Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?

Photo of Wagner Group founder Yevgeny Prigozhin addressing his units

உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போரில் முன்னின்று போராடிவரும் ப்ரிகோஷின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை பெரும்பாலான களங்களில் உக்ரேனிய ராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி வருவதுடன் பல முக்கிய களங்களையும் ரஸ்ஸியாவுக்காக கைப்பற்றி வந்திருக்கிறது. அண்மைய சில மாதங்களாக வாக்னர் படைப்பிரிவின் தலைவர் ப்ரிகோஷின் தனது படைகளுக்கு தருவதாக ரஸ்ஸிய உறுதியளித்த வளங்களை கிரமமாகத் தருவதில்லையென்றும், ரஸ்ஸிய உயர் பாதுகாப்புப் பீடம் தனது படைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறிவந்தார்.

வாக்னர் தலைவருக்கும் ரஸ்ஸிய ராணுவ உயர்பீடத்திற்கும் இடையிலான இந்த முறுகல் நிலை நேற்று முக்கிய திருப்பம் ஒன்றினை அடைந்திருக்கிறது. நேற்று ப்ரிகோஷின் வெளியிட்ட காணொளியொன்றில் தனது படைகள் மீது ரஸ்ஸிய நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பல வீரர்களை தான் இழந்திருப்பதாகக் கூறியுள்ளதுடன் இதற்குக் காரணமான ரஸ்ஸிய ராணுவ உயர்பீடம் மீது தான் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போர் சரியானதா என்று கேள்வியெழுப்பும் ப்ரிகோஷின், ராணுவ உயர்பீடத்தின் பொய்களை நம்பியே புட்டின் உக்ரேன் மீது ஆக்கிரமிப்புப் போரினைத் தொடங்கியதாகவும் கூறுகிறார். 

தனது வீரர்கள் மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்கலாக தனது துருப்புக்களை மீளவும் தனது முகாம்களுக்கு அழைக்கப்போவதாகவும், தமது வழிக்குக் குறுக்கே நிற்பவர்களை தாம் அழித்துவிடப்போவதாகவும் எச்சரித்திருக்கிறார்.

ப்ரிகோஷினின் குற்றச்சாட்டினை மறுத்திருக்கும் ரஸ்ஸிய உயர்பீடம் அவரது உத்தரவினை வாக்னர் படைகள் செவிசாய்க்கக் கூடாதென்றும், அவரை உடனடியாகக் கைதுசெய்து தரவேண்டும் என்றும் கோரியிருக்கிறது. அத்துடன், வாக்னர் படைகள் ரஸ்ஸிய நகரங்களில் வன்முறைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் முன்னேற்பாடுகளாக ரஸ்ஸியாவின் முக்கிய நகரங்களில் ரஸ்ஸியாவின் சிறப்புப் படைப்பிரிவுகளையும், கலகம் அடக்கும் படைப்பிரிவுகளையும் நிலைநிறுத்தி வருகிறது.

வாக்னர் தலைவரின் இந்த திடீர் குற்றச்சாட்டிற்கும் உக்ரேனின் எதிர்த் தாக்குதல்களுக்கும் இடையே தொடர்பு எதுவுமில்லையென்றும், உக்ரேன் பெரிதாகப் பிரச்சாரப்படுத்தி வந்த எதிர்த் தாக்குதல் நடவடிக்கை முற்றான தேக்கநிலைக்கு வந்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் மேற்கின் அவதானிகள். 

  • Replies 231
  • Views 15.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் தென்பகுதி நகரம் இராணுவத்தலைமையகம் கூலிப்படையினர் வசம்

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 10:58 AM
image
 

ரஸ்யாவின் தென்பகுதி நகரமான ரொஸ்டொவ் ஒன் டொன் நகரை தமது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள வாக்னர் கூலிப்படையினர் இராணுவதலைமையகத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

வாக்னர் கூலிப்படையின் தலைவர் ஜெவ்ஜெனி பிரிகோசின் தான் அந்த நகரின் இராணுவதலைமையகத்திற்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நான் இராணுவதலைமையகத்திற்குள் இருக்கின்றேன் இராணுவத்தின் கட்டிடங்கள் எங்கள் வசம் வந்துள்ளன என அவர் அறிவித்துள்ளார்.

ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த    கூலிப்படையினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலையேற்பட்டுள்ளது

ரஸ்யாவுடன் இணைந்து உக்ரைன் படையினருக்கு எதிராக செயற்பட்டுவந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கள்; முகாம்கள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்தே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

caEaSlsO.jpg

எங்கள் படைமுகாம் மீது ரஸ்ய படையினர் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டனர் எங்கள் தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர் அவர்கள் எங்களை ஏமாற்ற முயல்கின்றனர் என வாக்னர் கூலி;ப்படையின் தலைவ பிரிகோஜின் தெரிவித்திருந்தார்.

எனினும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஹே சைய் இதனை மறுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து ரஸ்ய பாதுகாப்பு அமைச்சரை தனது படையினர் அகற்றுவார்கள் என எச்சரித்த வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்ய படையினரை தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

இது இராணுவசதிப்புரட்சியில்லை நீதிக்கான பயணம் என தெரிவித்த அவர் தனது குழுவினர் உக்ரைனிலிருந்து ரஸ்யாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158466

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தானே நெருப்பு வைத்துக்கொண்ட ரஷ்யா! புடினின் ராணுவத்தை பதம் பார்க்க படையெடுக்கும் கூலிப்படை

Halley KarthikUpdated: Saturday, June 24, 2023, 11:57 [IST]
 
 

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இருப்பினும் போரில் எந்த பின்வாங்கலும் இல்லாமல் ரஷ்யா முன்னேறி வருகிறது. இந்நிலையில் இந்த போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்த அந்நாட்டின் 'வாக்னர்' கூலிப்படை, தற்போது ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த பின்னர் தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. தற்போது இந்த நாடுகளை தங்கள் வசம் கொண்டுவரும் வேலையை அமெரிக்கா 'நேட்டோ' அமைப்பு மூலம் முன்னெடுத்துள்ளது. எதிர் பார்த்தபடி பெரும்பாலான முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோவில் இணைந்துவிட, உக்ரைனும் இதில் இணைவதாக கையெழுத்திட்டது.

