Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணிப்பூரில் கொடூரம்: நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூரில் கொடூரம்: நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!

Jul 20, 2023 08:44AM IST ஷேர் செய்ய : 
manipur women naked paraded

மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் மே 3-ஆம் தேதி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது இரண்டு சமூக மக்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு கலவரம் நடைபெற்று வருகிறது.

இந்த வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் மணிப்பூர்மாநிலத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

இந்தநிலையில் குகி சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பெண்களை ஆடையின்றி நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

manipur women naked paraded

இந்த சம்பவமானது மே 4-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக தெளபால் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், “மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்த பிறகு மே 4-ஆம் தேதி சுமார் 800-1000 நபர்கள் 303 ரைபில்ஸ் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பி பைனோம் கிராமத்திற்குள் நுழைந்தனர்.

அவர்கள் அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அப்போது மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் அருகிலிருந்த காட்டு பகுதிக்குள் தப்பி செல்ல முயன்றுள்ளனர். அவர்களை இடைமறித்து அந்த கும்பல் தாக்கியது. இதில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டனர்.

இரண்டு பெண்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். 19 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

manipur women naked paraded

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமரின் அமைதி மற்றும் செயலற்ற தன்மை மணிப்பூரை அராஜத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

மணிப்பூரில் இந்தியாவின் கருத்தியல் தாக்கப்படும் போது  ‘இந்தியா’ கூட்டணி அமைதியாக இருக்காது. மணிப்பூர் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி” என்று தெரிவித்துள்ளார்.
 

https://minnambalam.com/india-news/manipur-women-naked-paraded/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூர் பெண்களின் வீடியோ : என்ன நடந்தது – யார் பொறுப்பு?

KaviJul 20, 2023 20:02PM
Manipur Womens Video What Happened

மணிப்பூரில் குகி என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்துள்ளது.

ஆண்கள் சுற்றியிருக்க அந்த பெண்கள் நிர்வாணமாக  ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.  நாட்டையே உலுக்கியிருக்கிற இச்சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

வீடியோவில், ஏராளமான ஆண்கள் சூழ்ந்து அணிவகுத்து வர இரு பெண்கள் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக இழுத்து வரப்படுகின்றனர். பெண்களின் பிறப்புறுப்பு, மார்புகளில் கைவைத்து இழுத்து வருகின்றனர் அந்த வக்கிரபுத்தி கொண்ட ஆண்கள். இது பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது.

Manipur outrage: Viral video shows women paraded naked by mob, allegedly gang-raped - Hub News

கடந்த மே 3ஆம் தேதி மணிப்பூரில் கலவரம் வெடித்த அடுத்த நாளே இப்படி ஒரு கேவலமான, இந்தியாவே தலைகுனியும் வகையிலான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
மே 18ஆம் தேதி ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று வீடியோ வெளியான பிறகும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய பிறகும்,

பிரதமர் மோடி, மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது’ என சொன்ன பிறகும், நாட்டில் உள்ள அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்கள் தலையிட்ட பிறகும், தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட பிறகும்,  இன்று ஒரே நாளில் குற்றவாளிகளை தேடிய மாநில காவல் துறை அதில் ஒருவரை கைது செய்திருக்கிறது.

kakakakakakak.jpg

அந்த பெண்களை இழுத்துச் சென்றவர்களில் பச்சை சட்டை அணிந்திருந்த நபர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் ஹுரெம் ஹீரோடஸ் மெய்தி என்பதும், வயது 32 வயது என்பதும், இவரது தந்தை ஹெச். ராஜென் மெய்தி என்பதும் தெரிய வந்துள்ளது.

என்ன நடந்தது?

79,800+ Women Crying Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock | Young women crying hug, Two women crying, Young women crying

குகி சமூகத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தி ஸ்க்ரால் ஊடகத்துக்கு கூறுகையில், ‘மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட ஒரு நாளுக்கு பிறகு காங்போக்பி மாவட்டத்தில் உள்ள நாங்கள் வசித்து வந்த பி பைனோம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

எங்கள் கிராமத்துக்குள் புகுந்து மெய்தி சமூகத்தைச் சேர்ந்த கும்பல் வீடுகளுக்கு தீ வைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதுடன், உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்த மண் பாதையில் தப்பித்து காட்டுப்பகுதியில் ஓடினோம்.

ஆனால் அந்த கும்பல் எங்களை கண்டுபிடித்துவிட்டது. எங்கள் பக்கத்து வீட்டுக்காரரையும் அவரது மகனையும் சிறிது தூரம் அழைத்துச் சென்று கொன்றுவிட்டனர்.

பின்னர் அந்த கும்பல் பெண்களை தாக்கத் தொடங்கியது. பெண்களை பார்த்து, ‘உங்களது ஆடைகளைக் கழற்றுங்கள்’ என்று மிரட்டினார்கள்.

அப்போது அவர்களை எதிர்த்து, நாங்கள் கழட்டமாட்டோம் என்று கூறிய போது, என்னைப் பார்த்து அந்த கும்பல், “இப்போது நீ ஆடையை கழற்றவில்லை என்றால் உன்னை கொன்றுவிடுவோம்’ என கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் உயிர் பயத்தில் ஒவ்வொரு ஆடையாக கழற்றினேன். அப்போது அங்கிருந்த ஆண்கள் கன்னத்தில் அறைந்து தாக்கினர்.

தொடர்ந்து என்னை சாலை அருகே இருந்த ஒரு நெல் வயலுக்கு இழுத்துச் சென்றனர். அங்கு வைத்து, என்னை படுக்குமாறு கத்தினர். உயிருக்கு அஞ்சி அவர்கள் சொன்னதை நான் கேட்டேன். மூன்று ஆண்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர், ’இவளை பாலியல் பலாத்காரம் செய்வோம்’ என கூறினார்.

