Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?

78 members have voted

  1. 1. புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?

    • ஒன்றும் இல்லை
      10
    • கனடா
      22
    • அமெரிக்கா
      1
    • அவுஸ்திரேலியா
      11
    • யூகே
      4
    • பிரான்ஸ்
      2
    • டென்மார்க்
      1
    • சுவிஸ்
      7
    • ஜேர்மனி
      4
    • நோர்வே
      4
    • சுவீடன்
      0
    • நெதர்லாந்து
      7
    • இத்தாலி
      0
    • நியூசிலாந்து
      1
    • சிங்கப்பூர், மலேசியா
      0
    • இந்தியா
      2
    • தென் அமெரிக்க நாடுகள்
      0
    • ஏனைய ஐரோப்பிய நாடுகள்
      0
    • ஏனைய ஆசிய நாடுகள்
      0
    • ஆபிரிக்க நாடுகள்
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வணக்கம்!

வருடந்தோறும் பல சஞ்சிகைகள், ஸ்தாபனங்கள், அமைப்புக்கள் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் இவை இவை என்று தரப்படுத்தல் செய்து அறிவித்து வருகின்றன.

ஒரு சின்ன ஆதங்கம். அதாவது தமிழர்கள், குறிப்பாக எம்மைப்போன்ற ஈழத் தமிழர்கள் புலத்தில் வாழ்வதற்கு சிறந்த நாடு எதுவாக இருக்கும் என்று எனக்குள் ஒரு கேள்வி.

இப்படியான ஆராய்ச்சியில் யாராவது ஈடுபட்டு இருந்தால் அல்லது அதுபற்றிய தகவல்கள் ஏதாவது உங்களிடம் இருந்தால் இங்கு இணைக்கவும். மேலும்,

புலத்தில் நீங்கள் சிறந்ததாக கருதும் நாட்டை ஏன் தமிழருக்கு அந்த நாடு சிறந்தது என்ற காரணத்துடன் விளக்கினால் பலருக்கு அது பயன் உள்ளதாக இருக்கும்.

சிலருக்கு சிறீ லங்கா நாட்டில் இருந்து எங்காவது ஒரு வெளிநாட்டுக்கு ஏனென்சி மூலம் அல்லது சட்டரீதியான முறையில் தப்பி ஓடி உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலை.

சிலருக்கு பல நாடுகளிற்கு குடிபெயரக்கூடிய வசதிகள் உள்ளன. இவர்கள் இஞ்ச போவமா, அங்க போவமா என்று குழம்பிக்கொண்டு இருப்பார்கள். இதில் தாயகத்தில் இருந்து மேற்படிப்புக்கு இடம்பெயரும் மாணவர்களும் அடக்கம்.

நீங்கள் வாழும் நாடுகள் ஏன் சிறந்தவை அல்லது கூடாதவை என்றும் காரணங்களுடன் கூறினால் மற்றவர்களுக்கு இந்த தகவல்கள் உபயோகப்படக்கூடும்.

நீங்கள் ஏதாவது நாட்டிற்கு குடிபெயர்ந்து செல்ல விரும்பினால், ஏன் அங்கு செல்ல விரும்புகின்றீர்கள் என்றும் மற்றும் தற்போது வாழும் நாட்டில் ஏன் உங்களுக்கு இருக்க பிடிக்கவில்லை என்றும் கூறினால் நன்றாக இருக்கும்.

விருப்பமானவர்கள் கருத்துக்கணிப்பிலும் உங்கள் தெரிவை இடவும். கருத்துக்கணிப்பில் பங்குபற்றுபவர்கள் நீங்கள் ஏன் குறிப்பிட்ட ஒரு அந்த நாட்டை தேர்வு செய்தீர்கள் என்ற காரணத்தை கூறவும்.

கருத்தாடலில் உங்கள் ஆதரவுக்கு நன்றி!

  • Replies 124
  • Views 14.7k
  • Created
  • Last Reply

நல்லதொரு கருத்துப்பகிர்வின் ஆரம்பம் கலைஞன் அவர்களே!

