Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!

பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!

பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

பாலஸ்தீன் Jenin நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் இந்த தாக்குதலினால் பல குடியிருப்புகள் தேசமாக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் Jenin நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1337278

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குக் கரையில் இஸ்ரேலின் முற்றுகையில் 9 பலஸ்தீனியர்கள் பலி

Published By: SETHU

04 JUL, 2023 | 09:39 AM
image
 

மேற்குக் கரையின் ஜெனின் நகரில்  இஸ்ரேலியப் படையினர் நேற்று நடத்திய பாரிய முற்றுகையில் 9 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

நூற்றுக்கணக்கான துருப்புகள் இம்முற்றுகையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், வான்வழித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

கடந்த பல வருடங்களில் இஸ்ரேலிப் படையினர் நடத்திய மிகப் பெரிய முற்றுகை இதுவாகும். கவச வாகன்கள், இராணுவ புல்டோசர்கள், ஆளில்லா விமானங்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன.  

'விரிவான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை முயற்சி' இது என இஸ்லே; தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல்  ஜெனின் நகர மக்களுக்கு எதிரான பகிரங்க யுத்தம் என பலஸ்தீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/159154

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை எந்த மேற்கு நாடுகளும் கண்டிக்கவில்லை. ஆனால்.. உக்ரைனில் மட்டும்.. தாம் தோம் என்று துள்ளிக்குதிக்க என்ன காரணம். நேட்டோ விரிவாக்கம் மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய தலைநகரில் காரைபயன்படுத்தி தாக்குதல் - ஏழுபேர் படுகாயம்

Published By: RAJEEBAN

04 JUL, 2023 | 09:27 PM
image
 

இஸ்ரேல் தலைநகர் டெல்அவியில் காரை பயன்படுத்தி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.

வணிகவளாகத்திற்கு வெளியே நின்றிருந்த பாதசாரிகள் மீது 20 வயது பாலஸ்தீன இளைஞர் ஒருவர் காரால் மோதியுள்ளார்.

அவர் காரிலிருந்து வெளியேவந்து அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தமுயன்றவேளை சுட்டுக்கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

af2caecf-8610-46e4-bf2c-af7e5cd9907f.jpg

துணிச்சல் மிக்க நபர் ஒருவர் அவரை சுட்டுக்கொன்றார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்குகரையில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதலிற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் இடம்பெற்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/159227

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, ஏராளன் said:

இஸ்ரேலிய தலைநகரில் காரைபயன்படுத்தி தாக்குதல் - ஏழுபேர் படுகாயம்

Published By: RAJEEBAN

04 JUL, 2023 | 09:27 PM
image
 

இஸ்ரேல் தலைநகர் டெல்அவியில் காரை பயன்படுத்தி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.

வணிகவளாகத்திற்கு வெளியே நின்றிருந்த பாதசாரிகள் மீது 20 வயது பாலஸ்தீன இளைஞர் ஒருவர் காரால் மோதியுள்ளார்.

அவர் காரிலிருந்து வெளியேவந்து அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தமுயன்றவேளை சுட்டுக்கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

af2caecf-8610-46e4-bf2c-af7e5cd9907f.jpg

துணிச்சல் மிக்க நபர் ஒருவர் அவரை சுட்டுக்கொன்றார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்குகரையில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதலிற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் இடம்பெற்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/159227

பொதுமக்களைக் கத்தியால் குத்துவது என்பது ஈவிரக்கமற்ற பயங்கரவாத செயல்... 

பரவாயில்லை, பொதுமகனே பயங்கரவாதியைக் கொன்றுள்ளார்... இதனால் தான் இசுரேலியர்களை (விடுமுறையில் செல்லும் படையினர்) வீட்டிற்கும் சுடுகலன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

பொதுமக்களைக் கத்தியால் குத்துவது என்பது ஈவிரக்கமற்ற பயங்கரவாத செயல்... 

எங்கள் போராட்டத்திலும் சிங்களப் பொதுமக்கள்  மீதான  பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

அந்தத் தாக்குதல்கள் தொடர்பான தங்களின் நிலைப்பாடு என்ன? 

