Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கியால் இலக்குவைக்கப்பட்ட கஜேந்திரகுமார் : தாக்கியவர் தப்பியோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 5

02 JUN, 2023 | 05:27 PM
image
 

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை அரச புனாய்வுப்பிரிவினைச் சேந்தவர் தாக்கி விட்டு தப்பிச் சென்றதோடு, பிறிதொரு நபர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்துவதற்கு இலக்குவைத்துள்ள சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

மருதங்கேணியில் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது,

நாம் மருதங்கேணியில் உள்ள விளையாட்டுக்கழகமொன்றின் இளைஞர்களுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்காகச் சென்றிருந்தோம்.

அதன்போது சிவில் உடை தரித்த இனம் தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு பிரசன்னமாகியிருந்ததோடு தொலைபேசி மூலம் இளைஞர்களுடனான எமது கலந்துரையாடலை ஒளிப்பதிவு செய்வதற்கு முனைந்து கொண்டிருந்தார்.

அச்சமயத்தில் எனது, ஆய்வு உத்தியோகத்தர் அவர்களிடத்தில் விபரங்களை கோர முற்பட்டபோது அவர்கள் தகவல்களை வெளியிடவில்லை. 

அச்சமயத்தில் நான் உள்ளிட்டவர்களும் அவர்கள் யார் என்பதை கோருவதற்கு முனைந்தவேளையில் அவர்கள் தமது அடையாளத்தினை வெளிப்படுத்தவில்லை.

ஒருகட்டத்தில் தம்மை புலனாய்வுப்பிரிவினர் என்று தெரிவித்தபோதும், அவர்கள் அதற்கான அடையாளத்தினைக் காண்பிக்கவில்லை. அத்துடன் தொடர்ச்சியாக எம்முடன் தர்க்கம் செய்தனர். 

இந்நிலையில் அவர்களின் ஒருவர் என்னை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந்த நிலையில் மற்றவரை நாம் சுற்றிவளைத்திருந்தோம். தொடர்ந்து அவர் பொலிஸாருடன் தொலைபேசி வழியாக உரையாடினார்.

இதற்குள் அருகிலிருந்த பாடாசலையில் இருந்து வருகை தந்த சிவில் உடைதரித்த ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தரும்ரூபவ் நாம் தடுத்து வைத்தருந்த நபரை விடுமாறு கோரி மோசமான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தினர்.

அதற்குள், ஒருவர் என்னை துப்பாக்கியால் இலக்குவைத்து குறித்த நபரை விடுவிக்குமாறு கோரினார். அச்சமயத்தில் அங்கு வருகை தந்திருந்த பொலிஸ் உபபரிசோதகர் தரமுறைய ஏ.ஈ.ஜயதிஸ்ஸ என்பவர் தானே அப்பகுதிக்கான பொலிஸ் நிலைய பதில் அதிகாரியாக கடமையாற்றுவதாகவும் அவர்கள் புலனாய்வுப்பிரிவினர் என்றும் அவர்களை விடுவிக்குமாறும் கோரினார்.

எனினும், என்மீது தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றவரை வரவழைத்து நடவடிக்கைளை எடுக்கும் வரையில் தடுத்து வைத்துள்ளவரை விடுவிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டோம். 

இதனால் தர்க்கமான சூழல் எழுந்ததோடு, பின்னர் என்னை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து முறைப்பாடு செய்யுமாறு கோரப்பட்டது.

அத்துடன் குறித்த அதிகாரி, புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களுக்கு தண்டனையாக இடமாற்றத்தினை வழங்குவதாகவும் அத்துடன் இருதரப்பு இணக்கப்பாட்டுடன் விடயத்தினை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் கோரினார்.

எனினும், அதனை மறுதலித்த நான், குறித்த சம்பவத்தினால் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று கூறி அங்கிருந்து வெளியேறினோம் என்றார்.

 

WhatsApp_Image_2023-06-02_at_17.10.44.jp

WhatsApp_Image_2023-06-02_at_17.10.57.jp

WhatsApp_Image_2023-06-02_at_17.10.45__1

WhatsApp_Image_2023-06-02_at_17.10.45.jp

WhatsApp_Image_2023-06-02_at_17.10.46.jp

WhatsApp_Image_2023-06-02_at_17.10.47.jp

WhatsApp_Image_2023-06-02_at_17.10.46__1

https://www.virakesari.lk/article/156810

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அருகிலிருந்த பாடாசலையில் இருந்து வருகை தந்த சிவில் உடைதரித்த ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தரும்ரூபவ் நாம் தடுத்து வைத்தருந்த நபரை விடுமாறு கோரி மோசமான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தினர்.

