Jump to content

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இருக்கலாம். 

அமெரிக்கா இதை செய்திருந்தால் மிக சாதுரியமான நகர்வு - ரஸ்யா/புட்டின்/வாக்னர்/பிரிகோசின் எல்லார் வாயிலும் அல்வா தீத்தியமைக்குச்சமன்🤣.

அவங்களுக்கு அல்வா, எங்கள் வாயில் சர்க்கரை!😂

ஆனால், மேற்கின் உளவு அமைப்புகள் உறுதி செய்யும் வரை செத்தது பிரிகோசினா அல்லது பிரிகோசின் பொடி டபுளா என்று உறுதி செய்வது கடினம்!

Link to comment
Share on other sites

  • Replies 551
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அவங்களுக்கு அல்வா, எங்கள் வாயில் சர்க்கரை!😂

ஆனால், மேற்கின் உளவு அமைப்புகள் உறுதி செய்யும் வரை செத்தது பிரிகோசினா அல்லது பிரிகோசின் பொடி டபுளா என்று உறுதி செய்வது கடினம்!

 ஐயோ..சுவீட்னர் எண்டு சொல்லுங்கோ🤣.

பிரிகோசினை அவரின் விரல் அற்ற கை, உதவியாளரை பச்சை குத்திய படம் என்பவற்றின் மூலம் பிணவறையில் அடையாளம் கண்டு பிடித்துள்ளனராம். 

புட்டின் உடல்மொழி, மொழியை பார்த்தால் அவரது வேலை போலவே தெரிகிறது.

“பிரிகோசனை எனக்கு 1990 இல் இருந்து தெரியும். கடுமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பெரும் பிழைகளை விட்டவர். ஆனால் தனக்கும், நாம் கேட்ட போது எமக்கும் தேவையான பெறுபேறை எடுத்து தந்தவர்” என்கிறார் புட்டின்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9 வருடங்களுக்கு பின்னர் ரஸ்யாவின் பிடியில் உள்ள கிரிமியாவில் உக்ரைன் படையினர் – தேசிய கொடியையும் ஏற்றினர்

Published By: RAJEEBAN

24 AUG, 2023 | 07:40 PM
image
 

ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் கடற்பரப்பில் தனது படையினர் தரையிறங்கியுள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஸ்ய படையினருக்கு எதிராக இதுவரை முன்னெடுக்கப்பட்ட மிகவும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவில் தனது படையினர் தரையிறங்கியுள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

F4TSl7caUAAnsif.jpg

கிரிமியாவின் மேற்குகடற்கரை பகுதியில் ஒலெனிவ்கா மாயக் குடியிருப்புகளிற்கு அருகில் உக்ரைன் படையினர் தரையிறங்கியுள்ளனர். உக்ரைன் கடற்படையினருடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் ஆக்கிரமிப்பாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர் எதிரிப்படையினர் பெருமளவு இழப்புகளை சந்தித்தனர் அவர்களின் ஆயுததளபாடங்கள் அழிக்கப்பட்டன என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் சுதந்திரதினமான இன்று அங்கு உக்ரைனின் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டதாக உக்ரைன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

2014 இல் ரஸ்யா கிரிமியாவை ஆக்கிரமித்தது.

https://www.virakesari.lk/article/163134

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கிரைமியாவில் படகு மூலம் தாம் தரையிறங்கி ஒரு அதிரடிதாக்குதலை நடத்தி மீண்டதாய் உக்ரேனும், படகுகளை தாக்கியழித்து விட்டதாய் ரஸ்யாவும் கூறுகிறன.

வீரகேசரி கிரைமியாவில் உக்ரேன் நிரந்தர தரையிறக்கம் (invasion) செய்துள்ளது போல எழுதியுள்ளது.

அப்படி அல்ல இது ஒரு விசேட நகர்வு (special operations) எனப்படும் கரந்தடி தாக்குதலாகவே தெரிகிறது.

5 minutes ago, ஏராளன் said:

9 வருடங்களுக்கு பின்னர் ரஸ்யாவின் பிடியில் உள்ள கிரிமியாவில் உக்ரைன் படையினர் – தேசிய கொடியையும் ஏற்றினர்

Published By: RAJEEBAN

24 AUG, 2023 | 07:40 PM
image
 

ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவின் கடற்பரப்பில் தனது படையினர் தரையிறங்கியுள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஸ்ய படையினருக்கு எதிராக இதுவரை முன்னெடுக்கப்பட்ட மிகவும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவில் தனது படையினர் தரையிறங்கியுள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