ஷாக்.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே! வாக்னர் குழுவால் அலறும் ரஷ்யா! யார் இவர்கள்? அலர்ட்டான புதின்ஷாக்.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே! வாக்னர் குழுவால் அலறும் ரஷ்யா! யார் இவர்கள்? அலர்ட்டான புதின் 

இங்குதான் சர்ச்சை வெடித்தது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது பக்கத்து நாடான ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே உக்ரைன் இதில் இணைய கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யாவின் பேச்சை கேட்காத உக்ரைன் இதில் இணைவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தது. எனவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது.

இந்த படையெடுப்பு நடந்து 16 மாதங்கள் ஆகியும் இன்னமும் போரின் வீரியம் குறையவில்லை. இதில் ரஷ்யாவுக்கு பக்கபலமாக இருப்பது வாக்னர் எனப்படும் கூலிப்படைதான். வெளிநாடுகள் இந்த தாக்குதலை போர் என்று கூறினாலும், ரஷ்யாவை பொறுத்த அளவில் இது வெறும் ராணுவ நடவடிக்கைதான். எனவே ரஷ்ய ராணுவத்தின் முக்கிய புள்ளிகள் இதில் களம் இறங்காமல், வாக்னர் போன்ற கூலிப்படைகளை கொண்டே ரஷ்யா உக்ரைனை கைப்பற்றி வருகிறது.

இந்த போரில் ரஷ்யாவுக்காக வாக்னர் குழு சுமார் 30 ஆயிரம் பேரை பலி கொடுத்திருக்கிறது. தற்போதைய சூழலில் உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷ்யா வசம் இருக்க வாக்னர் குழுதான் காரணம். இதை அந்த குழுவே பெருமையாக கூறி வருகிறது. ஆனால் இதை ரஷ்யா விரும்பவில்லை. இந்நிலையில் திடீரென வாக்னர் குழு மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

 

எனவே தற்போது இந்த கூலிப்படை குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்பியுள்ளது. வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின், ரஷ்ய அரசை கவிழ்ப்பதாக சபதமேற்றுள்ளார். இதனால் அந்நாட்டு அரசு சற்று பீதியடைந்துள்ளது. இதனையடுத்து எவ்ஜெனி பிரிகோஜின் மீது வழக்குப்பதிவும் செய்திருக்கிறது. இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்கு ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் உள்ள தெற்கு பிராந்தியத்திற்கான ரஷ்ய இராணுவத் தலைமையகமான ரோஸ்டோவ்-ஆன்-டான்-ஐ வாக்னர் குழு கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

ஏற்கெனவே உக்ரைனுக்கு அமெரிக்க தொடங்கி ஐரோப்பிய நாடுகள் பல ஆயுத உதவிகள் செய்து வரும் நிலையில் அவற்றை சமாளிப்பதே ரஷ்யாவுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. தற்போது தங்கள் நாட்டின் கூலிப்படை தங்களுக்கு எதிராகவே திரும்பி இருப்பது ரஷ்யாவுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

https://tamil.oneindia.com/news/international/homeland-mercenaries-returned-against-russia-tensions-in-russia-over-announcement-of-wagner-mercena-518101.html

 

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு என்பது பொய், புரட்டுக்கள், சதிகளால் நிரம்பியதுதானே.

அதைவிட முக்கியமான விடயம், விரும்பியதை, பார்க்கவும், கேட்கவும், நம்பவும் மனம் விரும்புகிறது.

ஆனால்,

தாங்கள் விரும்புவதை மற்றவர்களும் விரும்பவ வேண்டும் என்பதுதான் சிக்கல் அம்பமாகிறது .

அதற்குப் பெயர் சனநாயகமாக இருக்குமோ ? 

   😉

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

`25,000 படை வீரர்கள் இறப்பதற்குத் தயாராக இருக்கிறோம்’ - ரஷ்யாவுக்குச் சவால்விடும் வாக்னர் குழு!

உக்ரைனின் பெரும்பகுதிகளை வாக்னர் குழுதான் கைப்பற்றி ரஷ்யாவிடம் ஒப்படைத்ததாகத் தகவல்கள் வெளியாகின.

ரஷ்ய அதிபர் புதின்

 

உக்ரைன், நோட்டா அமைப்புடன் இணைவது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் என ரஷ்யா எச்சரித்தும், உக்ரைன் நோட்டாவுடன் இணைவதில் உறுதியாக இருந்தது. இதனால், ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடங்கியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்றும் நீடித்துவருகிறது. இந்தப் போரில் ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தங்களைத் தனியார் ராணுவம் என அழைத்துக்கொள்ளும் வாக்னர் குழு, ரஷ்யாவுக்கு தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த வாக்னர் குழு கூலிப்படையாகவே அறியப்படுகிறது.