 

6 hours ago, ஏராளன் said:

அச்சமயத்தில் அங்கு வருகை தந்திருந்த பொலிஸ் உபபரிசோதகர் தரமுறைய ஏ.ஈ.ஜயதிஸ்ஸ என்பவர் தானே அப்பகுதிக்கான பொலிஸ் நிலைய பதில் அதிகாரியாக கடமையாற்றுவதாகவும் அவர்கள் புலனாய்வுப்பிரிவினர் என்றும் அவர்களை விடுவிக்குமாறும் கோரினார்.

 

6 hours ago, ஏராளன் said:

அத்துடன் குறித்த அதிகாரி, புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களுக்கு தண்டனையாக இடமாற்றத்தினை வழங்குவதாகவும் அத்துடன் இருதரப்பு இணக்கப்பாட்டுடன் விடயத்தினை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் கோரினார்.

ம்...ம்..... இதுதான் நிலை! இவர்களிடம் மக்கள் எப்படி நீதியை எதிர்பார்த்து தம் பிரச்சனையை முறையிட முடியும்? பின் எதற்கு இவர்கள் இங்கே? மந்தைக்கு காவல் ஓநாய்கள். இவர்கள் தெற்கில் அமைதி, சமாதானத்தை உருவாக்குகிறார்களாம். தாடியர் இதற்கும் வக்காலத்து வாங்குவார். காரணம், அவர்யார் என்பதை அவர் மறைத்தாலும் நாம் மறக்கவில்லை. இனம் இனத்தைக்காக்கும். இங்கு அவர்களின் ஈனச்செயலை குறிப்பிட்டேன். ஒவ்வொரு செயலையும் சர்வதேசத்துக்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் எங்களுக்கு தீர்வை பெற்றுத்தரப்போகிறார்கள் என்றல்ல, அவர்கள் இலங்கைக்கு எதற்காக பாராட்டு நிதி ஆலோசனை வழங்குகிறார்கள், வழங்கி எம்மை அழித்தார்கள் என்பதை நாமறிவோம் என்பதை அவர்களும் உணரட்டும்.      

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் நாடகங்களில் இதுவும் ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கஜேந்திரகுமார் நாடகங்களில் இதுவும் ஒன்று .

அப்படியா சொல்கிறீர்கள்? நிரூபிக்கப்பட்டால், சட்ட, மான நட்டங்களை எதிர் நோக்க நேரிடுமே? தனக்குத்தானே குழி வெட்டுவாரா?             

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டி இருக்கின்றது- சிறீதரன்

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் அதியுச்ச அரச அடக்குமுறை : சிறிதரன் எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அச்சுறுத்தப்பட்டமை அதியுச்ச அடக்குமுறை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்.மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது.

இந்த நாட்டின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்புவாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1333406

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மீது தாக்குதல் முயற்சி  -ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராட்சியம் கண்டனம்

June 2, 2023
 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை அரச புனாய்வுப்பிரிவினைச் சேந்தவர் தாக்கி விட்டு தப்பிச் சென்றதோடு, பிறிதொரு நபர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்துவதற்கு இலக்குவைத்துள்ள சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராட்சியம் தனது கடுமையான கணடனத்தை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று யூன் 2ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி பற்றி உங்களது கவனத்திற்கு கொண்டுவ ருகிறோம்.

கிடைக்கப்பட்ட அறிக்கைகளின் படி, இன்று வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மக்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்த திரு. கஜேந்திரகுமார் மீது உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கு முயன்றுள்ளனர். அங்கு திரண்டிருந்த மக்கள் இவ்விருவரையும் துரத்திப்பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடிவிட மற்றவர் பிடிக்கப்பட்டார். பிடிபட்ட நபர் தன்னை சிறிலங்கா பாதுகாப்பு படைகளின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தியுள்ளார்

திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான கொலை முயற்சியை ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராட்சியம் மிகவன்மையாகக் கண்டிப்பதுடன், இவ்வாறான ஜனநாயக விரோதமான மனிதவுரிமை மீறல்களுக்கு இடமளிக்கவேண்டாம் என சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்கொடுக்குமாறு சிறிலங்காவிற்கு உதவும் நாடுகளைக் கோருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/attempted-attack-on-mp-gajendrakumar/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

கஜேந்திரகுமார் நாடகங்களில் இதுவும் ஒன்று .