F4TSl7caUAAnsif.jpg

கிரிமியாவின் மேற்குகடற்கரை பகுதியில் ஒலெனிவ்கா மாயக் குடியிருப்புகளிற்கு அருகில் உக்ரைன் படையினர் தரையிறங்கியுள்ளனர். உக்ரைன் கடற்படையினருடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் ஆக்கிரமிப்பாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர் எதிரிப்படையினர் பெருமளவு இழப்புகளை சந்தித்தனர் அவர்களின் ஆயுததளபாடங்கள் அழிக்கப்பட்டன என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் சுதந்திரதினமான இன்று அங்கு உக்ரைனின் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டதாக உக்ரைன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

2014 இல் ரஸ்யா கிரிமியாவை ஆக்கிரமித்தது.

https://www.virakesari.lk/article/163134

 

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அது தானே சரியானது புட்டினை வழிக்கு கொண்டு வர?? 

வேறு வழிகள் எதுவுமே இல்லையா விசுகர்?

எமது நியாயபூர்வமான விடுதலை விடயத்திலும் வழிக்கு கொண்டு வர பல வாக்குறுதிகளை கொடுத்து அழித்தொழித்தார்களே.... வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்பட்டதா? ஏன் ஒட்டு மொத்த இலங்கைக்கு ஆவது ஏதும் நல்லது நடந்ததா?பஞ்சத்தால் ஒரு பிரயளமே நடந்தது அல்லவா? அப்போது கூடபோரை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய நாடுகள் சோறு போடவில்லையே.

நெருப்பு சுடும் என தெரிந்த பின்னும்......:face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்னர் குழுவின் தலைவர் வாழ்க்கையில் பல பாரிய தவறுகளை செய்தவர் – மௌனம் கலைத்தார் புட்டின்

Published By: RAJEEBAN

25 AUG, 2023 | 07:22 AM
image
 

வாக்னர் கூலிப்படையின் தலைவர் விமானவிபத்தில் கொல்லப்பட்டார் என வெளியான தகவல்களுக்கு மத்தியில்  ரஸ்யா ஜனாதிபதி இந்த விபத்து குறித்து மௌனம் கலைத்துள்ளார்.

பிரிகோஜின் மிகவும் திறமைவாய்ந்தவர், ஆனால் வாழ்க்கையில் பல பாரதூரமான தவறுகளை இழைத்தவர் என புட்டின் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவிற்கு வடமேற்கே இடம்பெற்ற விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு புட்டின் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

எனினும் வாக்னர் குழுவின் தலைவர் உயிரிழந்தார் என்பதை புட்டின் உறுதி செய்யவில்லை.

c8d109fd827a4ad4b80ecaf457ea1f22Russia_W

விமானவிபத்தின் பின்னர் கிரெம்ளின் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடித்தது, தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான வீடியோ உரையிலும் புட்டின் இது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை.

எனினும் புதன்கிழமை மாலை அது மாறியது.

விமானவிபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என புட்டின் ரஸ்யாவிற்கான தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.

விமானத்தில் வாக்னர் ஊழியர்கள் காணப்பட்டனர் என புட்டின் தெரிவித்தார்.

உக்ரைனில் உள்ள நவநாஜி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் என்ற பொதுவான இலக்கிற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்கள் அவர்கள்  என புட்டின் தெரிவித்தார்.

பிரிகோஜின் குறித்து கருத்து வெளியிட்ட புட்டின் 90களின் ஆரம்பம் முதல் அவரை எனக்கு தெரியும் அவர் குழப்பகரமான வாழ்க்கையை கொண்டவர் என குறிப்பிட்டார்.

பிரிகோஜினையும் அவரது  படையினரையும் உக்ரைனில் அவர்களின் பங்களிப்பையும் புட்டின் பாராட்டினார்.

அவர் வாழ்க்கையில் பாரிய தவறுகளை இழைத்தார், எனவும் தெரிவித்துள்ள புட்டின் எனினும் பிரிகோஜின் மரணத்தை உறுதிசெய்ய தவறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/163136

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய நகரமொன்றின் விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் ஆளில்லா விமானதாக்குதல் - விமானங்கள் சேதம்

Published By: RAJEEBAN

30 AUG, 2023 | 06:39 AM
image
 

ரஸ்யாவின் வடகிழக்கில் உள்ள பஸ்கோவ் நகரில் உள்ள விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன  என தகவல்கள் வெளியாகின்றன.

இராணுவம் தாக்குதலை முறியடிக்கின்றது என அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். பாரிய தீயை காண்பிக்கும் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார் – பெரும் வெடிப்பு சத்தங்களை அந்த வீடியோவில் கேட்க முடிகின்றது.

