Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் உடற்கூராய்வு அறிக்கையை ஏன் தர முடியாது? - இலங்கை பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத்

பட மூலாதாரம்,MOD SRI LANKA

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 22 ஜூன் 2023, 14:27 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு கோரி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன தாக்கல் செய்த கோரிக்கைக்கு பதிலளித்தபோதே பாதுகாப்பு அமைச்சு இதைக் குறிப்பிட்டுள்ளது.

பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்குவது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இலங்கை பாதுகாப்பு அமைச்சு பதிலளித்துள்ளது.

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு வந்ததாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், போரின் சர்ச்சைகள் இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

போர் குற்ற விசாரணைகள், காணாமல் போனோர் விவகாரம், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் நிலைமை, அரசியல் கைதி விவகாரம், காணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இன்றும் தீர்வு கிடைக்காத நிலைமை காணப்படுகின்றது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இறுதிப் போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான எந்தவித ஆதாரங்களையும் இலங்கை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

 

பிரபாகரனின் உடற்கூராய்வு அறிக்கையை வழங்க மறுப்பு

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என ஒரு தரப்பினர் கூறி வருகின்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மற்றுமொரு தரப்பு கருத்துகளை முன்வைத்து வருகின்றது.

இவ்வாறான கருத்துகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், இலங்கை ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தனவினால், தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ், பாதுகாப்பு அமைச்சிடம் பிரபாகரனின் உடற்கூராய்வு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

பிரபாகரனின் மரபணு பரிசோதனை அறிக்கை, உடற்கூராய்வு அறிக்கை ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் வெளியிடாத பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, அந்த அறிக்கையை வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக் கட்ட போரில் உயிரிழந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன

பட மூலாதாரம்,MITHUN JAYAWARDANE

 
படக்குறிப்பு,

ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன

பிரபாகரனின் உடற்கூராய்வு அறிக்கை, மரபணு பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தது பிரபாகரன் என உறுதி செய்வதற்கு யாரிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் பெறப்பட்டன ஆகியவை தொடர்பான தகவல்களை வழங்கக் கோரி இந்தத் தகவலறியும் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்தது.

ககாந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு, ராணுவ தலைமையகம் ஆகியவற்றுக்கு இந்த விண்ணப்பத்தை அனுப்பி வைத்திருந்ததாக ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன கூறுகிறார்.

“தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்தத் தகவல்களை வழங்கினால் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்” எனக் குறிப்பிட்டு இலங்கை ராணுவமும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் ஊடகவியலாளரின் தகவல் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இலங்கை தகவலறியும் ஆணைக் குழுவிற்கு இது தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாக ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

தமிமீழ விடுதலை புலிகள் அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரபாகரனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொட்டு அம்மானின் மரண சான்றிதழ் அறிக்கை?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, பிள்ளைகளான சார்ள்ஸ், துவாரகா, பாலசந்திரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை மற்றும் மரண சான்றிதழ் ஆகியவற்றை வழங்க முடியாது என இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராணுவ தலைமையகம் ஆகியவை தெரிவித்துள்ளன.

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குணாளன் டிலீப் அமுதன், பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராணுவ தலைமையகத்திடம் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்தபோதே ராணுவ தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இந்தப் பதிலை வழங்கியுள்ளன.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, பிள்ளைகளான சார்ள்ஸ், துவாரகா, பாலசந்திரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை மற்றும் மரண சான்றிதழ் ஆகியவற்றை வழங்குமாறு ஜனாதமிபதி செயலகத்திடமும், குணாளன் டிலீப் அமுதன் கோரியுள்ளார்.

எனினும், அவ்வாறான எந்தவொரு தகவலும் தம் வசம் கிடையாது என ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது.

செய்தி ஆசிரியர் குணாளன் டிலீப் அமுதன்

பட மூலாதாரம்,DILEEP AMUTHAN

 
படக்குறிப்பு,

செய்தி ஆசிரியர் டிலீப் அமுதன்

பாதுகாப்பு அமைச்சு பிபிசிக்கு வழங்கிய பதில்

தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பத்லேயே, இந்தத் தகவல்களை வழங்க முடியாதுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''நாம் இதை உறுதி செய்துள்ளோம். கருணா அம்மான், தயா மாஸ்டர் ஆகிய இருவரும் உறுதிப்படுத்தினார்கள். இது பிரபாகரனின் உடல் என்பதை இவர்கள் இருவரும் உறுதிப்படுத்தினார்கள். டி.என்.ஏ பரிசோதனையை நாம் முன்னெடுத்துள்ளோம்," என அவர் கூறினார்.

