Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Afghanistan FlagAfghanistan         291/5
Australia FlagAustralia              (46.5/50 ov, T:292) 293/7

Australia won by 3 wickets (with 19 balls remaining)

 

(rhb) 201 128 21 10 157.03
  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted

அவுஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நிழலி said:

அவுஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றி 

எதிப்பார்க்கல.

ஒரு கச்சை விட்டதால் ஆப்கான் தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ் ஆப்கான் ஆட்டம் கடைசி இருபது பந்துப்பரிமாற்றங்களை தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சொல்லி வேலை இல்லை. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

நாங்கள் அழுத அழுகைக்கு, கோடிக் கணக்கில் எல்லோ காசு சேர்ந்திருக்க வேணும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

இரண்டு  பிடிகளை விட்டதிற்கு, ஆப்கானுக்கு  கிடைத்த  பரிசு.

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

'அடிபட்ட சிங்கம்' கிளென் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தலைகீழாக மாற்றியது எப்படி?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரதீப் குமார்
  • பதவி, பிபிசி நிருபர்
  • 8 நவம்பர் 2023, 03:20 GMT
    புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

அற்புதங்கள் அரிதானவை. வலிமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டுத் துறையில் அற்புதங்கள் ஆகக் குறைவு.

ஆனால் அதிசயங்களை நம்புபவர்கள், மும்பை வான்கடே மைதானத்தில் க்ளென் மேக்ஸ்வெல் வடிவத்தில் ஒரு நேற்று (நவம்பர் 7) ஒரு அற்புதத்தைக் கண்டார்கள்.

கிளென் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ், ஒரு வீரர் தனது தைரியத்தால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டியது.

போட்டியை முடித்த நான்கு பந்துகளில், மேக்ஸ்வெல் இரண்டு சிக்ஸர்கள், பின்னர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார்.

 

அவர் காலில் நிற்கக்கூட முடியாத நிலையில் இந்த ஷாட்களை அடித்தார்.

விளையாடும் போது அவர் ஓடக்கூடிய நிலையிலும் இல்லை, அவரது கால்களில் எந்த அசைவும் இல்லை, ஆனாலும் அவர் கிரீஸில் நின்று இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்தார். இதில் கடைசி 100 ரன்களைக் கிட்டத்தட்ட ஓடாமல், வலியுடன் போராடி முடித்தார்.

நடக்கவே முடியாவிட்டாலும் மேக்ஸ்வெல் பை-ரன்னர் கூட அழைக்காதது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்தக் கட்டுரையில் அதற்கான விடையும் இருக்கிறது.

 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

அவரது இடது காலில் ஏற்பட்ட பிரச்சனை முதுகுப் பிரச்சனையாக மாறியது. மேக்ஸ்வெல் பலமுறை மைதானத்தில் படுத்துக் கொண்டார்

‘மேட் மேக்ஸியின்’ அசாதாரண ஆட்டம்

மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின், சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளைத் தாக்கியது மட்டுமல்ல, தனது வலி மற்றும் அசௌகரியத்தின் தருணங்களையும் எதிர்த்து வென்றார்.

அவர் தனது பிரசித்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

கிரிக்கெட் உலகில் ‘மேட் மாக்ஸி’ (Mad Maxi) என்று அழைக்கப்படும் கிளென் மேக்ஸ்வெல், தான் ஒரு மேதை மட்டுமல்ல, அசாதாரணமான திறமையும் கொண்டவர் என்பதை நிரூபித்தார்.

சொல்லப்போனால், மிக இளம் வயதிலேயே தனது திறமையின் அடிப்படையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கலக்கிய கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டில் அதே வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் அவ்வப்போது தனக்குளிருந்த தீப்பொறியை வெளிக்காட்டினார். இதன் காரணமாக அவர் பத்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியில் இருந்தார்.

அவரிடமிருந்து கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்த மாதிரியான பேட்டிங்கை, அவர் நேற்று வான்கடே மைதானத்தில், ஒரு அழகான கலைப்படைப்பினை உருவாக்குவதுபோல அனைத்து வண்ணங்களையும் கொண்டு படைத்தார் என்றே சொல்லலாம்.

ஒரு புல், ஒரு ஃபிளிக் அல்லது ரிவர்ஸ் ஃபிளிக் — எதுவாக இருந்தாலும், மேக்ஸ்வெல் தனது ஃபாரிமில் இருக்கும்போது என்ன செய்ய முடியும் என்பதை உலகம் நீண்ட காலமாக நினைவில் வைத்திருக்கும்.

201 ரன்களின் ஆட்டமிழக்காத இன்னிங்ஸ் என்பது, உலக கிரிக்கெட்டில் ஆறாவது அல்லது அதற்கும் கீழே உள்ள ரேங்கில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்களை சேஸ் செய்யும்போது அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும்

மேக்ஸ்வெல் செய்த சாதனை என்ன?

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓப்பனிங் செய்யாமல் இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆகியிருக்கிறார் க்ளென் மேக்ஸ்வெல்.

இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதங்கள் அனைத்தும் தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமே அடித்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல் முறை.

இரண்டு பந்துகளில் அதிவேக இரட்டை சதம் என்ற சாதனையை அவர் தவறவிட்டார், இஷான் கிஷன் 126 பந்துகளில் இந்த சாதனையை எட்டினார், மேக்ஸ்வெல் 128 பந்துகளை எதிர்கொண்டார். ஆனால் மேக்ஸ்வெல் மிகவும் பாதகமான சூழ்நிலையில் விளையாடிய போது இந்த இரட்டை சதத்தை அடித்தார்.

இது மட்டுமின்றி, ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்களை சேஸ் செய்யும்போது அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும்.

இருப்பினும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தபோது, ஒன்பதாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அஸ்மத்துல்லா ஏற்கெனவே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அப்படிப்பட்ட நிலையில் ஹாட்ரிக் விக்கெட்டைக் காப்பாற்ற மேக்ஸ்வெல்லுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, சிறிது நேரத்தில் தப்பினார். பந்து அவரது மட்டையின் வெளிப்புற விளிம்பை எடுத்து விக்கெட்டுக்கு பின்னால் சென்றது ஆனால் கீப்பரின் கையுறைகளை அடையவில்லை.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

அவர் காலில் நிற்கக்கூட முடியாத நிலையில் இந்த ஷாட்களை அடித்தார்

மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸை எப்படியிருந்தது?

ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது மேக்ஸ்வெல் தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

அவர் விக்கெட்டில் நிலைத்திருக்கும் போது, ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஏழு விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

மைதானம் முழுவதும் ஆப்கானிஸ்தான் அணிக்கு பலத்த ஆதரவு இருந்ததால் இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய தோல்வியை தழுவும் என்றும் தோன்றியது.

அப்போது மேக்ஸ்வெல் 26 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருடன் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இணைந்தார். கம்மின்ஸ் ஒரு முனையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். மேக்ஸ்வெல் ஆட்டத்தை மாற்றத் தொடங்கினார்.