நான்கு இலுசின் 76 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன என உறுதிப்படுத்தப்படாத ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஸ்கோவ் நகரம் உக்ரைனிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் எஸ்டோனியாவின் எல்லைக்கு அருகில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

F4vYEe5XgAA2I2R.jpg

உக்ரைன் ரஸ்யாவிற்குள் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து கருத்துகூறுவதை தவிர்த்துவந்துள்ளது.

பஸ்கொவ் நகரின் மீதான ஆளில்லா விமான தாக்குதல்களை பாதுகாப்பு அமைச்சு முறியடிக்கின்றது என  அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நான் நின்றிருந்தேன் உயிரிழப்பு எதுவுமில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவசரநிலைக்கான அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள டாஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானதாக்குதல் காரணமாக நான்கு விமானங்கள் சேதமடைந்தன தீப்பிடித்ததில் இரண்டு விமானங்கள் வெடித்துச்சிதறின என டாஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/163467

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு மேலதிகமாக 175 மில்லியன் டொலருக்கு ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், இராணுவ உதவியும் அளித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலதிகமாக 175 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இவை உக்ரேனிய படைகள் ரஷ்ய படைகளின் முன் பகுதியை தாக்க உதவியாக இருக்கும்.

இந்த தொகுப்பில் ரஷ்ய விமானங்கள் மற்றும் ரொக்கெட்களுக்கு எதிராக செயற்படக்கூடிய வான் ஏவுகணைகள், ஜாவெலின் எதிர்ப்பு கவச ரொக்கெட்கள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

https://thinakkural.lk/article/272200

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2023 at 08:04, ஏராளன் said:

பிரிகோஜின் குறித்து கருத்து வெளியிட்ட புட்டின் 90களின் ஆரம்பம் முதல் அவரை எனக்கு தெரியும் அவர் குழப்பகரமான வாழ்க்கையை கொண்டவர் என குறிப்பிட்டார்.

பிரிகோஜினையும் அவரது  படையினரையும் உக்ரைனில் அவர்களின் பங்களிப்பையும் புட்டின் பாராட்டினார்.

அவர் வாழ்க்கையில் பாரிய தவறுகளை இழைத்தார், எனவும் தெரிவித்துள்ள புட்டின் எனினும் பிரிகோஜின் மரணத்தை உறுதிசெய்ய தவறியுள்ளார்.

புட்டின் ரஷ்ய கொள்கையின் அடிப்படைவாதி.எனவே அவர் நாட்டில் அவரை எதிர்த்தவர் உயிரோடு இலார். :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்க அமெரிக்கா தீர்மானம்

Published By: RAJEEBAN

07 SEP, 2023 | 11:49 AM
image
 

உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைனிற்கான அமெரிக்காவின் நிதிமனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக இந்த உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனின் உக்ரைன் தலைநகருக்கான விஜயத்தின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஸ்யா இந்த நடவடிக்கைக்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

abraham_tanks.jpg

உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்க தீர்மானித்துள்ள  31எம்1 ஏ1 ஏபிரகாம் டாங்கிகளில் பயன்படுத்துவதற்கு 120 எம்எம் யுரேனியம் எறிகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உக்ரைன் தலைநகருக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது அமெரிக்காவின் புதிய நிதி உதவி திட்டத்தை அவர் அறிவிப்பார்.

உக்ரைனிற்கு பிளிங்கென் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது.

தலைநகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது  சேதங்களோ ஏற்படவில்லை எனினும் ஒடெசா பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைன் தலைநகரில் பிளிங்கென் ரஸ்யாவுடனான போரில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/164011

Link to comment
Share on other sites

ரஷ்யா-உக்ரைன் போர்: அந்த தாக்குதலை நான் தான் தடுத்து நிறுத்தினேன் – எலான் மஸ்க் அதிரடி

 

 

 

elan.jpg

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரஷ்ய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என தெரிவித்து இருக்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மொஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயற்படுத்துமாறு உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். எனினும், இதன் விளைவை கருத்திற்க் கொண்டு இணைய வசதியை செயற்படுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கிய குறுகிய காலக்கட்டத்திலேயே எலான் மஸ்க்-இன் ஸ்டார்லின்க் எனும் செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை வழங்கும் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்க தொடங்கியது.

