Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஓட்டமாவடியில் தியாகிகள் நினைவுத் தூபி திறப்பு

24 JUN, 2023 | 01:01 PM
image
 

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகாமையில் தியாகிகள் நினைவுத் தூபியினை திறந்துவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது.

கல்குடா தியாகிகள் நினைவுத்தூபி குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது தாய்மண்ணையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக கல்குடா முஸ்லிம் பகுதியில் உயிர்நீத்த வீரர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரதேச கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் நினைவுகூரப்பட்டனர்.

அத்துடன் உயிர் நீத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பிரதேச நலன்விரும்பிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

3778880007.jpg

467446704.jpg

I3677881.jpg

ஓட்டமாவடியில் தியாகிகள் நினைவுத் தூபி திறப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆக்கிரமிப்பாளர்கள் தியாகிகளாகும் வேடிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களவனும், முஸ்லீமும் தான்… இப்ப தியாகிகள். 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈஸ்டர் குண்டுவெடிப்புடன் துண்டிக்கப்பட்ட சிங்கள முஸ்லீம் உறவை மீண்டும் புதுப்பிக்க பகீரத பிரயத்தனங்கள் எடுக்கிறார்கள்.

ஒருபக்கம் கனடா பிரதமரின் தமிழர் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், மறுபக்கம் தாங்கள் செய்த தவறை  சொல்லாமல் இஸ்லாமியர்கள் படுகொலையை மீண்டும் மீண்டும் பேசும் வன்மம், இப்போது தியாகிகள் தூபி

5 hours ago, nochchi said:

தாய்மண்ணையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக கல்குடா முஸ்லிம் பகுதியில் உயிர்நீத்த வீரர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரதேச கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் நினைவுகூரப்பட்டனர்.

.தாய்மண்மேல் அவ்வளவு பாசம் என்றால் எதற்கு இலங்கையிலிருந்து அரபுநாடுகளுக்கு  வக்காலத்து வாங்குகிறார்கள் என்பதையும்,, முஸ்லீம்களை பாதுகாத்த சிங்களவர்களுக்கே எதுக்கு குண்டு வைத்தார்கள் என்பதற்கும் இந்த தூபிக்கு முன்னால் நின்று ஒரு கொள்கை விளக்கம் தந்தால் இன்னும் சிறப்பாக நினைவுகூரல் அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது சகரானுக்கும் அவரோடை  சேர்ந்தவைக்குமாக இருக்கும்...சோழியன்(சோனகர்) குடுமி சும்மா ஆடாது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் இந்த விடயங்கள் தெரியுமா? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

சிங்களவனும், முஸ்லீமும் தான்… இப்ப தியாகிகள். 😀

எழுதிக்கொடுத்ததைக்கூட மனப்பாடம் செய்து உச்சரிக்க முடியாத, சிறீலங்கா அரச பேரினவாத பயங்கரவாதத்தின் கைக்கூலி.. இனப்படுகொலையின் பங்காளி..

