Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

தாய்லாந்தினால்  இலங்கைக்கு  இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானை சக்சுரின்  நோய்வாய்ப்பட்டுள்ளதாலும் மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாலும் அதனை மீள தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கு  தாய்லாந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

sasurin1.jpg

இலங்கையுடனான தொடர் சந்திப்புகளின் பின்னரும் மிருகவைத்தியர்கள்   இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை தொடர்ந்தும் சக்சுரினை எப்போது தாய்லாந்திற்கு மீள கொண்டுவருவது என தீர்மானித்துள்ளதாக தாய்லாந்தின் இயற்கை வளங்கள்மற்றும் சூழல்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சக்சுரின் தாய்லாந்திற்கு மீள வரக்கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக மிருகவைத்தியர்கள் குழுவொன்று இலங்கை சென்றது, என தெரிவித்துள்ள  அமைச்சர்  முழுமையான விபரங்களை திரட்டிய பின்னர் ஜூன் மாதம் யானையை  தாய்லாந்திற்கு  கொண்டுவரதீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் விலங்குகள் உரிமை பாதுகாப்பிற்காக குரல் கொடுக்கும் ரார் என்ற அரசசார்பற்ற அமைப்பொன்று சக்சுரின்  மிகமோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து தாய்லாந்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்தே  தாய்லாந்து அரசாங்கம் இந்தநடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆண்யானைக்கு உடனடியாக சிகிச்சைதேவைப்படுகின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் யானையை  தாய்லாந்திற்கு கொண்டுவரஎண்ணியிருந்தோம், எனினும் விலங்கின் நிலைமையை கருத்தில் கொள்ளும்போது கடல் வழியாக கொண்டுவருவதை விட வான்மார்க்கமாக கொண்டுவருவதே சிறந்தது என நிபுணர்கள்  தெரிவித்தனர் என தாய்லாந்தின் அமைச்சர் தெரிவித்துள்ளார்- கடல்வழியாக கொண்டுவருவது நீண்டகாலம் பிடிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சி 130 விமானத்தில் யானையை ஏற்றுவதற்கான பொருத்தமான கூடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தாய்லாந்து அமைச்சர் பொருத்தமான விமானத்திற்காக காத்திருக்கின்றோம்,விலங்கின் பாதுகாப்பிற்காக பொருத்தமான கூடு தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்..

இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று யானைகளில்ஒன்று சக்சுரின் 

தாய்லாந்தின்வெளிவிவகார அமைச்சு யானையின் நிலை குறித்து அறிந்ததும் தாய்லாந்தின் இயற்கை வளங்கள்மற்றும் சூழல்விவகாரஅமைச்சுடன்இது குறித்து ஆராய்ந்தது.

இதன் பின்னர் கொழும்பில் உள்ள தனது தூதரகத்தை  இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.

கடந்தவருடம் தாய்லாந்து தூதரகம்  ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு யானை நல்லநிலையில் இல்லை என்பதை அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது அது மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டது.

தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சக்சுரின்" யானை விவகாரம் : தாய்லாந்துக்கு திடீர் பயணமானார் பிரதமர் தினேஷ்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன புதன்கிழமை (31) காலை தாய்லாந்து நோக்கி புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் மேலும் 11 பேர் அடங்கிய குழுவினரும் தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளனர்.

இதேவேளை, அண்மையில் தாய்லாந்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட "சக்சுரின்" என்ற யானையை விசேட சரக்கு விமானம் மூலம் மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்தவருடம் தாய்லாந்து தூதரகம்  ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு யானை நல்லநிலையில் இல்லை என்பதையும், அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், அது மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொண்டது.

சி 130 விமானத்தில் யானையை ஏற்றுவதற்கான பொருத்தமான கூடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தாய்லாந்து அமைச்சர் பொருத்தமான விமானத்திற்காக காத்திருக்கின்றோம்,விலங்கின் பாதுகாப்பிற்காக பொருத்தமான கூடு தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தாய்லாந்துக்கான திடீர் விஜயம் அமைந்துள்ளதாக கருதப்படுகின்றது.

