Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருந்தூர்மலை விவகாரம் : யாழில் சிவசேனை – தேரர்கள் இரகசிய சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலை விவகாரம் : யாழில் சிவசேனை – தேரர்கள் இரகசிய சந்திப்பு!

குருந்தூர்மலை விவகாரம் : யாழில் சிவசேனை – தேரர்கள் இரகசிய சந்திப்பு!

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாக விகாரையில் இன்று காலை மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த கலந்துரையாடல் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல், இரகசியமாக நடைபெற்றது.

குருந்தூர் மலையில் நாளை வெள்ளிக்கிழமை பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2023/1345435

 

#################     ######################   ######################

 

குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தேரர்கள் தீர்மானம்!

குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தேரர்கள் தீர்மானம்!

குருந்தூர் மலையில் நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மீஹா ஜந்துர சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

சிவசேனை உள்ளிட்ட இந்து பௌத்த மத அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்திலுள்ள எமது மத தலைவர்கள் அவைரும் ஒன்றிணைந்து ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தோம்.

குருந்தூர் மலை பிரச்சினை போன்று ஏனைய விகாரைகளில் உள்ள பிரச்சினைகளுக்கும் அமைப்பு என்ற ரீதியில் ஒன்றிணைந்து சில சிக்கல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் நாங்களே முன்வந்து பதிலளிக்கவும் குருந்துர் மலையில் பௌத்த விகாரை போன்று இந்து ஆலயம் ஒன்றை அமைத்து இந்து பௌத்த மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை உறுதி செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

இந்த இந்து பௌத்த அமைப்பின் ஊடாக எடுத்த தீர்மானங்களுக்கு அமைவாக நாங்கள் இரு தரப்பினரும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைவாக செயற்படுவோம்.

அதேபோன்று நாளைய தினம் நடத்தவிருக்கும் பொங்கல் நிகழ்வுகள் போன்ற சிங்கள பௌத்த நிகழ்வுகளை குருந்தூர் மலையில் நடத்த வேண்டாம் என நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வு மற்றும் எதிர்காலத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் பௌத்த நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

குருந்தூர் மலையில் இந்துக்கள் இந்து ஆலயத்திலும் பௌத்தர்கள் பௌத்த விகாரையிலும் வழிபாடுகளில் ஈடுப்படும் வகையில் கட்டமைப்புகளை அமைக்க தீர்மானித்துள்ளோம்.

சில பயங்கரவாத பிரிவினருடன் இணைந்து சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்ளாமல் இலங்கையர்கள் என்ற ரீதியில் நாங்கள் ஒற்றுமையாக செயற்படுவோம் என்று வடக்கிலுள்ள தமிழ் சிங்கள மக்களிடமும் இந்து மத தலைவர்களிடமும் கேட்டுகொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1345500

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to குருந்தூர்மலை விவகாரம் : யாழில் சிவசேனை – தேரர்கள் இரகசிய சந்திப்பு!
  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் சிவன் ஆலயம்  நிறுவ தீர்மானம்

Published By: VISHNU

17 AUG, 2023 | 05:42 PM
image
 

குருந்தூர்மலையில் சிவன் ஆலயம்  நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமை (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து அமைப்புகள் இதனை அறிவித்தன.

குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை என தெரிவித்த குறித்த அமைப்புகள் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.

இதன்போது ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

குருந்தூர் மலையில் சிவன் ஆலயம்  நிறுவ தீர்மானம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

