Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

சோவியத் யூனியனாக பல நாடுகளின் கூட்டு இருந்தபோது அமைவிடம் நிலவளம் காரணமாக 
ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றை பிரதேசம் சார்ந்து முன்னெடுத்தார்கள். விவசாயம் ... கால்நடை வளர்ப்பு ... கனிமவள சுரங்கங்கள் இப்படி. அதில் உக்ரைனில் இராணுவ விண்வெளி ஆய்வுகள் ஆயுத தயாரிப்புகளுக்கு தேர்வு செய்து அது சார்ந்த அறிவுள்ள அனைவரையும் அங்கு குடியமர்த்தி அதில் வெற்றியும் கண்டார்கள் 
பல நுண்ணியல் ஆயுதங்களை .. அணு ஆயுதங்களை தாயரித்தார்கள். நிலவுக்குக்கூட லைக்கா எனும் நாயை முதன் முதலில் அனுப்பினார்கள்.

பின்பு அமெரிக்க எகோபத்தியம் சோவியத் யுனியை உடைத்த போது 
தனி தனி நாடுகளாக பிரிந்தபோது உணவு பாதுகாப்பு எரிபொருள் என்பவற்றுக்கு ஒருவரில் ஒருவர் 
தங்கி இருக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தனி தனி நாடுகளாக பிரிந்தாலும் பல ஒப்பந்த அடிப்படையில்தான் பிரிந்தார்கள். அதில் உகைரைனுடான ஒப்பந்தம் மிக முக்கியமானது காரணம் அமெரிக்க என்ற ஏகபத்தியம் ரசியாவை இதனோடு விடப்போவதில்லை என்பதை இரு நாட்டு தலைவர்களும் நன்கு தெரிந்து இருந்தார்கள்.

ரசியாவின் பாதுகாப்பு உக்கரைனாலும் ... உக்காரனின் பாதுகாப்பு ரசியவாலும் உறுதியானத்தின் அடிப்படையிலேயே சோவியத் பிரிந்த போதும் மிக முக்கிய ஆயுத தயாரிப்பு தொழில்சாலைகளை உக்கரையினிலேயே  இருப்பது என்று முடிவு செய்தார்கள். அமெரிக்க ஏகாபதியம்  பட்டினியை தோற்றுவித்து  என்ன மாஜயாலம் செய்யும் என்பதை தெரிந்துகொண்டே உக்கரைன் நெட்டொவில் சேராது என்பதை  மீண்டும் ஹங்கேரி நாட்டில் ஒப்பந்தம் போட்டு கைச்சாத்து இட்டு கொண்டார்கள்.

என்று எங்கோ கிடக்கும் அமெரிக்க ஏகபத்தியத்துக்காக 
தனது நாடையே உருவாக்கிய சொந்த சகோதர்களை சாகடித்து ரசியாவை வேடடையாடும்  
அமெரிக்க ஏகபத்தியத்துக்கு மடி விரித்தது 
எத்தனை துரோகம் என்பது உங்களுக்கு புரியவில்லையா?

எதற்கா ரசியா சிரியாவுக்கு சென்றது ? லிபியாவில் நடந்தது சிரியாவிலும் நடந்திருந்தால் 
அடுத்த இலக்கு என்ன? இன்று அஜர்பாஜனுக்கும் ஆர்மேனியாவுக்கும் இடையில் போரை யார் தீண்டுகிறார்?
ஏன் தீண்டுகிறார்கள்? அங்கே இருப்பது மக்கள் இல்லையா?
இன்றும் ஏன் அமெரிக்க சிரியாவின் எண்ணைவளத்தை தனது இராணுவ கட்டுப்பாட்டில்  அடாவடித்தனமாக  வைத்திருக்கிறது  ... அது உங்கள் படையெடுப்புக்குள் ஏன் வரவில்லை?  

இதைச் சொல்வதால் எனக்கு நாய் பேய் என ஏச்சு விழலாம், ஆனால் சுட்டிக் காட்ட வேண்டியது கடமை:

சோவியத் ஒன்றிய காலத்தில் எல்லா இனக்குழுக்களும் வளமாக வாழ்ந்தன என்ற மாயையைத் தோற்றுவிக்கும் உங்கள் கருத்து சோவியத்தின் பிரச்சாரம் மட்டுமே. வரலாறு சொல்லும் உண்மை வேறு மாதிரி இருக்கிறது. சோவியத் காலத்தில் ஸ்ராலின் அறிமுகம் செய்து  (பின்னர் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் லியோனிட் ப்றெஷ்னெவினால் முன்னெடுக்கப் பட்ட) கூட்டுப் பண்ணையாக்கம் (collectivization) என்ற நடைமுறையின் கீழ், விவசாயத்தில் சிறந்து விளங்கிய உக்ரைன், தான் உற்பத்தி செய்த தானியங்களை ஏனைய உற்பத்தி குறைந்த குடியரசுகளுக்கு அனுப்பி விட வேண்டிய நிலை. இதனால் ஒரு மில்லியன் உக்ரைனியர்கள் பட்டினியால் இறந்தனர். தனியுடைமையை இழந்த உக்ரைன் விவசாயிகள் மத்தியில் இருந்து தான் கம்யூனிசத்திற்கு எதிரான வலது சாரிகள் உருவானார்கள், பின்னர் இந்த கம்யூனிச எதிர்ப்பு வலது சாரிகள் நாசிகளின் படையெடுப்பிலும் சோவியத்திற்கு எதிராக செயல்பட்டனர் - இவையெல்லாம் வரலாறாகப் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

உக்ரைன் - ரஷ்யா பெடரேஷன் உடன் படிக்கையும் நீங்கள் சொல்வது போல மேற்கின் மீதான பயத்தில்  அடிப்படையில் நிகழவில்லை. அது வேற சிக்கலான முக்கூட்டு ஏற்பாட்டின் விளைவு.

