Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுமாறன் ஐயாவின் உண்ணாநிலைப் போராட்டம்.

Featured Replies

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் சென்னையில் இன்று வியாழக்கிழமையும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

மேலும் வாசிக்க

  • Replies 53
  • Views 7.2k
  • Created
  • Last Reply

நெடுமாறன் அண்ணாவுக்கு 74 வயது ஆகிவிட்டது... அவரின் உடல் நலம் தான் இப்பொதைக்கு தமிழருக்கு உற்சாகத்தை தரும்... அவர் நலமாக இருக்கிறார் என்னும் செய்திதான் சிங்களவருக்கோ அதிகார வர்க்கத்துக்கோ கலக்கத்தை தரும்...!

இந்திய அரசுக்கு தன் பிரஜைகள் முக்கியமல்ல அவர்களுக்கு முக்கியம் தமிழனை கொல்லுவதுதான் முக்கியம் நெடுமாறன் ஜயாவின் உடல்நிலையும் அவரது நலனுமே ஈழத்தமிழருக்கு பலம்

இந்திய அரசின் பாராமுகம் பற்றி லீனா எனப்படும் வலைபதிவாளரின் பதிவு

விழிப்புணர்வு என்றால்………

ஐரோப்பாவில் ஒரு நாடு,

அந்த நாட்டின் குடி மகன் ஒருவன்,

மலேசியாவில் போதைப் பொருள் வைத்திருந்தான் என்று கைது செய்யப்பட்டான்.

அவனுக்கு மரண தண்டனை என்று மலேசிய அரசு தீர்ப்பளித்தது.

என்ன நடந்தது………….

அந்த ஐரோப்பிய நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளும் அலறின.

எங்கள் நாட்டுப் பிரஜையைக் காப்பாற்று என அந்த நாட்டின் அரசை வற்புறுத்தின.

மலேசியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது அரசு.

தலை கீழாய் நின்று தனது குடிமகனை விடுவித்தது.

ஐரோப்பாவில் இன்னுமொரு நாடு.

அங்கும் ஒரு இளைஞன் ஒருவன்,

மிகவும் கட்டுப்பாடான வேறு ஒரு நாட்டில்,

பதினைந்து வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான்.

அவனுக்கும் அந்த நாட்டு அரசு மரண தண்டனை விதித்தது.

அப்போதும் தனது நாட்டுப் பிரஜைக்காக வாதாடி தன் குடிமகனை மீட்டது அந்த நாட்டு அரசு.

ஆனால் வரிசையாக அந்நிய நாட்டின் கடற்படையால்,

கொல்லப்பட்டும், கடத்தப்பட்டும் சீரளியும் மீனவ மக்களைப் பற்றி,

எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு நாடு இருப்பது வேதனையாக இல்லையா?

மேற்படி சம்பவங்களில் விடுவிக்கப் பட்டவரகள் மிக மோசமான குற்றவாளிகள்.

அவர்களையே தன் நாட்டுப் பிரஜை என்பதால் காப்பாற்றுகிறது அவர்கள் அரசு.

ஆனால் இங்கோ அப்பாவிப் பொதுமகன் மடிகிறான். கண்டு கொள்ள யாருமே இல்லை.

என்ன இது……..?

ஏனிந்த அலட்சியம்?

இறப்பவன் தமிழன் என்பதாலா? அல்லது ஏழை என்பதாலா?

இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று நினக்கும் மக்கள்,

இதை எப்படி கண்டு கொள்ளாமல் விடுகிறார்கள்.

ஒரு நடிகனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்,

ஏன் ஒரு உயிருக்குக் கொடுக்க முடியாமல் இருக்கிறோம்.

எங்கே தப்பு நடக்கிறது?

விழிப்புணர்வு… விழிப்புணர்வு என்கிறோமே…….

அது எப்போது ஏற்படும் எமக்கு.

http://leenaroy.wordpress.com

நெடுமாறன் ஐயாவின் நீண்டகால அயராத ஆதரவிற்காக எமது நன்றிகள்.