"சக்சுரின்" யானை விவகாரம் : தாய்லாந்துக்கு திடீர் பயணமானார் பிரதமர் தினேஷ் | Virakesari.lk

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இலங்கைக்கு வரும் முத்துராஜா

மீண்டும் இலங்கைக்கு வரும் முத்துராஜா

சிகிச்சைக்குப் பின்னர் தாய்லாந்தில் இருந்து முத்துராஜா யானை (சக்சுக்ரின்) மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், இதற்கான ஆவணங்களைத்  தாய்லாந்து அதிகாரிகளிடம்தான் சமர்ப்பித்துள்ளதாகவும்  பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகவீனமுற்ற முத்துராஜா யானை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தினால் இலங்கைக்குப் பரிசாக அளிக்கப்பட்ட முத்துராஜா திடீரென சுகையீனமுற்ற நிலையில், அதற்கு முறையான சிகிச்சையளிக்க இலங்கை அதிகாரிகள் தவறியமையினால்  முத்துராஜாவை ஏற்றிச் செல்வதற்காக தாய்லாந்து ஏர்லைன்ஸின் சிறப்பு சரக்கு விமானம் இம்மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1335634

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
1682358010-thailand-elephant-sri-lanka.j

தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானைக்கு நேர்ந்துள்ள நிலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் கவலை தெரிவிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அழகபெரும சபையில் வலியுறுத்தினார்.

தாய்லாந்து நாட்டுக்கு அரசமுறை பயணத்தின் போது இலங்கை அரசு என்ற ரீதியில் தாய்லாந்து அரசாங்கத்திடம் கவலை தெரிவித்துள்ளோம்.

யானை விவகாரத்தால் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

சபாநாயகர்  தலைமையில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது  மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது,

விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும  தாய்லாந்து நாட்டினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானையின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதையிட்டு நாடு என்ற ரீதியில் அனைவரும் கவலையடைய வேண்டும்.

இந்த யானை  அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கு அந்த யானை உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயா என்ற விலங்கின நலன்பேண் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் முறைப்பாடளித்துள்ளது.

முத்துராஜா யானை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ரெயா அமைப்பு இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் முறைப்பாடளித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த யானையை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல தாய்லாந்து தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிற நாடுகள் அன்பளிப்பாக வழங்கும் விலங்குகளை இலங்கை இவ்வாறான தன்மையில் தான் பாதுகாக்கிறது.

விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது என்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது.

இது நாட்டுக்கு கரும்புள்ளியாக காணப்படுகிறது. ஆகவே தாய்லாந்து நாட்டினால் வழங்கப்பட்ட முத்துராஜா யானை விவகாரத்தில் அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் தாய்லாந்து அரசாங்கத்திடம் கவலை தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற யானை முன்னாள் ஜனாதிபதியால் அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. விகாரைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்க முடியாது.

விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட இந்த உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்கின நலன்பேண் அமைப்புக்கள் முறைப்பாடளித்ததை தொடர்ந்து இந்த யானை தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு விகாரையின் அனுமதியுடன் கொண்டு செல்லப்பட்டது. தற்போது யானைக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இந்த யானை விவகாரம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.இருப்பினும் இந்த யானையை தாய்லாந்துக்கு கொண்டு செல்லும் உறுதியான நிலைப்பாட்டில் தாய்லாந்து அரசாங்கம் உள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா  தாய்லாந்து  நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானை பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த விடயம் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் இராஜதந்திர மட்டத்தில் கவலை தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் தாய்லாந்து நாட்டுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த போது முத்துராஜா யானை விவகாரம் தொடர்பில்  நாடு என்ற ரீதியில் கவலை தெரிவித்துள்ளோம்.ஆகவே தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.
http://www.battinews.com/2023/06/blog-post_494.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்றதற்கு பாராளுமன்றத்தில் கவலை தெரிவிக்காதவர்கள்,
ஓரு யானை, சுகயீனப் பட்டதற்கு கவலை தெரிவிக்கின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்றதற்கு பாராளுமன்றத்தில் கவலை தெரிவிக்காதவர்கள்,

யானையின் பெயரை கவனித்தீர்களோ? அதனாற்தான் கவனிக்காமல் விட்டு துன்புறுத்தினார்களோ? 

15 hours ago, nunavilan said:

தாய்லாந்து  நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானை பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

 

15 hours ago, nunavilan said:

முத்துராஜா என்ற யானை முன்னாள் ஜனாதிபதியால் அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. விகாரைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்க முடியாது.

பௌத்த புண்ணியம் நாட்டில் தழைத்தோங்கும் லட்ஷணத்தின் சான்று விகாரைக்குள் இருந்து வெளிப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

யானையின் பெயரை கவனித்தீர்களோ? அதனாற்தான் கவனிக்காமல் விட்டு துன்புறுத்தினார்களோ? 

 

பௌத்த புண்ணியம் நாட்டில் தழைத்தோங்கும் லட்ஷணத்தின் சான்று விகாரைக்குள் இருந்து வெளிப்படுகிறது. 

