Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
leadaa_02062023_LNN_CMY.jpg?itok=09yQZw7

மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புகளை ஏற்படுத்தி வேலைத்திட்டம்

கனடாவிலுள்ள புலம்பெயர் அமைப்பின் முக்கியஸ்தரான ரோய் சமாதானத்துடன் அமைச்சர் விஜேயதாச மற்றும் மகாநாயக்க தேரர்கள் சந்தித்துரையாடி முன்னோடி வேலைத்திட்டம் முன்னெடுப்பு

தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ மேற்கொண்டுள்ளார்.

கனடாவில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான ரோய் சமாதானம், அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ ஆகியோர் அட்டமஸ்தானாதிபதி மகாநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரரைச் சந்தித்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலங்களில் பெருமளவு மக்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேவை காணப்படுகிறது. அத்துடன் மீண்டும் அதுபோன்ற யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அனைவரும் சமாதானமாக வாழ்வதற்காக தேவையான சூழலை உருவாக்குவது மற்றும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது ரோய் சமாதானம் (Roy Samathanam) கருத்துகளை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த மகாநாயக்க தேரர் கலாநிதி பல்லேகம ஹேமரத்ன தேரர், நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அரசர் காலம் தொட்டே மகாநாயக்க தேரர்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர். அனைத்து மதங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வரவேற்கும் வெளிநாட்டில் வாழும் அனைத்துத் தரப்பினரும் நல்லிணக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென தாம் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.thinakaran.lk/2023/06/03/உள்நாடு/99255/புலம்பெயர்-அமைப்புகள்-ஊடாக-நல்லிணக்கம்

  • Replies 77
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த சமாதானத்திற்குப் பின்னால நிக்கிறவை ஒருதரையும் காணவில்லையே...கொலிடய் கழிக்கப் போனவரோ ?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, alvayan said:

இந்த சமாதானத்திற்குப் பின்னால நிக்கிறவை ஒருதரையும் காணவில்லையே...கொலிடய் கழிக்கப் போனவரோ ?

சமாதானம்,  கொலிடே… போன இடத்தில், ஆமத்துறுவையும் சந்தித்து விட்டு வந்துள்ளார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் இலங்கையில் நிரந்திரமான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றுடன், கனடாவில் உள்ள தமிழ்  அமைப்புக்களை ஒன்றுதிரட்டுவதற்கு கடுமையாக உழைப்பதாகக் கேள்வி. 

ஆனால் வழமைபோல எங்கள் அமைப்புக்களிடையே........

☹️

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் மக்கள் சமாதானமாக எங்கள் விகாரைகளை ஏற்று நிலத்தை அன்பளிப்பு செய்தனர் என்று செய்தி வராமல் இருந்தால் சரி. எது சரி, நல்லிணக்கம் என்று விளக்கமளித்தாலும் பவுத்தம் சாரா இடத்தில விகாரை அமைப்பது ஆக்கிரமிப்பு, திணிப்பேயாகும். அவர்கள் தாம் செய்தவற்றை ஏற்று மனம்வருந்தி மன்னிப்பு கேளாமல் நாமே ஓடிப்போய் செய்யும் எதுவும் நல்லிணக்கமாகாது, அது நமது இயலாத்தன்மை என்று நம்மைநாமே எதிரிக்கு கையளிக்கும் செயற்பாடாகும். அவர்கள்  இன்னும் எங்கள் முதுகின்மேல் ஏறிநின்று வெற்றிக்கதை சொல்ல உதவும். ரணில் பேச்சுவார்த்தை என்று சொல்லி காலத்தை இழுத்தடிக்கும்போது அவரை காப்பாற்றும் செயலாகவே இதை கருத இடமுண்டு. அவர் என்ன பேசப்போகிறார், என்ன அவரிடம் உண்டு தமிழருக்கு கொடுக்க என்பதாவது வெளிவரும்வரை பொறுத்திருங்கள். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்காதீர்கள். எப்போதும் தமிழர் இப்படித்தான்! ஆனால் இதை வைத்து சிங்களவனை மடக்கும் திறமை நம்மவர்க்கு உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

சமாதானம்,  கொலிடே… போன இடத்தில், ஆமத்துறுவையும் சந்தித்து விட்டு வந்துள்ளார். 🤣

9 hours ago, ஏராளன் said:
 
மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புகளை ஏற்படுத்தி வேலைத்திட்டம்