இதன்போது, ஸ்கொயர் லெக்கில் ஒரு முறையும், மிட் ஆஃபில் ஒரு முறையும் கேட்ச் தவறியது. ஆனால் அவரது நம்பிக்கை தளரவில்லை.

சிறிது நேரத்திலேயே 76 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் கம்மின்ஸால் இரட்டை இலக்கத்தை எட்ட முடியவில்லை.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஒருமுறை ரன் எடுக்கும்போது மைதானத்தில் விழுந்தது மட்டுமின்றி, கிரீஸை அடைந்ததும் அவர் வலியால் துடித்தது போல் தோன்றியது

சதம் அடித்த பிறகு வெளிப்பட்ட உண்மை முகம்

ஆனால் மேக்ஸ்வெல்லின் உண்மையான நிறம் இந்த சதத்திற்குப் பிறகுதான் தெரிந்தது.

அவர் ஒரு புயல் பேட்ஸ்மேன் என்று அறியப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் அழுத்தத்தின் தருணங்களில் வீழ்ச்சியடைந்தார். ஆனால் வலியிலும் துன்பத்திலும் அவர் இங்கே உறுதியாக நின்றார்.

முதல் சதத்திற்குப் பிறகு, அவரது இடது காலில் ஒரு தசைப்பிடிப்பு இருப்பதை உணர்ந்தார். மேலும் அணியின் பிசியோதெரபிஸ்ட் மைதானத்திற்கு வர வேண்டியிருந்தது.

அப்போது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற சுமார் நூறு ரன்கள் தேவைப்பட்டது.

அவரது இடது காலில் ஏற்பட்ட பிரச்சனை முதுகுப் பிரச்சனையாக மாறியது. மேக்ஸ்வெல் பலமுறை மைதானத்தில் படுத்துக் கொண்டார்.

ஒருமுறை ரன் எடுக்கும்போது மைதானத்தில் விழுந்தது மட்டுமின்றி, கிரீஸை அடைந்ததும் அவர் வலியால் துடித்தது போல் தோன்றியது. அப்போதிருந்து அவருக்கு நிற்பது கூட கடினமாக இருந்தது.

அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வெளியேறிய ஆடம் ஜம்பா இரண்டு முறை களம் இறங்குவதற்கு தயாராகி வந்தார்.

41-வது ஓவரின் போது, மேக்ஸ்வெல் ஸ்ட்ரெச்சருடன் வெளியே செல்ல வேண்டும் என்பதுபோல் தோன்றியது, ஆனால் மேக்ஸ்வெல் மீண்டும் காலில் நிற்க, ஜம்பா பெவிலியனிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது.

2010-11-இல், ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டில், மேக்ஸ்வெல் 19 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு வெகுவிரைவாக அவரால் ஒருநாள் அணியில் இடம் பிடிக்க முடிந்தது.

சொந்த மைதானத்தில் விளையாடிய 2015 உலகக் கோப்பையில், அவர் இலங்கைக்கு எதிராக வெறும் 51 பந்துகளில் சதம் அடித்தார், இது அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவின் எந்த பேட்ஸ்மேனும் அடித்ததிலேயே அதிவேக சதமாகும்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

தனது வலி மற்றும் அசௌகரியத்தின் தருணங்களையும் எதிர்த்து வென்றார்

எழுச்சியும் வீழ்ச்சியும் நிறைந்த பயணம்

தனது ஆரம்ப ஆண்டுகளில், 'இந்த பேட்ஸ்மேன் எந்த பந்திலும் எந்த ஷாட்டையும் ஆட முடியும்' என்ற ஒரே அடையாளம் மட்டுமே அவருக்கு இருந்தது.

ஆனால் வழக்கத்திற்கு மாறான ஷாட்களை ஆடுவது அவரது மிகப்பெரிய குறைபாடாக மாறியது. ஷாட்களை கவனக்குறைவாக விளையாடுவதன் மூலம் அவர் எந்த நேரத்திலும் வெளியேறலாம் என்று கருதப்பட்டது.

பல போட்டிகளில், அவர் அபத்தமான ஷாட்களை விளையாடியதற்காக கேலி செய்யப்பட்டார்.

2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, தொடர்ச்சியான ஒருநாள் போட்டிகளில் அவர் சராசரி பத்துக்கும் குறைவாக இருந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவடையும் தறுவாயில் இருந்தது ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தனது திறமைகளை இப்படி வீணடிக்க விடுவதில்லை.

மேக்ஸ்வெல் தனது சக வீரர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றார் மற்றும் மனநல சிகிச்சையாளர்களின் உதவியையும் பெற்றார். இவையனைத்தும் பலனளித்ததால், ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு வந்தார்.

ஆனால் உள்ளேயும் வெளியேயும் சுழற்சி தொடர்ந்தது. அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 127க்கு மேல் இருந்தாலும், 136 போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 36 கூட இல்லை.

ஒருநாள் கிரிக்கெட்டில், நான்கு சதங்களின் உதவியுடன் இன்னும் நான்காயிரம் ரன்களை அவர் பூர்த்தி செய்யவில்லை.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கிளென் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

இந்த உலகக் கோப்பையை மறக்க முடியாததாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மேக்ஸ்வெல் விளையாடுவதாகத் தெரிகிறது

மறக்கமுடியாத ஆட்டம்

ஆனால், லீக் கிரிக்கெட்டில், உலகம் முழுவதும் உள்ள அணிகள் அவர் தேவை என்று கருதுகின்றன.

ஐ.பி.எல்.லில் கூட பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளில் இடம்பிடித்துள்ளார்.

ஆனால் ஐ.பி.எல்.லில் அவரது எந்த இன்னிங்ஸும் மறக்க முடியாத வகையில் நினைவில் இல்லை.

‘தி கிரிக்கெட் மன்த்லி’ மாத இதழ், 2017-இல் அவரைப்பற்றி வெளியிட்ட ‘மேட் மேக்சி’ என்ற கட்டுரையில், அவருக்கு அறிமுகமானவர்களுடனான உரையாடல் நிகழ்த்தியிருந்தது. அதன் அடிப்படையில், பல ஆண்டுகளுக்குப் பிறகும், கொந்தளிப்பான வாழ்க்கைக்குப் பிறகும், மாறாமல் இருப்பது மேக்ஸ்வெல்லின் ஆட்ட பாணியாகும்.

இந்த உலகக் கோப்பையை மறக்க முடியாததாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மேக்ஸ்வெல் விளையாடுவதாகத் தெரிகிறது. அவர் இதுவரை இரண்டு சதங்கள் அடித்துள்ளார். அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், ஆஸ்திரேலியா உலக சாம்பியனாவதை யாராலும் தடுப்பது கடினம்தான்.

மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏன் கூடுதல் ரன்னரை அழைக்கவில்லை?