ஆனால் என்னை அடித்து துன்புறுத்திய அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனினும் மார்பகங்களை பிடித்து கசக்கி துன்புறுத்தினர்.

என்னைபோன்று 21 வயது மதிக்கத்தக்க என் பக்கத்துவீட்டுக்கார பெண்ணையும் ஒரு கும்பல் இழுத்துச் சென்றது. அவரை சிறிது தூரம் தள்ளி இழுத்துச் சென்றதால் அவருக்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை” என்று தனக்கு நேர்ந்த கொடூரத்தை மன வேதனையுடன் கூறியுள்ளார்.

வேடிக்கை பார்த்த போலீசார்
தி வயருக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், “இந்த சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் போலீசாரும் இருந்தனர். ஒரு காரில் 4 போலீசார் அமர்ந்துகொண்டு வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

Manipur Womens Video What Happened

போலீஸ் வழக்கு -ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன?

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி மே 18 அன்று காங்போக்பி மாவட்டத்தின் சைகுல் காவல் நிலையத்தில் ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

ஜீரோ எப்.ஐ.ஆர். என்பது குற்றம் எந்த இடத்தில் நடந்திருப்பினும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம். பின்னர் அதை  சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். இதுதான் ஜீரோ எப்.ஐ.ஆர் ஆகும்.

இந்நிலையில் பெண்கள் வன்கொடுமை விவகாரத்தில் முதலில் எப்.ஐ.ஆர் பதிவு செய்த சைகுல் காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், “அடையாளம் தெரியாத 800-1000 பேர் மீது பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.

சைகுல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், “எங்கள் கிராமத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஏகே ரைபிள்ஸ், எஸ்எல்ஆர், 303 ரைபிள்கள் போன்ற  ஆயுதங்களை வைத்திருந்தனர்.

அந்த கும்பல் கிராமத்தில் உள்ள வீடுகளை தீ வைத்து சேதப்படுத்தியது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஐந்து பேர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள “காடுகளை நோக்கி” ஓடிக்கொண்டிருந்தனர். இவர்களில் இரண்டு பேர் ஆண்கள், மூன்று பேர் பெண்கள்.

இதில் 56 வயது மதிக்கத்தக்க ஆண், அவரது 19 வயது மகன், 21 வயது மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். இவர்களைத் தவிர 42 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 52 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் இருந்தனர்.

இவர்கள் காட்டு வழியே தப்பித்து ஓடிக்கொண்டிருக்கும் போது வன்முறை கும்பல் ஒரு ஆணை கொன்றது. அப்போதுதான் 3 பெண்களையும் அந்த கும்பல் ஆடைகளை கழற்ற சொல்லி துன்புறுத்தியது.

இதில் 21 வயது பெண், அந்த கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்டார். மற்ற இரண்டு பெண்களும், தங்களுக்கு தெரிந்த சிலரது உதவியுடன் தப்பிக்க முடிந்தது.

அந்த 21 வயது இளம்பெண்ணை அவரது சகோதரர் காப்பாற்ற முயன்ற போது அவரையும் கொன்றது அந்த கும்பல்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மீது சைகுல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். இப்போது நோங்போக் செக்மாய் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தகவல் இருட்டடிப்பு

Manipur Womens Video What Happenedமே 4ஆம் தேதி இந்த சம்பவம் நடந்து மே 18ஆம் தேதி எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு 77 நாட்களுக்கு பிறகு இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.

மணிப்பூரில் நடந்த வன்முறையால் அங்கு இணைய சேவை முடங்கியிருந்த சூழலில் தற்போதுதான் இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.

இந்த வீடியோவை வெளியிட்டதற்காக ட்விட்டர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்ததால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், முதன்முறையாக மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலைத்து பிரதமர் மோடியே பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்தவும், மீண்டும் அமைதியை கொண்டு வருவதாகவும் கூறி இணைய சேவையை மாநிலத்தில் மே 3 முதல் முழுமையாக முடக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டது.

எனினும் இந்த இணைய முடக்கம் என்பது வன்முறை குறித்த உண்மை, முக்கியமான தகவல்கள் மற்றும் விவரங்கள் பொதுமக்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டது என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.

Manipur Womens Video What Happened

இந்தியா என்பது இணைய முடக்கத்தின் தலைநகராக இருப்பதாகவும். 58% இணைய முடக்கம் இந்தியாவிலேயே நடப்பதாகவும் ஸ்டாப் டேட்டாபேஸ் கூறுகிறது.
ஜி20 மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் இந்தியாவில், இப்படி ஒரு நிலை. சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் கூட இந்தியாவில் அதிகளவு இணைய பயன்பாடு முடக்கப்படுவது  குறித்து விவாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மணிப்பூரில் இப்படி இரு சம்பவம் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

எனவே, இந்த வீடியோ வெளியாகாமல் இருந்திருந்தால், பிரதமர்தான் வாய் திறந்திருப்பாரா? அல்லது காவல் துறைதான் நடவடிக்கை எடுத்திருக்குமா?. ஆரம்பத்தில் இருந்து மணிப்பூரில் ஏற்பட்ட கொடூர நிகழ்வுகளுக்கெல்லாம் யார் பொறுப்பு? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன.

இதற்கு உரிய பதில்களை உரியவர்கள் அளிப்பார்களா?
 

 

https://minnambalam.com/india-news/manipur-womens-video-what-happened-who-responsible/

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இரு பெண்களையும் நிர்வாணமாக  ஒரு கூட்டம்  கடத்திச் செல்லும் போது,
அவர்களுக்கு  செய்த அசிங்கமான செயல்களுடன் ஒரு காணொளி பார்க்கக் கிடைத்தது. 😡
பெண்களை தெய்வமாக வணங்கும் இந்தியாவில்...
இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பது, மிகவும் அருவருப்பை தந்தது.  😡
சிக்.... இப்படியும் உலகத்தில் மக்கள் என்று மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. 😡

  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற 'கொடூர வீடியோ' - என்ன நடந்தது?