புதின்

 

புதின்

 

முன்னர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய நண்பரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் என்பவரின் தலைமையில் இந்தக் குழு செயல்படுவதாக அறியப்படுகிறது. புதினின் தனிப்பட்ட ராணுவம் இது என்றும்கூட விமர்சனத்துக்குள்ளானது. உக்ரைன்-ரஷ்யப் போரில் ரஷ்யாவுக்காக வாக்னர் குழு சுமார் 30,000 பேரை பலி கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைனின் பெரும்பகுதிகளை வாக்னர் குழுதான் கைப்பற்றி ரஷ்யாவிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இதை அந்தக் குழுவே பெருமையாக அறிவித்திருந்தது. இதை ரஷ்யா விரும்பவில்லை என்பதால், திடீரென வாக்னர் குழுமீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அதனால், இந்த வாக்னர் கூலிப்படைக் குழு ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின், ரஷ்ய அரசை கவிழ்ப்பதாகச் சபதமேற்றிருக்கிறார்.

யெவ்ஜெனி ப்ரிகோஜின்

 

யெவ்ஜெனி ப்ரிகோஜின்

 

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ஆடியோ கிளிப்பில், "ரஷ்யா குறிவைத்து எங்கள் படைவீரர்களைத் தாக்குகிறது. ரஷ்யாவின் ராணுவம் எங்கள் முகாம்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. எனவே, ரஷ்யாவின் ஆட்சியை நிச்சயம் கவிழ்ப்போம். 25,000 பேர், பின்னர் மேலும் 25,000 பேர் எனப் போராளிகள் அனைவரும் ரஷ்ய ஆட்சிக்கு எதிரான போரில் இறக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் ரஷ்ய மக்களுக்காகவே இறக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "வாக்னர் குழு மீதான தாக்குதல்கள் குறித்து அதன் தலைவர் பிரிகோஜின் சமூக ஊடகங்களில் பரப்பிவரும் அனைத்துத் தகவல்களும் உண்மையல்ல. அது பதற்றத்தைத் தூண்டிவிடுவதாகும்" என தெரிவித்திருக்கிறது. வாக்னர் கூலிப்படையின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ரஷ்யா ராணுவ வாகனங்களைத் திரட்டி, அரசின் முக்கிய இடங்களுக்கு வெளியே பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/we-will-ready-for-die-with-fight-to-russia-army-says-wagner-team

 

துரோகம்..! ரஷ்யர்களின் முதுகில் குத்தப்பட்டுள்ளது! விடமாட்டேன்.! அதிபர் விளாடிமிர் புடின் விளாசல் !!

இராணுவத்தை கவிழ்க்க ரஷ்ய கூலிப்படையின் சவாலுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது துரோகத்தை கைவிட வேண்டும். சுயநலத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

Vladimir Putin To Address Nation Amid Dramatic Challenge By Russian Mercenary Group To Topple Military

இராணுவத்தை கவிழ்க்க ரஷ்ய கூலிப்படையின் சவாலுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது துரோகத்தை கைவிட வேண்டும். சுயநலத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஸ்டோவ் மாகாணத்தின் விமான நிலையங்கள் தனது ராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக எவ்கெனி பிரிகாசின் அறிவித்துள்ளார். இது ரஷ்யாவில் அசாதாரண சூழலை உருவாக்கி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆதரவாக இருந்து தற்போது எதிராக மாறி இருக்கும் போராளிகள் குழுவான வாக்னர் அதிகாரம் மையமாக உருவாகி உள்ளது.

Vladimir Putin To Address Nation Amid Dramatic Challenge By Russian Mercenary Group To Topple Military

இது தற்போது கிரம்ளின் அதிகார மையத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் இந்தக் குழுவின் தலைவரை கைது செய்ய ரஷ்ய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

ரஷ்யாவின் இராணுவத் தலைமையை அகற்றுவதாக வாக்னர் கூலிப்படையின் தலைவர் சபதம் செய்து தெற்கில் உள்ள ஒரு முக்கிய இராணுவத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதை அடுத்து, ரஷ்யா சனிக்கிழமையன்று மாஸ்கோ மற்றும் மாஸ்கோ பிராந்தியத்தில் "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஆட்சியை" அறிவித்தது.

ரஷ்யா நாட்டு மக்களிடம் உரையாற்றிய புடின், ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு கூலிப்படை தலைவர் அழைப்பு விடுத்ததை அடுத்து ரஷ்ய ஜனாதிபதி புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். துரோகத்தை கைவிட வேண்டும். சுயநலத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு கூலிப்படை தலைவர் அழைப்பு விடுத்ததை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சனிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நேரடி உரையின் போது, "நாங்கள் வெற்றி பெறுவோம், மேலும் வலுப்பெறுவோம்" என்று கூறினார். ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் புடின் கூறினார்.

 

https://tamil.asianetnews.com/world/vladimir-putin-to-address-nation-amid-dramatic-challenge-by-russian-mercenary-group-to-topple-military-rwqwi1

 

  • கருத்துக்கள உறவுகள்

முதுகில் குத்திவிட்டீர்கள் -கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் - வாக்னர் கூலிப்படைக்கு புட்டின் எச்சரிக்கை

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 03:17 PM
image
 

ரஸ்ய படையினருடன் இணைந்து செயற்பட்ட வாக்னர் கூலிப்படை துரோகமிழைத்துவிட்டது என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அவர் இதனை தெரிவித்துள்ள புட்டின் கூலிப்படை முதுகில்குத்துவிட்டது என தெரிவித்துள்ளனர்.