நின்று ஓட முடியாமல் தசைப்பிடித்து மைதானத்தில் கீழே விழுந்த மேக்ஸ்வெல் ஏன் தொடர்ந்து பேட்டிங் செய்தார்? பவுண்டரிகள், சிக்ஸர்கள் என அதிக ரன்களை அடித்தாலும், தேவைப்படும்போது சிங்கிள்ஸ் எடுப்பதற்குக் கூட அவர் ஏன் இவ்வளவு வலிகளை தாங்கிக் கொள்ள வேண்டும்? அவருக்கு ஏன் ரன்னர் கிடைக்கவில்லை? - இதே போன்ற கேள்விகள் பல பார்வையாளர்களால் எழுப்பப்பட்டன.

2011 இல், ஐசிசி நிர்வாகக் குழு சர்வதேச கிரிக்கெட்டில் ரன்னர் விதியை நீக்க முடிவு செய்தது.

ஆட்டத்தின் நடுவே மைதானத்தில் தடைகள் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்தது. அக்டோபர் 1, 2011 முதல், இந்த வசதி இல்லை.

ரன்னரை அனுமதிக்கக் கூடாது என்ற விதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என ஐசிசி தெரிவித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு ரன்னரை அழைத்துச் செல்வதற்கான வசதி இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cxx1n1rwnddo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

`வரலாற்றில் முதல்முறை!’ – மேக்ஸ்வெல் நிகழ்த்திய 5 சாதனைகள்!

He's a freak': Maxwell innings lauded as greatest ever | cricket.com.au

வான்கடேவில் நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை போட்டியில் மேக்ஸ்வெல்லின் அசாத்தியமான இன்னிங்ஸால் அவுஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது.

292 ரன்கள் என்ற இலக்கை வென்றதில் மேக்ஸ்வெல் மட்டும் 128 பந்துகளில் 201 ரன்களை மேக்ஸ்வெல் எடுத்திருந்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் மேக்ஸ்வெல் செய்த முக்கியமான சாதனைகள் இங்கே…

*அவுஸ்திரேலியா சார்பில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கும் முதல் வீரர் மேக்ஸ்வெல்தான். இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக வொட்சன் 185* ரன்களை பங்களாதேஷுக்கு எதிராக அடித்திருந்தார். அதுதான் ஓடிஐ போட்டிகளில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

*ஓடிஐ போட்டிகளில் இதற்கு முன் இரட்டை சதம் அடித்த வீரர்கள் எல்லாமே முதலில் பேட் செய்கையில்தான் அடித்திருக்கிறார்கள். மேக்ஸ்வெல்தான் சேஸிங்கில் இரட்டை சதம் அடிக்கும் முதல் வீரர்.

Injured Glenn Maxwell hits record-breaking double century against  Afghanistan to lift Australia into World Cup semifinals - ABC News

*ஓடிஐ போட்டிகளில் இதற்கு முன் இரட்டை சதம் அடித்திருக்கும் வீரர்கள் எல்லாருமே ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கியே அந்தச் சாதனையைச் செய்திருக்கின்றனர். ஆனால், மேக்ஸ்வெல் மட்டும்தான் நம்பர் 6 இல் இறங்கி இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

*மேக்ஸ்வெல்லின் இந்த இரட்டை சதம் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது இரட்டை சதமாகும். முதல் இடத்தில் இருக்கும் இஷன் கிஷன் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருக்கிறார். மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

*ஓடிஐ போட்டிகளில் 7 ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்களை குவித்த பார்டனர்ஷிப் என்கிற சாதனையை மேக்ஸ்வெல் – கம்மின்ஸ் கூட்டணி செய்திருக்கிறது. இருவரும் இணைந்து 201 ரன்களை அடித்திருந்தனர். இதற்கு முன் பட்லரும் அடில் ரஷீத்தும் 7 வது விக்கெட்டிற்கு 127 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.

அவுஸ்திரேலியா அடித்த மொத்த ரன்களில் 82% ரன்களை மேக்ஸ்வெல் மட்டுமே எடுத்திருந்தார். அவரின் அசாத்திய ஆட்டத்தால் மட்டுமே அவுஸ்திரேலியா வென்றது.

Maxwell plays lone hand with fighting half-century | CWC23

https://thinakkural.lk/article/280553

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த போட்டி ஒரு நம்ப முடியாத போட்டி, இது போல் இனிமேல் நிகழுமா எனவும் தெரியவில்லை, மேக்ஸ்வெல்லை போல இந்திய அணி வீரர் சூரிய குமார் யாதவ் உள்ளார். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராட்டுக்கள் மேக்ஸ்வெல் ..........சூப்பர்......உடல் ஓத்துழைக்காத போதும் மனதின் வலிமை இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது......!   👍

நன்றி ஏராளன் .......!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மெக்ஸ்வெல் இரட்டைச் சதம் குவித்து வரலாறு படைக்க ஆப்கானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

07 NOV, 2023 | 11:09 PM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் பலத்த சவாலுக்கு மத்தியில் க்ளென் மெக்ஸ்வெல் அதிரடியாக ஆட்டம் இழக்காமல் இரட்டைச் சதம் குவித்து அவுஸ்திரேலியாவுக்கு மிகவும் அவசியமான 3 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இந்த வெற்றியடன் உலகக் கிண்ண அரை இறுதிச் சுற்றில் விளையாடும் தகுதியை இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகியவற்றைத் தொடர்ந்து 3ஆவது அணியாக அவுஸ்திரேலியா உறுதிசெய்துகொண்டது.

இதற்கு அமைய தென் ஆபிரிக்காவும் அவஸ்திரேலியாவும் கொல்கொத்தாவில் நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் சார்பாக முதலாவது உலகக் கிண்ண சதத்தைக் இப்ராஹிம் சத்ரான் குவித்து வரலாறு படைத்த போதிலும் மெக்ஸ்வெல் குவித்த இரட்டைச் சதம் அதனை விஞ்சிவிட்டது.

மெக்ஸ்வெல் பெற்ற இரட்டைச் சதமானது 48 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் குவிக்கப்பட்ட முதலாவது இரட்டைச் சதமாகும். அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவுஸ்திரேலியா சார்பாக இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனைக்கும் மெக்ஸ்வெல் உரித்தானார்.

போட்டியின் 22ஆவது ஓவரில் மெக்ஸ்வெல் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது  நூர் அஹ்மதின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார். ஆனால் மீளாய்வில் அவர் ஆட்டம் இழக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.

அதே ஓவரில் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது   மெக்ஸ்வெல் கொடுத்த இலகுவான பிடியை முஜீப் உர் ரஹ்மான் தவறிவிட்டார். இந்த இரண்டு வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொண்ட மெக்ஸ்வெல் இறுதியில் வரலாற்று நாயகனானார்.

பிடியைத் தவறவிட்டதால் ஏற்பட்ட வேதனையை முஜீப் உர் ரஹ்மான் தனது வாழ்நாளில் மறக்கமாட்டார் என்பது உறுதி.

ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 291 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 46.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.

19ஆவது ஓவரில் அவுஸ்திரேலியாவின் 7ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை 91 ஓட்டங்களாக இருந்தது.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றொரு தலைகீழ் வெற்றியை ஈட்டும் என கருதப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய மெக்ஸ்வெல் 128 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள், 10 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 201 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவுக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது மெக்ஸ்வெலின் இரட்டைச் சதத்திற்கும் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அவர் வெற்றி ஓட்டங்களையும் இரட்டைச் சதத்தையும் சிக்ஸ் மூலம் பெற்றமை விசேட அம்சமாகும்.

ஸிம்பாப்வேக்கு எதராக 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அப்போதைய இந்திய அணித் தலைவர் கபில் தேவின் அதிரடி துடுப்பாட்டத்தை மெக்ஸ்வெலின் அதிரடி இரட்டைச் சதம் விஞ்சுவதாக அமைந்தது.

மெக்ஸ்வெல் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் பெட் கமின்ஸுடன் சாதனை மிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஆனால், பெட் கமின்ஸின் பங்களிப்பு வெறும் 12 ஓட்டங்களாக இருந்தது.

நியூஸிலாந்துக்கு எதிராக ஸிம்பாப்வேயின் டேவிட் ஹூட்டன், இயன் புச்சார்ட் ஆகியோர் பகிர்ந்த 117 ஓட்டங்களே இதற்கு முன்னர் உலகக் கிண்ணப் போட்டியில் 8ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

க்ளென் மெக்ஸ்வெல் 147 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரது வலதுகாலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் கடும் வேதனைக்குள்ளான மெக்ஸ்வெல், சிகிச்சைக்குப் பின்ன்ர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார். ஆனால், அதன் பின்னர் அவர் நின்ற இடத்தில் இருந்தவாறே பாதங்களை பெரிதாக அசைக்காமல் பவுண்டறிகளையும் சிக்ஸ்களையும் விளாசியமை அற்புதமாக இருந்தது.

அத்துடன் மெக்ஸ்வெலின் விடாமுயற்சியும், வைராக்கியமும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.

பந்துவீச்சில் ரஷீத் கான் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 291 ஓட்டங்களைக் குவித்தது.

இப்ராஹிம் ஸத்ரான் மிகுந்த நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடி 143 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 129 ஓட்டங்களைக் குவித்தார்.

இரண்டாவது விக்கெட்டில் ரஹ்மத் ஷாவுடன் 83 ஓட்டங்களைப் பகிர்ந்த ஸத்ரான், 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 52 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் ரஷித் கானுடன் 58 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

ஆப்கானிஸ்தான் சார்பாக துடுப்பெடுத்தாடிய 7 வீரர்களும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் உதிரிகளும் இரட்டை இலக்கமாக இருந்தது.

ஸத்ரானைவிட ரஹ்மானுல்லா குர்பாஸ் (21), ரஹ்மத் ஷா (30), ஹஷ்மத்துல்ல ஷஹிதி (26), அஸ்மத்துல்லா ஒமார்ஸாய் (22), மொஹமத் நபி (12), ரஷித் கான் (18 பந்துகளில் 2 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 35) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: க்ளென் மெக்ஸ்வெல்

https://www.virakesari.lk/article/168771

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெதர்லாந்துக்கு இலக்கு 340 ரன் - இங்கிலாந்துக்கு கட்டாய வெற்றி நெருக்கடி ஏன்?

இங்கிலாந்து நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நடப்புச்சாம்பியனான இங்கிலாந்து அணிக்கும் கடைசிக்கு முந்தைய இடமான 9வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு ஆரம்பித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பார்ட்னர்ஷிப் இல்லாமல் தடுமாறிய இங்கிலாந்து

தொடக்க பேட்ஸ்மேன்களான ஜானி பேர்ஸ்டோவும் டேவிட் மலானும் தொடக்கத்திலேயே வேகமாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 48 என்று இருக்கும்போது நெதர்லாந்து பந்து வீச்சாளர் ஆர்யன் தத் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மாலன் 36 பந்துகளில் அரை சதமடித்தார். பேட்டிங் பவர்ப்ளேவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் சேர்த்தது.

மாலன் - ரூட் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் சீரான வேகத்தில் இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்து வந்த நிலையில் ரிவர்ஸ் ஹிட் அடிக்க முயற்சித்து வான் பீக்கின் பந்தில் ரூட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பார்ட்னர்ஷிப் இல்லாமல் தடுமாறிய இங்கிலாந்து

ஒருநாள் போட்டிகளில் தனது ஏழாவது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மலானும் 87 ரன்களில் ஆர்யன் தத்தின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியில் மாற்றமாக உள்ளே வந்த ஹேரி ப்ரூக் 11 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணிக்கு ஒரு வலுவான பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. களத்தில் பென் ஸ்டோக்ஸும் கேப்டன் ஜாஸ் பட்லரும் ஜோடி சேர ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமானது.

ஆனால், இங்கிலாந்து கேப்டன் பட்லர் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியை 33 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் என்ற இக்கட்டான சூழலுக்கு நெதர்லாந்து அணி கொண்டுவந்தது. ஆர்யன் தத்தின் மூன்றாவது விக்கெட்டாக அடுத்து வந்த மொயின் அலியும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை அடித்த பென் ஸ்டோக்ஸ்

மறுபுறம் நிதானமாக ஆடி வந்த பென் ஸ்டோக்ஸ் 58 பந்துகளில் தனது 24வது ஒருநாள் அரை சதத்தை அடித்தார். 42.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 7 ஓவர்களின் முக்கியத்துவத்தை அறிந்து ஸ்டேக்ஸும் வோக்ஸும் அதிரடி காட்ட ஆரம்பித்தனர். ஆர்யன் தத் வீசிய 45வது ஓவரில் 3 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் ஸ்டோக்ஸ் விளாசினார்.

47வது ஓவரில் இங்கிலாந்து அணி 300 ரன்களை எட்டியது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 78 பந்துகளில் தனது சதத்தை அடித்தார் ஸ்டோக்ஸ். அரை சதம் அடித்த வோக்ஸ் டி லீடின் பந்தில் 51 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த டேவிட் வில்லி முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். கடைசி வரை இருந்து இங்கிலாந்தின் முதல் இன்னிங்க்ஸை முடித்துக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் போது 108 ரன்களுக்கு அவுட்டானார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற இங்கிலாந்து போராட்டம்

2025ல் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தகுதிப்போட்டியாக இந்தப் போட்டி பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை முடியும்போது புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் தான் சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெறும். எனவே எப்படியாவது இந்தப் போட்டியில் வென்று 8வது இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு இங்கிலாந்து அணி விளையாடுகிறது.

https://www.bbc.com/tamil/articles/ceqp9d898xwo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடர்ந்து வெற்றிபெறும் இந்திய அணியின் அந்த 2 பலவீனங்கள்

இந்திய அணி

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

லீக்கில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவை இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுரேஷ் மேனன்
  • பதவி, விளையாட்டு எழுத்தாளர்
  • 8 நவம்பர் 2023, 02:23 GMT

விராட் கோலி மீதான எதிர்பார்ப்பே உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய ரசிகர்களின் ஆர்வத்தை அதிகளவில் தூண்டி வருகிறது.

