Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறம் கூறுதல்!

Featured Replies

புறம் கூறுதல்!

வேறொரு பகுதியில் "புறம் கூறுதல்" என்ற சொல்லில் வருகின்ற "புறம்" என்ற சொல் எதைக் குறிக்கும் என்பதில் எனக்கும் நண்பர் நெடுக்காலபோவானிற்கும் ஒரு விவாதம் ஏற்பட்டுள்ளது.

புறம் கூறுதல் என்பது ஒருவரிடம் நேரடியாக குறைகளை சொல்லாது அவர் இல்லாத நேரத்தில் குறையை கூறுவது ஆகும். இந்த விடயத்தில் இருவரும் ஒத்துப் போகிறோம்.

ஆனால் பிரச்சனை இங்கே "புறம்" என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதாகும்

நெடுக்காலபோவன் "புறம்" என்ற சொல் "குறை" என்ற அர்த்தத்தைக் குறிக்கும் என்று கூறுகிறார்.

நான் "புறம்" என்ற சொல் குறை கூறும் இடத்தை (அதவாது நேராக இன்றி புறமாக) குறிக்கும் என்கிறேன்.

இந்தச் சொல் கூறப்படுகின்ற விடயத்தை (குறையை) அடிப்படையாக இல்லாது, குறை கூறப்படுகின்ற இடத்தை (புறம்) கொண்டு உருவானது என்பது என்னுடைய உறுதியான தெளிவு.

இங்கே யாழ் களத்தில் நல்ல தமிழ் அறிஞர்கள் இருக்கிறீர்கள். இந்த தமிழ் சொல் குறித்து ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து உங்களுடைய கருத்து என்ன?

புறம் என்ற சொல்லிற்கு "குறை" என்றும் அர்த்தம் இருக்கிறதா?

உங்களுடைய கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

  • Replies 94
  • Views 28.3k
  • Created
  • Last Reply

புறம் (பின்னால்) என்பதிலும் கூறுதல் (பேசுதல்) என்பதிலும் 'குறை' என்ற அர்த்தத்திற்கு தொடர்பில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒருவரைப் பற்றிப் பின்னால் பேசுவதை குறையாக மட்டுமே கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் இல்லாத போது குறை சொல்வதை மட்டும் புறம்கூறுதல் என்று சொல்கிறோம்

புறம் கூறுதல்

இங்கே எதைக் கூறுவதாக கூறப்படுகின்றது குறைகளை. இந்தக் குறைகள் புறம் என்ற சொல்லை மேற்கொள் காட்டியே கூறப்படுகின்றது.

புறம்கூறுதல் - பாராட்டும் படி ஒருவிடயமும் கூறப்பட வில்லை. ஒருவரைப்பற்றிய குற்றங்குறைகளே முன் வைத்து கூறப்படுகின்றன. இதையே பேச்சு வழக்கிலும் புறணி பேசல் என்றும் சொல்வார்கள்.

எனது கணிப்பில் இங்கே புறம் என்ற சொல் குற்றம் குறை என்ற கருத்தையும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்..

அகம்-உள்.. என்று பொருள்படுகிறது(உள்-உள்ளத்தின் அழகுவெளியே தெரிகிறது..)

அகம் என்பதன் எதிர்ப்பதம் புறம்..

அப்படியானால் புறம் என்பது வெளியே..

எனவே புறம் கூறல் என்பது வெளியே சொல்வது..

நம்மாட்கள் ஒருவனைப்பற்றி எப்பதான் நல்லா சொல்லி இருக்கிறார்கள்..

எனவே ஒருவரைப்பற்றி வெளியே குறைதான் கூறுவார்கள் என்ற பொதுவான கருத்து கால வழக்கில் உருவாகிஇருந்தாலும் "புறங்கூறல்" என்றால்.. வெளியே கூறல் எனக் கருத்து சொல்லி விகடகவி விடைபெறுகிறார்.. :D

ஓடி விளையாடு பாப்பா - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்

புறஞ் சொல்ல லாகாது பாப்பா

கவிதைப் பூங்காவில் இருந்து "புறம்" இங்கும் வந்துவிட்டதாக தெரிகிறது. சரி. எனக்கு மனதில் பட்டதை எழுதிவிடுகிறேன்.

"புறம்" என்ற சொல்லை எங்கெல்லாம் பாவிக்கிறோம்?

