Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜயலட்சுமியை இயக்குவதே "திராவிட கட்சி"தான்.. "லட்சுமிகளின்" பின்னாடி அவங்கதான்.. எகிறிய சீமான் கட்சி

HemavandhanaUpdated: Sunday, September 3, 2023, 6:40 [IST]
Vijayalakshmi complaint and Seeman Naam Tamizhar party slams Diravidian parties

திராவிட கட்சிகள்: ஊட்டியில் சீமான் பேசும்போது, நடிகை விஜயலட்சுமி என் மீது குற்றம் சாட்டியது போலவே, பிரபல கன்னட நடிகர் உட்பட பலர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.. அதற்கான வீடியோவை பாருங்கள்.. லட்சியங்களுடன் அரசியலுக்கு வந்துள்ள என்னை லட்சுமிகளை வைத்து அவதூறு பரப்புகின்றனர்... என்னுடைய வளர்ச்சியை தாங்க முடியாமல், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பெண்களை வைத்து அரசியல் கட்சிகள் அவதூறு பரப்புகின்றன.

இது மிகவும் கீழ்த்தரமான கேவலமான அரசியலாகும். ஒரு நாள் நான் வெடித்து சிதறினால் அரசியல் கட்சிகள் தாங்காது. விஜயலட்சுமியை நான் கல்யாணம் செய்து இருந்தால் கல்யாண போட்டோவையோ, அல்லது கோவிலில் எடுத்த போட்டோவையோ அவர் வெளியிடட்டும் என்றார்.

லட்சுமிகளின் பின்னணியில் சில கட்சிகள் இருப்பதாக சீமான் கூடிறய நிலையில், நடிகை விஜயலட்சுமி பின்னணியில் திராவிட கட்சிகள் இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் மகளிரணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை சார்பில், நடிகை விஜயலட்சுமி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் தந்துள்ளனர்.

விஜயலட்சுமி: பிறகு செய்தியாளர்களிடம் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்ஹானா சொன்னதாவது, "நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பக்கூடிய நபர். இப்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி சீமான் மீது பொய்யான புகாரை விஜயலட்சுமி பரப்பி வருகிறார். விஜயலட்சுமி பணம் பறிக்கும் நோக்கிலேயே சீமான் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். இதன் பிண்ணனியில் திராவிட கட்சிகளின் தூண்டுதல் இருக்கிறது.

12 வருடங்கள் கழித்து பொய்யான புகாரை அளிக்கும் விஜயலட்சுமி ஒரு பெண் என்பதால் சீமான் பொறுமையாக இருக்கிறார்.. ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி பல ஆண்கள் மீது புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இதனை தொழிலாகவே அவர் செய்து வருகிறார். நடிகை விஜயலட்சுமியிடம் யார் யாரெல்லாம் பணம் கொடுத்து உள்ளனர் என்ற ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

புகார்கள்: இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில தலைவர் சேவியர் பெலிக்ஸ், "கடந்த 2011ம் ஆண்டு புகார் தந்துவிட்டு, மறுபடியும் இப்போது 2023ம் ஆண்டு அதே புகாரை அளிக்கிறார். இதையெல்லாம் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாது... ஆர்ட்டிவிசியல் இன்ட்டலிஜென்ஸ் மூலமாக சீமானும், விஜயலட்சுமியும் ஒன்றாக இருப்பது போல போட்டோவை உருவாக்கி இருக்கிறார்கள்.

விஜயலட்சுமியுடன் சீமான் திருமணம் செய்து கொண்டது என்பது நடக்கவே இல்லை... 2011ல் போடப்பட்ட வழக்கு பொய்யான வழக்கு. அதனை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். யார் மீதும் புகார் கொடுக்கலாம், வழக்கும் பதிவு செய்யப்படலாம். ஆனால் நீதிமன்றம் தான் அதற்கு முறையாக தீர்ப்பு வழங்க வேண்டும்...

இழப்பீடு தொகை: 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பதற்காக விஜயலட்சுமி அவதூறு பரப்புகிறார். ஹரி நாடார் அவருக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்பதற்காக புகார் அளித்தவர்தான் இந்த விஜயலட்சுமி... விஜயலட்சுமி அளித்த பொய்யான புகாரில், காவல் ஆய்வாளர் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.. இது குறித்து நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட உள்ளோம்" என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த சீமான், "போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் விசாரிப்பார்கள்.. அது போலீசாரின் கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள்... அதுக்கெல்லாம் பயப்படும் ஆளில்லை... நான் வேறு ஊருக்கும் ஓடிப்போகவில்லை. வேறு மாநிலத்திற்கும் ஓடிப்போகவில்லை" என்றார்.
பயம் இருக்கட்டும்: உடனே செய்தியாளர், அதிமுக ஆடசியில் நடவடிக்கை இல்லை, ஆனால், திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சொல்கிறாரே? என்றார்..

