Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, goshan_che said:

உக்ரேனின் அண்மைய முறியடிப்புத்தாக்குதல் (counter offensive) பலத்த எதிர்ப்பை சந்தித்ததாயும்.அதனால் 20% வரையான டாங்கிகளை உக்ரேன் இழந்ததாயும்.

இதன் பின் தாக்குதலை தாமதித்து/இடைநிறுத்தி - தன் தந்திரோபாயங்களை உக்ரேன் மீளாய்வு செய்ததாயும் நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.nytimes.com/2023/07/15/us/politics/ukraine-leopards-bradleys-counteroffensive.html?action=click&module=Well&pgtype=Homepage&section=US News

முன்னைய உக்ரேனிய/சோவியத் தாங்கிகளை போல அல்லாது மேற்கின் தாங்கிகள் தாக்குதலுக்கு உள்ளாகினாலும் உயிர் சேதத்தை குறைத்ததாய் இந்த செய்தி கூறுகிறது.

ரஸ்யா அமைந்துள்ள அரணை தகர்க்க உக்ரேனிய படை கடும் பிரயத்தனம் எடுக்க வேண்டி உள்ளதாயும், முதல் 15 கிமி முன்னேற்றம் மிக கடுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுவதாயும் கூறப்பட்டுள்ளது.

எனக்கென்னமோ ரஸ்யாவும் மேற்கும் உக்கிரேனில் தங்கட ஆயுதங்களை பரீட்சிப்பதாகப்படுகின்றது.

  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

எனக்கென்னமோ ரஸ்யாவும் மேற்கும் உக்கிரேனில் தங்கட ஆயுதங்களை பரீட்சிப்பதாகப்படுகின்றது.

நிச்சயமாக.  மேற்கு காசு வாங்கி கொண்டு ( கடனாக கொடுத்து) இலவசமாக பரீட்சித்துப்பார்கிறது.

இரஸ்யா காசு கொடுத்து வாங்கி (ஈரான்), உற்பத்தி செய்து பாவிக்கிறது கூடவே பரீட்சித்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் உறுதிப்படுத்தப்படாத, விருத்தி அடைந்து கொண்டிருக்கும் செய்தி.

கிரைமியா பாலத்தில் மீண்டும் வெடிப்பாம்.

சிலர் இது மாஸ்கோவில் ஒரு பாலம் எனவும் சொல்கிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

145ஆவது குந்தருகே (pillar) பாலம் உடைவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரைமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் பாலம் சேதமடைந்தது: இருவர் பலி

Published By: SETHU

17 JUL, 2023 | 11:17 AM
image
 
ரஷ்யாவினால் இணைத்துக்கொள்ளப்பட்ட, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தையும் ரஷ்ய பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பிரதான பாலத்தில் இடம்பெற்ற சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை கிரைமியா பாலத்தில் அவசர நிலையொன்று ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது என ரஷ்யாவின் பெல்கோரொட் பிராந்திய ஆளுனர் வியாசேஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவத்தில் ஒரு தம்பதியினர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் மகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இப்பாலத்தின் கிரைமியா பகுதி சேதமடைந்துள்ளது என ரஷ்ய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இசம்பவம் தொடர்பான விபரங்களை அவ்வவமைச்சு தெரிவிக்கவில்லை.

கிரைமியாவையும் ரஷ்யாவின் க்ராஸ்னோடார் பிராந்தியத்தையும் இணைக்கும் இப்பாலத்தில் மேற்படி சம்பவத்தைடுத்து, போக்குவரத்து நிறத்தப்பட்டுள்ளது என ரஷ்ய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/160195

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே நாளில் 83 இராணுவ பட்டாலியன்களை இழந்துள்ளதா ரஷ்யா!

வாக்னர் வாடகை இராணுவத்தினருடன் தொடர்புக்களை மேற்கொண்டு வந்ததாக கூறி ரஷ்ய இராணுவத்தின் உயரதிகாரிகள் சிலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் வாக்னர் வாடகை இராணுவதினரால் இடம்பெற்ற இராணுவ புரட்சியில் இவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறியே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் வாக்னர் படையின் இராணுவ புரட்சி நடவடிக்கை குறித்து ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அப்படியானால் வாக்னர் படைக்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையிலான தொடர்பை அந்நாட்டு புலனாய்வு பிரிவு அறிந்து வைத்திருக்கவில்லையா என்ற கேள்வி தற்போது உலக அரங்கில் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய புலனாய்வு பிரிவின் பலவீனங்கள் பற்றி கடந்த வருடம் ரஷ்ய ஆதரவாளர்கள் பல்வேறான முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

இவ்வாறு ரஷ்யாவின் இராணுவ புரட்சி தொடர்பிலான விடயங்கள் குறித்து அந்நாட்டு ஊடகங்களில் மாத்திரம் இல்லாது சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

ஆனால் ரஷ்யாவினதும் புடினினதும் உக்ரைன் மீதான வெற்றி ஆரவாரங்களுக்கு மத்தியில் நாம் கவனத்தில் எடுக்க தவறிய விடயங்களை அலசி ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்.     

