Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளை ஒத்த பாறைகள் இலங்கையில்? : நாசா விஞ்ஞானிகள் ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

03 JUL, 2023 | 04:12 PM
image
 
நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று கற்பாறைகள் தொடர்பான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது.

நாசாவின் மூத்த விஞ்ஞானி சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு, இலங்கையில் உள்ள சில பாறை அமைப்புகளுக்கும் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பாறை அமைப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து ஆராய்வதற்காக தற்போது இலங்கைக்கு வந்துள்ளது.

இலங்கையில் நாசா விஞ்ஞானிகள் தமது ஆய்வுப் பயணத்தை முதலில் கினிகல்பலஸ்ஸ மற்றும் இந்திகொலபெலஸ்ஸ  ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தென் மாகாணத்தில் உள்ள உஸ்ஸங்கொட பிரதேசத்துக்கு பயணிக்கவுள்ளனர்.

குறித்த பிரதேசங்கள் அவற்றின் தனித்துவமான புவியியல் அம்சங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதோடு, அவை ஆய்வுக் குழுவின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.

புவியியல் மற்றும் வானியல் துறைகளை இணைக்கும் இந்த ஆய்வானது, பூமிக்குரிய பாறைகள் மற்றும் தொலைதூர செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. 

இத்தகைய கண்டுபிடிப்புகள் பிரபஞ்சத்தைப் பற்றிய எமது அறிவை விரிவுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

https://www.virakesari.lk/article/159132

  • கருத்துக்கள உறவுகள்

புன்னாலைக்கட்டுவான் பகுதியிலும் மண் சிவப்பா இருக்கு. அங்கும் போய் ஆய்வு செய்யலாமே.

பூமி செவ்வாய் சந்திரன் சூரியன்.. எல்லாமே... ஒரு பால்வீதியை சார்ந்தவை எனும் போது பல ஒற்றுமைகள் இருக்கும் என்பது நாசா அறியாததா..???! எங்கேயோ இடிக்குதே..???!

உலகில் முதன் முதல் தோன்றிய நாடு இலங்கை என்று யுனெஸ்கோவுக்குக் காட்டப் போகிறார்களா ? ராமாயணத்துக்கு ஆப்புதான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் என்று அமெரிக்கா வரை…
ஓரு கல்லை கொண்டு போய் விற்க முடியாமல் திரும்பக் கொண்டு வந்தவர்களிடம்
எதை எதிர்பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் என்று அமெரிக்கா வரை…
ஓரு கல்லை கொண்டு போய் விற்க முடியாமல் திரும்பக் கொண்டு வந்தவர்களிடம்
எதை எதிர்பார்க்க முடியும்.

ஆய்வு செய்யிறதுக்கும் காசு கொடுக்கிறவையோ?

  • கருத்துக்கள உறவுகள்

இது நாசாவின் ஒரு ஆய்வுத் திட்டம் தான். சுனிதி கருணாதிலக, நாசாவின் FINESSE என்ற ஒரு ஆய்வுத் திட்டத்தில் பணியாற்றுகிறார். செவ்வாய்க் கிரகம் உட்பட்ட கிரகங்களில் நிலம், பாறைகள் எப்படித் தோன்றுகின்றன எனும் ஆய்வை இந்தத் திட்டம் மூலம் செய்கிறார்கள். இதற்காக, உலகின் சில பகுதிகளில் நில அமைப்புகளை ஆராய்கிறார்கள். இது ஒரு method development வேலைத் திட்டம். இதில் கிடைக்கும் தொழில்நுட்ப அறிவை, எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பும் விண்கலங்களில் நிலவியல் ஆய்விற்காகப் பயன்படுத்துவர் என ஊகிக்கிறேன்.

https://www.nasa.gov/finesse/research-objectives

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் தமிழர்கள் செவ்வாயை வணங்கி வந்தமையும் அவர்களுக்கு பிடித்த செவ்வாய் தோஷம் விடப்போவதில்லை என்பதும் தெரிகிறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப செவ்வாய்க்கு ரோவர் ரோவரா விட்டு துளையெல்லாம் போட்டு ஆய்வு செய்தது என்ன பொய்யா. பேசாமல் இவ்வளவு செலவு செய்யாமல்.. சொறீலங்கா கல்லையே நோண்டி இருக்கலாமே..??!