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,ANI

20 ஜூலை 2023, 04:53 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.

கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ புதன்கிழமை வெளியாகியுள்ளது.

பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோவில் காணப்பட்டவர்களில் இரண்டு நபர்களை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் காணப்பட்ட முக்கிய நபர்களான இருவர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. மற்றும் பி.டி.ஐ. செய்தி முகமைகள் கூறுகின்றன.

வீடியோவில், நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை திறந்தவெளி நிலத்திற்கு இழுத்துச் செல்லும் கூட்டத்தில் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகக் காணப்பட்ட இரண்டு ஆண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோவை உறுதி செய்த மணிப்பூர் காவல்துறை, தௌபல் மாவட்டத்தில் மே மாதம் 4ஆம் தேதி இந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறியுள்ளனர்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,YEARS

 
படக்குறிப்பு,

வீடியோவில், நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை திறந்தவெளி நிலத்திற்கு இழுத்துச் செல்லும் கூட்டத்தில் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகக் காணப்பட்ட இரண்டு ஆண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இந்தக் காணொளி வெளியானதில் இருந்து, மத்தியிலிருந்து மாநிலங்கள் வரை எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்துக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இது தொடர்பாக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

 

முன்னதாக இன்று காலை இதுகுறித்து மணிப்பூர் போலீசார் கூறுகையில், "இந்த சம்பவம் மே 4ம் தேதி நடந்தது. இந்த வழக்கில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்திருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோதி கூறியது என்ன?

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோதி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று மணிப்பூர் வீடியோ தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி தனது கருத்தைக் கூறியுள்ளார்.

மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் தனது இதயம் சோகத்தில் மூழ்கியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “இந்த சம்பவம் வெட்கக்கேடானது. நாடு அவமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தாய்மார்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியிருக்கிறார்.

“குற்றவாளிகள் யாரும் விடுவிக்கப்படமாட்டார்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது ஒருபோதும் மன்னிக்கப்படாது” என்று பிரதமர் மோதி கூறினார்.

பிரதமர் திசைதிருப்ப முயல்வதாக விமர்சனம்

இந்த விவகாரம் குறித்த பிரதமர் நரேந்திர மோதியின் பேச்சு திசைதிருப்பும்விதமாக உள்ளது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் விமர்சித்துள்ளார்.

மணிப்பூர் சம்பவம்

பட மூலாதாரம்,YEARS

இன்று காலையில், மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து பிரதமர் பேசியிருந்தார். அதில் அவர் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களையும் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், “இத்தகைய சம்பவம் நடப்பது எந்த மாநிலமாக இருந்தாலும் சரி, அங்கு எந்த அரசு இருந்தாலும் சரி, அரசியலுக்கு அப்பாற்பட்டு பெண்களின் மரியாதையைக் காக்கும் வகையில் செயல்படுங்கள்,” என்று கூறியிருந்தார்.

அதற்கு, தற்போது சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் செய்தியாளார்களிடம் பேசும்போது பதிலடி கொடுத்துள்ளார். மணிப்பூர் சம்பவத்தின் மீதான கவனத்தைத் திசைதிருப்பவே பிரதமர் நரேந்திர மோதி சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களின் பெயர்களைச் சேர்த்துக் குறிப்பிடுவதாக அவர் விமர்சித்தார்.

“மணிப்பூர் சம்பவம் வேறு மாதிரியானது. அது குறித்துப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சத்தீஸ்கரையும் ராஜஸ்தானையும் இதோடு இணைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? நமது மாநிலத்தை அவதூறு செய்ய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி துரதிர்ஷ்டவசமானது.

முதலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பிறகு மணிப்பூர் எனக் குறிப்பிட்டார். முதன்முறை ஊடகங்கள் முன் வந்து பொய் சொல்லிவிட்டுச் சென்றார். பிரதமரே இந்தப் பேச்சுகளை நிறுத்துங்கள். உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள்,” என்று பிரதமர் மோதியை, பூபேஷ் பாகேல் கடுமையாக விமர்சித்தார்.

“ஒடிஷாவுக்கு சென்ற பிரதமர் மோதி மணிப்பூருக்கு ஏன் வரவில்லை?”

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கொடுமையான இந்தச் சம்பவம் குறித்து மெய்தேய் இன மக்கள் என்ன சொல்கிறார்கள்?

நாச வேலையை ஏற்படுத்தும் நோக்கிலான இதுபோன்ற நிறைய வீடியோக்கள் தங்கள் வசம் உள்ளன என்றும் ஆனால் அவை எல்லாம் பகிரப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி பேசுவதற்கு முன், வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்திருக்க வேண்டும் என்று மேய்தேய் சமூக மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்த பிரதமர் மோதியின் கருத்தால் மணிப்பூரில் வன்முறை மேலும் அதிகரிக்கலாம் என்று மனித உரிமைகள் ஆர்வலர் கே.கே. ஓனிலின் அச்சம் தெரிவித்துள்ளார்.

“கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறைகளால் மேய்தேய், குகி என இருதரப்பு சமூக மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதற்கு முன்பும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அப்போதெல்லாம் எதுவும் பேசாமல் மெளனம் காத்து வந்த பிரதமர் மோதி, குறிப்பிட்ட இந்த வீடியோ குறித்து மட்டும் பேசியுள்ளார். இரு சமூகத்தினர் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் பிரதமர் பேசவேண்டும். ஒருதலைபட்சமான இந்த வீடியோ நேற்று (புதன்கிழமை) முதல் வைரலாகி வருவது துரதிருஷ்ட்வசமானது,” என்று ஒனிலின் மேலும் கூறியுள்ளார்.