(ஆட்டுக்குள்ள மாடு எனக் கத்தக்கூடாது சரியே...😉)

17 hours ago, nedukkalapoovan said:

இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை எந்த மேற்கு நாடுகளும் கண்டிக்கவில்லை. ஆனால்.. உக்ரைனில் மட்டும்.. தாம் தோம் என்று துள்ளிக்குதிக்க என்ன காரணம். நேட்டோ விரிவாக்கம் மட்டுமே. 

சீச்சீ.... அப்பிடியெல்லாம் இருக்காது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/7/2023 at 09:33, nedukkalapoovan said:

இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை எந்த மேற்கு நாடுகளும் கண்டிக்கவில்லை. ஆனால்.. உக்ரைனில் மட்டும்.. தாம் தோம் என்று துள்ளிக்குதிக்க என்ன காரணம். நேட்டோ விரிவாக்கம் மட்டுமே. 

அட நீங்கள் வேற......உக்ரேனுக்காக கதை,கவிதை,கட்டுரை ,மனிதாமிமான கருத்து,நியாய சட்டங்கள் எழுதும் எம்மவர்களே இதை கண்டித்து கருத்து எழுத மாட்டார்கள்.

நரியை பரியாக்கி  அதற்கு வக்காளத்து வாங்குகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனினில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் வெளியேறியது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

ஜெனினில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் வெளியேறியது.

மேலும் ஒரு காசாவக மேட்கு கரையை வைத்திருக்க இஸ்ரவேல் விரும்பாது. அதாவது பாதுகாப்பு போன்ற அதிகாரம் அங்கு வழங்கப்படாது. எனவே இஸ்ரவேல் அடிக்கடி அங்கு சென்று இப்படியான துப்பரவு வேலைகளை செய்வார்கள். நிச்சயமாக மீண்டும் செல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய படையினர் சிறுவர்களை கொல்வது குறித்து வருந்தவில்லை – பிபிசி ஊடகவியலாளர் சீற்றம்

Published By: RAJEEBAN

06 JUL, 2023 | 06:43 AM
image
 

இஸ்ரேலிய படையினர் சிறுவர்களை கொல்வது குறித்து வருத்தப்படவில்லை என பிபிசியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

anjana_gadgil.jpg

மேற்குகரையின் ஜெனின் அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள பிபிசியின் நிகழ்ச்சிதொகுப்பாளர் இங்கு கொல்லப்பட்ட 12 பாலஸ்தீனியர்களில் ஐந்து சிறுவர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை கொல்வது குறித்து இஸ்ரேலிய படையினர் வருத்தமடையவில்லை. அவர்கள் அது குறித்து மகிழ்ச்சியடைகின்றனர் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நவ்டாலி பெனெட் உடனான நேர்காணலின்போது அஞ்சனா கட்ஜில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் இதனை ஒரு இராணுவ நடவடிக்கை என அழைக்கின்றது. ஆனால் சிறுவர்கள் கொல்லப்படுவது எங்களுக்கு தெரியும், நால்வர் 18 வயதிற்கு உட்பட்டவர்கள். இஸ்ரேலிய இராணுவம் இதனை செய்வதற்காகவா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது 16-18 வயதினரை கொல்வதற்காகவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் ஜெனின் முகாமில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159311

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய வன்முறைகளுக்கு எதிரான கடும் கண்டனங்கள் 

Published By: VISHNU

02 JUL, 2023 | 08:55 PM
image
 

லத்தீப் பாரூக்

மிடில் ஈஸ்ட் மொனிடர் இணையதளத் தகவலின்படி, கடந்த கோடை காலத்தில் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களின் போது, ஒரு இஸ்ரேல் படைவீரர் 74 வயதான பலஸ்தீன பெண்ணான கால்யா அபுறிதா என்பவரை நெருங்கி அவருக்கு ஒருசொட்டு தண்ணீர் கொடுத்துள்ளார். 

latheef__02.jpg

கருணையோடு தண்ணீர் கொடுப்பது போன்று பாசாங்கு செய்து அதை படம்பிடித்துக் கொண்டு, மறுகனமே அந்த இடத்திலேயே அந்த மூதாட்டியை சுட்டுக்கொன்றுள்ளார். சுமார் ஒருமீற்றர் தூரத்தில் இருந்து அந்தப்பெண்ணின் தலையில் அவர் சுட்டுள்ளார். அதன் பிறகு அவர் துடித்துக்கொண்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து மரணிக்கும் வரை அதைப் பார்த்துக்கொண்டு அந்த இடத்திலேயே இருந்துள்ளார்.

latheef__01.jpg

யூதர்களின் கொடுமைக்கும் கொடூரத்துக்கும் அண்மைய உதாரணமாக இந்தச்சம்பவம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ மேற்குலகத்தால் இகழப்பட்ட யூதர்களின் நிலை இதுதான்.