1. அகம் - புறம் என்பதில்,

2. புறப்பாடு என்பதில்,

3. வானர சேனை ஒருபுறமாகவும், அரக்க சேனை மறுபுறமாகவும் என்பதில்,

4. போரில் புறமுதுகு என்பதில்,

5. தீயனவற்றை புறந்தள்ளி என்பதில்,

6. வீட்டின் முன்புறம் பின்புறம் என்பதில்,

7. வலது புறம், இடதுபுறம் என்பதில் ............

இவை எல்லாம் சுட்டி நிற்பது என்ன? என்னை பொறுத்தவரை "புறம்" என்பது சுட்டி நிற்பது "வெளி" (space) யுடன் சம்பந்தப்பட்ட ஒரு தொழிற்பாட்டையே. இதில் புறப்படு என்பதுகூட "வெளி"யுடன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வே. இந்த "வெளி" என்பது "பௌதீக", "மன" வெளிகளாக இருக்கலாம். தீயனவற்றை புறந்தள்ளு என்பது பௌதீக, மன வெளிகளில் நடைபெறக்கூடிய நிகழ்வு.

சரி. இப்போது பிரச்சனைக்குரிய சொல்லான "புறம் கூறுதல்" என்பதால் நாம் அறிந்து கொள்வதென்ன? ஒருவன் இன்னொருவனுக்கு புறம்கூறுதல் என்பதென்ன? ஒருவரின் மனவெளியில் இருந்து மற்றவரை ஒதுக்கி வைக்கும் ஒரு நிகழ்வை (isolation) தூண்டுதல். இதில் இருக்கும் மிக நுட்பமான விடயம், அந்த மனவெளியில் இருந்து ஒதுக்கி வைக்க தூண்டும் நிகழ்வு நிகழ்வு "புறம் கூறல்" என்பதாகவே தெரிகிறது. அதற்கு "குற்றம்", "குறை" களை கருவியாக பயன் படுத்துகிறார்கள். ஏனென்றால் பொதுவில் "நல்லவற்றை" இன்னொருவருக்கு கூறி மனதளவில் ஒதுக்கிவைக்க தூண்ட முடியாது.

ஆனால் ஒரு தீயவனிடம், நல்ல ஒருவர்பற்றி "அவன் நல்லவன். உனது தொழிலுக்கு ஆபத்தானவன்" என கூறுவதுகூட புறம் கூறலே. இது குற்றம்கூறல் என்பதல்ல. குற்றம்கூறல் என்பது மிக நேரிடையான "குற்றம்" என்பதை கூறிவிடுகிறது.

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி விளையாடு பாப்பா - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்

புறஞ் சொல்ல லாகாது பாப்பா

இதற்கு அர்த்தம் "வெளிய" சொல்லலாகாது பாப்பா...! பாப்பா உம்மாட்டி போல இரு என்றார் பாரதியார். இந்த பாரதியாரே ரெம்ப மோசம். :D

குற்றம் என்பதையும் எமது மனவெளி தான் தீர்மானிக்கிறது..! இது குற்றம்.. இது சரி என்று. விஞ்ஞானம்.. நிறைஞ்ச உலகத்தில எங்க விண்வெளி இருக்கு எங்க மன வெளி இருக்கு.. எங்க கோள் இருக்கு எங்க குற்றமிருக்கு என்று ஒன்றும் புரியுதில்ல.

நாசூக்கா சொன்னால் என்ன.. ஒழிச்சு வைச்சுச் சொன்னால் என்ன.. ஒருவரைப் பற்றி அவரின் எதிரிடையே சொல்லாமல்.. குற்றம் குறை சொல்லல்.. புறங்கூறலாகும். இதையே இப்படியே நன்மையாச் சொன்னால் புறங்கூறல் என்று சொல்வதில்லை. ஆக.. இந்த இடத்தில் புறம் என்பது.. குற்றம் குறை காணலை அடிப்படியாகக் கொண்டு எழுகிறது. :lol:

Edited by nedukkalapoovan

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்

புறஞ் சொல்ல லாகாது பாப்பா

பொய்யை கூறக்கூடாது

அதை வெளியே கூறுவது ஆகவே ஆகாது என்று சொன்னாரா என்னவோ..