“செவஸ்டாபோல் வரை ஸ்டார்லின்க் சேவையை செயற்படுத்துமாறு அரச அதிகாரிகளிடம் இருந்து அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்வது தான். நான் அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு இருந்தால், போரில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட ஸ்பேஸ்-எக்ஸ் முக்கிய காரணமாக மாறி இருக்கும்,” என எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

https://thinakkural.lk/article/272453

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யவை உக்ரேனில் இருந்து வெளித்தள்ள முயலும் உக்ரேனின் எதிர்ச்சமர் நடவடிக்கை இந்த வருட கோடை காலத்தில் வெற்றி பெறுவதாயின் இன்னும் 35-45 நாட்களில் சமர் முக்கிய கட்டத்தை அடைய வேண்டும் எனவும், இந்த வருடத்த்துக்கான எதிர்சமர் நடவடிக்கைகள் முடிந்து விட்டதாக அறிவிக்க இன்னமும் காலமிருப்பதாக அமெரிக்க படைகளின் தளபதி ஜெனரல் மார்க் மைலி கூறியுள்ளர்.

https://www.theguardian.com/world/live/2023/sep/10/russia-ukraine-war-live-russian-drones-attack-kyiv-moscow-praises-g20-declaration

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிமியாவில் ரஸ்யாவின் கப்பல் தளத்தை இலக்குவைத்து உக்ரைன் தாக்குதல் - ரஸ்ய கப்பல்களுக்கு சேதம்

Published By: RAJEEBAN

14 SEP, 2023 | 11:12 AM
image
 

உக்ரைன் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் அதிவேக படகு தாக்குதல்கள்காரணமாக கிரிமியா தீபகற்பத்தில் இரண்டு கப்பல்கள் சேதமடைந்துள்ளன செவஸ்டபோல் கப்பல்கட்டும் தளம் தீப்பிடித்து எரிகின்றது என ரஸ்யாதெரிவித்துள்ளது.

பத்து ஏவுகணைதாக்குதல்களும் மூன்று அதிகவேக படகு தாக்குதல்களும் இடம்பெற்றன என ரஸ்யா தெரிவித்துள்ளது.

ஏழு ஏவுகணைகளும் மூன்று படகுகளும் அழிக்கப்பட்டன என தெரிவித்துள்ள ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு  திருத்தப்பட்டுக்கொண்டிருந்த இரண்டு கப்பல்கள்  தீப்பிடித்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

24 பேர் காயமடைந்துள்ளனர் என செவஸ்டபோல் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிலிருந்து ரஸ்யா ஆக்கிரமித்த கிரிமியாவின்  மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் ரஸ்யாவின் கருங்கடல் கப்பல் படையணியின் கப்பல்களையும் நீர்மூழ்கிகளையும் பழுதுபார்ப்பதற்கு உதவுகின்றது.

துறைமுகத்தில் தீப்பிடித்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

யுத்தம் ஆரம்பமான பின்னர் இந்த துறைமுகத்தின்மீது உக்ரைன் மேற்கொண்ட  குறிப்பிடத்தக்க தாக்குதல் இதுவாகும்.

https://www.virakesari.lk/article/164537

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போருக்கு இடையில் மனிதாபிமானம்: உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ரஷ்யர்கள்

2022 பெப்ரவரியில் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.

ரஷ்யாவில் இப்போர் குறித்து ரஷ்யாவையோ, அதிபர் விளாடிமிர் புட்டினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷ்ய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷ்யாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

இராணுவ தாக்குதல் காரணமாக ரஷ்யாவிற்கோ அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷ்ய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.

“இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை,” என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷ்ய பெண்மணி தெரிவித்தார்.

“எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்” என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷ்ய பெண் தெரிவித்துள்ளார்.

2022 டிசம்பர் மாதமே ரஷ்யாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 இலட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/273523

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு இனி ஆயுத உதவி கிடையாது: போலந்து அதிரடி

2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களாக தொடர்ந்து வருகிறது.

மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது.

போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷ்யா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் வழியாக சென்றடைகின்றன.

6-4.jpg

இந்நிலையில் ஐரோப்பியாவின் பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் உள்ளூர் விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் அந்நாடுகளின் வழியாக தானியம் எடுத்து செல்ல அனுமதித்தாலும் அந்நாடுகளில் அவற்றை விற்பனை செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடையை விலக்குவதாக அறிவித்தது.

இருப்பினும் அந்த 5 நாடுகளில் போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா ஆகிய 3 நாடுகள், தங்கள் நாட்டு உள்ளூர் விவசாயிகளை காக்கும் வகையில் இந்த தடை விலகலை ஏற்க மறுத்து விட்டன.