மொத்தத்தில், சோவியத், ரஷ்ய வரலாற்றையே தலைகீழாக புரிந்து எழுதியிருக்கிறீர்கள்.

  • Replies 170
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இங்கே  தான் நாம் மாறுபடுகின்றோம்

எனது  கேள்வியை  ஏறெடுத்தே பாராமல்

உங்கள் பதிலை திணிக்காதீர்கள்?

நான்  சொன்னது பாகிஸ்தானும் பங்களாதேசும் இன்று இறைமை  கொண்ட நாடுகள்  என்பது  தவிர

அவை  எனது  நண்பர்கள் என்பதல்ல...☹️

பங்களாதேஸ் நாளை சீனாவுடனோ ரசியவுடனோ கூடி 
இந்தியாவுக்கு துரோகம் இழைத்து அவர்கள் இராணுவ படைத்தளங்கள் அமைத்து 
இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உண்டுபண்ணும் என்றால் 

இதில் இறையாண்மைக்கு என்ன வேலை?
இந்தியா படை எடுத்து தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து 
வங்காளதேச மக்களையும் கோமாளி அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றும் 

பங்காளதேசம் உருவானதே அப்படித்தானே? 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

பங்களாதேஸ் நாளை சீனாவுடனோ ரசியவுடனோ கூடி 
இந்தியாவுக்கு துரோகம் இழைத்து அவர்கள் இராணுவ படைத்தளங்கள் அமைத்து 
இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உண்டுபண்ணும் என்றால் 

இதில் இறையாண்மைக்கு என்ன வேலை?
இந்தியா படை எடுத்து தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து 
வங்காளதேச மக்களையும் கோமாளி அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றும் 

பங்காளதேசம் உருவானதே அப்படித்தானே? 

தமிழர்கள் தமிழ்நாட்டுடன் சேர்ந்தால் தமது இறைமைக்கு ஆபத்து என்று சிங்களவரும் இந்தியும் கூட்டாக நின்று தமிழரை அழிப்பது சரிதானே???

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

தமிழர்கள் தமிழ்நாட்டுடன் சேர்ந்தால் தமது இறைமைக்கு ஆபத்து என்று சிங்களவரும் இந்தியும் கூட்டாக நின்று தமிழரை அழிப்பது சரிதானே???

உலகில் லட்ஷணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிக்கும்  ஆதிக்க எகோபத்திய வெறிக்கு இடையில் இறையாண்மையை ஏன் கொண்டு வருகிறீர்கள் என்பது புரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

சோவியத் யூனியனாக பல நாடுகளின் கூட்டு இருந்தபோது அமைவிடம் நிலவளம் காரணமாக 
ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றை பிரதேசம் சார்ந்து முன்னெடுத்தார்கள். விவசாயம் ... கால்நடை வளர்ப்பு ... கனிமவள சுரங்கங்கள் இப்படி. அதில் உக்ரைனில் இராணுவ விண்வெளி ஆய்வுகள் ஆயுத தயாரிப்புகளுக்கு தேர்வு செய்து அது சார்ந்த அறிவுள்ள அனைவரையும் அங்கு குடியமர்த்தி அதில் வெற்றியும் கண்டார்கள் 
பல நுண்ணியல் ஆயுதங்களை .. அணு ஆயுதங்களை தாயரித்தார்கள். நிலவுக்குக்கூட லைக்கா எனும் நாயை முதன் முதலில் அனுப்பினார்கள்.

பின்பு அமெரிக்க எகோபத்தியம் சோவியத் யுனியை உடைத்த போது 
தனி தனி நாடுகளாக பிரிந்தபோது உணவு பாதுகாப்பு எரிபொருள் என்பவற்றுக்கு ஒருவரில் ஒருவர் 
தங்கி இருக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தனி தனி நாடுகளாக பிரிந்தாலும் பல ஒப்பந்த அடிப்படையில்தான் பிரிந்தார்கள். அதில் உகைரைனுடான ஒப்பந்தம் மிக முக்கியமானது காரணம் அமெரிக்க என்ற ஏகபத்தியம் ரசியாவை இதனோடு விடப்போவதில்லை என்பதை இரு நாட்டு தலைவர்களும் நன்கு தெரிந்து இருந்தார்கள்.

