Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்கள் ஓரு அதிகாரமும் தரமாட்டார்கள். ரணில் அளப்பல் வேலை செய்து கொண்டிருக்கிறார்.மற்றவர்களைக்கதைக்க விடாமல் கதைத்துக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆயுதம் தாங்கிய சொறீலங்காப் படைகளையும் படைமுகாம்களையும் வைச்சுக் கொண்டு.. அவற்றின் துணை ஆயுதக் குழுக்களையும் கூட வைச்சுக்கொண்டு.. ஆயுதம் தாங்கிய குண்டர் குழுக்களையும்.. காடையர்களையும் வைச்சுக்கொண்டு.. எப்படி ஆயுதமற்ற பொலிஸ் அதிகாரம் மூலம் திறமையான நீதியான சிவில் நிர்வாகத்தை அமுல்படுத்த முடியும்.. ஒரு முன்னாள் தலைமை நீதிபதிக்கு இது கூடவா புரியவில்லை..??!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, satan said:

அங்கேயும் தமிழ்ப்பொலிஸுக்கு ஒரு அதிகாரம், சிங்களபொலிஸுக்கு வேறொரு அதிகாரமா? அவர்களும் பொல்லை பாவிக்கட்டும் அப்போ நான் விமர்சகப்போவதில்லை.

பேரத்தில், (குறிப்பாக சிங்களத்துடன்),  ஒரு பக்கத்தால் கொடுத்து இன்னொருபக்கத்தால் எடுக்கவிடாது, அதை அடைத்து , பேர விலகல் வழியை அடைத்து,  தப்பவிடாது, அழுங்குப்பிடி போடும் ஒருவரை முதல் தடவை பார்க்கிறேன். 

இது தான் முதலாவது.  

நீங்கள் யதார்த்ததுடன், வரலாற்றையும் பாடமாக எடுத்து சிந்திக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச அதிகாரம் கிடைத்தால்; அவைகளை வெளியேற்ற முடியுமோ என்னோ....?.

3 hours ago, nedukkalapoovan said:

ஆயுதம் தாங்கிய சொறீலங்காப் படைகளையும் படைமுகாம்களையும் வைச்சுக் கொண்டு.. அவற்றின் துணை ஆயுதக் குழுக்களையும் கூட வைச்சுக்கொண்டு.. ஆயுதம் தாங்கிய குண்டர் குழுக்களையும்.. காடையர்களையும் வைச்சுக்கொண்டு.. எப்படி ஆயுதமற்ற பொலிஸ் அதிகாரம் மூலம் திறமையான நீதியான சிவில் நிர்வாகத்தை அமுல்படுத்த முடியும்.. ஒரு முன்னாள் தலைமை நீதிபதிக்கு இது கூடவா புரியவில்லை..??!

 இதைத்தான் நான் கருத்தில் எடுத்து பதிந்தேன், ஆனால் விளங்கப்படுத்த தெரியவில்லை. அப்படி அவைகளை வெளியேற்றவோ அல்லது அவர்களும் பொல்லு தாங்கவோ சிங்களம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அவர்கள் நம்மை குற்றம் சொல்லி பேச்சு வார்த்தையை குழப்பமுதல் அவர்கள் வைத்த பொறியில் அவர்களை மாட்ட வைக்கும் செயலாக விக்கினேஸ்வரன் ஐயா அப்படி சொல்லியிருக்கலாமோ என்னவோ?

5 hours ago, புலவர் said:

மற்றவர்களைக்கதைக்க விடாமல் கதைத்துக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் காலங்காலமாக ஆடும் ஆட்டம் காலாவதிஆகிறது மாற்றம் தேவைப்படுகிறது. ஆனால் அதை ஏற்க அவர்கள் தயாரில்லை, ஆகவே தமிழரை கதைக்க விடாமல் தாம் நினைத்ததை திணித்தல் அல்லது அவர்களை குற்றம் சொல்லி கலைத்தல், அந்த பதட்டம், அலட்சியம், கிண்டல்  அவரில் தெரிகிறது. அண்மையில் லண்டன் சென்றிருந்தபோது, தமிழ் உறவுகளை சந்தித்திருந்தார். அங்கே ஒரு உறவு தம் பிரச்சனைகளை தெளிவு படுத்திக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட நரி, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் சொல்லுங்கள் நான் விளங்கிக்கொள்கிறேன் என்று கூறியதும், குறிப்பிட்ட நபர் அவரது வேண்டுகளுக்கிணங்கி தொடரும்போது, அணிலாரின் முகபாவனை அணிலேற விட்ட என்னவோ மாதிரி இருந்தது. அவருக்கு தமிழ் விளங்கவில்லை என்பதையே காட்டியது. மொத்தத்தில் அவரை ஏளனம் செய்ய வெளிக்கிட்டு தன்னை தான் ஏமாற்றிக்கொண்டார்,.ஒரு நாட்டின் தலைவர், பாதிக்கப்ட்ட மக்களை சந்திக்க போகிறார் இன்னொரு நாட்டில், அவர்களின் மொழித்திறமை, தனது புரியும் பிரச்சனை தெரிந்தவர், மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்திருக்க வேண்டுமோ இல்லையோ?தன்னோடு பேசுபவரை கவனிக்க, உற்றுக்கேட்க அவர் கவனம் செலுத்தவில்லை மாறாக அவரை கேலி பண்ணி, மற்றவர்களை சிரிக்க வைத்து, கைத்தட்டு வாங்கி,   தன்னை நகைச்சுவையாளனாகவோ, சிறந்த தலைவனாகவோ காட்ட முயற்சிக்கிறார். தன்னோடு பேசுகிறவருக்கு கவனம் கொடுப்பத்தைவிட்டு, சுற்றியிருப்போரை கவர்வதிலும் பாராட்டு பெறுவதிலுமே அவரது கவனம் செல்கிறது. அவர்களை மகிழ்விப்பதே கவனமாய் இருக்கிறார். இவர் ஒரு தலைவனாக மட்டுமல்ல ஒரு பகுத்தறிவுள்ள மனிதனாக கூட கொள்ள முடியவில்லை. அந்த மக்களின் பிரச்சனையை கேட்பதிலோ தீர்ப்பதிலோ அவர் முயற்சி செலுத்துவதில்லை, தன்னை ஒரு சிறந்த சிங்கள தலைவராக காட்டி, தமிழரை பேச்சுவார்த்தையிலிருந்து விரட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளார். அதில், தான் வென்றுவிட பயமும் பதட்டமும் தட்டிக்கழித்தலும்  அதிகம் காட்டுகிறார். மஹிந்தா, ஆயுதத்தை முறியடித்தால் இவர் பேச்சுவார்த்தையில்தமிழரை முறியடித்து இலங்கையை சிங்கள பௌத்த பூமியாக்கி மாமனாரின் கனவை நனவாக்க முயற்சிக்கிறார். இறுதியில் ஜே .ஆரின் மரணம் அரசியல் தலைவருக்கான மரியாதை கூட செலுத்தப்படவில்லையாம், சந்திரிகாவின் காலத்தில் நடைபெற்றபடியால் தனது தாயாரின் குடியுரிமையை பறித்த பழிவாங்கலாக செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் தம்மை தலைவராக வரலாற்றில் இடம்பிடிக்க நினைத்து செய்வதெல்லாம் எதிரான நிலைப்பாட்டையே பிரதிபலிக்கப்போகுது. மக்கள் மாறுகிறார்கள், மனங்களும் மாறும்! 

6 hours ago, புலவர் said:

மற்றவர்களைக்கதைக்க விடாமல் கதைத்துக் கொண்டிருக்கிறார்.

டக்கியரின் பேட்டிகளை கவனித்தால் புரியும், மற்றவர்களை பேச விடவோ, அவர்கள் பேசுவதை கவனிக்கவோ மாட்டார். தான் பாடமாக்கிக்கொண்டு வந்ததை ஒப்புவிப்பதிலேயே கவனமாக இருப்பார். கேட்போருக்கு எரிச்சலை ஏற்படுத்தும், ஒரு, சபை இங்கிதம் கூடத்தெரியாதவர்கள்!      