நிலவில் 1960களில் கால் பதிச்சதாகச் சொல்லும் அமெரிக்காவினதும் நாசாவினதும்.. அடுத்த நிலவுப் பயணத்துக்கு என்னென்னவோ பிளான் போடிறாங்களாம்.. இன்னும் முடியல்லையாம். அதுக்குள்ள சீனா போயிடும் போல. ஏலவே.. அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவில்லை.. என்ற தியறிகளும் உலாவுது. இப்ப செவ்வாய் ரோவர்களும் படங்காட்டலோ என்று சொல்லி வைக்கப் போறாய்ங்க.

அமெரிக்கன் நல்லா திட்டமிட்டு புளுகுவான். அதில் நாசா வேறு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nedukkalapoovan said:

🤣அப்ப நீங்களும் அமெரிக்கா நிலவில் இறங்கவில்லை என்று நம்பும் குழுவா?

நல்ல "விஞ்ஞானம்" தான் போங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

🤣அப்ப நீங்களும் அமெரிக்கா நிலவில் இறங்கவில்லை என்று நம்பும் குழுவா?

நல்ல "விஞ்ஞானம்" தான் போங்கள்!

நிலவு விடயத்தில் நாங்கள் விஞ்ஞானத்தைப் பாவிக்கவில்லை. அது மட்டுப்பட்டிருக்குது. அமெரிக்கன் காட்டிற படத்தை தான் பார்க்கிறம். நம்பிறம். நிலவுக்கு போய் நாமாக உண்மையா பொய்யான்னு..ஆராயவில்லை. அது விஞ்ஞானமல்ல. 

அதே தான் நிலை.. செவ்வாய் விடயத்திலும். பல விண்வெளி ஆய்வுகளிலும். அமெரிக்கன் காட்டிறதை நம்ப வேண்டிய நிலை. அதனால் தான் அவை தியறி... ஒப்சவேசனுக்குள் நிற்குது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

நிலவு விடயத்தில் நாங்கள் விஞ்ஞானத்தைப் பாவிக்கவில்லை. அது மட்டுப்பட்டிருக்குது. அமெரிக்கன் காட்டிற படத்தை தான் பார்க்கிறம். நம்பிறம். நிலவுக்கு போய் நாமாக ஆராயவில்லை. அது விஞ்ஞானமல்ல. 

அப்ப நீங்கள் இப்ப நம்புற விஞ்ஞானத் தரவுகள் எல்லாம் "நீங்களாகவே" நேர போய் கண்டு பிடித்ததா நெடுக்கர்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அப்ப நீங்கள் இப்ப நம்புற விஞ்ஞானத் தரவுகள் எல்லாம் "நீங்களாகவே" நேர போய் கண்டு பிடித்ததா நெடுக்கர்?

குறைந்தது அவை பிற தரப்புக்களால் சரிபார்க்கப்பட்டிருக்கும்.

ஆனால்.. அமெரிக்கன் நாசா சொல்வதில் பலவற்றை வேறு எவரும் சரிபார்க்க முடியாத நிலையில்...... அவன் சொல்வதையே நம்பிக்கிட்டு இருக்கினம். அதனால் தான் என்னவோ.. சீனா நிலவுக்கு போகப் போறன் என்றதும் அமெரிக்கா தானும் தானும் என்று நிற்குது. ஒருவேளை குட்டு வெளிப்பட்டிடும் என்ற பயமோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

அப்ப சீனாக்காரன்/ பிறதரப்புகள், சொல்வதை யார் சரி பார்ப்பது😎? அல்லது அதுவும் தியரி தானா? உங்கள் போன்ற விஞ்ஞான முறைமைகளில் பயிற்சி இருப்போரே இது போன்ற அரைவேக்காட்டு விஞ்ஞானத்தைப் பரப்பினால், விஞ்ஞானத்தை ஆழமாகப் புரியாத மக்களின் நிலை பரிதாபம் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

அப்ப சீனாக்காரன்/ பிறதரப்புகள், சொல்வதை யார் சரி பார்ப்பது😎? அல்லது அதுவும் தியரி தானா? உங்கள் போன்ற விஞ்ஞான முறைமைகளில் பயிற்சி இருப்போரே இது போன்ற அரைவேக்காட்டு விஞ்ஞானத்தைப் பரப்பினால், விஞ்ஞானத்தை ஆழமாகப் புரியாத மக்களின் நிலை பரிதாபம் தான்!