அண்மையில் தலதா மாளிகையின் பெரஹரா யானை மரணித்தது. அது மரபுக்கும் போது வெறும் எலும்புக் கூடு மட்டுமே அந்த யானையுடன் மிச்சமாக இருந்தது. ஒரு போர்வையை போர்த்தி… இறுதி வரை அதைப் பிழிந்தெடுத்தது பௌத்தம்..! இது தான் சிங்கள பௌத்தம்..!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

அண்மையில் தலதா மாளிகையின் பெரஹரா யானை மரணித்தது. அது மரபுக்கும் போது வெறும் எலும்புக் கூடு மட்டுமே அந்த யானையுடன் மிச்சமாக இருந்தது. ஒரு போர்வையை போர்த்தி… இறுதி வரை அதைப் பிழிந்தெடுத்தது பௌத்தம்..! இது தான் சிங்கள பௌத்தம்..!

 

6 hours ago, satan said:

யானையின் பெயரை கவனித்தீர்களோ? அதனாற்தான் கவனிக்காமல் விட்டு துன்புறுத்தினார்களோ? 

பாவம் அந்த யானை.. விட்டுவிடுங்கள்' : அன்பை போதித்த புத்தர் கோவில்  திருவிழாவில் இது தேவைதானா ?

 

‘பாவம் அந்த யானை.. விட்டுவிடுங்கள்’ : அன்பை போதித்த புத்தர் கோவில் திருவிழாவில் இது தேவைதானா ?

 

‘பாவம் அந்த யானை.. விட்டுவிடுங்கள்’ : அன்பை போதித்த புத்தர் கோவில் திருவிழாவில் இது தேவைதானா ?

இந்த யானையை, இப்படியான நிலையில் வதைத்து எடுத்ததை... 
அறிந்த உலகமே மிகவும் பரிதாபப் பட்டது.
உடனே... சிங்களம், யானையின் நோய் குணமாக நேர்த்தி வைத்து 
கண்டி  பெரகரா  ஊர்வலத்தில் கலந்து கொள்ள வைக்கப் பட்டதாக  சொல்லி தப்பிக் கொண்டது.

இந்த யானையின் பெயர்  டிக்கிரி. அது நோய் குணமாகாமலே இறந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லந்திடம் கடன் வாங்கும் நிலை வரும் என்று தெரிந்திருந்தால் நன்றாக கவனித்திருப்பார்கள்........!  😢

  • கருத்துக்கள உறவுகள்

கூண்டிற்குள் அடைக்கப்பட்ட யானையை கிரேன் மூலம் தூக்குவதற்கான பயிற்சிகள் - ஒருவாரத்தில் தாய்லாந்து செல்கின்றது சக்சுரின்

Published By: RAJEEBAN

27 JUN, 2023 | 06:52 AM
image
 

இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள சக்சுரின் யானையை இன்னமும் ஒருவார காலப்பகுதிக்குள் தாய்லாந்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

விமானத்தில் கூண்டினில் பயணிப்பதற்காக சக்சுரினை பழக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன யானை தாய்லாந்தை சேர்ந்த பாகன்களுடன் நல்லவிதத்தில் நடந்துகொள்கின்றது என தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள் வனவிலங்கு தாவர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளா நாயகம் தெரிவித்துள்ளார்.

இரவில் கூண்டிற்குள் செல்வதற்கும் வெளியே வருவதற்கும் கூண்டின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் காலின் கதவுகள் பிணைக்கப்பட்டு  இரண்டுமணித்தியாலங்கள் உள்ளே நிற்பதற்கும் முத்துராஜவிற்கு  பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டமாக யானை உள்ளே இருக்கும்போது கூண்டை மூடி அதனை கிரேனை பயன்படுத்தி தூக்கும் பயிற்சி இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் இந்த பயிற்சியை அதிகாரிகள் மிகவும் அவதானமாக முன்னெடுக்கவேண்டும் இந்த பயிற்சி இரண்டாம் திகதி யானை தாய்லாந்திற்கு கொண்டுசெல்லப்படும் வரை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதலாம் திகதி முத்துராஜவை தெகிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து  கொழும்பு விமானநிலையத்திற்கு கொண்டு செல்வார்கள் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாய்லாந்திலிருந்து விமானம் கொழும்பை வந்தடையும்

பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஜூலை 2ம் திகதி தாய்லாந்தின் சியாங்மாய் விமானநிலையத்தில் யானைப்பாகன்களும் மிருகவைத்தியர்களும் காத்திருப்பார்கள் அவர்கள் யானையின் நிலையை ஆராய்வார்கள்.