கனடாவில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான ரோய் சமாதானம், அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ ஆகியோர் அட்டமஸ்தானாதிபதி மகாநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரரைச் சந்தித்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

புலம் பெயர் தமிழ் அமைப்புக்களே, உங்களைத்தான் நம்பி இருக்கிறோம். விரைவில் ஒரு நல்லிணக்கத்தை (?) கொண்டுவாருங்கள். உங்கள் முயட்சி நெற்றிபெற வாழ்த்துக்கள். அது சரி, யார் இந்த றோய் சமாதானம்? கனடா வாழ் உறவுகளுக்கு அறிமுகமானவரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயோ..... ஐயோ..... இவரைப்பற்றி ஒரு திரியே ஓடிச்சே! நீங்கள் அறியவில்லையோ? தேடிப்பாருங்கள், அறிவீர்கள்! நாங்கள் சொன்னால் மிகைப்பாடும் குறைப்பாடும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, satan said:

ஐயோ..... ஐயோ..... இவரைப்பற்றி ஒரு திரியே ஓடிச்சே! நீங்கள் அறியவில்லையோ? தேடிப்பாருங்கள், அறிவீர்கள்! நாங்கள் சொன்னால் மிகைப்பாடும் குறைப்பாடும் இருக்கும்.

ஐயோ , அதை நான் மிஸ் பண்ணிவிடடேனே. அப்போ இவர் ஒரு உண்மையான சமாதான தூதுவரா? ஒரு திரியே ஓடி இருக்கிறதென்றால் இதில் ஏதாவது இருக்கிறது என்றுதானே அர்த்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Cruso said:

ஐயோ , அதை நான் மிஸ் பண்ணிவிடடேனே. அப்போ இவர் ஒரு உண்மையான சமாதான தூதுவரா? ஒரு திரியே ஓடி இருக்கிறதென்றால் இதில் ஏதாவது இருக்கிறது என்றுதானே அர்த்தம். 

பொறுமை ....பொறுமை...... கொஞ்சம் பொறுத்திருங்கள்! எல்லா விபரமும் விலாவாரியாக வரும். நான் குறிப்பிடும் ஆள் இவரோ என்பது சந்தேகமாக இருக்கிறது. பொறுத்திருங்கள் உறுதிப்படுத்தப்படும்வரை. ஊர் சுற்றிப்பார்க்க வந்தவரை, வம்பில மாட்டி வேடிக்கை பாக்கிறார்களோ தெரியவில்லை. சிங்களம் ஆடிய நாடகங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஏராளன் said:

அனைத்து மதங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர்

இதனைக் கூறிய பெளத்த காடையனும் நம்பப் போவதில்லை, அவனிடம் ஆசிபெறும் தமிழ்க் கேணையனும் நம்பப்போவதில்லை. 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

இவர் இலங்கையில் நிரந்திரமான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றுடன், கனடாவில் உள்ள தமிழ்  அமைப்புக்களை ஒன்றுதிரட்டுவதற்கு கடுமையாக உழைப்பதாகக் கேள்வி. 

ஆனால் வழமைபோல எங்கள் அமைப்புக்களிடையே........

☹️

31 minutes ago, Cruso said:

யார் இந்த றோய் சமாதானம்? கனடா வாழ் உறவுகளுக்கு அறிமுகமானவரா?

விளக்கம் கோரப்படுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, satan said:

தமிழ் மக்கள் சமாதானமாக எங்கள் விகாரைகளை ஏற்று நிலத்தை அன்பளிப்பு செய்தனர் என்று செய்தி வராமல் இருந்தால் சரி. எது சரி, நல்லிணக்கம் என்று விளக்கமளித்தாலும் பவுத்தம் சாரா இடத்தில விகாரை அமைப்பது ஆக்கிரமிப்பு, திணிப்பேயாகும். அவர்கள் தாம் செய்தவற்றை ஏற்று மனம்வருந்தி மன்னிப்பு கேளாமல் நாமே ஓடிப்போய் செய்யும் எதுவும் நல்லிணக்கமாகாது, அது நமது இயலாத்தன்மை என்று நம்மைநாமே எதிரிக்கு கையளிக்கும் செயற்பாடாகும். அவர்கள்  இன்னும் எங்கள் முதுகின்மேல் ஏறிநின்று வெற்றிக்கதை சொல்ல உதவும். ரணில் பேச்சுவார்த்தை என்று சொல்லி காலத்தை இழுத்தடிக்கும்போது அவரை காப்பாற்றும் செயலாகவே இதை கருத இடமுண்டு. அவர் என்ன பேசப்போகிறார், என்ன அவரிடம் உண்டு தமிழருக்கு கொடுக்க என்பதாவது வெளிவரும்வரை பொறுத்திருங்கள். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்காதீர்கள். எப்போதும் தமிழர் இப்படித்தான்! ஆனால் இதை வைத்து சிங்களவனை மடக்கும் திறமை நம்மவர்க்கு உண்டா?