கேள்வி கேட்பதும் சரி பார்ப்பதும் தான் விஞ்ஞானத்தின் அடிப்படையே. அது அமெரிக்கனின் அவியல்களை கண்டறியவும் உதவும். அது அரைவேக்காட்டு விஞ்ஞானமாக விபரிக்கப்பட்டாலும்.. அது தான் சரியானது என்பதை மக்கள் உணர்வது அவசியம். அமெரிக்கன் அவிப்பது எல்லாம் விஞ்ஞானமும் அல்ல. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல... புளோரிடா கேப்  கார்னிவல் (கென்னடி விண்வெளி மையம்) போனவர்கள் இப்படி பேச மாட்டார்கள். 🤐
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் என்று அமெரிக்கா வரை…
ஓரு கல்லை கொண்டு போய் விற்க முடியாமல் திரும்பக் கொண்டு வந்தவர்களிடம்
எதை எதிர்பார்க்க முடியும்.

அதனை சொறீலங்காவில் வைச்சே பரிசோதிச்சு அதன் தரத்தை கண்டறிய முடியாமல்.. சிங்களவனின் அவியலை நம்பி பிளேன் ஏத்திக் கொண்டு போனவையை என்னென்பது..??! அவை தான் இப்ப செவ்வாய்க்கல்லை சொறீலங்காவில் கண்டிட்டினமாம்..??! 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

கேள்வி கேட்பதும் சரி பார்ப்பதும் தான் விஞ்ஞானத்தின் அடிப்படையே. அது அமெரிக்கனின் அவியல்களை கண்டறியவும் உதவும். அது அரைவேக்காட்டு விஞ்ஞானமாக விபரிக்கப்பட்டாலும்.. அது தான் சரியானது என்பதை மக்கள் உணர்வது அவசியம். அமெரிக்கன் அவிப்பது எல்லாம் விஞ்ஞானமும் அல்ல. 

அப்படி உங்களுக்கு "அமெரிக்க அவியலாக" நிலவு அல்லது விண்வெளி ஆய்வில் தெரிந்த ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட்டு வாதிட்டால் , நீங்கள் பேசுவது  அரைவேக்காட்டு விஞ்ஞானம் அல்ல என நிறுவலாம். இல்லையெனில், உங்கள் "அமெரிக்க எதிர்ப்பு" மனப்பாங்கினால் மாசடைந்த பார்வை தான் உங்களுடையது என்றாகி விடும்!

ஏனைய வாசகர்களுக்கு (நெடுக்கருக்கு அல்ல😎!): நிலவு, அல்லது விண்வெளிஆய்வு என்பது  அமெரிக்காவோ ஒரு தனி நாடோ செய்யும் தனி முயற்சியல்ல! இது வரை 11 நாடுகள் நிலவை நோக்கிய பறப்புகளை நிகழ்த்தியிருக்கின்றன. அவற்றுள் அமெரிக்கா மட்டும் தான் நிலவில் மனிதர்களை இறக்கியிருக்கிறது (இது முதலில் நிகழ்ந்தது 1969 இல், கடைசியாக நிகழ்ந்தது 1972 இல்). சோவியத் ஒன்றியம், மனிதர்களை நிலவில் இறக்கும் முயற்சியில் அரும்பொட்டில் தவற விட்டது.