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைனுடனான தானிய விநியோக உடன்படிக்கையிலிருந்து ரஸ்யா வெளியேறியுள்ளதை தொடர்ந்து சர்வதேச உணவு விநியோகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த உடன்படிக்கை சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலைகளின் ஸ்திரதன்மையை பேணுவதற்கு மிகவும் முக்கியமானதாக காணப்பட்டது. உக்ரைனின் ஏற்றுமதிகளை நம்பியிருக்கும் மூன்றாம் உலக நாடுகளிற்கும் நன்மையளிப்பதாக காணப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரைமியாவின் ரஷ்ய இராணுவத் தளத்தில் பாரிய தீ: 2000 பேர் வெளியேற்றம்

Published By: SETHU

19 JUL, 2023 | 02:01 PM
image
 
ரஷ்யாவினால் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரைமியா பிராந்தியத்திலுள்ள ரஷ்ய இராணுவத் தளமொன்றில் இன்று பாரிய தீ பரவியுள்ளது. 

இதனால்,  இராணுவத் தளத்துக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 2,000 இற்கும் அதிகமான மக்களை வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட கிரைமியாவின் ஆளுநர் சேர்ஜி அக்சியோனோவ் தெரிவித்துள்ளார். 

கீரோவ்ஸ்கி மாவட்டத்திலுள்ள இராணுவப் பயிற்சித் தளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து தவ்ரிதா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் மூடப்பட்டுள்ளது.

இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. 

இதேவேளை, தனது படையினர் கிரைமியா தீபகற்பத்தில் வெற்றிகரமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக மேற்படி தீயின் பின்னர் உக்ரேன் தெரிவித்துள்ளது.

'ஆக்கிரமிக்கப்பட்ட கிரைமியாவில் வெற்றிகரமான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்களும், ஆளணி இழப்புகளும் எதிரியினால் மறைக்கப்படுகின்றன' என உக்ரேனிய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கிலிலோ புதானோவ் தெரிவித்துள்ளார். 

உக்ரேனிய பிராந்தியமான கிரைமியாவை 2014 ஆம் ஆண்ட ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/160397

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரேன் போரின் போக்கை மாற்றுமா கொத்தணிக் குண்டுகள்?

Published By: VISHNU

16 JUL, 2023 | 06:07 PM
image
 
சுவிசிலிருந்து  சண் தவராசா

உக்ரேன் போரில் என்ன விலை தந்­தேனும் வெற்­றியைச் சுவைப்­பது எனத் திட­சங்கல்பத்­தோடு செயற்­படும் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தியம் அடுத்த துருப்புச் சீட்­டாக தடை செய்­யப்­பட்ட கொத்­தணிக் குண்­டு­களை உக்ரேனுக்கு வழங்க முடிவு செய்­துள்­ளது.

Biden-_Thavarajah.jpg

உலகின் 110 இற்கும் அதி­க­மான நாடு­களால் தடை ­செய்­யப்­பட்ட அத்­த­கைய குண்டை வழங்க வேண்­டிய தேவை என்ன என்­ப­தற்கு அமெ­ரிக்கத் தரப்பில் கூறப்­பட்­டுள்ள கார­ணமோ விசித்­தி­ர­மா­னது. ‘உக்ரேன் போரில் ரஷ்­யாவின் வெற்றி மனித குலத்­துக்கே ஒவ்­வா­தது. அத்­த­கைய வெற்­றியைத் தடுப்­ப­தாயின் கொத்­தணிக் குண்­டு­களை வழங்­கியே ஆக­வேண்டும்.’ இதுவே அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு.

அமெ­ரிக்கா கூறு­வதைப் போன்று போரில் ரஷ்­யாவின் வெற்றி என்­பது மனித குலத்­துக்கே எதி­ரா­னது என வைத்துக் கொண்­டாலும் கூட, அத்­த­கைய மனித குலத்­துக்கே எதி­ரான ஒன்றைத் தடுப்­ப­தற்­காக மனித குலத்­துக்கே விரோ­த­மா­னது என முடிவு செய்­யப்­பட்ட ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்­து­வது எந்த வகையில் நியாயம் எனப் புரி­ய­வில்லை. இத்­த­னைக்கும், நேற்­று­வரை அதன் பாவ­னைக்கு எதி­ராகக் குரல் கொடுத்துக் கொண்­டிருந்த  நாடு அமெ­ரிக்கா.

