Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பி பி சி,

பிரிட்டிஸ் படைதுறை ஆய்வாளர்கள் சொல்வதை எல்லாம்…..

எமக்கு தோதாய் இருந்தால் நம்புவோம் 🤣.

இங்கே யாரும் பிரிகோசின் ஏன் கலகத்தை தொடங்கினார் என்பதை பற்றி கதைக்கவில்லை.

இப்போ ஒரு 3 மாதகாலமாகவே பிரிகோசின் போரை கரிஸ்மோவ், ஷிகோ வினைதிறனுடன் நடத்த வில்லை என விமர்சித்து வீடியோ போட தொடங்கி விட்டார்.

இன்னொரு வீடியோவில் மாஸ்கோவில் இருக்கும் தாத்தா (புட்டின்) கள நிலை அறியாமல் இருக்கிறார் என புட்டினை நேரடியாகவும் சாடினார்.

அது மட்டும் அல்ல வாக்னர் வழியில் கண்ணிகளை புதைத்தனர் என இரண்டு கிழமைக்கு முன் ஒரு சிறிய தாக்குதலை வாக்னர் அணி, உக்ரேனில் உள்ள ரஸ்ய அரச இராணுவ அணி மீது தாக்குதல் நடத்தியும் இருந்தது.

இதன் பின் புலத்தில்தான் தமது அணி மீது மிசைல் கொண்டு தாக்கியதாக கூறி இந்த கலகத்தை ஆரம்பித்தார் பிரிகோசின்.

இவை எல்லாம் நடப்பை கூர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு புரியும்.

8 minutes ago, தமிழ் சிறி said:

அதிலும்… வாங்கி வைத்த “பொப் கோர்ன்” எல்லாம், திண்டு முடிப்பதற்குள்….
சக்கு பிடிச்சுப் போச்சு…. எண்ட கவலையும், கன பேர் முகத்தில் இருக்கு. பாவங்கள்…. 😂
”குட் லக் நெக்ஸ்ட் ரைம்” என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு வழி இல்லை. 🤣

🤣முழு பாப் கோனையும் மாஸ்கோ போரில் தின்று தீர்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.

ஆனால்…காற்று போகாதா பெட்டியில் போட்டு வைத்திருக்கிறேன்….

இது ரஸ்யாவின் உள்நாட்டு குழப்பத்தின் முடிவல்ல…

ஆரம்பம். 

மூன்று நாளாய், சமைந்த பிள்ளை மாரி புட்டினை வீட்டில் குந்த வைத்தமைக்கே…நாலு பக்கெட் கச்சான் அல்வா சாப்பிடலாம்…

இனி மெயின் பிக்சர் எல்லாம் இருக்கு🤣

Edited by goshan_che

  • Replies 231
  • Views 15.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமாக- உக்ரேனில் ஓரளவு வினைதிறனுடன் போரிட்ட ஒரே அணி வாக்னர்தான்.

ஒரே நாளில் அவர்களின் திறமையான இரு தலைவர்களையும், அவர்களில் 25,000 பேரை களமுனையில் இருந்து அகற்றியாகி விட்டது!

இனி புட்டின் களை எடுப்பில் இன்னும் ரஸ்ய பக்கம் பலமிழக்கும்.

இதுக்கே - உக்ரேன் ஆதரவாளர்கள் ஒரு லாரி பாப் கோன் சாப்பிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

மிக முக்கியமாக- உக்ரேனில் ஓரளவு வினைதிறனுடன் போரிட்ட ஒரே அணி வாக்னர்தான்.

ஒரே நாளில் அவர்களின் திறமையான இரு தலைவர்களையும், அவர்களில் 25,000 பேரை களமுனையில் இருந்து அகற்றியாகி விட்டது!

இனி புட்டின் களை எடுப்பில் இன்னும் ரஸ்ய பக்கம் பலமிழக்கும்.

இதுக்கே - உக்ரேன் ஆதரவாளர்கள் ஒரு லாரி பாப் கோன் சாப்பிடலாம்.