மணிப்பூர்

பட மூலாதாரம்,ANI

சமீபத்தில் ஓடிஷாவில் ரயில் விபத்து நிகழ்ந்தபோது அங்கு பிரதமர் மோதி நேரில் சென்றார். ஆனால் மணிப்பூர் வன்முறை கலவரம் குறித்து அவர் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தார் என்றும் மனித உரிமை ஆர்வலரான ஒனிலின் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

“மேய்தேய், குகி ஆகிய இரண்டு சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் தற்போது குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கொல்லப்படுவதாகவும், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும் காட்டப்படுவது, பொதுவெளியில் எவ்வாறு புரிந்து கொள்ளப்படும்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

“மத்திய அரசோ, மாநில அரசோ தற்போது வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதில் யாரும் உறுதியாக இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு வன்முறைக்கு முடிவுகட்ட இன்னும் ஓராண்டோ, அதற்கு மேலாகவோ கூட ஆகலாம்,” என்கிறார் ஓனிலின்

உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

மணிப்பூர் வன்முறை உச்சநீதிமன்றம் கண்டனம்

இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

“இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இது அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாகும்.” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 28ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு தலைமை நீதிபதி பெஞ்ச் மத்திய அரசையும், மணிப்பூர் அரசையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,ANI

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

அதே நேரத்தில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் என். பிரேன் சிங்கிடம் பேசியதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

மணிப்பூர் வீடியோ தொடர்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இதயம் நொறுங்கிவிட்டதாக' என சமூக ஊடகம் வாயிலாக பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில், "மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. நமது கூட்டு மனசாட்சி எங்கே? மனித குலத்தின் ஆன்மாவை வெறுப்பும் விஷமமும் வேரோடு பிடுங்கி எறிகிறது. மணிப்பூரில் நிகழும் இத்தகைய கொடூர வன்முறை அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்," என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மணிப்பூர் வன்முறை

மணிப்பூர் முதல்வரின் பதில் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், குற்றம் செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

"மணிப்பூர் தொடர்பாக நேற்று வெளியான வீடியோ மிகவும் மோசமானது. இது மனிதத்தன்மையற்ற செயல். இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூர் போலீஸ் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, இன்று இருவரை கைது செய்துள்ளது. உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மணிப்பூர் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளியிட்ட செய்தியின்படி, குகி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இந்த பெண்கள் மே 4 அன்று மெய்தேய் இனத்தவர் அதிகமாக வாழும் தௌபல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.

இருப்பினும், அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை மே 18-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் காவல்துறையின் உயர் அதிகாரியான எஸ்பி மேகசந்திர சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குற்றவாளிகளை பிடிக்க மணிப்பூர் காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

வீடியோவில் காணப்பட்ட ஒரு பெண்ணின் வயது சுமார் 20 வயது என்றும் மற்றொரு பெண்ணின் வயது 40 என்றும் கூறப்படுகிறது.

இந்த வீடியோவில் இரண்டு பெண்கள் மட்டுமே காணப்படுவதாகவும், ஆனால் அந்த கும்பல் 50 வயது பெண் ஒருவரையும் ஆடையை களைய வற்புறுத்தியதாகவும் இந்த பெண்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் இளம் பெண்ணும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,ANI

என்ன நடந்தது?

மே 3ஆம் தேதி 800 முதல் 1000 பேர் வரை நவீன ஆயுதங்களுடன் தௌபால் மாவட்டத்தில் அமைந்துள்ள தங்கள் கிராமத்தில் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கும்பல் கொள்ளையடித்ததுடன் கிராமத்திற்கு தீ வைக்க ஆரம்பித்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தந்தை, சகோதரருடன் அருகேயிருந்த காடுகளை நோக்கி ஓடியிருக்கின்றனர்.

முதல் அறிக்கையில் கூறப்பட்ட தகவல்களின்படி, இந்த பெண்களை காவல்துறையினர் காப்பாற்றினர். பின்னர் இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர்; . ஆனால் காவல் நிலையத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு, கும்பல் அவர்களைத் தடுத்திருக்கிறது.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,DEVASH KUMAR

இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் இந்த பெண்களை காவல்துறையினரிடம் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். பிறகு இளம் பெண்ணின் தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

“மூன்று பெண்களும் கூட்டத்தின் முன் நிர்வாணமாக நடக்க வற்புறுத்தப்பட்டனர். ஒரு இளம் பெண் பொது இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்ணின் 19 வயது சகோதரர் அவரை காப்பாற்ற முயன்றபோது, அவரும் கொல்லப்பட்டார்.” என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து பழங்குடியினர் தலைவர்கள் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு குற்றம் செய்தவர்கள் அந்தப் பெண்களுக்கான கொடுமையை மேலும் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது.

அதே நேரத்தில், இந்தப் பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக மகளிர் அமைப்பினர் அறிவித்ததை அடுத்து, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், காக்சிங், தௌபால் ஆகிய 5 மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அறிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cpry7q0epqvo

  • கருத்துக்கள உறவுகள்

Image

மணிப்பூரில் நடந்த கொடூரம், நாட்டிற்கே பேரவமானம் . 
மனித குலத்திற்கே எதிரானது. இந்த சமூகம் எவ்வளவு கொடூரமானது என்பதை காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

மணிப்பூர் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டும்.

தமிழ் தர்மா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பெண்களை தெய்வமாக வணங்கும் இந்தியாவில்...

