Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேறு கண்டத்து பிறவி....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

இது ஒரு பொறுப்பற்ற பேச்சு. தமிழில் சொற்பிழை நேரலாம். ஏன் எழுத்துக்கள் கூட மாறலாம். இல்லாத ஒன்றை "வசதிக்கேற்ப எடுத்தல்" என்பது நேர்மையற்றது. இது தமிழ்க்களத்துக்கு அழகல்ல. B) B)

வசதிக்கேற்ப அல்ல. கவிஞர் சொல்ல வந்ததற்கு ஏற்ப கண்டம் பொருந்த வரவில்லை என்பதால்.. கிரகமாக்கப்பட்டது..! அதுமட்டுமன்றி.. வரிக்குவரி.. ஒத்த சொல் எழுதி விளக்கமளிக்கப்படவில்லை. கவி நயதுக்கு ஏற்ப விளக்கமளிக்க முனையப்பட்டுள்ளது. அது ஆகுபெயராக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை..???! பிரச்சனை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். :):lol:

Edited by nedukkalapoovan

  • Replies 95
  • Views 10.5k
  • Created
  • Last Reply

வசதிக்கேற்ப அல்ல. கவிஞர் சொல்ல வந்ததற்கு ஏற்ப கண்டம் பொருந்த வரவில்லை என்பதால்.. கிரகமாக்கப்பட்டது..! அதுமட்டுமன்றி.. வரிக்குவரி.. ஒத்த சொல் எழுதி விளக்கமளிக்கப்படவில்லை. கவி நியதுக்கு ஏற்ப விளக்கமளிக்க முனையப்பட்டுள்ளது. அது ஆகுபெயராக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை..???! :):lol:

நெடுக்ஸ்

வன்னி மைந்தனின் கவிதைகளை நான் மதிக்கிறேன். அது முற்று முழுதாகவே அந்தக் கவிஞர் சார்ந்தது. அந்தக் கவிதைகளுக்கு "பொருள் எழுதுகிறேன்" என்று, நீங்கள் "கண்டம்" என்பதை "கிரகம்" என்று எழுதுவது தவறு என சுட்டிக் காட்டவே அதன் பொருளை கேட்டேன். வன்னி மைந்தன்கூட அவ்வாறு பொருள் எழுதியிருந்தால் அப்படித்தான் கேட்டிருப்பேன். இதில் தவறேதும் இருப்பதாக நான் எண்ணவில்லை.

சரி. ஆகுபெயர் என்றவாறு தமிழில் "எடுத்ததற் கெல்லாம்" எமக்கேற்றாற் போல் வியாக்கியானம் கொடுக்க முடியாது. "கண்டம்" என்பது ஒரு கூட்டம் மக்களை குறித்திருந்தால் (குமரிக் கண்டம் என்பதுபோல்) அது சரியே. நீங்கள் கூறும் "கண்டம்" எந்த ஆகுபெயர் இலக்கணத்தில் வருகிறது? இடம், பொருள், பண்பு,உவமை போன்றவற்றில் எது?

நீங்கள் இதை நுணுக்கமாகப் பார்க்க விரும்புவதால் நானும் நுணுக்கத்தோடு அணுக விரும்புகிறேன்..!

வேரது இல்லா மரமேயென்றால்- நீ

வேறு கண்டத்து பிறவியாவாய்...

மெய்யை மெய்யெனச் சொல்லுங்கள். திரிபுகள் வேண்டாம். வேரில்லாத மரம் இருக்கிறது என்று சொல்வீர்கள் என்றால்.. நிச்சயம் நீங்கள் வேற்றுக் கண்டம் ( கிரகப்) பிறவிகள் என்பதாகத்தான் இருக்க வேண்டும். உண்மைதான்.. சில நீர்த்தாவரங்களை தவிர தாவரங்களுக்கு வேர்தான் முக்கியம். அதையே இல்லை என்பவர்கள் வேற்றுக்கிரக வாசிகளாக.. அல்லது சமுத்திரத்தில் வாழ்பவர்களாக இருக்கலாமோ எங்கின்ற ஐயம் வன்னி மைந்தனுக்கு..!)

இதுதான் வன்னி மைந்தன் எழுதிய கவி வரியும் நான் எழுதிய விளக்கமும்.

வேரது இல்லா மரமேயென்றால்... வேர் இல்லாத மரம் என்றால்.. நீ வேற்றுக் கண்டத்துப் பிறவி...

இதில் இரண்டு அர்த்தம் கொள்ள முடியும்..

ஒன்று.. மரம் தனது வேரை ஓரிடத்தில் ஊன்றிவிட்டால்.. இன்னோர் இடத்துக்கு நகராது. ஆனால் தாயக மண்ணில் பிறந்தும் அந்நிய மண்ணின் ஆதிக்கத்துக்கு இலக்காகி உள்ளோரை.. வேரது இல்லா மரமே என்று கருதி வேறு கண்டத்துப் பிறவி என்று அவர்களின் இழிநிலையை காண்பிப்பது ஒன்று.

இரண்டு.. வேரது இல்லாதது மரம் என்று நீ சொல்வதால் வேறு கண்டத்துப் பிறவியாவாய் என்பதும் பொருளாகும்.

இந்த இரண்டில் இரண்டாவதை நான் முதன்மைப் படுத்தினேன். பூமியில் மரங்கள் வேரோடு தான் இருக்கும். மரம் சார்ந்து கண்டம் என்பது பூமியின் புவியியல் கூறாகவே நோக்கப்படுகிறது. வேர் இல்லாத மரம் கொண்ட கண்டம் (நிலப்பரப்பு) பூமியில் இருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே வேரது இல்லா மரம் என்று சொல்வோரை.. கண்டத்துப் பிறவி என்பதை.. வேற்றுக் கிரகவாசி என்ற நிலைக்கு ஆகுபெயராக்கி எழுதினேன். பொருளாகு பெயராக. :lol:

Edited by nedukkalapoovan

வேரது இல்லா மரமேயென்றால்... வேர் இல்லாத மரம் என்றால்.. நீ வேற்றுக் கண்டத்துப் பிறவி...

இதில் இரண்டு அர்த்தம் கொள்ள முடியும்..

ஒன்று.. மரம் தனது வேரை ஓரிடத்தில் ஊன்றிவிட்டால்.. இன்னோர் இடத்துக்கு நகராது. ஆனால் தாயக மண்ணில் பிறந்தும் அந்நிய மண்ணின் ஆதிக்கத்துக்கு இலக்காகி உள்ளோரை.. வேரது இல்லா மரமே என்று கருதி வேறு கண்டத்துப் பிறவி என்று அவர்களின் இழிநிலையை காண்பிப்பது ஒன்று.