ரசியாவின் பாதுகாப்பு உக்கரைனாலும் ... உக்காரனின் பாதுகாப்பு ரசியவாலும் உறுதியானத்தின் அடிப்படையிலேயே சோவியத் பிரிந்த போதும் மிக முக்கிய ஆயுத தயாரிப்பு தொழில்சாலைகளை உக்கரையினிலேயே  இருப்பது என்று முடிவு செய்தார்கள். அமெரிக்க ஏகாபதியம்  பட்டினியை தோற்றுவித்து  என்ன மாஜயாலம் செய்யும் என்பதை தெரிந்துகொண்டே உக்கரைன் நெட்டொவில் சேராது என்பதை  மீண்டும் ஹங்கேரி நாட்டில் ஒப்பந்தம் போட்டு கைச்சாத்து இட்டு கொண்டார்கள்.

என்று எங்கோ கிடக்கும் அமெரிக்க ஏகபத்தியத்துக்காக 
தனது நாடையே உருவாக்கிய சொந்த சகோதர்களை சாகடித்து ரசியாவை வேடடையாடும்  
அமெரிக்க ஏகபத்தியத்துக்கு மடி விரித்தது 
எத்தனை துரோகம் என்பது உங்களுக்கு புரியவில்லையா?

எதற்கா ரசியா சிரியாவுக்கு சென்றது ? லிபியாவில் நடந்தது சிரியாவிலும் நடந்திருந்தால் 
அடுத்த இலக்கு என்ன? இன்று அஜர்பாஜனுக்கும் ஆர்மேனியாவுக்கும் இடையில் போரை யார் தீண்டுகிறார்?
ஏன் தீண்டுகிறார்கள்? அங்கே இருப்பது மக்கள் இல்லையா?
இன்றும் ஏன் அமெரிக்க சிரியாவின் எண்ணைவளத்தை தனது இராணுவ கட்டுப்பாட்டில்  அடாவடித்தனமாக  வைத்திருக்கிறது  ... அது உங்கள் படையெடுப்புக்குள் ஏன் வரவில்லை?  

42 minutes ago, Maruthankerny said:

83 ஜூலை கலவரத்தின் பின்பு இலங்கை அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இருந்தது 
இருந்தபோதும் இலங்கை இராணுவம் 85 களில் வைத்திருந்த அனைத்து ஆயுதங்களும் ( T-81 AK  ரகம்  க்ரானைட் குண்டுகள் M-16, AR  ரக துப்பாக்கிகள்) அமெரிக்க தயாரிப்புக்கள். நேரடியாக ஆயுதம் விறக்கமுடியாத இலங்கைக்கு ... பாகிஸ்தான் முகவர் ஊடக அனுப்பி வைத்தார்கள். 

நீங்கள் இந்த பாதையால் பயணித்து பயங்கரவாதிகளான தமிழர்களை கொன்றதும்  
மிக சரியானதுதான் என்று மற்றவர்கள் போல ஒருநாள் கடடையில் ஏறி நிர்ப்பீர்களோ என்றுதான் 
சின்ன தயக்கம். 

உக்ரைன் தற்போதைய கோமாளி ஆடசியர் செய்ததை நீங்கள் துரோகமாக எண்ணவில்லையா?
என்று கேள்வி கேட்டிருந்தேன். 

(இதில் அதி கோமாளித்தனமே மேற்கு நாடுகளின் ஆயுத பரிசோதனை நிலமாக உக்ரைனை உருவாக்கியதுதான்) 

அதை ஏன் நாம் ஆதரிக்க போகிறோம் ?
அது ஒரு ஏகபத்திய தூண்டுதலாகவே இருக்கும்போது 

அதற்கு ஏகபத்திய ஆதரவாளர்கள்தான் முன்வரிசையில் அமர்ந்து மனித பிணங்களை பார்த்து கைதட்டி ஆதரவு கொடுக்க வேண்டும் 

28 minutes ago, Maruthankerny said:

பங்களாதேஸ் நாளை சீனாவுடனோ ரசியவுடனோ கூடி 
இந்தியாவுக்கு துரோகம் இழைத்து அவர்கள் இராணுவ படைத்தளங்கள் அமைத்து 
இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உண்டுபண்ணும் என்றால் 

இதில் இறையாண்மைக்கு என்ன வேலை?
இந்தியா படை எடுத்து தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து 
வங்காளதேச மக்களையும் கோமாளி அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றும் 

பங்காளதேசம் உருவானதே அப்படித்தானே? 

1 minute ago, Maruthankerny said:

உலகில் லட்ஷணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிக்கும்  ஆதிக்க எகோபத்திய வெறிக்கு இடையில் இறையாண்மையை ஏன் கொண்டு வருகிறீர்கள் என்பது புரியவில்லை 

மிக அருமையான கருத்துக்கள்... மருதங்கேணி. 👍

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

மிக அருமையான கருத்துக்கள்... மருதங்கேணி. 👍

😂அப்படியா? இந்த திரித்த வரலாற்றிற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றவில்லையா? அல்லது "70 இல் மகப்பேறு" என்பதை நம்பியது போல இதையும் நம்பிக் கடந்து போவீர்களா?😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

உலகில் லட்ஷணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிக்கும்  ஆதிக்க எகோபத்திய வெறிக்கு இடையில் இறையாண்மையை ஏன் கொண்டு வருகிறீர்கள் என்பது புரியவில்லை 