இங்கே புலம் பெயர்ந்து செல்லும் எம்மவர்கள் என்று பார்க்கும் போது, ஆகப் பிரதானமான காரணமாக பார்க்கக் கூடியது உயிர் பிழைக்க தப்பியோடுவதே(பணம் சம்பாதிக்க என்ற ஒரு தேவை இருந்தாலும், அதற்குள்ளும் உயிர் பிழைத்துக்கொண்டு, நாட்டிற்கும், வீட்டிற்கும் சம்பாதித்தல் என்று தான் கொள்ள வேண்டும்)

இனப்பிரச்சினை தீவிரமாக முந்திய காலங்களில், வேறு வேறான காரணங்களை மட்டும் கொண்டு வெளிநாடு சென்றிருந்தாலும், தற்போது அக்காரணங்களுள் பிரதானமான இக்காரணத்தையும் உள்ளடக்கித்தான் என்பதை மறுக்க முடியாது.

அந்த வகையில் கல்வி எனும் போது சில நாடுகளும், பொருளாதாரம் என்னும் பொழுது சில நாடுகளும், அசைலம் கிடைக்கிறது இலகு எனும் போது சில நாடுகளும், ஏஜென்சி மூலம் போய்ச் சேர்வதற்கு இலகுவாண வழி உண்டு எனும் அனுமானத்தின் கீழ் சில நாடுகளையும், பொருமளவிலான சொந்த பந்தங்களைக் கொண்டிருப்பதால் ஊர் மணம் அதிகமாக இருக்கும் எனும் காரணத்தினால் சில நாடுகளையும் வகைப்படுத்தலாம்.

ஆனால் இவ் வாக்கெடுப்பில் நான் இந்தியாவை தெரிவு செய்திருக்கிறேன். காரணம்.

நாம் பெருமளவு அளப்பரிய தியாகங்களை ஆகுதியாக்கி போரிட்டு வருவது தமிழீழம் என்ற ஓர் இலட்சியத்திற்காகவே.

அதாவது எமது தமிழ் பாரம்பரியங்கள், கலாச்சாரங்களை கட்டிக்காத்தவண்ணம் யாருக்கும் அடிமையாகாமல், யாரலும் அடக்கி, ஒருக்கப்படாமல் சுதந்திரமாய், சுயமாய் வாழவேண்டும் என்பதற்காகவே.

இதிலே எனது அறிவுக்கு எட்டியவரை, புலம்பெயர்ந்த தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும், தற்போதய சந்ததி தேச விடுதலைக்கான பங்களிப்பை பல வழிகளில் செய்ய உதவியாக இருந்த போதிலும்,

ஓரிரு சந்ததிகளிற்கு பின்பு என்று பார்க்கும் பொழுது, தமிழர் கலாச்சாரத்தோடு மீளவும் விடிந்து விட்ட எமது ஈழத்திற்கு கிடைக்கக் கூடிய சந்ததியை பெருமளவில் தமிழ்நாடே திருப்பித் தரக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். (இதில் இந்தியாவில் அகதிமுகாம் வாழ்க்கையை குறிப்பிடவில்லை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களில் எமது நாட்டு சூழல் சரியாகும் வரை, கல்வி வசதிகளோடு கூடிய பிழைப்பு நடாத்துபவர்களையே குறிப்பிடுகிறேன்.)

முதலாவது, இரண்டாவது ஈழத்தமிழ் சந்ததியர் வாழும் மேற்கத்திய நாடுகளில் இது அவ்வளவாக உணரப்படா விட்டாலும்,

மூன்றாவது, நான்காவது இந்திய தமிழ் சந்ததியினரைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர், மலேசியா, பீஜி தீவுகள் மற்றும் தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இதன் தாக்கத்தை தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது.

தொடர்ந்தும் எனது கருத்துக்களை மற்றைய யாழ்க்கள உறவுகளின் கருத்துக்களைத் தொடர்ந்து முன்வைக்கின்றேன்.

அதுசரி இன்னும் கலைஞன் அவர்களே வாக்களித்து கருத்துப்பதியவில்லையே!!

