Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அருந்தவபாலன் ‘….’ சாதி; நீங்கள் எந்த சாதியென கூற முடியுமா?; விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்: பொ.ஐங்கரநேசன் அதிர்ச்சி தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருந்தவபாலன் ‘….’ சாதி; நீங்கள் எந்த சாதியென கூற முடியுமா?; விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்: பொ.ஐங்கரநேசன் அதிர்ச்சி தகவல்!

by PagetamilApril 14, 2023
vickey.jpg

அருந்தவபாலன் “….“ சாதியென சொல்கிறார்கள். உங்களைப்பற்றியும் சொல்கிறார்கள். நீங்கள் என்ன சாதியென குறிப்பிட முடியுமா என க.வி.விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐங்கரநேசன் குறிப்பிடுகையில்,

விக்னேஸ்வரனை அகற்ற வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் ஒரு அணி விரும்பியது. விக்னேஸ்வரனை அப்போது கவர்ச்சியான வேட்பாளராகத்தான் அப்போது நினைத்தேன். ஆனால் இப்பொழுது வேறு விதமாக அப்பிராயமுள்ளது.

விக்னேஸ்வரனை அகற்ற வேண்டுமென்றால், முதலில் ஐங்கரநேசனை அகற்ற வேண்டுமென நினைத்தார்கள். இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். விக்னேஸ்வரன் எம்மை பதவிவிலக கேட்டார். பதவிவிலகினோம். ஆனால் விக்னேஸ்வரன் பின்னர் நேர்மையாக நடக்கவில்லை.

அவர் மாகாண முதலமைச்சராக இருந்ததற்கும், ஒரு கட்சியை ஆரம்பித்தற்குமிடையில் நிறைய வித்தியாசமிருந்தது. கட்சியை ஆரம்பித்த பின் கைதேர்ந்த அரசியல்வாதியாகி விட்டார்.

மாகாணசபையில் எங்கள் மீதான குற்றச்சாட்டின் போது நான் பதவிவிலக தயாராக இருந்தேன். குருகுலராஜா அதை விரும்பவில்லை. விக்னேஸ்வரன் என்னையே குருகுலாஜாவிடம் தூது அனுப்பினார். எம் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி நீதியான, பக்கச்சார்பற்ற திணைக்கள ரீதியான விசாரணை மேற்கொள்வதாக உத்தரவாதமளித்தார்.இதையடுத்து, குருகுலராஜாவிடம்நான் சென்று பேசினேன். குருகுலராஜா பதவிவிலகல் கடித்தை கொடுத்தார். அது நடக்காவிட்டால், அவரும் டெனீஸ்வரன் மாதிரி நிலைப்பாடு எடுத்திருப்பார்.

இதன்பின்னர், விக்னேஸ்வரன் பிரதம செயலாளரின் ஊடாக விசாரணைக்குழுவொன்றை அமைத்து, அறிக்கை பெற்றிருந்தார். மாகாணசபை கலைந்த பின்னர்தான் எனக்கு அது தெரியும். நான் அவரிடம் போய் கேட்டபோது, விக்

வினேஸ்வரன் கோரியதன்படி விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையெனில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அந்த அறிக்கையை பெற்றோம்.

அந்த அறிக்கையில், அனைத்து அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

நான் விக்னேஸ்வரனிடம் போய் இதைப்பற்றி கேட்டேன். “அப்படியா ஐங்கரநேசன். எனக்கு தெரியாதே“ என்றார்.

உங்கள் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டு, வாங்கப்பட்டுள்ளது என்றேன்.

சிலவேளை செயலாளர் தன்னிடம் கையளிக்காமல் விட்டிருக்கலாம் என்றார். அது பொய். அவருக்கு அது தெரியும்.

தன்னை ஒரு உத்தமனாக தொடர்ந்தும் நிரூபிக்க அவர் விரும்பினார். தன்னுடைய நீதியின் கீழ் தவறான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டது என்பதை அவர் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனால் அவருடன் தொடர்ந்து பயணிப்பதற்கான விருப்பம் என்னிடமில்லை.

