Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேட்டோ என்றால் என்ன? ரஷ்யாவை எதிர்கொள்ள அதன் 'புதிய திட்டம்' என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ரஷ்யா vs நேட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

11 ஜூலை 2023, 06:40 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நேட்டோ நாடுகளின் 2 நாள் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில், ரஷ்யாவுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்கான புதிய விரிவான திட்டம் குறித்து நேட்டோ நாடுகள் ஆலோசிக்கின்றன. அத்துடன், யுக்ரேனை உறுப்பினராக சேர்த்துக் கொள்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

பனிப்போருக்குப் பிறகு ரஷ்யாவை எதிர்கொள்வது குறித்து நேட்டோ நடத்தும் மிக விரிவாக ஆலோசனையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

நேட்டோ என்றால் என்ன?

நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பு ஆகும்.

1949-ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து இந்த கூட்டமைப்பை தொடங்கின. அதில் தற்போது 31 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

 

இந்த அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடுகள் உதவிக்கு வர அவை ஒப்புக் கொண்டுள்ளன.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பாவில் சோவியத் விரிவாக்கத்தை தடுப்பதே இதன் உண்மையான நோக்கமாக இருந்தது.

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதைந்த பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் நேட்டோவில் இணைந்தன.

நேட்டோவில் சேரும் யுக்ரேனின் விருப்பத்தை ரஷ்யா(முந்தைய சோவியத் ஒன்றியத்தின் அங்கம்) கடுமையாக எதிர்த்தது. தனது எல்லைக்கு மிக நெருக்கமாக நேட்டோவைக் கொண்டு வந்துவிடும் என்பது ரஷ்யாவின் அச்சம்.

ஆனாலும், கடந்த ஏப்ரலில் பின்லாந்தை சேர்த்ததன் மூலம் ரஷ்யாவின் மற்றொரு எல்லைக்கு நேட்டோ வந்து சேர்ந்திருக்கிறது.

ரஷ்யா vs நேட்டோ

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் தற்காப்பு திட்டம் என்ன?

நேட்டோவில் ஏதேனும் ஒரு நாட்டை ரஷ்யா தாக்கினால் எப்படி எதிர்கொள்வது என்பதற்கு நேட்டோ கமாண்டர்கள் புதிய திட்டம் வகுத்துள்ளனர்.

ஆர்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக், மத்திய ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதி ஆகிய 3 பிராந்தியங்களில் ஏதேனும் ஒன்றை ரஷ்யா தாக்கும் பட்சத்தில் படைகள் எங்கே செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான துல்லியமான திட்டங்கள் அதில் உள்ளன.

நேட்டோவிடம் தற்போது 40 ஆயிரம் துருப்புகள் தயார் நிலையில் உள்ளன. 30 நாட்களுக்குள் 3 லட்சம் துருப்புகள் தயாராவதற்கான திட்டங்கள் குறித்து லித்துவேனியாவில் நடக்கும் இந்த நேட்டோ மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நேட்டோவின் விரிவான திட்டம் இது என்கிறார் ராயல் யுனைட்டெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் துணைத் தலைவர் மால்கல்ம் சால்மர்ஸ்.

"சோவியத் ஒன்றியம் சிதைந்ததும் பெரிய போர் ஆபத்து கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது" என்கிறார் அவர்.

"ஆனால், 2014-ம் ஆண்டு கிரைமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதும், தற்போதைய யுக்ரேன் போரும் அச்சுறுத்தல் மீண்டும் உண்மையாகி இருப்பதை, குறிப்பாக பால்டிக் குடியரசுகளுக்கு உணர்த்தியுள்ளன." என்று அவர் கூறுகிறார்.

ரஷ்யா vs நேட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேன் ஏன் நேட்டோவில் சேரவில்லை?

2008-ம் ஆண்டு யுக்ரேன் எதிர்காலத்தில் தங்கள் அமைப்பில் இணைந்து கொள்ளலாம் என்று கூறிய நேட்டோ அமைப்பு, விரைவாக அதனை செயல்படுத்த வேண்டும் என்ற யுக்ரேனின் வேண்டுகோளை அண்மையில் நிராகரித்துவிட்டது.