Edited by தமிழினீ

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்து வாழ சிறந்த இடம் அவுஸ்ரெலியா தான்,அவுஸ்ரெலியா தான்.அவுஸ்ரெலியா தான்,

நாங்கள் சிறிலங்கா நாட்டில் சந்தொசமாகவும் எந்த மனித உரிமை மீறல்கள் அடக்குமுறைகள் எதுவும் இல்லாமல் சந்தொசமாக வாழ்ந்து கொண்டு தான் இருந்தனாங்கள்.கலைஞன் கூறிய நாடுகளின் அரசாங்கங்களிற்கு எமது சேவை தேவைபட்டதால் தான் எங்களை வரும்படி அழைத்ததால் நாங்கள் இங்கு வாழ்கிறோம் சேவை செய்கிறோம் எமது சேவை மேற்கூறிய நாடுகளிற்கு நிச்சயம் தேவை இல்லாவிடில் இந்த நாடுகள் இயங்க முடியாது குறிப்பாக புத்தன்,ஜம்முபேபி,சுண்டல் ஆகியோரின் உன்னதமான சேவையை அவுஸ்ரெலியா எதிர் பார்த்து கொண்டிருகிறது, :P நாங்கள் சிறிலங்காவிற்கு போக நினைத்தாலும் அவுஸ்ரெலிய அரசாங்கம் விடாது காலில் விழாத குறையாக கெஞ்சுவார்கள்.ஆகவே தான் சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா என்ற தென்னிந்திய தெய்வீக கானத்தை காலையும்,மாலையும் வானொலியில் ஒலிபரப்பி கொண்டிருக்கிறோம். :)

சில காரணங்கள்

1)கோயில் இல்லாத இடத்தில் குடி இருக்க வேண்டாம் என்று எமது மூதாதையர் கூறிய கூற்றிற்கு ஏற்ப எம்மால் விரும்பிய (இஸ்ட தெய்வம்) கோயில் கட்டி பூசை செய்ய கூடிய ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்,உடனடியாக கோஒயில் கட்ட வசதி இல்லை எனின் கிழமைக்கு நூறு டொலர் கொடுத்து பாடசாலை மண்டபத்தை எடுத்து அங்கு தற்காலிக கோயிலை அமைத்து அதாவது தெய்வீக சிலையை ஜயரின் வீட்டில் வைத்து ஒவ்வொரு கிழமையும் அந்த சிலையை மண்டபதிற்கு கொண்டு வந்து,பூசை செய்து எமது பக்தியை இறைவனுக்கு இலகௌவாக தெர்விக்க கூடிய இடம் அவுஸ்ரெலியா தான்.இதன் மூலம் கிடைக்கும் வருமாணத்தை வைத்து பிரமாண்டமான கோயில் கட்டி நாங்கள் எமது இஸ்ட தெய்வதிற்கு பூசை செய்ய கூடிய ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்.அரோகரா..அரோகரா.

மேற்கூறிய கஷ்டங்கள் இந்துமத தமிழர்களிற்கு தான் இருகிறது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தமிழர்களிற்கு இந்த கஷ்டங்கள் இல்லை,சில தேவாலயங்கள் வெள்ளை இனத்தவர்களாள் கவனிபாரற்று விடபடிருக்கும் அதை இவர்கள்(கிறிஸ்தவ தமிழர்கள்) போய் துப்பரவு செய்து சில தேய்விக பாடல்களை பாடி கர்த்தரின் ஆசியை பெற்று இன்புற்றிருக்க ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்..ஆலேலோயா...ஆலேலோயா.

இஸ்லாம் மதத்தை சார்ந்த தமிழ பேசுபவர்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை காரணம் ஏனைய இஸ்லாமிய உலக சகோதர்கள் அவர்களிற்கு பள்ளிவாசல் கட்டி வைத்திருகிறார்கள் இவர்கள் போய் தொழுகை செய்ய வேண்டியது தான் இவர்களின் கடமை.அதையும் செய்யாவிடில் இவர்கள் அல்லாவின் (அரபி மொழியில் ஆண்டவனின் பெயர்) குற்றதிற்கு ஆளாவார்கள்.