தமது இறையாண்மைக்கு  ஆபத்து  என்றால் வலிய நாடுகள்  எதையும் செய்யலாம் என்ற  கருத்தை  உங்களிடமிருந்து  எதிர்பார்க்கவில்லை

மண்ணுக்காக  போராடும்  இனம் நாம்  என்ற  எனது  கருத்தை  மறுக்க

தமக்கு  ஆபத்து  என்று  நினைத்தாலே எந்த  நாட்டையும் துவம்சம்  செய்ய வலிய  நாடுகளுக்கு  முடியும்  தேவை  இருக்கிறது என்ற  உங்கள்  கருத்துக்குப் பின்

உங்களுடன் எழுத எனக்கு  ஒன்றுமில்லை. நன்றி

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

தமது இறையாண்மைக்கு  ஆபத்து  என்றால் வலிய நாடுகள்  எதையும் செய்யலாம் என்ற  கருத்தை  உங்களிடமிருந்து  எதிர்பார்க்கவில்லை

மண்ணுக்காக  போராடும்  இனம் நாம்  என்ற  எனது  கருத்தை  மறுக்க

தமக்கு  ஆபத்து  என்று  நினைத்தாலே எந்த  நாட்டையும் துவம்சம்  செய்ய வலிய  நாடுகளுக்கு  முடியும்  தேவை  இருக்கிறது என்ற  உங்கள்  கருத்தழன் பின்

உங்களுடன் எழுத எனக்கு  ஒன்றுமில்லை. நன்றி

இரண்டாம் உலக யுத்தம் முடிவில் யூதர்களுக்கு நடந்த இனவழிப்பின் பின் 
நுர்ன்பெர்கிலும் (ஜெர்மனி)   ஜெனிவாவிலும்  விரிவான ஒப்பந்தங்கள் உருவானது 
ஐ நா வின் இருப்பே இதன் அடிப்படையில் உருவானதுதான் 

உங்களுக்கு எந்த இறையாண்மையும் தேவையில்லை 
நீங்கள் ஒரு  இன குழுமமாக இருந்து அதன் அடிப்படையில் உங்களை யாரும் கொலை செய்ய நேர்ந்தால் 
அதை ஐ நா தடுக்கும்..... 

ஆனால் அத்ததனை கொலைவெறியையும் அந்த ஒப்பந்தம் தயாரித்தவர்கள் எழுதினவர்களே  
பாலஸ்தீனம் .... வியடனாம் ... ருவாண்டா ... தமிழ் ஈழம் .... குர்திஸ்தான் .... யூகோஸ்லாவியா பூராவும் அரங்கேற்றினார்கள். 

நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டிருந்தேன். 
அதற்கான உங்கள் பதிலைத்தான் எதிர்பார்க்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு அழகிய ரசியா/சோவிய யூனியன் என்று ஏதோ ஒரு பெயரில் என்று நினைக்கின்றேன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சஞ்சிகை வரும் மாதாமாதம்/காலாண்டுக்கு வரும். அதை வாசிப்பது சுவாரசியமானது. இங்கு ரஷ்யா சார்பான கருத்துக்கள் எழுதும் யாராவது அதை வாசித்தது உண்டோ?

நாங்கள் முன்பு சிறுவயதில் பாடசாலையில் ரஷ்யா ஆதரவாளர்கள், அமெரிக்கா ஆதரவாளர்கள் என இரு பகுதி வகுப்பில் உண்டு. இது போலவே கமல், ரஜனி என இரு அணிகள், எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு அணிகள், விடுதலைப்புலிகள், டெலோ, புளட், ஈ பி ஆர் எல் எவ் என நான்கு அணிகள் என பல பிரிவுகள் உண்டு.

வகுப்பில் ஒவ்வொருவரும் எமது ஆதரவு அணியை விட்டுக்கொடுக்க மாட்டோம். இங்குள்ள கருத்துக்களை வாசிக்கும்போது பாடசாலை நாட்களின் பல பழைய ஞாபகங்கள் தான் வருகின்றன. 😊

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தமது இறையாண்மைக்கு  ஆபத்து  என்றால் வலிய நாடுகள்  எதையும் செய்யலாம் என்ற  கருத்தை  உங்களிடமிருந்து  எதிர்பார்க்கவில்லை

மண்ணுக்காக  போராடும்  இனம் நாம்  என்ற  எனது  கருத்தை  மறுக்க

தமக்கு  ஆபத்து  என்று  நினைத்தாலே எந்த  நாட்டையும் துவம்சம்  செய்ய வலிய  நாடுகளுக்கு  முடியும்  தேவை  இருக்கிறது என்ற  உங்கள்  கருத்துக்குப் பின்

உங்களுடன் எழுத எனக்கு  ஒன்றுமில்லை. நன்றி

இறையாண்மை என்பதை மூன்று கருத்துக்களில் மூன்று விதமாக எழுதி இருக்கிறீர்கள் 

பிராந்திய தார்மீக அரசியல்  அடிப்படை மனித நேயம் 
இந்த இரண்டும் பற்றித்தான் நான் எழுதுகிறேன் 

நாளை சிங்களவருக்கு இன்னொரு நாடு .... ஏன் இன்னொரு இயற்கை அழிவு வந்து 
அவர்கள் பலர் இறக்க நேர்ந்தால் .... எஞ்சியவர்களை காக்கும் கடமை தமிழர்களுடையது 
சிங்கள அரசியல்வாதிகள் கோமாளிகள் என்பதால். எமது தீவில் வாழும் ஒரு இனத்தை நாம் 
அழிக்க முடியாது 

நாளை சீனாவுக்கு ஆதரவு கொடுத்து மெக்சிகோ சீன இராணுவ தளங்களை மெக்சிகோவில் அமைக்கும் என்றால் ..... அமெரிக்காவின் பக்கம்தான் நான் பேசுவேன். பிராந்திய அடிப்படை அரசியல் என்பது ஒரு தார்மீக விதி.