இரண்டு.. வேரது இல்லாதது மரம் என்று நீ சொல்வதால் வேறு கண்டத்துப் பிறவியாவாய் என்பதும் பொருளாகும்.

இந்த இரண்டில் இரண்டாவதை நான் முதன்மைப் படுத்தினேன். பூமியில் மரங்கள் வேரோடு தான் இருக்கும். மரம் சார்ந்து கண்டம் என்பது பூமியின் புவியியல் கூறாகவே நோக்கப்படுகிறது. வேர் இல்லாத மரம் கொண்ட கண்டம் (நிலப்பரப்பு) பூமியில் இருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே வேரது இல்லா மரம் என்று சொல்வோரை.. கண்டத்துப் பிறவி என்பதை.. வேற்றுக் கிரகவாசி என்ற நிலைக்கு ஆகுபெயராக்கி எழுதினேன். பொருளாகு பெயராக. :)

ம்.. பொருளாகு பெயர். :lol::)

பொருளை குறித்து எழுதுவது எல்லாம் பொருளாகுபெயர் அல்ல. அப்படியானால் நான்கூட "கண்டம்" என்பதை "சூரிய மண்டலம்" என வைத்து எனக்கு ஏற்றவாறு எழுதிவிடுவேன். அதுவல்ல.

இதோ!! ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம். அதன் பகுதியில் இருந்து

205. அவ்வாகு பெயர், பதினா வகைப்படும். அவையாவன:- பொருளாகு பெயர்,

இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர், குணவாகு பெயர், தொழிலாகு பெயர், எண்ணலளவையாகு பெயர், எடுத்தளவையாகு பெயர், முகத்தளவையாகு பெயர், நீட்டலளவையாகு பெயர், சொல்லாகு பெயர், தனியாகு பெயர், கருவியாகு பெயர், காரியவாகு பெயர், கருத்தாவாகு பெயர், உவமையாகு பெயர் என்பனவாம்.

உதாரணம்.

(1). தாமரை போலுமுகம்: இங்கே தாமரையென்னு முதற்பொருளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காதலாற் பொருளாகு பெயர்.

தாமரை என்பது அதன் இன்னொரு "பொருளான" "மலரை" குறித்து நின்று "மலர் போலும் முகம்" என கருத்து தருகிறது (பொருளால் உணர்த்துவது. தாமரை ஒரு மலர் என்பது வெளிப்படை). "கண்டம்" என்பதன் இன்னொரு பொருள் "கிரகம்" என்று எங்காவது எதிலாவது பொருள் தெரிகிறதா?

:lol::lol:

மூலம்: http://www.tamilnation.org/literature/pmunicode/mp257.htm

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. பொருளாகு பெயர். :):lol:

:lol::)

மூலம்: http://www.tamilnation.org/literature/pmunicode/mp257.htm

நல்லது. இன்னும் விரிவாக சொன்னால்... நீங்கள் உங்கள் வசதிக்கான உதாரணத்தோடு இலக்கணத்தைச் சுருக்கி விட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...

ஆகுபெயர் என்பது.. ஒன்று இன்னொன்றாகி நிற்றல்

தாமரை என்ற பொருள்.. அதன் சினை மலருக்கு ஆகி நிற்றல். பொருளாகு பெயர்.

டெல்லி கூறியது. இங்கு டெல்லி மக்களுக்கு என்று ஆகி நிற்கிறதா... அரசுக்கு என்று ஆகி நிற்கிறதா... ??!

அது அமையப் பெறும் வசனத்தின் அடிப்படையில் அமையும்.

இனப்பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசுக்கு டெல்லி கூறியது என்பது.. டெல்லி அரசைக் குறிக்கும். இந்திய ஆளும் அரசாங்கத்தைக் குறிக்கும்.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக மாணவர்களோடு டெல்லியும் இணையும். என்பது டெல்லி மாணவர்களை குறித்து நிற்கும். இரண்டுமே இடவாகு பெயர்கள்.

டெல்லி = மக்கள் என்று ஒத்த கருத்து கூற முடியுமாங்களா..??! இல்ல தேடத்தான் முடியுமா..??!

இப்ப நாம் கையாண்ட ஆகுபெயருக்கு வருவோம்.

வேரது இல்லா மரமது என்று கூறும் கண்டத்துப் பிறவியை வேற்றுக் கிரகவாசி என்பதற்கு ஆக்கி எழுதினேன். காரணம் வேரில்லா மரம் என்று ஒன்று பூமியில் இல்லை. ( மரம் என்பது வேறு செடி கொடி.. நீர்த்தாவரங்கள் என்பது வேறு)

கண்டத்துப் பிறவி = வேற்றுக் கிரகவாசி என்று ஒத்த பொருள் கற்பிக்க முடியுமாங்களா...???!

கண்டத்துப் பிறவி - கண்டத்தில் பிறப்பெடுத்த ஒன்று ( ஒரு பொருள்) வேற்றுக் கிரகவாசி என்றாகி நிற்கிறது.

ஏன் சிரிக்கிறீர்கள் என்றே எனக்குப் புரியல்ல. நீங்கள் இலக்கணத்தை உங்களுக்கு உரிய வடிவில் மட்டும் வசதியாகக் காட்டிவிட்டு.. சிரிப்பதன் அர்த்தம்...????! :lol:

நாம் தமிழின் பண்டிதமணி அல்ல. நான் விளங்கிக் கொண்டதில் தவறிருப்பதாக எண்ணவில்லை. இருந்தால்.. ஒருவேளை நீங்கள் விஞ்ஞானி போல சா ஆராய்ச்சியாளன் போல எல்லாவற்றையும் விரிவா ஆராயுறன் என்று கூறிக் கொண்டு இருப்பதால்.. இதையும் ஆராய்ந்து சொல்லுறீங்களோ தெரியல்ல. ஆனால் எனக்குத் தேவை.. நான் கையாண்டதில் உள்ள தவறை மட்டும் நீங்கள் கூறுவதுதான். மிச்சம் மிகுதியை எனது தமிழறிவுக்கு ஏற்ப நான் விளக்க முற்படுகிறேன். இலக்கிய நயங்களில் ஆகுபெயர்கள் தனித்துச் சுவைக்கப்படுபவை. தமிழ் தேன். அதை சரியான வடிவில் சுவைக்கத் தெரியனும் சார்...! எடுத்தன் கவுத்தன் என்று அடிப் பொந்தில் கை வைக்க முதல்.. நுனிப் பொந்தில் இருந்து அடிக்குப் போகனும் அப்பதான் தேனி கொட்டாமல் பாதுகாத்த படி.. தேன் சுவைக்க முடியும்.. :)

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான்!