நேட்டோ சட்டதிட்டங்களின் 5-வது பிரிவில் ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால் அதன் பாதுகாப்புக்கு மற்ற நாடுகள் வர வேண்டும் என்று கூறுகிறது.

ஒருவேளை யுக்ரேன் சேர்ந்திருந்தால், நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக போரை அறிவிக்க வேண்டியிருந்திருக்கும்.

யுக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் எவ்வாறு உதவுகின்றன?

பரந்த நிலப்பரப்பில் கடும் சேதத்தை விளைவிக்கக் கூடிய ஆபத்தான கொத்துக் குண்டுகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா அனுப்புகிறது. ரஷ்யாவுக்கு எதிரான பதில் தாக்குதலில் தங்களது படைகளுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று யுக்ரேன் கூறியுள்ளது.

எப்படி பார்த்தாலும், இது ஒரு சர்ச்சையான நடவடிக்கைதான். அப்பாவி பொதுமக்களுக்கு அது தரும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளை அந்த குண்டுகளை தடை செய்திருக்கின்றன.

சக்தி வாய்ந்த 31 ஆப்ராம் டாங்குகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா தருகிறது. பிரிட்டன் தன் பங்கிற்கு 14 சேலஞ்சர்-2 ரக டாங்குகளை கொடுக்கிறது. ஜெர்மனி 18 லெப்பர்ட்-2 டாங்குகளை அனுப்பியுள்ளது. மற்ற நேட்டோ நாடுகளும் டஜன்கணக்கில் அனுப்பியுள்ளன.

போர்க்களத்தில் ரஷ்ய துப்புகளின் நிலையையும் தாண்டி தாக்குதல் நடத்தக் கூடிய ஹிமார்ஸ் ரக ஏவுகணை அமைப்புகளை யுக்ரேனுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் கொடுத்துள்ளன.

ரஷ்யா vs நேட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கிழக்கு யுக்ரேனில் 'ஹிமார்ஸ்' ஏவுகணை அமைப்பு

யுக்ரேன் வான் எல்லைக்குள் நுழையும் ரஷ்யாவின் குரூயிஸ் ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு அமைப்புகளை நேட்டோ நாடுகள் கொடுத்துள்ளன.

2022-ம் ஆண்டு யுக்ரேன் தலைநகர் கீவில் ரஷ்யப் படைகளைன் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியதில் அமெரிக்காவும், பிரிட்டனும் கொடுத்த டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களான ஜாவ்லின், ந்லா ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு உண்டு.

அதேநேரத்தில், நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கவில்லை. அவற்றைப் பயன்படுத்தி ரஷ்ய நிலப்பரப்பில் யுக்ரேன் தாக்குதல் நடத்தினால், அது ரஷ்யா - நேட்டோ இடையே நேரடி மோதலுக்கு வழிவகுத்துவிடும் என்பதே அதற்குக் காரணம்.

அதே காரணத்திற்காகத்தான், யுக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பவோ, விமானப் படைகளைப் பயன்படுத்தி, 'விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட' பிராந்தியமாக அறிவிக்கவோ நேட்டோ நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.

அதேநேரத்தில் யுக்ரேன் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அமெரிக்க தயாரிப்பான எப்-16 போர் விமானங்களை இயக்க யுக்ரேன் விமானிகளுக்கு நேட்டோ நாடுகள் பயிற்சி அளித்து வருகின்றன.

நேட்டோவில் பின்லாந்து இணைந்தது - ஸ்வீடன் எப்போது?

ரஷ்யா vs நேட்டோ

நடுநிலை வகித்து வந்த பின்லாந்து 2023-ம் ஆண்டு ஏப்ரலில் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தது.

ரஷ்யாவுடன் 1,340 கி.மீ. தூர எல்லையை அது பகிர்ந்து கொண்டுள்ளது. பின்லாந்தின் இணைப்பால், நேட்டோவுக்கு கூடுதலாக 2.57 லட்சம் துருப்புகள் கிடைத்துள்ளன.

பின்லாந்துடன் ஸ்வீடனும் நேட்டோவில் சேர விண்ணப்பித்தது.

நேட்டோவின் மற்ற நாடுகள் அனைத்தும் ஸ்வீடனின் வேண்டுகோளை அங்கீகரித்தாலும் துருக்கி, ஹங்கேரி ஆகிய இரு நாடுகளும் இன்னும் அதனை ஏற்கவில்லை.