காட்டுமிராண்டி இந்தியாவில் அப்படி சொல்லி நன்றாக புலுடாவிடுகிறார்கள். பெண்களுக்கு எதிராக கொடூரங்கள் செய்வதை நிறுத்தி சமனாக நடத்தட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்+

எங்கட நாட்டிலை எத்தினை தமிழ்ப் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்டவங்கள், நித இந்தியர்கள். இப்படிப்பட்ட இவங்களெல்லாம் பெண்களை தெய்வமாய் வணங்குறாங்களாம்.... சிரிப்புத்தான் வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

எங்கட நாட்டிலை எத்தினை தமிழ்ப் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்டவங்கள், நித இந்தியர்கள். இப்படிப்பட்ட இவங்களெல்லாம் பெண்களை தெய்வமாய் வணங்குறாங்களாம்.... சிரிப்புத்தான் வருகுது.

உண்மையை சொன்னீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

— — — — —
பெண்களை தெய்வமாக வணங்கும் இந்தியாவில்...
இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பது, மிகவும் அருவருப்பை தந்தது.  😡
சிக்.... இப்படியும் உலகத்தில் மக்கள் என்று மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. 😡

 

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

காட்டுமிராண்டி இந்தியாவில் அப்படி சொல்லி நன்றாக புலுடாவிடுகிறார்கள். பெண்களுக்கு எதிராக கொடூரங்கள் செய்வதை நிறுத்தி சமனாக நடத்தட்டும்.

 

1 hour ago, நன்னிச் சோழன் said:

எங்கட நாட்டிலை எத்தினை தமிழ்ப் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்டவங்கள், நித இந்தியர்கள். இப்படிப்பட்ட இவங்களெல்லாம் பெண்களை தெய்வமாய் வணங்குறாங்களாம்.... சிரிப்புத்தான் வருகுது.

நான் குறிப்பிட விளைந்தது….
பெண் தெய்வங்களை வணங்கும் இந்தியாவில்…. என்று வந்திருக்க வேண்டும். (உமாதேவி, காளி, சரஸ்வதி, துர்க்கை, லக்ஷ்மி… போன்ற  தெய்வங்கள்.)
முதலாவதாக எழுதியதில் பொருள் மயக்கம் ஏற்பட்டு, கருத்துக்கு வேறு அர்த்தத்தை கொடுத்து விட்டது என நினைக்கின்றேன்.

மற்றும் படி, அரசியல் கூட்டங்களில்…. பெண்களின் இடுப்பை கிள்ளுபவர்களும், ஓடிக் கொண்டிருக்கும் பஸ்சில்…. பலர் பார்க்க பாலியல் வன்புணர்வு செய்பவர்களும், ஓடும் ரயிலில் பெண்ணை… வன்புணர்வு செய்து விட்டு… ரயிலில் இருந்து தள்ளி விடுபவர்களும், காவல் துறையின்  தலை நரைத்த அதி உயர் அதிகாரிகளே…. தமக்கு சமமாக உள்ள  படித்த பெண்  உயர்  அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து… நீதிமன்றம் போய் குற்றம் நிரூபிக்கப் பட்டாலும்…. அவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் காப்பாற்றும் நீதிமன்றங்களும், 75 வயது கிழவியையும் பாலியல் வன்புணர்வு செய்பவர்கள் நிறைந்த நாடு தான்…. இந்தியா.

சென்ற வருடம்… சர்வதேச பிரபல  ஆங்கிலப் பத்திரிகை ஒன்று,
“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது” என்று கட்டுரை எழுதியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதனை வாசித்து… இந்தியன் துள்ளிக் குதித்தானே தவிர, திருந்துகின்ற எண்ணம் அறவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்+
21 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற வருடம்… சர்வதேச பிரபல  ஆங்கிலப் பத்திரிகை ஒன்று,
“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது” என்று கட்டுரை எழுதியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதனை வாசித்து… இந்தியன் துள்ளிக் குதித்தானே தவிர, திருந்துகின்ற எண்ணம் அறவே இல்லை.

கொல்லென்டு சிரிச்சிட்டன்🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be a graphic of text that says 'molitics.in MAUNPUR MANIPUR AAASH M'

  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி : இந்திய அரசின் கோரிக்கை

மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி : இந்திய அரசின் கோரிக்கை

இந்திய மத்திய அரசு மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான காணொளி காட்சிகளை நீக்குமாறு, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிடம், கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மணிப்பூரில் இடம்பெற்ற கலவரம் மற்றும் இரண்டு பெண்கள் மீதான வன்முறை சம்பவத்திற்கு அரசியல் மற்றும் சமூக ரீதியில் உலகளாவிய ரீதியில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய உயர்நீதிமன்றம் கடும் கண்டணம் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்திற்கு இந்திய மாநில மற்றும் மத்திய அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நடவடிக்கைகளை எடுக்க தவறினால் உயர்நீதிமன்றம் குறித்த விடயம் தொடர்பில் நேரடியாக தலையிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் வீட்டின்மீது, அந்தப் பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2023/1340858

  • கருத்துக்கள உறவுகள்

சண்டாளர் ஆட்சி செய்யும்போது இப்படி எல்லாம் நடக்கத்தான் செய்யும். இலங்கையில் பவுத்த தீவிரவாதிகள், இந்தியாவில் இந்து தீவிரவாதிகள். 


ஒரு நாட்டின் பிரதமராக இருந்துகொண்டு வேடிக்கை பார்த்தவர்தான் இந்த மோடி. அவரது அடியாள் தான் அங்குள்ள முதலமைச்சர். இவர்களுக்கு இரண்டு மாதத்துக்கு முன்னரே இவை எல்லாம் நன்றாகவே தெரியும். இப்போது இது வெளிப்படுத்தவுடன், இனியும் மறைக்க முடியாது என்பதால்தான் மோடியின் வாய் நேற்று திருந்து ஏதேதோ புலம்பியது. இல்லாவிட்ட்தால் இதை எல்லாம் மறைத்திருப்பார்கள்.

