Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

அண்மைக் காலமாக போதைப்பொருள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வருகின்றது. போதைப் பொருட்களுடன் யாராவது பிடிபட்டால் அல்லது அதன் பாவனையால் பாதிக்கப்பட்டால் மட்டுமே செய்தி ஊடகங்களில் வரும் என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர் யாழ் சென்றிருந்தபோது காணக் கூடியதாக இருந்தது. மற்றும்படி யாழ் ஊடகங்கள் பெரிதாக இது பற்றி எழுதுவதாகத் தெரியவில்லை. ஊடகங்களில் வரும் செய்தியை வாசித்துவிட்டு இது சிங்கள அரசாங்கத்தினதும் இராணுவத்தினரினதும் திட்டமிட்ட தமிழ் சமுதாய அழிப்பு என்று கூறிவிட்டுக் கடந்து போனோம். இக் கருத்தில் முற்றுமுழுதான உண்மை இல்லை. போதைப் பாவனை தமிழர் பகுதியெங்கும் பரவிக் கொண்டே செல்கிறது.

பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் பாவனையைப் பழக்குவது, விற்பனை செய்வது யார் போன்ற தகவல்கள் பலருக்கும் தெரியும். பல ஊர்களில் இதற்குப் பொறுப்பாளர்கள் அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள் என கட்டமைப்புகளும் உண்டு. 

ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது விதத்தில் ஒரு இளைஞர் குழு மறைமுகமாக இயங்கும். அல்லது மிகப் பெரிய குழு ஒன்றின் கிளை இருக்கும். இளைஞர்களுக்கு வேண்டியது ஒரு ‘கெத்து’. ஏதாவது ஒரு விததில் தன் திறமையை வெளிப்படுத்த முடியாத சில இளைஞர்களுக்கு அது இக் குழுக்களில் இணைவதால் கிடைக்கிறது.

இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நேரடியாகக் கைநீட்டுவது ஆதாரமில்லாத விதத்தில் அவதூறு செய்வதாக ஆகலாம் என்பதால் இதற்குமேல் வெளிப்படையாக இது பற்றி விவாதிக்க முடியாது. 

இதை எழுதுவதன் நோக்கம் குற்றவாளிகளைத் தேடித் தண்டிக்க வேண்டும் என்பதல்ல. அது முடியாத காரியம். ஆகவே இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்று விவாதிக்கவே.

சிவில் அமைப்புகள் அல்லது பொதுநல நிறுவனங்கள் மூலமாக இப் பிரச்சனையை அணுகலாம். அவர்கள் மூலமாக விளிப்புணர்வை ஏற்படுத்த முடியும். ஆனால் இவற்றைச் செய்ய முன்வரக்கூடிய பலமான அமைப்புகள் உள்ளனவா தெரியவில்லை. இது பற்றித் தேடியபோது அருண் சித்தார்த்தின் சிவில் அமைப்புத்தான் கூகிளில் முன்னே வருகிறது.

நான் நினைக்கிறேன், பொழுதுபோக்கு, கலை, விளையாட்டு போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களின் கவனத்தைத் திருப்பலாம் என்று.

உங்கள் கருத்து என்ன ?

 

(திரியை நாற்சந்தியில் ஆரம்பிக்கிறேன். வேறு பகுதிக்கு மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும்)

  • Like 9
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில மாதங்களுக்கு முன் கோண்டாவிலில் ஒரு அம்மா, காவல் நிலையத்துக்கு 
மகனுடன் சென்று  தனது பிள்ளை  போதை பொருளுக்கு அடிமையாகி விட்டான் 
அவனை திருத்தி தரும்படி மன்றாட்டமாக கேட்ட செய்தியை வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

அந்த அளவிற்கு ஒரு பகுதி மாணவர்கள், இந்த பாவனையால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.

போதைப்  பொருட்களை, பெரிய அளவில்  பிடிக்கும் காவல்துறை,
அதனை மீள் சுழற்சியாக, மீண்டும் பாவனைக்கு வருவதாக..
ஒரு அமைச்சரே, பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

முதலில்... பெற்றோர் தமது பிள்ளைகளை குறிப்பிட்ட வயது வரை தொடர் கண்காணிப்பிலும்,
போதையால் வரும் விபரீதங்களையும் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
பெற்றோர் செய்யாததை வேறு எவரும், பெரிதாக செய்து விட முடியாது.

