Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகோசன், புட்டின் இடையே தான் தூது போனதை லூக்கா விபரிக்கிறார்.

ஆங்கில சப்டைட்டில் உடன்.

  • Replies 565
  • Views 53.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எல்லாரும் தான் வரி கட்டுகிறார்கள், இதையெல்லாம் சாதனையாகச் சொல்பவர்கள் எங்கள் ஆசியக் குடிகளாக மட்டும் தான் இருப்பரென நினைக்கிறேன்😂. கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் க

  • "ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!"  என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎!  இப்படி ஊர் உலக நிலவர

  • இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣 "ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁 👇 Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict "Once again

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

பிரிகோசன், புட்டின் இடையே தான் தூது போனதை லூக்கா விபரிக்கிறார்.

ஒரு நாட்டின் ஐனாதிபதி

அவரை

அதே நாட்டிலிருந்து கலைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்ட நீதிமன்றத்தால்  குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கவாதி

இவர்கள் இருவரையும் சமாதானப் படுத்த பக்கத்து நாடு??

எப்படி இருந்த ரசியா

எப்படி இருந்த புட்டின் ... 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

ஒரு நாட்டின் ஐனாதிபதி

அவரை

அதே நாட்டிலிருந்து கலைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்ட நீதிமன்றத்தால்  குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கவாதி

இவர்கள் இருவரையும் சமாதானப் படுத்த பக்கத்து நாடு??

எப்படி இருந்த ரசியா

எப்படி இருந்த புட்டின் ... 

இங்கே லூக்கா மிக வெளிப்படையாக கதைப்பதாக எனக்கு படுகிறது.

லூக்காவை ஈயூவுக்குள் இழுக்க முன்னர் ஒரு சந்தர்ப்பம் வந்தது. லூக்கா ஈயுவுடன் நெருங்கி வருவதை அறிந்து, புட்டின்-லூக்கா இடையே முறுகல் ஏற்பட்டது. இதை பால்-சண்டை என்பார்கள்.

அந்த நேரம் லூக்காவை ஈயூ இன்னம் கொஞ்சம் இறுக்கமாக அரவணைத்து இருந்தால் லூக்கா இப்போ இந்த பக்கம் இருந்திருப்பார்.

புட்டினை கோப படுத்த கூடாது என்ற அப்போதைய ஜேர்மனியின்/ பிரான்சின் முடிவால் - லூக்கா வேறு வழி இன்றி மீண்டும் புட்டினிடம் சமரசம் ஆனார்.

இது ஈயு தவற விட்ட சந்தர்ப்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனிய நகரில் ரஷ்யாவின் தாக்குதலில் நால்வர் பலி

Published By: SETHU

28 JUN, 2023 | 09:05 AM
image
 
உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள கிரமடோர்ஸ்க் நகரில் ரஷ்ய படையினரின் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் நால்வர் உயிரழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உணவு விடுதியொன்றும் வணிகப் பகுதியொன்றும் நேற்றிரவு தாக்கப்பட்டது. இந்நகரம் உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், ரஷ்ய படையினர் ஆக்கிரமித்துள்ள உக்ரேனிய பகுதிகளுக்கு அருகில் இந்நகரம் உள்ளது. 

உயிரிழந்தவர்களில் 17 வயது சிறுமியும் அடங்கியுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/158734

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இப்போ பலி எண்ணிக்கை 5 எனவும் அதில் 3 பேர் 18 வயதுக்குட்பட்டோர் எனவும் அறிய வருகிறது.

ரஸ்ய ஆதரவு தளங்களின் கருத்துப்படி - இந்த உணவு விடுதியில் வெளி நாட்டை சேர்ந்த, உக்ரேனுடன் இணைந்து போரிடும் துணைப்படையினர் அடிக்கடி சஞ்சரிப்பதால் - இலக்கு வைக்கப்பட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

1991 இன் எல்லைகளுக்கு உக்ரேன் திரும்பலாமா (கிரைமியா மீள உக்ரேன் வசம்) என்ற கேள்விக்கு, ஏன் முடியாது? என பதிலளித்துள்ளார் சீனாவின், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதர்.

கூடவே நாடுகளின் நில ஒருமைப்பாட்டை சீனா எப்போதும் வலியுறுத்துவதாயும், இந்த பிணக்கை ரஸ்யா-உக்ரேன் பேசி தீர்க்க வேண்டும் என்பதே தம் நிலைப்பாடு எனவும் கூறினார் சீனத் தூதர்.

https://www.aljazeera.com/news/2023/6/27/dont-see-why-not-china-envoy-on-backing-ukraines-91-borders

————

உறுதிப்படுத்த படாத தகவல்.

ரஸ்ய உள்நாட்டு பாதுகாப்பில் பொறுப்பில் இருந்த ஜெனெரல் General Alexander Travnikov என்பவர் கடுமையான விபத்தொன்றை சந்தித்து வைத்தியசாலையில் அனுமதிப்பு என்கிறார்கள்.

