Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைது

Published By: Rajeeban

05 Jun, 2023 | 07:53 AM
image
 
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

Fxt3ggxWIAYPxrA.jpg

ஜுன் இரண்டாம் திகதி மருதங்ககேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்ததாக அருள்மதியின் கணவர் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி பொலீசாரினால்‌ அருள்மதிகைது செய்யப்பட்டுள்ளார்..

தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிரான ஜனநாயக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தததையடுத்து இவருக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது

நேற்று அருள்மதியின் வீட்டிற்கு சென்ற இருவர் தாங்கள் இராணுவபுலனாய்வாளர்கள் என தெரிவித்து அருள்மதி விரைவில் கைதுசெய்யப்படுவார் என எச்சரித்துவிட்டு சென்றிருந்தனர்
 
https://www.virakesari.lk/article/156920

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இவர் மட்டுமல்ல, கஜேந்திர குமார் அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று அழைப்பு விடுத்தவர், இப்போ எங்கே போய் விட்டார்? எதற்கு திரள வேண்டுமாம்? ஒரு சிலர் போராடினால்; இது தனிப்பட்ட போராட்டமாகவே கருதப்படும், அடக்கப்படும். போராடாமல், எங்களுக்கு பிரச்சனை இருக்கு, அதை நீங்கள் தீருங்கள் என்று எப்படி கேட்க முடியும்? பேச்சுவார்த்தைக்கு போக, அழைக்க இது என்ன குடும்பப் பிரச்சனையா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்! மக்களின் பிரச்சனையில், இழப்பில் உங்களுக்கு பங்கு இல்லை, அக்கறை இல்லையென்றால் மக்கள் ஏன் உங்களை தங்கள் பிரதிநிதிகளாக தெரிந்தெடுக்க வேண்டும்? அவர்களே தனித்து போராடவேண்டும், தங்களை காத்துக்கொள்ள வேண்டுமென்றால்; நீங்கள் எதற்கு? அவர்கள் பெயரால் வீடு சொத்துக்களை சேர்த்து அனுபவிப்பதற்கா?

  • கருத்துக்கள உறவுகள்

வற்றாப்பளை ஆலயத்தில் கைதான அரசியல் பிரமுகர் | Political Figure Arrested In Varipalaya Temple

வற்றாப்பளை ஆலயத்தில் கைதான அரசியல் பிரமுகர்

 முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

செயற்பாட்டாளர்  ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் அவர் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டுள்ளார்.

வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்ற பொலிஸார்

கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்  மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆலயத்தில் பொங்கல் நிகழ்விற்காக வந்திருந்த வேளை இவர் பொலிஸாரால் வாகனத்தில் ஏற்றிசெல்லப்பட்டுள்ளமை விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

அதேசமயம் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்த  தகவல் வெளியாகவில்லை.

https://jvpnews.com/article/political-figure-arrested-in-varipalaya-temple-1686027922

தன்  சொந்த பிரதேசத்தில் வேறு கட்சிகளை அரசியல் செய்யவிட சுமந்திரன் என்ன முட்டாளா ? இந்த கைதுகளுக்கு பின்னால் சுமந்திரனும் கைகோர்த்திருப்பது விரைவில் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நல்லதம்பி said:

தன்  சொந்த பிரதேசத்தில் வேறு கட்சிகளை அரசியல் செய்யவிட சுமந்திரன் என்ன முட்டாளா ? இந்த கைதுகளுக்கு பின்னால் சுமந்திரனும் கைகோர்த்திருப்பது விரைவில் வெளிவரும்.

தம்பி, நல்லதம்பி, டக்கியர் சொன்ன புத்திமதியை கேட்டீர்களா?

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. தாம் மட்டுமே போராடுறோம் என்று பறைசாற்ற முயன்று மாற்றுக்கட்சிகள் வராமல் மக்களும் காணாமல், போலீஸ்காரர் பிரித்து மேய்ந்து கைது வரை போய்விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Nathamuni said:

தம்பி, நல்லதம்பி, டக்கியர் சொன்ன புத்திமதியை கேட்டீர்களா?

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. தாம் மட்டுமே போராடுறோம் என்று பறைசாற்ற முயன்று மாற்றுக்கட்சிகள் வராமல் மக்களும் காணாமல், போலீஸ்காரர் பிரித்து மேய்ந்து கைது வரை போய்விட்டார்கள்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு எண்டது சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்குத்தான் சரி.... தமிழ் அரசியல்வாதிகளுக்கு நாலு மூலைக்கும் பிரம்புடன் நின்றால் தான் மிடுக்கு....:cool:

பழைய வரலாறுகள் அதைத்தான் சொல்லுது..😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தம்பி, நல்லதம்பி, டக்கியர் சொன்ன புத்திமதியை கேட்டீர்களா?

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. தாம் மட்டுமே போராடுறோம் என்று பறைசாற்ற முயன்று மாற்றுக்கட்சிகள் வராமல் மக்களும் காணாமல், போலீஸ்காரர் பிரித்து மேய்ந்து கைது வரை போய்விட்டார்கள்.