Image

மொஸ்க்கோவுக்கு, பிரிகோஜின் வருகின்றார் என்று போக்கு காட்டி...
ஆடிய சதுரங்க விளையாட்டுத்தான்... நேற்றைய சம்பவம்.
இப்ப (உக்ரைன்)  கீவ்வின் பிடரிப் பக்கம்... 95 கிலோ மீற்றர்  தூரத்தில் நிற்கிறார்கள்.
இன்னும்... சில வாரங்களில், புதிய கள முனை திறக்கப் படலாம். 
அதற்காகத்தாதான்... 25,000 படை வீரர்களுடன் 18 மணித்தியாலத்தில் இந்த நகர்வு.

அதனை... ரஷ்யா மௌனமாக காய் நகர்த்தியது என்பதே உண்மை.
குப்பை லாரியை... நடுவில் நிறுத்தி வைத்ததெல்லாம்...
"பொப் கோர்ன்" பிரியர்களுக்கு கிளர்ச்சி ஊட்டி, "அல்வா" கொடுக்க மட்டுமே....  animiertes-snack-bild-0004.gif

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்ப பிரிகோஜின் எங்க? வெள்ளை ரஷ்யாவுக்கு போகேல்லையாமே?😂

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சரி.... "சோளன் பொரி"  சாப்பிட்டது காணும்.
போய்... கீவ்வை  பாதுகாக்குற வழியை பாருங்கப்பு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

வசி,

இப்பெல்லாம் முன்னர் போல் நடுநிலையாக சிந்திக்கிறேன், கேள்விகள் கேட்டு தெளிவடைகிறேன் என்ற பாவனையை கூட நீங்கள் கைவிட்டு விட்டிடீர்கள் என நினைக்கிறேன்🤣.

அவர் புட்டின் அலையில் சிக்கி கனநாளாச்சு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

.

- இந்தக் குழப்பத்திற்கு முதன்மைக் காரணம் என்னவென்று உங்களுக்கு இன்னும் உறைக்கவில்லை: ஒரு அணுவாயுத வல்லரசு சகட்டு மேனிக்கு ஜெயிலில் இருந்து வந்த கிரிமினல்களுக்கு இராணுவ , ஆயுத வல்லமையைக் கொடுத்து விட்டு இது நடக்காதென எதிர்பார்க்க இயலாது. எனவே, அதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.

இதை இங்கே பல  தரம்  எழுதியாகி விட்டது  சகோ

ஒரு  ராணுவத்துக்கும்

ஒரு  போராளி  அமைப்புக்கும்

ஒரு நாசகாற தலைவனால் தன்னை  பாதுகாக்க  அல்லது தான்  சொல்வதைக்கேட்க  என்று

சிறையில் இருந்த  கைதிகள் மற்றும் குற்றவாளிகளைக்கொண்டு  உருவாக்கப்பட்ட உலகுத்துக்கே ஆபத்தான  குழுவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுடன்

தெரியாது  விட்டாலும்  பரவாயில்லை  அதனை பூசி  மெழுகி  ஆதரிப்பவர்களுடன் பேச ஒன்றுமில்லை

நேரம் பொன்னானது காண்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, வாலி said:

அது சரி இப்ப பிரிகோஜின் எங்க? வெள்ளை ரஷ்யாவுக்கு போகேல்லையாமே?😂

யாழ்கள புட்டின் பிரிகேட் பெலரூசில நிக்குது…

பிரிகோசின் பெலரூஸ் போனதும் ….

3 நாளில கியவ் வை பிடிக்கிறம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

யாழ்கள புட்டின் பிரிகேட் பெலரூசில நிக்குது…

பிரிகோசின் பெலரூஸ் போனதும் ….