கிரகம் என்பதை கண்டம் என்று வன்னிமைந்தன் தவறுதலாக எழுதி விட்டார். இதற்கும் ஆகு பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

வன்னிமைந்தன் விடுகின்ற தவறுகள் சில அவசரத்தில் சிந்தியாமல் விடுபவை. உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ, தான் கிரகத்தை கண்டம் என்று தவறுதலாக எழுதி விட்டேன் என்பது வன்னிமைந்தனுக்கு நன்றாகவே தெரியும்.

இப்படியான தவறுகளைப் பற்றி நான் அதிகம் பேசுவதில்லை. காரணம் சிறிது உட்கார்ந்து சிந்தித்தாலே இந்தத் தவறுகளை வன்னிமைந்தன் இனம் கண்டுகொள்ளுவார்.

ஆனால் அவர் சம்பந்தமே இல்லாமல் தன்னுடைய கவிதைகளில் சில சொற்களை பாவிப்பதும், சொற்களை உடைத்து களங்கப்படுத்துவம் குறித்தே என்னுடைய விமர்சனங்கள் அமைகின்றன.

இதிலே வேறு எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை.

ஈழப் பாடல் இணையத்தில் வன்னிமைந்தனின் எழுத்துக்களை படித்தேன்.

மிகக் கவலை தரும் வகையில் அதிலும் நிறைய எழுத்துப் பிழைகள்.

அத்துடன் அந்த இணையத்தளம் தாயகத்தில் இருந்து வரவில்லை. இங்கே ஐரோப்பாவில் இருந்துதான் இயங்குகிறது.

இந்த இணையத் தளத்தை நடத்துபவர்கள் கூட வன்னிமைந்தனின் எழுத்துக்களில் உள்ள பிழைகளை திருத்தவில்லை என்பதில் இருந்து சில விடயங்கள் புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

கிரகம் என்பதை கண்டம் என்று வன்னிமைந்தன் தவறுதலாக எழுதி விட்டார். இதற்கும் ஆகு பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

வன்னிமைந்தன் விடுகின்ற தவறுகள் சில அவசரத்தில் சிந்தியாமல் விடுபவை. உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ, தான் கிரகத்தை கண்டம் என்று தவறுதலாக எழுதி விட்டேன் என்பது வன்னிமைந்தனுக்கு நன்றாகவே தெரியும்.

இப்படியான தவறுகளைப் பற்றி நான் அதிகம் பேசுவதில்லை. காரணம் சிறிது உட்கார்ந்து சிந்தித்தாலே இந்தத் தவறுகளை வன்னிமைந்தன் இனம் கண்டுகொள்ளுவார்.

ஆனால் அவர் சம்பந்தமே இல்லாமல் தன்னுடைய கவிதைகளில் சில சொற்களை பாவிப்பதும், சொற்களை உடைத்து களங்கப்படுத்துவம் குறித்தே என்னுடைய விமர்சனங்கள் அமைகின்றன.

இதிலே வேறு எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை.

வாசகனுக்கு என்று ஒரு தனிப் பார்வை உண்டு. அது கவிஞனதில் இருந்து கூட வேறுபடலாம். நான் எனது பார்வையூடும் கவி வரிகளை அணுகுவதுண்டு. உங்களிற்கு கவிஞனில் பிழை பிடிக்க இருக்கிற ஆர்வம்.. எனக்கு கவிஞனின் கவி நயத்தை ரசிப்பதில் இருக்கிறது. அந்த நயத்தை சில வேளை கவிஞன் கூட கண்டிருக்கமாட்டான். அதுபோல் அவன் கண்டதை நாமும் காண முடியாது தவறவிட்டிருக்கலாம்.

எடிற்றிங் என்பது இலகுவான விடயமல்ல. பல மணி நேரங்களை செலவு செய்ய வேண்டியது என்பதால் எழுத்துப்பிழைகள் நேர்வது இயல்பு. இருந்தாலும்.. கவி நயத்தை அது பெரிதும் பாதிக்கிற அளவில் இருக்கவும் கூடாதுதான். வன்னி மைந்தன் சில சந்தர்ப்பங்களில் சொற் கையாடல்களில் தவறிழைந்திருந்தாலும் கூட அது இன்னோர் வகையில் கவிக்கு நயம் சேர்கிறது என்பதை மேலே உள்ள உதாரணம் சுட்டி நிற்கும். அது எப்போதும் அமைவதில்லை..! :lol:

  • தொடங்கியவர்

மூட நெஞ்சே- உனக்கு

முழங்கிய தெல்லாம்

ஏதென நினைத்தாய்

என்னென்று உணர்ந்தாய்...??

ஏறி தலையில்

குட்டிட வேண்டும்

என்றது எண்ணின்

என் யாம் செய்வோம்....??

ஞானிகள் போதனை

ஞானம் தருமின்

ஜயன் போதனை

அண்ணால் ஏற்பீர்...

பாரெங்கும் ஏறியே

பரப்பியே வந்தீர்

ஏற்றவர் இருந்தால்

ஏற்பீர் நீவீர்...

முழங்கா லிட்டு

முட்டிகள் உடையோம்

தப்பியும் நாங்கள்

தவறதை புரியோம்...

மறையது கழன்ற

குலமில்லை நாங்கள்

தவறியும் நாங்கள்

தம் கருத்திணியோம்....

வேத மறையதை

இழித்திடல் நிறுத்தீர்

நாட்டுக்கு நல்லது

நலமுடன் பகிர்வீர்...

:lol::):lol::lol: ;) ;)

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

வாசகனுக்கு என்று ஒரு தனிப் பார்வை உண்டு. அது கவிஞனதில் இருந்து கூட வேறுபடலாம். நான் எனது பார்வையூடும் கவி வரிகளை அணுகுவதுண்டு. உங்களிற்கு கவிஞனில் பிழை பிடிக்க இருக்கிற ஆர்வம்.. எனக்கு கவிஞனின் கவி நயத்தை ரசிப்பதில் இருக்கிறது. அந்த நயத்தை சில வேளை கவிஞன் கூட கண்டிருக்கமாட்டான். அதுபோல் அவன் கண்டதை நாமும் காண முடியாது தவறவிட்டிருக்கலாம்.