கஜேந்திரகுமாரைப் பிடிக்காதவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும்! – சீமான் கடும் கண்டனம்

03 JUN, 2023 | 03:21 PM
image
 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும்! – என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான அன்புச்சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைச் சுட்டுப் படுகொலை செய்வதற்கு இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

 

சமகால அரசியல் சூழலில் ஈழத்தமிழ் மக்களுக்கு இலங்கை அரசால் இழைக்கப்படும் இனவெறிக் கொடுமைகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களது அடிப்படை உரிமைகளுக்கு ஆதரவாகவும்இ வலுவான குரல் கொடுத்து அரசியல் தளத்தில் போராடிவரும் சகோதரர் கஜேந்திரகுமார் மீதான இக்கொடுந்தாக்குதல் இலங்கை இனவாத அரசின் கோழைத்தனத்தையும்இ கோரமுகத்தையுமே மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.

நெஞ்சில் தீரத்துடனும் நேர்மை அறத்துடனும் சமரசமின்றி தமிழீழ விடுதலைக் குரலாக இலங்கை நாடாளுமன்றத்திலேயே ஓங்கி ஒலித்தவரும் தேசியத்தலைவரால் மாமனிதர் என்று போற்றப்பட்டவருமான ஐயா குமார் பொன்னம்பலம் அவர்களைக் கடந்த 2000 ஆம் ஆண்டில் அரசக் கைக்கூலிகள் மூலம் சுட்டுப்படுகொலை செய்தது இலங்கை இனவெறி அரசு. தற்போது தந்தையைப் போலவே சமரசமற்ற அரசியல் தலைவராகத் திகழ்கின்ற அவரது மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இருப்பையும் திரைமறைவில் அழித்தொழிக்கும் இலங்கை இனவெறி அரசின் சதிச்செயலே இக்கொலைமுயற்சி நிகழ்வாகும்.

ஈழத்தில் ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்து 14 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு இலட்சம் மக்களுக்கான நீதியைப் பன்னாட்டு நீதிமன்றத்தில் இன்னமும் பெறமுடியாமலும் இலங்கை இனவாத அரசால் வலிந்து காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்த தகவல்களை அவர்களது குடும்பத்தினருக்கு இன்றுவரை பெற்றுத்தரமுடியாமலும் கடுந்துயரத்தோடும் காயம் சுமந்த கண்ணீரோடும் கையறு நிலையில் ஈழத்தில் தமிழினம் தவித்துவரும் நிலையிலும் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவெறி அடக்குமுறைகள் இன்னும் நின்றபாடில்லை என்பதை இக்கொடுந்தாக்குதலின் மூலமாவது பன்னாட்டுச்சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

இலங்கையில் கடும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டு தமிழ் மக்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் பசியும்இ பட்டினியுமாக வாழ வழியற்று நிற்கும் நிலையிலும் அணுவளவு உரிமையும் தமிழர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளார்கள் என்பதை உலக வல்லாதிக்க நாடுகள் இப்போதாவது அறிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் எத்தனை ஆட்சி மாறினாலும் எத்தனை சிங்கள ஆட்சியாளர்கள் மாறினாலும் அவர்கள் எத்தனை நல்லெண்ண நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினாலும் அவை ஒருபோதும் தமிழர் நலனுக்கு ஒரு சிறிதும் உதவப்போவதில்லை என்பதையும் தமிழரது உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சிங்களர்களது இனவெறி மனப்பான்மை மாறப்போவதில்லை என்பதையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஈழத்தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்கத் துணைநின்ற உலக நாடுகள் இனியாவது உணரத் தளைப்பட வேண்டும்.

 

தங்கள் உரிமைக்காக அறவழியில் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே படுகொலைசெய்ய முயலுமென்றால் ஈழத்தில் வாழ்கின்ற பாமர மக்கள் என்ன உரிமையைக் கோரி இலங்கை இனவெறி அரசிடம் பெற்றுவிட முடியும் என்பதை இந்தியா உட்பட உலக நாடுகள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால் தனித்தமிழீழம் மட்டுமே அம்மக்களுக்கான நிரந்த தீர்வாக இருக்க முடியும் என்பதை உணர முடியும்.