இதனை எதிர்க்கும் விதமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தற்போது அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐ.நா. கூட்டமைப்பின் பொது சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, “சில ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிற்கு மறைமுகமாக உதவுகின்றன” என குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்வினையாக தற்போது போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு இராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு இராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/274071

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவாகிக் கொண்டிருக்கும் செய்தி

கிரைமியாவின் செவஸ்டபோலில் உள்ள ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை தலைமையகம் மீது உக்ரேன் தாக்குதல். தாக்குதலுக்கு உரிமையும் கோரியது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அது என்னப்பா தெளிவாகி கொண்டு இருக்கும் செய்தி ? யாரு தெளிவு படுத்துகிறார்கள்.  

வெளியாகி கொண்டு இருக்கும் செய்தியா ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

தெளிவாகிக் கொண்டிருக்கும் செய்தி

கிரைமியாவின் செவஸ்டபோலில் உள்ள ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை தலைமையகம் மீது உக்ரேன் தாக்குதல். தாக்குதலுக்கு உரிமையும் கோரியது.

 

இதை அடித்தால் உலகம் அழிந்து  விடும் என்று தான் தடுத்ததாக இணையமுதலாளி உலகத்தலைவராகியது  பொய்யா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2023 at 21:01, goshan_che said:

தெளிவாகிக் கொண்டிருக்கும் செய்தி

கிரைமியாவின் செவஸ்டபோலில் உள்ள ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை தலைமையகம் மீது உக்ரேன் தாக்குதல். தாக்குதலுக்கு உரிமையும் கோரியது.

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணை தாக்குதல்

Published By: RAJEEBAN

23 SEP, 2023 | 08:34 AM
image
 

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படை தளத்தின் மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உக்ரைனின் இந்த தாக்குதலால் படைவீரர் ஒருவர் காணாமல்போயுள்ளார் என ரஸ்யா தெரிவித்துள்ளது.

செவஸ்டபோலில் உள்ள கட்டிடங்களிற்கு மேலாக பாரிய புகைமண்டலம் எழுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்த தளத்தில் ரஸ்யாவின் மிகச்சிறந்த  கடற்படையினர் உள்ளதால் உக்ரைனிற்கு இது ஒரு முக்கிய இலக்காக காணப்படுகின்றது.

சமீபத்தில் உக்ரைன் ரஸ்யாவின் வான்பாதுகாப்பு பொறிமுறை உட்பட கிரிமியாவில் உள்ள பல இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

பிரிட்டனும் பிரான்சும் வழங்கிய ஸ்டோர்ம் சடோ ஏவுகணைகளை பயன்படுத்தியே இந்த தாக்குதல் இடம்பெற்றது என உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்ஃ

ரஸ்யாவின் தளத்தை வெற்றிகரமாக தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இன்னும் பல தாக்குதல்கள் உள்ளன என நாங்கள் உங்களிற்கு தெரிவித்திருந்தோம் என உக்ரைனின் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165241

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Storm shadow வைத்தான் பாவித்து இந்த தாக்குதலை செய்தவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ragaa said:

Storm shadow வைத்தான் பாவித்து இந்த தாக்குதலை செய்தவர்கள்

இதில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு ரஸ்ய வீரர், கட்டளை தளபதி என்கிறார்கள்.

உண்மை பொய் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை தளத்தின்மீது உக்ரைன் தாக்குதல் - முக்கிய தளபதி பலி

Published By: RAJEEBAN

26 SEP, 2023 | 03:22 PM
image
 

கிரிமியாவின் கருங்கடலில் உள்ள ரஸ்யாவின் கடற்படை தளத்தின் மீது மேற்கொண்ட உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை படையணியின் தளபதி உட்பட  34 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவஸ்டபோலில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

ரஸ்யாவின் கடற்படை தளபதிகளின் விசேட கூட்டத்தினை இலக்காக வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 34 அதிகாரிகள் உயிரிழந்தனர் தளபதியும் உயிரிழந்தார் 105 ஆக்கிரமிப்பாளர்கள் காயமடைந்துள்ளனர் கட்டிடம் திருத்தமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் விசேட படைப்பிரிவினர் கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் விபரங்களை வெளியிடாத போதிலும் உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

அட்மிரல் விக்டர் சொக்கொலொவ் என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என உக்ரைனின் உள்துறை அமைச்சின்  ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165490

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருந்த ரசியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் மக்கள் உயிர்போகும் வரை கொடுமைப்படுத்தும் ரஷ்யா.. ஐ.நா. அதிர்ச்சி தகவல்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனும் தன் பங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய தாக்குதலை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணை ஆணையத்திற்கு எரிக் மோஸ் தலைமை வகிக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய ஆயுதப்படை மேற்கொண்டு வரும் கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலி ஏற்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். எரிக் மோஸ் தலைமையிலான குழு ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வுகளில் ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்படும் காவல் மையங்களில் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இது பற்றிய குற்றச்சாட்டுகளை ரஷ்யா முழுமையாக மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக ஆணையத்தில் பதில் அளிக்க ரஷ்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. எனினும், ரஷ்யா தரப்பு அதிகாரி யாரும் ஆணையத்தில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

https://thinakkural.lk/article/274610

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவை விஞ்சிய நார்வே - அப்படி என்ன செய்கிறது?