தவழும் பருவத்தில் இருந்த ஒருபலஸ்தீன குழந்தை கொல்லப்பட்டு சில தினங்களில் 2023 ஜுன் 19ஆம் திகதி மேற்குக்கரை பிரதேசமான ஜெனினில் உள்ள பலஸ்தீன அகதி முகாம் ஒன்றை இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்துள்ளன. இச்சம்பவத்தில் ஏழு பலஸ்தீனாகள் கொல்லப்படடுள்ளனர். இதில் 15 வயதான ஒரு சிறுவனும் அதே வயதான சிறுமியும் அடங்குவர்.

சில அறிக்கைகளின்படி இஸ்ரேல் படைகள் தமது துப்பாக்கிகளில் இருந்த ஜீவ ரவைகள் மற்றும் விஷ வாயு என்பனவற்றைப் பாவித்துள்ளனர். கடந்த பல தசாப்தங்களில் முதல் தடவையாக இச்சம்பவத்தின் போது தாக்குதல் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. 

தாக்குதலின் பின் சம்பவ இடத்துக்கு மருத்துவ உதவிப்பிரிவினர் விரைந்து செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் இடம்பெற்று மிக நீண்ட நேரம் கழித்தே அங்கு போய் சேந்துள்ளனர். இதனால் மிகமோசமாகக் காயப்பட்டு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்டவர்கள் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பக்க பலத்துடன் ஆயுதம் ஏந்திய யூத குடியிருப்பாளர்கள் 400 பேர் வரையில் இதில் பங்கேற்றதாக தெரியவந்துள்ளது. துர்முஸாயா என்ற சிறிய பலஸ்தீன புறநகர்பகுதி மீதே இவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு அவர்களின் வீடுகள் வாகனங்கள் மற்றும் பண்ணை நிலங்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டன.

துர்முஸாயா நகர மேயர், பலஸ்தீன சமூகத்தின் மீது 400க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய குடியிருப்பாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களின் வீடுகளை தீக்கிரையாக்கியதாகவும் 160 வாகனங்களையும் எரித்து நாசமாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் வேறு எங்காவது ஒரு இடத்தில் இவ்வாறானதோர் சம்பவம் நடந்திருந்தால் இந்நேரம் அதற்கு எதிரான பாரிய கண்டனங்கள் எழுந்திருக்கும் என்று பத்தாஹ் புரட்சிகர சபையின் உறுப்பினரான ஜமால் ஹவாயி என்ற 52 வயதான நபர் சுட்டிக்காட்டியதோடு, 2023 ஆரம்பம் முதல் 26 சிறுவர்கள் உட்பட சுமார் 170 அப்பாவி பலஸ்தீனர்களை இஸ்ரேல் படைகள் கொன்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குடியேற்றவாசிகளின் மீதான இத்தாக்குதலை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கண்டித்துள்ளார். உலகத்தலைவர்கள், அரபு சர்வாதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய தரப்பினர் தமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சமூகத்திடமிருந்து வெளிப்பட்டுள்ள கண்டனங்கள் நயவஞ்சகத்துக்குள் புதையுண்டு போனதாகவே காணப்படுகின்றன. இஸ்ரேல் என்ற இந்த இனவாத அரசை ஆதரித்து வரும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இஸ்ரேலின் வன்முறைகளை தடுத்து நிறுத்த இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இஸ்ரேலிய அரசும் அதன் யூதபிரஜைகளும் சட்டவிடுபாட்டு உரிமையுடன் பலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதலில் சுதந்திரமாக ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச சட்டங்களின் கீழ் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குடியேற்றங்களும் அவற்றில் வசிப்பதும்கூட சட்டவிரோமானவை என்ற நிலையிலும் அவர்கள் வன்முறைகளில் தாராளமாக ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான தாக்குதல்களை தடுத்து நிறுத்த உருப்படியான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத பட்சத்தில்; இந்தக் கண்டனங்கள் எவ்வித பயனுமற்றவை என்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் மக்கள் கருதுகின்றனர். அவர்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் அவ்வாறு தான் கருதுகின்றனர்.

பலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் நிலை பற்றி மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடும் அதிகாரி பிரான்ஸிஸ்கா அல்பனீஸ்; “இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் கீழ் பலஸ்தீனர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகின்றது. அவர்கள் மீதான மிருகத்தனம் ஒன்றில் இஸ்ரேல் இராணுவத்திடமிருந்து அல்லது குடியேற்றவாசிகளிடமிருந்து பிரயோகிக்கப்படுகின்றது. இது நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவும் இல்லை. காரணம் இஸ்ரேலிய ஆட்சி முறைமையானது பலஸ்தீனர்களின் பாதகாப்பை முழுமையாக மறுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே வார்த்தைகளால் மட்டுமேயான கண்டனங்கள் வெறும் அர்த்தமற்றவையாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன மக்கள் மற்றும் அவர்கள் மீதான சட்டபூர்வமான உரிமைகள் பற்றிய சர்வதேச சட்டங்களையும் சாசனங்களையும் இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்று நூற்றுக் கணக்கான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அமுல் செய்வதில் சர்வதேச சமூகமும் அதிகாரிகளும் கண்களை இழந்த குருடர்களைப் போன்று நடந்து கொள்கின்றனர். 

அதேநேரம், துரதிஷ்டவசமாக பலஸ்தீன அதிகார சபையும் பெரும்பாலும் குற்ற உணர்வுடனேயே காணப்படுகின்றது. பலஸ்தீனர்களின் பாதுகாப்புக்கு தேவையான குரல்கள் எதுவும் எழுப்பப்படவில்லை. இஸ்ரேலுக்கான சட்ட விடுபாட்டு உரிமைக்கும் முடிவில்லை. 

அதேபோல் தமது சொந்த பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் சட்ட ரீதியான உரிமையும் பலஸ்தீனர்களுக்கு வழங்கப்படவில்லை. பலஸ்தீன அதிகார சபையினர் கூட தமது சொந்த மக்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் ஒத்துழைத்து இரட்டை வேடம் போட்டு வருவதாகவே சந்தேகிக்கப்படுகின்றது. பலஸ்தீன செயற்பாட்டாளர்கள் பலர் பலஸ்தீன அதிகார சபையின் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன அதிகார சபை காவலர்களால் கூட பலஸ்தீன மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க முடியவில்லை. மாறாக அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களையே பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலைமைகளின் நடுவிலே இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பிரதேசத்தில் ஆயிரம் புதிய வீடுகளைக்கொண்ட குடியேற்றத் திட்டம் ஒன்றையும் துரிதப்படுத்தி உள்ளது. மேலும் புதிய குடியிருப்புக்களை நிறுவி தனது அகண்ட இஸ்ரேல் திட்டத்தை அமுல் செய்வதில் இஸ்ரேல் உறுதியுடன் செயற்படுகின்றது. 

இதை தடுத்து நிறுத்த முடியாமல் சர்வதேச சமூகம் செயல் இழந்து நிற்கும் நிலையில், குடியிருப்புக்களை இஸ்ரேல் துரிதப்படுத்தி வருகின்ற பின்னணியில் இருதேச தீர்வு என்பதும் இப்போது துரிதமாக மங்கி வருகின்றது.

அரபுலக கொடுங்கோலர்கள் தமது சொந்த மக்களை அடக்குமுறையில் இருந்து விடுவித்து சுதந்திரமாக வைத்திருந்தால் மட்டுமே இஸ்ரேலினதும் அதன் குடியிருப்பாளர்களினதும் வன்முறைகளுக்கு முடிவு கட்டலாம். பெரும்பாலும் ஒருசில வாரங்களில் இதை செய்யலாம்.

எவ்வாறேனும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பிரதேசத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கான வாயப்புக்கள் உள்ளதாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரதானி வோல்கர் ட்ரூக் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கடுமையான அரசியல் சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுவதன் மூலமும், இஸ்ரேலின் அதிகரித்த நவீன ஆயுதப் பயன்பாடுகள் மூலமும் இந்த நிலை தூண்டப்படுவதாகவும் வன்முறைகளுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159078

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.