உக்ரேன்  போர் ஆரம்­ப­மான காலப்­ப­கு­தியில் போரில் ரஷ்யா கொத்­தணிக் குண்­டு­களைப் பாவிக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்டை வைத்து அதனை வன்­மை­யாகக் கண்­டித்­தி­ருந்­தது அந்­நாடு. ஆனால், ஒரு வருட இடை­வெ­ளி­யினுள் அதே கொத்­தணிக் குண்­டு­களை உக்ரேனுக்குப் பரி­ச­ளிக்­கின்­றது என்றால் அமெ­ரிக்­காவின் மனி­த­நே­யத்தின் அள­வீ­டுதான் என்ன என்ற கேள்வி எழு­கின்­றது.

‘சய’வும் ‘சய’வும் சேர்ந்தால் ‘சக’­வா­கி­விடும் எனக் கணி­தத்தில் ஒரு சமன்­பாடு இருக்­கி­றது. இரண்டு ‘மைனஸ்’கள் சேரும்­போது ஒரு ‘பிளஸ்’ வந்­து­விடும் என்­பது கணி­தத்தில் ஏற்றுக் கொள்­ளப்­படக் கூடி­ய­தாக இருக்­கலாம். அதற்­காக தீயதும் தீயதும் இணைந்தால் நல்­லது நடை­பெறும் என அதனை வியாக்­கி­யானம் செய்­வது தவறு.

அமெ­ரிக்கா எது செய்­தாலும் அதனைச் சரி என ஏற்றுக் கொள்ளும் புத்­தி­சா­லிகள்(?) அநேகர் உலகில் உள்­ளனர். அவர்­களைப் பொறுத்­த­வரை ரஷ்ய அபா­யத்தில் (?) இருந்து உக்ரேனைப் பாது­காக்க ஒரே வழி இறுதி ஆயு­த­மான (?) கொத்­தணிக் குண்­டு­களை வழங்­கு­வதே. ஆனால், இதில் அறம், மனித மாண்பு என்­பவை எங்கே உள்­ளன?

நவீன உலகில் அதி­க­மான நாடு­களில் போர்­களை நடத்­திய நாடு, தொடர்ந்தும் போர்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்ற நாடு எது­வெனக் கேள்வி கேட்டால் அது அமெ­ரிக்கா எனச் சிறு­பிள்ளை கூடச் சொல்­லி­விடும்.

அதுவே, அமெ­ரிக்­காவின் வர­லாறு. இன்று கூட உலகின் பல பாகங்­களில் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் அமெ­ரிக்­காவின் போர்கள் நடை­பெற்றுக் கொண்டே இருக்­கின்­றன. ஓய்­வில்­லாமல் தொடரும் இத்­த­கைய போர்­களில் அமெ­ரிக்­காவின் மீது பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் போர்க் குற்­றச்­சாட்­டுகள் முன் ­வைக்­கப்­பட்டு உள்­ளன. அவற்றுள் ஒரு சில­வற்றை மறு­த­லித்­துள்ள அமெ­ரிக்கா பல­வற்றைச் சட்டை செய்­த­தே­யில்லை.

ஆனால், ஏனைய நாடுகள் குறிப்­பாகத் தனக்குப் பிடிக்காத நாடுகள் ஒரு சிறிய தவறை இழைத்தால் கூட அதனை ஊதிப் பெருப்­பித்து, மிகப் பாரிய குற்­ற­மாக உலகின் கண்­க­ளுக்குத் தெரிய வைப்­பதில் அமெ­ரிக்க அர­சாங்­கமும் அதன் ஊது­கு­ழல்­க­ளான ஊட­கங்­களும் வரிந்து கட்­டிக்­கொண்டு இருப்­ப­தையும் தொடர்ச்­சி­யாகப் பார்க்க முடி­கின்­றது.

கொத்­தணிக் குண்­டு­களைப் பொறுத்­த­வரை அவை ஒரு குண்டில் இருந்து பல நூற்றுக் கணக்­கான சிறிய குண்­டு­களை வீசி அடிக்கக் கூடிய தன்மை வாய்ந்­தவை. அவ்­வாறு வீசி அடிக்­கப்­படும் சிறிய குண்­டுகள் அனைத்தும்  உட­ன­டி­யாக வெடித்து விடாது. பல வரு­டங்கள் கூட  வெடிக்­காமல் இருக்கும்.