ரசியா செய்வது தவறு என்றும் .. அமெரிக்க ஏகபத்தியம் மனித குலத்தையே கொல்வதை சரியென்றும்  
இரடடை வேடம் போடவேண்டிய தேவை எனக்கு இல்லை 
காரணம் நான் எந்த கொப்பையும் பிடித்து தொங்குவதில்லை 

ஆதிக்க வெறி எங்கு இருந்தாலும் நான் அதன் எதிரிதான் 
இங்கு யாழ் களத்திலும் கூட சில வேதாந்திகளுக்கு நான் பணிவதில்லை. 
கொப்பில் நின்று தொங்கிவிட்டு போக வேண்டியதுதான் அல்லது நான் எழுதாததை... எழுதியதாக எழுதி  சுயஇன்பம்  காணவேண்டியதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

முன்பு அழகிய ரசியா/சோவிய யூனியன் என்று ஏதோ ஒரு பெயரில் என்று நினைக்கின்றேன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சஞ்சிகை வரும் மாதாமாதம்/காலாண்டுக்கு வரும். அதை வாசிப்பது சுவாரசியமானது. இங்கு ரஷ்யா சார்பான கருத்துக்கள் எழுதும் யாராவது அதை வாசித்தது உண்டோ?

நாங்கள் முன்பு சிறுவயதில் பாடசாலையில் ரஷ்யா ஆதரவாளர்கள், அமெரிக்கா ஆதரவாளர்கள் என இரு பகுதி வகுப்பில் உண்டு. இது போலவே கமல், ரஜனி என இரு அணிகள், எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு அணிகள், விடுதலைப்புலிகள், டெலோ, புளட், ஈ பி ஆர் எல் எவ் என நான்கு அணிகள் என பல பிரிவுகள் உண்டு.

வகுப்பில் ஒவ்வொருவரும் எமது ஆதரவு அணியை விட்டுக்கொடுக்க மாட்டோம். இங்குள்ள கருத்துக்களை வாசிக்கும்போது பாடசாலை நாட்களின் பல பழைய ஞாபகங்கள் தான் வருகின்றன. 😊

"சோவியத் நாடு" சஞ்சிகை. பள பளப்பான , தடித்த தாளில் வரும் வாசித்த பிறகு, பாடசாலை அப்பியாசக் கொப்பிகளுக்கு உறை போட நல்ல சாமான்😂.

ஆனால் சீரியசாக: மேலே சோவியத் ரஷ்யாவின் புது வரலாற்றை எழுதுவோர், இந்த சோவியத் பிரச்சார சஞ்சிகையைக் கூட வாசிக்கவில்லையென ஊகிக்கிறேன். நாகோர்னோ கரபாக் பிரச்சினையை யார் இப்போது கிளப்புவது என்று கேட்டிருக்கிறார்கள் (மேற்கு என்ற மறைமுக சுட்டல் தான்!) . ஆனால், சோவியத் ஒன்றியம் இருந்த காலத்திலேயே ஆர்மேனிய, அசர்பைஜான் குடியரசுகளிடையே நாகோர்னோ கரபாக் மோதல்கள் நடந்ததை சோவியத் நாடு சஞ்சிகையில் தான் நான் வாசித்து அறிந்தேன்!

33 minutes ago, Maruthankerny said:

ஆதிக்க வெறி எங்கு இருந்தாலும் நான் அதன் எதிரிதான் 
இங்கு யாழ் களத்திலும் கூட சில வேதாந்திகளுக்கு நான் பணிவதில்லை. 
கொப்பில் நின்று தொங்கிவிட்டு போக வேண்டியதுதான் அல்லது நான் எழுதாததை... எழுதியதாக எழுதி  சுயஇன்பம்  காணவேண்டியதுதான் 

நன்றி! நாயிலிருந்து, குரங்காக 55+ மில்லியன் வருடங்கள் ப்றோமோஷன் தந்தமைக்கு!😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

முன்பு அழகிய ரசியா/சோவிய யூனியன் என்று ஏதோ ஒரு பெயரில் என்று நினைக்கின்றேன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சஞ்சிகை வரும் மாதாமாதம்/காலாண்டுக்கு வரும். அதை வாசிப்பது சுவாரசியமானது. இங்கு ரஷ்யா சார்பான கருத்துக்கள் எழுதும் யாராவது அதை வாசித்தது உண்டோ?