அமெரிக்காவை விஞ்சிய நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதைச் சமாளிக்க அமெரிக்கா அதிகளவிலான உதவிகளை அளித்து வருகிறது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆண்டனி செச்சர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க அமெரிக்கா இதுவரை 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இது மிக அதிகம்.

ஆனால் இதற்குப் பிறகும் யுக்ரேன் அதிபர் வெலோதிமிர் ஜெலன்ஸ்கி மேலும் உதவி கேட்டு அமெரிக்கா சென்றார். ஆனால் அதே நேரம் போருக்கான நிதி உதவி குறித்து குடியரசு கட்சியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது.

இருப்பினும் ஒப்பீட்டளவில் நார்வே ஒரு வகையில் அமெரிக்காவையும் விஞ்சிய உதவிகளைச் செய்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 19ஆம் தேதியன்று ஐநா சபையில் ஆற்றிய உரையில், யுக்ரேனை புறக்கணிக்க வேண்டாம் என்று சர்வதேச சமூகத்திற்கு உணர்ச்சிகரமான வேண்டுகோளை விடுத்தார்.

"உலகம் சோர்வடையும் என்றும் எந்த முடிவையும் ஏற்படுத்தாமல் யுக்ரேன் மீது அட்டூழியங்களை இழைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் ரஷ்யா நம்புகிறது. ஆனால் நான் உங்களிடம் கேட்கிறேன், ஒரு ஆக்கிரமிப்பாளரைத் திருப்திப்படுத்த அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கைகளை நாம் கைவிட்டால், இந்த அமைப்பின் எந்த ஒரு உறுப்பு நாடும் தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கருத முடியுமா?” என்று அவர் வினவினார்.

 

அமெரிக்கா எந்த வடிவத்தில் எவ்வளவு உதவி செய்துள்ளது?

அமெரிக்காவை விஞ்சிய நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள் உள்ளிட்டவை இந்த உதவிகளில் அடங்கும்.

யுக்ரேனுக்கு 110 பில்லியன் டாலர்களுக்கு மேல் உதவி வழங்கிட அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பின்வருவன அடங்கும்.

  • 49.6 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ராணுவ உதவி
  • 28.5 பில்லியன் டாலர்கள் பொருளாதார உதவி
  • 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு மனிதாபிமான உதவி
  • 18.4 பில்லியன் டாலர்கள் அமெரிக்க பாதுகாப்பு தொழில் துறையை ஊக்குவிக்கும் உதவி

ஆகஸ்ட் 9ஆம் தேதி வரையில், ஒதுக்கப்பட்ட நிதியில் 91 சதவிகிதம் அளிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் மாளிகை தெரிவித்தது. காங்கிரஸிடம் இருந்து 24 பில்லியன் டாலர்கள் கூடுதல் உதவியை அரசு கோரியுள்ளது. இதில் 14 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியும் அடங்கும்.

இதற்கிடையில், யுக்ரேனுக்கு கூடுதல் உதவிகள் வழங்குவதை ஆதரிக்கும் அமெரிக்கர்கள் குறிப்பாக பழமைவாதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

யுக்ரேன் அதிபர் வெலோதிமிர் ஜெலன்ஸ்கி தனது வாதத்தை முன்வைக்க அமெரிக்காவிற்கு சென்றார்.

இப்போது நாம் யுக்ரேனின் மிகப்பெரிய உதவியாளர் அமெரிக்கா அல்ல நார்வே என்பதைக் காட்டும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

 
அமெரிக்காவை விஞ்சிய நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கூடுதல் உதவிகளை யுக்ரேனுக்கு அளிக்க அமெரிக்க அரசு தனது நாடாளுமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.

யுக்ரேனுக்கான அமெரிக்க உதவியை எவ்வாறு ஒப்பிடுவது?

பல்வேறு நாடுகளில் இருந்து யுக்ரேன் பெற்ற உதவியின் ஜூலை மாத இறுதி வரையிலான புள்ளிவிவரங்கள் உள்ளன. அவற்றை மட்டுமே நாம் ஒப்பிடுவோம். அந்த நேரத்தில் அமெரிக்கா யுக்ரேனுக்காக சுமார் 80 பில்லியன் டாலர்களை செலவிட்டது.