அவர் பாவம் அவரை மோசம்னு எல்லாம் சொல்லாதீங்கோ.. :D

இதற்கு அர்த்தம் "வெளிய" சொல்லலாகாது பாப்பா...! பாப்பா உம்மாட்டி போல இரு என்றார் பாரதியார். இந்த பாரதியாரே ரெம்ப மோசம். :D

குற்றம் என்பதையும் எமது மனவெளி தான் தீர்மானிக்கிறது..! இது குற்றம்.. இது சரி என்று. விஞ்ஞானம்.. நிறைஞ்ச உலகத்தில எங்க விண்வெளி இருக்கு எங்க மன வெளி இருக்கு.. எங்க கோள் இருக்கு எங்க குற்றமிருக்கு என்று ஒன்றும் புரியுதில்ல. :lol:

ஹி ஹி நெடுக்ஸ்.

பாரதி சொன்ன இரு விடயங்களை ஞாபக படுத்த விரும்புகிறேன்.

1. கூடி விளையாடு பாப்பா

2.புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா

அவர் சொல்ல வந்தது எமது வட்டார மொழியில் "சேர்ந்து விளையாடு. கன்னை பிரிக்காதே" என்பதயே.

சின்னனில் "கன்னை பிரித்து" விளையாடிய அனுபவம் மறந்தாச்சா? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யை கூறக்கூடாது

அதை வெளியே கூறுவது ஆகவே ஆகாது என்று சொன்னாரா என்னவோ..

அவர் பாவம் அவரை மோசம்னு எல்லாம் சொல்லாதீங்கோ.. :lol:

இப்படிப் பிரச்சனைப் படுவியள் என்றுதான் மனிசன் அதில பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும் புறஞ் சொல்லல் ஆகாது பாப்பா என்று கூறி வைச்சிட்டார்.

எப்பவும் ஆக்களில குற்றம் குறை கண்டிட்டு இருந்தா உனக்கு நட்புக் கிடைக்காது.. ஏனுன்னா இந்தப் பாப்பா பாட்டு நட்பையும்... நல்ல பண்புகளையும்.. செயற்திறனையும் சிறுவர் மத்தியில் விதைக்க ஊக்குவிக்கப் பாடப்பட்டது..! :D

Edited by nedukkalapoovan

புறம் என்பது குற்றம் எனப்பொருள் படும் என்பதேன் என் கருத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி நெடுக்ஸ்.

பாரதி சொன்ன இரு விடயங்களை ஞாபக படுத்த விரும்புகிறேன்.

1. கூடி விளையாடு பாப்பா

2.புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா

அவர் சொல்ல வந்தது எமது வட்டார மொழியில் "சேர்ந்து விளையாடு. கன்னை பிரிக்காதே" என்பதயே.

சின்னனில் "கன்னை பிரித்து" விளையாடிய அனுபவம் மறந்தாச்சா? :D:lol:

பாரதியாருக்கு உந்த யாழ்ப்பாண வட்டார வழக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும்...??! சில வேளை இந்தியாலும் இருக்கோ என்னமோ..??!

நான் "கன்னை பிரிச்சு" என்ற சொல்லைப் பாவிக்கல்ல. குறூப் (group) என்றுதான் பாவிச்சன் சின்னனில. கிராமிய வழக்கில்.. " கன்னை " என்றுதான் group பைச் சொல்வார்கள்.

பாரதி.. சொல்லைக்க.. கூடி விளையாட்டோட சொல்லாமல்.. மனிசன்..

பொய்க்கு அடுத்ததா.. இதை முக்கியம் கொடுத்துச் சொல்லி இருக்கிறார். பொய் சொல்வதை..குற்றம் குறை பிடிப்பதையே தொழிலா வைச்சிராத பாப்பா என்று. அப்படிச் செய்தா கூடி விளையாடவும் ஆள் கிடைகாது என்பதுதான் அர்த்தமோ என்னமோ..! :lol:

புறம் என்ற சொல் எதிர்மறையாக மட்டுமின்றி நேரிடையாகவும் அர்த்தப்படும்

உதாரணமாக புறநிலைக்காரணிகள், புறங்கையில் காயம்,

எதிர்மறையான செயற்பாடுகள் என்று வரும் போது அதை வினை முழுமைப்படுத்தும் போது

உதாரணமாக புக்கணித்தல், புறம் சொல்லுதல், புறம் காட்டல், புறம் பேசுதல்

நேரிடையாகவும் வினை முழுமைப்படுத்தும் போது

உதாரணமாக புறப்படுதல், புறம் பாடுதல், புறம் கை காட்டுதல். (புறப்படுதல் என்பது ஒரு வெளி இடத்துக்கு போதல் , புறம் பாடுதல் என்பது பல அர்த்தங்களை கொண்டது, ஒரு சம்வத்தை குறை கூறுதல். ஒரு சம்பவத்தின் புறநிலையை பாடுதல், உரிய காலத்தை பாடுதல், காலத்துக்கு முன்னும் பின்னும் பாடுதல், புறம் கை காட்டுதல் என்னும் போது ஒருவரிடம் பணம்அல்லது பொருள் அல்லது உதவி கேட்டு அவர் வைத்துக்கொண்டோ அல்லது உதவி செய்ய கூடிய நிலையில் இருந்து கொண்டோ இல்லை என்றால் எதிர் மறை போலும் உண்மையிலே இல்லை என்றால் நேரிடையாகவும் வருகின்றது)

புறம் என்ற சொல்லுக்கு குறை என்ற அர்த்தம் வருவது பேச்சு வழக்கின் சந்தர்ப்பத்தை பொறுத்தது எனினும் இரண்டும் வேறு வேறு என்பது எனது கருத்து.

Edited by sukan

"புறங்கூறுதல்" என்பதற்கு சென்னை அகராதி பின்வரும் விளக்கத்தை தருது:

17. புறங்கூறு-தல் puṟaṅ-kūṟu- : (page 2805)

புறங்கூற்றின் மூகையாய் (நாலடி, 158).

புறங்கூறு-தல் puṟaṅ-kūṟu-

, v. intr. < புறம் +. 1. To backbite, slander; காணாவிடத் துப் பிறர்மேல் அலர்தூற்றுதல். புறங்கூறிப் பொய்த் துயிர் வாழ்தலின் (குறள், 183). 2. To expose

அதாவது "காணாவிடத்துப் பிறர்மேல் பழிசொல்தலை" குறையாக சொல்கிறோம். ஆனால் "புறம்" என்பதற்கு நேரடிப் பொருளாக "குறை" என்பது வராது என்றே எனது சிற்றறிவுக்கு எட்டுகிறது. புறப்பக்கம் என்றதில் பின்பக்கம் என்ற பொருள் தருது. அப்புறம் என்றதில் பிறகு என்று பொருள் வருது. "புற நூல்களையும் படித்தோம்" என்பதில் புற (பிற) என்பது "வேறு" என்றே பொருள் கொடுக்கிறது.

"புறம்" என்பதற்கு சென்னை அகராதி தந்த இன்னும் பல விளக்கங்கள் (பின்னுள்ள இணைப்பை அழுத்துங்கள்): புறம் - சென்னை அகராதி

அகராதி தேடித் திரிந்த போது வேறு சொல் ஒன்றுக்கு சொல்லப்படுகிற விளக்கத்தினைப் பார்த்தேன். அந்த விளக்கம் இந்தத் தலைப்புக்கும் பொருந்தும் என்று நினைக்கிறன்: (நன்றி: www.maraththadi.com, ஹரி கிருஷ்ணன்)

இங்கே இருப்பது குறளை. தீக்குறளையைச் சென்று ஓதோம் என்று இருந்திருக்க வேண்டியது. இரண்டாம் வேற்றுமைத் தொகையாகி தீக்குறளை சென்றோதோம் என்று ஒற்று மிகாமல் இருக்கிறது. குறளை என்றால் புறம் பேசுதல்- back biting- கோள் சொல்லுதல். 'செய்யாதன செய்யோம்' என்பதில் செய்யாதன என்றால், செய்யத் தகாதன என்று பொருள். எதையெல்லாம் சான்றோர்கள் செய்யத் தகாதன என்று விலக்கியிருக்கிறார்களோ அதையெல்லாம். அதிலும் குறிப்பாகத் தீக்குறளை ஓதோம். இருந்த இடத்திலிருந்து நீங்கி, பிறிதோர் இடத்திற்குச் சென்று ஒருவரின் முதுகுக்குப் பின்னால் (புறம், புறத்தில்) பேசுவதாகிய காரியம் என்பதால் 'சென்று ஓதோம்'.