யானை நல்லநிலையில் காணப்பட்டால் அதனை நேரடியாக அன்றைய தினமே லம்பாங்கில் உள்ள பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்வார்கள் ஆறுமணித்தியால விமானநிலையம் அதனை அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்தால் ஓய்விற்காக சியாங் மாய் சபாரிக்கு அனுப்புவார்கள்.

https://www.virakesari.lk/article/158661

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

கூண்டிற்குள் அடைக்கப்பட்ட யானையை கிரேன் மூலம் தூக்குவதற்கான பயிற்சிகள் - ஒருவாரத்தில் தாய்லாந்து செல்கின்றது சக்சுரின்

Published By: RAJEEBAN

27 JUN, 2023 | 06:52 AM
image
 

இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள சக்சுரின் யானையை இன்னமும் ஒருவார காலப்பகுதிக்குள் தாய்லாந்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

விமானத்தில் கூண்டினில் பயணிப்பதற்காக சக்சுரினை பழக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன யானை தாய்லாந்தை சேர்ந்த பாகன்களுடன் நல்லவிதத்தில் நடந்துகொள்கின்றது என தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள் வனவிலங்கு தாவர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளா நாயகம் தெரிவித்துள்ளார்.

இரவில் கூண்டிற்குள் செல்வதற்கும் வெளியே வருவதற்கும் கூண்டின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் காலின் கதவுகள் பிணைக்கப்பட்டு  இரண்டுமணித்தியாலங்கள் உள்ளே நிற்பதற்கும் முத்துராஜவிற்கு  பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டமாக யானை உள்ளே இருக்கும்போது கூண்டை மூடி அதனை கிரேனை பயன்படுத்தி தூக்கும் பயிற்சி இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் இந்த பயிற்சியை அதிகாரிகள் மிகவும் அவதானமாக முன்னெடுக்கவேண்டும் இந்த பயிற்சி இரண்டாம் திகதி யானை தாய்லாந்திற்கு கொண்டுசெல்லப்படும் வரை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதலாம் திகதி முத்துராஜவை தெகிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்து  கொழும்பு விமானநிலையத்திற்கு கொண்டு செல்வார்கள் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாய்லாந்திலிருந்து விமானம் கொழும்பை வந்தடையும்

பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஜூலை 2ம் திகதி தாய்லாந்தின் சியாங்மாய் விமானநிலையத்தில் யானைப்பாகன்களும் மிருகவைத்தியர்களும் காத்திருப்பார்கள் அவர்கள் யானையின் நிலையை ஆராய்வார்கள்.

யானை நல்லநிலையில் காணப்பட்டால் அதனை நேரடியாக அன்றைய தினமே லம்பாங்கில் உள்ள பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்வார்கள் ஆறுமணித்தியால விமானநிலையம் அதனை அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்தால் ஓய்விற்காக சியாங் மாய் சபாரிக்கு அனுப்புவார்கள்.

https://www.virakesari.lk/article/158661

கொடுத்து வைத்த யானை. 🐘
இதற்கு தாய்லாந்து பெயர் சக்சுரின்.
ஶ்ரீலங்கா பெயர் முத்துராஜா.
சிங்களவன் இதற்கு தமிழ்ப் பெயர் வைக்க எப்படி சம்மதித்தான்?
இப்ப… முஸ்லீம்கள், தங்கள் சோனக பெயரை வைக்கச் சொல்லி,
கொடி பிடிக்கப் போகிறார்களே… 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சக்சுரின் யானை தாய்லாந்திற்கான பயணத்தை ஆரம்பித்தது- விமானத்தில் ஏற்றப்பட்டது

02 JUL, 2023 | 07:40 AM
image
 

சக்சுரின் யானை தாய்லாந்திற்கு அனுப்புவதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட கூண்டுடன் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

354473236_644182257632814_70717205318893

22 வருடங்களிற்கு முன்னர் இலங்கைக்குக்கு வழங்கிய  யானையை மீளப்பெற்று சிகிச்சைக்கு உட்படுத்த தாய்லாந்து தீர்மானித்துள்ள நிலையில் இன்று அதிகாலை  மூன்று மணியளவில் யானை விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

354083000_104577176029591_48016665478874

354445909_1300107147258224_3673603945358

இன்று காலை விசேட வாகனமொன்று சக்சுரின் யானையை தெகிவளை மிருக்கக்காட்சி சாலையிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் யானைக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையில் மிகமெதுவாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை யானையை கூண்டுடன்  ரஸ்ய தயாரிப்பு இலுசன் 76க்குள் ஏற்றும் நடவடிக்கைககள்

354083000_104577176029591_48016665478874 ஆரம்பமாகியுள்ளன.