2)சமூக் விரோத செயல்கள் களவு,வீதி ஒழுங்குகளை மீறல்,இன்சுரன்ஸ் எடுக்க காரை எரித்தல்,ஒரே வீட்டில் சந்தோசமாக இருந்து கொண்டு அரசமானியங்கள் பெறுவதிற்காக மட்டும் விவாகரத்து பெறல்,போன்ற செயல்களிற்கு சிறந்த இடம் அவுஸ்ரெலியா தான்.இவை எல்லாம் மாட்டுபட்டால் அரசாங்கத்திடம் ரேசிசம் அல்லது மனித உரிமை மீறல் என்று சொல்லி தப்ப கூடிய இடம் அவுஸ்ரெலியா தான்.

3)குடும்ப உறவுகளை விரைவில் அழைக்க கூடிய ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்.

முதலாவது, இரண்டாவது ஈழத்தமிழ் சந்ததியர் வாழும் மேற்கத்திய நாடுகளில் இது அவ்வளவாக உணரப்படா விட்டாலும்,

மூன்றாவது, நான்காவது இந்திய தமிழ் சந்ததியினரைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர், மலேசியா, பீஜி தீவுகள் மற்றும் தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இதன் தாக்கத்தை தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது.

தமிழினி கூறிய நாடுகளிள் மலேசியா,சிங்கபூர்,பிஜீ,தென்ன

  • தொடங்கியவர்

ஆர்வத்துடன் பலர் இந்த கருத்துக்கணிப்பில் பங்குபற்றுவது மகிழ்ச்ச்சியை தருகின்றது.

இங்கு நான் எனது தெரிவாக கனடா நாட்டை தெரிவு செய்து உள்ளேன். ஆனால், எனது தனிப்பட்ட வாழ்க்கைத் தெரிவு சுவிஸ்லாந்து ஆகும். நான் இதை முன்பும் யாழில் ஒரு இடத்தில் குறிப்பிட்டு உள்ளேன்.

கனடா நாடு ஏன் சிறந்தது?

கனடிய நாடு அளவில் மிகப்பெரிய ஒரு நாடு ஆகும். இங்கு வருடந்தோறும் பல லட்சம் மக்கள் குடிபெயருகின்றனர். பல்லின கலாச்சாரத்திற்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதோடு, எல்லோரும் சமமாக வைத்து மதிக்கப்படுகின்றனர். இனத்துவேசம் போன்றவை ஒப்பீட்டளவில் குறைவு. மேலும், ஆங்கிலம் பிரதான ஒரு மொழியாக இருப்பது எம்மவர்கள் சர்வதேசமொழியின் பயன்பாட்டை உச்ச அளவில் பெற உதவுகின்றது. ஆங்கிலம் என்றால் உலகில் எங்கும் பேசி அலுவல் பார்க்கலாம். ஆனால், வேற்று மொழிகளாக இருந்தால் உதாரணமாக டானிஸ், டொச் போன்றவை.. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். குட்டி போட்டு எனது இனத்தை பெருக்குவதற்கு கனடா ஒரு சிறந்தநாடு. நாலு பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் கூட சமாளிக்கலாம். மற்றது மருத்துவ வசதிகள் அந்தமாதிரி உள்ளது. கல்வி வசதிகள் அந்தமாதிரி உள்ளது. அனைவரும் விரும்பிய துறையில் படித்து விரும்பிய நிலையை வாழ்க்கையில் அடைவதற்கு வசதிகள் உள்ளன. பக்கத்தில் அமெரிக்கா இருப்பதாலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவற்றில் நம்மவர்கள் அதிக புலமைத்துவம் பெறக்கூடியதாக உள்ளது.

ஆனால் கனடாவில் எனக்கு பிடிக்காத விசயங்கள்:

ஏராளம் குடிவரவாளர்கள் இருப்பதால் வேலை எடுப்பது கடினமாக உள்ளது. மேலும், சம்பளமும் ஒப்பீட்டளவில் குறைவு. மற்றது வெதர் - காலநிலையை பார்த்தால் சூடு என்றால் அந்த மாதிரி சூடு. வேர்த்து ஒழுகித் தள்ளும். ஏசி இல்லாமல் இருக்கமுடியாது. இதுபோல் குளிர் என்றால் குளிரோ குளிர்! நடுங்கோ நடுங்கும். ஹீட்டர் இல்லாமல் இருக்கமுடியாது.