இணையத் தமிழ் அகராதிகள் சில இந்த இணைப்பில இருக்கு. குறிப்பா சென்னை அகராதில யூனிககோட் மூலம் எழுதித் தேடலாம்: http://www.pudhucherry.com/pages/dic.html

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

"புறங்கூறுதல்" என்பதற்கு சென்னை அகராதி பின்வரும் விளக்கத்தை தருது:

அதாவது "காணாவிடத்துப் பிறர்மேல் பழிசொல்தலை" குறையாக சொல்கிறோம். ஆனால் "புறம்" என்பதற்கு நேரடிப் பொருளாக "குறை" என்பது வராது என்றே எனது சிற்றறிவுக்கு எட்டுகிறது. புறப்பக்கம் என்றதில் பின்பக்கம் என்ற பொருள் தருது. அப்புறம் என்றதில் பிறகு என்று பொருள் வருது. "புற நூல்களையும் படித்தோம்" என்பதில் புற (பிற) என்பது "வேறு" என்றே பொருள் கொடுக்கிறது.

"புறம்" என்பதற்கு சென்னை அகராதி தந்த இன்னும் பல விளக்கங்கள் (பின்னுள்ள இணைப்பை அழுத்துங்கள்): புறம் - சென்னை அகராதி

அகராதி தேடித் திரிந்த போது வேறு சொல் ஒன்றுக்கு சொல்லப்படுகிற விளக்கத்தினைப் பார்த்தேன். அந்த விளக்கம் இந்தத் தலைப்புக்கும் பொருந்தும் என்று நினைக்கிறன்: (நன்றி: www.maraththadi.com, ஹரி கிருஷ்ணன்)

இணையத் தமிழ் அகராதிகள் சில இந்த இணைப்பில இருக்கு. குறிப்பா சென்னை அகராதில யூனிககோட் மூலம் எழுதித் தேடலாம்: http://www.pudhucherry.com/pages/dic.html

பழிகூறல் என்பது குற்றங்களை அடுக்குதல்.. குறைகளை அடுக்குதல்.. புறம் கூறல் என்பதுதான் கருத்தில் எடுக்கப்பட்ட சொல். கூறல் என்பதற்கு.. கூறுதல் என்பதை தவிர வெறு பொருள் இந்த இடத்தில் அமைய முடியாது. கூறுதல் பிரித்தல் என்றும் பொருள் அமையும். ஆனால் இங்கு அது பொருந்த வாய்ப்பில்லை. ஆக.. பழி கூறல் என்று வர வேண்டின்.. புறம் என்பது காணாவிடத்து பிறர் மேல் பழிப்பு.. அப்புறம் அதைக் கூறல்.. என்பதாகும்.

பழிப்பு என்பதில்.. குற்றம்.. குறை கூறுதல் அடங்கும். :D

Edited by nedukkalapoovan

"பழிசொல்தல்" என்பதை நான் தான் அதிகமாக அந்த இடத்தில் சேர்த்துவிட்டேன். காணாவிடத்துப் பிறர்பற்றி சொல்தல்" என்று வரவேண்டும். கிட்டத்தட்ட மரத்தடி இணையத்தளத்தில் இருந்து எடுத்து இணைத்த விளக்கத்தில் உள்ள "செய்யாதன" என்ற சொல் போலவே இங்கு "புறங்கூறுதல்" என்பதும் வருகிறது. செய்யாதன என்றால் செய்யாத விடயங்கள் என்றே பொருள் வரும். ஆனால் நாங்கள் "செய்யக் கூடாத விடயங்கள்" என்று மேலதிகமாக "கூடாத" என்ற சொல்லைச் சேர்க்கிறோம் தானே. அதே போலத்தான். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"புறம்" என்ற சொல்லிற்கு தமிழ் அகராதியில் நான் கண்ட அர்த்தங்கள்.

புறம் - முதுகு, தோல்வி, கோள், இடம், இறையலி நிலம், காலம், உடம்பு, வீரம், மதில், பின்புறம்

இதில் "புறம்" என்ற சொல்லிற்கு சரியான அர்த்தம் இந்த இடத்தில் "முதுகு", "இடம்", "பின்புறம்" என்ற அர்த்தங்கள் கொள்ளலாம்.

இதில் "குறை" என்ற அர்த்தம் வரவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.