354344462_1012533566547245_9208513420747

https://www.virakesari.lk/article/159020

  • கருத்துக்கள உறவுகள்

சக்சுரினுடன் ரஸ்ய விமானம் தாய்லாந்து புறப்பட்டது

Published By: RAJEEBAN

02 JUL, 2023 | 10:26 AM
image
 

சக்சுரின் யானையுடன் விசேட ரஸ்ய விமானம் சற்று முன்னர் தாய்லாந்து பயணமாகியது.

இலங்கையிடம் வழங்கிய யானையை தாய்லாந்து சிகிச்சை புனர்வாழ்விற்காக மீளப்பெற்றுக்கொண்டுள்ளது.

சியாங்மாய் நகரத்தை சென்றடையும் யானைக்கு அங்கு மிருகவைத்தியர்கள் சிகிச்சையளிக்கவுள்ளனர்.

ரஸ்யாவிலிருந்து வந்த விசேடவிமானம் 4000 கிலோ யானையை கொண்டு சென்றுள்ளது. இதற்கான செலவு 700,000 டொலர் என தகவல்கள் வெளியாகின்றன.

இல்யுசின் ஐஎல்76 சரக்கு விமானம் இன்று காலை 7.30 மணிக்கு கொழும்பு விமானநிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்கள்பௌத்த ஆலயத்தில் வாழ்ந்த யானையை தாய்லாந்திற்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை மிருகவைத்தியர்கள் இந்த வாரம் மேற்கொண்டனர்.

 

தாய்லாந்தின் அரச குடும்பம் அன்பளிப்பாக இந்த யானையை இலங்கைக்கு வழங்கியிருந்தது, அரசாங்கம் அதனை பௌத்த ஆலயத்திற்கு வழங்கியது. பௌத்தஆலயம் அதனை முத்துராஜ என பெயரிட்டு ஆலய உற்சவங்களில் பயன்படுத்தியது.

எனினும் ரார் எனப்படும் விலங்குகள் நலன் அமைப்பு யானையின்பராமரிப்பு  குறித்து கரிசனை வெளியிட்டது, யானையின் முன்னங்காலில் காணப்படும் பிரச்சினை  நீண்டகாலமாக புறக்கணிக்கப்படுகின்றது என தெரிவித்தது.

sak_surin.jpg

குறிப்பிட்ட அமைப்பு கடந்தவருடம் தாய்லாந்து அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிடவேண்டும் என பரப்புரை செய்தது, இதனை தொடர்ந்து தாய்லாந்து அதிகாரிகள் விகாரை அதிகாரிகளை யானையை தாய்லாந்திற்கு கொண்டுசெல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட பௌத்த ஆலயம் யானையை  கடந்த வருடம்  தெகிவளை மிருகக்காட்சி சாலைக்கு அனுப்ப சம்மதித்தது, அங்கு யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டதுடன் அதனை விமானம் மூலம் தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்கான பயிற்சிகளும் இடம்பெற்றன.

யானை மிருகக்காட்சிசாலைக்கு வந்தவேளை இரண்டு பெரிய புண்கள் காணப்பட்டன. அவை குணமாகிவிட்டன எனினும் மிருகக்காட்சிசாலையில் போதிய வசதிகள்இல்லாததால் முழுமையான கிசிச்சையை வழங்கமுடியவில்லை தகவல்கள்வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் யானைக்கு அக்குபன்சர், லேசர் கிசிச்சை,  ஹைட்டிரோதெரபி போன்றவற்றை வழங்கவுள்ளதாக தாய்லாந்திலிருந்து இலங்கை வந்த மிருகவைத்தியர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159026

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

 

image
 

சக்சுரின் யானையுடன் விசேட ரஸ்ய விமானம் சற்று முன்னர் தாய்லாந்து பயணமாகியது.

//சக்சுரின் யானையுடன் விசேட ரஸ்ய விமானம் சற்று முன்னர் தாய்லாந்து பயணமாகியது.//
ரஸ்ய விமானம்.. யானையை கொண்டு போனது என்ற செய்தி... 
இங்கு பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தப்  போகுதே... 😂

ஏன்... உக்ரைன் விமானம் கிடைக்கவில்லையா?  🤣

(ஏதோ.... நம்மால், முடிந்தது.) ஸ்ரார்ட் மியூசிக். 😂 🤣 🎸 🎹

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து மணிநேரப்பயணத்தின் பின்னர் யானை தாய்லாந்தை சென்றடைந்தது.

03 JUL, 2023 | 07:12 AM
image
 

இலங்கையிலிருந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சக்சுரின் யானை நேற்று தாய்லாந்தை சென்றடைந்துள்ளது.