புரோ குர்திஸ்தான் இயக்கத்தினர் உள்ளிட்ட துருக்கி அரசுக்கு எதிரானவர்களை நாடு கடத்த ஸ்வீடன் மறுப்பதாக துருக்கி குற்றம்சாட்டுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c3gd9ylxg1xo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி சம்மதம் தெரிவித்தது

Published By: SETHU

11 JUL, 2023 | 12:26 PM
image
 

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைந்து கொள்வதற்கு துருக்கி சம்மதம் தெரிவித்துள்ளது.

நேட்டோவில் புதிதாக நாடுகள் அங்கத்தும் பெறுவதற்கு ஏற்கெனவே அங்கத்துவம் வகிக்கும் அனைத்து நாடுகளினதும் சம்மதம் தேவை. 

எனினும், நேட்டோவில் சுவீடன் அங்கத்துவம் பெறுவதற்கு துருக்கி சம்மதம் தெரிவிக்க மறுத்து வந்தது. குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு சுவீடன் அடைக்கலம் கொடுத்தமையே இதற்குக் காரணம். 

ஹங்கேரியும் சுவீடனின் அங்கத்துவத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. 

இது தொடர்பாக பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன. 

இந்நிலையில், நேற்று  திங்கட்கிழமை சுவீடனின் நேட்டோ அங்கத்துவத்துக்கு துருக்கி ஜனாதிபதி ரெஜெப் தையிப் ஏர்துவான் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த அங்கீகாரம் துருக்கிய பாராளுமன்றத்தினாலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

நேட்டோ அமைப்பின் உச்சிமாநாடு லித்துவேனியாவில் இன்று நடைபெறவுள்ள நிலையில் துருக்கி இந்த அனுமதியை வழங்கியுள்ளது. 

இச்செய்தியினால் தானட மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக சுவீடனின் பிரதமர் உல் கிறிஸ்டர்ஸ்சன் தெரிவித்துள்ளார். நேட்டோவின் 32 ஆவது நாடாக சுவீடன் இணையவுள்ளது. 

https://www.virakesari.lk/article/159712

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைந்து கொள்வதற்கு துருக்கி சம்மதம் தெரிவித்துள்ளது.

சுவீடன் நேட்டோவில் இணைய சம்மதிக்க வேண்டுமாயின்  துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு பேரம் பேசப்பட்டதாகவும் ஒரு சில செய்திகளை அறியக்கூடியதாக இருந்தது.

மேற்குலகிற்கு........எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை  எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் பீலிங்கு :hurra:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சுவீடன் நேட்டோவில் இணைய சம்மதிக்க வேண்டுமாயின்  துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு பேரம் பேசப்பட்டதாகவும் ஒரு சில செய்திகளை அறியக்கூடியதாக இருந்தது.

மேற்குலகிற்கு........எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை  எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் பீலிங்கு :hurra:

இப்படி ஒரு கோரிக்கையை எர்டோகன் அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார்.

இப்போதே அங்காரா உடன்படிக்கை, அங்கத்துவ வீதி படிமுறை, சுங்க ஒன்றியம் என. பலதில் ஈயூ நடைமுறைக்கு துருக்கி ஏலவே வந்து விட்டதுதான்.

ஆனால் பிரெக்சிற்பாடம் - துருக்கியை ஏனைய ஐரோப்பிய நாடுகள் இப்போதைக்கு இணைக்க சாத்தியமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இப்படி ஒரு கோரிக்கையை எர்டோகன் அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார்.