தமிழரை அழித்து, அடக்கி அடிமைப்படுத்திவிட்டு எமது சமாதிகள் மீது நின்று வெற்றிமமதையில் கொக்கரிக்கும் சிங்களக் காடையர்கள் எம்முடன் சமாதானமும், நல்லிணக்கமும் செய்யப்போவதில்லை. அவனின் வெற்றியையும், எம்மீதான ஆக்கிரமிப்பையும் நாம் ஏற்றுக்கொண்டு, அவன் எம்மீது புரிந்த இனக்கொலையினை மறந்துவிட்டு அவனின் காலில் விழுந்தால் ஒழிய எம்முடன் அவன் நல்லிணக்கம் செய்யப்போவதில்லை. அப்படியிருந்தாலும்கூட எமக்கு எமது நாடு கிடைக்கப்போவதில்லை.

இதற்கு ஒரே வழிதான் இருக்கு. தலைவரின் வழியே அது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, satan said:

விளக்கம் கோரப்படுகிறது!

அவ்சரப்பட வேண்டாம்....மாதச்சம்பளம் பெறுபவர் என்றுதான் வதந்தி....தனிநபர்  வரும்படிவேண்டி ...தலதாக்குபோனவராம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, alvayan said:

அவ்சரப்பட வேண்டாம்....மாதச்சம்பளம் பெறுபவர் என்றுதான் வதந்தி....தனிநபர்  வரும்படிவேண்டி ...தலதாக்குபோனவராம்..

29 minutes ago, satan said:

 ஊர் சுற்றிப்பார்க்க வந்தவரை, வம்பில மாட்டி வேடிக்கை பாக்கிறார்களோ தெரியவில்லை. சிங்களம் ஆடிய நாடகங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

இவரை  வைத்து புலம்பெயர்ந்தோரை வளைத்துப்போட, இருந்தாலும் இவர்களுக்கு நடுவில் ஒரு தரகர் இருந்திருப்பாரே! அவர் யாரோ?

7 hours ago, தமிழ் சிறி said:

சமாதானம்,  கொலிடே… போன இடத்தில், ஆமத்துறுவையும் சந்தித்து விட்டு வந்துள்ளார். 🤣

சந்தித்ததும் தப்பில்லை,  படம் பிடித்தார் பாருங்கள், அங்கேதான் தப்பு பண்ணிவிட்டார்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

இதற்கு ஒரே வழிதான் இருக்கு. தலைவரின் வழியே அது. 

தமிழீழ்த்தை தந்தால் என்ன செய்வீர்கள்? 

நாம் அதற்குத் தகுதியானவர்கள்தானா? 

1 hour ago, alvayan said:

அவ்சரப்பட வேண்டாம்....மாதச்சம்பளம் பெறுபவர் என்றுதான் வதந்தி....தனிநபர்  வரும்படிவேண்டி ...தலதாக்குபோனவராம்..

எங்களவ்ர்கள் யாரும் ஒருவரைத்தானும் நல்லவராக கூறியுள்ளார்களா? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, Kapithan said:

தமிழீழ்த்தை தந்தால் என்ன செய்வீர்கள்? 

நாம் அதற்குத் தகுதியானவர்கள்தானா? 

எங்களவ்ர்கள் யாரும் ஒருவரைத்தானும் நல்லவராக கூறியுள்ளார்களா? 

இவரைப்பற்றி உங்களூக்குத்தான்  நல்லாத்தெரியும் ..அவிட்டு விடுங்கோ...ஒருவர் தலைவர் வழிதான் சரி என்று சொல்ல ...குறுக்கை வாறியள்..... சமாதானம் செய்யிற சமாதானம்...உங்களுக்கு கூட்டுத்தானே

Edited by alvayan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kapithan said:

தமிழீழ்த்தை தந்தால் என்ன செய்வீர்கள்? 

சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்.

13 minutes ago, Kapithan said:

நாம் அதற்குத் தகுதியானவர்கள்தானா? 