3 நாளில கியவ் வை பிடிக்கிறம்🤣

அப்ப கச்சான் கடலை சோளன் மிக்சர் பக்கோடா முறுக்கு மரவள்ளிக்கிக் கிழங்கு எல்லாத்தையும் ரெடிபண்ணுவம்😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Image

மொஸ்க்கோவுக்கு, பிரிகோஜின் வருகின்றார் என்று போக்கு காட்டி...
ஆடிய சதுரங்க விளையாட்டுத்தான்... நேற்றைய சம்பவம்.
இப்ப (உக்ரைன்)  கீவ்வின் பிடரிப் பக்கம்... 95 கிலோ மீற்றர்  தூரத்தில் நிற்கிறார்கள்.
இன்னும்... சில வாரங்களில், புதிய கள முனை திறக்கப் படலாம். 
அதற்காகத்தாதான்... 25,000 படை வீரர்களுடன் 18 மணித்தியாலத்தில் இந்த நகர்வு.

அதனை... ரஷ்யா மௌனமாக காய் நகர்த்தியது என்பதே உண்மை.
குப்பை லாரியை... நடுவில் நிறுத்தி வைத்ததெல்லாம்...
"பொப் கோர்ன்" பிரியர்களுக்கு கிளர்ச்சி ஊட்டி, "அல்வா" கொடுக்க மட்டுமே....  animiertes-snack-bild-0004.gif

புட்டின் மைண்ட் வாய்ஸ்:

2022 ல வடக்கில் இருந்து கியவுக்கு வெளி கிட்டு வாங்கின அடி எனக்க்குதான் தெரியும்.

மறுபடியும் அதை ஏன் நியாபக படுத்துறியள்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, Justin said:

வழமையாக நீங்கள் செய்வது போல எதிர்கருத்தாளர் சொன்னதையே திரும்பவும் சொல்லி, அவசியமற்ற திசையில் திரியை இழுக்கிறீர்கள்:

 பிரிகோசின் திடீரென சமாதானப் புறாவாக மாறியதால் புட்டினை எதிர்க்கவில்லை என்பது உண்மை - அதைத் தான் நாமும் சொல்கிறோம். ஆனால், உக்ரைனை அடிப்பதில் யார் பெரிய பிஸ்தா என்ற போட்டி யாருக்காக என நினைக்கிறீர்கள்? உள்ளூரில் இருக்கும் ரஷ்யர்களுக்காகத் தானே? இதைத் தான் புட்டினே "முதுகில் குத்தினான்" என்றார். நீங்களோ, புட்டினை விட தீவிரமாக ரஷ்யாவுக்கு டமேஜ் கொன்ட்ரோல் செய்ய முற்படுவது போல அல்லவா தெரிகிறது?😂

இல்லை. முதலியேயே சொல்லி இருக்கிறேன் யதார்த்தத்தை - சண்டை படித்து இருந்தால், சண்டையிலேயே முடிவு செய்யப்பட்டு இருந்தால், ருஸ்யா பலவீனம் ஆகி இருக்கும்.  

அனால், துறை சார் கணிப்புகள் (நாங்கள் எதையும்  சொல்லலாம்) அவசியம், தனிப்பட்ட மதிப்பீட்டை எடுப்பதற்கு.

மற்றது குறிப்பிட்ட  புடினை மையப்படுத்திய பதிவு.

அந்த frame இல் மதிப்பீடு செய்வது, புட்டினையும், ருசியாவை சரியாக விளங்கி கொள்ளவில்லை. 

அந்த frame இல் மதிப்பீடு செய்வது, புட்டினையும், ருசியாவை சரியாக விளங்கி கொள்ளவில்லை. 

போட்டி என்பது உங்களின் புரிதல் - இங்கே உருவாகப்படுத்தப்படுகிறது  உண்மையில் அதுவா?

பிரிகோஸின் சொல்வது - அவருக்கு, வாக்னெருக்கு நீதி வேண்டி என்று. இது இரவுணுவத்தில் நடப்பது இருக்கிறது.

அனால், எப்படி தரப்புக்களால் கையாளப்படுகிறது என்பது  முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

அப்ப சனிக்கிழமை காலையில், பிரிகோஷின் மொஸ்கோ நோக்கி நகர ஆரம்பிக்க முன்னர் "இது முதுகில் குத்திய துரோகம்" என்று தொலைக்காட்சி உரையில் சொன்னது புட்டினின் "பொடி டபிள்" என்கிறீர்களா கடஞ்சா😂?

