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள் இணைந்த கூட்டரசே தேர்தலுக்குப் பின்பும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எனினும் ஜனநாயகத்தன்மையை  மேற்குலகுக்கும் ஏனைய விடையங்களிலும் பேணுவதாகக் கூறப்படும் பின்லாந்து அடிப்படை பின்லாந்தியர்கள் குறிப்பிட்ட ஆசனங்களை நாடாளுமன்றில் பெற்றால் ஏனைய கட்சிகள் வர்களுக்கு வழிவிடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவர். 

அவர்கள் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தீவிரப்போக்கு மற்றும் அவர்களால் ஏற்படும் தெரு வன்முறைகள் மற்றும் வேலை செய்யாது சமூகக் கொடுப்பனவில் வாழ்வது இவை போன்றவற்றை வெளி உலகில் கூறி வாக்குகளை ச் சேர்க்கிறார்கள்.

தவிர நாட்டோவில் பின்லாந்து இணைவதை வெளிப்படையாகச் சில இடங்களிலும் மறைமுகமாகவும் எதிர்க்கிறார்கள் 

நாட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்தின் காத்திருப்புக் காலத்தில் இந்த நாட்டின் அதிபர் தெருக்குற்றவியலாளர்களையிட்டு சிறு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கான காரணம் சுவிடனில் நடந்ததுபோல் மறை முகமான ரஸ்ய ஆதரவுக் குழு குரானை எரித்தோ அல்லது அதற்குச் சமமான விடையங்களைக் கையாள்வதையோ தடுக்கவேண்டுமென்பதால் மிகவும் கவனமாக இந்த விடையம் கையாளப்பட்டது.

தேர்தலுக்கு முன்பான மூன்று நாளுக்கு முன்பு நாட்டோவில் பின்லாந்து இணைவதை அதிகாரபூர்வமாக நாட்டின் அதிபர் வெளியிட்டது அடிப்படை பின்லாந்தியர்களது வெற்றியை சிலவேளை மட்டுப்படுத்துவதாக அமையும். 

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண் எழுஞாயிறுக்கு நன்றி!

எழுஞாயிறு பின்லாந்திலிருந்து தரும் தகவல்கள் பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்கள் சொல்லும் தகவல்களைச் சரிபார்க்க உதவுகின்றன (இத்தகைய ஊடகங்களின் செய்திகள், ஆய்வுகளை நம்பக் கஷ்டப் படுவோர், இது போன்ற திரிகளைப் பயன்படுத்தித் தம் சந்தேகங்கள் வலுவானவையா எனச் சோதித்துக் கொள்ளலாம்!)

 என் கருத்து: பின்லாந்து , சுவீடன் போன்ற நாடுகள் நேட்டோவில் இணைவது இந்த நாடுகளுக்கு மட்டுமல்லாமல், நேட்டோவிற்கும், ஐரோப்பாவிற்கும் கூட ஒரு பெரும் வரம்!

1. ஸ்கண்டினேவிய நாடுகள் ஏனைய சில மேற்கு நாடுகளை விட தனிமனித சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஜனநாயக நடைமுறை, சட்ட ஆட்சி என்பவற்றில் முன்னணியில் நிற்பவை. இந்த முன்னேற்றகரமான நடைமுறைகள் எல்லாம் ஏதோ பிற்போக்குத் தனங்கள் போல கேலிக்கும், கண்டனத்திற்கும் உள்ளாக்கப் படும் காலத்தில் வாழ்கிறோம்😎. எனவே, "நல்லது தழைக்கும்" என்ற குருட்டு நம்பிக்கையில் சும்மா இருக்காமல், நல்லதை வல்லமையாலும் காக்க வேண்டிய காலம் இது - இந்த நாடுகள் அதையே செய்ய முயல்கின்றன.