அத்­த­கைய குண்­டு­களைக் கண்­டு­பி­டித்து அகற்­று­வதும் கடி­ன­மான விடயம். அவ்­வாறு வெடிக்­காத குண்­டுகள் எப்­போது வேண்­டு­மா­னாலும் வெடிக்­கலாம். போர் முடி­வுக்கு வந்து பல ஆண்­டு­களின் பின்பு கூட அவை வெடிப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. இத்­த­கைய அம்­சத்தைக் கருத்தில் கொண்டே 2008ஆம் ஆண்டில் இத்­த­கைய குண்­டு­களின் பாவ­னையைத் தடுக்கும் ஐ.நா. பட்­டயம் வெளி­யி­டப்­பட்­டது. அதனை அப்­போது 110 நாடுகள் ஏற்­றுக்­கொண்டு அங்­கீ­க­ரித்­தி­ருந்­தன.

அந்தப் பட்­ட­யத்தை ஏற்­றுக்­கொண்ட அமெ­ரிக்­காவின் நட்பு நாடு­க­ளான ஸ்பெயின், பிரித்­தா­னியா, கனடா, நியூ­சி­லாந்து மற்றும் அவுஸ்­திரேலியா ஆகி­யவை அமெ­ரிக்­காவின் தற்­போ­தைய முடிவைக் கண்­டித்­துள்­ளன. ஜேர்மனி  நாடு அமெ­ரிக்­காவின் முடிவை நேர­டி­யாகக் கண்­டிக்­காத போதிலும் கொத்­தணிக் குண்­டு­களை தான் உக்ரே­னுக்கு வழங்கப் போவ­தில்லை எனத் தெரி­வித்­துள்­ளது. சர்­வ­தேச மன்­னிப்புச் சபை உள்­ளிட்ட மனித உரிமை அமைப்­புகள் ஒரு சிலவும் அமெ­ரிக்­காவின் முடி­வுக்குக் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன. எனி­னும்,  அவை யாவும் வழக்கம் போலவே அமெ­ரிக்­காவால் கண்டு கொள்­ளாமல் விடப்­படும் என்­பது தெரிந்­ததே.

ஒரு வகையில் சொல்­வ­தானால் - அமெ­ரிக்­கா­வுக்­கான ரஷ்யத் தூதுவர் அனொட்­டலி அன்­ரனவ் கூறி­யதைப் போன்று - அமெ­ரிக்கா ஒரு கையறு நிலைக்குச் சென்­று­விட்­டது போலவே தென்­ப­டு­கின்­றது.

மறு­புறம், ரஷ்யப் படைத்­துறை அமைச்சர் சேர்கை சொய்கு இது தொடர்பில் கார­சா­ர­மாகக் கருத்து வெளி­யிட்­டுள்ளார். கொத்­தணிக் குண்­டு­களை உக்ரேன் பாவித்தால் பதி­லுக்கு ரஷ்­யாவும் தன்­னிடம் உள்ள அத்­த­கைய குண்­டு­களைப் பாவிக்க வேண்­டிய நிலை உரு­வாகும் என அவர் எச்­ச­ரித்­துள்ளார்.

அதே­வேளை, கொத்­தணிக் குண்­டுகள் உக்ரேன் போரின் முடி­வு­களை மாற்ற மாட்­டாது என ரஷ்யா அழுத்தம் திருத்­த­மாகக் கூறி­யுள்­ளது.

உக்ரேன் போர் ஆரம்­ப­மான நாள் முத­லா­கவே, இந்தப் போர் மூன்றாம் உலகப் போருக்கு வழி சமைக்கக் கூடும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையை முழு உலகுமே அறியும். உக்ரேன் போரில் எதனை இழந்தாவது வெற்றியை மாத்திரமே சுவைக்க வேண்டும் என நினைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய மனோநிலை நாளை ரஷ்யாவுக்கு எதிராக படைகளை அனுப்பி வைப்பதற்கும், முடிவில் அணுகுண்டுகளைப் பாவிக்கும் நிலைக்கும் கூட வித்திடலாம்.

அத்தகைய ஒரு நிலை உருவானால் உலகம் முழுவதுமாக அழிந்தே போகும். பின்னர் உக்ரேன் போரைப் பற்றிக் கவலைப்பட அமெரிக்காவும் இருக்காது, மேற்குலகும் இருக்காது.

https://www.virakesari.lk/article/160163

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ஏராளன் said:

எழுத்தாளர் இன்னும் சிவப்பு சட்டையில் தான் திரிகிறார் போலும்?