இப்படியான போட்டிகள் இராணுவத்தில் நடப்பது தான், ஆனால் ஆயுதத்தை உள்நோக்கித் திருப்புவது சீரழிந்த ஆபிரிக்க தேசங்களில் மட்டும் நடப்பது, அணுவாயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டில் நடப்பதால் தான் இங்கே பேசு பொருளாகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

இது முதுகில் குத்திய துரோகம்" என்று தொலைக்காட்சி உரையில் சொன்னது புட்டினின் "பொடி டபிள்" என்கிறீர்களா கடஞ்சா😂?

இது நம்பிக்கை, சத்யபிரமாணத்தை  பற்றி தானே கருத்து. இதை வைத்து உக்கிரனுக்கு அடிப்பதில் போட்டி என்று முடிவுக்கு வரலாமா?  

அனால், உக் படைத்துறையின் கருத்து படி போட்டி தான் காரணம்.

அனால், UK  படைத்துறை ஒன்றை சொல்லாமல் விட்டு விட்டது (இதில் uk மிகவும் சிறப்பு தேர்ச்சி கொண்டது, காலனித்துவத்தால்), முறையற்ற படையணியை, மரபுவழி படையணிக்குள் உள்வாங்கும் பொது வரும் முறுகல்கள்.

இதுவே, முதன்மை காரணம் என்று நான் நினைக்கிறன்.  ஏனெனில் பிடிகோசின், இதுவரை கட்டி வளர்த்த  எல்லாமே எல்லாமே பறி போய், நாதியற்றவர் என்ற உணர்வு உருவாகி இருக்கும்.   
 
15 minutes ago, Justin said:

ஆனால் ஆயுதத்தை உள்நோக்கித் திருப்புவது சீரழிந்த ஆபிரிக்க தேசங்களில் மட்டும் நடப்பது, அணுவாயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டில் நடப்பதால் தான் இங்கே பேசு பொருளாகிறது!

இதை ருசியா மரபு வழிப்படையணிகள் செய்து இருந்தால் சொல்வது சரி.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

அப்ப சனிக்கிழமை காலையில், பிரிகோஷின் மொஸ்கோ நோக்கி நகர ஆரம்பிக்க முன்னர் "இது முதுகில் குத்திய துரோகம்" என்று தொலைக்காட்சி உரையில் சொன்னது புட்டினின் "பொடி டபிள்" என்கிறீர்களா கடஞ்சா😂?

துறை சார் நிபுணர்களின் கணிப்புப்படி:

#அது வேறவாய் 🤣.

புட்டின் அப்படி சொன்னது அவர் சாமத்திய பட சில மணிகளுக்கு முன். அப்போ அவர் சின்ன பிள்ளைதானே? அத்தோடு ஹோமோன்களின் தாக்கம் வேறு.

பின்னேரம் வாக்னர் மொஸ்கோ வாசலுக்கு வந்து பரிசம் கட்டியவுடன் - புட்டின் சொன்னதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

அனால் மரபுவழி படையணிக்குள் கொண்டு வாறது என்ற பின் ருசியா இப்படியானதற்கு திட்டமிட்டு இருக்க வேண்டும்.

அதை குறித்து தான், முகில் குத்தியதாக (பிரிகோஸின் முதலில் ஒப்புக் கொண்டு விட்டு, பின்பு கிளர்ந்தது ( ஏறத்தாழ கருணா விடயத்தில் நடந்தது) ), புடின் சொல்லி இருக்கலாம் .   

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலகத்தின் பின்ணணி.

இங்கே சிலர் கஸ்டப்பட்டு வெள்ளை அடிப்பது போல், புட்டின், பிரிகோஜின், ஷிகோ எவரினதும் ரஸ்யா மீதானா பாசம், தூய எண்ணம் இவற்றால் விளைந்ததல்ல இந்த முறுகல், மோதல் - கலகம்.

இது கொள்ளையர்கள் இடையான அதிகாரப்போட்டி, பங்கு பிரிக்கும் போட்டி.

வாக்னருக்கு வரும் பெருந்தொகை பணத்தில் ஷிகோ வுக்கு ஆசை.