விக்னேஸ்வரன் அரசியலில் இருக்க விரும்புகிறார். என்னுடைய பார்வையில், அவர் அரசியலில் இருப்பதற்கான சில தகுதிகள் இல்லை. பாராளுமன்ற தேர்தல் 2020 இல் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அருந்தவபாலனின் சாதியை குறிப்பிட்டு, உங்களது சாதியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்கள், உங்களுடைய சாதியென்ன என அறியலாமா என கேட்டிருந்தார். நீங்கள் என்ன சாதியாக இருந்தாலென்ன, உங்கள் மீது எனக்குள்ள அன்பு ஒரு துளி கூடவோ, குறையவோ மாட்டாது என்றும் தெரிவித்தார்.

நான் பதில் போடவில்லை. அவரிடம் நேரில் சென்று சொன்னேன். நாங்கள் போராட்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். சாதி ஒடுக்குமுறை போன்றவற்றை ஒழிப்பதற்காகவும் போராட வந்தவர்கள். என்னிடம் கேட்டதை போல இன்னொருவரிடம் கேளாதீர்கள் என்றேன்.

விக்னேஸ்வரனுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதற்கு மற்றொரு காரணம்- அவர் சுயமாக முடிவெடுக்க மாட்டார்.

இன்னொரு சம்பவம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் ஒருவரும், வடமராட்சியின் பிரபல ஆசிரியர் ஒருவரை வேட்பாளராக்குவதற்காக பேசிய போது,  நீங்கள் என்ன சாதியென கேட்டார் என அந்த ஆசிரியர் என்னிடம் கூறியிருந்தார்.

அரசியல் என்பது தேர்தலுக்கான கூட்டு என்றால் நாளொரு கட்சி பொழுதொரு கூட்டு என இருக்கலாம். ஆனால், தமிழ் தேசிய அரசியல் விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இருக்கலாமே தவிர, 70களின் சாதி அரசியலின் தொடர்ச்சியாக இருக்க முடியாது. ஆனால் இன்று சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவுபடுத்தும் சூழலே உள்ளது.
 
https://pagetamil.com/2023/04/14/அருந்தவபாலன்-சாதி-நீங்/

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் கதைப்பதற்கு நன்றாக காணப்படலாம். ஆனால், அடிப்படையில் சாதியம் பல விதங்களில் பல விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றது. 

பாடசாலை சங்கங்கள் தொடக்கம் வாட்ஸப்/பேஸ்புக் அட்மின் பொறுப்பு வரை எந்த சாதிக்காரன் சாதிக்காரி அட்மின் என பார்த்து உட்பூசல்கள் நடப்பதை கண்கூடாக காண்கின்றோம். 

வெளியில் பூச்சுப்பூசி எழுதலாம், பேசலாம். ஆனால் நடைமுறையில் சாதியம், பிரதேச வாரியான வேறுபாடுகள் எல்லாமே தொடர்ந்தும் கோலோச்சவே செய்கின்றன. 

இங்கு எந்த சாதி மேல்/கீழ் என்பதல்ல முக்கியம். எல்லாரும் தமது இருப்பை அடியொற்றியே/சுற்றியே/பற்றியே இயங்குகின்றார்கள். 

இந்த விடயத்தில் நீங்கள் என்ன சாதி என மின்னஞ்சலில் கேட்டது ஒரு தனிநபர் அல்லாத சமூக வெளிப்பாடாக பார்க்கப்படலாம். நம்ம மூஞ்சை தானே கண்ணாடியில் தெரியும். பானையில் உள்ளது தானே அகப்பையில் வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரநேசன் தனது தகுதிகேற்ற அரசியல் பேச்சை இதில் பேசவில்லை. விக்கியர் மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்களை சுமத்தலாம். கோட்பாட்டு ரீதியான குற்றச்சாட்டுக்களை சுமத்தலாம்.. மக்கள் நலன் விரோத அவரின் செயற்பாடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை சுமத்தலாம்.. தனிப்பட்ட ரீதியில்.. அவர் அனுப்பிய மின்னஞ்சலை வகுப்புவாத பின்னணியில்.. பகிர்ந்து கொண்டு.. கடைசியில் சாதியத்தை ஆயுதமாக்கும்.. ஐங்கரநேசன் தானும் சராசரி அரசியல்வாதின்னு நிரூபித்துவிட்டார். 