இது மற்ற எந்த ஒரு நாட்டிலிருந்தும் பெறப்பட்ட உதவியைக் காட்டிலும் அதிகம். ஆனால் இது ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட உதவியை விடக் குறைவு.

எலிசா டெமஸ், ராண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்பு விவகார ஆராய்ச்சியாளர். இந்தக் கூடுதல் உதவி இல்லாமல் இருந்திருந்தால், கோடையில் ஆரம்பித்த யுக்ரேனின் எதிர் தாக்குதல் சில வாரங்களுக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் என்று அவர் கூறுகிறார். போர்க்களத்தில் யுக்ரேன் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வந்த நேரத்தில் இது எதிர்மறையான செய்தியை அனுப்பியிருக்கும்.

அமெரிக்க உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், குளிர்காலம் தொடங்கிய பிறகு யுக்ரேன் தனது ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் புதிய உதவித்தொகுப்பு போர்க்களத்திற்கு அப்பால் போரை பாதிக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

"மற்ற நாடுகளும் உதவக்கூடிய ஒரு சூழலை அமெரிக்கா உருவாக்கியிருக்க வேண்டும். புதிய அமெரிக்க உதவி அளிக்கப்படாதது, ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகள் தங்கள் சொந்த உதவித் தொகுப்புகளை மறுபரிசீலனை செய்வதைத் தடுக்கக்கூடும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் மற்ற நாடுகளைவிட அமெரிக்கா அதிக ராணுவ உதவிகளை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இதில் பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களும் அடங்கும்.

 
அமெரிக்காவை விஞ்சிய நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க கூடுதல் ராணுவ உதவிகள் தேவை என யுக்ரேன் அமெரிக்காவிடம் கேட்டுள்ளது.

செலவுகளைக் குறைக்க குடியரசுக் கட்சியின் அழுத்தம் அதிகரித்து வருகிறது

கூடுதல் ராணுவ உதவி தேவை என்று பைடன் நிர்வாகம் கூறுகிறது. அமெரிக்க தலைவர்கள், குறிப்பாக குடியரசுக் கட்சியுடன் தொடர்புடையவர்கள், பைடன் நிர்வாகத்தின் யுக்ரேன் உதவித்தொகுப்புகளை விமர்சித்துள்ளனர்.

"யுக்ரேனில் நமக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஆர்வமும் இல்லை. அப்படி இருந்தாலும் எங்களிடம் பணம் இல்லை என்ற உண்மையால் அது மறுக்கப்படும்," என்று கென்டக்கியின் செனட்டர் ராண்ட் பால் கூறுகிறார்.

”சிக்கனமாக இருங்கள். அதன்பிறகு உங்கள் காசோலைப் புத்தகத்தை வெளியே எடுங்கள் என்று சொல்லிச் சொல்லி சோர்வடைந்துவிட்டேன்,” என்று தனிப்பட்ட முறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிறகு மிசோரியின் செனட்டர் ஜோஷ் ஹர்லே கூறினார். 'இது எங்கள் பணம் இல்லையா என்ன? இது அமெரிக்க மக்களின் பணம்,” என்றார் அவர்.

லூக் காஃபி, பழமைவாத சிந்தனைக் குழு என்று கருதப்படும் ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டில் உறுப்பினர். யுக்ரேனுக்கான அமெரிக்க உதவி என்பது சில குடியரசுக் கட்சித் தலைவர்களுக்கு விருப்பமில்லாத எளிமையான பிரச்னை என்று அவர் கூறினார்.

டொனால்ட் டிரம்ப் மீதான அரசியல் குற்றச்சாட்டு மற்றும் யுக்ரேனிய எரிசக்தி நிறுவனத்துடன் ஹண்டர் பைடனின் சந்தேகத்திற்கிடமான உறவுகள் பற்றிய குற்றச்சாட்டு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது யுக்ரேன் விஷயம் மிகவும் எளிமையானது என்றார் அவர்.

"இந்த இரண்டு பிரச்னைகளும் எந்த வகையிலும் போருடன் தொடர்புடையவை அல்ல என்றாலும், நீங்கள் கட்சி அரசியலில் ஈடுபட்டால், பழமைவாத இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒலிக்கும் யுக்ரேனுக்கு எதிரான கதையை விரைவாக உருவாக்க முடியும்," என்று லூக் காஃபி குறிப்பிட்டார்.