முதலில், இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி 49 சதங்கள் பெற்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வாரா? என எதிர்பார்த்து வந்தனர். இப்போது அவர் 50க்கு வருவாரா? என எதிர்பார்க்கின்றனர். பின், 51 பற்றி எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள். இந்த எதிர்பார்ப்புகள் தொடந்து கொண்டே இருக்கும்.

அவரின் புள்ளிவிவரங்கள் ரசிகர்களின் மனதைக் கவரும். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய பேட்டர்கள் சதம் அடித்தவர்களில் முதல் இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா 31 சதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, லீக்கில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவை இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தென்னாப்பிரிக்கா அணி வெறும் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உண்மையில் இந்தியாவிற்கும் மற்ற அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அவர்களால் இன்னும் இரண்டு முறை இதுபோன்ற வெற்றியை சாத்தியப்படுத்த முடியுமா?

 

இந்திய அணியின் சிறப்பு என்ன?

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இதற்கு முன் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை ஆதிக்கம் செலுத்தியதில்லை

கோலி மீதான ரசிகர்களின் ஆர்வம் மற்ற ஆட்டக்கார்களைப் பற்றிய புள்ளி விபரங்களை பின்னுக்குத் தள்ளியிருக்கலாம். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் 15 விக்கெட்டுகள், 15 என்ற சராசரியுடன் வந்துள்ளன; அவரது 70% பந்துகளில் ரன்களை எடுக்க முடியவில்லை.

பவர்பிளேயில் (முதல் 10 ஓவர்கள்), டாட் பால்களின் சதவீதம் - ரன் இல்லாமல் வீசப்பட்ட பந்துகள் - 83 ஆக உயர்கிறது. விக்கெட்டுகளை வீழ்த்துவது, ரன்களைக் குறைப்பதும் தான் ஒரு பந்து வீச்சாளரின் கனவாக இருக்கும். தொடக்கம் முதலே எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கிறார், பும்ரா.

அவரது கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அதையே பேட்டிங்கில் செய்து வருகிறார். அவர்களது உத்தி நன்றாக வேலை செய்கிறது. பவர்பிளேயில் இந்தியா 91 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டது.

சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே எடுத்தார், ஆனால் ஆறாவது ஓவரில் அவரது அணி 60 ரன்களைக் கடந்தது, இதனால் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 134 ரன்களைச் சேர்க்க நேரம் கொடுத்தனர். ஷர்மா மற்றும் ஷுமான் கில், மார்கோ ஜான்சனைத் தேர்ந்தெடுத்தனர். அதுவரை மார்கோ ஜான்சன் பவர்பிளேயில் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார்.

ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த வியூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர், அதே சமயம் இந்திய டாப் ஆர்டர் அதை நிறைவேற்றியதற்காக பாராட்டுக்கு தகுதியானது. இது இந்தியாவின் கனவு அணி.

இதற்கு முன் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஏன், எந்தப்போட்டியிலும் இந்த அளவு ஆதிக்கம் செலுத்தியதே இல்லை. அணியின் ஒவ்வொரு பிரிவிலும்- ஸ்பின்னர்கள், தொடக்க ஆட்டக்காரர்கள், மிடில் ஆர்டர் பேட்டர்கள், என அனைவரும் அசாதரணமாக நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் செயல்பட்டனர். சதங்கள், ஐந்து விக்கெட்டுக்கள், சிறந்த விக்கெட் கீப்பிங், அபாரமான கேட்சுகளும் இந்திய அணியின் ஆட்டத்தில் வெளிப்பட்டது.

உலகக் கோப்பையில் இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு அணி - பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் - மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களான இடது கை வீரர்கள், ஒரு விரல் சுழற்பந்து வீச்சாளர் (ரவீந்திர ஜடேஜா) மற்றும் ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் (குல்தீப் யாதவ்) ஆகியோருடன் நன்றாக இணைந்திருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடும் உலகக் கோப்பையில் இதற்கு மேல் ஒரு அணியிடம் கேட்க முடியாது.

 

உலகக்கோப்பையில் நெருக்கடியான ஆட்டத்தை காணாத இந்தியா

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ஒரு ஆல்-ரவுண்டரை இந்தியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை

இந்திய அணி மும்பையில் அரையிறுதிக்கு காத்திருக்கும் இந்தத் தருணத்தில், கவலைக்குரிய இரண்டு அம்சங்கள் இந்திய அணியில் இருக்கின்றன. உள்ளன: இந்தியா ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு விளையாடுகிறது. ஏதேனும் காயம் ஏற்பட்டால் உருவாகும் திடீர் நெருக்கடியை சமாளிப்பதற்கான உறுதியான திட்டம் இல்லை.

எனினும், இது ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர்களின் கலவையான அணிதான். பந்துவீச்சாளர்களில் யாரும் தங்களது வேலை ரன்களை குறைத்து வைத்திருப்பது மட்டும்தான் என எண்ணவில்லை. உங்களிடம் இதுபோன்ற ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, அவர்களில் ஒருவர் இல்லாவிட்டாலும் அணி சிரமப்படுமோ என பெருமளவு கவலைக் கொள்ளத் தேவையில்லை என்பதும் ஒருவகையில் உண்மைதான்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பெரும்பாலும் நெருக்கடியான தருணங்களில் பரிசோதிக்கப்படவில்லை என்பது மற்றொரு அம்சம்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தை தவிர, ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளப்பட்டதை தவிர, பேட்டிங் எப்போதும் அழுத்தத்தில் இருக்கவில்லை. கோலியின் முடிவு நெருங்கிவிட்டது என்று சமீபகாலமாக உரக்கச் சொன்னவர்கள் இப்போது அவரது அடுத்த சதத்தை எதிர்பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.

காயத்தில் இருந்து திரும்பியவர்கள் நேர்த்தியாக அணியில் பொருத்திக்கொண்டிருப்பதன் மகிழ்ச்சியை இந்தியா அனுபவித்து வருகிறது. அதே போல் விளையாடாமல் இருந்தவர்கள் தங்கள் பார்ம்-ஐ(Form) நிரூபித்து வருகின்றனர்.

ஷமி, முதல் நான்கு ஆட்டங்களில் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் அதன் பிறகு16 விக்கெட்டுகளை சராசரி ஏழு என்ற கணக்கில் எடுத்துள்ளார். தனது இடம் கிடைக்காமல் தவித்த ஸ்ரேயாஸ் ஐயர், 4வது இடத்தில் ஆட வைக்கப்படுகிறார்.