ஆகவே இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான அன்புச்சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீதான இலங்கை இனவாத அரசின் புலனாய்வுத் துறையினர் நடத்தியுள்ள கொலை முயற்சி தாக்குதலுக்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்து அவருக்கு உரிய பாதுகாப்புகள் வழங்கிடவும் இலங்கை அரசினை எச்சரித்துஇ வலியுறுத்திட வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தனித்தமிழீழம் எனும் உண்மையான அரசியல் உரிமையைப் பெற்றிட கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://www.virakesari.lk/article/156859

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

அணுவளவு உரிமையும் தமிழர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளார்கள் என்பதை உலக வல்லாதிக்க நாடுகள் இப்போதாவது அறிந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் எப்போதோ அறிந்துதான் அதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தார்கள் கொடுத்துக்கொண்டும் வருகிறார்கள்.

10 minutes ago, ஏராளன் said:

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்து அவருக்கு உரிய பாதுகாப்புகள் வழங்கிடவும் இலங்கை அரசினை எச்சரித்துஇ வலியுறுத்திட வேண்டும்.

உங்கள் ஆசையை ஏன் நான் கெடுப்பான்?          

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

கஜேந்திரகுமாரைப் பிடிக்காதவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள்.

தையிட்டி விகாரை விடயத்தில் அவர் நடந்து கொண்ட நடிப்புக்களை பார்த்த பின் தான் புலவர் பிடிக்காமல் போய் விட்டது  இங்கு யாழில் அவற்றை இணைக்கலாம் நேரம் மினகெட்டு யு டியுப் மாற்றி இணைக்க சிம்பிளா வெட்டு வாங்கி விடும் எது எது வெட்டு விழும் என்று தெரியாமல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

 

பாதுகாப்ப அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி திரைமறைவில் தமிழருக்க எதிராக எல்லாவற்றையும் செய்து கொண்டு

மறுகரையில் இனப் பிரச்சனைக்கு தீர்வு எப்படி வழங்கப் போகிறார்.

இதே மாதிரியே தந்தை குமார் பொன்னம்பலத்தையும் சந்திரிகா போட்டுத் தள்ளினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் தெடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் - மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர்

Published By: DIGITAL DESK 3

03 JUN, 2023 | 07:14 PM
image
 

(எம்.நியூட்டன்)

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்  வடமராட்சி பகுதிக்கு மக்கள் சந்திப்புக்காக சென்ற வேளை புலனாய்வாளர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அவ்விடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தொலைபேசி மூலமாக முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில்  உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு   வழங்குமாறும், அவ்வாறு வழங்கிய பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/156856

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

தையிட்டி விகாரை விடயத்தில் அவர் நடந்து கொண்ட நடிப்புக்களை பார்த்த பின் தான் புலவர் பிடிக்காமல் போய் விட்டது  இங்கு யாழில் அவற்றை இணைக்கலாம் நேரம் மினகெட்டு யு டியுப் மாற்றி இணைக்க சிம்பிளா வெட்டு வாங்கி விடும் எது எது வெட்டு விழும் என்று தெரியாமல் உள்ளது .

அந்த விவகாரத்தில் என்ன நடிப்பைக் கண்டீர்கள். ஏனைய தலைவர்களைப் டபோல் கண்டும் காணாமல் இருக்கச் சொல்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, புலவர் said:

அந்த விவகாரத்தில் என்ன நடிப்பைக் கண்டீர்கள். ஏனைய தலைவர்களைப் டபோல் கண்டும் காணாமல் இருக்கச் சொல்கிறீர்களா?

May be an image of 1 person and tree

விகாரை எங்கு இருக்கு? உங்க ஆள் இந்த பத்தை காணிக்குள் என்ன செய்கிராரராம் ?😀

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

May be an image of 1 person and tree

விகாரை எங்கு இருக்கு? உங்க ஆள் இந்த பத்தை காணிக்குள் என்ன செய்கிராரராம் ?😀

 

பின்னணியில் விகாரை தெரிகின்றது தானே. கடைசி அவர் அந்த சூழலிலாவது நின்று எதிர்ப்பு தெரிவிக்கின்றார். விமர்சனம் செய்பவர்கள் எங்கே நிற்கின்றார்கள்? 

தூக்கம், களைப்பு எல்லாம் அனைவருக்கும் உள்ளதுதானே. வெய்யிலை பாருங்கள் எப்படி அடிக்கின்றது என்று. 