துருக்கி ஐரோப்பிய யூனியன் கனவிலை கனகாலமாய் திரியுது. இப்ப பத்து வருசத்துக்கு முதலும் இந்தா ஐரோப்பிய யூனியனுக்க வாறம் எண்டு பந்தா காட்ட ஜேர்மனிதான் வாயை பொத்தியடிச்சு நிப்பாட்டினது. அது ஏர்டோகனுக்கு பயங்கர கறள்......அதுக்கு பிறகு அவர் ஜேர்மனிய மதிக்கிறதே இல்லை. இப்ப ஏதும் சான்ஸ் வந்தால் காணும் தன்ரை எழுப்பத்தையும் சண்டித்தனத்தையும் காட்டுவார்.உதாரணத்துக்கு நேட்டோ சுவீடன் பின்லாந்து விசயத்தில இவர்தான் ஹீரோ......ஆனை ஆன அமெரிக்காவாலையே ஒண்டும் செய்யேலாமல் கிடந்தது....:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிரியா விடயத்தில் துருக்கியை வைச்சு நேட்டோ கேம் விளையாடி தோற்றுப் போனது. மத்திய கிழக்கில் இருக்கும் ஒரேஒரு ரஷ்சிய தளத்தையும் இல்லாமல் செய்து.. மொத்த மத்திய கிழக்கையும் நேட்டோவின் அடிமையாக்குவது தான் ஐ எஸ் அடிப்படைவாத தீவிரவாதத்தையும்.. ஆசாட் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களையும் உருவாக்கக் காரணம். இந்த திட்டத்தை ஆசாட்டும் ஈரானும் ரஷ்சியாவின் பங்களிப்போடு தகர்த்துவிட்ட நிலையில்.. துருக்கி செல்லாக் காசாகி விட்டது. இப்ப உக்ரைன் போரில் விலாங்கு நிலையில் துருக்கி. 

இந்த நிலையில்.. உக்ரைனை வைச்சு.. நேட்டோ... விரிவாகத்தினை மாஸ்கோவுக்கு அருகில் நிலை நிறுத்த நினைத்தார்கள். ரஷ்சியா கிரிமியாவை தன் வசமாக்கி கருங்கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்குது. உக்ரைனின் பின்னணியில் இருந்து நேட்டோ ரஷ்சியாவை தாக்கி அதன் கடற்படையின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்யலாம் என்று கனவு கண்டவர்களுக்கு பதிலடி..ரஷ்சியாவின் அனுமதியோடு தானிய ஏற்றுமதி.

துருக்கி நேட்டோ அங்கத்துவம் பெற்றிருந்தாலும்.. ரஷ்சியாவுடனும் நெருங்கிய தொடர்புகளை பேணுகிறது. அதனை நேட்டோவால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இழுத்து... ஐரோப்பிய ஒன்றியத்தை பலவீனமாக்கும் நோக்கமும்.. இதில் அடக்கம். 

பின்லாந்து நேட்டோவில் இணைந்தாலும்.. இல்லாவிட்டாலும்.. பின்லாந்து.. சுவீடன் எல்லாமே.. ஏலவே நேட்டோ நாடுகள் போன்று தான் செயற்பட்டன. ஆப்கானிஸ்தான் நேட்டோ ஆக்கிரமிப்பில் கூட இவை பங்களித்துள்ளன. இறுதில் மொத்த நேட்டோவுமே.. ஆப்கானிஸ்தானில் தோற்று வெளியேறியது.. இங்கு குறிப்பிடத்தக்கது.

சுவீடன்.. ரஷ்சியாவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளாத நாடு. ஏலவே நோர்வே ரஷ்சியாவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் நேட்டோ அடிப்படை அங்கத்துவ நாடாக இருக்கிறது. 

நேட்டோவின் நோக்கம் என்பது சோவியத் யூனியனை உடைத்தது போல்.. ரஷ்சியக் குடியரசையும் உடைப்பது தான். அதற்கு ஏற்றால் போல் தான் உக்ரைனின் புலிக்கேசியை நேட்டோ பயன்படுத்தி வருகிறது.

ஆனால்.. புட்டின் இதனை நன்கு விளங்கிக் கொண்டு தான் உக்ரைன் மீது படையெடுத்ததோடு டான் பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திர தாகத்தை தீர்த்து வைக்கவும் முன்வந்தார்.

ஏலவே ஜோர்ஜியவை தூண்டி விட்டு யுத்தம் செய்து நேட்டோ அங்கத்துவ நாடாக்கி விட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஜோர்ஜியாவின் இரண்டு பிராந்தியங்கள் சுதந்திர தேசமாகி ரஷ்சியாவோடு இணைந்துவிட்டன.

ஆக மொத்தத்தில்.. நேட்டோ விரிவாக்கம் என்பதே ரஷ்சியக் குடியரசை சின்னாபின்னமாக்குவதும்.. சீன  எல்லையை நோக்கி நகர்வதும் தான். இது நேட்டோவின் உலக ஆக்கிரமிப்பின் ரகசிய வேலைத்திட்டம் ஆகும். 

