Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சி : பாலம் அமைப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும் - பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

29 JUL, 2023 | 05:52 PM
image
 

இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால் நிறைவேறாது என பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவருமான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புத்திஜீவிகள் பங்கேற்கும் ஊடக சந்திப்பு சனிக்கிழமை (29) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு இவ்வாறு கூறிய பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால் நிறைவேறாது.

இலங்கையின் தேவைப்பாட்டுக்காகவன்றி, இந்தியாவின் தேவைப்பாட்டுக்கு ஏற்பவே இந்த பால நிர்மாண விடயம் கையாளப்படுகிறது. இதனால் இலங்கையின் நலன்களை விட இந்தியாவின் நலன்களே மேலோங்கும்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 6.7 வீதமானோர் தொழிலற்று இருக்கின்றனர். நாளாந்தம் வேலைவாய்ப்பை இழக்கும் தொகை அதிகரித்து வருகிறது. 

2022 இறுதியில் 5.5 மில்லியன் மக்கள் புதிதாக வறுமைக்குட்பட்டுள்ளனர். இது 27.4 வீதமாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பொருளாதாரம் சரியான நிலைப்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. ஜனாதிபதி இதற்குண்டான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதாக புலப்படவில்லை.

அஸ்வெசும பெறச் சென்று உயிரிழக்கின்றனர். ஜீவனோபாயத்தை நடத்த தேவையான ஒழுங்கில் பொருளாதார வளர்ச்சி நாட்டில் நடைபெறுவதாக இல்லை. அதிகாரத்தை பெறும் நோக்கிலான பொறுப்பற்ற விதமாக அரசியல் விளையாட்டிலேயே தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் மொட்டுக் கட்சியும் ஈடுபட்டுள்ளன.

பொருளாதாரத்துக்கு தீர்வாக அதானி போன்ற சர்வதேச மட்டத்தில் வட்டிக்கு பணம் வழங்குநர்களிடம் தேசிய வளங்களை விற்பதே இந்த அரசாங்கத்தின் கொள்கையாக மாறியுள்ளது.

சர்வதேச நாடுகளின் அதிகார போட்டியில் இலங்கை சிக்கியுள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாறான செயற்பாட்டையே ஜனாதிபதி மேற்கொள்கிறார்.

கல்விச் சீர்திருத்தம் தேவை என்றாலும், கல்விச் சீர்திருத்தம் என்ற போர்வையில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய தேசிய முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தொடர்ச்சியாக தேர்தலை காலம் தாழ்த்தி, சர்வ கட்சி மாநாட்டை நடத்தி, மக்களையும் சர்வதேச தலைவர்களையும் இந்தியாவையும் ஏமாற்றும் நடவடிக்கையிலேயே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வெட்கமின்றி ஈடுபட்டு வருகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையேனும்  நடத்துமாறு இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு தெரிவித்தமை இலங்கையின் நன்மதிப்புக்கே களங்கம் ஏற்படுத்தியுள்ளது.

நாடும் நாட்டு மக்களும் நாமும் எதிர்பார்த்த போக்கில் நாட்டின் பொருளாதார மீட்சி இடம்பெறுவதாக இல்லை. அதற்கான உண்மையான காரண காரிய செயற்பாட்டிலான பிரவேசத்துக்கு செல்வதாக இல்லை. பொருளாதார மீட்சிக்கு தேசிய வளங்களை விற்பது தீர்வாகாது; நாடுகளுக்கு ஏலம் விடுவதும் தீர்வாகாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/161218

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையின் நலன்களும் துறைமுகங்களும் காலியாகும் என்பது தான் சாலப் பொருந்தும். மேலும் தமிழர் பகுதிகளை தென்னிலங்கை சார்ந்திருக்கும் நிலை தோன்றும். அது சிங்கள பெளத்த பேரின நிலைப்பாட்டுக்கு அதன் செழிப்பு.. சாதகமாக இருக்காது. இதுதான் இந்த புத்திசீவியின் பயம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

தென்னிலங்கையின் நலன்களும் துறைமுகங்களும் காலியாகும் என்பது தான் சாலப் பொருந்தும். மேலும் தமிழர் பகுதிகளை தென்னிலங்கை சார்ந்திருக்கும் நிலை தோன்றும். அது சிங்கள பெளத்த பேரின நிலைப்பாட்டுக்கு அதன் செழிப்பு.. சாதகமாக இருக்காது. இதுதான் இந்த புத்திசீவியின் பயம். 