''டி.என்.ஏ அறிக்கை உள்ளிட்ட தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர் உயிரிழந்ததை பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அப்படியென்றால், அது உறுதியாகின்றது," என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் பிபிசி தமிழுக்கு பதிலளித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேல்முறையீடு செய்த ஊடகவியலாளர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் உயிரிழப்பை உறுதி செய்வதற்கான மரண சான்றிதழ் மற்றும் டி.என்.ஏ சான்றிதழ்களை பெற்றுத் தர முடியாது என்று பாதுகாப்பு அமைச்சு, ராணுவ தலைமையகம் ஆகியன கூறியுள்ள நிலையில், அதற்கு எதிராக தகவலறியும் உரிமை ஆணைக்குழுவிடம் குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cmm0y31737jo

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் இரண்டு பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட ரோகண விஜவீரவின் உடலத்தை வெளிக்காட்டும் போது வராத தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்...

இல்லாத பிரபாகரனதும்.. குடும்பத்தினதும்.. பொட்டம்மானினதும்.. மரணச் சான்று.. மரபணுச் சான்று அறிக்கையை கொடுப்பதால்.. மட்டும் அச்சுறுத்தப்படுமாம்..?????!

பார்ப்போம்.. மேன்முறையீட்டில் என்ன வெளிச் சொல்லினம் என்று..??!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, பிள்ளைகளான சார்ள்ஸ், துவாரகா, பாலசந்திரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை மற்றும் மரண சான்றிதழ் ஆகியவற்றை வழங்க முடியாது

சிலரின் உலடத்தையே கண்டு  பிடிக்கவில்லை. இதற்குள்  டி என் ஏயை எப்படி வழங்குவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனது இறப்பை உறுதிப்படுத்தினால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா எனும் கேள்வி  எழமாட்டது. 

தமிழரைக் குழப்பத்தில் வைத்திருக்க வேண்டிய தேவை சிங்களத்திற்கும் இந்தியாவிற்கும் மட்டுமல்ல, இயக்கக் காசைக் கொள்ளையடித்த புலம்பெயர்ஸ் க்கும்  இருக்கிறது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

'டி.என்.ஏ அறிக்கை உள்ளிட்ட தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர் உயிரிழந்ததை பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அப்படியென்றால், அது உறுதியாகின்றது,"

"முதுகிலே புண்ணுள்ளவனுக்கு காடு நுழையப்பயம்." உப்புச்சப்பில்லாத விளக்கம் கொடுத்து தப்பிக்கப்பாக்கிறது. முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சரோ வெளிநாட்டமைச்சரோ யாரோ ஒருவர், பிரணாப் முகர்ஜி,   இந்த மரண அறிக்கையை கேட்டு கிடைக்காத சந்தர்ப்பத்தில் வெளியிட்ட கருத்து "பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை அரசாங்கம் கூறுகிறது, அதை நம்புவதை தவிர நமக்கு வேறு வழியில்லை." என்றார். தலைவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பதில் எனக்கு எந்த கேள்வியுமில்லை ஆனால் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட முன்னுக்குப் பின் முரணான கருத்து, அவர்களின் வழக்கத்திற்கு மாறான செய்கை, அப்பப்போ கொடுக்கப்படும் விளக்கம், இவர்கள் மேல் சந்தேகத்தை உருவாக்கி எப்போதும் எனக்குள் கேள்வியை எழுப்புகிறது. ஒருவர் இறந்துவிட்டால் அவரின் மரணச் சான்றுதலை அளித்து அவரின் மரணத்தை உறுதிப்படுத்துவது வழமை. இதனால் என்ன பாதுகாப்பு பிரச்சனை வந்துவிடப்போகிறது என்பதையும் விளக்கலாமல்லவோ? இவர்கள் இதை மறுப்பதனால் இவர்கள் மேலே சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தால் தானே ஐயா கொடுப்பதற்கு....பக்ஸ கோஸ்டி அதையும் வித்து காசாக்கியிருக்கும்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22/6/2023 at 21:32, Kapithan said:

தமிழரைக் குழப்பத்தில் வைத்திருக்க வேண்டிய தேவை சிங்களத்திற்கும் இந்திய விற்கும் மட்டுமல்ல, இயக்கக் காசைக் கொள்ளையடித்த புலம்பெயர்ஸ் க்கும்  இருக்கிறது. 

இந்த கூட்டுறவு யார் யாரென இப்போதாவது விளங்குகின்றதா?

போன காசு எங்கே என கேட்டால் ???????
கேட்டவனை துரோகி என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2023 at 01:02, Kapithan said:

பிரபாகரனது இறப்பை உறுதிப்படுத்தினால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா எனும் கேள்வி  எழமாட்டது. 

தமிழரைக் குழப்பத்தில் வைத்திருக்க வேண்டிய தேவை சிங்களத்திற்கும் இந்தியாவிற்கும் மட்டுமல்ல, இயக்கக் காசைக் கொள்ளையடித்த புலம்பெயர்ஸ் க்கும்  இருக்கிறது. 