அதற்கு சீமானோ, "தாராளமா நடவடிக்கை எடுங்களேன்.. என்னதான் எடுப்பீங்க எடுங்களேன் நானும் பார்க்கறேன்.. எனக்கு பயமில்லை.. அந்த பயம் உங்களுக்கு இருக்கட்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/chennai/vijayalakshmi-complaint-and-seeman-naam-tamizhar-party-slams-diravidian-parties-535329.html

  • Replies 203
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் உடன் வரும் சிறுவன் யார்? சொத்துக்காக தன் மகன் என்கிறாரா? - விளக்கும் சீமானின் மாமியார்

Yesterday at 10 AM
சீமான் தன் மனைவி கயல்விழியுடன்

சீமான் தன் மனைவி கயல்விழியுடன்

அந்த சமயத்தில் தனக்கு இரண்டு மகன்கள் என சீமான் குறிப்பிட்டது இப்போது பலருடைய பேசு பொருளாகியிருக்கிறது. சீமான் பத்தாண்டுகளுக்கு முன்பு, மறைந்த முன்னாள் தமிழக சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு கடந்த 2019ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். 

’’சீமானின் மனைவி கயல்விழியின் உடன்பிறந்த சகோதரி அமுதா. இவங்களுக்குத் திருமணமாகி மாப்பிள்ளை அமெரிக்காவுல இருந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு பையன். ஆனா கணவன் மனைவி இடையே கொஞ்சம் பிரச்னை உண்டாகி பிரிஞ்சும் இருந்தாங்க. 

இந்தச் சூழல்ல ஒரு வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு அமுதா இறந்துட்டாங்க. மனைவி இறந்ததும் அந்த அமெரிக்க மாப்பிள்ளை தன்னுடைய மகனைத் தன்னுடன் கூட்டிட்டுப் போக விரும்பியிருக்கார். ஆனா 14 வயசிருக்கும் அந்தப் பையனை சீமான் அனுப்ப மறுத்துட்டார். அந்தப் பையனை இப்ப வரைக்கும் சீமான் தன் வீட்டிலேயே வளர்த்து வர்றார். கட்சிக்காரர்களைப் பொறுத்தவரை அந்தப் பையன் சீமானின் வளர்ப்பு மகன். ஆனா இந்தப் பையனுக்கு ரத்த சொந்தமான அப்பா இருக்கும் போது எதுக்காக சீமான் தன் வீட்டுலயே வச்சிருக்கணும்? இந்த இடத்துல தான் சீமானின் செயல் பேசுபொருளாகியிருக்கிறது. மறைந்த காளிமுத்துவின் குடும்பத்துக்கு சொத்துகள் இருக்கு. அமுதா பங்குக்குக் கிடைக்க வேண்டிய சொத்துக்காக இதைச் செய்கிறார் எனவும் சிலர் விமர்சிக்கறது எங்களுக்கு சங்கடமாக இருக்கு." என வேதனைப்பட்டனர். இப்படி அடுக்கடுக்காக சீமான் குறித்த தகவல்கள் வர, இது தொடர்பாக சீமானின் மாமியார் மனோகரி காளிமுத்துவைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

" என் பொண்ணு இறந்த துக்கத்துல இருந்து கூட நான் இன்னும் மீண்டு வரலைங்க. என் பெரிய பொண்ணுக்கும் அவ மாப்பிள்ளைக்கும் பிரச்னை இருந்தது நிஜம்தான். அவ இறந்ததுக்குப் பிறகு ஆகில் (பேரன்) அவனாத்தான் அவன் அப்பா கூட போக மாட்டேனுட்டான். அவன் இங்கேயே இருந்து பழகினதுதான் காரணமா இருக்கலாம். அவன் என் சின்ன மகளை கயலம்மான்னுதான் கூப்பிடுவான். சீமானையும் ஆரம்பத்துல சித்தாப்பானுத்தான் கூப்பிட்டிட்டிருந்தான். சமீபமாத்தான் அப்பானு சொல்றான். குழந்தையே அப்படிக் கூப்பிடறதால அவருமே பேட்டிகள்ல எனக்கு ரெண்டு மகன்கள்னு சொல்றார். இதை வச்சுகிட்டு யாரும் தப்பும் தவறுமா கிளப்பி விடுறாங்களோ என்னவோ?

பையனுக்கு உரிமை இருக்கிற அப்பா அவனைக் கூப்பிட்டா நாங்க அனுப்ப முடியாதுன்னு சொல்ல முடியுமா? நாளைக்கே விவரம் தெரிஞ்ச பிறகு, அதாவது மேஜர் ஆன பின்னாடி அப்பா கூட அமெரிக்கா போறேன்னு சொன்னா நாங்க அனுப்பிதான் ஆகணும். இதான் உண்மை’’ என்றவரிடம், விஜயலட்சுமி சீமான் மீது கூறிய புகார்கள் குறித்தும் கேட்டோம்.