மனிதாபிமான உதவியைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் தமிழ்நாடு தனது தன்மானத்தைக் காத்துக் கொண்டது.

ஈழத் தமிழர் தொடர்பான பிரச்சனை என்பதாலோ என்னவோ சர்வதேச செய்தி நிறுவனங்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயாவின் கோரிக்கையை ஜனநாயகம் பற்றி கதைவிடும் இந்திய அரசு என்ன செய்யப்போகின்றது என்று பார்ப்போம். ஐயாவின் உடல்நிலை மிக பெரிய பிரச்சனை.அவரின் உடல்நிலை தேறவும் ,கோரிக்கை வெற்றி பெறவும் தமிழ் மக்கள் எல்லோரும் பிராத்திப்போமாக.நெடுமாறன் ஐயாவின் சேவை தொடர்ந்து கிடைக்கவேண்டும்.

அகிம்சை தேசம் அகிம்ஸைக்கு கொடுக்கும் மரியாதையை பாருங்கள்

நெடுமாறன் உண்ணாவிரதம் - படம் பிடித்த

பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்

வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007

சென்னை:

சென்னையில் இன்று காலை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் டிவி நிருபர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். சட்டையைப் பிடித்தும், கழுத்தைப் பிடித்தும் போலீஸார் தள்ளியதால் பத்திரிக்கையாளர்கள் ஆவேசமடைந்தனர்.

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை படகுகள் மூலம் எடுத்துச் செல்லும் போராட்டத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று நாகையில் மேற்கொண்டார். அப்போது போலீஸார் நெடுமாறன் உள்ளிட்ட 500 பேரைக் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து யாழ்ப்பாணத்தில் தவித்து வரும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க அனுமதி வழங்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதாக நெடுமாறன் அறிவித்தார்.

இன்று காலை சென்னை வந்த நெடுமாறன், கோயம்பேட்டில் உள்ள தமிழர் தேசிய இயக்க ஆதரவாளர் ஒருவருக்குச் சொந்தமான ஒரு கட்டட வளாகத்தில் தனது 2வது நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

இதையடுத்து அங்கு பத்திரிக்கையாளர்கள், டிவி நிருபர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள் அங்கு விரைந்தனர்.

அங்கு வந்த போலீஸார், உண்ணாவிரதம் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலைப் பிரித்து எறிந்தனர். மேலும், நெடுமாறனையும் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் இல்லாவிட்டால் கைது செய்வோம் என எச்சரித்தனர்.

ஆனால் போலீஸாரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். அவருடன் இருந்த தமிழர் தேசிய இயக்கப் பிரமுகர்கள், போலீஸாருடன் வாக்குவாதம் புரிந்தனர்.

இதை டிவி வீடியோகிராபர்கள் படம் எடுத்தனர். அப்போது ஆவேசமடைந்த சில போலீஸார் அவர்களை படம் எடுக்கக் கூடாது என தடுத்தனர். ஒரு செய்தியை சேகரிப்பதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை, என்று செய்தியாளர்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது ஒரு காவல்துறை அதிகாரி ஒரு வீடியோகிராபரை கழுத்தைப் பிடித்து வேகமாக தள்ளினார். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதைப் பார்த்து கொதிப்படைந்த செய்தியாளர்கள் அந்த போலீஸ் அதிகாரியை சூழ்ந்து கொண்டு கடுமையாக வாதிட்டனர். செய்தி சேகரிப்பவரை சட்டையைப் பிடித்தும், கழுத்தைப் பிடித்தும் தள்ளி ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று ஆவேசமாக கேட்டனர். அவர்களை மற்ற போலீஸார் சமாதானப்படுத்தினர்.

நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதம் இருந்து வரும் நெடுமாறனை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்த வைகோ, நெடுமாறனின் உடல் நலனையும் விசாரித்தார்.