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/7/2023 at 18:29, புலவர் said:

May be an image of 1 person and text that says "துப்பாக்கி இல்லாத லத்தியுடன் கூடிய பொலிஸ் அதிகாரத்திற்கு பச்சைக்கொடி"

May be an image of 5 people

அதானே நம்ம கஜே கஜேஸ் F16 விமானம், லெபேர்ட் டாங்கி, கொத்து குண்டு சகிதம் ஒரு பொலீஸ் அதிகாரத்தை ரணிலை மிரட்டி வாங்கும் தறுவாயில், இப்படி இடையில் புகுந்து குட்டையை குழப்பலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/7/2023 at 20:47, nedukkalapoovan said:

ஆயுதம் தாங்கிய சொறீலங்காப் படைகளையும் படைமுகாம்களையும் வைச்சுக் கொண்டு.. அவற்றின் துணை ஆயுதக் குழுக்களையும் கூட வைச்சுக்கொண்டு.. ஆயுதம் தாங்கிய குண்டர் குழுக்களையும்.. காடையர்களையும் வைச்சுக்கொண்டு.. எப்படி ஆயுதமற்ற பொலிஸ் அதிகாரம் மூலம் திறமையான நீதியான சிவில் நிர்வாகத்தை அமுல்படுத்த முடியும்.. ஒரு முன்னாள் தலைமை நீதிபதிக்கு இது கூடவா புரியவில்லை..??!

நியாயமான கேள்விதான்.

மாகாண பொலிஸ் படை அமைந்தவுடனேயே, சிவில் நிர்வாகத்தில் இராணுவ பிரசன்னம் முற்றாக ஒழிக்கபடல் வேண்டும்.

இராணுவம் வரையறைக்கப்பட்ட முகாம்களுக்குள் முடங்க வேண்டும். முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பின், அவசர கால நடைமுறை அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி படைகளை மீள இறக்கலாம்.

மத்திய பொலிஸ் படை - குறித்த வழக்குகளில் (போதை கும்பல், சதி, பயங்கரவாதம்) முதன்மை வகிக்கும்/ தலையிடலாம். ஏனைய வழக்குகளில் தலையிட ஒன்றில் மாகாண பொலிஸ்/ முதல்வர் அனுமதிக்க வேண்டும், அல்லது ஒரு அரசமைப்பு குழுவின் இசைவு வேண்டும்.

இப்படி பலதை கேட்பதன், அடைவதன் மூலம் நாம் “சிங்கள பொலீஸ்”  எமது மக்களின் அன்றாட அலுவல்களில் தலையிடுவதை தவிர்க்கலாம்.

இங்கே நாம் அடைய விழைய வேண்டியது

எமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகாரம் செலுத்தும் பொலிஸ் அதிகாரத்தை நாம் கையில் எடுப்பது.

அதை அடைய சில விட்டு கொடுப்புகள், சில பேரம்பேசல்கள், சில காப்புறுதிகள் அவசியமாகிறன.

பிகு

சீவி - உச்ச நீதிமன்ற நீதிபதி. தலைமை நீதிபதியாக (chief justice) வரவில்லை.

On 30/7/2023 at 01:13, satan said:

தைத்தான் நான் கருத்தில் எடுத்து பதிந்தேன், ஆனால் விளங்கப்படுத்த தெரியவில்லை. அப்படி அவைகளை வெளியேற்றவோ அல்லது அவர்களும் பொல்லு தாங்கவோ சிங்களம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அவர்கள் நம்மை குற்றம் சொல்லி பேச்சு வார்த்தையை குழப்பமுதல் அவர்கள் வைத்த பொறியில் அவர்களை மாட்ட வைக்கும் செயலாக விக்கினேஸ்வரன் ஐயா அப்படி சொல்லியிருக்கலாமோ என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, goshan_che said:

பிகு

சீவி - உச்ச நீதிமன்ற நீதிபதி. தலைமை நீதிபதியாக (chief justice) வரவில்லை.

பிரதம நீதியரசர் என்பதை தான் தலைமை நீதிபதின்னு எழுதியது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகிய இருவரும் வாக்களிக்கவில்லை.

https://ibctamil.com/article/the-budget-was-completed-a-while-ago-1670506971

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, nedukkalapoovan said:

பிரதம நீதியரசர் என்பதை தான் தலைமை நீதிபதின்னு எழுதியது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகிய இருவரும் வாக்களிக்கவில்லை.

https://ibctamil.com/article/the-budget-was-completed-a-while-ago-1670506971

பிரதம நீதியரசர், தலைமை நீதிபதி இரெண்டும் ஒன்றேதான் - Chief Justice.