எடிற்றிங் என்பது இலகுவான விடயமல்ல. பல மணி நேரங்களை செலவு செய்ய வேண்டியது என்பதால் எழுத்துப்பிழைகள் நேர்வது இயல்பு. இருந்தாலும்.. கவி நயத்தை அது பெரிதும் பாதிக்கிற அளவில் இருக்கவும் கூடாதுதான். வன்னி மைந்தன் சில சந்தர்ப்பங்களில் சொற் கையாடல்களில் தவறிழைந்திருந்தாலும் கூட அது இன்னோர் வகையில் கவிக்கு நயம் சேர்கிறது என்பதை மேலே உள்ள உதாரணம் சுட்டி நிற்கும். அது எப்போதும் அமைவதில்லை..! :lol:

செந்தமிழ் செல்வனின்

செந்தமிழ் மொழிகள்

நெஞ்சத்தில் வந்து

குதுகலம் பாடின.....

கையெடுத்து வணங்கினேன்

கருத்துகளை வாங்கினேன்

தன்னிலை யோடு யான்

தலைவணங்கி விடைபெற்ரேன்...

நெடுக்காலபோவான்!

ஒருவருடைய படைப்புக் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்படும் பொழுது, அதற்கு சம்பந்தமில்லாத வசைபாடல்களையும், உதாரணங்களையும் விட்டுவிட்டு ஒழுங்கான முறையில் பதில் சொல்வது எப்படி என்று வன்னிமைந்தனுக்கு சொல்லிக் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இங்கே எத்தனையோ பேர் வன்னிமைந்தனின் எழுத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பி விட்டார்கள்.

அவர்கள் யாருக்காவது இது வரை வன்னிமைந்தன் விளக்கம் கொடுத்துள்ளாரா?

இவருடைய கவிதை விளங்காமல்தான் கேள்விகள் இங்கு கேட்கப்படுகின்றன. அதற்கு பதிலாக இன்னும் ஒரு கவிதையை தருவது எப்படி பொருத்தமாக இருக்கும்?

வன்னிமைந்தன் கேள்விகளுக்கு அஞ்சி வெட்கமில்லாமல் கவிதை என்ற பெயரில் சிலவற்றை எழுதி அதற்குள் ஒளிந்து கொள்ளப்பார்க்கிறார்.

அவரை வெளியில் வரச் சொல்லுங்கள்.

வந்து தைரியமாக நின்று பதில் சொல்லச் சொல்லுங்கள்.

அதுவே ஒரு கவிஞனுக்கு அழகு

நீங்களும் சரி.. பிற கேள்வி கேட்டவர்களும் சரி.. வன்னி மைந்தனின் கவிதைகள் மெருகுற வேண்டும் என்ற நோக்கில் அவரை அணுகுவதாகத் தெரியவில்லை. மாறாக.. அவரை அவரின் படைப்புக்கள் சார்ந்து எப்படியாவது மட்டம் தட்டிக் காட்ட வேண்டும் என்ற நோக்கம் இருப்பது போலவே தெரிகிறது.

இங்கு சில விவாதங்களை மேதாவித்தனத்தை முறியடிக்க என்றும் நடத்த வேண்டிய தேவை இன்னும் இருந்து கொண்டிருப்பது வருந்தத் தக்க ஒரு நிலை. சில நக்கல் நளினத்தனங்களுக்கு எதிராகவும் செய்யப்பட வேண்டி இருக்கிறது. அதுவும் வருந்தத் தக்க நிலையே.

அந்த நிலைகளில் இருந்து விலகி ஒரு நட்புறவு ரீதியான அணுகுமுறை என்பதும்.. மட்டம் தட்டலைச் செய்யாத நடுநிலையான விமர்சனப் பாங்கும் வளர வேண்டும்.

வன்னி மைந்தனின் கவிதை.. அவரின் கடவுள் நம்பிக்கை சார்ந்து இருப்பது. அவரின் தனிச் சுதந்திரம். அதில் எவரும் தலையிட முடியாது. ஆனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் அவரின் கவிக்கு பதிலிறுக்காமல்..அவரின் ஆக்கங்களை மட்டம் தட்டுதல் என்ற நிலையில் விமர்சன இழிநிலைக்குச் சென்று அவரின் கவிதைகளை அணுகுவதை.. யாழ் தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்கின்ற போதும்.. கவிதைகள் தொடர்பில் ஆக்கங்கள் தொடர்பில் வளமான பக்கச் சார்பற்ற விமர்சனம் ஒன்று நட்புறவோடு எழுகின்ற போதும் வன்னி மைந்தன் உங்களுக்கும் பிற கேள்வி கேட்பவர்களுக்கும் மதிப்பளிக்க வாய்ப்பு உருவாகலாம். அதுவரை நீங்களும் சரி பிறரும் சரி அதை அவரிடம் எதிர்பார்க்க முடியாது தானே. :lol:

இங்கே இளைஞன் நிறையக் கேள்விகள் கேட்டார். அவர் கடவுளை நம்புபவர். இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்.

அவர் எதற்கு வன்னிமைந்தனை மட்டம் தட்ட வேண்டும்?

நான் வன்னிமைந்தனின் எழுத்துக்கள் குறித்து பல மாதங்களிற்கு முன்பே சில காட்டமான கருத்துக்களை வைத்திருக்கிறேன். (அப்பொழுது வன்னிமைந்தன் பகுத்தறிவுவாதிகள் குறித்து கவிதைகள் எழுதியதாக எனக்கு நினைவில்லை)

நானோ மற்றவர்களோ அவருடைய கருத்துக்களில் உடன்பாடு இல்லாமல் அவருடைய எழுத்துக்களை விமர்சிக்கவில்லை.

வன்னிமைந்தனின் எழுத்துக்களிலேயே நாம் சொல்கின்ற பல விடயங்களும் இருக்கின்றன. அவர் மீண்டும் மீண்டும் "கடவுளை மனிதன்தான் படைத்தான்" என்று எமது கருத்தை சொல்லி வருகிறார்.

இப்படியும் எழுதி, திடீரென்று பகுத்தறிவுவாதிகளை வசைபாடி முடிக்கிறார்.