இன்று இது மீளவும் பேசு பொருளாக உருவாகக் காரணம் இந்த நிலவிற்கு மனிதனை அனுப்பும் முயற்சி அமெரிக்காவிற்கும், அன்றைய சோவியத்திற்குமிடையேயான போட்டியாக இருந்ததும், இன்று அதே போன்ற ஒரு போட்டி நிலை நிலவுவதும் தான்! மொத்தமாக 6 தடவைகள் அமெரிக்கா நிலவிற்குப் பயணித்திருக்கிறது, அவற்றுள் 5 வெற்றிகரமாக மனிதர்களை நிலவில் இறக்கியிருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

அதனை சொறீலங்காவில் வைச்சே பரிசோதிச்சு அதன் தரத்தை கண்டறிய முடியாமல்.. சிங்களவனின் அவியலை நம்பி பிளேன் ஏத்திக் கொண்டு போனவையை என்னென்பது..??! அவை தான் இப்ப செவ்வாய்க்கல்லை சொறீலங்காவில் கண்டிட்டினமாம்..??! 

🇱🇰 சிங்களவனின்… அவியலில்,  🇺🇸அமெரிக்கனே…. அவிஞ்சு போயிட்டான். 😂 🤣

பகிடி என்னவென்றால்…. அந்தக் கல்லை, அமெரிக்காவுக்கு காட்டப் போன குழுவில் இருந்த
 இரண்டு சிங்களவன்… அமெரிக்காவில் காணாமல் போய் விட்டானாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

அப்படி உங்களுக்கு "அமெரிக்க அவியலாக" நிலவு அல்லது விண்வெளி ஆய்வில் தெரிந்த ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட்டு வாதிட்டால் , நீங்கள் பேசுவது  அரைவேக்காட்டு விஞ்ஞானம் அல்ல என நிறுவலாம். இல்லையெனில், உங்கள் "அமெரிக்க எதிர்ப்பு" மனப்பாங்கினால் மாசடைந்த பார்வை தான் உங்களுடையது என்றாகி விடும்!

ஏனைய வாசகர்களுக்கு (நெடுக்கருக்கு அல்ல😎!): நிலவு, அல்லது விண்வெளிஆய்வு என்பது  அமெரிக்காவோ ஒரு தனி நாடோ செய்யும் தனி முயற்சியல்ல! இது வரை 11 நாடுகள் நிலவை நோக்கிய பறப்புகளை நிகழ்த்தியிருக்கின்றன. அவற்றுள் அமெரிக்கா மட்டும் தான் நிலவில் மனிதர்களை இறக்கியிருக்கிறது (இது முதலில் நிகழ்ந்தது 1969 இல், கடைசியாக நிகழ்ந்தது 1972 இல்). சோவியத் ஒன்றியம், மனிதர்களை நிலவில் இறக்கும் முயற்சியில் அரும்பொட்டில் தவற விட்டது.

இன்று இது மீளவும் பேசு பொருளாக உருவாகக் காரணம் இந்த நிலவிற்கு மனிதனை அனுப்பும் முயற்சி அமெரிக்காவிற்கும், அன்றைய சோவியத்திற்குமிடையேயான போட்டியாக இருந்ததும், இன்று அதே போன்ற ஒரு போட்டி நிலை நிலவுவதும் தான்! மொத்தமாக 6 தடவைகள் அமெரிக்கா நிலவிற்குப் பயணித்திருக்கிறது, அவற்றுள் 5 வெற்றிகரமாக மனிதர்களை நிலவில் இறக்கியிருக்கிறது.  

திரைக்கதை.. வசனம்... ஆக்கம் அமெரிக்கா.. நாசா.

இது அல்ல விஞ்ஞானம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

திரைக்கதை.. வசனம்... ஆக்கம் அமெரிக்கா.. நாசா.

இது அல்ல விஞ்ஞானம். 

நன்றி! நான் மேலே குறிப்பிட்ட "உங்கள் பிரச்சினையை" உறுதி செய்தமைக்கு😎!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை சீனா.. நிலவுக்குப் போய்.. அமெரிக்காவின் சோவியத் பனிப்போர் கால அவியலைக் கண்டுபிடிச்சால்.. அதற்கு முன் அமெரிக்கா.. நிலவுக்குப் போகனுன்ன கட்டாயம் இப்ப எழுந்திருக்கலாம்... அதுவும் இப்ப நிலவுக்குப் போக அமெரிக்க அதிக முனைப்பெடுக்கக்காரணமாக இருக்கலாம்.