தனிப்பட்ட எனது தேர்வாக சுவிஸ்லாந்து நாட்டை நான் விரும்புவதற்கான காரணம்:

ஜெனீவா... அனைவரும் கேள்விப்பட்ட பெயர். உலகில் உள்ள பல சர்வதேச அமைப்புக்களின் மையநிலையம். மனித உரிமைகளிற்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடு. சிறுவயதில் இருந்து சுவிஸ் நாட்டை நான் விரும்பி வந்துள்ளேன். பள்ளியில் சமூகக்கல்வி பாடத்தில் அடிக்கடி படிப்பித்து வந்துள்ளார்கள். மற்றது பிரபல விஞ்ஞானி அயின்ஸ்டைன் பிறந்த இடம். இப்படி பல தனிப்பட்ட காரணங்கள். ஆனால், இந்த நாடு ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த ஓர் நாடா என்று அங்கு உள்ளவர்கள் தான் பதில் கூறவேண்டும். நான் இன்னும் சுவிசுக்கு ஒருமுறையும் போகவில்லை. இனித்தான் போகவேண்டும்.

இந்தியா:

தமிழீனி கூறியபடி இந்தியா ஓர் சிறந்த தெரிவாக எனக்கு தெரியவில்லை. அங்கு எப்படி நம்மவர்கள் வசதியாக வாழ்வது? தமிழ்நாட்டு தமிழனே வேலை வெட்டியின்றி, சினிமாவும் அதுவும் இதுவும், ஆர்ப்பாட்டம், அடிபாடு என்று பிணக்குப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தநிலையில் இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர் எவ்வாறு முன்னேறுவது? எப்படி வாழ்வது? கனடாவில் என்றால் பணபலம் உண்டு. இதன்மூலம் தமிழீழத்திற்கு எதிர்காலத்தில் குடிபெயரும்போது பலவிடயங்களை சாதிக்க முடியும். ஆனால், இந்தியாவில் இருந்துவிட்டு பிச்சைக்காரனாக தமிழீழத்திற்கு மீண்டும் குடிபெயரும்போது எதை செய்யமுடியும்? கனடாவில் உள்ள பலர் தமிழீழம் கிடைத்ததும் அங்கு வந்து முதலீடு செய்து, அங்கு தங்கி வாழ்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

அவுஸ்திரேலியா:

மற்றது புத்து மாமா கூறுவதுபோல் அவுஸ்திரேலியாவும் சிறந்த ஒரு நாடு ஆகும். முக்கியமாக காலநிலை - வெதர் நல்லது என்று கேள்விப்பட்டேன். கனடாவில் உள்ள வசதிகள் அவுஸ்திரேலியாவிலும் உள்ளது என்று நினைக்கின்றேன். எனினும், அவுஸ்திரேலியாவில் கனடாவை விட இனத்துவேசம் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

நன்றி!

Edited by கலைஞன்

மேலே புத்தன் மற்றும் கலைஞன் கூறிய கருத்துக்களுடன் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை, தங்கள் கருத்துக்களை ஆமோதிக்கின்றேன்.

அதே நேரம் இந்த புலம் பெயர் தமிழர்களின் தெரிவு விடயத்தை நான் இரு பிரிவுகளாக நோக்குகின்றேன்.

ஒன்று புலம்பெயர்பவரின் குடும்பம், சுற்றம் சூழ்ந்த தனிப்பட்ட நலன்.

இரண்டு விடியப்போகும் எம் தேசத்தின் எதிர்கால நலன்.

முதலாவது பிரிவின் படி நோக்கும் போது தங்கள் விளக்கங்கள் சரியாகத்தான் இருக்கின்றன.