சீ வி - உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்தார். Justice of the Supreme Court.  அதுவும் puisne Justice of the Supreme Court ஆகவே இருந்தார் - இதை தமிழில் மூப்புரிமை (seniority) குறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி என மொழிபெயர்க்கலாம்.

பிரதம/தலைமை நீதிபதி என்றால் அவர் நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் தலைவர். நாட்டின் அதியுச்ச நீதித்துறை பதவி.

இதுக்கும் திரிக்கும் சம்பந்தமில்லை - ஒரு தகவல் பிழையாக பதியப்படக்கூடாது என்பதால் எழுதினேன்.

பிகு

உங்கள் இணைப்பை பார்த்தால் ஐ பி சி உட்பட பல தமிழ் இணையதளங்கள் இப்படி பிழையாக எழுதுவது புரிகிறது.

தாமும் குழம்பி வாசிப்போரையும் குழப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாகாணசபைக்கு ஆயுதம் தாங்கிய பொலீஸ் அதிகாரத்தை ஏன் வழங்கக் கூடாது என்பதற்கு 1987 ஆம் ஆண்டில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்தே சிங்களவர்களால் ஒரு நியாயம் தொடர்ச்சியாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதனை நாம்தான் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

ஒப்பந்தத்தின்படி, ஒத்துக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தப்படும் தறுவாயில் அனைத்துப் போராளி அமைப்புக்களிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்படும் என்று கூறப்படுகிறது. இதன்பின்னர் சிவில் நிர்வாகம் கொண்டுவரப்பட்டு இராணுவம் 1987 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த பகுதிகளுக்குள் முடங்கிவிட ஆயுதம் தரித்த பொலீஸார் சிவில் நிர்வாகத்திற்குத் துணையாக இருப்பார்கள் என்பதே ஒப்பந்தம் கூறும் செய்தி.

ஆனால், புலிகளின் ஆயுதங்களால் செய்யமுடியாததை, வடக்குக் கிழக்கு மாகாணசபைக்கு ஆயுத பலம் உள்ள தமிழ் பேசும் பொலீஸாரை வழங்குவதன் மூலம் இந்த மாகாணசபை முறை செய்துவிடுகிறது. அதாவது தமிழர்களின் தனிநாடாகிய "வடக்குக் கிழக்கு - ‍ ஈழத்திற்கு" தமிழ் பேசும் இராணுவத்தை (ஆயுதம் தரித்த தமிழ் பொலீசாரை) இலங்கையரசே அனுமதிப்பதாக இருக்கப்போகிறது என்பதே அவர்களின் வாதம். அவர்கள் இதனை நிச்சயம் செய்ய அனுமதிக்கப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

இந்த வாதத்தை நியாயப்படுத்த அவர்கள் எடுத்து காட்டும் உதாரணம்கள்:

1. வட கிழக்கு மாகாண சபை காலத்தில், அதன் ஆட்சியாளர் இந்திய அனுமதியிடன் உருவாக்கிய டி என் ஏ என்ற (கட்டாய ஆட்சேர்ப்பு) ஆயுதக்குழு

2. பெருமாளின் சுதந்திர பிரகடனம்.

இரெண்டுமே மகா மொக்கு வேலைகள்.

ஆனால் பார்த்தீர்களா? தமிழர் கொஞ்சம் இடம் கொடுத்தால் தனி நாடு என்ற மடத்தை கட்டி விடுவார்கள் என சிங்கள மக்களை மேலும் நம்ப வைக்கவும், சர்வதேசத்தை நம்ப வைக்கவும் இது நன்றாக உதவுகிறது.

ரஞ்சித்,

ஒரு கேள்வி - அது 2035ம் ஆண்டு. உங்களிடம் வடக்கு-மாகாண சபை அதிகாரம் தேர்தல் மூலம் வந்து விடுகிறது.

2035-2040 நீங்கள் நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளீர்கள். இலங்கை அரசுடன் முட்டல் மோதல் இருந்தாலும் உங்களால் அவர்கள் உதவியுடன் பலதை செய்ய முடிந்தது. வடக்கு-கிழக்கை இணைக்க முடிந்தத்து. கிட்டதட்ட ஒரு confederal state ற்கு உள்ள அதிகாரம் இலங்கயில் வடகிழக்கு மகாண அரசுக்கு வந்து விட்டது.