அவருடைய கவிதைகளை நாம் புரியாமல் போவதற்கு, அவைகளில் இருக்கின்ற எழுத்துப் பிழைகளும், சொற்பிழைகளும், முரண்பாடுகளும் ஒரு காரணமாக இருக்கின்றன.

ஆகவே அவருடைய கருத்துப் பற்றி விமர்சிப்பதற்கு முன்பு, அவருடைய கவிதையில் இருக்கின்ற சொற்கள் குறித்து தெளிவு பெற வேண்டி இருக்கிறது.

ஆனால் நாம் ஏதாவது கேள்வி கேட்டால், மீண்டும் அதே பிழைகளோடு இன்னொரு கவிதை வருகிறது. இப்பொழுது எமக்கு இந்தப் புதுக் கவிதை பற்றி கேள்வி வருகிறது.

வன்னிமைந்தன் அவருக்கே அர்த்தம் தெரியாத சொற்களை பயன்படுத்தி கவிதை எழுதுகிறார் என்றும், அதனால்தான் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறார் என்றும் நான் இதனால் நம்ப வேண்டி இருக்கிறது.

கவிதை என்ற பெயரில் தான் நினைத்தபடி பகுத்தறிவாளர்களை வன்னிமைந்தன் வசை பாடுகிறார்.

அவரிடம் கருத்தியல்ரீதியாக எதுவுமே இல்லை என்பதால், விவாதத்திற்கு வரத் தயங்குகிறார்.

இதே வன்னிமைந்தன் முன்பு இங்கு யாழ்களத்தில் சில அரசியல் ஆய்வுகள் எழுதியவர். ஆகவே அவருக்கு சாதரணமாகவும் எழுதத் தெரியும்.

அத்துடன் கருத்துக்கள் எதையும் சொல்லாது வெறுமனே வசைபாடி மட்டம் தட்டும் வேலையை வன்னிமைந்தன்தான் செய்கிறார். அவருடைய கவிதைகளில் "மூடரே" என்ற சொல் இல்லாத கவிதைகள் குறைவு.

அப்படி அவர் வசைபாடுகின்ற போதும், நாம் இங்கே அதை சாதரணமாக எடுத்துக் கொண்டு, தொடர்ந்து கேள்விகளையும் கருத்துக்களையும் வைக்கிறோம், அல்லவா?

அதே போன்று வன்னிமைந்தனும் வந்து தன்னுடைய கருத்துக்களை வைக்கட்டும்.

பகுத் தறிவென்ற

பக்குவம் தொலைத்தீர்

நீரேனிங்கு

பகுத்தறி வுரைத்தீர்...??

நாஸ் தீகன் நீரென

நலமுடன் உரைத்திடும்

பகுத்தறி வாள

பதமதை எறிந்திடும்...

கர்வ மாயையை

கழிவிடை எறிந்திடும்

மனித மென்றந்த

மனிதத்தை நாட்டிடும்...

ஈர்விழி பார்வையை

இன்றது வீசிடும்

ஓர்விழி மூடலை

ஒருகணம் திறந்திடும்...

சீற்றம் மேலேற

சிந்தை இழப்பீர்

தன்னிலை தளம்பி

தவறுகள் பொழிவீர்...

மனிதனே மனிதன்

தெய்வங்கள் செய்தான்

ஏனந்த மனிதன்

ஏனதை இழித்தான்...???

ஒன்றதை ஒன்றதை

மீண்டும் மறந்தாய்

உன்னிலை மீதிலே

மீண்டும் உமிழ்ந்தாய்...

;) ;) ;)

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் கருத்துக்கள் எதையும் சொல்லாது வெறுமனே வசைபாடி மட்டம் தட்டும் வேலையை வன்னிமைந்தன்தான் செய்கிறார். அவருடைய கவிதைகளில் "மூடரே" என்ற சொல் இல்லாத கவிதைகள் குறைவு.

உலகில் ஒரு சிறிய கூட்டத்தைத் தவிர எந்த மனிதனும் தன்னைத்தானே பகுத்தறிவாளன் என்று அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. காரணம்.. பகுத்தறிவென்பது மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு அம்சம். அந்த வகையில் தங்களைத் தாங்களே தரங்குறைத்து.. பகுத்தறிவாளர்கள் என்று உச்சரிப்பவர்களை நோக்கி வன்னி மைந்தன் பாவிக்கும் மூடரே என்ற பதம் தவறாக எனக்குப் படவில்லை.

இளைஞன் என்பவரைப் பற்றிச் சொன்னீர்கள். அது அவருடைய சொந்த நிலைப்பாடுகள்.

( இதை விட மேலதிகமாக எழுதுதல்.. சுய தணிக்கைக்கு ஆளாக்கப்பட வேண்டும்.. அல்லது நிர்வாகம் தணிக்கை செய்ய முற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தணிக்கைக்கு இலக்காகிறது.).......................

......................................................வன்னி மைந்தன் தான் தீர்மானிக்க வேண்டும் எந்தெந்த நிலைப்பாடுகளுக்கு தான் பதிலளிக்க வேண்டும் என்பதை. காரணம் சிலரின் சில நிலைப்பாடுகள் விசமத்தனமான நோக்கில் இருக்கின்றன. அவற்றை இனங்காண்பதும்.. அதற்கேற்ப பதில் அளிப்பதும் அவசியம். அதனால் தான் வன்னி மைந்தன் சில விடயங்களை ignore செய்கிறாரோ தெரியவில்லை. ..............................................

................................................................................

............................................................... ( சுய தணிக்கை. நிர்வாகம் தணிக்கை செய்யட்டாம் என்று கேட்டதால் தணிக்கை செய்யப்படுகிறது.)

இருந்தாலும் மைந்தனின் பதில் கவிதைகள் நீங்கள் சொல்வது போல வெறும் சொல்லடுக்குகளாக அன்றி அர்த்தம் தாங்கியதாகவே வருகின்றன. சில பத மற்றும் எழுத்துப்பிழைகள் உள்ளன எனினும் நாமே திருத்தி வாசிக்கக் கூடிய அளவில் தான் உள்ளது. அதையேன் உங்களால முடியல்ல...??!