சிங்கள புத்தி ஜீவிகள் என்று அழைப்பவர்களில் 90 % மானோர் இனவாதிகள். தமிழர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கக்கூடடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இந்த பாலம் அமைப்பது சம்பந்தமாக முதலும் எழுதி இருந்தேன். எப்பவோ இது பேசப்பட்டு முடிந்த விடயம். இதட்கு சிங்கள இனவாதிகள் விடப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு ஏதாவது மறை கழண்டு போச்சுதோ தெரியவில்லை 

இலங்கையில் இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம் யாழ் குடாநாட்டில் இந்தியத் துணைத் தூதரகத்துக்கு அனுமதியளிக்கலாம் இலங்கையின் கடன் மீள் மறுசீரமைப்புக்கு இந்தய உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் அப்போது எல்லாம் இவர்களுக்கு சுரணை எங்க இருந்தது?

இலங்கையிப் புவியியல் பரப்பில் இந்தியா தவிர்க்கமுடியாத சக்தி தவிர 
எதிர்காலத்தில் உலகப்பொருளாதார இயங்குதளம் சீனா இந்தியா ஜப்பான் மற்றும் ரஸ்யா ஆகியவற்றை உள்ளடக்கியே இருக்கும் இதன்மூலம் விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத்தீவிலும் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் அந்த அபிவிருத்தியின் முழுப்பலாபலனையும் அனுபவிக்கவேண்டுமெனில் இந்தியா இலங்கை இடையே இலகுவான போக்குவரத்துப் பொறிமுறை இருந்திடல்வேண்டும் அதுதவிர்ந்த உள்ளகக்கட்டமைப்புகள் அனைத்தும் ஏற்படுத்தப்படல் வேண்டும் இல்லையே இவர்கள் தனித்தே விடப்படுவர் பாகிஸ்தானைப்போ, பாகிஸ்தான் இப்போது எப்படி நம்பகத்தன்மை அற்ற நாடாக உலகநாடுகளால் பார்க்கப்படுகிறதோ அதேபோல் சிறீலங்காவும் பார்க்கப்படும் நிலைக்கு வரலாம். ஆனால் இவஙளுக்கு எதிரிக்குச் சகுனப்பிழை வரவேண்டுமெனத்தான் நினைக்கிறாங்கள். 

கடன் மீளளிப்புக்காலம் நெருங்கும்போது நாக்கைத் தொங்கப்போடுவினம்  மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவை காலிமுகத்திடலில கொண்டாடுவினம் அதில் தமிழினம் புளகாங்கிதம் அடைந்து சிங்கக்கொடியத் தூக்கும். 

பிறகென்ன கனடாவுக்கு விசிற் விசா........... அவை இவை என நிலமை காலத்துக்குக்காலம் மாறி அனைத்தும் அற்றுப்போகும்  குடாநாட்டில் யாராவது கனடாக்கனவில் பிக்குவுக்குக் காணியை வித்திட்டு நில அபகரிபு எனப் புலுடா விடுவான்  சைக்கிள் க்ட்சிக்காரர் இரவுபகலாக பத்தை பறியலுக்கை படுத்துக்குடந்து ஓய்ந்து போய்விடுவினம் சுமந்திரன் வெள்ளை சேட்டுப்போட்டுக்கொண்டு கழுத்துப்பட்டியுடன் ஒரு விசிட் வருவார் 