ஆசிரியர்கள் எப்போ பிரம்பை கீழே போட்டார்களோ...
அப்போதே... மாணவ சமுதாயம் மெல்ல மெல்ல கெட்டுப் போக ஆரம்பித்து விட்டது.
ஆசிரியரின் பிரம்பை கீழே போட வைத்த... இந்தச்  சமுதாயமும் ஒரு காரணம்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் பலத்துடனேயே போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுகின்றது. இந்த அரசியல் பலம் இருக்கும் வரைக்கும் போதைப்பொருள் பாவிப்பவருக்கும் ஒருவித பாதுகாப்பு வழங்கப்படுவதாகவே கருதுகின்றேன்.

போதைப்பொருள் பாவனையை முற்று முழுதாக ஒழிக்க முடியாது.அதை ஒழிக்க போதைப்பொருள் வியாபாரிகள்  எவ்விதத்திலும் அதை முறியடிக்கவே முயற்சிப்பார்கள். சட்டங்கள் வலுவான அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கூட போதைப்பொருள் பாவனையை அகற்ற முடியாமல் திண்டாடுகின்றார்கள்.மேற்குலக நாடுகளிலும் பல விழிப்புணர்வு நிறுவனங்கள் உள்ளன. இருந்தும்?????

மனிதம் மீண்டும் ஆன்மீகத்திற்கு திரும்ப வேண்டும்.நற்சிந்தனைகளை  கடைப்பிடிக்க வேண்டும்.:cool:

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புகைப்பிடித்தல், மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று கூறினால் யார் கேட்கின்றார்கள். அது மாதிரியே போதைப்பொருள் பழக்கமும் வந்துவிட்டது போலும். 

இதை இல்லாது ஒழிப்பது எப்படி என சிந்திக்காமல் இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது (Manage செய்வது), இதனுடன் சேர்ந்து வாழ்வது எப்படி என சிந்தித்து செயற்படுவது உபயோகமானது. 

தியானம், யோகா வழிமுறைகள் சிறிதளவு உதவக்கூடும். ஆனால், வெறும் ஆன்மிகத்தை மட்டும் வைத்துக்கொண்டு பெரிதாக ஏதும் செய்ய முடியாது. 

இசை (குழுக்கள், நிகழ்வுகள்), நடனம் (குழுக்கள், நிகழ்வுகள், போட்டிகள்), விளையாட்டுக்கள் (கழகங்கள், நிகழ்வுகள்/போட்டிகள்) சமூகத்தில் ஒரு சமநிலையை பேண உதவும். 

ஒரு சிலர் மாற்றங்களை உருவாக்க முடியாது. நாம் ஒரு சமூகமாக சேர்ந்து சிந்திக்க வேண்டும், செயற்பட வேண்டும். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

காந்தியூரில் நல்ல நண்பர்கள் பலர் உள்ளார்கள், இது கவலையான விடயம், எமது சிறுவர்களை மீட்டு எடுக்க வேண்டும்

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/5/2023 at 02:28, இணையவன் said:

ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது விதத்தில் ஒரு இளைஞர் குழு மறைமுகமாக இயங்கும். அல்லது மிகப் பெரிய குழு ஒன்றின் கிளை இருக்கும். இளைஞர்களுக்கு வேண்டியது ஒரு ‘கெத்து’. ஏதாவது ஒரு விததில் தன் திறமையை வெளிப்படுத்த முடியாத சில இளைஞர்களுக்கு அது இக் குழுக்களில் இணைவதால் கிடைக்கிறது

கெத்து மட்டுமல்ல காரணம் இணையவன் அண்ணா, எங்களது சமூகத்தில் இருக்கும் சில சமூக பழக்கவழக்கங்களும் ஏற்றத் தாழ்வுகளும் இதற்கு அடிப்படையாக உள்ளது. இலகுவில் பணம் சம்பாதித்து முன்னேற இந்த போதைப்பொருள் விற்பனை உதவுகிறது. சில இடங்களில்/கிராமங்களில் பார்ப்பீர்களோயானால் இதனை விற்பவர்கள் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். எங்களால் எங்களது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள சில விடயங்களை மாற்றுவது கடினம் ஆகையால் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது எப்படி என்று பார்க்கவேண்டும். 

- பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே சரியான புரிந்துணர்வும் நம்பிக்கையையும் இருக்க வேண்டும். பிள்ளை பெற்றோர் தண்டிப்பார்கள் எனத் தெரிந்து மறைத்தால் அது வேறு விதமாகப் போய்விடும்.ஆகையால் பெற்றோர் பிள்ளைகளுடன் சரியான தொடர்பாடல் நம்பிக்கை இருக்க வேண்டும். 

- பிள்ளைகளின் நண்பர்கள், ஆசிரியர்கள் யார் எனத் தெரிந்திருக்க வேண்டும்

 

On 22/5/2023 at 08:09, நியாயத்தை கதைப்போம் said:

ஒரு சிலர் மாற்றங்களை உருவாக்க முடியாது. நாம் ஒரு சமூகமாக சேர்ந்து சிந்திக்க வேண்டும், செயற்பட வேண்டும். 

 

உண்மைதான். 

பழைய மாணவ சங்கங்கள் அல்லது கிராமங்கள்/நகர்புறங்களில் உள்ள சமூக நிலையங்கள் சேர்ந்து 

- மாணவர்கள், இளையோரிடையே இது சம்பந்தமான விழிப்புணர்வு கட்டாயம் நடத்துதல்.

- கட்டட்டங்களுக்கு கொடுக்கும் பணத்தை மாணவர்களின் உடல் மனவள ஆரோக்கியம் சம்பந்தமான விடயங்களில் முதலீடு செய்தல்

மேலும்

- போதைவஸ்து பாவனையில் இருந்து மீண்டவர்களின் மீதான சமூகத்தின் பார்வையும் இதில் மாறவேண்டும். அவர்களை ஒதுக்கினால் மீண்டும் அந்தவழிக்கு அல்லது உயிரை விட முயற்சிக்கலாம். 

On 22/5/2023 at 02:28, இணையவன் said:

சிவில் அமைப்புகள் அல்லது பொதுநல நிறுவனங்கள் மூலமாக இப் பிரச்சனையை அணுகலாம். அவர்கள் மூலமாக விளிப்புணர்வை ஏற்படுத்த முடியும். ஆனால் இவற்றைச் செய்ய முன்வரக்கூடிய பலமான அமைப்புகள் உள்ளனவா தெரியவில்லை

முதலில் பாடசாலை அல்லது பல்கலைகழக  நண்பர்கள் குழுவாக சேர்ந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளரூடாக சேர்ந்து செய்தால் நல்லது என நினைக்கிறேன். கொஞ்ச காலத்திற்கு முன்பு கூட இது சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது. 

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெற்றோர்களே  முதலில் இதற்கு  பொறுப்பாளிகள்

இந்த  இரு பகுதிக்கும் (பெற்றோர் + பிள்ளைகள்) இடைவெளி  அதிகரித்த  விட்டதாக  தெரிகிறது?

எமது  ஊரில் 80 வீதமான வருமானம் அல்லது  சம்பளம் சாராயக்கடைக்கு  மொத்த விற்பனையாக இருப்பதாக ஒரு  தகவலை சாராயக்கடைக்காறரே  சொல்லி  உள்ளார்.

அப்படியானால் தப்பு  எங்கே???

எனவே  முதலில் பெற்றோர்  திருந்தணும்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/5/2023 at 02:28, இணையவன் said:

 

சிவில் அமைப்புகள் அல்லது பொதுநல நிறுவனங்கள் மூலமாக இப் பிரச்சனையை அணுகலாம். அவர்கள் மூலமாக விளிப்புணர்வை ஏற்படுத்த முடியும். ஆனால் இவற்றைச் செய்ய முன்வரக்கூடிய பலமான அமைப்புகள் உள்ளனவா தெரியவில்லை.

வணக்கம் இணையவன் அண்ணா, 

நான் யாழ் பல்கலைகழக முன்னாள் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சிதம்பரநாதனின் பேட்டியை இங்கே பதிவிடுகிறேன். 

அவர் இந்தப் பிரச்சனையை எப்படி அனுகலாம் என்பதிலும் அதற்காகவும் செயற்பட சமூக ஆர்வலர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறார். 

அவரது பண்பாட்டு மையம் இது தொடர்பான சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியும் என நம்புகிறேன். 

நன்றி. 

 

  • Like 3
Posted

அனைவரது கருத்துகளுக்கும் நன்றி.