அப்பாவிகளை  கொலை செய்து அவர்களது ரத்தத்தை சிந்தினவர்கள் நிச்சயமாக அந்த சாபம் அவர்களது பரம்பரையை நாசமாக்கும். அதட்கு பொறுப்பாளன் தலைவர்களுக்கும் அந்த சாபத்தில் நிச்சயமாக பங்கு கிடைக்கும். இந்தியாவில் நடக்கும் வெள்ளத்தினால் உண்டான அழிவுகளை பார்க்கும்போது தேசத்துக்கும் சாபம் உண்டானதுபோல இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

சண்டாளர் ஆட்சி செய்யும்போது இப்படி எல்லாம் நடக்கத்தான் செய்யும். இலங்கையில் பவுத்த தீவிரவாதிகள், இந்தியாவில் இந்து தீவிரவாதிகள். 

இலங்கை இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இவை நடக்காவிட்டால்த் தான் அதிசயம்.

2 hours ago, Cruso said:

அப்பாவிகளை  கொலை செய்து அவர்களது ரத்தத்தை சிந்தினவர்கள் நிச்சயமாக அந்த சாபம் அவர்களது பரம்பரையை நாசமாக்கும்

பரம்பரை இருந்தா தானே சாபம் வரும் என்று தான் மோடி மனைவியை தூரத்தே வைத்துள்ளார்.

2 hours ago, Cruso said:

ஒரு நாட்டின் பிரதமராக இருந்துகொண்டு வேடிக்கை பார்த்தவர்தான் இந்த மோடி. அவரது அடியாள் தான் அங்குள்ள முதலமைச்சர். இவர்களுக்கு இரண்டு மாதத்துக்கு முன்னரே இவை எல்லாம் நன்றாகவே தெரியும். இப்போது இது வெளிப்படுத்தவுடன், இனியும் மறைக்க முடியாது என்பதால்தான் மோடியின் வாய் நேற்று திருந்து ஏதேதோ புலம்பியது. இல்லாவிட்ட்தால் இதை எல்லாம் மறைத்திருப்பார்கள்.

ஏறத்தாள இலங்கையில் 83 கலவரம் போலவே உள்ளது.

இதை மீளவும் @ரஞ்சித் அவர்கள் மொழிபெயர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

நேரமிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

 

5 hours ago, Cruso said:

சண்டாளர் ஆட்சி 

@Cruso:

சண்டாளன் என்பதன் அர்த்தம்:

இன்றும் `சண்டாளர்` என்ற சொல் இந்தியாவில் பட்டியல் சாதியினரையே  குறிக்கின்றது. இன்று ஏளனமாக சாதியினைக் குறிக்கப் பயன்படும் வசைச் சொற்கள் யாவும் ஒரு காலத்தில் ஏதோ ஒரு வகையில் பெருமைக்குரிய சொற்களே. 

கருணானிதி கூட இச் சொல்லை தவறாக பயன்படுத்தி உள்ளார்.

https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=7748&Itemid=139

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

@Cruso:

சண்டாளன் என்பதன் அர்த்தம்:

இன்றும் `சண்டாளர்` என்ற சொல் இந்தியாவில் பட்டியல் சாதியினரையே  குறிக்கின்றது. இன்று ஏளனமாக சாதியினைக் குறிக்கப் பயன்படும் வசைச் சொற்கள் யாவும் ஒரு காலத்தில் ஏதோ ஒரு வகையில் பெருமைக்குரிய சொற்களே. 

கருணானிதி கூட இச் சொல்லை தவறாக பயன்படுத்தி உள்ளார்.

https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=7748&Itemid=139

“ கள்ளர்” என்றும்…. ஒரு சாதி, தமிழ்நாட்டில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

`இந்திய நாட்டுக்காக கார்கில், இலங்கையில் ராணுவ வீரராகச் சண்டையிட்ட என்னால், என் குடும்பத்தையும் என் மக்களையும் இன்று காப்பாற்ற முடியவில்லை."

 

பா.ஜ.க ஆளும் மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மைச் சமூகமான பழங்குடியல்லாத மைதேயி இனக்குழுவுக்கும், பழங்குடிச் சமூகமான குக்கி இனக்குழுவுக்கிடையே மே 3-ம் தேதி முதல் வன்முறைத் தீ அடங்காமல் எரிந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு முறையும் கலவரத்தில் இத்தனை உயிர்கள் பலியாகின என்று செய்திகள் வரும்போதெல்லாம், `கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகிறோம்' என வெறும் வாய்வார்த்தையாகவே சொல்லிக்கொண்டிருந்தது இரட்டை இன்ஜின் பா.ஜ.க அரசு. பலி எண்ணிக்கை நூற்றைம்பதைத் தாண்டிவிட்டது. ஆனால், அவர்களின் அந்த ஒற்றை வாசகம் மட்டும் மாறவில்லை.

 
 
 
மணிப்பூர் வன்முறை - பாஜக
 
மணிப்பூர் வன்முறை - பாஜக

இப்படியிருக்க இவ்வளவு நாளாய் போலீஸாராலும், அரசாலும் இரண்டு மாதங்களாய் மூடிவைத்துவரப்பட்ட கொடூரமான சம்பவம், நேற்று முன்தினம் வீடியோவாக வெளியாகி நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி, மனிதத்தை எரித்துக்கொண்டிருக்கிறது. மே 4-ம் தேதியன்று குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு, நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அந்தச் சம்பவம், பா.ஜ.க ஆளும் இந்தியாவில் ஒரு கரும்புள்ளியாய் ஒட்டிக்கொண்டது.