ஆனால்.. புட்டின் இதனை ராணுவ ரீதியாக எதிர்ப்பதால் தான்.. அவரை நேட்டோ எதிரியாக்கி காட்டுகிறது. ஆனால் உண்மையில் புட்டின் தன் தாய் நாட்டை நேட்டோவிடம் இருந்து பாதுகாக்கும் சொந்த நாட்டுக்கான விசுவாசியாகவே இருக்கிறார். நேட்டோவின் கபடத்தேவைக்காக சொந்த நாட்டையும் மக்களையும் அழிக்கும் புலிக்கேசியாகவே.. உக்ரைன் கோமாளி சனாதிபதி இருக்கிறார். 

நேட்டோ விரிவாக்கம்.. என்பது.. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சாதமாக அமையாது. ஏனெனில்.. அமெரிக்க நேட்டோவில் அங்கம் வகித்தாலும்.. மேற்கு ஐரோப்பிய நாடுகளை பொருண்மிய ரீதியில் தனக்கு கீழ் தான் வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. இதனை ஐரோப்பிய பெரும் பொருண்மியங்களான.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. இத்தாலி.. பிரிட்டன் மக்கள் விரும்புபவர்களாக இல்லை. அதனை மறைக்கவும் உக்ரைன் போர் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால்.. உக்ரைன் போர்.. உண்மையாக.. நேட்டோவின் நோக்கத்தை உலகறியச் செய்ய ரஷ்சியாவுக்கு உதவி இருக்கிறது. இது ரஷ்சியா நேட்டோவின் நோக்கங்களை சிதைக்க... உலக அணி ஒன்றை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும். அது நேட்டோவின் கொள்கைத் தோல்விக்கு வழிவகுக்கும் என்றால் மிகையில்லை.

ஆப்கானிஸ்தான்.. மத்திய கிழக்கு.. என்று தொடர் தோல்வி கண்ட நேட்டோ.. ரஷ்சியாவை சிதைக்கனும் என்ற நோக்கிலும் தோற்பது நிச்சயம்.

நேட்டோவுக்கு வால்பிடிச்சு.. பலவீனமாவது ஐரோப்பிய நாடுகளாக இருக்கும். எனி மீண்டும் ஒரு ஐரோப்பிய நாடு அமெரிக்காவை விஞ்சி.. இராணுவ பொருண்மிய வலிமை பெற முடியாது.. அது தான் அமெரிக்காவின் நேட்டோவின் பிளான் பி நோக்கம். குறிப்பாக ஜேர்மனி.. பிரிட்டனை கட்டுப்படுத்துவது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

துருக்கி ஐரோப்பிய யூனியன் கனவிலை கனகாலமாய் திரியுது. இப்ப பத்து வருசத்துக்கு முதலும் இந்தா ஐரோப்பிய யூனியனுக்க வாறம் எண்டு பந்தா காட்ட ஜேர்மனிதான் வாயை பொத்தியடிச்சு நிப்பாட்டினது. அது ஏர்டோகனுக்கு பயங்கர கறள்......அதுக்கு பிறகு அவர் ஜேர்மனிய மதிக்கிறதே இல்லை. இப்ப ஏதும் சான்ஸ் வந்தால் காணும் தன்ரை எழுப்பத்தையும் சண்டித்தனத்தையும் காட்டுவார்.உதாரணத்துக்கு நேட்டோ சுவீடன் பின்லாந்து விசயத்தில இவர்தான் ஹீரோ......ஆனை ஆன அமெரிக்காவாலையே ஒண்டும் செய்யேலாமல் கிடந்தது....:beaming_face_with_smiling_eyes:

🤣….உண்மையில் ஆள் வலு சுழியந்தான். 

இஞ்ச பிரெக்சிட் நேரம் -  துருக்கி ஈயூவில சேரப்போது எண்ட பொய் கதையை நம்பி கனசனம் வெளியே என வாக்குப்போட்டது.

ஆனால் துருக்கி உள்ள வந்தால்…ஈயூவுக்கு மங்களம் பாடுறதுக்கு சமன்🤣.

ஆனபடியால் கன நாடுகள் ஓம்படாது. 