 

9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் யாழ் பல்கலைகழக முன்னாள் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சிதம்பரநாதனின் பேட்டியை இங்கே பதிவிடுகிறேன். 

 

இணைப்பிற்கு நன்றி பிரபா.

நான் மேலே மறைமுகமாக எழுதியவற்றைக் கலநிதி சிதம்பரநாதன் அவர்கள் துணிச்சலாக நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். மிகவும் நம்பிக்கையுடனான பேச்சு. போதைப்பொருள் பாவனை ஒரு சமுதாயத்தில் எல்லாவிதமான சீரளிவுகளையும் கொண்டுவரும். இது மிகவும் திட்டமிட்டு எம்மவர்களுடன் சேர்ந்து செயல்படுத்தப்படும் திட்டமாகையால் நேரடியாக முறியடிப்பது கடினம். 

 

திரியைச் சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமூகத்திலிருந்து போதை வஸ்து நீக்கம் மும்முனை யுத்தம்:

1. போதை நீக்கம் (detox): இதனை மருந்துகள் மூலம் வெற்றிகரமாகச் செய்ய முடியும். ஹெரோயின், கிறிஸ்ரல் மெத் ஆகியவற்றிற்கெதிரான போதை நீக்க மருந்துகள் இருக்கின்றன. போதை நீக்க சிகிச்சை நிலையங்களில் வைத்து இதை வழங்க வேண்டியிருக்கும்.

எத்தனை போதை நீக்க நிலையங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றன என யாருக்காவது தெரியுமா?

2. பழக்க வழக்க மாற்றம் (Cognitive Behavioral Therapy- CBT): போதை நீக்க மருந்துகளோடு, மனத்தை வேறு வழிகளுக்குத் திருப்பும் வகையிலான உடலுழைப்பு எங்கள் ஆட்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

திருவையாற்றில் இப்போதும் தும்புத் தொழிற்சாலை இருக்கிறதா😎?

3. சட்ட அமலாக்கல் (enforcement): இது எங்கள் கைகளில் இல்லை. ஆனால், இருக்கும் மாகாண பொலிஸ் அதிகாரிகளுள் ஒரு நேர்மையான அதிகாரியைக் கண்டு பிடித்து, மாலை சூட்டி, பொன்னாடை போர்த்தி (பப்பாவில் ஏற்றி😂) இணைத்துக் கொண்டால் கூட ஒரு சிறிய முன்னேற்றத்தை உருவாக்கலாம்.

இந்த விடயங்களை செயல்படுத்தும் மனித, ஆற்றல் வளம் யாழ் மருத்துவ பீடத்தில் இருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக, இதற்குப் பொறுப்பாக இருக்கும் சமுதாய மருத்துவ பீடத்தின் செயல் திட்டங்களில் போதை மருந்துப் பாவனை பற்றி ஒரு தகவலையும் காண முடியவில்லை. இணையப் பக்கத்தில் போடாமல் செயல்திட்டங்கள் செய்கிறார்களா எனத் தெரியவில்லை.

  • Like 1
Posted
23 minutes ago, Justin said:

போதை நீக்கம் (detox): இதனை மருந்துகள் மூலம் வெற்றிகரமாகச் செய்ய முடியும். ஹெரோயின், கிறிஸ்ரல் மெத் ஆகியவற்றிற்கெதிரான போதை நீக்க மருந்துகள் இருக்கின்றன. போதை நீக்க சிகிச்சை நிலையங்களில் வைத்து இதை வழங்க வேண்டியிருக்கும்.

எத்தனை போதை நீக்க நிலையங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றன என 

கபிதான் பூநகரியில் இருப்பதாக வேறொரு திரியில் எழுதிய நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்குத் தெரிந்த மூன்று குடும்பங்களில் மூன்று இள வயதினர் போதைப்பொருள் நுகர்வுடன் தொடர்புபட்டிருந்தனர். 

அக்குடும்பங்களில் அவதானித்த பொதுவான 3 விடயங்கள்,

1) தாராளமான பணப் புளக்கம் - வெளிநாட்டுக்காசு

2) போதைப்பொருளை உள்ளெடுக்கின்றனர் எனத் தெரிந்தும் அவர்களது பிரச்சனையை வெளி உலகுக்குத் தெரியாது  பாதுகாக்க முற்படும் தாய்மார். 