2. நேட்டோ 1949 இல் உருவாக்கப் பட்ட காரணம், மேற்கின் வாழ்க்கை முறையை, ஜனநாயக நடைமுறைகளை இராணுவ வலிமையால் எந்த சக்தியும் உடைப்பதைத் தடுப்பது தான் (சோவியத் ரஷ்யாவின்  பெர்லின் முற்றுகை- Berlin blockade தான் நேட்டோவிற்கான விதை!). அந்தக் காரணம் 1949 இல் இருந்ததை விட இப்போது வலுவாக இருக்கிறது - எனவே நேட்டோவும் வலிமை பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

இங்கு இப்போதைய தேர்தலின் வெற்றி தோல்வி நிலை கட்சிகளுக்கிடையில்

முதலில் கூட்டமைப்பு எனும் கட்சியும் இரண்டாவதாக அடிப்படை பின்லாந்தியர் எனும் கட்சியும் அதற்கு அடுத்ததாக மத்திய கட்சி ஏனும் கட்சியும் மூன்றாவதாக எஸ் டி பி எனும் சோசலிஸ்ட் ஜனநாயஜகக் கட்சியும் அதற்க்கு அடுத்து பசுமைக்கட்சியும் உள்ளது அதாவது வெள்ளிக்கிழமை எதிர்வு கூறலின்படி  கிட்டத்தட்ட 19% 19.5% அதற்கு சிறிது மேலாகக் கீழாக மேற்குறிபிட்ட முக்கிய அநாஙு கட்சிகளும் உள்ளன இதில் "பின்லாந்தின் தேவதை" யும் எம்போன்றோரது கனவுக்கன்னியுமான சனா மரின் அவர்களது கட்சியாகிய சோசியலிஸ் டெமோக்கிரட்டிஸ் கட்சி மூன்றாவதாக உள்ளது.

ஆனால் இதில் நடப்பு அரசாங்கத்தில் மூன்று கட்சிகளுக்கு மேற்பட்ட  குடிவரவாளர்களை எதிர்க்கும் கட்சியான அடிப்படைப் பின்லாந்தியர் எனும் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள் இணைந்த கூட்டரசே தேர்தலுக்குப் பின்பும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எனினும் ஜனநாயகத்தன்மையை  மேற்குலகுக்கும் ஏனைய விடையங்களிலும் பேணுவதாகக் கூறப்படும் பின்லாந்து அடிப்படை பின்லாந்தியர்கள் குறிப்பிட்ட ஆசனங்களை நாடாளுமன்றில் பெற்றால் ஏனைய கட்சிகள் வர்களுக்கு வழிவிடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவர். 

அவர்கள் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தீவிரப்போக்கு மற்றும் அவர்களால் ஏற்படும் தெரு வன்முறைகள் மற்றும் வேலை செய்யாது சமூகக் கொடுப்பனவில் வாழ்வது இவை போன்றவற்றை வெளி உலகில் கூறி வாக்குகளை ச் சேர்க்கிறார்கள்.

தவிர நாட்டோவில் பின்லாந்து இணைவதை வெளிப்படையாகச் சில இடங்களிலும் மறைமுகமாகவும் எதிர்க்கிறார்கள் 

நாட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்தின் காத்திருப்புக் காலத்தில் இந்த நாட்டின் அதிபர் தெருக்குற்றவியலாளர்களையிட்டு சிறு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கான காரணம் சுவிடனில் நடந்ததுபோல் மறை முகமான ரஸ்ய ஆதரவுக் குழு குரானை எரித்தோ அல்லது அதற்குச் சமமான விடையங்களைக் கையாள்வதையோ தடுக்கவேண்டுமென்பதால் மிகவும் கவனமாக இந்த விடையம் கையாளப்பட்டது.

தேர்தலுக்கு முன்பான மூன்று நாளுக்கு முன்பு நாட்டோவில் பின்லாந்து இணைவதை அதிகாரபூர்வமாக நாட்டின் அதிபர் வெளியிட்டது அடிப்படை பின்லாந்தியர்களது வெற்றியை சிலவேளை மட்டுப்படுத்துவதாக அமையும். 

பிரான்சில் தற்பொழுது நடக்கும் வேலை நிறுத்தம் மற்றும் வன்முறை சம்பவங்கள் சார்ந்தும் வெளியே இருந்து பார்க்கும் பார்வை வேறு. ஆனால் உள்ளே இருக்கும் எனக்கு நீங்கள் கூறுவது போல அனுபவமும் நீண்ட தூர பார்வையில் இங்கு நடப்பதும் நீங்கள் குறிப்பிடும் நிறவெறி ஆட்சிக்கான நகர்வுகளே.