டிஸ்கி

தேதிலைக்கு தட்டுப்பாடோ?🤣

Edited by goshan_che

12 minutes ago, goshan_che said:

தேதிலைக்கு தட்டுப்பாடோ?🤣

தேயிலை உண்டு. ஆனால் தேனீர் ஊற்றிக் கொடுக்கும் சமையல்காரர் பெலாருஸ்ஸ்ஸில். 😂

அவர் இல்லாமல் புதினால் இயங்க முடியாது என்பதை மேலே எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

ஒரு நாட்டின் ஐனாதிபதி

அவரை

அதே நாட்டிலிருந்து கலைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்ட நீதிமன்றத்தால்  குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கவாதி

இவர்கள் இருவரையும் சமாதானப் படுத்த பக்கத்து நாடு??

எப்படி இருந்த ரசியா

எப்படி இருந்த புட்டின் ... 

சரி சரி, ஆளால் மாறி, முதுகு சொறிஞ்சுகொண்டு இன்பம் காணுவோம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, இணையவன் said:

தேயிலை உண்டு. ஆனால் தேனீர் ஊற்றிக் கொடுக்கும் சமையல்காரர் பெலாருஸ்ஸ்ஸில். 😂

அவர் இல்லாமல் புதினால் இயங்க முடியாது என்பதை மேலே எழுதியுள்ளேன்.

🤣. சமையல்காரர் என்ன இருந்தாலும், ஆள் கொஞ்சம் சைக்கோ என்றாலும் - கெட்டிக்காரர். தைரியசாலியும் கூட.

டொலர் பில்லியனர், பிறைவேட் ஜெட், சென் பீட்டர்ஸ்பர்க்கில் அரண்மனை வீடு (இதே நகரில்தான் ஹாட் டாக் வியாபாரியாக சிறையில் இருந்து வந்து வாழ்வை ஆரம்பித்தார்) என என்ன இருந்தாலும் - சண்டை என வந்து விட்டால், யூனிபோர்மை போட்டு கொண்டு பக்மூட் வரை வந்து விடுவார்.

இப்போ புட்டினை சூழ உள்ள ஷைகோ ஏனையோர் அப்படி அல்ல. புட்டினும் கூட பழைய உளவாளியே தவிர - களமுனையில் போய் S class ஓடத்தான் லாயக்கு.

உண்மையில் சமையல்காரார் இல்லாதது பெரிய இழப்புத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

சரி சரி, ஆளால் மாறி, முதுகு சொறிஞ்சுகொண்டு இன்பம் காணுவோம் 😁

இப்படி உங்கள் கருத்துக்கு.   நான் பதில் எழுதினால்  உங்கள் மனநிலை எப்படி இருக்கும்??  இந்த உங்கள் பதிலனாது   எந்தவித கருத்துகளும் அற்றது   🤣

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக உ-ப- ப செய்திகள்

1. உணவு விடுதி சாவு 9 ஆக அதிகரிப்பு. பல ஆங்கிலத்தில் எழுதும், வெளிநாட்டு ஆட்களின் ட்விட்டர் கணக்குகள் தாமும் அந்த இடத்தில் இருந்ததாக சொல்கிறன. இதனால்தான் இலக்கு வைக்கபட்டிருக்கலாம்.

2. நியுயோர்க் டைம்ஸ் - பிரிகோசினின் கலக திட்டம் - முதலில் உக்ரேன் யுத்தத்தை வழி நடத்தி பின் மாற்றப்பட்ட ஜெனெரல் சேர்கி சுரோவிகின் க்கு தெரிந்தே நடந்தது என்கிறது.

இது அமெரிக்காவின் கிண்டி விடும் உத்தியாகவும் இருக்கலாம். 

3. கெச்சோனின் டினிப்ரோ ஆற்றின் மறுகரையில் ரஸ்ய கட்டுப்பாட்டு பகுதியில், முன்பு உடைக்கப்பட அண்டொனொஸ்விகி பாலத்தின் அருகில் டாச்சி என்ற இடத்தில் உக்ரேன் படையினர் சிலர் தரை இறங்கி ஒரு தரையிறக்க முனையை (bridge head) உருவாக்கிள்ளாகளாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனரல் சுரோவிகின் பற்றிய ஒரு மேலதிக தகவல் - கலகம் ஆரம்பித்ததும், வாக்னர் படைகளை பின்வாங்குமாறு சுரோவிகினும் இன்னொரு அதிகாரியும் வீடியோ செய்தி வெளியிட்டனர்.

அப்போதே அந்த வீடியோக்கள் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட, வற்புறுத்தலின் கீழ் கொடுக்கப்பட்ட வீடியோக்கள் என சிலர் கூறினர்.