இதன்போது ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் சச்சியர் எனும் பச்சோந்தி! தமிழர் பிரதேசத்தில், அவர்களின் ஆலயங்களில், விகாரைகளை அடாத்தாக அமைத்துவிட்டு, ஒற்றுமை நல்லிணக்கம் விட்டுக்கொடுப்பு பாடம், யார் யாருக்கு எடுப்பது? பொங்கல் யாரால் நடத்தப்படுகிறது? விகாரையில் வழிபாடு ....இல்லை இல்லை சீண்டல் செய்வதற்கு பெயர் வழிபாடென்கிறார்கள் அதன் புனிதம் தெரியாதவர்கள், அதற்காக எங்கிருந்து வரவழைக்கப்படுகிறார்கள்? இது சரியா? என்பதையும் இந்த  இந்து பௌத்த அமைப்பு விளக்க வேண்டும்! ஆலயம், வழிபாடு, புனிதம் மறைந்து, போராட்ட களமாகவும் அதிகாரம் செலுத்தும் முறையாகவும் விகாரைக்கள் மாறி, மற்றைய மதங்களையும் வலிந்து இழுக்கின்றன அல்லது கைவிட வைக்கின்றன அவர்களது உரிமைகளை வழிபாடுகளை கடமைகளை. இதுக்கு பெயர் மதம் ஜனநாயகம் எனும் கேலிக்கூத்துகள். இந்த விகாரை அமைப்புகளுக்கு முன், சிவசேனை சச்சியர் என்கிற பெயரை நாம் கேள்விப்படவில்லை. தமிழர் நிலங்களையும் உரிமைகளையும் பறிப்பதற்கு தோன்றும் திணைக்களகள் போன்று அவற்றை விற்பதற்கென்று, விட்டுக்கொடுப்பதற்கென்று தோன்றிய தன்னிச்சையான அமைப்பாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இது இந்த இரண்டு கூடடமும் சேர்ந்து ஆடும் ஆடடம் போலையல்லவா இருக்குது. சரி சரி இன்றைக்கு என்ன நடக்குதென்று பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Cruso said:

அப்போ இது இந்த இரண்டு கூடடமும் சேர்ந்து ஆடும் ஆடடம் போலையல்லவா இருக்குது. சரி சரி இன்றைக்கு என்ன நடக்குதென்று பார்ப்பம். 

ஒருசில வாரங்களுக்கு முன் சரத் வீரசேகர, வடக்கில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் திஸ்ஸ மகா நாயக்கர் என்னவோ ஒரு பெயர் சொன்னார் அவரையும் சச்சியரையும் கேளுங்கள் என்று சொன்னார். அப்பவே நினைச்சேன், இந்த மறைகளண்டை கூட்டந்தான் இந்தளவுக்கும் காரணமென்று.

12 hours ago, தமிழ் சிறி said:

இந்த இந்து பௌத்த அமைப்பின் ஊடாக எடுத்த தீர்மானங்களுக்கு அமைவாக நாங்கள் இரு தரப்பினரும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைவாக செயற்படுவோம்.

 

12 hours ago, தமிழ் சிறி said:

குருந்துர் மலையில் பௌத்த விகாரை போன்று இந்து ஆலயம் ஒன்றை அமைத்து இந்து பௌத்த மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை உறுதி செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

 

12 hours ago, தமிழ் சிறி said:

நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வு மற்றும் எதிர்காலத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் பௌத்த நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

ஹஹ்ஹா......நடைமுறைக்கு ஒத்துவராத  விளக்கம் என்னவோ பேச்சுக்கு நல்லாகத்தான் இருக்கு ஆனால் நடைமுறை எதிர்மறையாக வெல்லோ இருக்கு. இனமத முரண்பாடுகளை தூண்டி விட்டிருக்கு. அறிவற்றவர்களின் கலந்தாலோசனையும் விளக்கமும் திட்டமும் அவர்களுக்கே புரியாதது.

12 hours ago, தமிழ் சிறி said:

சில பயங்கரவாத பிரிவினருடன் இணைந்து சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்ளாமல் இலங்கையர்கள் என்ற ரீதியில் நாங்கள் ஒற்றுமையாக செயற்படுவோம் என்று வடக்கிலுள்ள தமிழ் சிங்கள மக்களிடமும் இந்து மத தலைவர்களிடமும் கேட்டுகொள்கின்றேன்”