நன்றி உங்கள் நேரத்துக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

இங்கு இப்போதைய தேர்தலின் வெற்றி தோல்வி நிலை கட்சிகளுக்கிடையில்

முதலில் கூட்டமைப்பு எனும் கட்சியும் இரண்டாவதாக அடிப்படை பின்லாந்தியர் எனும் கட்சியும் அதற்கு அடுத்ததாக மத்திய கட்சி ஏனும் கட்சியும் மூன்றாவதாக எஸ் டி பி எனும் சோசலிஸ்ட் ஜனநாயஜகக் கட்சியும் அதற்க்கு அடுத்து பசுமைக்கட்சியும் உள்ளது அதாவது வெள்ளிக்கிழமை எதிர்வு கூறலின்படி  கிட்டத்தட்ட 19% 19.5% அதற்கு சிறிது மேலாகக் கீழாக மேற்குறிபிட்ட முக்கிய அநாஙு கட்சிகளும் உள்ளன இதில் "பின்லாந்தின் தேவதை" யும் எம்போன்றோரது கனவுக்கன்னியுமான சனா மரின் அவர்களது கட்சியாகிய சோசியலிஸ் டெமோக்கிரட்டிஸ் கட்சி மூன்றாவதாக உள்ளது.

ஆனால் இதில் நடப்பு அரசாங்கத்தில் மூன்று கட்சிகளுக்கு மேற்பட்ட  குடிவரவாளர்களை எதிர்க்கும் கட்சியான அடிப்படைப் பின்லாந்தியர் எனும் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள் இணைந்த கூட்டரசே தேர்தலுக்குப் பின்பும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எனினும் ஜனநாயகத்தன்மையை  மேற்குலகுக்கும் ஏனைய விடையங்களிலும் பேணுவதாகக் கூறப்படும் பின்லாந்து அடிப்படை பின்லாந்தியர்கள் குறிப்பிட்ட ஆசனங்களை நாடாளுமன்றில் பெற்றால் ஏனைய கட்சிகள் வர்களுக்கு வழிவிடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவர். 

அவர்கள் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தீவிரப்போக்கு மற்றும் அவர்களால் ஏற்படும் தெரு வன்முறைகள் மற்றும் வேலை செய்யாது சமூகக் கொடுப்பனவில் வாழ்வது இவை போன்றவற்றை வெளி உலகில் கூறி வாக்குகளை ச் சேர்க்கிறார்கள்.

தவிர நாட்டோவில் பின்லாந்து இணைவதை வெளிப்படையாகச் சில இடங்களிலும் மறைமுகமாகவும் எதிர்க்கிறார்கள் 

நாட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்தின் காத்திருப்புக் காலத்தில் இந்த நாட்டின் அதிபர் தெருக்குற்றவியலாளர்களையிட்டு சிறு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கான காரணம் சுவிடனில் நடந்ததுபோல் மறை முகமான ரஸ்ய ஆதரவுக் குழு குரானை எரித்தோ அல்லது அதற்குச் சமமான விடையங்களைக் கையாள்வதையோ தடுக்கவேண்டுமென்பதால் மிகவும் கவனமாக இந்த விடையம் கையாளப்பட்டது.

தேர்தலுக்கு முன்பான மூன்று நாளுக்கு முன்பு நாட்டோவில் பின்லாந்து இணைவதை அதிகாரபூர்வமாக நாட்டின் அதிபர் வெளியிட்டது அடிப்படை பின்லாந்தியர்களது வெற்றியை சிலவேளை மட்டுப்படுத்துவதாக அமையும். 

அருமையான விளக்கத்துக்கு நன்றி.

அடிப்படைவாதிகள் கூட ஆட்சிக்கு வந்தால் ரஸ்யா சம்பந்தமான நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்ய வேண்டி வரலாம் என நினைக்கிறேன்.

இத்தாலி அம்மையார் வரப்போறார், நேட்டோவை சிதைக்க போறார் என பலர் எதிர்பார்த்தனர் அவர் என்னடா எண்டா ரஸ்யாவை லெப்ட், ரைட் வாங்குகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Elugnajiru said:

பின்லாந்து நாட்டில் இரண்டாவது உலக யுத்தத்தில் ரஸ்யா போரிட்டபோது எல்லோரும் நினைத்தது பின்லாந்து சரணடைந்துவிடும் என ஆனால் அப்போதிருந்த பின்லாந்தின் அதிபர் "மன்னர்கெய்ம்" ( இஅவருக்கு பின்னிஸ் மொழி சரளமாக வராது சுவீசும் ரஸ்யாவும்தான் சரளமாகத் தெரியும்) எடுத்த போர்க்கால காய் நகர்த்தல்கள் முக்கியமாக இருந்தாலும், பின்லாந்துமக்களது வீரம் மற்றும் அவர்களது போரிடும் திறனும் ஓர்மமும் அப்போது கண்டுகொள்ளாத போதும், உலகின் மிகச்சிறந்த போர் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் தற்போது கூறுகிறார்கள். 