 
அமெரிக்காவை விஞ்சிய நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அமெரிக்காவைவிட யுக்ரேனுக்கு நார்வே அதிக உதவிகளை அளித்துள்ளது.

மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா எவ்வளவு உதவி செய்தது?

கடந்த 2022ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட்டான 751 பில்லியன் டாலர்கள் அல்லது சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய நலன்களுக்கான 1.2 டிரில்லியன் டாலர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டால், யுக்ரேனுக்கான உதவி மிகவும் குறைவாகவே தெரியும். இது 2022 நிதியாண்டில் அமெரிக்காவின் மொத்த செலவில் 1.8 சதவிகிதம் மட்டுமே.

மறுபுறம், ஜூலை இறுதிக்குள் யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட 80 பில்லியன் டாலர்கள் உதவியானது, பல கூட்டாட்சி அமைப்புகளின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைவிட அதிகம்.

யுக்ரேனுக்கான இந்த உதவி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய நிதியுதவி வாக்குறுதிகளைவிட மிக அதிகம். ஜூலை மாதம் வரையிலான யுக்ரேனுக்கான அமெரிக்க உதவி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.33 சதவிகிதமாக இருந்தது என்று வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இது 1970இல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிய 0.18 சதவிகிதம், 1964இல் லத்தீன் அமெரிக்காவுக்கு அளித்த 0.15 சதவிகிதம், 1962இல் பாகிஸ்தானுக்கு வழங்கிய 0.08 சதவிகிதம் ஆகியவற்றை ஒப்பிடும் போது மிக அதிகம்.

யுக்ரேன் தொகுப்பை ஒப்பிடும்போது மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை மிகவும் குறைவு. 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு 4 பில்லியன் டாலர், இஸ்ரேலுக்கு 3.3 பில்லியன் டாலர் மற்றும் இராக்கிற்கு 1.2 பில்லியன் டாலர் உதவி வழங்கியது.

 
அமெரிக்காவை விஞ்சிய நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உலக நாடுகள் சோர்ந்து விட்டால், யுக்ரேனை அடிபணிய வைத்து விடலாம் என ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவை விட நார்வே அதிகமாக உதவி செய்கிறதா?

வெளிநாட்டு உதவியின் மற்ற வடிவங்களைப் போலவே, அமெரிக்க நட்பு நாடுகள் போரின் செலவில் பெரும் பங்கை ஏற்க வேண்டும் என்று விமர்சகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஃப்ளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கடந்த மாதம் விஸ்கான்சினில் நடந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான விவாதத்தில், "ஐரோப்பா முன்னால் வர வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வதன் அடிப்படையில் நமது ஆதரவு இருக்க வேண்டும்," என்றார்.

அமெரிக்கா அதன் நட்பு நாடுகளைவிட யுக்ரேனுக்கு அதிக ராணுவ உதவியை வழங்குகிறது. ஐரோப்பிய நாடுகள் தனித்தனியாக மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் யுக்ரேனுக்கு உறுதியளித்த மொத்த உதவித்தொகை 140 பில்லியன் டாலர்கள். இது அமெரிக்காவின் உதவியைவிட அதிகம்.

டாலரில் ஒப்பிடும்போது அமெரிக்காவின் உதவி, நட்பு நாடுகளின் உதவியின் அளவை விடக் குறைவாக உள்ளது என்று லூக் ஃகாபி கூறுகிறார்.

"யுக்ரேனில் அமெரிக்கா என்ன செய்கிறது என்பதை எஸ்டோனியா அங்கு என்ன செய்கிறது என்பதுடன் ஒப்பிட முடியாது. எஸ்டோனியாவின் பொருளாதாரமும், அமெரிக்க மாகாணம் வெர்மாண்ட்டின் பொருளாதாரமும் ஏறக்குறைய ஒரே அளவு," என்று அவர் கூறுகிறார்.

”இதை ஒப்பிடுவதற்கான சிறந்த வழி ஒன்று உள்ளது. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி), உதவித்தொகை எவ்வளவு பங்கு என்பதன் மூலமாக அது செய்யப்படவேண்டும்,” என்றார் அவர்.

ஜூலை இறுதி வரை அதிகபட்சமாக நார்வே தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.71 சதவிகிதம் உதவியை வழங்கியது. எஸ்டோனியா மற்றும் ரஷ்யாவின் எல்லையில் உள்ள மற்ற இரண்டு பால்டிக் நாடுகளும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளன என்று ’கீல் இன்ஸ்ட்டிட்யூட் ஃபார் தி வேர்ல்ட் எக்கானமி’ சேகரித்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

https://www.bbc.com/tamil/articles/cj78k890dr2o

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.