Jump to content

கார் ஏற்றுமதியில் ஜப்பானை விஞ்சி முதலிடம் பெற்றது சீனா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: SETHU

19 MAY, 2023 | 03:42 PM
image

கார் ஏற்றுமதியில் ஜப்பானை தான் விஞ்சி, உலகின் மிகப் பெரிய கார் ஏற்றுமதியாளராக தான் விளங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

இவ்வருட முதல் 3 மாதங்களில் ஜப்பானை விட அதிக கார்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது.

சீனாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இவ்வருட முதல் 3 மாதங்களில் 1.07 மில்லியன் கார்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 58 சதவீத அதிகரிப்பாகும்.

அதேவேளை, இவ்வருட முதல் காலாண்டில் ஜப்பான் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 954,185 ஆக உள்ளது. இது கடந்த வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 6 சதவீத அதிகரிப்பாகும். 

இலத்திரனியல் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்தமை மறறும் ரஷ்யாவுக்கான விற்பனைகள் அதிகரித்தமை ஆகியன சீனாவின் கார் ஏற்றுமதி அதிகரிப்புக்கான காரணங்களாகும்.

கடந்த வருடம் ஜேர்மனியை விஞ்சி, உலகின் இரண்டாவது மிகப் பெரிய கார் ஏற்றுமதியாளர் என்ற இடத்தை சீனா பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய வகை எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கான கேள்வி சீன கார் ஏற்றுமதிக்கு உதவியுள்ளது. சீனாவின் புதிய எரிசக்தி வானங்களின் ஏற்றுமதி 90 இற்கும் அதிகமான சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

டெஸ்லாவின் (Tesla ) சீனக் கிளை, ஆழு பிராண்ட் உரிமையாளரான (SAIC)   மற்றும் BYD  ஆகியனவும் சீனாவின் புதிய எரிசக்தி வாகன ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளன.

https://www.virakesari.lk/article/155694

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

கார் ஏற்றுமதியில் ஜப்பானை தான் விஞ்சி, உலகின் மிகப் பெரிய கார் ஏற்றுமதியாளராக தான் விளங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

நானும் எங்களது ஆட்கள் வாங்காத அது என்ன சீனா கார் ஜப்பானையும் முந்தியது என்று பார்த்தால் Tesla இலொன் மஸ்கின் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம்.

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேசன், அலிபாபாவில் ஓடர் பண்ணலாமே? 🤔

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஏராளன் said:

கடந்த வருடம் ஜேர்மனியை விஞ்சி, உலகின் இரண்டாவது மிகப் பெரிய கார் ஏற்றுமதியாளர் என்ற இடத்தை சீனா பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவோ அமெரிக்காவோ சப்பானோ எவ்வளவுதான் குத்தி முறிஞ்சாலும்  ஜேர்மன் கார் எண்டால் ஒரு கிக்....ஒரு மதிப்பு இருக்கும். 😎
மற்றதெல்லாம் தேவையில்லாத ஆணி :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

சீனாவோ அமெரிக்காவோ சப்பானோ எவ்வளவுதான் குத்தி முறிஞ்சாலும்  ஜேர்மன் கார் எண்டால் ஒரு கிக்....ஒரு மதிப்பு இருக்கும். 😎
மற்றதெல்லாம் தேவையில்லாத ஆணி :cool:

ஜேர்மன் இலத்திரனியல் கார்கள் நல்லமில்ல. சென்சர் எல்லாம் விரைவில் கெட்டுப்போகுது. பி எம் டபிள்யு ஆக்கள் எல்லாம்.. இப்ப ஜப்பான் காருக்கு தாவினம். 

  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.