தெரியாத விடயத்திற்காக கேட்கின்றேன்?

பின்லாந்து என்ற சுயாட்சி நாட்டை ரஷ்யா எந்த விதத்தில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது?
பின்லாந்து எந்தெந்த விடயங்களில்  தனக்கு விரும்பிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை  மற்றும் வர்த்தக தொடர்புகளை தொடர முடியாமல் இருந்தது?

ரஷ்யாவிற்கு ஏன் பின்லாந்து பயப்பிட வேண்டும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Elugnajiru said:

குர்திஸ் போராளிகளது ஒப்படைப்பு என்பது மிகவும் துரதிஸ்டவசமானது,

இப்படி எழுதுவது வலு சுலபமானது.

ஆனால் ஒரு போராளி யாரையும் நம்பி போராட முடியாது என்ற நிலைமைக்கு இந்த சம்பவம் தள்ளிவிட்டது. மனிதவுரிமைவாதிகள் என்றுமே தம் நலத்துடனேயே இருப்பார்கள் என்பதற்கு பின்லாந்தின் நடவடிக்கை நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் ஒன்று என் இனத்திற்கு இதுவொன்றும் புதியது இல்லை. முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு முன்னரும் சர்வதேச மனித உரிமை கும்பல் வெள்ளை மனதுடன் வெளியேறிய காட்சிகள் இன்றும் கண் முன்னே நிற்கின்றன.

உலகில் கொடூரமான சிறைச்சாலைகளில் துருக்கி சிறைச்சாலைகளும் அடங்கும். எனவே பின்லாந்தின் நம்பிக்கைத் துரோகமாக  துருக்கி அரசிடம் ஒப்படைக்கவிருக்கும் குர்திஷ் போராளிகளுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து தேர்தலில் சனா மரின் கட்சி 3ம் இடம்.

விட்டு கொடுப்பு உரையை நிழத்தினார் சனா.

மிக குறுகிய வாக்கு வித்தியாசத்தில் 20.7%, 20.1%, 19.9% என்ற அளவில் கட்சிகளின் வாக்குகள் வந்துளன.

சனா மரின் தனது கட்சியின் வாக்கு வீதத்தையும், எம்பிகள் எண்ணிக்கையையும் சென்ற முறையை விட உயர்த்தியுள்ளார் எனினும் அவரின் கட்சி ஆட்சி அமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

அஞ்சலா, ஜெசிந்தா, நிக்கோலா, சனா அடுத்தடுத்து  செயல்திறன் மிக்க பெண் தலைவர்களை உலகு இழப்பது நல்லதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Elugnajiru said:

அதிலும் எதுவுமே இயலாத நிலையிலேயே கனத்த மனதுடன் பின்லாந்து இதைச் செய்தது என்பதையும் அவர் விளக்கினார் இதுபற்றி வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலமுறை கலந்துரையாடல்களைத் தம்முடன் மேற்கொண்டிருந்தனர் எனக் கூறியிருந்தார்.

இப்படியான  நிலைப்பாடுகளை சொல்லியே  ஒடுக்கப்படும் இனங்களை கை விடுகின்றார்கள். இது என் இனத்திற்கும் நடந்தது. இனியும்  தரமான அரசியல் தலைமை வரும் வரைக்கும் நடக்கும்.

ஒவ்வொரு காலப்பகுதிக்கும் ஒவ்வொரு அரசியல் முகத்துடன் காட்சிகள் அரங்கேறும். ஆனால் அன்றும் இன்றும் என்றும் ஈழத்தமிழினத்திற்கு அணிலை மரத்தில் ஏற விட்ட நாயின் நிலைமை மாறாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விசுகு said:

பிரான்சில் தற்பொழுது நடக்கும் வேலை நிறுத்தம் மற்றும் வன்முறை சம்பவங்கள் சார்ந்தும் வெளியே இருந்து பார்க்கும் பார்வை வேறு.