ஷிகோ பெலரூஸில் ஆயுதம் வாங்கி செய்த ஊழல் இன்னும் பல ஊழல் மூலம் வரும் காசில் பிரிகோஜனுக்கு ஆசை.

இருவரையும் ஆளை ஆள் சண்டை பிடிக்க வைத்தால், தனக்கு ஆபத்து இல்லை என்பது புட்டினின் கணக்கு.

இந்த கணக்கு பிழைத்து - பிரிகோஜின் முழுவதுமாக ஷிகோவால் அழிக்கப்படும் நிலை வரும் என ஆன போது, தனது உயிரை காக்க வேறு வழி தெரியாமல் - பிரிகோஜன் மோஸ்கோ நோக்கி படை எடுத்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய செய்தி

பிரிகோஜின் இப்போ ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். 

பழைய துள்ளல் ஏதும் இல்லை. 

ஆடியோ இங்கே.

https://t.me/concordgroup_official/1304

@nedukkalapoovan இந்த உரையில் தாம் ரஸ்ய வானூர்திகளை தாக்கியதை பிரிகோஜின் ஒப்புகொள்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

துறை சார் நிபுணர்களின் கணிப்புப்படி:

#அது வேறவாய் 🤣.

புட்டின் அப்படி சொன்னது அவர் சாமத்திய பட சில மணிகளுக்கு முன். அப்போ அவர் சின்ன பிள்ளைதானே? அத்தோடு ஹோமோன்களின் தாக்கம் வேறு.

பின்னேரம் வாக்னர் மொஸ்கோ வாசலுக்கு வந்து பரிசம் கட்டியவுடன் - புட்டின் சொன்னதுதான் உண்மை.

இன்றிரவு மொஸ்கோ நேரப்படி புட்டினின் சாமத்திய வீடாம்..sorry ..முக்கிய தொலைக்காட்சி உரையாம்😎!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

இன்றிரவு மொஸ்கோ நேரப்படி புட்டினின் சாமத்திய வீடாம்..sorry ..முக்கிய தொலைக்காட்சி உரையாம்😎!

🤣…யாராம் தலை தண்ணி வாக்கிறது🤣 

நான் நினைத்த படி…இது உயிரை காக்க வேறு வழி இன்றி புட்டினின் கவனத்தை ஈர்த்து…ஷிகோவிடம் இருந்து தப்பிக்க பிரிகோசின் செய்த கலகமாகவே தெரிகிறது.

பிரிகோசினும், கலகத்தில் ஈடுபட்ட கூலிகளும் பெலரூஸ் போகிறார்களாம். ஏனையோர் ரஸ்யாவில்.

லூக்காவும் இன்றைக்கு பேசுவதாய் அறிவித்து…பின் நாளைக்கு என மாற்றியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் 6 நிமிடம் மட்டுமே உரையாற்றிய புட்டின்!

உரைக்கு முன், ரஸ்யாவின் எதிர்காலம் பற்றி முக்கிய உரையாக இது இருக்கும் என பெஸ்கோ பில்டப் கொடுத்த போதும்….

புட்டினின் உரையில் அப்படி எதுவும் விசேடமாக இல்லை.

பிகு

ஆளை பார்க்க ரொம்ப சோர்வாய் இருக்கிறார் - ஆராவது முட்டை மா, நல்லெண்ணை, சரக்கு கறி கொடுத்து விட்டால் நல்லம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 போது, தனது உயிரை காக்க வேறு வழி தெரியாமல் - பிரிகோஜன் மோஸ்கோ நோக்கி படை எடுத்தார். 

ஒரு படை நகர்த்தல் இது என்று இதை சொல்வது ரசியாவின் பௌதீகத்தை அறியாதநிலைதான். 

பெலரூஸிற்கு ரசியா ஊடாக படைகளை நகர்த்த புட்டினை முட்டவேண்டிய தேவையே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

"மேற்கு தூபம் போட்டது" என்று வேற தன் மனத்தில் இருக்கும் ஆதாரமில்லாத பயத்தை வெளியே சொல்லியிருக்கிறார்.