ஆகவே... புறம் கூறுதல் என்றால் ஒருவரின் பின்னால் அவரைப் பற்றி பேசுவது. முன்னர் போக விட்டு பின்னால் இருந்து பேசுவது என்ற பொருள் தான் வரும் என்பது என் தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

"பழிசொல்தல்" என்பதை நான் தான் அதிகமாக அந்த இடத்தில் சேர்த்துவிட்டேன். காணாவிடத்துப் பிறர்பற்றி சொல்தல்" என்று வரவேண்டும். கிட்டத்தட்ட மரத்தடி இணையத்தளத்தில் இருந்து எடுத்து இணைத்த விளக்கத்தில் உள்ள "செய்யாதன" என்ற சொல் போலவே இங்கு "புறங்கூறுதல்" என்பதும் வருகிறது. செய்யாதன என்றால் செய்யாத விடயங்கள் என்றே பொருள் வரும். ஆனால் நாங்கள் "செய்யக் கூடாத விடயங்கள்" என்று மேலதிகமாக "கூடாத" என்ற சொல்லைச் சேர்க்கிறோம் தானே. அதே போலத்தான். :lol:

நீங்க வேற சேர்கிறீங்களா...??! நான் நினைச்சன் எல்லாமே நூலக உபயம் என்று.செய்யாததை சொல்லுறதுதானே குற்றம்..! உதாரணத்துக்கு.. நீங்கள் களவு எடுக்கிற ஆள் என்று நான் இன்னொருவருக்கு நீங்கள் இல்லாத போது சொல்லுறதுதான் புறம் கூறல். நீங்கள் உண்மையா கள்ளன் என்றால்.. அது புறங் கூறல் அல்ல. உண்மை. கள்ளன் இல்லாத உங்களைக் கள்ளன் என்பதுதான்.. குற்றம் சுமத்தல்.. குறை காணல்.. இதைக் கொண்டு பிறருக்கு உரைத்தல் தான் புறங்கூறல். எப்படித்தான் சுற்றி வளைத்து வந்தாலும்.. இந்த இடத்துக்குத்தான் வருவீர்கள்..! :lol::D

"புறம்" என்ற சொல்லிற்கு தமிழ் அகராதியில் நான் கண்ட அர்த்தங்கள்.புறம் - முதுகு, தோல்வி, கோள், இடம், இறையலி நிலம், காலம், உடம்பு, வீரம், மதில், பின்புறம்இதில் "புறம்" என்ற சொல்லிற்கு சரியான அர்த்தம் இந்த இடத்தில் "முதுகு", "இடம்", "பின்புறம்" என்ற அர்த்தங்கள் கொள்ளலாம்.இதில் "குறை" என்ற அர்த்தம் வரவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.ஆகவே... புறம் கூறுதல் என்றால் ஒருவரின் பின்னால் அவரைப் பற்றி பேசுவது. முன்னர் போக விட்டு பின்னால் இருந்து பேசுவது என்ற பொருள் தான் வரும் என்பது என் தாழ்மையான கருத்து.

நன்றி பூமகள்.

புறம் - - கோள், இந்தக் கோள்.. என்பதன் அர்த்தம் என்ன...???! கோள் கிரகமா.. அல்லது கோள் மூட்டல்.. என்பதா. கோள் மூட்டல் என்பதில் குற்றம் குறை சொல்லல் அமையாதோ..???! :lol:

முன்னால் போக விட்டு பின்னால்.. பாராட்டிப் பேசுதலும்.. புறம் கூறலாகுமா..??! பூமகள்..! :D

Edited by nedukkalapoovan

புறம் - - கோள், இந்தக் கோள்.. என்பதன் அர்த்தம் என்ன...???! கோள் கிரகமா.. அல்லது கோள் மூட்டல்.. என்பதா. கோள் மூட்டல் என்பதில் குற்றம் குறை சொல்லல் அமையாதோ..???! :D

முன்னால் போக விட்டு பின்னால்.. பாராட்டிப் பேசுதலும்.. புறம் கூறலாகுமா..??! பூமகள்..! :lol:

கோள், குறை இரண்டும் ஒன்றல்ல.

குறை = குறைத்துக் கூறல் (தரம் தாழ்த்தி)

கோள் = இல்லாதன கூறல்

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறவுகள்

கோள், குறை இரண்டும் ஒன்றல்ல.