தமிழர்களை மட்டுமில்லை, சிங்களவர்களையும் குழப்பத்தில் வைத்திருக்கவே இலங்கை அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். தங்களுக்கு தேவை ஏட்படும்போது புலிகள் மீண்டும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சிங்களவர்களுக்கு பூச்சாண்டி காடட வேண்டி இருக்கிறது. இருந்தாலும் தமிழர்களுக்கு உண்மை எதுவென்று தெரியுமென நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசாங்கம் வழங்கும் மரணசான்று மற்றும் டி.என்.ஏ அறிக்கையின் உண்மைத்தன்மை அது போலி அற்றது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் அதை தருவதற்கு தயங்குவதற்கு பின்னால் பெரியதொரு காரணம் மறைந்திருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

DNA பரிசோதனையாளர்களைப் பிடித்து அவர்களின் செவியை முறுக்கினால் கேட்டபடி தருவார்களே!  

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, karu said:

DNA பரிசோதனையாளர்களைப் பிடித்து அவர்களின் செவியை முறுக்கினால் கேட்டபடி தருவார்களே!  

முடியுமென்றால் அவர்கள் யார் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2023 at 05:08, karu said:

DNA பரிசோதனையாளர்களைப் பிடித்து அவர்களின் செவியை முறுக்கினால் கேட்டபடி தருவார்களே!  

அவர்கள் அரச வைத்திய ஆய்வாளர்கள்.  அவர்களைப்பற்றிய விபரம் அரசாங்கத்திடம்தான் இருக்கும்.

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உயிருடன் இல்லை : எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Published By: DIGITAL DESK 3

07 JUL, 2023 | 09:34 AM
image
 

(எம்.மனோசித்ரா)

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி. அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன. பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டே குறித்த ஆதாரங்களை வெளியிடப்படாமலுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

அத்தோடு, தற்போது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான குழுக்கள் தொடர்பில் பாதுகாப்புதுறை மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதியாகும். அவருடன் மிக நெருக்கமாக செயற்பட்ட கருணா அம்மான் , தயா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இதற்கு சாட்சி. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் உரிய தகவல்கள் உள்ளன. எனவே இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்க தேவையில்லை. அதனை விட முக்கியத்துவம் செலுத்த வேண்டிய பல்வேறு காரணிகள் உள்ளன.

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. அதற்கமைய குறிப்பிட்டவொரு குழுவொன்று வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து , போராட்டத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஹோட்டலொன்றில் பயிற்சி பெற்றுள்ளமை தொடர்பான தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறான குழுக்கள் தொடர்பில் புலனாய்வுப்பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு துறை உன்னிப்பான அவதானத்துடனேயே உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு புலனாய்வு பிரிவின் பலவீனமே காரணம் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எமது நாட்டின் புலனாய்வு பிரிவு மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது.

அண்மையில் அடிப்படைவாத அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதிகள் வடக்கிலுள்ள விகாரையொன்றுக்கருகில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்போம். உண்மையில் மக்கள் மத்தியில் எவ்வித மத பிரிவினைவாதமும் இல்லை. அடிப்படைவாத செயற்பாடுகள், கருத்துக்கள் முன்வைக்கப்படுவதன் பின்னணியில் அரசியல்வாதிகளே காணப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

அவா குழுக்கள், பாதாள உலக குழுக்கள் என்பவற்றின் செயற்பாடுகள் கடந்த இரு மாதங்களாக அதிகரித்துக் காணப்பட்டது. எனினும் முப்படை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடுகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/159404

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2023 at 16:23, ஏராளன் said:

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதியாகும். அவருடன் மிக நெருக்கமாக செயற்பட்ட கருணா அம்மான் , தயா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இதற்கு சாட்சி. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் உரிய தகவல்கள் உள்ளன.

சொல்வதை எழுத்தில் உறுதிப்படுத்தும்படி கேட்டால் பாதுகாப்பு பிரச்சினையாம். என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே ஆளாளுக்கு உளறுகிறார்கள். அதனால் என்ன பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என்பதையும் சேர்த்து சொன்னால்,  அது நிஞாயமானால் கேள்வி கேட்பதற்க்குஅவசியமில்லையே. 

On 7/7/2023 at 16:23, ஏராளன் said:

அத்தோடு, தற்போது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன.

 

On 7/7/2023 at 16:23, ஏராளன் said:

அண்மையில் அடிப்படைவாத அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதிகள் வடக்கிலுள்ள விகாரையொன்றுக்கருகில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்போம்.

நிஞாயத்தை, உரிமையை கேட்டால் அதை திசைமாற்றுவது சிங்களத்துக்கு கைவந்த கலை. மக்களின் குறைகளை, பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே அவர்களின் பிரதிநிதிகளை தெரித்தெடுத்து அனுப்புகிறார்கள் என்பது கூட தெரியாத இவரெல்லாம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.