ஆயினும் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ஒரு ஆல்-ரவுண்டரை இந்தியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரது கணுக்கால் காயம் உலகக் கோப்பையை முடிவுக்குக் கொண்டுவந்தது, இது இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டைப் பற்றி ஏதோ கூறுகிறது. ஆனால் அந்த விவாதம் இந்த உலகக்கோப்பை போட்டி முடியும் வரை காத்திருக்கலாம்.

 
இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாக்-அவுட் சுற்று வரையிலும் உலகக்கோப்பை ஒரு குழு விளையாட்டு. ஆனால், இறுதியில் ஒரேயொருவரின் ஆட்டம்கூட மொத்த அணியின் கனவையும் முடிவுக்கு கொண்டுவரலாம்.

2003 உலகக் கோப்பையில், தொடர்ச்சியாக எட்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற பிறகு, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது இந்தியா. ரிக்கி பாண்டிங் 121 பந்துகளில் 8 சிக்ஸர்கள் உட்பட 140 ரன்கள் எடுத்தார்.

அத்தகைய ஊக்கமளிக்கும் ஆட்டத்திற்கு எதிராக நீங்கள் திட்டமிட முடியாது, அவரே அவுட் ஆக வேண்டும் என்று பிரார்த்தனைதான் செய்ய முடியும்.

இது மைக் டைசனின் புகழ்பெற்ற சொற்றொடர்: "ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும்; அவர்கள் தாக்கப்படும்வரை.”

டிராவிட் சமீபத்தில் கூறியது போல்: "நாம் நமது திறமைகளை தொடர்ந்து செயல்படுத்தி, யாராவது நம்மை விஞ்சி, நம்மை வீழ்த்தினால், நல்ல விஷயம். நாம் அவர்களின் கையை குலுக்கி விட்டு வெளியேறுவோம்."

சுரேஷ் மேனன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிஷன் பேடி குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c51rgqd7wr3o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/11/2023 at 18:47, தமிழ் சிறி said:

spacer.png

இரண்டு  பிடிகளை விட்டதிற்கு, ஆப்கானுக்கு  கிடைத்த  பரிசு.

இவ‌ர் நேற்று புதிய‌ சாத‌னை ப‌டைத்த‌வ‌ர் த‌மிழ் சிறி அண்ணா

உல‌க‌ கோப்பையில் இர‌ட்டை ச‌த‌ம் அடிச்ச‌ முத‌ல் வீர‌ர்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் சுழ‌ல் ப‌ந்து வீச்சிலும் மெக்ஸ்வேல் சூப்ப‌ரா செய‌ல் ப‌ட்டார்

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/11/2023 at 12:47, தமிழ் சிறி said:

spacer.png

இரண்டு  பிடிகளை விட்டதிற்கு, ஆப்கானுக்கு  கிடைத்த  பரிசு.

 

18 minutes ago, பையன்26 said:

இவ‌ர் நேற்று புதிய‌ சாத‌னை ப‌டைத்த‌வ‌ர் த‌மிழ் சிறி அண்ணா

உல‌க‌ கோப்பையில் இர‌ட்டை ச‌த‌ம் அடிச்ச‌ முத‌ல் வீர‌ர்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் சுழ‌ல் ப‌ந்து வீச்சிலும் மெக்ஸ்வேல் சூப்ப‌ரா செய‌ல் ப‌ட்டார்

இவருடைய சாதனையை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இவர் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கைக்குள் போய் விழுந்த அருமையான பிடியை தவறவிட்டதாலேயே இந்த சாதனையை செய்ய முடிந்தது.

என்ன தான் நடந்திருந்தாலும் சாதனை சாதனை தான்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இவருடைய சாதனையை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இவர் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கைக்குள் போய் விழுந்த அருமையான பிடியை தவறவிட்டதாலேயே இந்த சாதனையை செய்ய முடிந்தது.

என்ன தான் நடந்திருந்தாலும் சாதனை சாதனை தான்.

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்க‌ளை விட‌ விளையாட்டை சீடியேசா பார்க்கிறார்

உண்மை தான் அண்ணா அந்த‌ கைச் பிடிச்சு இருந்தா அப்கானிஸ்தான் பெரிய‌ வெற்றி பெற்று இருக்கும்

இர‌வு நேர‌த்தில் ப‌ந்தின் த‌ன்மை மெதுவான‌ ஈர‌மாய் இருக்கும்.............ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ந்தை போட‌ முத‌ல் ப‌ந்தை துடைச்சு போட்டு போட்டால் க‌ள‌ த‌டுப்பில் இருக்கும் வீர‌ர்க‌ளுக்கு ப‌ந்தை கைச் பிடிக்க‌ ஈசியா இருக்கும் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-5162.jpg

இந்திய கிரிக்கட் வீரர்கள் இந்தியா முழுவதும் இருந்து வந்து விளையாடுகிறார்கள்.

ஆனால் இலங்கையில் தலைநகரை அண்டிய பகுதிகளில் இருந்தே அணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெதர்லாந்தை வீழ்த்தியும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு தீராத நெருக்கடி - என்ன தெரியுமா?

இங்கிலாந்து நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 நவம்பர் 2023

இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. அதனை சேஸிங் செய்த நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த நடப்புச்சாம்பியனான இங்கிலாந்து அணிக்கும் கடைசிக்கு முந்தைய இடமான 9வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு ஆரம்பித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பார்ட்னர்ஷிப் இல்லாமல் தடுமாறிய இங்கிலாந்து

தொடக்க பேட்ஸ்மேன்களான ஜானி பேர்ஸ்டோவும் டேவிட் மலானும் தொடக்கத்திலேயே வேகமாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 48 என்று இருக்கும்போது நெதர்லாந்து பந்து வீச்சாளர் ஆர்யன் தத் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மாலன் 36 பந்துகளில் அரை சதமடித்தார். பேட்டிங் பவர்ப்ளேவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் சேர்த்தது.

மாலன் - ரூட் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் சீரான வேகத்தில் இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்து வந்த நிலையில் ரிவர்ஸ் ஹிட் அடிக்க முயற்சித்து வான் பீக்கின் பந்தில் ரூட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பார்ட்னர்ஷிப் இல்லாமல் தடுமாறிய இங்கிலாந்து

ஒருநாள் போட்டிகளில் தனது ஏழாவது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மலானும் 87 ரன்களில் ஆர்யன் தத்தின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியில் மாற்றமாக உள்ளே வந்த ஹேரி ப்ரூக் 11 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணிக்கு ஒரு வலுவான பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. களத்தில் பென் ஸ்டோக்ஸும் கேப்டன் ஜாஸ் பட்லரும் ஜோடி சேர ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமானது.