யார் அவர்கள்? தமிழ் கிறிஸ்தவர்களையா குறிப்பிடுகிறார் இவர்? அவர்கள் அமைதியாகத்தானே இருக்கிறார்கள். யார் மத தலத்தை இடிக்கவுமில்லை, உரிமை கொண்டாடவுமில்லை, சரித்திரத்தை மாற்றியமைத்து வீராப்பு பேசவுமில்லை, தெருவில நின்று யாரையும் சண்டைக்கிழுக்கவுமில்லையே? உயிர்த்த ஞாயிறு போன்று ஏதோ ஒன்றை சைவரைக்கொண்டு ஏவும் திட்டமா இது? ஒற்றுமையாக செயற்பட விரும்புபவர்கள், தமிழ் கிறிஸ்தவ, சைவர்களிடையே குரோதத்தை தூண்டிவிட்டு பௌத்த சிங்களத்தோடு இரகசிய பேச்செதெற்கு? இன, மத, தன்மானமில்லாத சில அரைகுறை சோம்பேறிக்கூட்டத்தை கூப்பிட்டு மூளைச்சலவை செய்து, நீங்கள் விட்டுக்கொடுத்தால் நல்லிணக்கம், ஒற்றுமை வரும் எனகேட்பது, கலந்து கலியாணம் செய்தால் புத்திசாலி சமுதாயத்தை உருவாக்கலாம் என ஆலோசனை  சொல்வதும், அதை சொந்த புத்தியற்ற, உழைத்து வாழ வக்கற்றவர்கள் காவிக்கொன்டு கொழுத்தாடு பிடிப்பதும், மதங்களை வன்முறைக்கு தூண்டுவதும். இவர்கள் மத போதனைகளை, அனுஷ்டானங்களை அறிந்து வைத்திருக்கிறார்களோ இல்லையோ மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளக்க நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். சச்சியர் மத, இன ஒற்றுமை வளர்க்க விரும்பினால் அவர் வீட்டு கோடிக்கையல்லவா விகாரை கட்ட விட்டிருக்க வேண்டும், அதை விட்டு தனியார் காணிகளில் அவர்களை அறியாமல் களவாய் கட்டிப்போட்டு விளக்கம் வேற, அது ஒற்றுமையாம். அதுக்கு இந்த ஓணான் சாட்சியாம்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

குருந்துர் மலையில் பௌத்த விகாரை போன்று இந்து ஆலயம் ஒன்றை அமைத்து இந்து பௌத்த மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை உறுதி செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

கதிர்காம முருகன் ஆலயத்தை இன்று பெளத்த புண்ணிய பூமியாக்கிருப்பது போல் குருந்தூர்மலையும் ஆக்கப்படும். இது தமிழரின் ஒரு பகுதியினரின் விருப்பத்துடனே நடக்கும். சுற்றி சிங்களவர்கள் குடியேறுவார்கள். இன்று கதிர்காமத்திற்கு தமிழர்கள் யாத்திரை போவதுபோல நாளை எமது தாயக இதயப்பகுதியில் இருக்கப்போகும் எமது முருகன் ஆலயத்திற்கு நாம் யாத்திரை போவோம். எல்லாம் சுபம்.

தட்டிக் கேட்டால் ஊரில் இருப்பவர்களையும் கொன்றுவிடுவார்கள் என்கிற பயம் எமக்கு. எந்த நிலம் போனால் என்ன, எந்த கோவில் இடிக்கப்பட்டால் என்ன, மொழியும், மதமும், கலாசாரமும் அழிந்தால் என்ன, நான் வாழ்ந்தால்ப் போதும். இன்னொன்றையும் செய்துவிட்டால் இன்னும் சுலபம், அருண் சித்தாத் போல் சிங்கள பெளத்தராகி விடலாம், அதன் பின் எமக்கு அழிவென்பதேயில்லை!

நேற்று பவனீசன் எனும் யூதியூப் இளைஞனின் மணலாறு, மண்கிண்டிமலை பகுதி காணொளி பார்த்தேன். 20 வயதுதான் இருக்கும். அவனுக்கிருக்கும் இன உணர்வில் 10 வீதம் சிலருக்கிருந்தாலே பலரை விழிக்க வைக்கலாம். ஆனால் என்ன, அங்கு வந்தும் ஒரு தமிழர் எழுதுகிறார், இலங்கை எல்லோருக்குமான நாடாம், இதில் தமிழ் இடம், சிங்கள இடம் என்று பார்க்கவேண்டாமாம், இனங்கள் நல்லிணக்கத்துடன் பிரச்சினைகள் நீங்கி சமாதானத்துடன் வாழும் நிலையில் இதுபோன்ற காணொளிகள் இனவாதத்தை தூண்டுகிறதாம்!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரஞ்சித் said:

நேற்று பவனீசன் எனும் யூதியூப் இளைஞனின் மணலாறு, மண்கிண்டிமலை பகுதி காணொளி பார்த்தேன். 20 வயதுதான் இருக்கும். அவனுக்கிருக்கும் இன உணர்வில் 10 வீதம் சிலருக்கிருந்தாலே பலரை விழிக்க வைக்கலாம். ஆனால் என்ன, அங்கு வந்தும் ஒரு தமிழர் எழுதுகிறார், இலங்கை எல்லோருக்குமான நாடாம், இதில் தமிழ் இடம், சிங்கள இடம் என்று பார்க்கவேண்டாமாம், இனங்கள் நல்லிணக்கத்துடன் பிரச்சினைகள் நீங்கி சமாதானத்துடன் வாழும் நிலையில் இதுபோன்ற காணொளிகள் இனவாதத்தை தூண்டுகிறதாம்!