ஆம், தகுதியானவர்கள் தான். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

இதனைக் கூறிய பெளத்த காடையனும் நம்பப் போவதில்லை, அவனிடம் ஆசிபெறும் தமிழ்க் கேணையனும் நம்பப்போவதில்லை. 

எல்லாம் புலுடா கேஸுகள்! 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்.

ஆம், தகுதியானவர்கள் தான். 

அவரிடம்  தமிழ் ஈழம் உண்டு....அதாவது வைத்திருக்கிறார்...அவர் விரும்பும் நபருக்கு அதனை அவரால் கொடுக்கவும் முடியும்.....நீங்கள் கனடாவில் போய் பெற்றுக் கொள்கிறீர்களா.??. அல்லது  பார்சாலில் அவுஸ்திரேலியாவுக்கு   அனுப்பி வைக்கவ?? 🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kandiah57 said:

அவரிடம்  தமிழ் ஈழம் உண்டு....அதாவது வைத்திருக்கிறார்...அவர் விரும்பும் நபருக்கு அதனை அவரால் கொடுக்கவும் முடியும்.....நீங்கள் கனடாவில் போய் பெற்றுக் கொள்கிறீர்களா.??. அல்லது  பார்சாலில் அவுஸ்திரேலியாவுக்கு   அனுப்பி வைக்கவ?? 🤣

உந்த லொள்ளுத்தானே வேண்டாம் எண்டுறது ?!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஏராளன் said:
leadaa_02062023_LNN_CMY.jpg?itok=09yQZw7

மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புகளை ஏற்படுத்தி வேலைத்திட்டம்

கனடாவிலுள்ள புலம்பெயர் அமைப்பின் முக்கியஸ்தரான ரோய் சமாதானத்துடன் அமைச்சர் விஜேயதாச மற்றும் மகாநாயக்க தேரர்கள் சந்தித்துரையாடி முன்னோடி வேலைத்திட்டம் முன்னெடுப்பு

தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ மேற்கொண்டுள்ளார்.

கனடாவில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான ரோய் சமாதானம், அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ ஆகியோர் அட்டமஸ்தானாதிபதி மகாநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரரைச் சந்தித்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலங்களில் பெருமளவு மக்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேவை காணப்படுகிறது. அத்துடன் மீண்டும் அதுபோன்ற யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அனைவரும் சமாதானமாக வாழ்வதற்காக தேவையான சூழலை உருவாக்குவது மற்றும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது ரோய் சமாதானம் (Roy Samathanam) கருத்துகளை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த மகாநாயக்க தேரர் கலாநிதி பல்லேகம ஹேமரத்ன தேரர், நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அரசர் காலம் தொட்டே மகாநாயக்க தேரர்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர். அனைத்து மதங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வரவேற்கும் வெளிநாட்டில் வாழும் அனைத்துத் தரப்பினரும் நல்லிணக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென தாம் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.thinakaran.lk/2023/06/03/உள்நாடு/99255/புலம்பெயர்-அமைப்புகள்-ஊடாக-நல்லிணக்கம்

தமிழருடன்  பேச்சுவார்த்தை நடத்தாமல்    நல்லிணக்கம் ஏற்படுத்தும் அற்றலுடைய  திறமைசாலிகள்……………… சிங்களவர்களில்  இல்லையா??  முதலில்   குற்றவாளிகள் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக அமைச்சர்களாக  இருந்தால்  சுயாதினமாக.  நீதிமன்றம் விசாரித்து உரிய கூடிய பட்ச தண்டனை” வழங்கட்டும்...நல்லிணக்கம்   வந்து விடும்    பாராளுமன்றத்தில் உழைக்கும் நோக்கமுடையோர்.  கூடி இருப்பது தான்   முதல் பெரிய பிரச்சனை    இதற்கு ஒரு தீர்வு காணுங்கள்    நல்லிணக்கம் ஏற்பட்டு விடும்    

30 minutes ago, ரஞ்சித் said:

உந்த லொள்ளுத்தானே வேண்டாம் எண்டுறது ?!

ஒகே சரி  ஏற்றுக்கொள்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Kandiah57 said:

ஒகே சரி  ஏற்றுக்கொள்கிறேன்

ரொம்பப் பெ....ரி....ய.... மனசு உங்களுக்கு! 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

ரொம்பப் பெ....ரி....ய.... மனசு உங்களுக்கு! 