அடுத்து இவருக்கு என்ன நடக்கிறது என்பதை பொறுத்து உண்மையை ஊகிக்கலாம்.

இவர் ரஸ்ய இராணுவத்தில் வீரர்கள் விரும்பும் ஒரு அதிகாரியாவார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சரி சரி, ஆளால் மாறி, முதுகு சொறிஞ்சுகொண்டு இன்பம் காணுவோம் 😁

நீங்கள் சொறியுங்க 

அது உங்கள் சொந்த சுய இன்பம்

என்னை அதற்குள் இழுக்க வேண்டாம். 

2 hours ago, Kandiah57 said:

இப்படி உங்கள் கருத்துக்கு.   நான் பதில் எழுதினால்  உங்கள் மனநிலை எப்படி இருக்கும்??  இந்த உங்கள் பதிலனாது   எந்தவித கருத்துகளும் அற்றது   🤣

அவருக்கு அவரது வாய் தான் எதிரி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புட்டின்.......ஆள் குளோஸ்...:cool:

முக்கிய குறிப்பு.:-  இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம். :rolling_on_the_floor_laughing:  :winking_face_with_tongue:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இப்படி உங்கள் கருத்துக்கு.   நான் பதில் எழுதினால்  உங்கள் மனநிலை எப்படி இருக்கும்??  இந்த உங்கள் பதிலனாது   எந்தவித கருத்துகளும் அற்றது   🤣

என்னுடைய பதிலை ஒருபுறம் வையுங்கள், நாங்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? 

நான் மேலே கூறியதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம். வேறென்ன? 

6 hours ago, விசுகு said:

1) நீங்கள் சொறியுங்க 

அது உங்கள் சொந்த சுய இன்பம்

என்னை அதற்குள் இழுக்க வேண்டாம். 

2) அவருக்கு அவரது வாய் தான் எதிரி. 

1) என்னையும் உங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டாம். அதற்கு நான் சரிவர மாட்டேன். 

2) உண்மைகளை அப்படியே கூறினால் எதிரிகள் அதிகமாகத்தான் செய்யும். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

புட்டின்.......ஆள் குளோஸ்...:cool:

முக்கிய குறிப்பு.:-  இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம். :rolling_on_the_floor_laughing:  :winking_face_with_tongue:

அறளை…. நடு முற்றத்தில் நின்று, டான்ஸ் ஆடுது. 😂
பைடனுக்கு… நாக்கிலை சனி.
ஓரு வாட்டி, திருநள்ளாறு போய்… எள்ளெண்ணை எரித்தால், குணப்படுத்தி விடலாம். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, தமிழ் சிறி said:

அறளை…. நடு முற்றத்தில் நின்று, டான்ஸ் ஆடுது. 😂
பைடனுக்கு… நாக்கிலை சனி.
ஓரு வாட்டி, திருநள்ளாறு போய்… எள்ளெண்ணை எரித்தால், குணப்படுத்தி விடலாம். 🤣

உலக வல்லரசிற்கு ஒரு வரப்பிரசாதம் பைடன். :grinning_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

உலக வல்லரசிற்கு ஒரு வரப்பிரசாதம் பைடன். :grinning_face_with_smiling_eyes:

ஆள்… ஒவ்வொரு மாதமும், புதுப் புது சம்பவங்கள் செய்து,
உலக மக்களை, மகிழ்ச்சிக் கடலில்… ஆழ்த்திக் கொண்டு இருக்கின்றார்.

விமான படிக்கட்டில் விழுவது, சைக்கிளில் இருந்து விழுவது, மேடையில் மண் மூட்டை தடுக்கி விழுவது, நாக்கு உளறுவது… என்று, பட்டியல் ரொம்ம்ம்ம்ப… நீளம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புட்டின்.......ஆள் குளோஸ்...:cool:

முக்கிய குறிப்பு.:-  இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம். :rolling_on_the_floor_laughing:  :winking_face_with_tongue:

1 hour ago, தமிழ் சிறி said:

அறளை…. நடு முற்றத்தில் நின்று, டான்ஸ் ஆடுது. 😂
பைடனுக்கு… நாக்கிலை சனி.
ஓரு வாட்டி, திருநள்ளாறு போய்… எள்ளெண்ணை எரித்தால், குணப்படுத்தி விடலாம். 🤣

இந்த மனுசன் மரியாதையாய் ஒரு தரத்தோட விட்டு விட்டு போகலாம்.

பதவி ஆசை. 

பிகு 

வயது போக போக அறளை கூடி - தன்னிலை தாழ்வதை, என்னை சுற்றி இப்போ அதிகம் காண்கிறேன்.

எனக்கும் இப்படி ஒரு நிலை வந்து, ஏறுக்கு மாறாக, குதர்க்கமாக எழுதும் நிலை வரமுதல், யாழ்களத்தில் எழுதுவதை நிப்பாட்டி விட வேணும். 