ஆனால், இங்கிலாந்து கேப்டன் பட்லர் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியை 33 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் என்ற இக்கட்டான சூழலுக்கு நெதர்லாந்து அணி கொண்டுவந்தது. ஆர்யன் தத்தின் மூன்றாவது விக்கெட்டாக அடுத்து வந்த மொயின் அலியும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பையில் முதல் சதத்தை அடித்த பென் ஸ்டோக்ஸ்

மறுபுறம் நிதானமாக ஆடி வந்த பென் ஸ்டோக்ஸ் 58 பந்துகளில் தனது 24வது ஒருநாள் அரை சதத்தை அடித்தார். 42.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 7 ஓவர்களின் முக்கியத்துவத்தை அறிந்து ஸ்டேக்ஸும் வோக்ஸும் அதிரடி காட்ட ஆரம்பித்தனர். ஆர்யன் தத் வீசிய 45வது ஓவரில் 3 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் ஸ்டோக்ஸ் விளாசினார்.

47வது ஓவரில் இங்கிலாந்து அணி 300 ரன்களை எட்டியது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 78 பந்துகளில் தனது சதத்தை அடித்தார் ஸ்டோக்ஸ். அரை சதம் அடித்த வோக்ஸ் டி லீடின் பந்தில் 51 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த டேவிட் வில்லி முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். கடைசி வரை இருந்து இங்கிலாந்தின் முதல் இன்னிங்க்ஸை முடித்துக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் போது 108 ரன்களுக்கு அவுட்டானார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது.

இங்கிலாந்து நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உலகக்கோப்பையில் முதல் சதத்தை அடித்த பென் ஸ்டோக்ஸ்

ஆரம்பம் முதலே தடுமாறிய நெதர்லாந்து அணி

340 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஆரம்பம் முதலே நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க சிரமப்பட்டனர். முதல் 10 ஓவர்களில் நெதர்லாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது

3வது விக்கெட்டிற்கு நெதர்லாந்தின் வெஸ்லி பேரெஸ்ஸியும் எங்கெல்பிரக்டும் 54 ரன்கள் சேர்த்தனர். 99 ரன்களுக்கு நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் நிதமனாரு நெதர்லாந்து அணிக்கு நம்பிக்கையை அளித்தாலும் அந்த நம்பிக்கை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கடைசி 5 விக்கெட்டுகளை நெதர்லாந்து அணி அடுத்தடுத்து இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பாக ஸ்பின்னர்கள் மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளும் க்றிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாம்பியன்ஸ் டிராபி தகுதி - இங்கிலாந்தை விடாமல் துரத்தும் நெருக்கடி

2025ல் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தகுதிப்போட்டியாக இந்தப் போட்டி பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை முடியும்போது புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் தான் சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெறும்.

நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்று இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது.

8, 9 மற்றும் 10-வது இடங்களில் முறையே வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் இருக்கின்றன. அனைத்துப் போட்டிகளும் முடிந்த பிறகே இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க தகுதி பெறுமா என்பது தெளிவாகும். அதுவரையிலும் இந்த நெருக்கடி தொடரும்.

https://www.bbc.com/tamil/articles/ceqp9d898xwo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மத்தியுஸ் ஆட்டமிழப்பு விவகாரம் - வக்கார் யூனிசிற்கு எதிராக பங்களாதேஸ் நீதிமன்றம் தீர்ப்பு

Published By: RAJEEBAN     09 NOV, 2023 | 06:20 AM

image

பங்களாதேசிற்கு எதிரான போட்டியில் அஞ்சலோ மத்தியுஸ் ஆட்டமிழப்பு தொடர்பில் விமர்சனம் செய்தமை குறித்து பங்களாதேஸ் நீதிமன்றம் பாக்கிஸ்தானின் முன்னாள் வீரர் வக்கார் யூனிசிற்க்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது.

உலககிண்ண தொடரின் வர்ணணையாளர்கள் குழுவிலிருந்து வாக்கார் யூனிசை விலக்கவேண்டும் என பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஐசிசியிடம் ஏன் முறைப்பாடு செய்யக்கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தனது இந்த தீர்ப்பு தொடர்பில் பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை 10 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்தியுசின் ஆட்டமிழப்பின்போர் வக்கார் யூனிஸ் பங்களாதேஸ் அணித்தலைவர் சகிப் அல் ஹசன் செயற்பட்ட விதத்தினை கடுமையாக விமர்சித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/168862

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து இந்தியாவுடன் மோதப் போகிறதா?

கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

26 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையிடம் 2007, 2011 என இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. தற்போது அதே அணியை லீக் சுற்றில் வீழ்த்திய கையோடு, நடப்புத் தொடரில் அரையிறுதி வாய்ப்பையும் ஏறத்தாழ நியூசிலாந்து அணி உறுதி செய்துள்ளது.

இலங்கைக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டத்தில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது நியூசிலாந்து அணி. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக குசால் பெரேரா 51 ரன்கள் சேர்த்திருந்தார். தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி, 23வது ஓவரிலேயே வெற்றியை வசப்படுத்தியது.

ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்ற நிலையில் 10 ஓவர்கள் வீசி 37 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய டிரெண்ட் போல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

நடப்புத் தொடர் இலங்கைக்கு மிகவும் மோசமான தொடராக அமைந்திருக்கிறது. இரண்டு வெற்றி 7 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் பின்தங்கி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது இலங்கை.

மறுபுறம், நியூசிலாந்தின் இந்த வெற்றி, அரையிறுதிக்குள் நுழையும் முனைப்பில் உள்ள பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் நெருக்கடியை அளித்திருக்கிறது.

பாகிஸ்தானை தலைசுற்ற வைக்கும் இலக்கு

கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி இலங்கையுடனான வெற்றியைத் தொடர்ந்து 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று மொத்தம் 10 புள்ளிகளுடன் 4வது இடத்தை வகிக்கிறது. நியூசிலாந்தின் நிகர ரன்ரேட்டும் 0.398இல் இருந்து 0.743 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரேயொரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. சனிக்கிழமை இங்கிலாந்தை எதிர்த்து அந்த அணி விளையாடுகிறது. ஆனால், அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தானுக்கு வெற்றி மட்டுமே போதாது. ஏனெனில், அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.036 மட்டுமே.

ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, இங்கிலாந்தை 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் நிகர ரன்ரேட்டில் பெரிய மாறுதலை ஏற்படுத்தி அரையிறுதிக்குள் நுழைய முடியும். ஆனால் இது நடப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ தரவுகளின்படி, இங்கிலாந்தை 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் நிகர ரன்ரேட்டில் பெரிய மாறுதலை ஏற்படுத்தி அரையிறுதிக்குள் நுழைய முடியும்.

ஒருவேளை இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் சேர்த்தால், பாகிஸ்தான் இலக்கை வெறும் 3.4 ஓவர்களில் எட்ட வேண்டும்.

அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பழிதீர்க்குமா?

கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் 4வது இடத்தில் உள்ள அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15ஆம் தேதி முதல் அரையிறுதியில் களமிறங்கும். அதன்படி இந்தியா, தற்போது 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்த்துக் களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

கடந்த 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தியதை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள்.