தேசிய தலைவரையே சாதி சொல்லி திட்டிய சமூகத்தில் இருந்து தான் விக்னேஸ்வரனும் வந்தார். தேசிய தலைவர் பற்றிய சாதி ரீதியாக தனது விளம்பர வகுப்பெடுத்த சோபாசக்தி போன்றவர்களின் அடிமட்டதனமான கருத்தியலாகவே இதனையும் பார்க்கனும். விக்கி போன்று பலர் தனிப்பட்ட ரீதியில் சிலவற்றை செய்தாலும் அதனை அவர்கள் பொதுக்களத்துக்கு கொண்டு வராதவரை பகிரங்கப்படுத்துவது கீழ்த்தரமான அரசியலாகும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

விக்கி போன்று பலர் தனிப்பட்ட ரீதியில் சிலவற்றை செய்தாலும் அதனை அவர்கள் பொதுக்களத்துக்கு கொண்டு வராதவரை பகிரங்கப்படுத்துவது கீழ்த்தரமான அரசியலாகும். 

2020 இல் வந்த மின்னஞ்சலை இவ்வளவு காலமும் வெளிப்படுத்தாமல் இப்போது சொல்வது அரசியலாக்கும் விடயம்தான்.

விக்கியர் ஒருவரை இன்ன சாதி என்றும் இவரை என்ன சாதி என்றும் மின்னஞ்சலில் கேட்டது அதை அவர் ஒரு கீழ்த்தரமான விடயம் என உணராததுதான். அந்த வகையில் விக்கியர் தவறென்று உணராததை மின்னஞ்சலில் கேட்டதை நேரடியாகச் சொன்ன பின்னரும்  விக்கியர் தவறென உணர்ந்தாரா இல்லையா என்பதில் தெளிவில்லை. ஆனால் விக்கியர் தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு கட்சித் தலைவராக இருப்பதும், கடந்த தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றதும், இப்படியான அவரது தவறுகளை சுட்டிக்காட்டாமல் அமைதியாக இருந்த அவருடைய கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களின் தவறுகளால்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கிருபன் said:

விக்கியர் செய்த தவறு பூடகமாக விசாரிக்காமல் எழுத்து மூலமாக கேட்டது.  மற்றும்படி சமூகத்தின் பெருன்பான்மை கடைப்பிடிக்கும் ஒரு விடயம் கீழ்த்தரமானது என வரையறுக்கப்படலாமா என்பது ஆராயப்பட வேண்டியது. ஏன் என்றால் எமது சமூகத்தை நாமே கீழ்த்தரமானது என்று கூற முன் சற்று சிந்திக்கவேண்டும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

அருந்தவப்பாலனின் சாதி என்னவென்று என்னிடம் கேட்டால் தெரியப்போகின்றது. அவரை நன்கு அறிவேன், அவரின் மனைவி எனக்கு ஒருவகையில் சொந்தம் தான். வேறு சாதியில் தான் திருமணம் செய்தார், திருமணம் செய்த சாதி ஆட்களின் வாக்கு இவருக்கு கிடைத்தது,  ஆனால் சொந்த சாதி வாக்குகழும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வாக்குகளும் தான் இவருக்கு கிடைக்கவில்லை. என்ன செய்வது? நல்ல மனுஷன் தான் ஆனால் தமிழ் அரசியல் வாதிக்களுக்கே உரிய நரித்தனம் இவரிடம் இல்லை. உதயன் பத்திரிகை சரவணபவன் செய்ய நரித்தனதால் 45 ஆயிரம் வாக்கு வாங்கியும் தோல்வி அடைந்தார். இப்பொழுது தாடி வளர்த்துக் கொண்டு சுற்றுகின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் பெண் கொண்டும் கொடுத்தும் வாழும் விக்கியரின் உண்மையான முகம் இதுதான். 