வஞ்சகம் அல்லது சூழ்ச்சியால் அல்லது அச்சுறுத்தலால்  ஒரு குற்றவியல் சாகசத்திற்குள் இழுக்கப்பட்டு ஒரு கடுமையான பாதைக்குள் இழுக்கப்பட்டவர்கள் ஆயுதகிளர்ச்சியில் ஈடுபட்டவர்களிற்கு வேண்டுகோளை விடுத்துள்ள புட்டின் ரஸ்யா

 தனது எதிர்காலத்திற்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது நவநாஜிகளின் அவர்களது தலைவர்களின் ஆக்கிரமிப்பை முறியடித்துவருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேற்குலகின் இராணுவ பொருளாதார தகவல் கட்டமைப்பு முழுவதும் எங்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது  இது எங்கள் மக்களின் தலைவிதிகள் தீர்மானிக்கப்படுகின்ற போர்க்களம் அதனால் அனைத்து சக்திகளும் ஐக்கியப்படவேண்டிய அவசியம் உள்ளது இது எனது தேசத்தின் முதுகில் குத்திய செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளேயிருந்து இழைக்கப்படும் துரோகம் உட்பட அனைத்து விதமான ஆபத்துக்களில் இருந்தும் மக்களையும் நாட்டையும் பாதுகாப்பேன் நாங்கள் எதிர்கொள்வது நிச்சயமாக ஒருதுரோகம் அதிகப்படியான இலட்சியங்கள்  மற்றும் தனிப்பட்ட நபர்களின் நோக்கங்கள் இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் மீண்டும் சொல்கி;ன்றேன் எந்தவொரு உளநாட்டு குழப்பமும்எங்கள் தேசத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகும்   இதுரஸ்யாவிற்கு மக்களுக்கான அடியாகும் எங்கள் தந்தையர் தேசத்தை பாதுகாப்பதற்கான எங்களின் நடவடிக்கை கடுமையானதாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றே துரோகத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதகிளர்ச்சியை திட்டமிட்டவர்கள் அச்சுறுத்தும் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தவிர்க்கமுடியாமல் தண்டனையை அனுபவிப்பார்கள் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.முதுகில் குத்திவிட்டீர்கள் -கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் - வாக்னர் கூலிப்படைக்கு புட்டின் எச்சரிக்கை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

புதினுக்கு எதிராக புரட்சியா?: யுக்ரேன் போரில் திடீர் திருப்பம் - ரஷ்யாவில் என்ன நடக்கிறது?

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,EPA/SHUTTERSTOCK

 
படக்குறிப்பு,

ரஷ்ய அதிபர் புதின்

38 நிமிடங்களுக்கு முன்னர்

யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்ய ஆதரவு கூலிப்படையான 'வேக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளது. யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர் ரஷ்யாவின் தென் பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் அதன் தலைவர் பிரிகோஷின் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரில் ரஷ்யாவுக்குத் உறுதுணையாக களத்தில் நின்ற அதன் ஆதரவு கூலிப்படையான 'வேக்னர்' திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. நேற்றிரவு அந்த கூலிப்படையினர் யுக்ரேன் எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் நுழைந்து, ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரில் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

கருங்கடலோரம் அமைந்துள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் இருந்து வேக்னர் கூலிப்படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் தகவல்கள் கசிந்துள்ளன. வோரோனேஸ் நகரை உள்ளடக்கிய பரந்து விரிந்த வோரோனேஸ் ஓப்ளாஸ்ட் பிராந்தியத்தின் வழியே அப்படையினர் மாஸ்கோ நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நகரம் மாஸ்கோவில் இருந்து 482 கி.மீ. தெற்கே இருக்கிறது.

 

ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னை சந்திக்காவிட்டால் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் செல்லப் போவதாக வேக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் மிரட்டல் விடுத்துள்ளார்.

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

'வேக்னர்' தலைவர் பிரிகோஸின்

ரஷ்ய ராணுவ தலைமையகத்திற்கு வெளியே ஆயுதம் தரித்த வீரர்கள்

யுக்ரேன் போரில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக திகழ்ந்த, ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியே ஆயுதங்களுடன் வீரர்கள் காவல் காக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

அவர்கள் ராணுவ தலைமையகத்தை பாதுகாக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களா அல்லது வேக்னர் கூலிப்படையினரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அந்த வீடியோக்களில் காட்டப்படும் கட்டடம் ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் பதிவு செய்யப்பட்டவை என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.

அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அந்த நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை அப்படியே நீடிக்கிறது. ,ளைஞர்கள் தெருமுனைகளில் கூடி அங்கு நடந்தேறும் நிகழ்வுகளை நேரலை செய்கின்றனர். தெருக்களை சுத்தம் செய்வோர் அவர்களது வழக்கமான பணிகளை தொடர்கின்றனர்.

ஆனால், அதனூடாக அடுத்தடுத்து அரங்கேறும் நிகழ்வுகள் இயல்பானதாக இல்லை.

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ரோஸ்டாவ்-அன்-டான் நகரில் ஆயுதம் தரித்த வீரர்கள்

'25,000 பேர் சாகத் தயார்' - பிரிகோஸின்

வேக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் தனது டெலிகிராம் பக்கத்தில் செய்துள்ள பதிவில், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்புவதால் வேக்னர் குழுவில் உள்ள அனைவருமே சாகவும் தயாராக இருபபதாக குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் அனைவரும் சாகத் தயாராக இருக்கிறோம். நாங்கள் 25,000 மற்றும் கூடுதலாக 25,000" என்று அவர் அந்த ஆடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது ரஷ்ய மக்களுக்கான நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார்.

ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் உள்ள ராணுவ நிலைகளை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விட்டதாக கூறும் வேக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு மற்றும் வலேரி கெரசிமோவை சந்திக்க அனுமதி வழங்கப்படாவிட்டால், தலைநகர் மாஸ்கோ நோக்கி சுமார் 1,600 கி.மீ. தூர அணிவகுப்புக்கு தனது படைகள் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுத்துளளார்.

பிரிகோஸின் பேச்சு அடங்கிய 2 வீடியோக்களும் ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷ்ய ராணுவ தலைமையகத்திற்குள் பதிவு செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது. அதனை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்.

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

பிரிகோஸின்

முதுகில் குத்தும் செயல் என்று புதின் எச்சரிக்கை

ரஷ்யாவின் ராணுவத் தலைமைக்கு எதிராக வேக்னர் குழு போர்க்கொடி தூக்கிய பிறகு முதன் முறையாக ரஷ்ய அதிபர் புதின் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், அனைத்து படைகளும் ஒருங்கிணைந்து இருக்க கேட்டுக் கொண்டுள்ளார். நடந்த நிகழ்வுகள் 'ஒரு துரோகம்' என்றும் ரஷ்ய மக்களை முதுகில் குத்தும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.

"இது முதுகில் குத்தும் செயல். இந்த மாதிரியான அச்சுறுத்தல்களில் இருந்து தேசத்தைக் காப்பதற்கான எங்களது நடவடிக்கை தீவிரமானதாக இருக்கும். துரோகப் பாதையில் இறங்கி தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள், நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள். சட்டத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அவர்கள் பதில் சொல்வார்கள்" என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவை அச்சுறுத்தும் இந்த மோசமான சூழலில் ரஷ்ய அரசு தரப்போ, வேக்னர் கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸினோ தங்களது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க தயாராக இருப்பதாக தெரியவில்லை.

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்யாவுக்கு எதிராக வேக்னர் கூலிப்படை திரும்பியது ஏன்?

யுக்ரேன் போர்க் களத்தில் ரஷ்ய ராணுவத்தின் பின்னடைவுக்கும், அதிக உயிரிழப்புகளுக்கும் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்குவே காரணம் என்று பிரிகோஸின் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டியிருந்தார்.

"இந்த போர் தேவைப்பட்டது. அதன் மூலம் ஷோய்கு மார்ஷலாக முடியும். அதன் மூலம் இரண்டாவது நாயகனாக உருவெடுக்க முடிந்தது. யுக்ரேனை நாஜிமயமாகாமல் தடுப்பதற்கோ, ராணுவமயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கோ இந்த போர் நடக்கவில்லை. ஒரு கூடுதல் நட்சத்திரத்திற்காகவே இந்த போர் தேவைப்பட்டது." என்கிறார் பிரிகோஸின். இது யுக்ரேன் மீதான தாக்குதலைத் தொடங்க ரஷ்யா முன்வைத்த காரணங்களுக்கு முரண்பாடாக இருக்கிறது.

 

இவ்வார தொடக்கத்தில் யுக்ரேனில் உள்ள வேக்னர் கூலிப்படையின் தளம் ஒன்றை ரஷ்ய ராணுவ தாக்கியதாக பிரிகோஸின் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதனை ரஷ்ய பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது.

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ரஷ்ய அதிபர் புதினுக்கு உணவு பரிமாறுகிறார் பிரிகோஸின் (இடதுபுறம் நிற்பவர்)

இது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு மற்றும் வேக்னர் குழு தலைவர் பிரிகோஸின் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் தனிப்பட்ட கசப்புணர்வின் வெளிப்பாடு என்று மாஸ்கோ வட்டாரங்கள் கூறுகின்றன.

"புதினின் சமையல்காரர்" என்று வர்ணிக்கப்பட்ட பிரிகோஸின் இதுவரை அதிபர் புதினுக்கு நேரடியாக சவால் விடுக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c3gj9gr906lo

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

வரலாறு என்பது பொய், புரட்டுக்கள், சதிகளால் நிரம்பியதுதானே.

அதைவிட முக்கியமான விடயம், விரும்பியதை, பார்க்கவும், கேட்கவும், நம்பவும் மனம் விரும்புகிறது.

ஆனால்,

தாங்கள் விரும்புவதை மற்றவர்களும் விரும்பவ வேண்டும் என்பதுதான் சிக்கல் அம்பமாகிறது .

அதற்குப் பெயர் சனநாயகமாக இருக்குமோ ? 

   😉

 

சமர்ப்பணம்...

"இந்த போர் தேவைப்பட்டது. அதன் மூலம் ஷோய்கு மார்ஷலாக முடியும். அதன் மூலம் இரண்டாவது நாயகனாக உருவெடுக்க முடிந்தது. யுக்ரேனை நாஜிமயமாகாமல் தடுப்பதற்கோ, ராணுவமயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கோ இந்த போர் நடக்கவில்லை. ஒரு கூடுதல் நட்சத்திரத்திற்காகவே இந்த போர் தேவைப்பட்டது." என்கிறார் பிரிகோஸின். இது யுக்ரேன் மீதான தாக்குதலைத் தொடங்க ரஷ்யா முன்வைத்த காரணங்களுக்கு முரண்பாடாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கு கருணா அம்மான் மாதிரி புட்டினுக்கு பிரிகோஸின். ஆனால் பிரிகோஸினை புட்டின் நாளையே நசுக்கிவிடுவார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் முழுவதும் சம்பந்தன்கள்,சுமந்திரன்கள்,கருணாக்கள்,பிள்ளையான்கள்,கருநாநிதிகள்,காக்கைவன்னியன்கள்,எட்டப்பன்கள் இருக்கின்றார்கள்..சீனப்புரட்சியின் போது இவர்களெல்லாம் அழிக்கப்பட்டார்கள். அதனால் தான் சீனா கட்டுக்கோப்புடன் முன்னேறியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

தலைவருக்கு கருணா அம்மான் மாதிரி புட்டினுக்கு பிரிகோஸின். ஆனால் பிரிகோஸினை புட்டின் நாளையே நசுக்கிவிடுவார்!