ஐந்து மணிநேர விமானபயணத்தின் பின்னர் யானை தாய்லாந்தின் சியாங்மாய் நகரின் விமானநிலையத்தை சென்றடைந்தது.

 

F0BWvQQagAAlHJQ.jpg

 

F0BWvQNakAAf2I7.jpg

தாய்லாந்தின் இயற்கைவள சூழல் விவகார அமைச்சர் அதிகாரிகள் மிருகவைத்தியர்கள் வரவேற்றனர்.

லம்பாங் மருத்துவமனையின் வைத்தியர்கள் யாiனையை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் யானை 30 நாள் தனிமைப்படுத்தலிற்கா யானை காப்பகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

விமானநிலையத்தில் யானையை பார்ப்பதற்காக பெருமளவு சுற்றுலாப்பயணிகளும் பொதுமக்களும் திரண்டிருந்தனர்.

யானை பாதுகாப்பாக வருவதற்கான தார்மீக ஆதரவை வழங்குவதற்காக தான் வந்ததாக சுற்றுலாப்பயணியொருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/159083

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு தாய்லாந்து வழங்கிய மேலும் இரண்டு யானைகளின் உடல்நிலை குறித்து ஆராயும் குழு வெளிப்படுத்திய தகவல்கள்!

Published By: DIGITAL DESK 3

04 JUL, 2023 | 03:45 PM
image
 

தாய்லாந்து இலங்கைக்கு வழங்கிய மேலும்  இரண்டு யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக  காஞ்சனா சில்பா அர்ச்சா தலைமையிலான குழுவினர் பணியாற்றி வருவதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கதிர்காமத்தில் உள்ள விஹாரை ஒன்றுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கண்டியில் உள்ள விஹாரைக்கு தானமாக வழங்கப்பட்ட யானை வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக தாய்லாந்து ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், கதிர்காமத்திலுள்ள விஹாரைக்கு  தானமாக அளிக்கப்பட்ட யானையின் உடல்நிலையை பரிசோதிக்க தூதுக்குழுவினருக்கு நேரம் எடுத்துக் கொண்டதாக பிபிஎஸ் என்ற  இணையதளம் தெரிவித்துள்ளது.

1979 ஆம் ஆண்டு தாய்லாந்து இந்த யானையை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதாகவும் அந்த  இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும், கண்டி விஹாரைக்கு வழங்கப்பட்ட யானை  சுகாதார காரணங்களுக்காக வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக விஹாரையின் நிர்வாகத்தினர்    குறித்த குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/159205

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த தத்துவத்தை பின்பற்றும் நாங்கள் யானையை உரிய முறையில் பராமரிக்க தவறவிட்டோம் - பௌத்தமதகுரு கவலை

Published By: RAJEEBAN

04 JUL, 2023 | 03:43 PM
image
 

யானைகளை எவ்வாறு கையாள்வது எப்படி என்ற தொழில்முறை பயிற்சி இல்லாததன் காரணமாகவே சக்சுரின் யானையை  தாய்லாந்திற்கு மீள வழங்கவேண்டிய நிலையேற்பட்டது என பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்தஆலயமொன்றில் வைக்கப்பட்டிருந்தவேளை மோசமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் யானை அதன் சொந்தநாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்பதை கேள்விப்படுவது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பௌத்தகலாச்சாரத்தினால் வளம் பெற்ற நாடு, ஆனால் யானையை உரிய முறையில் பராமரிக்க தவறிவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

pahiyangala.jpg

யானையை திருப்பியனுப்புவதில் ஈடுபட்ட தாய்லாந்து அரசாங்கம் மற்றும் அதிகாரிகளிற்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

யானையை பராமரிப்பது குறித்த தொழில்சார் பயிற்சி இல்லாததன் காரணமாகவே பல யானைகள் துன்புறுகின்றன. செல்வந்தவர்கள், நிலமேக்கள், சிலவீடுகளில் உள்ள யானைகள் மாத்திரம் உரிய பராமரிப்பை பெறுகின்றன. பெரும்பாலன யானைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யானைகள் வருடத்திற்கு ஒருமுறை  ஆலயதிருவிழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய நாட்களில் அவைகள் ஹோட்டல்கள் சுற்றுலாத்தலங்களில் காணப்படுகின்றன. அந்நிய செலாவணியை உழைப்பதற்காக அதனை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யானைகளை ஆலயங்களிற்கு வழங்குவதை நிறுத்தவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159204

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

பௌத்த தத்துவத்தை பின்பற்றும் நாங்கள் யானையை உரிய முறையில் பராமரிக்க தவறவிட்டோம் - பௌத்தமதகுரு கவலை