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழனை விழுத்தி கூடி அள்ளின சுகம் சேர்ந்து கூத்தாடுது, வெகுவிரைவில் கலையும். தமிழன் மட்டுமில்லையென்றால் தெரியும் இவர்களின் ஒற்றுமை முகம்.  ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டந்தான். தமிழர் இருக்கும்வரை தமது முதலுக்கு  சேதாரமில்லை, தமிழனை பலிகொடுத்து தம்மை காப்பாற்றிக்கொள்ளலாம் என அறிவிலிகள் நினைக்கலாம். யானைக்கு பசி எடுத்தால்; பாகனையும் தூக்கி அடித்துத்தான் கொல்லும் என்கிற உண்மை புரியாமல். ஒருவரை விழுத்த வேண்டுமென்றால்; முதலில் அவர்களுக்கு வரும் உதவிகளை நிறுத்த வேண்டும், அதன் பின்னே அவரில் கைவைப்பார்கள். இலகுவில் தமக்கு இழப்பில்லாமல் தாக்கியழித்து விடலாம். இப்போ நடப்பதும் அதுவே. தங்களுக்கு இலக்கு இருப்பதை மறந்து குதிக்கிறார்கள். இவற்றையெல்லாம் இஸ்லாம் சொல்லிக்கொடுப்பதில்லை, எப்படி மதத்தை வைத்து முன்னுரிமை சலுகை பெறுவது என்றே சொல்லிகொடுத்திருக்கும் போல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த நினைவு தூபிக்கு பக்கத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் தேவாலயங்களில் குண்டு வைத்து கொல்லப்படட சிங்கள, தமிழ் மக்களுக்கு ஒரு நினைவு தூபியும், கிழக்கில் முஸ்லீம் , சிங்கள காடையர்களால் (ஊர் காவல்) கடத்தி கொலை செய்யப்படட தமிழர்களுக்கு ஒருதூபியும் நிறுவினால் நன்றாக இருக்கும். அது நியாயமானதும்கூட.

சில சிங்கள அரசியல்வாதிகள்தான் இதன் மூளையாக செயல்படடார்கள் எண்டு முஸ்லிம்கள் தப்பிக்க முடியாது. சில வேளைகளில் அது இனங்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வையும் , சமாதானத்தையும் உருவாக்கலாம்.

பிள்ளையானும் , கருணாவும் இதை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Cruso said:

பிள்ளையானும் , கருணாவும் இதை செய்ய வேண்டும்

வேலிக்கு சாட்சி சொல்வதற்காகவா இந்த ஓணான்களை அழைக்கிறீர்கள்? அவர்கள் செய்ததைவிட இவர்கள் செய்தது ஒன்றும் குறைந்ததல்லவே. இன்னும் அவர்களோடு கூகுடிக்கூத்தாடித்துக்கொண்டு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்களே தெரியவில்லையா? இவர்களா புரிந்துணர்வு சமாதானம் ஏற்படுத்துவது? அதை ஏற்படாமல் தடுத்ததே இவர்களின் சுயநலம். சமாதானம் உருவானால் இவர்கள் பிழைப்பு என்னாவது? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, satan said:

வேலிக்கு சாட்சி சொல்வதற்காகவா இந்த ஓணான்களை அழைக்கிறீர்கள்? அவர்கள் செய்ததைவிட இவர்கள் செய்தது ஒன்றும் குறைந்ததல்லவே. இன்னும் அவர்களோடு கூகுடிக்கூத்தாடித்துக்கொண்டு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்களே தெரியவில்லையா? இவர்களா புரிந்துணர்வு சமாதானம் ஏற்படுத்துவது? அதை ஏற்படாமல் தடுத்ததே இவர்களின் சுயநலம். சமாதானம் உருவானால் இவர்கள் பிழைப்பு என்னாவது? 

இவர்களுக்கும் ஓட்டுப்போட ஒரு கூடடம் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். நல்லதோ, கெடடதோ பிள்ளையான்  இப்போதும் தெரிவு செய்யப்படட ஒரு உறுப்பினர்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என நிறுவுவதற்கு கையாளும் ஆயுதம்; அந்தமக்களின் இயலாத்தன்மை, வறுமை, அவர்களுக்காக நடத்தப்பட்ட கொலைகள். இவைகள் ஒருபோதும் சமாதானத்தை ஏற்படுத்தாது அதை நிஞாயப்படுத்தும். ஏன்... தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள் என்று நாம் அனுப்பிவைத்தவர்களாலேயே அதைநிறைவேற்ற முடியவில்லை. அதற்கு இந்தபச்சோந்திகளின் செயற்பாடும் காரணம். அச்சுறுத்தல், வறுமை, இலஞ்சம்  ஒருபோதும் சமாதானத்தை ஏற்படுத்தாது!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.