இதே பார்வையை ரஷ்ய அரசியலில் பார்க்க மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இதே பார்வையை ரஷ்ய அரசியலில் பார்க்க மாட்டோம்.

ரசிய சார்பு நிலையில் நான் சிந்திக்கவில்லை. ஏனெனில் அங்கு ஏற்கனவே தனி வெள்ளை ராஜ்யம் தான். அடைக்கலம் தந்த மண்ணுக்காவது?? (இதுவும் ஒருவகை சுயநலம் தான். பிள்ளைகளாவது என்னைப் போல் அகதியாக வேண்டாமே)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

ரசிய சார்பு நிலையில் நான் சிந்திக்கவில்லை. ஏனெனில் அங்கு ஏற்கனவே தனி வெள்ளை ராஜ்யம் தான். அடைக்கலம் தந்த மண்ணுக்காவது?? (இதுவும் ஒருவகை சுயநலம் தான். பிள்ளைகளாவது என்னைப் போல் அகதியாக வேண்டாமே)

மேற்குலக நாடுகளின் எந்த நடவடிக்கைகளுக்கும்,கொள்கைகளுக்கும் புலம்பெயர் மக்கள் ஆதரவளித்தால் இலங்கை தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்கிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

தெரியாத விடயத்திற்காக கேட்கின்றேன்?

பின்லாந்து என்ற சுயாட்சி நாட்டை ரஷ்யா எந்த விதத்தில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது?
பின்லாந்து எந்தெந்த விடயங்களில்  தனக்கு விரும்பிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை  மற்றும் வர்த்தக தொடர்புகளை தொடர முடியாமல் இருந்தது?

ரஷ்யாவிற்கு ஏன் பின்லாந்து பயப்பிட வேண்டும்?

கடந்த சோவியத் யூனியன் காலத்தில் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்பான பொருளாதாரத் தொடர்புகள் உற்பத்திகள் விற்பனை சம்பந்தமான கூடிய தொடர்பை பின்லாந்து அதனுடனேயெ கொண்டிருந்தது.

உதாரணமாகநொக்கியா எனும் தொலை பேசி வர முதல் அப்பெயரில் அதன் உரிமையாளரது தந்தையார் அதே பெயரில் ஒரு ரப்பர் சப்பாத்துக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை இயக்கினார் அதன் பிரதான சந்தையாக சோவியத் இருந்தது இதேபோல நிறைய உற்பத்திகள் சோவியத் யூனியனுடன் சந்தைப்படுத்தலில் அதிகம் இருந்தது காரணம் சோவியத் யூனியனது மூலப்பொருள்களில் அவர்களே உற்பத்தி செய்யும் பொறுள்கள் மலிவானதாக இருந்தாலும் தரம் என்பது பின்லாந்துப் பொருடகளுடன் ஒப்பிடும்போது இல்லைவெ இல்லை என்று கூறலாம் உதாரணமாக அவர்கள் தயாரித்த "லடா" எனும் கார் மிகவும்  நீண்டகால உழைக்கும் தன்மை மற்றும் அடிப்படை மோட்டார் வாகனம் திருத்தும் அறிவுள்ளவர்கள் அதைச் சரிசெய்யலாம் என இருந்தாலும் அவர்கள் அதைச் சந்தைப்படுத்தும்போது சாதாரண இரும்புவிலையிலேயே விற்பனை செய்தார்கள் என பின்லாந்தில் சிலகாலம் எனக்குப் படிப்பித்த ஆசிரியர் ஒருவர் கூறியிருந்தார் ஆனால் அதற்கான ரயர்களைப் பின்லாந்தில் அதே நொக்கியா கம்பனிதான் ஒட்டுமொத்தமாக வழங்கிவந்தது. இப்படி முக்கியமான உற்பத்திப் பொருளை பின்லாந்து வழஙியதால் பின்லாந்து அபருமிதமான செலவச்செழிப்புடன் அப்போது இருந்தது காரணம் பொருளின் தரம்.

சோவியத் யூனியன் பிரியும்போது நிலுவையில் நின்ற பின்லாந்துக்கு வரவேண்டிய பணம் அம்போ ஆனது அது மிகப் பெரும் தொகை.