இனி, மேற்கு/ஏகாதிபத்திய/ஒற்றைத் துருவ/சுரண்டல்/பிராண்டல்/வர்க்கவாத/பூர்ஷுவா எதிர்ப்பு வாதிகளுக்கு இது தான் வரலாற்று உண்மையாகி விடும்!

"சோவியத் யூனியனை அமெரிக்கா துண்டு துண்டாய் உடைத்தது" என்பதை போலவே இதையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரியப் போகிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஒரு படை நகர்த்தல் இது என்று இதை சொல்வது ரசியாவின் பௌதீகத்தை அறியாதநிலைதான். 

பெலரூஸிற்கு ரசியா ஊடாக படைகளை நகர்த்த புட்டினை முட்டவேண்டிய தேவையே இல்லை. 

இப்படி சொல்லுவது தம்மை தாமே தேற்றி கொள்ள சொல்லும் கதை அண்ணை.

சாதாரண கூகிள் மேப்பை பார்த்தாலே…பெலரூசில் இருந்து கியவுக்கு விரைவாக போகலாம் என்பது புரியும்.

புட்டின் என்ன இத்தனை வருடம் கூகிள் மேப் பார்க்காமலா இருந்தார்? பக்மூட்டில் 10 மாசமாய் இந்த முக்கு முக்க🤣.

உண்மை என்ன என்றால் - புட்டின் எப்போதோ லுக்காவை போரில் இணைய கேட்டும் லூக்கா போக்கு காட்டி வருகிறார்.

ஏனென்றால் லூக்காவுக்கு தெரியும் - போரில் புட்டின் தோற்றால் - உக்ரேனிய படைகள் கிரைமியாவை தாண்டி ரஸ்யாவுக்குள் போகாது -ஆனால் மிக இலகுவாக மின்ஸ்கை கைப்பற்றி, பெலரூசில் ஆட்சியை மாற்றி விடுவார்கள்.

உக்ரேன் போரில் பெலரூஸ் எதிர் படையணி ஒன்று ஏலவே போரிடுகிறது. ஆனாலும் பெலரூஸ் மீது எந்த தாக்குதலும் நடத்தாமல் உக்ரேன் பார்த்து கொள்கிறது.

இதை கெடுக்க லூக்கா விரும்பமாட்டார்.

ஆனால் கீழே உள்ளது நடக்கலாம்.

வாக்னர் உள்ளே வந்து எல்லையில் உக்ரேனோடு சொறியலாம். இதனால் பெலரூஸ் லூக்கா விரும்பாமலே போருக்குள் இழுக்கப்படலாம்.

வாக்னரின் முகாம் உக்ரேன் எல்லை அருகே அமைவதாக சொல்லப்படுகிறது.

இது கட்டாயம் லூக்காவுக்கு தெரிந்தே இருக்கும்.

ஆகவே இதுவரை ஓடுற நீரில், நழுவுகிற மீனாக இருந்த லூக்கா இதை எப்படி கையாள போகிறார் என்பது கவனத்துக்குரியது.

நாளைய லூக்காவின் உரையில் சூசகம் கிடைக்கலாம்.

புட்டினை போலவே, லூக்காவும் பிரிகோசினின் நீண்ட கால நண்பர். புட்டினுக்கு ஆப்படித்தது போல லூக்காவுக்கு அடித்து, முழு பெலரூசை பிரிகோசின் கைப்பற்றினாலும் ஆச்சரியமில்லை.

சுருக்கமாக - சனியன் புட்டினில் இருந்து லூக்காவிடம் தாவி உள்ளது 🤣.

லூக்காவின் தற்போதைய நிலை 👇🤣

large.IMG_2505.png.981279f590d2380712cc6a26db91c78d.png

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

உண்மை தான்

சனியன் இடம் பெயர்கிறது

ஆனால் இது அட்டமத்துச்சனி. ஒரு நாட்டிற்குள் 25 ஆயிரம் சனியன்களை வரவிடுவது இது தான் உலகில் முதல் முறை. உலகம் இன்னும் ஒரு புதிய அனுபவத்தையும் அழிவையும் பார்க்கப்போகிறது. நாம பார்த்து ரசிப்போம் 🤣

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

வசி,

சினிமா படங்களில் வரலாற்றை தேடாமல் (பிறகு இணைப்பு நீக்கப்பட்டது என தேம்பாமல்) - குறைந்த பட்சம் விக்கிபீடியாவிலாவது இணைப்பை கொடுங்கள்.