ரஞ்சித் காணொளியை இணைத்தால் நாங்களும் பார்க்கலாமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

ரஞ்சித் காணொளியை இணைத்தால் நாங்களும் பார்க்கலாமில்ல.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

குருந்தூர் மலையில் நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மீஹா ஜந்துர சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

அவசர அவசரமாக நிகழ்த்தப்பட்ட இந்த கூட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசீனம் செய்து இன்றைய பொங்கல் நிகழ்வை எப்படியாவது தடுத்து நிறுத்தும் நோக்கத்தை மட்டுமே கொண்டது. சரியான வியூகமும் திட்டமிடலும் இல்லாமல் தேரர்களை சந்திக்கச் சென்ற தமிழ்த் தரப்பு விட்டுகொடுப்புகளை செய்வதற்கு உடன்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. நயவஞ்சகமாக  இப்போதைக்கு பொங்கல் விழா தடுக்கப்பட்டு சில நாட்களில் பின் நீதிமன்ற தீர்ப்பை மாற்றி எழுதும் வரை இந்த தேரர்கள் இனவாத சிங்கள அரசியல்திவாதிகளுக்கு வேண்டிய  அவகாசத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டு கூட்டமும் சேர்ந்து  மதக்கலவரம் ஒன்றை உருவாக்கி விடுவார்கள் போலுள்ளது.

இருக்கின்ற  சிறு தொகை தமிழர்களையும் அழிக்க நன்றாக திட்டம் தீட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

இதுபோன்ற காணொளிகள் இனவாதத்தை தூண்டுகிறதாம்!

சரத் வீர சேகர சொன்னதை அவர் கேட்கவில்லையோ, மொழி விளக்கமில்லையோ அவருக்கு?

முல்லைதீவில் மக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன் ஒரு கத்தோலிக்க பாதிரியார் அருட்தந்தை பயஸின் சகோதரர் அவரும் பாதிரியார் ஏழைமக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்தாராம் ஆனால் போரின்போது மக்கள் வெளியேறிவிட்டனர் அந்த இடங்களெல்லாம் இப்போ சிங்களமயமாகியிருக்கும், அதே போன்று எண்பத்தியோராம் ஆண்டளவில் மனித முன்னேற்ற நடுநிலையம் எனும் பெயரில்கத்தோலிக்க நிறுவனம் நெடுகேணியில் தமிழ் மக்களை குடியேற்றி ஆதரவளித்து வந்ததாம், அவர்களின் குடியிருப்புகளை சிங்களவர் நெருப்புவைத்து துரத்தியடித்ததாக அறிந்தேன். அதே போன்று இங்கு சில பகுதிகளில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சம்மாட்டிமார் கரைவலைத்தொழில் செய்து வந்தனர், தெற்கைச்சேர்ந்தவர்களை தொழிலுக்கு அமர்த்தி. போராட்ட காலத்தில் அவர்களால் அங்கு போக முடியவில்லை, தமிழருக்கு கூலிக்கு வந்த சிங்களவர் இப்போ அங்கு அந்த தொழிலை தொடர்வார்கள். தமிழரிடம் தொழிலை கற்று அவர்களை விரட்டிவிட்டு அவர்கள் இப்போ தொழிலதிபர். விரட்டியடிக்கப்பட்டவர்கள் சிலர் இறந்து விட்டனர், பலர் வெளிநாடு சென்றுவிட்டனர், இருப்பவர்கள் மதத்தை இனத்தை காட்டிக்கொடுத்து புகழாரம் பெறுகின்றனர். சைவருக்கு அடித்தால் கேள்விகேட்க யாருமில்லை, கிறிஸ்தவர்களும் சேர்ந்தால் அடிப்பது கஸ்ரம். ஆகவே கிறிஸ்தவரை பயங்கரவாதிகளாக்கி சைவரைக்கொண்டு அடித்து விரட்ட வைத்து இறுதியில் ஒரே அமுக்கு. சிங்களம் கைவசம் நிறைய திட்டங்கள் வைத்திருக்கு தமிழரை அடிபட வைக்க. சரத் வீர சேகர அறைகூவல் விட்டிருக்கிறார், அடுத்து சாதிச்சண்டை கிளப்ப. தமிழர் நாம் ஒன்றுபட்டு சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒட்டுண்ணிகளை ஓரங்கட்ட வேண்டும், நமது இனத்தில் மதத்தில் இருந்து ஒதுக்கி சிங்களத்துக்கு விரட்டிவிட வேண்டும். அனாதைகளாய் அலையும்போது தெரியும் இனத்தின் அருமை. இது ஒன்றே எதிரியை விரட்ட நம் கையில் உள்ள ஒரே ஆயுதம்.   