சரி விடையத்துக்கு வருவம் இப்போதிருக்கும் நிலையில் எரிவாயு பெற்றோலியம் எரிபொருள் மரத்தின் இளைகள் அதாவது மரம் கடதாசி செய்வதற்காகவும் அதை இழைகளாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அதிகமாக பின்லாந்து இலாபகரமாக ரஸ்யாவையே நம்பி இருக்கிறது. தவிர தரமான பொருளுக்கு பின்லாந்து எனும் கிப்ஸ் சாரம்தான் நல்லது என்பதுபோன்ற மனப்பான்மை இப்போதும் ரஸ்யர்களிடம் இருக்கு இதனால் அன்றாடம் நாம் பாவிக்கும் சீஸ் கிறீம் தொடங்கி பாத்திரம் கழுவும் ()பயரி வரை அங்கு நிரையவே டிமான்ட் இருக்கு அதனால் பின்லாந்துக்கு ஏனைய நாடுகளிலிருந்து வரும் வருமானததைவிட இலகுஆன வருமானம் தவிர இங்கு காணப்படும் அனைத்து அங்காடிகள் மற்றும் உல்லாசப்பயண விடுதிகள் போன்றவை அங்கே கடைவிரித்திருக்கின்றன பல பில்லியன் யூரோக்களை கொண்டுவரும் வியாஒஆரம் அங்கு கொட்டிக்கிடக்கு 

ஆனால் எப்போது அவன் உள்நுளைவான் என 1 343,6 கிலோமீற்றர் எல்லையில்  24/7 காத்துக்கிடக்க முடியாது ஆகவே சிறிதாவது பயப்படத்தான் வேண்டும். தவிர ரஸ்யர்கள் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள் அவர்களது எச்சங்கள் இப்போதும் இந்த நாட்டில் இருக்கு அதைவிட மோசம் ஒவ்வொரு ரஸ்யனும் இப்போதும் பின்லாந்து எங்கள் நாட்டின் ஒரு பகுதிதான் எனும் எண்ணத்துடனேயே இருக்கிறான். போரிட விரும்பாத பல ஆயிரம் ரஸ்யர்கள் ஒரு சில மாதங்களுக்கு முன்பு இங்கு உள்நிளைந்துவிட்டார்கள். ஐரோப்பிய யூனியன் மேலும் மேலும் தடைகளைப் போடுது பாதிக்கப்படும் முதல் நாடு பின்லாந்து தான் இந்தியா சீனா இவைகள் மலிவு விலையில் கச்சா எண்ணை வாங்கி குளிர் காய்கிறார்கள் அதற்கான விலையை நாம்தான் கொடுக்கிறோம்.

அமெரிக்க இந்த விடையத்தில் கள்ள மவுனம் காக்கிறது இன்று எனது ஒண்டு விட்டது சொல்லுது லண்டனுக்கு அமெரிக்கவிலிருந்து வெண்டிக்காய் வருகுது என.

யுத்ததை வியாபாரமாக்க பின்லாந்தைப் போல் பல ஐரோப்பிய நாடுகள் விலை கொடுக்குது. 

அழிவைக்கண்டு பயப்படத்தான் வேண்டும் ஆனால் நெருக்கடிகளுக்கு மத்தியில் பின்லாந்துமக்கள் வாழப்பழகிக்கொள் என்றால் முடியலை.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

தெரியாத விடயத்திற்காக கேட்கின்றேன்?

பின்லாந்து என்ற சுயாட்சி நாட்டை ரஷ்யா எந்த விதத்தில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது?
பின்லாந்து எந்தெந்த விடயங்களில்  தனக்கு விரும்பிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை  மற்றும் வர்த்தக தொடர்புகளை தொடர முடியாமல் இருந்தது?

ரஷ்யாவிற்கு ஏன் பின்லாந்து பயப்பிட வேண்டும்?

பின்லாந்து ரஷ்யாவுக்கு அஞ்சக் காரணங்கள் உண்டு. மேலே எழுஞாயிறு தந்த விளக்கத்திற்கு மேலதிகமாக இதையும் எடுத்துக் கொள்ளுங்கள்:

உக்ரைன் விடயத்தில் நடந்தது பின்லாந்திலும் நடக்கலாம். 1991 இல் ரஷ்ய பெடரேஷனோடு எல்லை வகுத்து, ரஷ்யாவின் ஒப்புதலோடு உருவான சுதந்திர நாடான உக்ரைனை 2022 பெப்ரவரியில் "உக்ரைன் ஒரு நாடேயல்ல, அது ரஷ்யா தான்!" என்று புட்டின் வரலாற்றைத் திரித்து வரலாறு அறியாத மக்களுக்குத் தீத்தினார்!😎 இந்தத் திரிப்பை இன்று வரை நம்பிக் கொண்டிருக்கும் மக்களை யாழிலும், யாழுக்கு வெளியேயும் காண்கிறோம்!