இப்போ 2042- சீனா எதிர் அமெரிக்க உலக போர் நடக்கிறது. இந்தியா என்ற நாட்டில் மேல் அரைவாசியை பாகிஸ்தான், சீனா பிடித்து பங்கு போட்ட்டுள்ளன. மீதி இந்தியா மொழிவாரியாக தனி நாடுகளாக பிரிந்து விட்டது.

இதில் சில சீனா ஆதரவு, சில அமெரிக்க ஆதரவு.

தமிழ்நாடு என்ற நாடு அமெரிக்கா பக்கம்.

இலங்கை சீனா பக்கம் சாய்ந்து விட்டது.

தமிழ்நாட்டு ஜாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி இருவரும் உங்களை சென்னையில் சந்தித்து ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைக்கு நீங்கள் வடகிழக்கை தமிழீழ தனிநாடு என அறிவியுங்கள். நாமும் எமது அணியில் உள்ள 150 நாடுகளும் உங்களை தனிநாடு என அங்கீகரிப்போம். எமது அணியில் சேருங்கள். நேட்டோ போல உங்களை நாம் பாதுகாப்போம். 

உங்கள் முடிவு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

அட கடவுளே!

சரி, இதனை சீரியஸாகவே எடுக்கலாம்.

முதலாவது. சுதந்திரமான, இறையாணமையுள்ள , எமது தாயகம் எமது முழுமையான கட்டுப்பாட்டில் வரக்கூடிய, எமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய, எம்மை நாமே, வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் இன்றி, ஆக்கிரமிப்பு அச்சமின்றி ஆளக்கூடிய‌ தனிநாடே எனது முதலாவது தெரிவாக இருக்கும். குறிப்பாக, சிங்கள தேசம் சீனாவின் ஆதரவுடன் எல்லையில் நிற்கும்போது, எம்மைப் பாதுகாத்துக் கொள்ள எமக்கு ஆதரவு தேவை. ஆகவே அமெரிக்க ‍ இந்திய அணியில் சேர்ந்து தனிநாட்டு பிரகடணத்தைச் செய்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் தந்திருக்கும் நிபந்தனைகளைன்படி ஒரு முடிவினை எடுக்கவேண்டுமென்றால், எனக்கு இதனைத்தவிர வேறு வழிகள் தெரியவில்லை.

2 hours ago, goshan_che said:

1. வட கிழக்கு மாகாண சபை காலத்தில், அதன் ஆட்சியாளர் இந்திய அனுமதியிடன் உருவாக்கிய டி என் ஏ என்ற (கட்டாய ஆட்சேர்ப்பு) ஆயுதக்குழு

2. பெருமாளின் சுதந்திர பிரகடனம்.

உண்மை.

ஒரு வாதத்திற்காக, தமிழ் தேசிய இராணுவத்தை புலிகள் இயங்க அனுமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்தியா தொடர்ந்தும் அதற்கான இராணுவ ஆதரவை வழங்கியிருக்குமா? அப்படியானால் வரதராஜப்பெருமாளின் அரசு இன்றுவரை இயங்கியிருக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரஞ்சித் said:

அட கடவுளே!

சரி, இதனை சீரியஸாகவே எடுக்கலாம்.

முதலாவது. சுதந்திரமான, இறையாணமையுள்ள , எமது தாயகம் எமது முழுமையான கட்டுப்பாட்டில் வரக்கூடிய, எமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய, எம்மை நாமே, வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் இன்றி, ஆக்கிரமிப்பு அச்சமின்றி ஆளக்கூடிய‌ தனிநாடே எனது முதலாவது தெரிவாக இருக்கும். குறிப்பாக, சிங்கள தேசம் சீனாவின் ஆதரவுடன் எல்லையில் நிற்கும்போது, எம்மைப் பாதுகாத்துக் கொள்ள எமக்கு ஆதரவு தேவை. ஆகவே அமெரிக்க ‍ இந்திய அணியில் சேர்ந்து தனிநாட்டு பிரகடணத்தைச் செய்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் தந்திருக்கும் நிபந்தனைகளைன்படி ஒரு முடிவினை எடுக்கவேண்டுமென்றால், எனக்கு இதனைத்தவிர வேறு வழிகள் தெரியவில்லை.

இதைத்தான் நானும் செய்வேன். என் அனுமானத்தில் 9/10 ஈழத்தமிழர் இப்படித்தான் முடிவெடுப்பர்.