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட கஜேந்திரகுமார் MP

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, slow loris and textMay be an image of 1 person, slow loris and text

3 hours ago, பெருமாள் said:

May be an image of 1 person and tree

விகாரை எங்கு இருக்கு? உங்க ஆள் இந்த பத்தை காணிக்குள் என்ன செய்கிராரராம் ?😀

சம்பந்தர் மாதிரி வீட்டில் படுத்துக்கொண்டு அறிக்கை விடவில்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்

@நியாயத்தை கதைப்போம் @புலவர்

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பின்னணியில் விகாரை தெரிகின்றது தானே. கடைசி அவர் அந்த சூழலிலாவது நின்று எதிர்ப்பு தெரிவிக்கின்றார். விமர்சனம் செய்பவர்கள் எங்கே நிற்கின்றார்கள்? 

தூக்கம், களைப்பு எல்லாம் அனைவருக்கும் உள்ளதுதானே. வெய்யிலை பாருங்கள் எப்படி அடிக்கின்றது என்று. 

 

2 hours ago, புலவர் said:

சம்பந்தர் மாதிரி வீட்டில் படுத்துக்கொண்டு அறிக்கை விடவில்லையே. 

உங்கள் இருவருக்கும் இந்த கூட்டத்திடம் அங்கஜன் டக்களஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவருடமும் விகாரை அத்து மீறல் ஆக கட்டபடுகிறது என்று முன்பே கடிதம் அனுப்பி உள்ளார்கள் அத்துடன் சஜித் அடிக்கல் நாட்டப்படும் செய்தியையும் தெரிந்தும் உள்ளார்கள் இவையெல்லாம் முகநூலில் டர் நாராக கிழித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல என்ன நான்  யாழில் உண்மையை  சொல்லி விட்டேன் அதனால் என்னை போட்டு வறுத்து எடுகிரியல் சுமத்தி ரனின் மாடு ஓட்டி ஒரு நாளில் நெல் விளைந்து பொங்கல் பொங்கிய கதையை விட சுவாரசியமானது கஜன் போலீசிடம் மாட்டும் ஒளிப்படம் இங்கு இணைத்தால் பத்து பக்கம் செர்வரை நிரப்பும் இணைக்கவா ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

@நியாயத்தை கதைப்போம் @புலவர்

 

உங்கள் இருவருக்கும் இந்த கூட்டத்திடம் அங்கஜன் டக்களஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவருடமும் விகாரை அத்து மீறல் ஆக கட்டபடுகிறது என்று முன்பே கடிதம் அனுப்பி உள்ளார்கள் அத்துடன் சஜித் அடிக்கல் நாட்டப்படும் செய்தியையும் தெரிந்தும் உள்ளார்கள் இவையெல்லாம் முகநூலில் டர் நாராக கிழித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல என்ன நான்  யாழில் உண்மையை  சொல்லி விட்டேன் அதனால் என்னை போட்டு வறுத்து எடுகிரியல் சுமத்தி ரனின் மாடு ஓட்டி ஒரு நாளில் நெல் விளைந்து பொங்கல் பொங்கிய கதையை விட சுவாரசியமானது கஜன் போலீசிடம் மாட்டும் ஒளிப்படம் இங்கு இணைத்தால் பத்து பக்கம் செர்வரை நிரப்பும் இணைக்கவா ?

இணையுங்கள் எலலோருக்கும் தெரியட்டும்.நாடகம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

இணையுங்கள் எலலோருக்கும் தெரியட்டும்.நாடகம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

உங்கள் இருவருக்கும் இந்த கூட்டத்திடம் அங்கஜன் டக்களஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவருடமும் விகாரை அத்து மீறல் ஆக கட்டபடுகிறது என்று முன்பே கடிதம் அனுப்பி உள்ளார்கள் அதுக்கு ஏன் பதில் உடன் தெரிவிக்காமல் இந்த கருணா நிதி நாடகம் ?

இந்த கேள்விக்கு பதில் இருக்கா இல்லையா ? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

May be an image of 1 person and tree

விகாரை எங்கு இருக்கு? உங்க ஆள் இந்த பத்தை காணிக்குள் என்ன செய்கிராரராம் ?😀

விகாரை அமைந்து இருக்கும் இடம் உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறி இராணுவமும் போலீசாரும் தடுப்பு அரண்களை உருவாக்கி இவர்களை உள்ளே செல்ல விடவில்லை, இவர்கள் தடுத்தும் வைக்கப்பட்டார்கள். யாரும் உள்ளே சென்று இவர்களை பார்வையிடவோ உணaவு வழங்கவோ அனுமதிக்கப்படவில்லை. இவர்களை விடுவிக்க மக்கள் இரவிரவாக போராட்டம் நடத்தினர். சுகாஷ் போலீசாருடன் தர்க்கப்பட்டிருந்தார்.  அதன்பின் சுமந்திரன், மாவையர் சென்று உரையாடினார்கள். தொடர்ந்து தனியார் காணியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள் என்று  கூறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்தனர். அதில் ஒரு  பெண்ணும் அடங்குவார். இது நானறிந்தது, தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சி - டிரான் அலஸ் தெரிவித்துள்ளது என்ன?