தொடர்ந்து 2015, 2019 என இருமுறை இறுதிப்போட்டி வரை சென்று உலகக்கோப்பையை நழுவவிட்டிருக்கிறது நியூசிலாந்து அணி. முன்னதாக நடப்புத் தொடரில் இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நடப்புத் தொடரில் தோல்வியையே சந்தித்திராத இந்திய அணி, 2019 அரையிறுதி தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

பொருத்திருந்து பார்க்கலாம்.

அதிரடி காட்டிய நியூசிலாந்து பவுலர்கள்

கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குசல் பேரேரா மற்றும் பதும் நிசங்க ஜோடி களமிறங்கியது. டிம் சௌதி வீசிய இரண்டாவது ஓவரில் பதும் நிசங்க தனது விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

நிசங்கவை தொடர்ந்து இலங்கை பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முக்கியமாக ட்ரென்ட் போல்ட் வீசிய பந்துகளைச் சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறினர்.

நிசங்கவிற்கு அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ், போல்டின் பந்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சமரவிக்ரமாவும் போல்ட் வீசிய பந்தில் டேரில் மிட்சலிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் அவுட்டானார்.

 
இலங்கை நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நியூசிலாந்து பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை பேட்ஸ்மேன்கள்

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். டிம் சௌதியின் மூன்றாவது ஓவரில் குசல் பேரேரா 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார்.

அவர் தனது அரைசதத்தை வெறும் 22 பந்துகளில் பூர்த்தி செய்தார். முதல் பத்து ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

பேட்டிங்கில் குசல் பெரேரா அதிரடி காட்ட பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் அதிரடி காட்டினார். சமரவிக்ரமவுக்கு அடுத்து வந்த அசலங்காவையும் போல்ட் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.

இலங்கைக்கு நம்பிக்கை அளித்து வந்த குசல் பெரேரா லாக்கி ஃபெர்க்யூசன் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 28 பந்துகளில் 51 ரன்கள் அடித்திருந்தார்.

ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஒரு கூட்டணியை கட்டமைக்க முயன்றனர். அவர்கள் இருவரையும் முறையே 16 மற்றும் 19 ரன்களுக்கு மிட்சல் சாண்ட்னர் ஆட்டமிழக்க வைத்தார்.

 
இலங்கை நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

3 விக்கெட்டுகள் வீழ்த்திய ட்ரெண்ட் போல்ட்

உலக சாதனை படைத்த இலங்கை அணி

இலங்கை அணி 38 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த சில ஓவர்களில் இலங்கை அணி ஆல்-அவுட்டாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசியில் 10வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பந்துவீச்சாளர்கள் தீக்‌ஷனா மற்றும் மதுஷங்கா இணை பொறுப்போடு ஆடி அணியின் ஸ்கோர் உயர பங்காற்றினர்.

பத்தாவது விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து 43 ரன்கள் அடித்தனர். இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் 10வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் ஆகும்.

நியூசிலாந்து சார்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், ஃபெர்க்யூசன் மற்றும் சாண்ட்னர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா 2 விக்கெட்டுகளும் டிம் சௌதி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 
இலங்கை நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நியூசிலாந்தை எரிச்சலூட்டிய தீக்‌ஷனா, மதுஷங்கா ஜோடி

இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த நியூசிலாந்து

நியூசிலாந்து அணி, 172 என்ற எளிய இலக்குடன் களமிறங்கி, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கான்வே மற்றும் ரவீந்திரா இணை இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விளாசினர்.

முதல் பத்து ஓவர்களில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் அடித்திருந்தது. இந்த உலகக்கோப்பையில் நல்ல ஃபார்மில் இருக்கும் ரச்சின் ரவீந்திரா இந்தப் போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தை விடவில்லை.

அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 34 பந்துகளில் 42 ரன்கள் அடித்திருந்த ரவீந்திரா, தீக்‌ஷனாவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

விக்கெட்டே இழக்காமல் நியூசிலாந்து வெற்றி பெற்றுவிடுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் துஷ்மந்தா சமீரா வீசிய 13வது ஓவரில் 42 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்த கான்வே தனது விக்கெட்டை இழந்தார்.

 
இலங்கை நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரச்சின் சாதனையை முறியடித்த ரச்சின்

அடுத்த வந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 14 ரன்களுக்கு மேத்யூஸ் வீசிய பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மார்க் சேப்மேன் 7 ரன்களில் ரன் அவுட்டானார். மறுபுறம் டேரில் மிட்சல் அதிரடியாக விளையாடினார். 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேத்யூஸின் பந்தில் மிட்சல் அவுட்டானார்.

கடைசியில் 23.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளோடு 3வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு மேலும் அதிகமாகி உள்ளது.

இப்போட்டியில் இலங்கை சார்பாக மேத்யூஸ் 2 விக்கெட்டுகளும் தீக்‌ஷனா மற்றும் சமீரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும், இந்தப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

அறிமுக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரவீந்திரா படைத்துள்ளார். அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை 550 ரன்களுக்கு அதிகமாக அடித்துள்ளார்.

மேலும் 25 வயதிற்குள் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையையும் 23 வயதான ரவீந்திரா முறியடித்துள்ளார்.

சேம்பியன்ஸ் ட்ராஃபிக்கு தகுதி பெறாத முன்னாள் சேம்பியன்

நடப்பு உலகக்கோப்பை முடியும்போது புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள்தான் சேம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் தனது கடைசி போட்டியான இதில் தோல்வியுற்ற இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலேயே உள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு இந்தியாவோடு இணைந்து சேம்பியன்ஸ் ட்ராஃபி தொடரை இலங்கை கைப்பற்றியது. ஆனால், இந்த முறை இலங்கை அணி 2025ஆம் ஆண்டு நடக்கவுள்ள சேம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

https://www.bbc.com/tamil/articles/cxe1v5xmzj7o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுகளுக்கு நன்றி ஏராளன் .......!   👍

  • Like 1
Posted

இந்தியாவை வீழ்த்தக் கூடிய இரு அணிகள் அவுசும், நியூசும் தான்.  பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

இந்தியாவை வீழ்த்தக் கூடிய இரு அணிகள் அவுசும், நியூசும் தான்.  பார்க்கலாம்.

உங்களுக்கு தென்னாபிரிக்காவோடு எப்பவும் பகிடி.

இருந்து பாருங்கோ விளையாட்டை.

  • Like 1
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு தென்னாபிரிக்காவோடு எப்பவும் பகிடி.

இருந்து பாருங்கோ விளையாட்டை.

நியூசுக்கு அல்லது தென் ஆபிரிக்காவுக்கு  கிண்ணம் கிடைத்தால் சந்தோசம். 
இந்தியாவை மிரட்டிய அணிகள் தான் மேலே நான் சொன்னவை. 

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.