நீங்கள் சொல்லும் நாசிகளுக்கு எதிரான சதிக்கு, பெயர் 20th of July Plot.

ஆனால் இது பிரிகோசினின் கலகம் அளவுக்கு முன்னேறவில்லை. 

இந்த சதி முயர்சியை - சதி புரட்சியின் வரைவிலக்கணம் என கூறும் நீங்கள்,

பிரிகோசின் ரஸ்ய அணு ஆயுத முகாம், ஒரு நகர் என பலதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து - மாஸ்கோவின் எல்லைக்கு வந்து, புட்டினை லூக்காவிடம் தூது போகும் படி செய்த நிகழ்வை சதி புரட்சியே இல்லை என்கிறீர்கள்🤣.

இப்பெல்லாம் முன்னர் போல் நடுநிலையாக சிந்திக்கிறேன், கேள்விகள் கேட்டு தெளிவடைகிறேன் என்ற பாவனையை கூட நீங்கள் கைவிட்டு விட்டிடீர்கள் என நினைக்கிறேன்🤣.

https://en.wikipedia.org/wiki/Operation_Valkyrie

இதனைதான் குறிப்பிட்டேன் நீங்கள் கூறும் விடயம் பற்றி தெரியாது, அத்துடன் இணைப்பு நீக்கப்பட்டது கூறப்பட்டது ஒரு புரிதலுக்காக ஏனெனில் வார இறுதியில் வேலையில் இருப்பதால் வேலையிடத்தில் இருந்து போட்ட பதிவு அது நேரமின்மை காரணமாக சுருக்கமாக போடும்போது  பல சிக்கல்கள் காணப்படும் எழுத்துகளை பதியும்போது தவறுகள் ஏற்பட்டதால் வெறும் காட்சியுடன் நிறுத்திவிட்டேன்.

ஆனால் இந்த காணொளியில் சதிப்புரட்சி என்பதனை கூ கூ என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள் அதனால் நகைசுவைக்காக ஒரு தென்னிந்திய சினிமா பாடலாலான கு கூ என குயில் கூவாதா எனும் பாடலை பதிவிட்டேன்.

மற்றது இணைப்பு நீக்கப்பட்டது என்பதனை குறையாக கூறியிருந்தாகநினைத்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

மற்றது நடுனிலமை சிந்தனை பற்றியது, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட புரிதல் இருக்கும் விருப்பு தேர்வு இருக்கும் ஆனால் அது முடிவுகளை எடுக்கும் போது தவறான முடிவுகளை ஏற்படுத்திவிடும் (தொழில் ரீதியாக) அதனால் பாதிப்பு ஏற்படுவது எனக்கு மட்டுமே அதனால் மனரீதியாக என்னை தயார்படுத்துவதற்காக முடிந்தளவு பக்கம் சாராமல் இருக்க முயற்சிப்பதுண்டு.

இறுதியாக எனது தரப்பு விளக்கமாக இருந்தாலும் எனது தவறை நான் மறுக்கவில்லை அல்லது நியாயப்படுத்தவில்லை அல்லது  நிர்வாகத்தின் முடிவிற்கெதிராக கருத்து வைக்கவில்லை ஏனெனில் அவர்கள் பார்வையில் தவறாக இருப்பதாலேயே நடவடிக்கை எடுக்கிறார்கள் அத்துடன் அவர்களுக்கென ஒரு ஒழுங்கு காணப்படும் அதனை மீறியது நான், அதனால் தவறு எனது என்பதனை ஏற்றுகொண்டுவிட்டேன், இருந்தாலும் எதிர்காலத்தில் உங்கள் ஆலோசனைகளை பின்பற்ற முயற்சிப்பேன் உங்கள் கருத்திற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.