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் வரலாற்று புகழ் மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் - சிறீதரன்

18 AUG, 2023 | 08:04 PM
image
 

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் பாரம்பரியமான, வரலாற்று  புகழ் மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற பொங்கல் வழிபாட்டில் பங்கேற்று, பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மிகப் பெரிய அடாவடிகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் குவிக்கப்பட்ட பொலிசார் மற்றும், விசேட அதிரடிப்படையினருக்கு மத்தியிலும், குருந்தூர்மலையில் அத்துமீறி விகாரை அமைத்திருக்கின்ற பிக்குவின் அடாவடிகளுக்கு மத்தியிலும் இந்த பொங்கல் நிகழ்வு மக்களுடைய கூட்டு முயற்சியாலும், அனைவருடைய ஒத்துழைப்புடனும் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட தடைகள் இருந்தும் அந்தத் தடைகளைத் தாண்டி நீதியின் பக்கம் நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதித்துறையினுடைய நியாயமான பக்கங்கள் எண்ணத்திலெடுக்கப்பட்டு, அந்த எண்ணத்தின் அடிப்படையில் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் நடைபெற்ற இந்த பொங்கலுக்காக நாம் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழர்கள் ஆதிகாலம் தொட்டு அவர்கள் வணங்கிவந்த, வாழ்ந்துவந்த அவர்களது வரலாற்று அடையாளமான குருந்தூர் மலையிலே, தமிழர்களுடைய இருப்பினை இல்லாமல்செய்து குருந்தூர்மலையை பௌத்த தொல்லியல் இடமாக ஆக்கிரமித்து விகாரை அமைக்கும் முயற்சிகைளை மேற்கொண்டு அந்த விகாரை எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களத்தினுடைய முழுமையான ஆதரவுடனும், அரச ஆதரவுடனும் கட்டப்பட்டிருக்கின்றது.

அதே வேளை ஆதிசிவன் ஐயனார் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு, இந்த இடத்தில்தான் நீங்கள் பொங்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. அதிலும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக நிலத்திலே கற்கள் வைத்து கற்களுக்கு மேல் தகரம் வைத்து தகரத்தின் மேல் கற்கள் வைத்தே பொங்கல் செய்யவேண்டும் என்ற அதிசயமான சட்டங்களை இந்த மண்ணில், இந்த ஆலயத்தில் என்னால் காணமுடிந்தது.

தொல்லியல் என்பது அடையாளமாக வைத்துப் பார்க்கவேண்டிய இடமே தவிர, அந்த இடம் விகாரை கட்டப்படவேண்டிய இடமல்ல.

இங்கே சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம், தமிழர்கள் வாழ்கின்ற பூர்வீக நிலங்களுக்கொரு சட்டமாக ஆக்கிரமிப்பாளர்களது நிலையை நாம் இந்த இடத்தில் காண்கிறோம்.

இது தமிழர்களுடைய இருப்பையும், அவர்களுடைய எதிர்கால வாழ்வையும் மிகப்பெரிய கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது.

ஆனாலும் நாம் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், எங்களுக்குள் இருக்கிற வேற்றுமைகளுக்கு அப்பால் ஒற்றுமையாக அனைத்துத் தமிழர்களும் இணைந்து எம்பெருமான் சிவனுக்குரிய அரோகரா என்ற நாமத்துடன் இந்த பொங்கல் விழாவைச் செய்திருக்கின்றோம். இந்தப் பொங்கல் விழா தொடர்ந்து மாதாந்தம் இடம்பெறும்.