அதிகாரமும் பணமும் சாதியும் பார்க்காது, இனமும் பார்க்காது என்பதற்கு விக்கியரின் இந்த விடயம்  சிறந்த உதாரணம். 

கொழும்பு 7 சிங்களத்துடன் சம்பந்தம் செய்துகொள்ள ஆயத்தான விக்கியர், தான் சார்ந்த சமூகத்தில், தனது சாதி தவிர்ந்த வேறொருவர் அரசியல் அதிகாரம் பெற்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல. 

இதை காலம் தாமதித்தேனும் வெளிப்படுத்திய ஐங்கரநேசனுக்கு நன்றி. 

இதய சுத்தியோடு இனத்திற்காக உழைப்பார்கள் என்று யாரை நம்புவது?

☹️

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

 சமூகத்தின் பெருன்பான்மை கடைப்பிடிக்கும் ஒரு விடயம் கீழ்த்தரமானது என வரையறுக்கப்படலாமா என்பது ஆராயப்பட வேண்டியது. 

என்ன கூற வருகிறீர்கள் ? வெளிப்படையாகக்.கூறலாமே? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

என்ன கூற வருகிறீர்கள் ? வெளிப்படையாகக்.கூறலாமே? 

விக்கியரின் வினாத்தாள் திருத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் சமன்பாடு எல்லோருக்கும் பொருந்த வேண்டும். சமன்பாட்டிலேயே குறைபாட்டை வைத்துக்கொண்டு அல்லது தவறான சமன்பாட்டை வைத்துக்கொண்டு வினாத்தாள் திருத்தம் செய்யக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விக்கியரின் வினாத்தாள் திருத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் சமன்பாடு எல்லோருக்கும் பொருந்த வேண்டும். சமன்பாட்டிலேயே குறைபாட்டை வைத்துக்கொண்டு அல்லது தவறான சமன்பாட்டை வைத்துக்கொண்டு வினாத்தாள் திருத்தம் செய்யக்கூடாது. 

🥺

இருக்கிற குழப்பம் போதாதென்று நீங்கள் வேறு குழப்புகிறீர்கள். 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழ் சாதியினர் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்களே சாதியை விட தயாரில்லை. அப்படியிருக்கும் போது  மேல் வர்க்கம் எனப்படுவோரை நொந்து பயனில்லை. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

2020 இல் வந்த மின்னஞ்சலை இவ்வளவு காலமும் வெளிப்படுத்தாமல் இப்போது சொல்வது அரசியலாக்கும் விடயம்தான்.

விக்கியர் ஒருவரை இன்ன சாதி என்றும் இவரை என்ன சாதி என்றும் மின்னஞ்சலில் கேட்டது அதை அவர் ஒரு கீழ்த்தரமான விடயம் என உணராததுதான். அந்த வகையில் விக்கியர் தவறென்று உணராததை மின்னஞ்சலில் கேட்டதை நேரடியாகச் சொன்ன பின்னரும்  விக்கியர் தவறென உணர்ந்தாரா இல்லையா என்பதில் தெளிவில்லை. ஆனால் விக்கியர் தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு கட்சித் தலைவராக இருப்பதும், கடந்த தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றதும், இப்படியான அவரது தவறுகளை சுட்டிக்காட்டாமல் அமைதியாக இருந்த அவருடைய கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களின் தவறுகளால்தான்.

அந்த மின்அஞ்சலை வெளியில் விட அவருக்கு என்ன தயக்கம் அழித்து விட்டார் என்று சொன்னால் லண்டனுக்கு அனுப்புங்க எந்த கொம்யுட்டர் மின்ன சலை துறந்து பார்தீன்களோ அதன் கார்ட் டிரைவரை உண்மை பொய் வெளிவரும் ஒரு மணி நேரத்தில் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கீழ் சாதியினர் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்களே சாதியை விட தயாரில்லை. அப்படியிருக்கும் போது  மேல் வர்க்கம் எனப்படுவோரை நொந்து பயனில்லை. :cool:

இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.