வன்னி மைந்தனுடன் நீங்கள் இதே விடயத்துக்காக முரண்படும் இரண்டாவது சந்தர்ப்பம் இது. முதலில் அரசியல் நிகழ்வுகள் குறித்த தனது பார்வைகளை மைந்தன் கவிதை வடிவில் தந்து வந்தவர். அரசியல் விமர்சனங்களில் எவரும் 100% சரியான நிலைப்பாட்டை எடுத்ததில்லை. வன்னி மைந்தன் துணிந்து தன்னுடைய நிலைப்பாட்டை சொல்லி வந்தவர். அதில் மிகைப்படுத்தல்கள்.. தவறுகள் இருப்பது வேறு விடயம். அதை வாசகர்கள் கெளரவமாகச் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர.. வன்னியின் கவிதைகளை வைத்து அடுத்தவர்களை " பன்னாடைகள்" என்று விழித்து தங்களை ............. ஆக்கியோரும் இங்குளர். அதன் பின்னர் வன்னி மைந்தன் அரசியல் உட்பட கவிதை எழுதுவதை கருத்தாடுவதை முற்றாக நிறுத்திக் கொண்டார். யாழ் வருவதையும் குறைத்துக் கொண்டார்.

இப்போ சில வாரங்களாகத்தான் மீண்டும் கவிதை எழுத ஆரம்பித்தார். கருத்தாடுவதை இன்னும் அவர் செய்யவில்லை. அப்படி இருக்க..மீண்டும்..

நீங்கள் வன்னி மைந்தனின் கவிதைகளுக்கு முக்கியம் கொடுக்கிறதற்கு காரணம்.. கடவுள் எதிர்ப்பாளர்களை அவர் சாடி வருவதுதான். எழுத்துப் பிழைகள் .. பொருட் பிழைகளோடு பல கவிதைகள் இங்குள்ளன. அவற்றின் மீது தோன்றாத அக்கறை வன்னி மைந்தன் மீது மட்டும் எழுவதின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன..???! இது துலங்கின்ற போது.. உங்களின் உண்மையான அக்கறையின் மீதான நம்பிக்கை குறித்து பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும். அதுவரை வன்னி மைந்தனும் உங்கள் கருத்தை இது விடயத்தில் புறக்கணிப்பதைத் தவறாக எண்ண முடியவில்லை..!

உங்களுக்கு நான் இது விடயத்தில் முன்னரும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டி இருந்தேன். நீங்கள் அவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் வன்னி மைந்தன் தனது கவிதைகள் சார்பில் எழுந்த விமர்சனங்களில் தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு அவரின் கவிதை புனையும் பாணியையே மாற்றி அமைத்தவர். இப்போ சொல்லுங்கள் இங்கே யார் அதிகம்.. அடுத்தவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க மறுக்கின்றனர் என்று. உங்களை நீங்களே பகுத்தறிவாளன் என்று உச்சரிப்பது நியாயமா என்று பல தடவை விளக்கியும்.. நீங்கள் அதைக் கைவிடாத போது.. வன்னி மைந்தன் மட்டும் ஏன் தன்னிலையில் இருந்து இறங்கனும்...! அவருக்கும் உங்களைப் போல.. சில காரணங்கள் இருக்கும். அதைத் தக்க வைப்பது அவரின் சுதந்திரம். நீங்கள் அவரை நிற்பந்திக்க முடியாது. மாறாக... உங்கள் கருத்துக்கள் மீதான.. பகுத்தறிவுச் சுய பிரகடனத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.. என்பதைத்தான் வன்னி தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இறுதிக் கவிதையில். வாழ்த்துக்கள் வன்னி மைந்தன். திறமைகளைப் பாராட்டத்தான் வேணும். அது முழுமை பெறுவதும் விடுவதும்.. இரண்டாம் நிலை. :lol:

( மேலுக்கும் ஒன்றை தணிக்கை செய்திருக்கினம்.. கள விதிகள் மீறப்பட்டதாகத் தெரியவில்லை... அதனால் சுட்டிக்காட்ட வேண்டி ஏற்பட்டது. நிர்வாகம் வன்னி மைந்தன் மீதான இந்த இரண்டாம் கட்ட முரண்பாட்டினை அனுமதிப்பதும் தவறு என்று சுட்டிக்காட்டிறம். முன்னரும் இப்படி நிகழ்ந்ததை நிர்வாகம் நங்கறியும். தணிக்கைகள் மூலம் ஒரு சிலரை மட்டும் பாதுகாக்க நினைக்கிறதா நிர்வாகம் என்ற கேள்வியை.. தணிக்கைகள் எழுப்பாமல் கவனிக்கப்பட வேண்டும்.)

சுயதணிக்கைக்கு சந்தர்ப்பம் அளித்ததற்காக நிர்வாகத்துக்கு நன்றிகள்.) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன், உங்கள் கவிதைகள் தொடர்ந்து யாழில் வர வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள்.இங்கு பண்டிதர்கள் கூடி விட்டார்கள் போலும்.சாதாரண தமிழறிவு உள்ளவனுக்கே உங்கள் கவிதையில் என்ன சொல்ல வருகின்றீர்கள் என புரிகிறது.கம்பன் போல் எழுதி ஒரு மண்ணாங்கட்டியும் விளங்காமல் விடுவதை விட சாதாரண தமிழில் பாமர மக்களையும் புரியும் படி வைத்தல் எவ்வளவோ மேல்.ஆக பிழை பிடிக்க வேண்டுமென நினைத்தால் மிக சாதாரணமாக எல்லோரிலும் பிடிக்கலாம். ஒரு வார்த்தை பிழையால் அல்லது சொற்பிரயோகத்தால் ஒரு படைப்பாளியை மட்டம் தட்ட சிலர் நினைக்கின்றார்கள் போல தான் நான் எண்ணுகின்றேன்.இதனை "மேலிடம்" கண்டு கொள்ளாது இருப்பது ஆச்சரியத்தையும் அதே நேரத்தில் அதிர்ச்சியையும் தருகிறது. "யாரையும் புண்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் இக்கருத்து என்னால் எழுதப்படவில்லை".மாறாக யாரையும் கீழிறக்கவோ அல்லது புண்படுத்துவதையோ என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

சபாஸ் சரியான சமர்...

யார் தமிழ்க்கட்சி யார் எதிர்க்கட்சி என்று மட்டும் எனக்குச் சின்னக்குழப்பம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நியாயம் என்றொரு கட்சி மட்டுமே வெல்லும்.ஆகவே அதுவே நம் கட்சி.நீங்கள் குழம்ப தேவையில்லை "விகட கவி".

வன்னிமைந்தன் எனக்கும் உங்களின் கவிதை தொடர்ந்து வரவேண்டும் என்றுதான் விருப்பம்.