3) வெளியே தெரிந்தால் கெளரவக் குறைச்சல் எனத் தாய்மார்  நம்புவது. 

3 hours ago, nunavilan said:

கபிதான் பூநகரியில் இருப்பதாக வேறொரு திரியில் எழுதிய நினைவு.

Fr. Vincent Patrick OMI தலைமையிலான புனர்வாழ்வு நிலையம். 

இங்கே எனக்குப் பரிச்சயமான சிலர்  புனர்வாழ்வு பெற்று, தற்போது நல்ல நிலையில் வாழ்கிறார்கள். 

6 minutes ago, Kapithan said:

எனக்குத் தெரிந்த மூன்று குடும்பங்களில் மூன்று இள வயதினர் போதைப்பொருள் நுகர்வுடன் தொடர்புபட்டிருந்தனர். 

அக்குடும்பங்களில் அவதானித்த பொதுவான 3 விடயங்கள்,

1) தாராளமான பணப் புளக்கம் - வெளிநாட்டுக்காசு

2) போதைப்பொருளை உள்ளெடுக்கின்றனர் எனத் தெரிந்தும் அவர்களது பிரச்சனையை வெளி உலகுக்குத் தெரியாது  பாதுகாக்க முற்படும் தாய்மார். 

3) வெளியே தெரிந்தால் கெளரவக் குறைச்சல் எனத் தாய்மார்  நம்புவது. 

Fr. Vincent Patrick OMI தலைமையிலான புனர்வாழ்வு நிலையம். 

இங்கே எனக்குப் பரிச்சயமான சிலர்  புனர்வாழ்வு பெற்று, தற்போது நல்ல நிலையில் வாழ்கிறார்கள். 

 

  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

    நன்றிகள்    Kapithan.

நா புரப்புளம்..😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kapithan said:

நா புரப்புளம்..😁

நன்றி கபிதான்! இது அல்கஹோலுக்கு மட்டுமா அல்லது ஹெரோயின் போதைக்கும் செய்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

நன்றி கபிதான்! இது அல்கஹோலுக்கு மட்டுமா அல்லது ஹெரோயின் போதைக்கும் செய்கிறார்களா?

ஆம் (நானறிந்த வகையில் ). தேவையெனின்,அறிந்து சொல்ல முடியும். 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

On 23/5/2023 at 23:24, விசுகு said:

பெற்றோர்களே  முதலில் இதற்கு  பொறுப்பாளிகள்

இந்த  இரு பகுதிக்கும் (பெற்றோர் + பிள்ளைகள்) இடைவெளி  அதிகரித்த  விட்டதாக  தெரிகிறது?

எமது  ஊரில் 80 வீதமான வருமானம் அல்லது  சம்பளம் சாராயக்கடைக்கு  மொத்த விற்பனையாக இருப்பதாக ஒரு  தகவலை சாராயக்கடைக்காறரே  சொல்லி  உள்ளார்.

அப்படியானால் தப்பு  எங்கே???

எனவே  முதலில் பெற்றோர்  திருந்தணும்

 

நேற்று கிளிநொச்சியில் மிகவும் பின்தங்கிய கிராமப்பாடசாலை பதில் அதிபருடன் கதைத்த பொழுது, பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைகிறது எனவும் அதற்கு ஒரு காரணம் பெற்றோர் இருவரும் வேலைக்குப் போய்விட கவனிக்க/கண்கானிக்க ஒருவருமில்லாமல் பிள்ளைகள் தாங்கள் நினைத்ததை செய்கிறார்கள். பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை, கூடா நட்பு என கிட்டத்தட்ட 50% வீதமானவர்கள் படிப்பில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள் என கவலைப்பட்டார். 

மேலும் இது மிகவும் பின் தங்கிய கிராமம் என்பதுடன் வறுமை காரணமாக காலை உணவு கூட சாப்பிடாமல் வருகிறார்கள் எனவும் கூறினார்.

பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலைதான் அனேகமான பின்தங்கிய கிராமங்களில் உள்ளது. அவர்களும் வேறு வழியின்றிதான் போகவேண்டிய நிலை. அதனை இந்தப் பிள்ளைகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். 

இது போன்ற சந்தர்ப்பங்களில் பெற்றோரை மட்டும் முழுப் பொறுப்பாக எப்படி கூற முடியும் விசுகு அண்ணா? 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.