அத்தோட, முதலில் சைப்பிரஸ் பிரச்சனையை தீருங்கோ எண்டு கிறீஸ்சும், சைபிரசும் நெருக்கும். அல்லது நேட்டோ/சுவீடன் விடயத்தில் துருக்கி செய்ததை கிறீஸ் திருப்பி செய்யும்.

ஆகவே துருக்கி ஈயூவில் சேர்வது சாத்த்தியமில்லை என்பதே என் கருத்து. அதுதான் எர்டோகனும் அதை நியாபகபடுத்தி போட்டு, விட்டு விட்டார் என நினைக்கிறேன்.

ஆனால் கறுப்பன் குசும்பன், ஏதோ ஒரு பிளானோடதான் திடீரென மேற்கு, உக்ரேன் ஆதரவு நிலைக்கு மாறுகிறார்.

என்ன எதிர்பார்ப்பு என்பது போக, போகத்தான் தெரியும்.

கிட்டதட்ட பத்து வருடமாக, மதசார்பற்ற கூட்டணி தேர்தலில் தோற்றது முதல், எர்டோகானுக்கும் அமெரிக்காவுக்கும் லடாய். சதி புரட்சியை அமேரிக்கா தூண்டியது என்று வேற புகார்.

உக்ரேன் யுத்தத்தில் கூட, நேட்டோ பங்காளியாக இருந்தும்… ரஸ்யா/உக்ரேன் இடையே சம தூர மத்தியஸ்தம் என்ற நிலையைதான் துருக்கி எடுத்தது.

ஆனால் அண்மைய தேர்தலில் எர்டகான் வென்றதும், நிலமை தலைகீழாகி விட்டது.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் இந்த நேட்டோ காரருக்கு பின்பக்க கொழுப்பு கொஞ்சம் ஓவர் தான்🤣👇

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

இஞ்ச பிரெக்சிட் நேரம் -  துருக்கி ஈயூவில சேரப்போது எண்ட பொய் கதையை நம்பி கனசனம் வெளியே என வாக்குப்போட்டது.

உங்கை பெரிய பிரித்தானியாவில பல சிற்றிகளுக்கு போனால் பாக்கிஸ்தானிலை நிக்கிறமா எண்டொரு பீலிங் வரும்.....இல்லாட்டி பஞ்சாபியிலை நிக்கிறமோ எண்ட பீலிங்கும் வரும்....அப்பிடியிருக்க துருக்கி யூனியனுக்க இணைஞ்சால் தான் என்ன இணையாட்டில் தான் என்ன? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

உங்கை பெரிய பிரித்தானியாவில பல சிற்றிகளுக்கு போனால் பாக்கிஸ்தானிலை நிக்கிறமா எண்டொரு பீலிங் வரும்.....இல்லாட்டி பஞ்சாபியிலை நிக்கிறமோ எண்ட பீலிங்கும் வரும்....அப்பிடியிருக்க துருக்கி யூனியனுக்க இணைஞ்சால் தான் என்ன இணையாட்டில் தான் என்ன? :rolling_on_the_floor_laughing:

🤣 சவுத்தோல் எண்ட இடம் போனியளே?

ரயில் நிலையத்தில் பெயர் பஞ்சாபியில எழுதி இருக்கும்🤣.

ஆனாலும் நாடு இன்னமும் 85% அண்ணளவாக வெள்ளை தோல்தான்.

துருக்கி சேர்ந்தால் பத்து வருடத்தில் மாறிவிடும் எல்லோ🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

🤣 சவுத்தோல் எண்ட இடம் போனியளே?

ரயில் நிலையத்தில் பெயர் பஞ்சாபியில எழுதி இருக்கும்🤣.

ஆனாலும் நாடு இன்னமும் 85% அண்ணளவாக வெள்ளை தோல்தான்.

ஜேர்மனி ஜேர்மனியர்களுக்கு உரியதல்ல என்ற சித்தார்ந்தம் உருவாகிக்கொண்டு வருகின்றது.
இங்கிலாந்து இதே போன்ற பொறிக்குள் அகப்பட்டு நீண்ட காலமாகி விட்டதென நான் நினைக்கின்றேன்.

15 minutes ago, goshan_che said:

துருக்கி சேர்ந்தால் பத்து வருடத்தில் மாறிவிடும் எல்லோ🤣.