Published By: RAJEEBAN

04 JUL, 2023 | 03:43 PM
image
 

யானைகளை எவ்வாறு கையாள்வது எப்படி என்ற தொழில்முறை பயிற்சி இல்லாததன் காரணமாகவே சக்சுரின் யானையை  தாய்லாந்திற்கு மீள வழங்கவேண்டிய நிலையேற்பட்டது என பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்தஆலயமொன்றில் வைக்கப்பட்டிருந்தவேளை மோசமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் யானை அதன் சொந்தநாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்பதை கேள்விப்படுவது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பௌத்தகலாச்சாரத்தினால் வளம் பெற்ற நாடு, ஆனால் யானையை உரிய முறையில் பராமரிக்க தவறிவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

pahiyangala.jpg

யானையை திருப்பியனுப்புவதில் ஈடுபட்ட தாய்லாந்து அரசாங்கம் மற்றும் அதிகாரிகளிற்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

யானையை பராமரிப்பது குறித்த தொழில்சார் பயிற்சி இல்லாததன் காரணமாகவே பல யானைகள் துன்புறுகின்றன. செல்வந்தவர்கள், நிலமேக்கள், சிலவீடுகளில் உள்ள யானைகள் மாத்திரம் உரிய பராமரிப்பை பெறுகின்றன. பெரும்பாலன யானைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யானைகள் வருடத்திற்கு ஒருமுறை  ஆலயதிருவிழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய நாட்களில் அவைகள் ஹோட்டல்கள் சுற்றுலாத்தலங்களில் காணப்படுகின்றன. அந்நிய செலாவணியை உழைப்பதற்காக அதனை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யானைகளை ஆலயங்களிற்கு வழங்குவதை நிறுத்தவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159204

 முதலில் தமிழனுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுங்கள்.
பிறகு யானை பராமரிப்பையும், பௌத்தத்தைப் பற்றியும் பீற்றிக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2023 at 03:36, satan said:

யானையின் பெயரை கவனித்தீர்களோ? அதனாற்தான் கவனிக்காமல் விட்டு துன்புறுத்தினார்களோ? 

யேர்மனியப் பத்திரிகைகளிலும் இந்த யானையைப் பற்றிய செய்தி வந்திருக்கிறது. அவர்கள் யானையின் பெயர் சாக் சூரின்(Sak Surin) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Full-Size-Render.jpg

நீண்ட இழுபறியான இராஜதந்திரப் பேச்சுவாலர்த்தைகளுக்குப் பிறகு சிறிலங்காவில் இருந்து, தவறாகப் பயன் படுத்திய யானை மீண்டும் தனது தாய் நாடான தாய்லாந்தைப் பத்திரமாக வந்தடைந்திருக்கிறது. அது இப்பொழுது ஒரு சிறப்பு நிலையத்தில் வைத்து பராமரிக்கப் படுகின்றது எனபாங்கொக் போஸ்ற்திங்கட்கிழமை செய்தி வெளியிட்டிருக்கிறது.

மாதக் கணக்கான பயண ஆயத்தங்களுக்குப் பின்னர், தனது நீண்ட தந்தங்கள் மூலம் பெரிதும் அறியப்பட்ட 29 வயதான சாக் சூரின் ரஸ்ய போக்குவரத்து விமானம் மூலம் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து சியாங் மாய்க்கு வந்தது..

2001இல் தாய்லாந்து அரசு சிறிலங்காவுக்கு அந்த யானையை அன்பளிப்பு செய்திருந்தது. முன்னர் சிலொன் என்று அழைக்கப்பட்ட அங்கே, பாகனால் அந்த யானை கடுமையாக வேலை வாங்கப் பட்டதுடன் தவறாகவும் பயன்படுத்தப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பெரஹரா கலாச்சாரத்திலிருந்து யானைகளை அகற்றுவதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் தீவிர முயற்சி- பௌத்தமதகுரு குற்றச்சாட்டு

05 JUL, 2023 | 03:50 PM
image
 

பெரஹரா கலாச்சாரத்திலிருந்து யானைகளை அகற்றுவதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என அஸ்கிரிய பீடத்தின் நாரம்பனவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

முத்துராஜா நன்கு பழக்கப்பட்ட கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும் யானை என அவர் தெரிவித்துள்ளார்.

இது அரசசார்பற்ற அமைப்புகளின் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என தெரிவித்துள்ள பௌத்தமதகுரு ஒவ்வொரு பெரஹரா காலத்திலும் அரசசார்பற்ற அமைப்புகள் இதனை முன்னெடுப்பது வழமை என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் நாங்கள் யானைகளை பயன்படுத்துவது வழமை இங்கிலாந்தில் அரசகுடும்பத்தினரின் நிகழ்வுகளில் குதிரைகள் பயன்படுத்துவதை போன்றது இது என அவர் தெரிவித்துள்ளார்.