ஈழத் தமிழர்களின் நலனுக்காக உண்ணாவிரதம் இருக்கும் நெடுமாறனைக் கைது செய்ய போலீஸார் முயற்சித்ததற்கும் வைகோ கண்டனம் தெரிவித்தார்.

http://thatstamil.oneindia.in/news/2007/09...umara-fast.html

உண்மையான தமிழின உணர்வோடு எமக்காக போராடும்

அந்த தியாக உள்ளத்திற்கு நன்றி தெரிவிப்பதோடு

அவரது உடல் நலத்திறகாய் இறைவனை வேண்டுகிறேன்.

சிறிலங்கா அரசின் பொருளாதாரத் தடையால் யாழ் குடாவில் அல்லலுறும் மக்களிற்கு கொடுப்பதற்கு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி வழங்கக் கோரி உண்ணாநிலைப் போராட்டத்தை திரு பழ நெடுமாறன் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.

இவரை தமிழ் நாட்டில் உள்ள பல தமிழ் உணர்வாளர்கள் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ. க மணி உட்பட பல தலைவர்கள் பழ. நெடுமாறனை சந்தித்துள்ளார்கள்.

இந் நிலையில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்பொழுது கலைஞர் தான் பழ. நெடுமாறன் அவர்களை எப்பொழுது வேண்டும் என்றாலும் சந்தித்துப் பேசத் தயாராக இருப்பதாகவும், நிவாரணப் பொருட்கள் விடயத்தில் தன்னால் ஆனதைச் செய்வேன் என்றும், தான் ஈழத் தமிழ் மக்கள் மீது அன்பும் ஆதரவும் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து பழ. நெடுமாறன் அவர்களை உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடும்படி கோரி திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் சுப. வீரபாண்டியன் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கலைஞருடைய செய்தியுடனேயே திருமாவளவன் அவர்களும் பழ. நெடுமாறனை சந்தித்திருக்கக் கூடம் என்று நம்பப்படுகிறது. திருமாவளவனும், சுப. வீரபாண்டியனும் பழ. நெடுமாறன் அவர்களை கலைஞருடன் சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

கலைஞரின் அழைப்புக் குறித்து பழ. நெடுமாறன் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை அறியமுடியவில்லை.

செய்தி மூலம் : http://www.webeelam.com

தமிழினத் தலைவர் என்று கூறிக் கொள்ளும் ஒருவர் தூக்கத்தில்; இருந்து எழ முயற்சிக்கிறார் போலும்.

தமிழினத் தலைவர் என்று கூறிக் கொள்ளும் ஒருவர் தூக்கத்தில்; இருந்து எழ முயற்சிக்கிறார் போலும்.

நீங்கள் சொல்லுவது தவறு தூங்கும் போது இடைஞ்சலாக வரும் நெடுமாறன் ஜயாவின் சத்தத்தை நிப்பாட்டி விட்டு மீண்டும் தூங்கி விடுவார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நம்பாதையுங்கோ, நம்பாதையுங்கோ, நம்பாதையுங்கோ...

கலையின் சிகரம், கவிதையின் நாயகன், கற்பனையின் கோபுரம்.

இப்படிப்பட்டவர்களிடம் நிஷத்தை எதிர்பார்க்கமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஜயாவிற்கு இதயங்கனிந்த நன்றிகள்!

நெடுமாறனின் உண்ணா நிலைப் போராட்டத்தை எடுத்துக்கூறி உதவிகள் சென்றடைய உதவுங்கள்

பழ. நெடுமாறன் அவர்களின் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்ட நியாயத்தை எடுத்துக்கூறி தாயகத்தில் அல்லறும் தமிழ் மக்களுக்கான உதவிகளைச் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவசர வேண்டுதல் கடிதங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதற்கான முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