துருக்கி உள்ளே வந்தால் பத்து வருடம்.......உள்ளே வராவிட்டால் 30 வருடங்கள் தான் மாறுபடும். :grinning_squinting_face:

16 minutes ago, goshan_che said:

ஆனாலும் நாடு இன்னமும் 85% அண்ணளவாக வெள்ளை தோல்தான்.

ஆனாலும் அரசவையில் யார் கோலோச்சுகின்றார்கள்? :hurra:

 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

ஆனாலும் இந்த நேட்டோ காரருக்கு பின்பக்க கொழுப்பு கொஞ்சம் ஓவர் தான்🤣👇

அது நல்ல கொழுப்பு. தீங்கு அற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனி ஜேர்மனியர்களுக்கு உரியதல்ல என்ற சித்தார்ந்தம் உருவாகிக்கொண்டு வருகின்றது.
இங்கிலாந்து இதே போன்ற பொறிக்குள் அகப்பட்டு நீண்ட காலமாகி விட்டதென நான் நினைக்கின்றேன்.

துருக்கி உள்ளே வந்தால் பத்து வருடம்.......உள்ளே வராவிட்டால் 30 வருடங்கள் தான் மாறுபடும். :grinning_squinting_face:

எல்லையற்ற, சடுதியான குடியேற்றம் இன செளஜன்யத்தை குலைப்பது உண்மைதான்.

ஆனால் குடியேற்றம் இல்லாவிடில் பொருளாதாரம் படுத்து விடும்.

உண்மையில் நான் பிரெக்சிற்றை எதிர்த்த காரணிகளில் இது முதன்மையானது.

குடியேறிகள் இல்லாவிடின் யூகே பொருளாதாரம் ஈடாடும்.

ஆகவே தானியங்கி முறை வரும் மட்டும்,

1. கிழக்கு ஐரோப்பிய வெள்ளை+கிறீஸ்தவ குடியேறிகளா

2. ஏனைய வெள்ளை அல்லாத குடியேறிகளா

என்பது மட்டுமே கருதுபொருள்.

இதில் 1ம் வகையினர் அடுத்த சந்ததியோடு…வெள்ளை பிரிட்டிஷ் - இங்கே இப்போ இருக்கும் பலரின் அடி, இத்தாலியன். அது போல ஆகிவிடுவர்.

ஆனால் 2ம் வகையினர் எத்தனை சந்ததி போனாலும் தோல் நிறம் மாறாது.

2ம் வகையினர் கூட..கூட..நாட்டில் சகிப்புத்தன்மை இரு பக்கத்திலும் குறையும். அதுவும் வருவோர் மதவாதிகளாக இருந்தால் - இன்னும் பிரச்ச்னை.

என்னை பொறுத்தவரை - எந்த நாட்டிலும் குடியேற்றம் என்பது சோறும், கறியும் என்ற அளவில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை.

சோறு அளவுக்கு, கறியும் கூடினால் - பிரச்சனைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது நல்ல கொழுப்பு. தீங்கு அற்றது.

கடாபி மேற்குலகுடன் நல்ல நல்லுறவை விரும்பியவர். அகதிகள்  எனும் போர்வையில் ஐரோப்பாவை நோக்கி புலம்பெயர்ந்த கள்ளர் காடையர்களை அடக்கி வைத்தவர்.

8 minutes ago, goshan_che said:

எல்லையற்ற, சடுதியான குடியேற்றம் இன செளஜன்யத்தை குலைப்பது உண்மைதான்.

ஆனால் குடியேற்றம் இல்லாவிடில் பொருளாதாரம் படுத்து விடும்.

உண்மையில் நான் பிரெக்சிற்றை எதிர்த்த காரணிகளில் இது முதன்மையானது.

குடியேறிகள் இல்லாவிடின் யூகே பொருளாதாரம் ஈடாடும்.

ஆகவே தானியங்கி முறை வரும் மட்டும்,

1. கிழக்கு ஐரோப்பிய வெள்ளை+கிறீஸ்தவ குடியேறிகளா

2. ஏனைய வெள்ளை அல்லாத குடியேறிகளா

என்பது மட்டுமே கருதுபொருள்.