ஆடத்தெரியாதவள் அரங்கு பிழை என்றாளாம். விகாரை கட்ட ஆரம்பிக்கும்போதே அறிவிக்கப்பட்டது, அப்போவெல்லாம் பாராமுகமாய் இருந்துவிட்டு இப்போ ஆளையாள் குறை கூறுவதால் அவர்கள் செய்வது எல்லாம் சரியென்று இல்லை. பிரித்தானிய பிரதமர் யாழ் வந்தபோது இதே த. தே. கூட்டமைப்பினர் யாழ் நூலகத்திலிருந்து பின்வாசல் வழியாக வெளியேறும்போதும் மக்களோடு பாதிரிமாரும் செ. கஜேந்திரனும் அனந்தியும் தான் போராடினார்கள். இவர்கள் ஏன் மறைந்து ஓடினார்கள்? போராட வந்த இவர்களை யார் தடுத்தார்கள் போராட வேண்டாம் என்று? இவர்களே போராட்டத்தை ஆரம்பித்திருக்கலாமே? யார் வேண்டாம் என்றார்கள், தடுத்தார்கள்? ஏன் காணாமற்போன உறவுகளை தேடி தெருத்தெருவாக அலையும் உறவுகளை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கலாமே? யார் தடுத்தது இவர்களை? யாராவது  முன்னின்று செய்தால் இப்படிதான் குறைசொல்வது.  முன்பு, பொங்குதமிழ் என்று நினைக்கிறேன் செய்யும்போது சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார் தாங்கள் அதற்கு ஆதரவு வழங்கப்போவதில்லையென. அது மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்றபின் ஊர்வலம் என்றவுடன் முன்னுக்கு தன்னை முன்னிறுத்தி வந்துவிடுவார். இதுவும் அவரை முதன்மைப்படுத்தியிருந்தால்  வந்திருப்பார்.

இதே டக்கியர்தான் சொன்னவர், அது பொதுவான காணியில் விகாரை கட்டுகிறார்கள் என்று நினைத்தேன், இப்ப கட்டிய விகாரையை இடிக்க முடியாது, உரியவர்களுக்கு  வேறு காணி தரலாம் என்று. இதை சொல்வதற்கா திரள சொல்லி அழைக்கிறார்? அவரும், தனது ஈனத்தனமான அரசியலுக்கு எல்லோரும் தனக்கு கீழ் திரளவேண்டுமென்று எதிர்பார்க்கிறார். இவர் தமிழருக்கு என்ன நன்மை செய்தார் என்று இவரோடு திரளுவது? அல்லது இவரை சேர்த்து திரட்டுவது? 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

டக்கியர் நிலைப்பாடு சரியென்று சொல்லவில்லை. ஆனால் சொன்ன பழமொழி சரியானது.

இங்கே, ஆரம்பத்தில் அங்கஜன், சுமந்திரன் மாவை இருந்தார்களே!

ஏன் இப்போது இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஏன் வரவில்லை என்பது அவர்களை கேட்டாத்தான் தெரியும். ஒருக்கா தலையை காட்டினால் போதும், மக்கள் தங்களைநினைவில் வைத்திருப்பார்கள் என்று நினைத்திருக்கலாம், தட்டு வைத்து அழைப்பார்கள் என்று காத்திருந்திருக்கலாம். இவர்கள் செய்யும் போராட்டத்திற்கு  தாங்கள் வரவோ என்கிற வெறுப்பாகவுமிருக்கலாம். ஏன், பொசன் விகாரை திறப்பு விழா அன்று எல்லோரும் வந்து உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்களே, அவர்களுக்கு கிடைக்கவில்லையோ அல்லது வேறு அழைப்புக்காக காத்திருந்தார்களோ என்னவோ? அவர்கள் ரணிலுக்கு நெருக்கடி ஏற்படுத்த விரும்ப மாட்டார்கள், தேர்தலுக்கு ஆயத்தம் செய்யும் நேரமிது. செ. கஜேந்திரனும் மக்களும் இரவிரவாக போராடினார்கள், தடுத்தும் வைக்கப்பட்டார்கள். அவர்களை பார்வையிட அனுமதிக்குமாறு சுகாஷ் போலீசாருடன் தர்க்கமும் பட்டிருந்தார்.    மறுநாள் மாவையரும் சுமந்திரனும் பார்வையிட வந்தார்கள். அவர்களுடன் கஜேந்திரன் சுமுகமாக உரையாடி நடந்தவற்றை விளக்கினார். ஆனால் அவர்கள் பார்வையிடவும் உரையாடவும் மட்டுந்தான் வந்தவர்கள்போல் உள்ளது. மக்கள் மேல் அவர்களுக்குள்ள அக்கறைதான் தெரியுமே. தங்களை முன்னிலைப்படுத்தவேண்டும், தாங்கள் சொல்வதைத்தான் எல்லோரும் ஆமோதிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு. மக்களின் ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் அவர்களின் ஈகோவுக்கு முன்   ஒன்றுமேயில்லை. நான் இங்கு எல்லா தமிழ்க் கட்சியையுந்தான் சொல்லுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்களும் பிணையில் செல்ல அனுமதி

Published By: DIGITAL DESK 3

07 JUN, 2023 | 12:24 PM
image
 
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மருதங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய முன்னணியின்  உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (07) மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து பிணையில்  செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  அடுத்த மாதம் 14ஆம் திகதி தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/157147

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை

மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை

தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இருவர் தொடர்பான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று (07) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் இருவரும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எதிர் தரப்பு சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

கடந்த 03 ஆம் திகதி அன்று வடமராட்சி கிழக்கு தளையடி பொது விளையாட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்த போது அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவினர்.

மேலும் அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்கப்பட்ட போது அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிய சம்பவம் தொடர்பிலும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 05 ஆம் திகதி அதிகாலை மருதங்கேணி பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் அன்றைய தினம் மற்றுமொரு சந்தேக நபரான உதயசிவமும் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இருவரும் நீதிமன்றம் முன்னிலைப் படுத்தப்பட்டனர். குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்தக் கொண்ட நீதவான் இருவரையும் 7 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.