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யர்களே கழட்டி மடித்து வைத்த சிவப்புச் சட்டையோடு "நடுநிலை" நாடான சுவிசிலிருந்து எழுதியிருக்கிறார். ரஷ்யா "உக்ரைன் பாவித்தால், நானும் பாவிப்பேன்" என்று சொன்னதை, "ரஷ்யா இது வரை பாவிக்கவேயில்லை" என்று நம்பி எழுதுகிறார் - அங்க நிற்கிறார் ஆய்வாளர்!😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

சய’வும் ‘சய’வும் சேர்ந்தால் ‘சக’­வா­கி­விடும் எனக் கணி­தத்தில் ஒரு சமன்­பாடு இருக்­கி­றது

இது எப்பல இருந்து! 😂 வாசிச்சு சிரிக்கத்தான் முடிகின்றது. 😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செய்திகளுக்குத் திரும்பினால், தென்னாபிரிக்காவில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு புரின் வரமாட்டாராம், அவருக்குப் பதிலாக ரஷ்ய வெளிநாட்டமைச்சர் லவ்ரோவ் வருவாராம். பிபிசி சொல்கிறது.

https://www.bbc.com/news/world-africa-66247067

ரஷ்யாவைப் பகைக்கவும் முடியாமல், மேற்கின் ஆக்கினையை உதறவும் முடியாமல் தென்னாபிரிக்கா தவிக்கிறதெனத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/7/2023 at 07:11, ஏராளன் said:

கிரைமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் பாலம் சேதமடைந்தது: இருவர் பலி

Published By: SETHU

17 JUL, 2023 | 11:17 AM
image
 
ரஷ்யாவினால் இணைத்துக்கொள்ளப்பட்ட, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தையும் ரஷ்ய பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பிரதான பாலத்தில் இடம்பெற்ற சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை கிரைமியா பாலத்தில் அவசர நிலையொன்று ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது என ரஷ்யாவின் பெல்கோரொட் பிராந்திய ஆளுனர் வியாசேஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவத்தில் ஒரு தம்பதியினர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் மகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இப்பாலத்தின் கிரைமியா பகுதி சேதமடைந்துள்ளது என ரஷ்ய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இசம்பவம் தொடர்பான விபரங்களை அவ்வவமைச்சு தெரிவிக்கவில்லை.

கிரைமியாவையும் ரஷ்யாவின் க்ராஸ்னோடார் பிராந்தியத்தையும் இணைக்கும் இப்பாலத்தில் மேற்படி சம்பவத்தைடுத்து, போக்குவரத்து நிறத்தப்பட்டுள்ளது என ரஷ்ய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/160195

புலிகள் சொறீலங்கா இராணுவப் பயன்பாட்டில் இருந்த.. மதகுக்கு குண்டு வைச்சால்.. பாலத்தை தகர்த்தால்.. மின்மாற்றிகளை தகர்த்தால்.. பயங்கரவாதம் என்ற பிளேக் ஐயா எங்க போயிட்டார். அதை தானே இப்ப உக்ரைனில நின்று இவை செய்யினம். ரஷ்சியா திருப்பிச் செய்தால்.. ஏன் மேற்குலக ஊடகங்கள்.. ஐயோ அம்மா என்று கத்தி குளறுகின்றன. அதே தாங்கள் ரஷ்சியாவுக்கு செய்தால்.. வெற்றி வெற்றி. என்ன ஒரு மனோநிலை.. மேற்குலகத்திடம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

சுவிசிலிருந்து  சண் தவராசா

நானும் ரஷ்யாவில் இருந்து ஒரு தமிழ் ராசாவோ, பெலருஸ்சில் இருந்து தமிழ் குமார், வட கொரியாவில் இருந்து தமிழ் சண் தமிழில் ஆய்வு கட்டுரை எழுதுவார்கள் சிரிக்காமல் சீரியசாக படிக்கலாம் என்று ஆவலுடன் பார்த்து கொண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, வாலி said:

இது எப்பல இருந்து! 😂 வாசிச்சு சிரிக்கத்தான் முடிகின்றது. 😂

ஒரு மனுசன கட்டுரை கூட எழுதவிடுறாங்களில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, நந்தன் said:

ஒரு மனுசன கட்டுரை கூட எழுதவிடுறாங்களில்லை

அவர் இன்னும் பூமி தட்டையானது என்ற இடத்தில் இருந்து வருகிறார் இல்லையே??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நந்தன் said:

ஒரு மனுசன கட்டுரை கூட எழுதவிடுறாங்களில்லை

1 hour ago, விசுகு said:

அவர் இன்னும் பூமி தட்டையானது என்ற இடத்தில் இருந்து வருகிறார் இல்லையே??