 

எதிர்க்கட்சிகளின் பல்வேறு கண்டனங்களுக்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தத் தயார் என்று கூறிய மத்திய பா.ஜ.க அரசே, தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றன என்று மணிப்பூர் பற்றி வாய்திறக்காமல் இரண்டு நாள்களாக அவைகளை ஒத்திவைத்துவருகிறது. இன்னொருபக்கம் வீடியோ பரவி பிரச்னை வெடித்த பிறகு, அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் நான்கு பேரைக் கைதுசெய்துவிட்டதாகக் கூறும் மணிப்பூர் காவல்துறை, `இரண்டு மாதங்களாக ஆதாரம் கிடைக்காததால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று கூறுகிறது.

மணிப்பூர் நிர்வாணக் கொடுமை
 
மணிப்பூர் நிர்வாணக் கொடுமை

ஆனால், போலீஸார்தான் அந்தக் கொடூரக் கும்பலிடம் தங்களை விட்டுச் சென்றதாக, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் பகிரங்கமாகக் கூறுகிறார். இத்தகைய அவலங்களுக்கு மத்தியில் இன்னொரு மிகப்பெரும் அவலம் என்னவென்றால், அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரின் மனைவியாவார்.

 

இந்த நிலையில் அந்தக் கொடூரக்காட்சிகளை நேரில் பார்த்தவரும், ராணுவத்தில் பணியாற்றியவருமான அந்த நபர், தன் கண்முன்னே நடந்த அவலத்தைப் பற்றி தற்போது கூறியிருக்கிறார். பிரபல தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது இதை விவரித்த அந்த நபர், ``இந்திய நாட்டுக்காக கார்கில், இலங்கையில் ராணுவ வீரராகச் சண்டையிட்ட என்னால், என் குடும்பத்தையும் என் மக்களையும் இன்று காப்பாற்ற முடியவில்லை. அந்தக் கொடூரக் கும்பல் பெண்களைத் தனியாக அழைத்துச் சென்றது. அதில் 2-3 பெண்கள் இருந்தனர். அந்தப் பெண்களில் ஒருவர் என் மனைவி. அந்தக் கும்பலில் இருந்தவர்கள் பெண்களிடம் ஆடைகளைக் கழற்றுமாறு கட்டாயப்படுத்தினர்.

மணிப்பூர் நிர்வாணக் கொடுமை
 
மணிப்பூர் நிர்வாணக் கொடுமை

எங்கள் கிராமத்தினர் சிலர் அந்தப் பெண்களைக் காப்பாற்ற முயன்றபோது, அந்த மிருகங்கள் அதிலிருந்த பெண்ணின் தந்தையைக் கடுமையாகத் தாக்கிக் கொன்றனர். காவல்துறையும் மைதேயி சமூகத்தினருடன் நின்றது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்காலத்திலும் நாங்கள் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது போன்ற சூழ்நிலையில், எதிர்காலத்தில் நாங்கள் எவ்வாறு வாழ முடியும். நாங்கள் தனித்தனியாகத்தான் வாழ வேண்டும். அதுதான் சரியானதும்கூட" என்று கூறினார்.

இறுதியில் பிரதமரிடம் நீங்கள் என்ன கோரிக்கை வைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ``இத்தகைய குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

மணிப்பூர்: "நாட்டைக் காத்தேன் குடும்பத்தைக் காக்க முடியவில்லை"- பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கண்ணீர் | Husband Of Woman Paraded Naked In Manipur spoke about the incident - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

 

விகடனில் இச் செய்திக்கு வந்த 2 பின்னூட்டங்கள்

அந்தப் பெண்கள் பாவத்துக்குரியவர்கள். இந்த குர்க்கா வீரர்கள் இலங்கையில் என்ன செய்தார்கள் என இப்பவும் கண்ணீருடன் சொல்வார்கள்..... தெய்வம் நின்று கொல்லும்?

79
Share
Reply
 

b702b435-7cfd-41bf-a977-c39e429b0854?c=3

ஆம் இலங்கையில் கூர்க்கா வீரர்கள் , சீக்கிய இராணுவத்தினால் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள். எனினும் இந்தப் பெண்களுக்கு தீங்கு இழைத்தவர்கள் , காவல்துறையினர் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

5
Share
Reply
 
 
25 minutes ago, தமிழ் சிறி said:

“ கள்ளர்” என்றும்…. ஒரு சாதி, தமிழ்நாட்டில் உள்ளது.

ஓம்... கள்ளர் என்பது சாதி. அதே நேரத்தில் கள்ர் என்பது திருடர்களை குறிக்கும் சொல்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

பெண் தெய்வங்களை வணங்கும் இந்தியாவில்…

பெண்களுக்கு எதிராக இந்த கொடிய குற்றம்  புரிந்தவர்களை அந்த பெண் தெய்வங்களே சரியான தண்டனை கொடுத்து தண்டிக்கும் என்று சொல்லி கொடூரத்தை நிகழ்த்தியவர்களை தப்பிக்கவிடாமல் இருக்க வேண்டும்.

7 hours ago, Cruso said:

அப்பாவிகளை  கொலை செய்து அவர்களது ரத்தத்தை சிந்தினவர்கள் நிச்சயமாக அந்த சாபம் அவர்களது பரம்பரையை நாசமாக்கும். அதட்கு பொறுப்பாளன் தலைவர்களுக்கும் அந்த சாபத்தில் நிச்சயமாக பங்கு கிடைக்கும். இந்தியாவில் நடக்கும் வெள்ளத்தினால் உண்டான அழிவுகளை பார்க்கும்போது தேசத்துக்கும் சாபம் உண்டானதுபோல இருக்கின்றது. 