இதுதான் சிங்களவரின் கூட்டுப்பயம்.

இப்போ 2023 இல் நாம் ஒரு தீர்வை நோக்கி நகர வேண்டும் என்றால் - இந்த கூட்டுபயத்தை தாஜா செய்ய நாம் முயற்சிக்க வேண்டும்.

தீர்வு சிங்களவரை விட எமக்குத்தான் தேவைப்படுகிறது.

அவர்களுக்கு, இப்போ இருக்கும் நிலையை இழுத்தடித்தாலே அவர்கள் விரும்பும் தீர்வு 20 வருடத்தில் அடையப்பட்டுவிடும்.

6 hours ago, ரஞ்சித் said:

ஒரு வாதத்திற்காக, தமிழ் தேசிய இராணுவத்தை புலிகள் இயங்க அனுமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்தியா தொடர்ந்தும் அதற்கான இராணுவ ஆதரவை வழங்கியிருக்குமா? அப்படியானால் வரதராஜப்பெருமாளின் அரசு இன்றுவரை இயங்கியிருக்குமா? 

இல்லை. பெருமாளின் அரசு எப்படியும் கடைசி இந்திய சிப்பாயோடு இறந்து விட்டிருக்கும். புலிகள் செய்திராவிட்டல் இலங்கை படைகள் செய்திருக்கும்.

விபி சிங் அரசு கைகழுவி இருக்கும்.

ஆனால் நாபாவின் இடத்தில் தலைவரும், பெருமாளின் இடத்தில் பாலா அண்ணையும் இருந்து, அதன் பின் டி என் ஏ யை கட்டி எழுப்பி இருந்தால் - அப்போ நிலமை வேறு மாதிரி இருந்திருக்கும்.

புலிகள்-இந்திய மோதல் வந்திராவிட்டால், கருணாநிதி கேட்டு, விபி சிங் அரசு படைகளை விலக்கும் நிலை வந்திராது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

ஆனால் நாபாவின் இடத்தில் தலைவரும், பெருமாளின் இடத்தில் பாலா அண்ணையும் இருந்து, அதன் பின் டி என் ஏ யை கட்டி எழுப்பி இருந்தால் - அப்போ நிலமை வேறு மாதிரி இருந்திருக்கும்.

உண்மை. ஆனால் என்ன செய்வது, எல்லாமே தலைகீழாகிவிட்டது. இந்தியாவோடு மோதும் நிலையினை உருவாக்கிய லலித் அதுலத் முதலி இன்றுவரை எம்மை எதிரிகளாக இருக்க வழிசமைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13ம் திருத்தம் பற்றி ஒரு விசேட அறிக்கையை பாராளுமன்றில் தாக்கல் செய்வார் என ஐதேக அறிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரம் இல்லையாம்.

https://www.dailymirror.lk/top_story/President-to-make-special-statement-on-13A/155-264344