பகிடிக்குத் தான் இரண்டு பேரும் சொல்லியிருக்கிறீர்களென்றாலும், இந்த சமூக வலைத் தளங்களில் வரும் போலித் தகவல்களை ஆதாரமாக வைத்துக் கட்டுரை எழுதும் ஆய்வாளர்களால் தான் புலம் பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு வேரூன்றியது. சில கட்டுரைகள் deadpan comedy போல இருக்கும்: உதாரணமாக பதிவுகள் இணையத்தில் ஒரு வருடம் முன்பு, ஜோதிகுமார் என்ற சிவப்புப் சட்டைக்காரர் எழுதியிருக்கும் தகவலைப் பாருங்கள்:

"....போரின் மூன்றாவது சுற்று இப்படியாய் முடிவடைந்த நிலையில் அடுத்த நான்காவது சுற்று, ரஷ்யாவின் இலத்திரனியல்-மின்னியல் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டது. எலன்-மஸ்க் (Elon Musk) தனது Starlink செய்மதிகளை உக்ரைனுடன் தொடர்புபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவைப்படும் Terminalகளையும் உக்ரைனுக்கு தந்துதவி ரஷ்ய தாக்குதல்களால் செயலிழந்து போன உக்ரைன் அலைவரிசைகளை மீள உயிர்ப்பிக்க உதவப் போவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யா, கீவ்வின் மிக உயர்ந்த தொலைதொடர்பு கோபுரத்தை துல்லிய குண்டுவீச்சுகளால் தாக்கியழித்து, அங்கே பணியாற்றிய ஐந்து ஊழியரையும் கொன்றொழித்து விட்டதாய் உக்ரைனே அறிவித்தது. அதாவது எலன் மஸ்க்கின், Starlink செய்மதிகளின் தொடர்பாடல், ரஷ்யா படைத்தரப்பால் ஏட்டிக்குப் போட்டியான நிலையில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பதிலடியான நடைமுறை மேற்கொண்டதன் மூலம், மேற்படி நான்காம் சுற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போரை, விண்வெளி நோக்கி விஸ்தரிக்க எடுக்கப்பட்ட நகர்வு, முதலடியிலேயே நிறுத்தப்பட்டது"

அதாவது, உக்ரைனின் வானலை வழி தொலைத்தொடர்பை ரஷ்யா குறிவைத்துத் தாக்கி வந்த நிலையில், செய்மதி மூலம் உக்ரைனை வெளியுலகோடு இணைக்கும் நோக்கில் Starlink வழங்கப் படுகிறது. "உள்ளூர் வானலைக் கோபுரத்தை அழித்ததால், ரஷ்யா செய்மதித் தொடர்பை அழித்து விட்டதாக ஜோதிகுமார் எழுதுகிறார். இது தொழில்னுட்பம் புரியாமையா அல்லது, "வாசிப்பவர்கள் கேனையர்கள்" என்ற நம்பிக்கையா என்பது இவர் போன்ற கட்டுரையாளர்களுக்கே வெளிச்சம்! 😂

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

இது போன்ற வீடியோக்களை நான் பார்ப்பதில்லை. நான் கொஞ்சம் இளகிய மனம் கொண்டவன்😜

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்யாவின் உக்ரைன் மீதான சட்டவிரோத போரிற்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிராக மேலும் தடைகள் - அவுஸ்திரேலியா அறிவிப்பு

Published By: RAJEEBAN

20 JUL, 2023 | 12:19 PM
image
 
உக்ரைன் மீது ரஸ்யா படையெடுப்பதற்கு உதவிய ரஸ்யாவை சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு  எதிராக  அவுஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது.

ரஸ்யாவின்  பாதுகாப்பு தொழில்நுட்பம்  வலுச்சக்தி துறையை சேர்ந்த 35 அமைப்புகள் ரஸ்ய அமைச்சர்கள் சிரேஸ்ட அதிகாரிகள் பத்து பேருக்கு எதிராக  அவுஸ்திரேலியா தடைகளை அறிவித்துள்ளது.

சர்வதேச சகாக்களுடனான இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுபவர்களை இது தடுக்கும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இன்றைய தடைகள் ரஸ்யாவின் மீதும் அதன் சட்டவிரோத ஒழுக்கநெறியற்ற யுத்தத்தை ஆதரிப்பவர்கள் மீது அழுத்தங்களை தொடர்வது குறித்த அவுஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்தியுள்ளது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தடைகள் உக்ரைனிற்கும் அதன் இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டிற்குமான  அவுஸ்திரேலியாவின் ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/160470

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்கா வழங்கிய கொத்துக்குண்டுகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

21 JUL, 2023 | 12:49 PM
image
 
உக்ரைன் தான் வழங்கிய கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு  பேச்சாளர் ஜோன்கிர்பி இதனை தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் பாதுகாப்பு முன்னரங்குகள் மற்றும் நடவடிக்கைகளிற்கு எதிராக  உக்ரைன் கொத்துக்குண்டுகளை  பயன்படுத்துகின்றது அது பலனளிக்கின்றது என  ஜோன்கிர்பி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் உரிய விதத்தில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர்கள் அதனை பலன் அளிக்ககூடிய விதத்தில் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட நாடுகள் கொத்துக்குண்டுகளை தடைசெய்துள்ளன.