நன்றிகள் சாத்தன்.  கபிதனுக்கு  ..தமிழ் மக்கள்  ஒரு நாட்டை பெற்று வாழ தகதி இல்லாதவர்கள்  என்ற எண்ணம்..நினைவு இருக்கிறது  ..அதனால் தான்   மேற்படி கேள்வியை கேட்டார்   ...நாடு கிடைத்து ஒழுங்கான அரச இயந்திரம் அமையுமானால்.  தமிழ் மக்கள் இந்த உலகில்…………… சிறப்பாக வாழ்வார்கள்  என்று உறுதியாக நம்புகிறேன்...........ஒரு அரச....பேதைப்பொருள். பாவனையும்  வழங்கி கொண்டு   வாள் வெட்டு குழுக்களையும்.  ஊக்கிவித்து கொண்டு .......தமிழர்களை   குறை சொல்ல முடியுமா  ?    ஆகவே தான்   அவ்வாறு எழுதினேன்    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரஞ்சித் said:

சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்.

ஆம், தகுதியானவர்கள் தான். 

சும்மா  பகிடி விடாதேயுங்கோ ரஞ்சித். பகிடிக்கும் அளவு வேண்டாமா? 

கடந்த 15 வருடங்களாக ஒரு துரும்பைத்தானும் தூக்கிப்போட முடியாதவர்களிடம் தமிழீழத்தைத் கொடுத்தால் பஞ்சுப்பொதி சுமந்த கழுதை ஆற்றைக் கடந்த கதையாகத்தான் முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

நன்றிகள் சாத்தன்.  கபிதனுக்கு  ..தமிழ் மக்கள்  ஒரு நாட்டை பெற்று வாழ தகதி இல்லாதவர்கள்  என்ற எண்ணம்..நினைவு இருக்கிறது  ..அதனால் தான்   மேற்படி கேள்வியை கேட்டார்   ...நாடு கிடைத்து ஒழுங்கான அரச இயந்திரம் அமையுமானால்.  தமிழ் மக்கள் இந்த உலகில்…………… சிறப்பாக வாழ்வார்கள்  என்று உறுதியாக நம்புகிறேன்...........ஒரு அரச....பேதைப்பொருள். பாவனையும்  வழங்கி கொண்டு   வாள் வெட்டு குழுக்களையும்.  ஊக்கிவித்து கொண்டு .......தமிழர்களை   குறை சொல்ல முடியுமா  ?    ஆகவே தான்   அவ்வாறு எழுதினேன்    

எங்கள் பலவீனங்களையம், பலத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் சரியான பாதையில் பயணிப்பதற்கான முதற்படி. 

பிரபாகரன் என்கிற ஒற்றைச் சொல்தான் எங்கள் எல்லோரினதும் த்க்ஷ்லைமுடியைப் பிடித்து ஒன்றாகத் தூக்கி கட்ட்டிவைத்திருந்த மந்திரச் சொல். 

அந்தப் பிரபாகரன் என்னும் தலைமை இல்லை என்றவுடன்  நாங்கள் எல்லோரும் சிதறிய சீட்டுக்கட்டாக மாறிவிட்டோம். 

இந்த நிலையில்  தமிழீழத்தை தந்தால் குரங்கின் கைப் பூமாலைதான். 

இன்னும் 10 வருடங்கள் இருந்து பாருங்கள். இலங்கையில் இனப் பிரச்சனைக்கான அடிப்படையே இல்லாமல் போய்விடும். 

அங்கே தமிழ்ப் பெளத்தர்களும், சிங்களப் பெளத்தர்களும் ஒன்றாக வெசாக் கொன்றாடுவார்கள். முசிலிம்கள் இரண்டாம் சிறுபான்மையினர் எனும் நிலைக்கு வந்துவிடுவார்கள். 

எஞ்சிய தமிழர்கள் மும்மொழியும் பேசிக்கொண்டே Canada வுக்கும் Australia வுக்கும் குடிபெயர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை செய்வார்கள். வெளிநாடுகளில் வாழும் கொஞ்சநஞ்ச தாயகப் பற்றாளர்கள் இலங்கையில் போய் retire செய்ய ஆவன செய்துகொண்டிருப்பார்கள். 

அப்போது, யாழ் களத்தில் நின்று அடிபட ஒருவரும் இருக்கப்போவதில்லை. 

அடுத்த சில வருடங்களுக்குள் ஏதாவது  தீர்வு ஒன்று வராவிட்டால் இதுதான் எங்கள் நிலை. 

  • Like 1
  • Thanks 1
  • Sad 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.