ஆனால் வருத்தத்திற்கு உரிய விடயம் என்னவென்றால், எனக்கு உங்கள் கவிதைகளில் நீங்கள் யாரையோ திட்டுகிறீர்கள் என்பது மட்டும்தான் விளங்குகிறது. சில வேளைகளில் எதற்கு திட்டுகிறீர்கள் என்பது விளங்கி விடுகிறது. சில வேளைகளில் எப்படித் திட்டுகிறீர்கள் என்பது விளங்குகிறது.

ஆனால் உண்மையாக எனக்கு உங்களின் கவிதை முற்றுமுழுதாக விளங்கியது வெகு குறைவு. இதை மட்டம் தட்டும் நோக்கத்தில் அன்றி, உண்மையாகவே கூறுகிறேன்.

இங்கே உள்ள பல பண்டிதர்களுக்கு உங்களின் கவிதை புரிந்த அளவிற்கு எனக்குப் புரியவில்லை என்பதை நான் வெட்கத்தோடு ஒத்துக் கொள்கிறேன்.

உங்களின் கவிதையை புரிந்து கொள்கின்ற அளவிற்கு எனக்கு அறிவு இல்லை என்றே இருக்கட்டும்.

வன்னிமைந்தனுக்கு என் மீது ஏற்பட்ட கோபத்தால், அவர் எனக்கு விளக்கம் சொல்லத் தயாராக இல்லை என்று நெடுக்காலபோவானின் கருத்துக்களில் இருந்து அறிந்து கொண்டேன்.

வன்னிமைந்தன் சொல்ல வேண்டாம்.

அவருடைய கவிதைகளை படித்து தங்கள் கருத்துக்களை எழுதுகின்ற யாழ் கள உறவுகளே சொல்லுங்கள். நீங்களாவது எனக்கு புரிய வையுங்கள்.

நான் வன்னிமைந்தனின் கவிதைகளில் சில சந்தேகங்கள் கேட்பேன். எனக்கு விளக்குவதற்கு யார் தயாராக இருக்கிறீர்கள்?

என்னுடைய சவாலை யார் ஏற்றுக்கொள்கிறீர்கள்? (இப்படியாவது யாராவது என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார்களா என்று பார்ப்போம்)

தமிழ் தெரியும், பகுத்தறிவு புரியும் என்ற மமதையில் இருந்து இறங்கி வந்ததாகப் போக்குக் காட்டினால் ஏமாந்து விடுவோமா? மல்லாக்கப் படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்துப் பத்துத் தரம் காறித் துப்பினால் உங்கள் சந்தேகங்கள் தானாகவே புரிந்துவிடும்.. :)

இங்கே இளைஞன் நிறையக் கேள்விகள் கேட்டார். அவர் கடவுளை நம்புபவர். இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்.

அவர் எதற்கு வன்னிமைந்தனை மட்டம் தட்ட வேண்டும்?

:)

முத்தைத் தரு பத்தித் திருநகை

அத்திக் கிறை சத்திச் சரவண

முத்திக் கொரு வித்துக் குருபர எனவோம்

முக்கட் பர மற்குச் சுருதியின்

முற்பட் டது கற்பித் திருவரும்

முப்பத் துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத் தலை தத்தக் கணைதெடு

ஒற்றைக் கிரி மத்தைப் பொருதெரு

பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற் கிர தத்தைக் கடவிய

பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்

பட்சத் தெடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய வொத்தப் பரிபுர

நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப் பரி அட்டப் பயிரவர்

தெக்குத் தெகு தெக்குத் தெகுதெகு

சித்ரப் பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப் பறை கொட்டக் களமிசை

குக்குக் குகு குக்குக் குகுகுகு

குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற் றெழ நட்பற் றவுணரை

வெட்டிப் பலி யிட்டுக் குலகிரி

குத்துப் பட வொத்துப் பொரவல பெருமாளே

  • கருத்துக்கள உறவுகள்

முத்தைத் தரு பத்தித் திருநகை

அத்திக் கிறை சத்திச் சரவண

முத்திக் கொரு வித்துக் குருபர எனவோம்

இத் திருப்புகழின் பொருள்..

"முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை "

முத்தினைப் போன்றொதொரு வெண்ணிறத்தின் எழிலுக்கு

ஒத்ததாய் அமைந்தவொரு ஒளிமிகு இளஞ் சிரிப்புடனே

தேவர்க்குத் தலைவனாம் இந்திரன் பெற்றிட்ட

தேவயானை எனும் கரிமகளின் நாயகனே!

"சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர"

அன்னையாம் உமையவள் அன்புடன் ஈன்றிட்ட

சக்திவேல் எனும் ஆயுதத்தை கையினில் ஏந்துகின்ற

சரவணபவ என்கின்ற அறுமுகக் கடவுளே!

முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே!

தந்தைக்கே ஒரு மந்திரத்தின் பொருள் சொல்லி

தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற

குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே!

"என ஓதும் முக்கட் பரமற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித்து இருவரும்

முப்பத்து மு வர்க்கத்து அமரரும் ..... அடிபேணப்"

என்றெல்லாம் உனைத்துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு

முன்மைக்கெல்லாம் மூத்ததான முழுமுதற் பொருளான

சுருதியெனும் வேதத்தின் முற்றுப் பொருளான

"ஓம்" என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து

அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்த

பிரமன் திருமால் இருவரும் கூட

முப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து

நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,

"பத்துத்தலை தத்தக் கணை தொடு"

திக்குக்கொரு தலையெனப் பத்துத்தலை படைத்திட்ட

தென்னிலங்கைத் தேவனாம் இராவணனின் தலைகள் சிதறி வீழ

அன்றங்கு ஓர் அம்பை விட்டு அவுணரை அழித்த,

"ஒற்றைக்கிரி மத்தைப் பொருது"

ஒப்புவமை இலாத மந்திரமெனும் மலையினை

மத்தாகவே கொண்டு பாற்கடலைக் கடைந்திட்ட,

"ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்"