உண்மை. ஆனால், பிரிகோசின் ரஸ்ஸியாவின் எதிரிகளோடு கூட்டுச்சேர்ந்து சொந்த மக்களையே கொல்லவில்லை. ஆனால் கருணா செய்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகோஸின் புட்டினை நேரடியாக குற்றம்சாட்டாமல் படைத்தலைமையை, குறிப்பாக ஷோய்குவை, குற்றம் சாட்டுகின்றார். உக்கிரேனை இன்னும் திறமாக அழிக்க தன்னால் முடியும் என்று நம்புபவர். ரஷ்யாவுக்கு விசுவாசம் என்பதால் ரஷ்ய மக்களுடன் முரண்களை தோற்றுவிக்கமாட்டார். 

ஆனால் 25,000 பேரைக்கொண்டு ரஷ்யப் படையினரை மீறி மொஸ்கோவுக்குள் நுழைவதெல்லாம் நடக்க சாத்தியமில்லை. ஆனால் கோத்தாவுக்கு நெருக்கடி வந்தபோது இராணுவம் பார்த்துக்கொண்டிருந்தது போல நடந்தாலும் ஆச்சரியமில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

தலைவருக்கு கருணா அம்மான் மாதிரி புட்டினுக்கு பிரிகோஸின். ஆனால் பிரிகோஸினை புட்டின் நாளையே நசுக்கிவிடுவார்!

 

உங்களது கனவையும் கலைக்க  விரும்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

உங்களது கனவையும் கலைக்க  விரும்பவில்லை

தலைமைக்கு எதிரானவர்கள் வெல்லுவதை விரும்புவதில்லை. புட்டினைவிட பிரிகோஸின் மோசமானவர். விரைவில் நசுக்கப்பட்டால்தான் உலகத்திற்கு நன்மை!

  • கருத்துக்கள உறவுகள்

மொஸ்கோவில் உள்ள பொதுக்கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகின்றனர் - பிபிசி

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 08:34 PM
image
 

வாக்னர் கூலிப்படையினர் மொஸ்கோவை  நோக்கி நகர்ந்துகொண்டுள்ள நிலையில் மொஸ்கோவில் உள்ள பொதுகட்டிடங்களில் இருந்து மக்களை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன

கிரெம்ளினிற்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

டீரெடியாக்காவ் கலரி புஸ்கின் அருங்காட்சியகம்  உட்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/158510

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

மொஸ்கோவில் உள்ள பொதுக்கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகின்றனர் - பிபிசி

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 08:34 PM
image
 

வாக்னர் கூலிப்படையினர் மொஸ்கோவை  நோக்கி நகர்ந்துகொண்டுள்ள நிலையில் மொஸ்கோவில் உள்ள பொதுகட்டிடங்களில் இருந்து மக்களை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன

கிரெம்ளினிற்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

டீரெடியாக்காவ் கலரி புஸ்கின் அருங்காட்சியகம்  உட்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/158510

 

எப்படி இருந்த  ரசியா?☹️

27 minutes ago, கிருபன் said:

தலைமைக்கு எதிரானவர்கள் வெல்லுவதை விரும்புவதில்லை. புட்டினைவிட பிரிகோஸின் மோசமானவர். விரைவில் நசுக்கப்பட்டால்தான் உலகத்திற்கு நன்மை!

உண்மை

ஆனால்  அது  அவ்வளவு  இலகுவானதல்ல  புட்டினுக்கு?

அழிவும்  மிக  மிக  பயங்கரமாக  இருக்கும்

அது  ரசியாவுக்குள் நடக்கப்போவதால்  மகிழ்ச்சியே

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

எப்படி இருந்த  ரசியா?☹️

உண்மை

ஆனால்  அது  அவ்வளவு  இலகுவானதல்ல  புட்டினுக்கு?

அழிவும்  மிக  மிக  பயங்கரமாக  இருக்கும்

அது  ரசியாவுக்குள் நடக்கப்போவதால்  மகிழ்ச்சியே

மொஸ்கோவிலிருந்து விமானமொன்று புறப்பட்டுள்ளதை தொடர்ந்து புட்டின் எங்கிருக்கின்றார் என்பது குறித்து சந்தேகங்கள் வெளியாகியுள்ளன – சர்வதேச ஊடகங்கள் தகவல்

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 08:09 PM
image
 

 

வாக்னர் கூலிப்படையினர் மொஸ்கோவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விமானம் மொஸ்கோவின் விமானநிலையமொன்றிலிருந்து புறப்பட்டுள்ளது குறித்து பல ஊகங்கள் வெளியாகியுள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது.

பிளைட்ராடர்களை பின்தொடரும் இணையத்தளத்தின் தரவுகள்  மொஸ்கோவில் புட்டின் உள்ள வெர் என்றபகுதியை குறிப்பிட்ட விமானம் சென்றடைந்தது மொஸ்கோவிலிருந்து 110மைல் தொலைவில் உள்ள இந்த பகுதியிலேயே புட்டின் வசிக்கின்றார்என தெரிவித்துள்ளன – பின்னர் இந்த விமானம் காணாமல்போயுள்ளது.