நான் சொல்ல வந்தது.. கோள் = குறை = புறம் என்பதல்ல. புறம் சொல்லுதல் என்பதைக் கோள் சொல்லுதல் என்றால்.. அந்தக் கோள் சொல்லுதலில் அடங்குவது என்ன...??! என்பதுதான்...!

குறை = குறைத்துக் கூறல்

கோள் = இல்லாதன கூறல்

குறைத்துக் கூறல் என்றால்... என்ன 10 இருந்தா 5 கழிச்சுச் சொல்லுறதா...???!

கோள் மூட்டலில் இல்லாதது பொல்லாது எல்லாம் சேர்க்கிறதுதான். குற்றம் குறை எல்லாம் அதில் அடங்கும். ஒருவரைப் பற்றி நல்லதை இட்டுக் கட்டிச் சொன்னாலும் அது கோள் மூட்டல் என்று சொல்லுறதா நான் அறியல்ல. இல்லாத பொல்லாத குறைகளை குற்றங்களை அடுக்கிறதுதான்.. அது..!

நேரிடையாக தேடியும் இதன் பொருள் அமைவது.. எங்கென்று இலகுவாகப் புலப்படுகின்ற போதும்.. ஏன் இவ்வளவு ஆராய்ச்சி என்பது.. விசித்திரமாவே இருக்கு. :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

புறங்கூறுதல் என்ற சொல்லில் இத்தனை குழப்பம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

முதலில் ஒரு விடயம்

புறங்கூறுதல் என்பதும் புறஞ்சொல்லுதல் என்பதும் ஒன்றுதான். வேறுவேறு அல்ல.

அடுத்தது இந்த புறங்கூறுதல் என்ற விடயம் எதை சொல்கிறது என்பதைப் பார்ப்போம்

1. ஏதோ ஒன்று அங்கு கூறப்படுகிறது

2. அந்த ஏதோ ஒன்று ஒருவரைப் பற்றிய குற்றம் குறையாக இருக்கிறது

3. அப்படிச் சொல்லப்படுகின்ற குற்றம் குறை அவர் இல்லாத போது சொல்லப்படுகிறது.

இந்த மூன்று விடயங்களும் மூன்று சொற்களின் மூலம் சொல்லப்படாமல் இரண்டு சொற்களின் மூலம் (புறம் - கூறுதல்) சொல்லப்படுகிறது.

ஆகவே 2வதோ அல்லது 3வதோ இரண்டில் ஒன்றுதான் இங்கே சொல்லப்படுகிறது.

இங்கே சில விடயங்களைச் சிந்தித்துப் பார்ப்போம்

ஒருவரைப் பார்த்து "புறங்கூறாதே" என்று சொல்கின்ற போது, அங்கே "குறை சொல்லாதே" என்ற அர்த்தத்தை விட "நான் இல்லாத போது என்னைப் பற்றிக் குறை சொல்லாதே" என்ற அர்த்தமே வருகிறது. அத்துடன் "குறையை நேரடியாகச் சொல்" என்று கோரிக்கையும் அங்கு தெரிகிறது.

இந்தச் சொல் முன்னிலைப் படுத்துவது குறையை அல்ல. அந்தக் குறையை சம்பந்தப்பட்டவர் இல்லாத போது சொல்வதைத்தான்.

குறை சொல்வதைக் குறிக்க பழிகூறல், குற்றம்கூறல் என்று நிறைய சொற்கள் இருக்கின்றன. இவைகளில் இருந்து "புறங்கூறல்" என்ற சொல் வித்தியாசப்படுகிறது. அர்த்தம் வேறுபடுகிறது.

பாரதியும் சொல்கிறார் "புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா". இதன் அர்த்தம் "குறை சொல்லல் ஆகாது பாப்பா" அல்ல. "ரௌத்ரம் பழகு", "மோதி மிதித்து விடு" என்றெல்லாம் சொன்ன பாரதி குறை சொல்லக்கூடாது என்று சொல்வானா?

குறைகுற்றம் என்றால் அதை துணிந்து சொல், ஆனால் முதுகுக்குப் பின்னால் சொல்லாதே என்பதுதான் பாரதி சொல்வதன் அர்த்தம்.

"புறம்" என்ற சொல்லிற்கு வெளியே, பின்னால் என்ற அர்த்தங்கள் நேரடியாகவே இருக்கின்ற போது, இதில் குறை என்ற சொல் எங்கே என்று தேடுவது அர்த்தம் அற்றது. அந்தச் சொல் மறைந்து நிற்கிறது.