Published By: RAJEEBAN

04 JUN, 2023 | 09:22 AM
image
 

 தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸாரிடம் இது குறித்து முறைப்பாடுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் அது தாக்குதல் சம்பவமில்லை என நான் கருதுகின்றேன் அந்த சம்பவம் குறித்து வீடியோ உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சண்டேமோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

யாழ்;ப்பாணத்தில் விளையாட்டுகழகம் ஒன்றுடன் நான் சந்திப்பில் ஈடுபட்டிருந்தவேளை  தான் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவித்த நபர் ஒருவர் என்னை தாக்கினார், பொலிஸ் விளையாட்டு சீருடையில் காணப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் என்னை நோக்கி தனது பிஸ்டலை இலக்குவைத்தார் இது குறித்து இலங்கைமனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஏன் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என கேள்வி எழுப்பியவேளை நான் நாடாளுமன்ற  அமர்வுகள் ஆரம்பமானதும் சபாநாயகரிடம் முறையிடுவேன் என தெரிவித்துள்ள அவர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவே பொலிஸ்நிலையத்திற்கு செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பிறகு அங்கு வந்த சிரேஸ்ட அதிகாரி இந்த சம்பவத்தை நிராகரித்ததுடன் இது பாரதூரமான விடயமல்ல என தெரிவித்தார்,என்னை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியாற்றும் அதேவேளை பொலிஸ் நிலையத்திற்கு என்னை வருமாறு அவர்அழைத்தார்,எனது உயிருக்கு ஆபத்துள்ளதால் நான் அங்கு செல்லவிரும்பவில்லை அதனால் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பல சாட்சியங்கள் உள்ளதால் அங்கேயே விசாரணைகளை மேற்கொள்ளுமாறுவேண்டுகோள் விடுத்தேன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சண்டே மோர்னிங்

https://www.virakesari.lk/article/156872

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தான் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவித்த நபர் ஒருவர் என்னை தாக்கினார், பொலிஸ் விளையாட்டு சீருடையில் காணப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் என்னை நோக்கி தனது பிஸ்டலை இலக்குவைத்தார் இது குறித்து இலங்கைமனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 

1 hour ago, ஏராளன் said:

ஏன் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என கேள்வி எழுப்பியவேளை நான் நாடாளுமன்ற  அமர்வுகள் ஆரம்பமானதும் சபாநாயகரிடம் முறையிடுவேன் என தெரிவித்துள்ள அவர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவே பொலிஸ்நிலையத்திற்கு செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இவரின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளதே!

On 3/6/2023 at 02:07, ஏராளன் said:

சிவில் உடை தரித்த இனம் தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு பிரசன்னமாகியிருந்ததோடு தொலைபேசி மூலம் இளைஞர்களுடனான எமது கலந்துரையாடலை ஒளிப்பதிவு செய்வதற்கு முனைந்து கொண்டிருந்தார்.

 

On 3/6/2023 at 02:07, ஏராளன் said:

ஒருகட்டத்தில் தம்மை புலனாய்வுப்பிரிவினர் என்று தெரிவித்தபோதும், அவர்கள் அதற்கான அடையாளத்தினைக் காண்பிக்கவில்லை. அத்துடன் தொடர்ச்சியாக எம்முடன் தர்க்கம் செய்தனர். 

 

On 3/6/2023 at 02:07, ஏராளன் said:

இந்நிலையில் அவர்களின் ஒருவர் என்னை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந்த நிலையில் மற்றவரை நாம் சுற்றிவளைத்திருந்தோம். தொடர்ந்து அவர் பொலிஸாருடன் தொலைபேசி வழியாக உரையாடினார்.

 

  • கருத்துக்கள உறவுகள்


திரயோடு தொடர்புடைய விடயங்களும் உரையாடப்படுவதால் இணைத்துள்ளேன். 

Edited by nochchi
தகவல் கூறல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.