பூமியின் சுற்றுசூழல் பாதிப்படைந்துவருவதால் நடைபெறுகின்ற பெரிய மழை வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகள் இந்தியாவில் மட்டும் நடைபெறவில்லை. உலகத்தின் இதரபகுதிகளிலும் நடைபெறுகின்றது. இந்தியாவில் பெரும் மழை வந்து வெள்ள அழிவுகள் நடைபெறுகின்ற போது அங்கே உன்ன பிறருக்கு தீங்கு செய்யாத சட்டத்திற்கு கட்பட்டுநடகின்ற நல்ல மக்களும் அழிகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பயங்கரம் மே மாதம் 4ல் நடந்தது .அதன் வீடியோ இம்மாதம் 19 ம் திகதி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வேறு வழியில்லாமல் மோடி கண்டனம் தெரிவிக்கின்றார். மோடி அந்த கொடுமையை கண்டித்ததால் அங்கே வன்முறை இன்னும் அதிகரிக்கலாம் என்று மனித உரிமைகள் ஆர்வலர்  ஓனிலின் என்பவர் அச்சமடைகிறாராம். இவரெல்லாம் ஒரு  மனித உரிமைகள் ஆர்வலர்☹️

On 20/7/2023 at 19:03, ஏராளன் said:

இந்த விவகாரம் குறித்த பிரதமர் மோதியின் கருத்தால் மணிப்பூரில் வன்முறை மேலும் அதிகரிக்கலாம் என்று மனித உரிமைகள் ஆர்வலர் கே.கே. ஓனிலின் அச்சம் தெரிவித்துள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, பிழம்பு said:

இந்த நிலையில் அந்தக் கொடூரக்காட்சிகளை நேரில் பார்த்தவரும், ராணுவத்தில் பணியாற்றியவருமான அந்த நபர், தன் கண்முன்னே நடந்த அவலத்தைப் பற்றி தற்போது கூறியிருக்கிறார். பிரபல தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது இதை விவரித்த அந்த நபர், ``இந்திய நாட்டுக்காக கார்கில், இலங்கையில் ராணுவ வீரராகச் சண்டையிட்ட என்னால், என் குடும்பத்தையும் என் மக்களையும் இன்று காப்பாற்ற முடியவில்லை. அந்தக் கொடூரக் கும்பல் பெண்களைத் தனியாக அழைத்துச் சென்றது. அதில் 2-3 பெண்கள் இருந்தனர். அந்தப் பெண்களில் ஒருவர் என் மனைவி. அந்தக் கும்பலில் இருந்தவர்கள் பெண்களிடம் ஆடைகளைக் கழற்றுமாறு கட்டாயப்படுத்தினர்.

அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றுகொல்லும்.

எங்கட நாட்டிலை எத்தினை தமிழ்ப் பெணகளின்ர மானத்தை இந்த இந்தியக் காவாலியும் இவனுடன் நாசமறுக்கவென வந்த ஏனைய காவாலிகளும் நாசமாக்கியிருப்பார்கள்?!

அதான் இன்று அவன் மனைவிக்கே தெய்வம் அதைச் செய்துள்ளது... உவங்களுக்கு இன்னமும் வேணும்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2023 at 03:40, கிருபன் said:

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன

அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில்  புளுகிய மோடி இச்சம்பவத்தையிட்டு இந்தியாவின் 148 கோடி மக்களும் வெட் கி தலைகுனிகின்றனர் என தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்களுக்கு எதிராக இந்த கொடிய குற்றம்  புரிந்தவர்களை அந்த பெண் தெய்வங்களே சரியான தண்டனை கொடுத்து தண்டிக்கும் என்று சொல்லி கொடூரத்தை நிகழ்த்தியவர்களை தப்பிக்கவிடாமல் இருக்க வேண்டும்.

பூமியின் சுற்றுசூழல் பாதிப்படைந்துவருவதால் நடைபெறுகின்ற பெரிய மழை வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகள் இந்தியாவில் மட்டும் நடைபெறவில்லை. உலகத்தின் இதரபகுதிகளிலும் நடைபெறுகின்றது. இந்தியாவில் பெரும் மழை வந்து வெள்ள அழிவுகள் நடைபெறுகின்ற போது அங்கே உன்ன பிறருக்கு தீங்கு செய்யாத சட்டத்திற்கு கட்பட்டுநடகின்ற நல்ல மக்களும் அழிகின்றனர்.

அப்படி இருக்கலாம். இருந்தாலும் அந்த அழிவை பார்க்கும்போது மிகவும் மோசமான அழிவுபோல தெரிகின்றது. அதுவும் வருடா வருடம் அழிவு அதிகரித்து செல்கின்றது. இந்த செய்தியை இங்கு எழுதியபின்னர் டிவி செய்தியை பார்த்தபோது இந்தியாவில் பூமி அதிர்ச்சி எட்டப்பட்ட்தாக சொல்லப்பட்ட்து.

என்ன செய்வது, எள்ளு காயுது எண்டு அதோடு கிடந்த குற்றத்திட்காக எலிப்புழுக்கையும் காயுது எண்டு தமிழில் சொல்லுவார்கள்.

நல்லவர்கள் இருந்தாலும், அதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தாலும் அவர்களும் குற்றவாளிகள்தான். 

6 hours ago, நிழலி said:

@Cruso:

சண்டாளன் என்பதன் அர்த்தம்:

இன்றும் `சண்டாளர்` என்ற சொல் இந்தியாவில் பட்டியல் சாதியினரையே  குறிக்கின்றது. இன்று ஏளனமாக சாதியினைக் குறிக்கப் பயன்படும் வசைச் சொற்கள் யாவும் ஒரு காலத்தில் ஏதோ ஒரு வகையில் பெருமைக்குரிய சொற்களே. 

கருணானிதி கூட இச் சொல்லை தவறாக பயன்படுத்தி உள்ளார்.

https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=7748&Itemid=139

ஆனாலும் நான் இங்குகுறிப்பிடட சண்டாளர் அவர்கள் அல்ல. மனித குலத்துக்கு கேடு விளைவிப்பவர்களையே அப்படி குறிப்பிடடேன். அப்படி ஒரு இனம் இருந்ததாக அறிந்திருக்கவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.