நான் முன்பே சொன்னது போன்று 3 விடயங்களை 2 சொற்கள் மூலம் சொல்லப்படுகின்ற போது, ஒன்று மறைந்துதான் நிற்கும்.

"முதுகுக்குப் பின்னால் பேசுதல்" என்றும் சிலர் சொல்வார்கள். இதிலும் குறை என்ற சொல் இல்லை.

புறம் என்ற சொல்லின் விளக்கம்தான் "முதுகுக்கு பின்னால்" என்பது.

ஒருவர் பற்றி முதுகுக்குப் பின்னால் பேசப்படுகின்ற போதே, அங்கே குற்றம்குறைதான் பேசப்படுகிறது என்பது தெளிவாகி விடுகிறது. ஆகவே இங்கே என்ன பேசப்படுகிறது என்பதை அழுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சம்பந்தப்பட்டவருக்கு புறமாக, முதுகுக்குப் பின்னாலே அவரைப் பற்றி பேசப்படுகிறது என்பதுதான் அழுத்தமாக சொல்ல வேண்டிய விடயம் ஆகிறது.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் போக விட்டு பின்னால்.. பாராட்டிப் பேசுதலும்.. புறம் கூறலாகுமா..??! பூமகள்..!

ஏதோ எனது சிற்றறிவுக்கு பட்டது,இப்ப விளைவு என்ற சொல் நன்மை தீமை இரன்டையும் குறிக்கும்.ஆனால்

விளைவு என்றால் தீமைதான் என்று பொருள் படுகிறது பொதுவாக.அது போலத்தான் நாற்றமும் நாற்றம் என்றால் உன்மையில் நல்ல வாசம்,ஆனால் நாற்றம் என்றவுடன் பொதுவாக எல்லார் மனதிலும் வாறது என்ன

கெட்டவாடை என்பதுதானே.நான் நினைக்கிறேன் அப்படித்தான் புறம் என்ற சொல் என்றாலே குற்றம்,குறை

என்று அர்த்தப்பட்டு இருக்கலாம் என்று.ஆட்கள் இல்லாத இடத்தில் அவர்களின் அருமை பெருமைகளை நம்ம

சனம் பேசும் என்றால் :D:lol:

குறைத்துக் கூறல் என்றால்... என்ன 10 இருந்தா 5 கழிச்சுச் சொல்லுறதா...???!

இப்படி குதர்க்கப் பேச்சு வரும் என தெரிந்தே "தரம் தாழ்த்தி" எனவும் எழுதியுள்ளேன். பார்க்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

முதுகுக்குப் பின்னால் பேசுதல்

புறம் கூறல் என்றால் முதுகுக்குப் பின்னால் பேசுதல்.. என்பது சபேசன் சாரின் அர்த்தம். சரி முதுகுக்குப் பின்னால் நான் உங்களை திட்டினால் என்ன.. புகழ்ந்தால் என்ன..விட்டால் என்ன...???! அதுக்கு பாரதி மிணக்கட்டு ஏன் முக்கியம் கொடுக்க வேண்டும்..??!

பொய் சொல்லல் ஆகாது என்றுவிட்டு.. என்றும் புறஞ்சொல்லல் ஆகாது எங்கிறான்..! மனிதரிடையே குற்றம் குறையை நேரிடையாகச் சொல்.. ஆனால் அதே குற்றங் குறைகளை அவர்கள் இல்லாத சமயத்தில் சொல்லாதே என்பதுதான் அதன் அர்த்தம். புறம் கூறல் என்பது.. குற்றம் குறைகளை.. ஒருவர் இல்லாத சமயத்தில் கோள் முடிவது போல சொல்லுதலாகிறது. எப்பவும் நல்லது சொன்னா.. யாரும் அதைச் சொல்லாத என்று சொல்லமாட்டினம்..! :D

  • தொடங்கியவர்

மனிதரிடையே குற்றம் குறையை நேரிடையாகச் சொல்.. ஆனால் அதே குற்றங் குறைகளை அவர்கள் இல்லாத சமயத்தில் சொல்லாதே என்பதுதான் அதன் அர்த்தம். புறம் கூறல் என்பது.. குற்றம் குறைகளை.. ஒருவர் இல்லாத சமயத்தில் கோள் முடிவது போல சொல்லுதலாகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.