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய உ. ப. ப செய்திகள்

1. ஜெனெரல் சுரோவிகின் அவரின் அடுத்த நிலை அதிகாரி இருவரும் Lefortovo detention center சிறைக்கு அனுப்பபட்டுள்ளனராம்

2. யுத்த முனையில் 4 இடங்களில் ரஸ்ய - இதுவரை சண்டையில் ஈடுபடுத்தபடாத அணிகளை கொண்டு - புதிய எதிர் தாக்குதலை தொடங்கி உள்ளதாம்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இந்த மனுசன் மரியாதையாய் ஒரு தரத்தோட விட்டு விட்டு போகலாம்.

பதவி ஆசை. 

பிகு 

வயது போக போக அறளை கூடி - தன்னிலை தாழ்வதை, என்னை சுற்றி இப்போ அதிகம் காண்கிறேன்.

எனக்கும் இப்படி ஒரு நிலை வந்து, ஏறுக்கு மாறாக, குதர்க்கமாக எழுதும் நிலை வரமுதல், யாழ்களத்தில் எழுதுவதை நிப்பாட்டி விட வேணும். 

நீங்கள் சொல்வது சரி.
தனி மனிதர்கள் செய்யும் தவறுகளை கடந்து போனாலும்,
ஓரு நாட்டின் தலைவர் செய்யும் போது, உலக அளவில் பேசு பொருளாகி விடுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, goshan_che said:

எனக்கும் இப்படி ஒரு நிலை வந்து, ஏறுக்கு மாறாக, குதர்க்கமாக எழுதும் நிலை வரமுதல், யாழ்களத்தில் எழுதுவதை நிப்பாட்டி விட வேணும். 

ஏன் இப்ப மட்டும்??????????

எனக்கும்  வெளிக்குத்தில்லாமல் எழுதத்தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

வயது போக போக அறளை கூடி - தன்னிலை தாழ்வதை, என்னை சுற்றி இப்போ அதிகம் காண்கிறேன்.

3 minutes ago, குமாரசாமி said:

ஏன் இப்ப மட்டும்??????????

எனக்கும்  வெளிக்குத்தில்லாமல் எழுதத்தெரியும்.

அவர், எங்களைத்தான் சொல்கிறார் என நானும் கண்டு பிடித்தாலும்…
சண்டை பிடிக்கிற… “மூட்” இல்லாததால்… காணாத மாதிரி கடந்து போய் விட்டேன்.
நீங்கள்… “பப்ளிகுட்டியிலை” பட்டென்று போட்டு உடைத்து விட்டீர்கள். 🤣😂😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஏன் இப்ப மட்டும்??????????

எனக்கும்  வெளிக்குத்தில்லாமல் எழுதத்தெரியும்.

அண்ணையவ,

சும்மா பகிடி விட்டனான். நோ டென்சன் பிளிஸ் 🙏🏾

2 hours ago, தமிழ் சிறி said:

அவர், எங்களைத்தான் சொல்கிறார் என நானும் கண்டு பிடித்தாலும்…
சண்டை பிடிக்கிற… “மூட்” இல்லாததால்… காணாத மாதிரி கடந்து போய் விட்டேன்.
நீங்கள்… “பப்ளிகுட்டியிலை” பட்டென்று போட்டு உடைத்து விட்டீர்கள். 🤣😂😜

கு சா அண்ணை - இப்ப மட்டும் என்ன வாழுதாம் என எழுதுவார் எண்டு நினச்சே பதிந்தேன்.

பதில் எதிர் பார்த்த மாரியே…🤣

# உன்னை நானறிவேன் என்னை அன்றி யாரறிவார்

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய உ. ப. ப செய்திகள்

1. ஜெனெரல் சுரோவிகின் பற்றிய கேள்விக்கு - பதில் அளிக்காமல், இது பற்றி பாதுகாப்பு அமைச்சிடம் வினவுங்கள் என்றார் கிரெம்ளின் பேச்சாளர் பெஸ்கொ. பாதுகாப்பு அமைச்சு பதில் தரவில்லை என கூறியதும், இது பற்றி சொல்ல  மேலும் எதுவும் இல்லை, என கேள்வியை தவிர்த்து கொண்டார்.

2. ஒரு வருடமாக வாக்னர் குழு போரிட்டு வெற்றி கொண்டபின் பக்மூட் நகரை ரஸ்ய இராணுவத்திடம் கையளித்தது. இந்த நகரின் அருகில் உள்ள உயரமான நிலபகுதிகள் இரெண்டை உக்ரேன் கையகப்படுத்தும் நிலையில் இருப்பதாயும், நகரையும் மீள கைப்பற்றும் நோக்கில் முன்னேறுவதாயும் கூறப்படுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.