இறுதியில் மறுவன் புலவு சச்சியர் கண்ணாடிப்பெட்டிக்குள்ள நேத்திக்கடனுக்கு கோவிலில் தொங்கவிடுகிறமாரி எதுவென்று அடையாளம் தெரியாத ஒப்றை அங்க வைத்து சைவம் அதுக்குச் சாமி இல்லை எல்லாம் சும்ம்ம்ம்மா எனச் சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Elugnajiru said:

இவங்களுக்கு ஏதாவது மறை கழண்டு போச்சுதோ தெரியவில்லை 

இலங்கையில் இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம் யாழ் குடாநாட்டில் இந்தியத் துணைத் தூதரகத்துக்கு அனுமதியளிக்கலாம் இலங்கையின் கடன் மீள் மறுசீரமைப்புக்கு இந்தய உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் அப்போது எல்லாம் இவர்களுக்கு சுரணை எங்க இருந்தது?

இறுதியில் மறுவன் புலவு சச்சியர் கண்ணாடிப்பெட்டிக்குள்ள நேத்திக்கடனுக்கு கோவிலில் தொங்கவிடுகிறமாரி எதுவென்று அடையாளம் தெரியாத ஒப்றை அங்க வைத்து சைவம் அதுக்குச் சாமி இல்லை எல்லாம் சும்ம்ம்ம்மா எனச் சொல்லுவார்.

அது வேறு இது வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Elugnajiru said:

இலங்கையில் இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம் யாழ் குடாநாட்டில் இந்தியத் துணைத் தூதரகத்துக்கு அனுமதியளிக்கலாம் இலங்கையின் கடன் மீள் மறுசீரமைப்புக்கு இந்தய உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்

அதுவல்ல; இந்தியா தமிழருக்கு தனிநாடு எடுத்துகுடுக்கப்போகுது, தமிழர் இங்குள்ள வளங்களை சுரண்டிக்கொண்டு இந்தியாவுக்கு போய்விடுவார்கள் என்று கதையும் சொல்வார்கள். அதையும் நம்மில் சிலர் காவிக்கொண்டு திரிவோம், அவன் பயப்படுவதிலும் நிஞாயம் இருக்கெண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி கிந்திய  நாணயத்தை பாவிப்பது என்ற புரிந்துணர்வு, அல்லது  ஆரம்ப கட்ட விளக்கத்துக்கு ரணில் கையெழுத்து வைத்து விட்டு வந்து இருக்கிறார் 

சிங்களர்களின் மதியில் இரம்யமாய் ஏறி மறமை ஆகிவிட்டது மதி.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்திய நாணயம் பாவிக்கப் பட்டால்தானென்ன? அமெரிக்க அல்லது யுகே நாணயங்கள் பாவிக்கப்பட்டால்தானென்ன? அவைற்றை வைத்திருப்போருக்கே அதிகம் பலன் கிடைக்கும்.  இராமர் பாலம் கட்டப்பட்ட காலத்திலிருந்தே இந்திய இலங்கைத் தொடர்பு ஏற்பட்டு விட்டதாகப் புராணங்கள் சொல்லுகின்றன.  அதற்கும் முன்பே நிலத்தொடர்பு புவியியல் ரீதியாக இருந்தது என்றும் சொல்கிறார்கள்.  இந்தியாவிலிருந்து பொட்டணி வியாபாரிமார் வற்றுக்காலத்தில் நடந்து வந்து போனதாக எனது தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  தற்செயலாக ஒரு சுனாமி ஏற்பட்டு நிலமட்டம் மேலெழும்பினால் இந்தப் பேராசிரியர் போய்நின்று தோண்டவா போகிறார்?  இயற்கையின் மாற்றங்கள் நாம் நினைத்தபடி நடப்பதில்லை.  யுகே யும் பிரான்சும் நிலகீழ் சுரங்கப்பாதையால் ஒன்றுபட்டுவிட்டன.  இந்தப் பேராசிரியரோ தமிழர் பிரதேசங்கள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டுவிடும் என்ற பயப்பிராந்தியில் பெரிதாகக் கதைவிடுகிறார்.  ஆனால் காலத்தின் போக்கில் இவையெல்லாம் நடக்கத்தான் போகின்றன. இல்லாவிட்டால் பௌத்த சிங்களப் பேரினவாதம் என்கின்ற மாயைக்குள் சிக்குண்டு இலங்கை எந்தவித முன்னேற்றமுமின்றி அழிந்து போக வேண்டியதுதான்.  கக்குறுக்கட்டியும் சாயாவும்தான் இறுதியில் மிச்சமாகும். உற்பத்திப் போட்டி அதற்கும் இப்போது வந்துவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் – மிலிந்த மொரகொட