புட்டின் அந்த விமானத்திலிருந்தாரா என்பதை உறுதி செய்யமுடியவில்லை எனினும் அவர் கிரெம்ளினில் உள்ளார் என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158509

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

மொஸ்கோவிலிருந்து விமானமொன்று புறப்பட்டுள்ளதை தொடர்ந்து புட்டின் எங்கிருக்கின்றார் என்பது குறித்து சந்தேகங்கள் வெளியாகியுள்ளன – சர்வதேச ஊடகங்கள் தகவல்

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 08:09 PM
image
 

 

வாக்னர் கூலிப்படையினர் மொஸ்கோவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விமானம் மொஸ்கோவின் விமானநிலையமொன்றிலிருந்து புறப்பட்டுள்ளது குறித்து பல ஊகங்கள் வெளியாகியுள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது.

பிளைட்ராடர்களை பின்தொடரும் இணையத்தளத்தின் தரவுகள்  மொஸ்கோவில் புட்டின் உள்ள வெர் என்றபகுதியை குறிப்பிட்ட விமானம் சென்றடைந்தது மொஸ்கோவிலிருந்து 110மைல் தொலைவில் உள்ள இந்த பகுதியிலேயே புட்டின் வசிக்கின்றார்என தெரிவித்துள்ளன – பின்னர் இந்த விமானம் காணாமல்போயுள்ளது.

புட்டின் அந்த விமானத்திலிருந்தாரா என்பதை உறுதி செய்யமுடியவில்லை எனினும் அவர் கிரெம்ளினில் உள்ளார் என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எப்படி  இருந்த புட்டின்???

நாட்டையும் கெடுத்து தானும் அழிந்து...?

இவரது  சேட்டைகள் ரசிய  மக்களிடம்  பலிக்கலாம்

மேற்கு  நாடுகள்  தூங்குகின்றன  என்று நினைத்து அவர்களது  தேசத்திலேயே  கால் பதித்த  தவறை இனி உணர்ந்தும்??

  • கருத்துக்கள உறவுகள்

மொஸ்கோ பெரும் பிராந்தியத்துக்குள் வாக்னர் உள்ளிட்டு விட்டதாயும் 4 மணி நேரத்தில் நகர எல்லைக்கு போய்விடுவார்கள் எனவும் பேசி கொள்கிறார்கள்.

போகும் வழி எங்கும் வாக்னருக்கு எதிர்ப்பு இல்லை. சில கவர்னர்கள் பக்கம் தாவி உள்ளார்கள்.

காடிரோவ் அணி புட்டின் சார்பாக ரொஸ்டொவ் நோக்கி போகிறதாம்.

எப்படியும் 3 மணத்தியாலத்தில் சண்டை தொடங்கும் போல தெரிகிறது.

 

 

1 hour ago, கிருபன் said:

தலைவருக்கு கருணா அம்மான் மாதிரி புட்டினுக்கு பிரிகோஸின். ஆனால் பிரிகோஸினை புட்டின் நாளையே நசுக்கிவிடுவார்!

மிக மோசமான ஒப்பீடு.

தன் இனவிடுதலைக்காக தன்னையும், குடும்பத்தையும் மாய்த்த தலைவர் எங்கே?

யுத்தம், அழிவை வைத்து பணம் அதிகாரம் அடைந்து, சொந்த நாட்டையும் மக்களையும் நாசமாகாக்கி விட்டு, சண்டை மொஸ்கோவுக்கு வந்ததும் கசகஸ்தான், துருக்கியிடம் உதவி கோரி, மொஸ்கோவை விட்டு தப்பி ஓட முயற்சிக்கும், அல்லது ஓடி விட்ட புட்லர் எங்கே?

பிரிகொசின் ஒப்பீடு ஓரளவு ஏற்க கூடியது.

பிகு

பாப்கோர்ன் சாப்பிடுவதில் இப்போ பிசி ஆகவே எல்லாருக்கும் பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும்.

சொன்னபடி சரியான நேரத்தில் திரும்பி வந்துள்ளேன் 🤣. தொடர்ந்து கொஞ்ச காலம் யாழில் உலவலாம் என எண்ணி உள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

மொஸ்கோ பெரும் பிராந்தியத்துக்குள் வாக்னர் உள்ளிட்டு விட்டதாயும் 4 மணி நேரத்தில் நகர எல்லைக்கு போய்விடுவார்கள் எனவும் பேசி கொள்கிறார்கள்.

போகும் வழி எங்கும் வாக்னருக்கு எதிர்ப்பு இல்லை. சில கவர்னர்கள் பக்கம் தாவி உள்ளார்கள்.

காடிரோவ் அணி புட்டின் சார்பாக ரொஸ்டொவ் நோக்கி போகிறதாம்.

எப்படியும் 3 மணத்தியாலத்தில் சண்டை தொடங்கும் போல தெரிகிறது.

 

 

நல்ல  செய்தி தந்தீர்கள்

நாளைக்கு  பழையபடி ஞாயிறு தொலைக்காட்சி  முன்...

வாய்க்கு  சக்கரையா  சீனியா?

அல்லது இரண்டுமே வேண்டுமா சகோ..

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

மிக மோசமான ஒப்பீடு.

கண்டது சந்தோஷம்!

தலைவரையும் புட்டினையும் ஒரே தட்டில் வைக்கவில்லை. ஒவ்வொரு தலைவர்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள்தான் என்பதைச் காட்டத்தான் பாவித்தேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

சொன்னபடி சரியான நேரத்தில் திரும்பி வந்துள்ளேன் 🤣. தொடர்ந்து கொஞ்ச காலம் யாழில் உலவலாம் என எண்ணி உள்ளேன். 