நாங்கள் முன்பு சிறுவயதில் பாடசாலையில் ரஷ்யா ஆதரவாளர்கள், அமெரிக்கா ஆதரவாளர்கள் என இரு பகுதி வகுப்பில் உண்டு. இது போலவே கமல், ரஜனி என இரு அணிகள், எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு அணிகள், விடுதலைப்புலிகள், டெலோ, புளட், ஈ பி ஆர் எல் எவ் என நான்கு அணிகள் என பல பிரிவுகள் உண்டு.

வகுப்பில் ஒவ்வொருவரும் எமது ஆதரவு அணியை விட்டுக்கொடுக்க மாட்டோம். இங்குள்ள கருத்துக்களை வாசிக்கும்போது பாடசாலை நாட்களின் பல பழைய ஞாபகங்கள் தான் வருகின்றன. 😊

இங்கே இரண்டு அணிகள் என்பது சரியன்று. அநியாயம் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தரக்கூடாது என்பதும்

அவன் செய்யலாம் இவன் செய்யக்கூடாதா? என்பதும்  மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

சோவியத் ஒன்றிய காலத்தில் எல்லா இனக்குழுக்களும் வளமாக வாழ்ந்தன என்ற மாயையைத் தோற்றுவிக்கும் உங்கள் கருத்து சோவியத்தின் பிரச்சாரம் மட்டுமே. வரலாறு சொல்லும் உண்மை வேறு மாதிரி இருக்கிறது.

ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் கீழ் உக்ரைன் அனுபவித்த பட்டினி கொடுமைகளை நீங்கள் யாழ்களத்தில் மீண்டும் நினைவு படுத்தியது மிகவும் நல்லது.
மாயையை தோற்றுவிக்கும் அவர்களது ரஷ்ய பிரச்சாரம் இலங்கை தமிழர்களுக்கு காதில் பூ அள்ளிவைத்து சுற்றிவிடும் வேலை. எங்கே விருப்பத்துடன் வந்து பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு இவர்கள் தாங்கள் சென்று வாழவே விரும்பாத ரஷ்ய சீன பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை கவனத்தில் எடுத்தாலே இதன் உண்மை தன்மை விளங்கிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kandiah57 said:

யார் அப்படி சொன்னது????   நான் அறிய எவருமில்லை .....அகதிகள் எல்லோரும்  காலம்   சொல்ல சொல்ல   குடிமகன் /. குடிமகள்  ஆக மாறிவிட்டார்கள்....வாழ்நாள் முழுவதும் அகதிகளாகயிருப்பதில்லை   ...உயிருடன் இருந்து வாழ்வது  ஆகக்கூடியது.   70.  80.   வயதுகள் மட்டுமே......எமது உரிமைகளை  தர மறுத்த   இலங்கையை நினைத்து கண்ணீர் சிந்துவதைவிட.   ..உரிமைகள் தந்து   தன் நாட்டு மக்கள் போல்   வாழ வைத்த நாட்டில் வாழலாம்”.......ஒவ்வொருவருக்கும் சொந்த கருத்துகள் உண்டு”.......அதை அவர்கள்...சொல்லலாம் எழுதலாம் பேசலாம் கடைப்பிடிக்கலாம்........இப்படி பட்ட ஒருசிலருக்குகாக. ....உரிமைகள்  தந்து  தன்  நாட்டு மக்களுக்கு  சமனாக  வாழ வைத்த நாடு ஒருபோதும் மாறமுடியாது......அதனுடைய கொள்கை பிழையாகயிருந்தாலும்கூட.......ஆனால் குறிப்பிட்ட நாடுகள் ...தங்கள் கொள்கைகள்..100% சரி என்கிறார்கள்....      

ஹலோ கந்தையா நன்றிக்கடன் வேறு கொள்கை வேறு. இங்கே இரண்டையும் சேர்த்து குழப்பவதால் தான்  உங்களைப்போன்றோர் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றார்கள்.

தற்போதைக்கு உங்களிடம் ஒரு கேள்வி?

ஜேர்மனியில் ரஷ்யாவிடம் பேச்சுவார்தை நடத்துமாறு கோரும் கட்சிகள் இருக்கின்றனவா இல்லையா? ரஷ்யா சார்பு ஜேர்மனிய மக்கள் இருக்கின்றார்களா இல்லையா?

இதற்கு பதிலை சொல்லுங்கள் தொடரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kandiah57 said:

இவற்றை தவிர்க்க எங்களுக்கு பிடித்த கொள்கைகள் உடைய நாட்டில் வாழ்வது மிகவும் சிறப்பாகும்

தப்பி இஞ்சை வந்துட்டியள் எல்லே?
அகதியாய் பதிஞ்சும் விட்டியள் எல்லே?
நல்ல வேலையும் செய்யிறியள் எல்லே?
நல்ல சம்பளமும் வருது எல்லே?
சிற்றிசனும் எடுத்துட்டியள் எல்லே?

பிறகு....
என்ன கோதாரிக்கு தமிழனுக்கு உரிமையே தராத.....தமிழர்களை அழித்த சிறிலங்காவுக்கு மூட்டை முடிச்சுக்களோடை பந்தா காட்டப்போறியள்? அங்கை பிரச்சனை முடிஞ்சுதெல்லே? அங்கை போய் வாழ வேண்டியதுதானே? இனியும் எதுக்கு சிற்றிசன்? இனியும் எதுக்கு குளிருக்கை கிடந்து நடுங்கோணும்?