யானைகளை பராமரிப்பதற்குதொழில்சார் பயிற்சிகள் எவையும் தேவையில்லை என தெரிவித்துள்ள அவர் அவை பயிற்சியின் மூலமே பின்பற்றப்படும் விடயங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எங்களுக்கே உரிய பெரஹரா கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக மக்கள் அரசசார்பற்ற அமைப்புகளின் கருத்துக்களை எதிர்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159276

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of elephant, Bactrian camel, rhinoceros and text

 

 

May be an image of text

 

May be an illustration of elephant

 

May be an illustration of hospital and text

  • கருத்துக்கள உறவுகள்

முத்துராஜாவுக்கு தாய்லாந்தில் சிறப்பு சிகிச்சை

தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையாக இருபத்தி இரண்டு வருடங்களாக நம் நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானையை கடந்த 2ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்ல அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இலங்கையில் முத்துராஜா மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவித்து முத்துராஜாவை தாய்லாந்து அரசாங்கம் திரும்பப் பெற்றது . தற்போது முத்துராஜாவுக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8-1024x1024-1-300x300.jpg 7-1024x1024-1-300x300.jpg 5-2-1024x1024-1-300x300.jpg 4-2-1024x1024-1-300x300.jpg 3-2-1024x1024-1-300x300.jpg 1-1-1024x1024-1-300x300.jpg 2-2-1024x1024-1-300x300.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யானையை திரும்பப் பெற்ற தாய்லாந்து பறவைகளை அனுப்பி வைத்தது

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், தாய்லாந்தில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மூன்று “டபுள் வாட்டில்ட் காசோவரி” பறவைகள் அனுப்பப்பட்டன.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 9 மாத வயதுடைய இரண்டு ஆண் காசோவரி பறவைகளும் ஒரு காசோவரி குஞ்சும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சுமார் 05 அடி உயரமும் சுமார் 60 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த cassowary பறவைகள் உலகில் அழிந்து வரும் பறவைகளில் இரண்டாவது பெரிய பறவைக் குழுவைச் சேர்ந்தவை. மிகவும் வண்ணமயமான இந்த பறவைகள் வானில் பறக்க முடியாது என்பது சிறப்பு.

இதேவேளை இந்த விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், இலங்கையில் இருந்து பல வகையான பாம்புகள் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் வருகை தந்த காசோவரி பறவைகளை பெறுவதற்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர் தம்மிகா தசநாயக்க, மிருகக்காட்சிசாலையின் மிருக பராமரிப்பாளர்களான அசோக ஜயலத், அசங்க பெர்னாண்டோ ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

https://thinakkural.lk/article/261669

  • கருத்துக்கள உறவுகள்

முத்துராஜாவை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை : தாய்லாந்து அறிவிப்பு!

முத்துராஜாவை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை : தாய்லாந்து அறிவிப்பு!

முத்துராஜா யானைக்கு சிறப்பு சிகிச்சைகளும் விசேட பயிற்சிகளும் தொடர்ச்சியாக அளிக்கப்படுவதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறித்த யானையை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்றும் தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தினால் நாட்டுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு இருபத்தி இரண்டு வருடங்களாக நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானை, கடந்த 2 ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த யானைக்கு கால் எலும்பில் ஏற்பட்ட காயம் உள்ளிட்ட உபாதைகளுக்கு சிகிச்சையளிக்கவே, தாய்லாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இலங்கையில் முத்துராஜா யானை மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மீண்டும் இந்த யானையை இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்று அந்நாட்டு சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முத்துராஜா யானையின் ஒரு கண்ணில் வெள்ளை பூ படர்ந்துள்ளமையும், பின்பக்க வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளமையும், முதுகில், நகங்கள் மற்றும் தோல்களின் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையும் தாய்லாந்து அரசாங்கம் மேற்கொண்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

தற்போது தாய்லாந்தின் லம்பன் பிராந்தியத்தில் அமைந்துள்ள, யானைகள் சரணாலயத்தில், இதற்கான சிகிச்கைகளும் அளிக்கப்படுகின்றன.

அத்தோடு, முத்துராஜாவின் நடவடிக்கைகளின் சிறப்பான மாற்றம் தற்போது தெரிவதாகவும், அந்நாட்டு மொழிக்கு இணங்க செயற்படுவதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகள் தொடர்பாகவும் தாய்லாந்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட விசேட குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://athavannews.com/2023/1337870

  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of elephant and text

 

May be an image of elephant and text

 

May be an illustration of text

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.