அன்றொருநாள் அண்ணன் தம்பிகளுக்கிடையே

மூண்டதோர் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளினிலே

அதமத்தின் வழி நின்று அபிமன்யுவைக் கொன்ற

ஜயத்திரதன் எனும் அரசர் கோமானை,

"மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள்

என்மகனின் மறைவுக்குக் காரணமான

ஜயத்திரதனைக் கொல்லானேயாகில்,

அக்கினியில் புகுந்து அன்றே உயிர் துறப்பேன்" என

சூளுரைத்த பத்தனைக் காக்கவென

'போரிலே ஈடுபடேன்' எனும் வாக்கினையும் மறந்து

தன் கையில் தாங்கியுள்ள சக்கரத்தை விட்டெறிந்து

சூரியனைச் சிலகாலம் சயனிக்கச் செய்ததாலே

வெளிவந்த சிந்துராசனாம் ஜயத்திரதனை

விரைவாகக் கொல்லச் செய்தருளி உதவிட்ட,

"பத்தற்கு இரதத்தைக் கடவிய"

இத்துணை வல்லமை இயல்புடனே படைத்திருந்தும்

அத்தனையும் காட்டாமல் அடக்கமாக நண்பனுக்குத்

தேரோட்ட இசைந்து தேர்ப்பாகனாய் வந்திட்ட

"பச்சைப் புயல்"

மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட

அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும்

மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்

"மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ..... ஒருநாளே"

மெச்சுகின்ற பரம் பொருளே! என்னை நீ

பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் ஒருநாளும்

உண்டோ என நான் இறைஞ்சுகின்றேனே!

[இனி வரும் வரிகள் முருகன் அசுரருடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது]

"தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்க நடிக்கக்"

தித்தித்தெய என்கின்ற தாளத்துக்கு இசைவாக

முத்துகள் அமைந்த சிலம்பினை அணிந்த

நர்த்தனம் செய்கின்ற பதங்களை வைத்து

பார்த்தவர் நடுங்கும் பத்திரகாளியும்

எத்திக்கும் சுழன்று தாண்டவம் செய்யவும்,

"கழுகொடு ..... கழுது ஆடத்"

பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன்

பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்,

"திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ..... என ஓதக்"

எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும்

அட்டப் பயிரவர் என்கின்ற எண்மரும்

ஆட்டத்தில் அழகிய இக்கூத்தினுக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக

என்னுமோர் தாள ஓசையினைக் கூறிடவும்,

"கொத்துப்பறை கொட்டக்"

கூடவே தாரை, தமுக்கு, தப்பட்டம் என்கின்ற

பற்பல பறைவாத்தியங்களையும் முன்சொன்ன

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக

என்கின்ற அதே தாளத்தில் அழகுற முழங்கிடவும்,

"களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்று எழ"

பலகாலம் வாழ்ந்திருந்து, பல போர்களைப் பார்த்திட்ட

கிழமான முதிர்ந்த கோட்டான்களும் மகிழ்ந்து

குக்குக்குகு குக்குக் குகுகுகு, "குத்திப் புதை", "புக்குப் பிடி" என

கூக்குரலிட்டுக் குழறி, வட்டமெனச் சுழன்று

இட்டமுடன் மேலே எழுந்திடவும்,

"நட்புற்று அவுணரை வெட்டிப் பலி யிட்டுக்"

தனக்கு வரமளித்த சிவனாரின் மகனென்னும்

இணக்கத்தை மறந்து பகைகொண்ட அசுரர்களை

வெட்டிக்கொன்றங்கு குவித்துப் பலிகொண்டு,

"குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ..... பெருமாளே."

அவுணர் குலத்துக்கு இசைவாய் நின்றிட்ட

கிரௌஞ்சமெனும் மாமலையும் வேலாலே குத்துண்டு

பொடிப்பொடியாய் உடைந்துபட அறவழியில் நின்றன்று

அசுரருடன் போர் செய்த பெருமையிற் சிறந்தவரே..!

நன்றி: http://aaththigam.blogspot.com

-----------

வன்னி மைந்தனின் கவிதைக்கே பொருள் விளங்கல்ல என்று அழுகிறார்கள். அதில திருப்புகழுக்கு..??! அதுதான். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொண்டுள்ளார்கள்.அந்தளவில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பதுடன் நிறுத்திவிடுவது தான் எனது வேலை.இதில் என்னமோ கருத்து சொல்ல வேனும் போல இருக்கு்குது

வன்னியின் கவிதைக்கு(கண்டம்)நெடுக்ஸ்ஸின

விவாதம் திறமையாக இருந்தாலும், எனக்கும் வன்னி கிரகத்துக்கு

பதிலா கண்டம் என்று தவறுதாலாக எழுதியாகவே கருதுகிறேன்.எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் நெடுக்ஸ் போன்ற திறைமை உள்ளோர் இப்படியான பிளைகளுக்கு வக்காளத்து வாங்காமல் சம்பந்தப்பட்டோருக்கு பிளைகளைச்சுட்டிக்காட்டாலாம

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பதுடன் நிறுத்திவிடுவது தான் எனது வேலை.இதில் என்னமோ கருத்து சொல்ல வேனும் போல இருக்குது..

வன்னியின் கவிதைக்கு(கண்டம்)நெடுக்ஸ்ஸின

??

விவாதம் திறமையாக இருந்தாலும், எனக்கும் வன்னி கிரகத்துக்கு

பதிலா கண்டம் என்று தவறுதாலாக எழுதியாகவே கருதுகிறேன்.எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் நெடுக்ஸ் போன்ற திறைமை உள்ளோர் இப்படியான பிளைகளுக்கு வக்காளத்து வாங்காமல் சம்பந்தப்பட்டோருக்கு பிழைகளைச் சுட்டிக்காட்டாலாமொ என்பதே.

வன்னி மைந்தனின் கவிதைகளில் மட்டுமல்ல.. பலரினதும் கவிதைகளில் சில சொற்பிழை.. எழுத்துப்பிழை இருக்கிறது வழமைதான். அதை நாங்கள் தான் திருத்திப் படிக்க வேணும். இல்ல சுட்டிக்காட்ட வேணும். இங்க பார்த்திங்கன்னா அவரின்ர மொத்தக் கவிதையே பிரச்சனையாக்கி வைச்சிருக்கு.

அதுதான் எனக்கு விளங்கினதை விளக்கப் போய்.. நான் ஆப்பிழுந்த குரங்காட்டம் நிக்கிறன். அதுக்க நீங்க வேற.. புத்திமதி சொல்லச் சொல்லுறேள். இதில யாற்ற பிழைகள யாருக்கு சுட்டிக்காட்டுறது. அந்தப் பக்குவமிருந்திட்டா இந்தப் பக்கம் இவ்வளவுக்கு நீண்டிராதே. :):o

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.