இரண்டாவது பிரிவின் படி நோக்கும் போது: நாங்கள் எல்லோரும் அதாவது இந்தத் தலைமுறையில் பலர்(நிச்சயமாக அனேகர் இல்லை) நாட்டிற்கு திரும்பி நாட்டை வளப்படுத்தும் எண்ணத்தை தற்போது கொண்டிருக்கலாம். ஆனால் உங்களின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என்று வரும் போது அவர்கள் மீது தங்களின் தாக்கமும் கட்டுப்பாடும் குறிப்பிட்ட வயது வரையே செல்லுபடியாகும்.

உங்கேயே பிறந்து, உங்கேயே படித்து, உங்கேயே வளரும் தலைமுறையின் மனோநிலை(பெரும்பான்மையோரின

சிரி லன்கா, இந்தியா........... தவிர்ந்த ஏனயநாடுகள். :angry:

  • தொடங்கியவர்

என்ன தமிழினி இப்பிடிச் சொல்லுறீங்கள்? பிள்ளைகள் வராவிட்டாலும் கிழடுகளாவது சீவன் நிம்மதியாக தாம் பிறந்த இடத்தில் போகட்டும் என்று வரக்கூடும்.

இந்தியாவில் போய் கஸ்டப்பட்டுக் கொண்டு இருப்பதை விட, ஈழத்திலேயே ஷெல் விழுந்து சாவது மேல் என்று நினைக்கின்றேன்.

இந்தியாவில் ஈழத்தவர்கள் படும் அல்லல்கள் உங்களுக்கு தெரியாதா?

பேரறிவாளன் என்பவர் தான் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு தூக்கு கயிறு கிடைத்தது என்று இங்கு கூறுகின்றார். வாசித்து பாருங்கள். இதன் பின்னரும் இந்தியாவை ஒரு தம்பி நினைத்துப் பார்பானா?

http://perarivalan.blogspot.com/

இந்தியாவில் அடிமைகளாக, ஆடு, மாடுகளாக வாழ்வதை விட ஈழத்தில் இருப்பதே மேல்!

ஒண்டு மட்டும் நூறு சதவீதம் உறுதி....... ஈழம் பிரிந்ததும் முதலாவது முக்கிய நிகழ்வு கிழக்கு இந்தியாவில் இருந்து அகதிகளின் வருகைதான்.

:lol::lol: :wacko: :lol: :angry: -_-

வெளிநாட்டு தமிழர்கள் வருவார்களோ இல்லையோ.... காணி விலை அநியாயத்துக்கு எகிறும். கடைகளை பற்றி சொல்லத்தேவையில்லை. எற்றுமதி இறக்குமதி பெரும்புள்ளிகள் அதிகமாக தோன்றுவர்கள்.. கிரிகெட்டை விட உதைபந்தாட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இப்படி நிறைய.................................................................

........................................................................ :lol:

  • தொடங்கியவர்

இணையநண்பன் வழங்கிய தகவலுக்கு நன்றி! 2004 இல் இதே விசயத்தை பற்றி யாழில் கருத்தாடல் செய்து உள்ளார்கள். அதில் மதன் பல தகவல்களை வழங்கியுள்ளார்.

கருத்துக்கணிப்பில் நெதர்லாந்துக்கு ஆறு ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. நெதர்லாந்து புலத்தில் வாழும் தமிழர் குடியிருக்க ஏன் சிறந்த ஓர் நாடு என்று கருத்துக்கணிப்பில் நெதர்லாந்தை தெரிவு செய்தவர்கள் விளக்கம் தருவீர்களா? நெதர்லாந்தில் அப்படி என்ன விசேடம் இருக்கின்றது?

நன்றி!