இதில் 1ம் வகையினர் அடுத்த சந்ததியோடு…வெள்ளை பிரிட்டிஷ் - இங்கே இப்போ இருக்கும் பலரின் அடி, இத்தாலியன். அது போல ஆகிவிடுவர்.

ஆனால் 2ம் வகையினர் எத்தனை சந்ததி போனாலும் தோல் நிறம் மாறாது.

2ம் வகையினர் கூட..கூட..நாட்டில் சகிப்புத்தன்மை இரு பக்கத்திலும் குறையும். அதுவும் வருவோர் மதவாதிகளாக இருந்தால் - இன்னும் பிரச்ச்னை.

என்னை பொறுத்தவரை - எந்த நாட்டிலும் குடியேற்றம் என்பது சோறும், கறியும் என்ற அளவில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை.

சோறு அளவுக்கு, கறியும் கூடினால் - பிரச்சனைதான்.

Kulturelle Diversität – Ein Schlüssel zum Erfolg - BIORAMA

பல்லின கலாச்சாரம் மகிழ்வானதுதான் ஆனால் இந்த மதவாதிகளால் தான் பெரும் பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நேட்டோவின் எல்லா "இரகசிய" திட்டங்களையும் நடுச்சந்தியில் போட்டுடைத்து விட்டார்கள்!

ஜோர்ஜியா நேட்டோவில் இணைத்துக் கொள்ளப் பட்டதும் மேலே நெடுக்கர் எழுதியதை வாசித்துத் தான் அறிந்து கொள்கிறோம் என்றால், "இரகசியம்" மிக ஆழம் போலத் தான் கிடக்குது! 😂

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

ஜோர்ஜியா நேட்டோவில் இணைத்துக் கொள்ளப் பட்டதும் மேலே நெடுக்கர் எழுதியதை வாசித்துத் தான் அறிந்து கொள்கிறோம் என்றால், "இரகசியம்" மிக ஆழம் போலத் தான் கிடக்குது! 😂

இப்படியான மிக ஆழமான இரகசியங்கள் இலங்கை தமிழில் உலகிற்கு கசிவது எமக்கு பெருமை தானே 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்படியான மிக ஆழமான இரகசியங்கள் இலங்கை தமிழில் உலகிற்கு கசிவது எமக்கு பெருமை தானே 😂

இந்த இரகசியங்களை தமிழில் , ஈழத்தமிழர்களிடையே மட்டும் பரப்பி ஈழத்தமிழர்களை முட்டாப் பீசுகளாக வைத்திருக்க அமெரிக்காவும் மேற்கும் தான் "சதி" செய்கின்றனவோ என நான் சந்தேகிக்கிறேன்!

(தற்காலத்தில் ஈசியாக உருவாக்கக் கூடியவை சதிக்கதைகள் தானே? காசா பணமா?😂)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் அதிபர் பெயருக்கு பதில் ரஷ்ய அதிபரின் பெயரை உச்சரித்த பைடன்- வைரலாகும் வீடியோ (வீடியோ இணைப்பு)

நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடினர்.

இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கி உட்பட பல நாட்டினர் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில்தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என கூறியதோடு நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில், நேட்டோ உச்சி மாநாட்டில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ரஷ்ய அதிபர் புட்டின் பெயருடன் குழப்பி அவரை “விளாடிமிர்” என குறிப்பிட்டார்.

பைடன் உடனே தன்னைத் திருத்திக் கொண்டு பின்னர் ஜெலென்ஸ்கி என குறிப்பிட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பைடன் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், “விளாடிமிர் மற்றும் நான்… ,” என கூறிய பைடன், தவறுதலாக குறிப்பிட்ட சில நொடிகளில் அவர் தன்னைத் திருத்திக் கொண்டு, ஜெலென்ஸ்கியும் நானும்.. உக்ரைனில் இருந்தபோதும் ஏனைய இடங்களில் நாங்கள் சந்தித்தபோதும் நாங்கள் செய்யக்கூடிய உத்தரவாதங்களைப் பற்றி பேசினோம்..,” என கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/262982

  • கருத்துக்கள உறவுகள்

 

Ukrainian-President-Volodymyr-Zelensky-n

 

செலன்ஸ்கி  லூத்தவேனியாவில் தனிய நின்று முழுசிய போது.......

 

 

F06WDqJWYAEP4OV?format=jpg&name=medium

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.