இவற்றையும் விஞ்ஞானம் மறுக்காது. ஏனெனில்.. அமெரிக்காவின் பல பனிப்போர் கால விண்வெளி அறிவிப்புக்கள் பூகோள அரசியல் ரீதியானது.. அறிவியல் ரீதியானதல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

நன்றி! நான் மேலே குறிப்பிட்ட "உங்கள் பிரச்சினையை" உறுதி செய்தமைக்கு😎!

நல்லது நாங்கள் நீங்கள் காட்டுவது தான் உலகம் அறிவியல் என்ற காலம் போய் மக்கள் இப்போ தேடி ஆராயவும் படிக்கவும் பழகிவிட்டார்கள்.

One giant ... lie? Why so many people still think the moon landings were faked.

https://www.theguardian.com/science/2019/jul/10/one-giant-lie-why-so-many-people-still-think-the-moon-landings-were-faked

(இந்த தலைப்பு வந்தது.. ரஷ்சிய ஊடகத்திலோ.. சீன ஊகடகத்திலோ அல்ல. அமெரிக்காவின் நட்பு நாட்டு ஊடகத்தில் இருந்து.)

அந்த பெருந்தொகை மக்களின் நம்பிக்கையை அமெரிக்கா வெல்லனுமே.. எப்போ..??! அடுத்த வருடம் வரை காத்திருப்போமே..??!

Sean Connery in Diamonds Are Forever.

இந்த படத்தையும் அறிவியல் என்று சாதிக்கலாமா...??!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் என்று அமெரிக்கா வரை…
ஓரு கல்லை கொண்டு போய் விற்க முடியாமல் திரும்பக் கொண்டு வந்தவர்களிடம்
எதை எதிர்பார்க்க முடியும்.

சிறித்தம்பி! இது நாசா நியூஸ். கட்டாயம் உண்மையாய் இருக்கும். நாசா எங்கை இருக்கு? அமெரிக்காவில. எனவே இது இரட்டிப்பு உண்மை நியூஸ்.. 
:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

நல்லது நாங்கள் நீங்கள் காட்டுவது தான் உலகம் அறிவியல் என்ற காலம் போய் மக்கள் இப்போ தேடி ஆராயவும் படிக்கவும் பழகிவிட்டார்கள்.

One giant ... lie? Why so many people still think the moon landings were faked.

https://www.theguardian.com/science/2019/jul/10/one-giant-lie-why-so-many-people-still-think-the-moon-landings-were-faked

(இந்த தலைப்பு வந்தது.. ரஷ்சிய ஊடகத்திலோ.. சீன ஊகடகத்திலோ அல்ல. அமெரிக்காவின் நட்பு நாட்டு ஊடகத்தில் இருந்து.)

அந்த பெருந்தொகை மக்களின் நம்பிக்கையை அமெரிக்கா வெல்லனுமே.. எப்போ..??! அடுத்த வருடம் வரை காத்திருப்போமே..??!

Sean Connery in Diamonds Are Forever.

இந்த படத்தையும் அறிவியல் என்று சாதிக்கலாமா...??!

இந்தக் கட்டுரையை ஆதாரமாக நீங்கள் துணிந்து இணைத்தமைக்கு 3 காரணங்கள் இருக்கலாம். நீங்களே தேர்வு செய்யுங்கள்:

1. தலைப்பை மட்டும் வாசித்து விட்டு உள்ளடக்கம் அறியாமல் இணைத்திருக்கிறீர்கள்.
2. உள்ளடக்கத்தை வாசித்திருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு அதில் இருக்கும் sarcasm கலந்த ஆங்கிலம் புரியவில்லை.
3. உள்ளடக்கம் புரிந்து கொண்டீர்கள், ஆனால் யாழ் வாசகர்கள் இதைக் கவனிக்காத முட்டாப்பீசுகள் என்று நினைத்துக் கொண்டீர்கள்!

இதில் எது காரணம் நெடுக்கர்?😂

(இதுக்கு ஒரு "அறிஞர்" விருப்பு" வேற போட்டிருக்கீனம்!)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.