ICRC International Committee of the Red Cross

Address by the President of the ICRC, Dr. Jakob Kellenberger

ICRC headquarters in Geneva

Postal address

International Committee of the Red Cross

19 avenue de la Paix

CH 1202 Geneva

Fax ICRC general: 00 41 (22) 733 20 57

Production, Multimedia, Distribution Division: ++ 41 (22) 730 27 68

Phone 00 41 (22) 734 60 01

Udo Wagner-Meige

Deputy Head of Operations

for Central and South Asia

Direct Line 0041 22 730 22 75

Switchhboard 00 41 22 734 6001

Mobile 00 41 79 217 32 23

Fax 0041 22 733 20 57

E-mail: uwagner.gva@icrc.org

press.gva@icrc.org only for press and media contacts

Head of mission : Mr TOWNSEND Pierre

Sri Lanka

ICRC delegation

29, Layards Road

COLOMBO 5

P.O.BOX 2100Tel.: (+94) 112 503 346 / 112 503 347

Fax: (+94) 112 503 348

e-mail colombo.col@icrc.org

Head of delegation : Mr VANDENHOVE Toon

Media contact person: Mr VIGNATI Davide Giuseppe

Mobile: (+94) 777 289 682

Languages spoken: French / English / German / Italian

India

ICRC regional delegation

for South Asia

47, Sunder Nagar

NEW DELHI 110 003

(covers Bangladesh, Bhutan, India, Maldives)

Tel.: (++91) 11 422 110 00

Fax: (++91) 11 422 110 68/69

e-mail new_delhi.del@icrc.org

Head of regional delegation : Mr NICOD Vincent

Media contact person: Mr STOLL Philippe Marc

Mobile: (++91) 98 71 798 385

Languages spoken: English

ICRC Delegation to the UN

801, Second Avenue,

18th Floor,

NEW YORK, N.Y. 10017-4706 / USA

Tel.: (++1212) 599 6021

Fax: (++1212) 599 6009

e-mail email.nyc@icrc.org

ICRC Delegation to the European Union

65, rue Belliard

1040 BRUSSELS

Belgium

e-mail bruxelles.bru@icrc.org

நன்றி :பதிவு.கொம்

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் கடிதம் எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? புலம்பெயர்ந்த தமிழ் மக்களுமா?

போராட்டத்தைக் கைவிட முதல்வர் கலைஞர் உத்தியோகப்பூர்வமாக வேண்டுகோள்- காலையில் முடிவை அறிவிப்பதாக பழ. நெடுமாறன் தகவல்!

தமிழீழத்தின் ஈழத் தமிழர்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப இந்திய மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் தனது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி உத்தியோகப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் போராட்டக் குழுவினருடன் கலந்து பேசி வெள்ளிக்கிழமை காலை முடிவை அறிவிப்பதாக அய்யா பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து இன்று வியாழக்கிழமை இரவு சேலம் புறப்பட்டுச் சென்ற முதல்வர் கருணாநிதி சென்னை தொடரூந்து நிலையத்தில் தனது கைப்பட பழ. நெடுமாறனுக்கு உத்தியோகப்பூர்வ கடிதத்தில்; உள்ள விவரம்:

பேரன்புடைய நெடுமாறன் அவர்களுக்கு

வணக்கம்.

ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான் ரயிலில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலைப் போராட்டம், உங்கள் உடல் நலத்துக்கு ஏற்றதல்ல. தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன்.

ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

மு. கருணாநிதி.

என்று முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.

இக்கடிதம் பற்றிய செய்தி திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயாலர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஊடாக கவிஞர் காசி ஆனந்தனின் மூலமாக பழ. நெடுமாறனிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கலைஞரின் தனிப்பட்ட கடிதம் தமக்குத் தேவையில்லை என்றும் யாழ். தமிழ் மக்களுக்கு உணவு மற்று மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதிக்கிறோம் என்ற இந்திய மத்திய அரசின் உறுதிமொழிக் கடிதம்தான் தமக்குத் தேவை என்றும் பழ. நெடுமாறன் பதிலளித்து தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை எடுத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 00.30 மணிக்கு பழ. நெடுமாறனை நேரில் சந்தித்தனர்.

முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பழ. நெடுமாறன், இது குறித்து நான் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. நாளை காலை போராட்டக் குழுவினருடன் கலந்து பேசி என் முடிவை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

http://www.eelampage.com/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்காக் உண்ணாவிரதமிருக்கும், தமிழை நேசிக்கும் உண்மையான தமிழன் நெடுமாறன் ஜயாவுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.

Edited by கந்தப்பு

தலைவர் வைத்தியர் தமிழ்குடிதாங்கி பற்றி ஒண்டையுமே காணவில்லையே..?? அவரின் தொலைக்காட்சி தெரியும் அளவுக்கு அவர் செய்தியிலை வரமாட்டாராமா..??

முதல்வர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்க மறுப்பு- உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கிறார் பழ.நெடுமாறன்!

[வெள்ளிக்கிழமை, 14 செப்ரெம்பர் 2007, 15:46 ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப இந்திய மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்டு வரும் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி விடுத்த வேண்டுகோளை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் ஏற்க மறுத்துள்ளார். 3 ஆம் நாளாக இன்றும் உண்ணாநிலைப் போராட்டத்தை அவர் மேற்கொண்டு வருகிறார்.

முழுமையான செய்திக்கு

தலைவர் வைத்தியர் தமிழ்குடிதாங்கி பற்றி ஒண்டையுமே காணவில்லையே..?? அவரின் தொலைக்காட்சி தெரியும் அளவுக்கு அவர் செய்தியிலை வரமாட்டாராமா..??

ஜி.கே .மணி வந்ததாக சொன்னார்களே?

பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட மறுப்பு!

ஈழத்திற்கு தாம் சேகரித்த நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வலியுறுத்தி பழ. நெடுமாறன் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாநிலைப் போரட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பேசியதோடு, கலைஞரின் செய்தியை ஒரு அறிக்கையாகவும் வெளியிட்டு பழ. நெடுமாறன் அவர்களை உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடும்படி கோரியிருந்தார்.

ஆனால் கலைஞரின் உத்தியோகபூர்வமான வேண்டுகோளை எதிர்பார்ப்பதாக பழ. நெடுமாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கலைஞர் கருணாநிதி அவர்கள் பழ.நெடுமாறன் அவர்களை உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடும்படி உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோள் குறித்து போராட்டக் குழுவினருடன் பழ. நெடுமாறன் அவர்கள் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வது என்றும், அதே வேளை கலைஞரின் சந்திப்பிற்கான அழைப்பை ஏற்பது என்று முடிவாகியுள்ளது.

இதையடுத்து பழ. நெடுமாறன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் மூன்றாவது நாளான இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கலைஞர் கருணாநிதி தற்பொழுது சுற்றுப் பயணம் மேற்கோண்டிருக்கிறார். இரண்டு நாள் கழித்தே அவர் சென்னை திரும்புகிறார். பழ. நெடுமாறன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட மறுத்தது குறித்து கலைஞர் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.

தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கையாக கலைஞர் இதை சந்தேகிக்கிறார் என்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. பழ. நெடுமாறன் அவர்களுடைய இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுகின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டதும் கலைஞரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

பழ. நெடுமாறன் அவர்களின் தூய்மையான போராட்டம் அரசியல் ஆக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் கலைஞர் பழ. நெடுமாறன் அவர்களுடன் மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பை அடுத்த இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

செய்தி: http://www.webeelam.com

நெடுமாறன் அய்யா அவர்கள் தன் உடல் நலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது....... அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ....இப்போது அவர் மிகவும் தளர்ந்து காணப்படுகிறார்

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

ஈழத் தமிழர்கள் மீது அக்கறை உள்ள தமிழக முதல்வர் கலைஞர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாமல் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பழ.நெடுமாறன் கைவிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

தமிழீழத் தமிழர்களுக்காக சென்னையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பழ.நெடுமாறன் மேற்கொண்டு வரும் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல அகிம்சை வழியிலான கவனஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று சுவிஸ் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.