உக்ரைனின் வெடிபொருட்களை வலுப்படுத்துவதற்காக கொத்துக்குண்டுகளை அமெரிக்கா உக்ரைனிற்கு வழங்கியுள்ளது.

ரஸ்ய படையினரின் நிலைகளை அழிப்பதற்கு மாத்திரம்  கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாக உக்ரைன் உறுதியளித்துள்ளது.

https://www.virakesari.lk/article/160571

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/7/2023 at 17:36, வாலி said:

இது எப்பல இருந்து! 😂 வாசிச்சு சிரிக்கத்தான் முடிகின்றது. 😂

இதெல்லாம் இராஜதந்திர கணக்கு, உங்களை போன்ற சாமன்யர்களுக்கு விளங்காது🤣.

பிகு

இந்த மாதிரி கட்டுரைகளை எல்லாம் வரிக்கு வரி படிக்கும் உங்கள் பொறுமைக்கு ஒரு சபாஷ்.

21 hours ago, Justin said:

பகிடிக்குத் தான் இரண்டு பேரும் சொல்லியிருக்கிறீர்களென்றாலும், இந்த சமூக வலைத் தளங்களில் வரும் போலித் தகவல்களை ஆதாரமாக வைத்துக் கட்டுரை எழுதும் ஆய்வாளர்களால் தான் புலம் பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு வேரூன்றியது. சில கட்டுரைகள் deadpan comedy போல இருக்கும்: உதாரணமாக பதிவுகள் இணையத்தில் ஒரு வருடம் முன்பு, ஜோதிகுமார் என்ற சிவப்புப் சட்டைக்காரர் எழுதியிருக்கும் தகவலைப் பாருங்கள்:

"....போரின் மூன்றாவது சுற்று இப்படியாய் முடிவடைந்த நிலையில் அடுத்த நான்காவது சுற்று, ரஷ்யாவின் இலத்திரனியல்-மின்னியல் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டது. எலன்-மஸ்க் (Elon Musk) தனது Starlink செய்மதிகளை உக்ரைனுடன் தொடர்புபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவைப்படும் Terminalகளையும் உக்ரைனுக்கு தந்துதவி ரஷ்ய தாக்குதல்களால் செயலிழந்து போன உக்ரைன் அலைவரிசைகளை மீள உயிர்ப்பிக்க உதவப் போவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யா, கீவ்வின் மிக உயர்ந்த தொலைதொடர்பு கோபுரத்தை துல்லிய குண்டுவீச்சுகளால் தாக்கியழித்து, அங்கே பணியாற்றிய ஐந்து ஊழியரையும் கொன்றொழித்து விட்டதாய் உக்ரைனே அறிவித்தது. அதாவது எலன் மஸ்க்கின், Starlink செய்மதிகளின் தொடர்பாடல், ரஷ்யா படைத்தரப்பால் ஏட்டிக்குப் போட்டியான நிலையில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பதிலடியான நடைமுறை மேற்கொண்டதன் மூலம், மேற்படி நான்காம் சுற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போரை, விண்வெளி நோக்கி விஸ்தரிக்க எடுக்கப்பட்ட நகர்வு, முதலடியிலேயே நிறுத்தப்பட்டது"

அதாவது, உக்ரைனின் வானலை வழி தொலைத்தொடர்பை ரஷ்யா குறிவைத்துத் தாக்கி வந்த நிலையில், செய்மதி மூலம் உக்ரைனை வெளியுலகோடு இணைக்கும் நோக்கில் Starlink வழங்கப் படுகிறது. "உள்ளூர் வானலைக் கோபுரத்தை அழித்ததால், ரஷ்யா செய்மதித் தொடர்பை அழித்து விட்டதாக ஜோதிகுமார் எழுதுகிறார். இது தொழில்னுட்பம் புரியாமையா அல்லது, "வாசிப்பவர்கள் கேனையர்கள்" என்ற நம்பிக்கையா என்பது இவர் போன்ற கட்டுரையாளர்களுக்கே வெளிச்சம்! 😂

ஜோதி மீனா, சை…குமார்… போல பல, ஸ்மிதாக்கள், சாந்திகள், குயிலிகள் தான் தமிழ்கூறு நல்லுலகில் இதை பற்றி எழுதுகிறார்கள்.