அதே வேளை எங்களுடைய மக்களின் இருப்பும் அவர்களுடைய தொன்ம அடையாளங்களும் பேணப்படும் வகையில் எங்களுடைய செயற்பாடுகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

இந்த இடத்திலே,  பாரம்பரியமான வரலாற்று  புகழ்மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் அனைவரும் இணைந்து முன்னெடுப்போம் - என்றார்.

https://www.virakesari.lk/article/162677

  • கருத்துக்கள உறவுகள்

காணொளிகள் இணைப்புக்கு நன்றி @ரஞ்சித்.

15 hours ago, ரஞ்சித் said:

 

 

 

 

வணக்கம் ரஞ்சித்,

இவற்றையும் இவை போன்ற காணொளிகளையும் தனித்திரி ஒன்று திறந்து அங்கும் இணைக்க முடியுமா?

பறி போன / போய்க் கொண்டு இருக்கும் நிலங்கள் என்றோ அல்லது மேலும் செறிவான தலைப்பையோ இடலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

வணக்கம் ரஞ்சித்,

இவற்றையும் இவை போன்ற காணொளிகளையும் தனித்திரி ஒன்று திறந்து அங்கும் இணைக்க முடியுமா?

பறி போன / போய்க் கொண்டு இருக்கும் நிலங்கள் என்றோ அல்லது மேலும் செறிவான தலைப்பையோ இடலாம் என நினைக்கிறேன்.

நிச்சயமாக நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரஞ்சித் said:

அங்கு வந்தும் ஒரு தமிழர் எழுதுகிறார், இலங்கை எல்லோருக்குமான நாடாம், இதில் தமிழ் இடம், சிங்கள இடம் என்று பார்க்கவேண்டாமாம், இனங்கள் நல்லிணக்கத்துடன் பிரச்சினைகள் நீங்கி சமாதானத்துடன் வாழும் நிலையில் இதுபோன்ற காணொளிகள் இனவாதத்தை தூண்டுகிறதாம்!

கண்டிப்பாக இது சிங்களத்தால் மூளை கழுவப்பட்டு, கடைந்தெடுக்கப்பட்ட அருண் சித்தாத்தனின் கருத்தாகவே இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

அப்படி சிங்களம் சொல்லவில்லையே, இவருக்கு புரிதலில் பிரச்சனை இருக்கிறது.

எங்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற இயன்றவரை பலவழிகளில் போராடினோம், பேசினோம் எந்த பயனுமில்லை. முடிந்தவரை உரிய இடங்களுக்கு எடுத்துச் சென்று கதவுகளை தட்டிச்சொன்னோம் யாரும் நம்பவில்லை. இப்போ அவர்களாகவே எமது இயலாமையில், இவர்களால் எங்களை  என்ன செய்துவிட முடியும் எனும் மமதையில், முன்பு இந்த நாட்டில் தமிழருக்கு என்ன நடந்தது, ஏன் தமிழர் ஆயுதம் தூக்க வேண்டி வந்தது என்பதை, தாங்களாகவே உலகத்துக்கு எடுத்துச் சொல்கிறார்கள். அதை எமது இன அழிப்போடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துச் சென்று நிஞாயம் கேட்பது நமது கடமை. சும்மா பறந்து அறிக்கை விட்ட சுமந்திரன் இதை கொண்டு செல்லலாமே? பௌத்தத்தோடு சேர்ந்து ஆட்டம் போடும் சைவத் கலைவர்கள் என்று சொல்வோர் அந்த மதத்திலிருந்தும் தலைமையில் இருந்தால், அதிலிருந்தும் நீக்கப்பட வேண்டும். விடுதலைக்காக தோளோடு தோள் நின்று போர் புரிந்த கிறிஸ்தவ தமிழரை பயங்கரவாதிகள் என்றும், சைவரை தங்களோடு சேர்ந்து அவர்களுக்கெதிராக போராட அழைக்கிறார்கள் என்றால்; சைவத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக சிங்களம் பாவிக்கிறது. இது தெரியாத சச்சியரை பப்பா மரத்திலேற்றி, சைவம் காத்த காவலன் என்று ஒரு கூட்டம் புகழாரம் சூட்டுது என்றால், ஒரு சோரம் போன கூட்டம் இவருக்கு பின்னால் இயங்குது என்பது வெள்ளிடைமலை.    "அழிவு அகந்தையோடும் ஆணவத்தோடும் ஆரவாரத்தோடும் வரும். அழிவுக்கு முந்தியது அகந்தை வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமை."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.