  • தொடங்கியவர்

மக்கள், 37 பேர் இதுவரையில் கருத்துக்கணிப்பில பங்குபற்றி இருக்கிறீங்கள், ஆனா நான்கு பேர்தான் பதில் கருத்து எழுதி இருக்கிறீங்கள். கருத்துக்கணிப்பில் பங்குபற்றுபவர்கள் உங்கள் உள்ளக் கிடக்கைகளையும் இங்கு பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

2)சமூக் விரோத செயல்கள் களவு,வீதி ஒழுங்குகளை மீறல்,இன்சுரன்ஸ் எடுக்க காரை எரித்தல்,ஒரே வீட்டில் சந்தோசமாக இருந்து கொண்டு அரசமானியங்கள் பெறுவதிற்காக மட்டும் விவாகரத்து பெறல்,போன்ற செயல்களிற்கு சிறந்த இடம் அவுஸ்ரெலியா தான்.இவை எல்லாம் மாட்டுபட்டால் அரசாங்கத்திடம் ரேசிசம் அல்லது மனித உரிமை மீறல் என்று சொல்லி தப்ப கூடிய இடம் அவுஸ்ரெலியா தான்.

கிறிமினல் செய்யிறவைக்கு ஏத்த நாடு அவுஸ்ரேலியாதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஜேர்மனியை தெரிவு செய்துள்ளேன்.ஏனெனில் நான் பிறந்தமண்ணுக்கு அடுத்தபடியாக இந்த மண்ணை நேசிக்கின்றேன்.அவரவற்கு தாங்கள் இருக்கும் பூமி என்றும் சொர்க்கமே!அதிலும் பல புலம்பெயர் ஈழத்தவர்களுக்கு ஜேர்மனி ஓர் நுழைவாயிலாக இருந்துள்ளது.இதனை யாராலும் மறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தவங்களை அடிக்கிறதுக்கும் ஏத்த நாடு இதாகத்தானிருக்கும்

புலம் பெயர்ந்தவங்களை அடிக்கிறதுக்கும் ஏத்த நாடு இதாகத்தானிருக்கும்

நல்ல வசமா வாங்கியிருக்குறீங்கள் போல? :)

  • கருத்துக்கள உறவுகள்

எனது தெரிவு ஆபிரிக்கா.

அதுதான் நம்மாக்களுக்கு சரியான இடம். :)

என்னுடைய தெரிவு சீனா.

பாம்புக் கறி மலிவா வேண்டிச் சாப்பிடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது தெரிவு ஆபிரிக்கா.

அதுதான் நம்மாக்களுக்கு சரியான இடம். :o

ஏனுங்க நெடுக்கு சார் நம்ம கறுப்ஸ் அம்மணிக்கா பதில் சொன்னீங்க? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க நெடுக்கு சார் நம்ம கறுப்ஸ் அம்மணிக்கா பதில் சொன்னீங்க? :)

கறுப்பி அக்கா மட்டும் தான் நம்மோட தோஸ்து. அவா கூடையும் சண்டைக்கு முடிச்சுப் போடுற பிளான் போல. :huh:

அதில்ல.. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருத்தருக்கும் தமிழீழம் போக விருப்பமில்லை. ஈழத்தமிழர்களுக்கு சும்மா அடைமொழிக்குத்தான் ஈழம். மற்றும் படி.. அங்க இருக்கிறதுக்கே மனசில்ல. மாப்பிள்ளை எண்ட கலைஞன் எண்டவருக்கு தாய் மடியே நினைவில்ல. அதுதான் இந்த நன்றி கெட்ட ஜென்மங்களை ஆபிரிக்காவில கொண்டு போய் போட்டு சகாரா பாலவனத்தில கருவாடாக்க வேணும் என்றிட்டுப் போட்டன். :o:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய தெரிவு சீனா.

பாம்புக் கறி மலிவா வேண்டிச் சாப்பிடலாம்.

ஐயா! குறுக்காலை போவாரே எங்கடை ஊரிலையும் சாரைப்பாம்புக்கும், கோடாலிப்பாம்புக்கும் ஒரு பஞ்சமும் இல்லைப்பாருங்கோ.றோட்டாலை போகேக்கை உங்கடை பேருக்கேத்தமாதிரி அதுகளும் குறுக்காலை அடிக்கடி போகும்.அப்ப ஒண்டடை புடிச்சு நல்ல உப்பு தூள் போட்டு சாத்த வேண்டியது தானே :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தெரிவும் கனடாதான். கலைஞன் சொன்ன அதே காரணங்கள். மத்தபடி நாடு கிடைச்ச உடன தாயகத்துக்கு போய் வாழுவேன் எண்டு சொல்லி என்னை நானே ஏமாத்த விருப்பம் இல்லை. கனடாவில் நான் அறிந்த எவரும் (ஓரிரு வயோதிபர்களைத் தவிர) நாட்டுக்கு போய் வாழுவதாக இல்லை. எல்லாரும் றிற்ரையமன்ற் வரை பிளான் போட்டுதான் வாழ்க்கையை நகர்துகின்றனர்.