நரம்பில்லா நாக்கால் எதுவும் கதைக்கலாம். ஆனால் யதார்த்தம் ஒன்று இருக்கின்றது கந்தையா...:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

முன்பு அழகிய ரசியா/சோவிய யூனியன் என்று ஏதோ ஒரு பெயரில் என்று நினைக்கின்றேன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சஞ்சிகை வரும் மாதாமாதம்/காலாண்டுக்கு வரும். அதை வாசிப்பது சுவாரசியமானது. இங்கு ரஷ்யா சார்பான கருத்துக்கள் எழுதும் யாராவது அதை வாசித்தது உண்டோ?

நான் பார்த்திருக்கின்றேன்.:beaming_face_with_smiling_eyes:

ஆனால் சைனா மகசீன் பிரபல்யம்.😎

அது சரி....பள்ளிக்கூடங்களிலை பொடியளுக்கு குடுத்த அமெரிக்கன் விசுக்கோத்து ஞாபகம் இருக்கோ? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

வகுப்பில் ஒவ்வொருவரும் எமது ஆதரவு அணியை விட்டுக்கொடுக்க மாட்டோம். இங்குள்ள கருத்துக்களை வாசிக்கும்போது பாடசாலை நாட்களின் பல பழைய ஞாபகங்கள் தான் வருகின்றன. 

இங்கிருந்த படி கொன்சேவெட்டி கட்சியா அல்லது லேபர் கட்சியா லிபரல் கட்சியா என்று கதைத்தால் கருத்து வைத்தால்  நீங்கள் சொன்ன மாதிரி இருக்கும். ஆனால் நீங்கள் சொன்னது போன்று இலங்கையில் நடிகர்கள் அணி, இயக்க அணி பாடசாலை அணிபோன்றதல்ல இது. இங்கே ஒரு அணி தான் உள்ளது தங்களுக்கான பாதுகாப்பான சுதந்திரமான வாழ்வை மேற்குலகநாடுகளில அமைத்து கொண்ட ஈழத்தமிழர்கள்.

இவர்கள்  நீங்கள் முன்பு இலங்கையில் பாடசாலையில் செய்தது மாதிரி ரஜனியா விஜேயா, இளையராசாவா ரகுமானா என்றும் விவாதிப்பது நன்றாக இருக்கும்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாங்கள் முன்பு சிறுவயதில் பாடசாலையில் ரஷ்யா ஆதரவாளர்கள், அமெரிக்கா ஆதரவாளர்கள் என இரு பகுதி வகுப்பில் உண்டு. இது போலவே கமல், ரஜனி என இரு அணிகள், எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு அணிகள், விடுதலைப்புலிகள், டெலோ, புளட், ஈ பி ஆர் எல் எவ் என நான்கு அணிகள் என பல பிரிவுகள் உண்டு.

படிக்கும் காலங்களில் கூட வகுப்பு மாணவர்களிடையே தமிழரசு கட்சி காங்கிரஸ் கட்சி என்ற போட்டிகள் இருந்ததுண்டு. அதன் பின் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு மாணவர்களிடையே பெரிய புயல் போன்ற ஆதரவு இருந்தது.மாணவர்கள் தங்களுக்குள் காசு சேர்த்து உதயசூரியன் சின்னம் பொறித்த  தேர்தல் துண்டு பிரசுரங்களும் விநியோகித்தார்கள். யூஎன்பி கட்சிக்கும் ஆதரவு மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் சிறிலங்கா சுதந்திரகட்சி என்றால் ஓட விட்டு அடிதான்....:face_with_tears_of_joy:

நான் ஜேர்மனியில் வசிக்கின்றேன்... நான் சார்ந்த கட்சியின் கொள்கையின் படியே இங்கு கருத்தெழுதுகின்றேன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

ஹலோ கந்தையா நன்றிக்கடன் வேறு கொள்கை வேறு. இங்கே இரண்டையும் சேர்த்து குழப்பவதால் தான்  உங்களைப்போன்றோர் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றார்கள்.

தற்போதைக்கு உங்களிடம் ஒரு கேள்வி?

ஜேர்மனியில் ரஷ்யாவிடம் பேச்சுவார்தை நடத்துமாறு கோரும் கட்சிகள் இருக்கின்றனவா இல்லையா? ரஷ்யா சார்பு ஜேர்மனிய மக்கள் இருக்கின்றார்களா இல்லையா?

இதற்கு பதிலை சொல்லுங்கள் தொடரலாம்.

நான் ஒருவரையும் குழப்பவில்லை....நன்றிகடன்.  செலுத்தவில்லை....இந்த அரசாங்கம் கேட்டதுமில்லை.....உங்களுக்கு எப்படி கொள்கை உணடோ அதே மாதிரி எங்கள் விருப்பம்....விரும்பிய கொள்கை     நீங்கள் தான்  அதை நன்றி கடன் என்று பெயரிடுகிறீர்கள்.     விசா   இருக்க இடம்.  படிப்பு    வேலைவாய்ப்பு   கிடைத்தது என்று வால்பிடிக்கவில்லை    ....மாறாக வரவேற்கிறோம் பாராட்டுகிறோம்.....இவையெல்லாம் வெவ்வேறு விடயங்கள்   அனுபவிக்கவும. செய்கிறோம்...