பின்லாந்து, சார் மன்னர் காலத்தில் ரஷ்யாவின் ஒரு (Grand Duchy)  பகுதியாக இருந்தது. 1940 இல் ஸ்ராலின் படையெடுத்ததும் "பின்லாந்து ரஷ்யா தான்" என்ற வரலாற்றுத் திரிப்பை அடிப்படையாக வைத்துத் தான். இதை ஏற்கனவே என் "பின்லாந்துக் கதை" ஆக்கத்தில் எழுதியிருக்கிறேன்.

எனவே, ஒரு 10 வருடம் கழித்து ரஷ்யா "பின்லாந்து ஒரு நாடே அல்ல, அது ரஷ்யாவின் தந்தை நிலம்!" என்ற திரிப்போடு படையெடுக்கும் வரை பின்லாந்து காத்திருக்க முடியாது. இதுவே நல்ல சந்தர்ப்பம் நேட்டோவில் இணைய!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டி ஸ்டோரி

ஒரு ஊரில் பிதன் உதன் என்று இரு குடியானவர்கள் வாழ்ந்தார்கள். இருவரும் அவரவரது பரம்பரை நிலத்தில் விவசாயம் செய்து காலத்தை ஓட்டினர்.

அதே ஊரில் பிதன், உதன் இருவரின் காணியோடு எல்லை போட்டு ரதன் என்ற ஒரு ரவுடியும் இருந்தான்.

இவர்கள் வாழ்ந்த குறிச்சிக்கு அப்பால், ஒரு குளத்தின் மறுகரையில் அதன் என்ற பண்ணையார் இருந்தார். அவரும் ஒரு ரெளடிதான். ஆனால் பார்வைக்கு பண்ணையார் போல இருப்பார்.

ரதனும் பண்ணையாரும் ரவுடிகளே என்றாலும் இருவர் அணுகுமுறையும் வேறு வேறானது.

பண்ணையாருடன் நட்பாக இருந்தால் - அவர் தனது குதிரை வண்டியை குடியானவர்களின் நிலத்தில் நிறுத்தி வைப்பார். குடியனவரின் நிலத்தில் வரும் லாபத்தில் தனக்கும் பங்கு கேட்பார். தனது சண்டைகளில் தன்னோடு குடியானவரும் ஈடுபட வேண்டும் என்பார். ஆனால் குடியானவர்கள் மீது வேறு யாரும் கைவைக்காமலும் பார்த்து கொள்வார்.

ரவுடி ரதனின் அணுகுமுறையோ இதற்கு நேர் எதிர். ரதன் அந்த குறிச்சியில் இருக்கும் குடியானவர்கள் எல்லாம் தன் அடிமைகள் என்ற தோராணையில் நடப்பான்.

குறிப்பாக தன்னோடு காணி எல்லை வைத்திருக்கும் குடியானவர்களை, நீங்கள் எல்லாம் குடியானவரே இல்லை, என் வீட்டில் ஒரு அங்கம் என்பதுதான் ரதனின் நிலைப்பாடு.

இந்த அடாவடிக்கு பயந்து அந்த குறிச்சியில் பல குடியானவர்கள் பண்ணையாரின் கூட்டுக்கு போய் விட்டார்கள்.

ஆனால் பிதன் பல காலமாக ரதனை முற்றாக பகைக்க விரும்பவில்லை. ரதனுக்கு ரதன் என்று பெயர் வரக்காரானமே பிதனின் மூதாதைகள்தான்.

ரதனுக்கும் பிதனுக்கும் முன்பு இரு கைக்கலப்புகள் வந்துள்ளது. பிதனின் காணியை ரதன் அடாத்தாக பிடித்து, பின் அதில் ஓரளவு பகுதியை பிதன் ரதனை அடித்து மீள எடுத்து கொண்டான். இருப்பினும் இன்னும் பிதனின் ஒரு தொகை காணியை ரதன் அடாத்தாக பிடித்தே வைத்துள்ளான்.