-சபேஸ்-

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தான் சிறந்ததாக இருக்கும் .

கனடா தான் சிறந்ததாக இருக்கும் .

இல்லை கறுப்பி அக்கா அவுஸ்ரெலியா தான் சிறந்த நாடாக இருக்கும் என் பார்வையில் உங்கள் பார்வையை ஆளுகாள் வித்தியாசபடும் அவுஸ்ரெலியாவை பற்றி எழுதிய ஆக்கத்தை எழுதி முடித்து விட்டு போடுகிறேன் அதன் பின் சொல்லுங்கோ,சற்று பொறுங்கோ எழுது முடித்து விட்டு வருகிறேன் அக்கா........... :D

வணக்கம் ஜெனரல்!!

அட நாம தான் மறுபடி வந்துட்டோமல :P ........என் இனிய யாழ்கள்மெம்பர்சே வணக்கம்.......ஜெனரல் அவர்களே ஈழதமிழர்கள் வாழ்வதிற்கு சிறந்த நாடா...........எந்த நாட்டிலை இருந்தாலும் அந்த நாட்டிற்கு ஏற்ற மாதிரி மாறி அவர்களுடன் ஒத்து போய் சந்தோசமாக இருந்தா எந்த நாடும் நல்லது தான் என்பது இன்றைய நற்சிந்தனை :P ஆனாலும் அதற்காக இந்தியா போன்ற ஏசியா நாட்டை நான் இதற்குள்ள இன்கூலூட் பண்ணவில்லை......உதாரணதிற்கு சேர்.பொன் டங்கு அண்ணாவை பாருங்கோ அவரின் அறிவிற்கும்,அழகிற்கும் அவர் எங்கையோ இருக்க வேண்டியவர் ஆனால் சோமாலியாவில எவ்வளவு சந்தொசமாக வாழ்கிறார் இதில இருந்து விளங்கி இருக்க வேண்டும் :lol: .........

சரி இப்ப விசயதிற்கு வாறேன் புலம் பெயர்ந்து வாழ சிறந்த நாடாக ஒட்டொமொத்த யாழ்கள மெம்பர்ஸ் சார்பாக நான் தெரிவு செய்வது கிரேட் அவுஸ்ரெலியா............ஒசி..ஒசி..ஓசி....

...ஓய்.......ஓய்...ஓய்.......... :D .

1)அவுஸ்ரெலியா சார்பாக நான் முதலில் குறிபிடவிரும்பும் விடயம் காலநிலை இலங்கையை ஒத்த காலநிலையை இங்கே காணலாம்........வின்டர் சீசனில கொஞ்சம் குளிர் மற்றும்படி மிகவும் நல்லதோர் காலநிலையாக அவுஸ்ரெலியா நாட்டை குறிபிடலாம்...........வெயில் சில நாட்களிள் அதிகமாக சென்றாலும் அது பெரிய பாதிப்பாக இல்லை என்றே குறிபிடலாம்......

2)கல்வி முறை ஆங்கிலத்தில் பாடங்கள் கற்பிக்கபடுகிறது,ஆங்கிலம் உலக மொழி ஏனைய மொழிகளிள் படித்து விட்டு வேற நாடுகளிற்கு தற்செயலாக வேலை போன்றவற்றிற்கு சென்று கஷ்டபடாமல் ஆங்கில மொழி மூலம் இலகுவா கல்வியை கற்று கொள்ள முடியும்.......அத்துடன் கல்வி தரமும் ஏனைய நாடுகளுடன் ஓத்து காணபடுவதுடன் இங்கே படிப்பவர்களிற்கும்............பல்க

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.