மேலும் நீங்கள் சொன்ன கட்சிகளுமுண்டு     ...மக்களும் உண்டு”   ஆனால் பலமில்லை அதிகாரமில்லை   ....இவைபற்றி நான் கண்டு கொள்வதில்லை   காரணம் இந்த கட்சிகள்  நாட்டை ஒருபோதும் தனியாக ஆட்சி செய்ய முடியாது......தேர்தலில் பின்  பல கட்சிகள்  பலதடவைகள் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி பலவற்றை விட்டு கொடுத்து   ஆட்சி பிடம ஏறுவார்கள்.    .......இவர்கள் சொன்னது செய்ய முதல் நான்கு வருடங்கள் வந்து விடும்  ..🤣

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

தப்பி இஞ்சை வந்துட்டியள் எல்லே?
அகதியாய் பதிஞ்சும் விட்டியள் எல்லே?
நல்ல வேலையும் செய்யிறியள் எல்லே?
நல்ல சம்பளமும் வருது எல்லே?
சிற்றிசனும் எடுத்துட்டியள் எல்லே?

பிறகு....
என்ன கோதாரிக்கு தமிழனுக்கு உரிமையே தராத.....தமிழர்களை அழித்த சிறிலங்காவுக்கு மூட்டை முடிச்சுக்களோடை பந்தா காட்டப்போறியள்? அங்கை பிரச்சனை முடிஞ்சுதெல்லே? அங்கை போய் வாழ வேண்டியதுதானே? இனியும் எதுக்கு சிற்றிசன்? இனியும் எதுக்கு குளிருக்கை கிடந்து நடுங்கோணும்?

நரம்பில்லா நாக்கால் எதுவும் கதைக்கலாம். ஆனால் யதார்த்தம் ஒன்று இருக்கின்றது கந்தையா...:cool:

இது நீங்கள் உங்களை கேட்க வேண்டிய கேள்விகள்    மாறாக நான் இல்லை    பிடித்த இடத்தில் தான் இருக்கிறேன்.........இலங்கையில் பிறந்து விட்டேனே   .என்று அங்கே    இருக்க எனக்கு ..என்ன தலையெழுத்தா.  ????.   இலங்கையையும்.  அதன் ஆட்சி யையும். எப்போதுமே குறை சொலலுபவனாகிய நான்   எப்படி அங்கே வாழ முடியும்???  [உலகில் பல நாடுகள் உண்டு...] குறை சொல்லி கொண்டு  அதே நாட்டில் வாழும் பழக்கம் என்னிடமில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

சோவியத் யூனியனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிற்கும் பல கருப்புப் பக்கங்கள் இருப்பதை வசதியாக மறந்துவிடுகிறோம் 

லிஸ்ரை எடுத்து வெளியே விட்டால் உலகமே கருப்பு என்பது எல்லோருக்கும் புரியும். ஆனால் சனநாயகத்தையும் மனிதாபிமானத்தையும் உயர்த்திப் பிடிக்கும் நாடுகள் தங்களின் காலடியில் புதிய, பழைய புதைகுழிகள் இருப்பதை வசதியாக மறந்துவிட்டு மற்றய நாடுகளின் மீது கல்லெறிகின்றன. 

இதில் ..மெரிக்கவும் விதிவிலக்கல்ல. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

வேண்டாம் நாறிவிடும்😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Kapithan said:

சோவியத் யூனியனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிற்கும் பல கருப்புப் பக்கங்கள் இருப்பதை வசதியாக மறந்துவிடுகிறோம் 

லிஸ்ரை எடுத்து வெளியே விட்டால் உலகமே கருப்பு என்பது எல்லோருக்கும் புரியும். ஆனால் சனநாயகத்தையும் மனிதாபிமானத்தையும் உயர்த்திப் பிடிக்கும் நாடுகள் தங்களின் காலடியில் புதிய, பழைய புதைகுழிகள் இருப்பதை வசதியாக மறந்துவிட்டு மற்றய நாடுகளின் மீது கல்லெறிகின்றன. 

இதில் ..மெரிக்கவும் விதிவிலக்கல்ல. 

😏

ஒரு காலத்தில் பொது நலம் என்று ஒன்று இருந்தது.
ஆனால் இன்றோ பொது நலனும் வியாபார நலனாக மாறி விட்டது.
கொண்ட கொள்கையும் சுய நலனுக்காக மாற்றப்பட்டு விட்டது.

 வியாபாரிகளின் வியாபார உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஒரு காலத்தில் பொது நலம் என்று ஒன்று இருந்தது.
ஆனால் இன்றோ பொது நலனும் வியாபார நலனாக மாறி விட்டது.
கொண்ட கொள்கையும் சுய நலனுக்காக மாற்றப்பட்டு விட்டது.

 வியாபாரிகளின் வியாபார உலகம்.

உதாரணம் 👇

List of genocides

https://en.m.wikipedia.org/wiki/List_of_genocides

https://genocideeducation.org/

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

புடினைக் கொலை செய்ய முயற்சி. கிரெம்ளின் மீது தாக்குதல். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.