k2-DAWN-01-300x169.jpg


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலத்தொடர்புக்கு சார்பாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கும் இது அவசியமானது என்று மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு செல்லும் பயணத்தை அதிகரிப்பதற்காக தரைப்பாலங்கள், பாலங்கள், குழாய்கள், மின்சாரம் கடத்தும் பாதைகள் மற்றும் தரையிறங்கும் உட்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கும் அதன் அண்டை தீவுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதற்கு நில இணைப்பு அவசியம் எனவும் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/266238

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

அதையும் நம்மில் சிலர் காவிக்கொண்டு திரிவோம், அவன் பயப்படுவதிலும் நிஞாயம் இருக்கெண்டு.

இப்படி விடுப்பு பேசும் பொம்பிளையள் மாரி எழுதாமல், இந்த கருத்தை அதற்குரிய திரியில் எழுதி இருக்கலாம். 

அவன் பயப்படுவதில் நியாயம் இருக்கெண்டு எழுதவில்லை. 

அவனின் கூட்டு பயம் இதுதான். நாம் பலமேதும் இல்லாமல் இருக்கும் இன்றைய நிலையில் அந்த பயத்தை டீல் பண்ணித்தான் தீர்வை நோக்கி நகர முடியும் என்றே எழுதப்பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இப்படி விடுப்பு பேசும் பொம்பிளையள் மாரி எழுதாமல், இந்த கருத்தை அதற்குரிய திரியில் எழுதி இருக்கலாம். 

அவன் பயப்படுவதில் நியாயம் இருக்கெண்டு எழுதவில்லை. 

அவனின் கூட்டு பயம் இதுதான். நாம் பலமேதும் இல்லாமல் இருக்கும் இன்றைய நிலையில் அந்த பயத்தை டீல் பண்ணித்தான் தீர்வை நோக்கி நகர முடியும் என்றே எழுதப்பட்டது.

 

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான். 

On 1/8/2023 at 01:46, Elugnajiru said:

இலங்கையில் இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம் யாழ் குடாநாட்டில் இந்தியத் துணைத் தூதரகத்துக்கு அனுமதியளிக்கலாம் இலங்கையின் கடன் மீள் மறுசீரமைப்புக்கு இந்தய உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் அப்போது எல்லாம் இவர்களுக்கு சுரணை எங்க இருந்தது?

இந்தக்கருத்துக்கே ஆதாரம் தெரிவித்தேன். நான் சிலர் எனக் குறிப்பிட்ட அந்தச் சிலரில் நீங்களும் அடங்குகிறீர்கள் என்பதை நீங்கள் குறிப்பிட்ட பின்தான் புரிந்து கொண்டேன்.     

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான். 

இந்தக்கருத்துக்கே ஆதாரம் தெரிவித்தேன். நான் சிலர் எனக் குறிப்பிட்ட அந்தச் சிலரில் நீங்களும் அடங்குகிறீர்கள் என்பதை நீங்கள் குறிப்பிட்ட பின்தான் புரிந்து கொண்டேன்.     

ஓ அபப்டியா. விளக்கியமைக்கு நன்றி🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.