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி ஆண் : ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : ஆ கட்டிலிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : மெத்தையிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி ........!   --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---
    • இரு மருங்கிலும் காணியை விடவில்லை, 600 யார் வீதியை மட்டும் விட்டார்கள். அப்போதும் காணி உரிமையாளர் அனுரவுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வரவில்லை என்பதையும் எழுதினேன். என்ன குதி குதித்தீர்கள்… வோட்டு போட்ட மக்களை திட்ட வேண்டாம்…. அனுர இப்போதான் வந்துள்ளார்… நல்லெண்ண சமிக்ஞை….தேங்காய் என்ணை சமிக்ஞை என….. இதுதான் அவர்கள் எப்போதும்.  
    • தமிழரசுக் கட்சி சார்ந்த இத்திரியில் தீவிர வரட்டு தேசியம் பற்றி பிதற்றும் தங்கள் மூளை கொஞ்சம் அல்ல மிகவும் முற்றிய பைத்தியநிலையே. எனவே பேசி இது தணிய வாய்ப்பில்லை. டொட். 
    • எது தமிழ்த் தரப்பு? நிலாந்தன். என்பிபியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் வெளிவிவகார இணை அமைச்சரமாகிய அருண் ஹேமச்சந்திர வீரகேசரி யூரியூப் சனலுக்கு வழங்கிய நேர்காணலில்,ஓரிடத்தில் தமிழ்த் தரப்பு என்ற வார்த்தை தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். அவர் அங்கே என்ன கூற வருகிறார் என்றால், இப்பொழுது வடக்கு கிழக்கில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் உண்டு. வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்பது இப்பொழுது தமிழ் தேசியத் தரப்புமட்டும் அல்ல என்பதுதான். அரசாங்கத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜேவிபியின் நீண்ட கால உறுப்பினராக இருந்தவர் அவர். மேலும் மூன்று இனங்களின் வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்துக்கு வந்தவர். அவர் கூற வருவது போல,இம்முறை தமிழ் தேசியத் தரப்பு மொத்தம் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களோடு காணப்படுகிறது. அதே சமயம் தமிழர் தாயக பகுதியில் இருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்று வரும் பொழுது தமிழ் தேசிய தரப்பு மட்டும் அல்ல. அரசாங்கத்தோடு நிற்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை.எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண முற்படும்பொழுது வடக்குக் கிழக்கில் அரசாங்கத்திற்கு விழுந்த வாக்குகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுதான். தமிழ் பிரதிநிதிகள் என்று பார்த்தால் இப்பொழுது அரசாங்கத்தில் மொத்தம் 28 பேர் உண்டு. அதில் வடக்கு கிழக்கில் மட்டும் ஏழு பேர் உண்டு. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று வரும்போது அரசாங்கத்தோடு நிற்கும் ஏழு பேரின் நிலைப்பாட்டையும் எப்படிப் பார்ப்பது? இதில் அதிகம் விவாதத்துக்கு இடமில்லை. அவர்கள் ஏழு பேரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள்தான். தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகள் அல்ல. அரசாங்கக் கொள்கையை அவர்கள் பிரதிபலிப்பார்கள். பேச்சுவார்த்தை மேசையில் அவர்கள் அரசாங்கத்தின் தரப்பாகத்தான் பங்குபற்றலாம். தமிழ்த் தேசியத் தரப்பாக அல்ல. ஆனால் தமிழ்த் தேசியத் தரப்பானது மொத்தம் பத்து உறுப்பினர்களாகச் சுருங்கி போய் இருப்பதனால், அருண் ஹேமச்சந்திர போன்றவர்கள் தமிழ்த் தரப்பு என்றால் தனிய தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் அல்ல என்ற பொருள்பட கருத்துக் கூற முற்படுகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் பெற்ற வெற்றிகளை வைத்து அவ்வாறு கூறமுடிகிறது. ஆசனக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்த் தரப்பு நாடாளுமன்றத்தில் மிகவும் பலவீனமாகிவிட்டது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துக் கூறக்கூடியவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்திருக்கிறது. இனப்பிரச்சினை அல்லாத ஏனைய பிரச்சினைகளும் தமிழ் மக்களுக்கு உண்டு என்று கூறி, இனப்பிரச்சினையை பத்தோடு பதினொன்றாக மாற்ற விரும்புகிறவர்களுக்கு அது வாய்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது.தமிழ் மக்கள் ஒரு தேசமாக, பலமாக இல்லை. ஒரு திரட்சியாக இல்லை என்பதனை தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். வென்ற தலைவர்களும் தோல்வியுற்ற தலைவர்களும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். இந்தத் தோல்விகளின் பிதா சம்பந்தர்தான். சம்பந்தர் தொடக்கியதை சுமந்திரன் கச்சிதமாக முடித்து வைத்தார். முடிவில் தமிழ் ஐக்கியமும் சிதைந்து அவர்களுடைய சொந்தக் கட்சியும் சிதைந்து விட்டது. இப்பொழுதும் கட்சி நீதிமன்றத்தில் நிற்கின்றது. அதற்கு யார் தலைவர் என்பது தெளிவில்லை. நேற்று வவுனியாவில் நடந்த கட்சியின் மத்திய குழுக்கூட்டம் அதைக் காட்டுகின்றது. இதில் சுமந்திரன், சம்பந்தர் மட்டும் குற்றவாளிகள் இல்லை. மாவை முதற்கொண்டு கட்சியின் எல்லா மூத்த தலைவர்களுமே குற்றவாளிகள்தான். சுமந்திரனை பொருத்தமான விதங்களில் எதிர்த்து தன் தலைமைத்துவத்தை நிறுவத் தவறிய சிறீதரனும் குற்றவாளிதான். தமிழசுக் கட்சி மட்டுமல்ல, அக்கட்சியை எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் குற்றவாளிதான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியலானது ஒருவித எதிர்மறை அரசியலாகவே இருந்து வந்தது. ஏனைய கட்சிகளைக் குற்றம் காட்டுவதன் மூலம் தன்னைப் புனிதராகக் காட்டிய அக்கட்சியானது, தன்னைத் தமிழரசுக் கட்சியைத் தோற்கடிக்கும் ஒரு மாற்றுச் சக்தியாகக் கட்டி எழுப்பத் தவறிவிட்டது. தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான் என்ற எளிமையான உண்மையை இரண்டு கட்சிகளுமே விளங்கி வைத்திருக்கவில்லை. தங்களைச் சுற்றி விசுவாசிகளைக் கட்டி எழுப்பிய அளவுக்கு தேசத்தைக் கட்டி எழுப்பத் தவறி விட்டார்கள். இரண்டு முக்கிய கட்சிகளுடையதும் தோல்விகளின் விளைவாகத்தான் இப்பொழுது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் நாடாளுமன்றத்தில் தனி ஒரு பலமான தமிழ்த் தரப்பாக இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தரப்பை பலவீனப்படுத்தும். தேசிய மக்கள் சக்தி இதுவரையிலும் இனப் பிரச்சினைக்கான தீர்வு எந்த அடிப்படையில் அமையும் என்பதனை அதற்குரிய அரசியல் அடர்த்திமிக்க வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி உரையாடும் பொழுது “சம உரிமை” என்ற வார்த்தையை அரசாங்கம் பயன்படுத்துகின்றது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட வெளிவிவகார பிரதி அமைச்சரின் நேர்காணலிலும் அது கூறப்படுகிறது. சம உரிமை என்றால்,எல்லாரும் இலங்கையர்கள். ஒருவர் மற்றவருக்குச் சமம் என்பதா? அவ்வாறு நாட்டில் உள்ள எல்லா மதங்களும் சமமானவை என்று ஒரு நிலை தோன்ற வேண்டுமென்றால் இப்பொழுது அரசியலமைப்பில் தேரவாத பௌத்தத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமை அகற்றப்பட வேண்டும். அனுர அதைச் செய்ய மகா சங்கம் அனுமதிக்குமா? மேலும்,இனப்பிரச்சினை தொடர்பில் இங்கே சீனத் தலைவர் மாவோ சேதுங் கூறும் உதாரணம் ஒன்றைச் சுட்டிக் காட்டலாம். கடலில் பெரிய மீனும் சிறிய மீனும் வாழும் பொழுது, இரண்டுக்கும் சம உரிமை என்று சொன்னால், அது சிறிய மீனைப் பாதுகாக்காது. ஏனென்றால் பெரிய மீன் சிறிய மீனைச் சாப்பிட்டு விடும். ஆனால் சிறிய மீனால் பெரிய மீனைச் சாப்பிட முடியாது.எனவே பெரிய மீனால் வேட்டையாடப்படாத பாதுகாப்பு ஏற்பாடு சிறிய மீனுக்கு வேண்டும்.தமிழ் மக்கள் அதைத்தான் கேட்கிறார்கள். தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக,தேசமாக ஏற்றுக்கொண்டு உருவாக்கப்படும் கூட்டாட்சியைத்தான் தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். இலங்கைத் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள், தேசங்கள் உண்டு என்ற பல்வகைமையை, ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உண்டு என்ற பல்வகைமையை ஏற்றுக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களுக்கு இடையில் இணக்கமான ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அவ்வாறான ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டுக்குரிய முன்மொழிவைத்தான் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தது. இப்பொழுது அந்த முன் மொழியின் அடிப்படையில் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசியத் தரப்பாக பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது. தமிழ் மக்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பாகப் பலவீனமடைந்திருக்கும் ஒரு சூழலில், கஜேந்திரகுமாரின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்திருந்தால், இப்பொழுது நாடாளுமன்றத்தில் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. தமிழ் மக்களைத் தோற்கடித்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இன்னும் எத்தனை நந்திக் கடல்களை தமிழ் மக்கள் கடக்க வேண்டியிருக்கும்? https://athavannews.com/2024/1412357
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.