இவ்வளவு இருந்தும் பிதன், பண்ணையாரின் கூட்டில் பல வருடமாக சேரவில்லை.

ரதன், பண்ணையார் இருவரிடம் இருந்தும் சம தூரத்தில் இருக்கும் ஒரு கொள்கையை பிதன் சற்று வெற்றிகரமாகவே கையாண்டான்.

ஆனால் அண்மையில் உதனின் காணிக்குள் ரவுடி ரதன் புகுந்து ஒரே ரகளை. உதனிற்கு காணியே இல்லை, முழுகாணியும் தனதே என கூறி ரதன் ரகளை செய்ய, உதன் பண்ணையாரின் கூட்டின் உதவியுடன் ரதனை வெளுக்க - உதனின் காணியே ரத்தகளரியாகி விட்டது.

இதை பார்த்த பிதனுக்கு பழையது எல்லாம் மனதில் ரிப்பீட்டு டெலிகாஸ்ட் போல ஓடியது.

நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட பிதன், தன் நடுநிலை கொள்கையை தலையை சுற்றி எறிந்து விட்டு, உள்ளதில் ஆபத்து குறைந்த கூட்டு என தான் கருதிய பண்ணையாரின் கூட்டில் சேர்ந்து விட்டான்.

முற்றும்.

(எதுவும் கற்பனை அல்ல).

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மேற்குலக நாடுகளின் எந்த நடவடிக்கைகளுக்கும்,கொள்கைகளுக்கும் புலம்பெயர் மக்கள் ஆதரவளித்தால் இலங்கை தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்கிறீர்கள்?

2008இல் தலைவர் தனது உரையில் புலம்பெயர் அடுத்த தலைமுறையை போராடும் படி என்ன ஆதரவில் அல்லது நடவடிக்கைகளின் அடிப்படையில் சொன்னார். அதன் பின்னர் நாம் என்ன செய்தோம் செய்கிறோம்..

நான் ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகள் சபையின் கதவை தட்டினேன். அங்கு வந்தவர்கள் உலகின் புலம்பெயர் தமிழர்களின் விகிதாசாரத்தில் பார்த்தால் 0,0001வீதம். 

அப்புறம் அவர்களை கைவிரல் நீட்டி????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

2008இல் தலைவர் தனது உரையில் புலம்பெயர் அடுத்த தலைமுறையை போராடும் படி என்ன ஆதரவில் அல்லது நடவடிக்கைகளின் அடிப்படையில் சொன்னார். அதன் பின்னர் நாம் என்ன செய்தோம் செய்கிறோம்..

அன்றிருந்தது சிறந்த ஒருங்கிணைப்பு. நாளை  இந்த இடத்தில் இந்த விடயத்திற்காக கூடுகின்றோம் என சொல்வார்கள். வேலை வெட்டிகளை ஒதுக்கி விட்டு கூடினார்கள்.நிதியுதவி கூட கட்டின தாலியை கழட்டி கொடுக்குமளவிர்க்கு உணர்வுகள் இருந்தது. மாதாந்த வருமானத்தில் ஒரு பகுதியை கூட விடுதலைக்காக  அர்ப்பணித்தவர்கள் ஏராளம்.ஏராளம். அந்த காலத்தில் கூட ஒரு சில சாத்தான்கள் வேதம் ஓதின. அதே சாத்தான்கள் இன்றும் வேதம் ஓதுகின்றன. எந்த காரணமும் இல்லாமல். பத்து வருட இடைவெளியாகி விட்டது. வேதம் ஓதிய அந்த சாத்தான்கள் இதுவரை ஈழமக்கள் உரிமைக்கு ஏதாவது செய்து முன்னேற்றம் கண்டார்களா? இல்லையே. சாத்தான்கள் எதை அன்று செய்தார்களோ அதையே இன்றும் செய்கின்றார்கள்.வேதம் ஓதும் இடமும் அரசியல் களமும் தான் வேறு.

எனவே அவர்களுக்கு சோரம் போகாமல் இருந்தாலே வெற்றிகள் பல உண்டு.

நிற்க...தடம் மாறி வேறோங்கொ சென்று விட்டேன். மன்னிக்கவும். தலைவர் சொன்னது புலம்பெயர் தமிழர்களை நம்பி. ஆனால் கூட்டத்திற்குள் பல கறுப்பாடுகள் இருக்கின்றது என்பதை அறியாமல் மோசம் போய் விட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.