யாழ் களத்துக்கு அப்பால், வேறு எங்கும் தரவு அடிப்படையில் இந்த விடயத்தை அணுகி, தமிழில் நான் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஏராளன் said:

அமெரிக்கா வழங்கிய கொத்துக்குண்டுகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

21 JUL, 2023 | 12:49 PM
image
 
உக்ரைன் தான் வழங்கிய கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு  பேச்சாளர் ஜோன்கிர்பி இதனை தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் பாதுகாப்பு முன்னரங்குகள் மற்றும் நடவடிக்கைகளிற்கு எதிராக  உக்ரைன் கொத்துக்குண்டுகளை  பயன்படுத்துகின்றது அது பலனளிக்கின்றது என  ஜோன்கிர்பி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் உரிய விதத்தில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர்கள் அதனை பலன் அளிக்ககூடிய விதத்தில் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட நாடுகள் கொத்துக்குண்டுகளை தடைசெய்துள்ளன.

உக்ரைனின் வெடிபொருட்களை வலுப்படுத்துவதற்காக கொத்துக்குண்டுகளை அமெரிக்கா உக்ரைனிற்கு வழங்கியுள்ளது.

ரஸ்ய படையினரின் நிலைகளை அழிப்பதற்கு மாத்திரம்  கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாக உக்ரைன் உறுதியளித்துள்ளது.

https://www.virakesari.lk/article/160571

கொத்து குண்டுகளின் தாக்கம் போர்முனையில் தெரிய ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.

அண்மையில் ஒரு உக்ரேனிய தளபதியின் பேட்டி கேட்டேன் - ஒரு போதும் சனநடமாட்டம் உள்ள இடங்களில் இவை பாவிக்கப்பட மாட்டாது - ஏன்றால் அந்த சனங்கள் உக்ரேனிய குடிகள் என கூறுகிறார்.

காலம்தான் உண்மை எதுவென காட்டும்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

இதெல்லாம் இராஜதந்திர கணக்கு, உங்களை போன்ற சாமன்யர்களுக்கு விளங்காது🤣.

பிகு

இந்த மாதிரி கட்டுரைகளை எல்லாம் வரிக்கு வரி படிக்கும் உங்கள் பொறுமைக்கு ஒரு சபாஷ்.

ஜோதி மீனா, சை…குமார்… போல பல, ஸ்மிதாக்கள், சாந்திகள், குயிலிகள் தான் தமிழ்கூறு நல்லுலகில் இதை பற்றி எழுதுகிறார்கள்.

யாழ் களத்துக்கு அப்பால், வேறு எங்கும் தரவு அடிப்படையில் இந்த விடயத்தை அணுகி, தமிழில் நான் காணவில்லை.

இது தான் என் அவதானிப்பும். ஏனைய தளங்களில், ரஷ்ய உக்ரைன் யுத்தம் பற்றி எழுதப் பட்டிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள், ஆய்வுகள் எதையும் கூர்மையாக நேரம் செலவழித்து வாசித்தறிந்த பின் எழுதப்பட்டவையாக எனக்குத் தெரியவில்லை. இவற்றை மிக இலகுவாகக் கண்டு பிடிக்க ஒருவழி, சமூக வலை ஊடகங்களில் மிதந்து திரியும் cliche எல்லாம் ஏதோ வரலாற்றின் அரிய தரவுகள் போல மீள ஒப்புவிக்கப் பட்டிருக்கும். மேலே ஒரிஜினல் கட்டுரையாளரின் இந்த வசனம் ஒரு உதாரணம்:

"...நவீன உலகில் அதி­க­மான நாடு­களில் போர்­களை நடத்­திய நாடு, தொடர்ந்தும் போர்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்ற நாடு எது­வெனக் கேள்வி கேட்டால் அது அமெ­ரிக்கா எனச் சிறு­பிள்ளை கூடச் சொல்­லி ­விடும்"

இதை ஒப்புவித்த சிலரிடம் நான் கேட்டிருக்கிறேன்: சரி, இரண்டாம் உலகப் போரின் பின் உலகில் நிகழ்ந்த யுத்தங்கள் மொத்தமாக எத்தனை? அதில் அமெரிக்கா/நேட்டோவினால் ஆரம்பிக்கப் பட்டவை எத்தனை?

இரண்டிற்கும் பதில் கிடைக்காது. "நீ மேற்கின் அடிவருடி!" என்ற மூலையில் போய் நிற்பார்கள்😂

  • Like 1
  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.