ஆவோஜி ஆவோஜி, நீங்க களத்தில குதிக்கிறதுக்கு உள்நாட்டுச் சண்டையை மூட்டிவிட்டீங்களே!

  • கருத்துக்கள உறவுகள்

புடின் தலையில் இறங்கிய இடி! ரஷ்யாவிற்கு புதிய ஜனாதிபதி உறுதி-Wagner குழு அதிரடி

புடினின் கூலிப்படையான வாக்னர் குழு, விளாடிமிர் புட்டினை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதாக நேரடியாக அச்சுறுத்தியுள்ளது.

ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிர்பாராத அடியாக, தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழு (Wagner Group), அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் ஆயுதமேந்திய கிளர்ச்சியை அறிவித்துள்ளது.

குழுவின் தலைவர் Yevgeny Prigozhin தலைமையில், Wagner குழு தற்போதைய தலைமையை மாற்றி ரஷ்யாவில் ஒரு புதிய ஜனாதிபதியை நிறுவுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்துள்ளது.

 

புடின் தலையில் இறங்கிய இடி! ரஷ்யாவிற்கு புதிய ஜனாதிபதி உறுதி-Wagner குழு அதிரடி | Putin Mistake Russia New President Wagner GroupTass/AP

கிளர்ச்சி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த செயலைக் கண்டித்து, இது ஒரு காட்டிக்கொடுக்கும் செயல் என்றும் முதுகில் குத்தும் செயல் என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த வாக்னர் குழு, புடின் தனது மதிப்பீட்டில் ஒரு பாரிய தவறு செய்துவிட்டார் என்று கூறி, அவர்களின் தேசபக்தியையும், தங்கள் தாய்நாட்டின் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.

“தாய்நாட்டிற்கு துரோகம் இழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மிகவும் தவறாகப் புரிந்து கொண்டார். நாங்கள் எங்கள் தாய்நாட்டின் தேசபக்தர்கள். புடின் தவறான முடிவை எடுத்துள்ளார். இது அவருக்கு நல்லதல்ல...விரைவில் ரஷ்யாவுக்கு புதிய ஜனாதிபதி வருவார்" என்று வாக்னர் குழுமம் தெரிவித்துள்ளது.

புடின் தலையில் இறங்கிய இடி! ரஷ்யாவிற்கு புதிய ஜனாதிபதி உறுதி-Wagner குழு அதிரடி | Putin Mistake Russia New President Wagner Group

ரோஸ்டோவ்-ஆன்-டான் மற்றும் வோரோனேஜ் ஆகிய இரண்டு ரஷ்ய நகரங்களை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகக் கூறி, நாட்டின் இராணுவத் தலைமையை அகற்றுவதற்கான அதன் பிரச்சாரத்தில் வாக்னர் குழு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் மூன்று ரஷ்ய இராணுவ ஹெலிகாப்டர்களை வெற்றிகரமாக வீழ்த்தியதை பெருமையாகக் கூறினர்.

 

புடின் தலையில் இறங்கிய இடி! ரஷ்யாவிற்கு புதிய ஜனாதிபதி உறுதி-Wagner குழு அதிரடி | Putin Mistake Russia New President Wagner GroupAP

இதற்கிடையில், ஜனாதிபதி புடின், ஒரு தொலைக்காட்சி உரையில், கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் தவிர்க்க முடியாத தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று புடின் எச்சரித்தார்.

வேண்டுமென்றே காட்டிக்கொடுப்புப் பாதையில் அடியெடுத்து வைத்தவர்கள், ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தயாரித்தவர்கள், அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத முறைகளின் பாதையை எடுத்தவர்கள் அனைவரும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள், சட்டத்திற்கும் நமது மக்களுக்கும் பதிலளிப்பார்கள் என்று புடின் கூறினார்.

https://news.lankasri.com/article/putin-mistake-russia-new-president-wagner-group-1687621657

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

புடின் தலையில் இறங்கிய இடி! ரஷ்யாவிற்கு புதிய ஜனாதிபதி உறுதி-Wagner குழு அதிரடி

புடினின் கூலிப்படையான வாக்னர் குழு, விளாடிமிர் புட்டினை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதாக நேரடியாக அச்சுறுத்தியுள்ளது.

ஆகா

இன்றைக்கு வோட்கா  தான்

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை கடினமானதாக உள்ளதாக மொஸ்கோ மேயர் அறிவிப்பு – நகரில் பயங்கரவாத எதிர்ப்பு நிலை பிரகடனம்

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 09:59 PM
image
 

நிலைமை கடினமாக உள்ளது என மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்

டெலிகிராமில் வெளியிட்டுள்ள தகவலில் சொபையானின் இதனை தெரிவித்துள்ளார்.

நகரத்தின் வீதிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனஅவர் தெரிவித்துள்ளார்.

moscow3.jpg

மொஸ்கோவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அறிவி;க்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள மேயர் சேர்கேய் சொபையானின் ஆபத்துக்களை குறைப்பதற்காக திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மொஸ்கோவில் வசிப்பவர்கள் முடிந்தளவிற்கு பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் நகரசேவைகள் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவில் பொதுமக்களினதும் போக்குவரத்தையும் கட்டுப்படுத்துவதற்கான  அதிகாரமும் தொடர்பாடல்களை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமும் பொதுமக்களை வாகனங்களை  சோதனையிடுவதற்கான மற்றும் அவசியம் ஏற்பட்டால் மக்களை வெளியேற்றுவதற்கான அதிகாரமும் அதிகாரிகளிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மொஸ்கோவில் ஒரு வாரகாலத்திற்கு பொதுநிகழ்ச்சிகளிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/158512

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.