’ஆரம்பத்துல சீமான் எங்க வீட்டுல வந்து என் மகளைக் கேட்டப்ப அவருக்குக் கட்டித்தர நான் சம்மதிக்கலை. ’இவருடைய குணம் தெரியாது; எப்படி இருப்பாரோங்கிற பயம்தான் காரணம். ஆனா ஒரு வருஷம் போராடி பல பெரிய ஆளுங்களை எங்கிட்டப் பேச வச்சார். அதுல சிலர் மறைந்த என் கணவருக்கும் நன்கு அறிமுகமானவங்களா இருந்ததால. அவங்க மேல இருந்த மரியாதையில கடைசியில திருமணத்துக்குச் சம்மதிச்சேன். அவரு கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தார்னு எனக்கும் தெரியாது. அதைத் தெரிஞ்சும் என்ன ஆகப் போகுது. கடந்த காலங்கள் எதுக்கு? ஆனா என் மகளை இப்ப வரைக்கும் நல்லபடியா பார்த்துக்கிடுறார்.

விஜயலட்சுமிங்கிற இந்த நடிகை இவங்க கல்யாணம் நடந்தப்பெல்லாம் எங்க போயிருந்தாங்க? செய்தியாளர்கள் கேட்ட அதே கேள்வியைத்தான் நானுமே கேட்பேன். அன்னைக்கு வந்திருந்தா நானே அந்தக் கல்யாணத்தை நிறுத்தியிருப்பேனே?

சில வருஷத்துக்கு முன்னாடியும் இதே புகாரைச் சொன்னாங்க. இப்ப மறுபடியும் வந்திருக்காங்க. என்ன நோக்கம்னு எங்களுக்குத் தெரியலை. ஆனா இந்த விவகாரத்தை எப்படிப் பார்க்கணுமோ அதை மருமகன் பார்த்துப்பார் என்ற மனோகரி, புகார் சம்பவத்துக்குப் பிறகு தன்னைப் பார்க்க, தன்னிடம் பேச சீமான் ரொம்பவே சங்கடப் படுவதாகவும் கூறுகிறார்.

https://www.vikatan.com/trending/seemans-mother-in-law-shares-about-seeman

டிஸ்கி

மனோகரி காளிமுத்து இந்த விடயத்தை இங்கே எழுதும் பலரை விட மனிதாபிமானத்துடன் அணுகியுள்ளார்.

ஒரு கோக்குமாக்கு அரசியல்வாதியின் துணைவி, இன்னொரு கோல்மால் அரசியல்வாதியின் மாமியார் என்பதால் யதார்த்தம் புரிந்திருக்கும் போல.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

இங்கே எழுதுவோருக்கு - நேரமினக்கேடுதான்.

ஆனால் இது அரசியல்லுக்கும் அப்பாற்பட்ட விடயம்.

1. எவ்வளவு மோசமான பெண்ணாக இருந்தாலும், இந்த விடயத்தில் அவர் சொல்லுவதை நம்ப தேவையில்லை ஒரு fair hearing ஆவது கொடுக்க வேண்டும் என இங்கே பலரால் யோசிக்க முடியவில்லை.

2. ஏலவே பெயர் கெட்டு கிடக்கும் ஒரு பெண்ணை - “நாறல் மீனை பூனை அணுகுவது போல்” - ஏன் முக்தார் அணுகுகிறார்? என யாரும் கேட்கவில்லை. மாறாக முக்தாரிடம் போக மாட்டேன் என கூறி வீரலக்ஸ்மியிடம், விஜயலக்ஸ்மி சண்டையிட்டதை வைத்து அவருக்கு விசர் பட்டம் கட்ட பார்கிறார்கள்.

3. விஜயலக்ஸ்மி மட்டுமில்லை, கொஞ்சம் ஓவராய் கேள்வி கேட்டால் “கோசான் மட்டும் என்ன நேர்மையா?” என முகமறியா கருத்தாளர் மீதே அவதூறு எழுப்பி வாயை மூட வைக்க முயல்கிறார்கள். நாளைக்கு கோசானுக்கும் விஜலக்சுமிக்கும் கசமுசா என யூடியூப் வீடியோ வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை🤣.

4. எப்படியாவது, விஜலக்சுமிக்கு விலைமாது, விசரி பட்டம் கட்டியாவது சீமானை காப்பாற்றி விட அந்தரிக்கிறார்கள்.

இதுதனியே அரசியல்வாதி ஒருவர் மீதான தனிமனித -வணக்கம் மட்டும் அல்ல. 

அதையும் தாண்டி -மண்டையில் ஏறிப்போன ஆணாதிக்க மனோநிலையின் வெளிப்பாடே இது.

இங்கே சீமானுக்கு ஆதரவாக எழுதிய அத்தனை பேரும் - அவரின் அரசியல் எதிரியான திராவிட கொள்கையை தூக்கி பிடிக்கும் வைரமுத்துவுக்கும் ஆதரவாக எழுதினார்கள்.

இங்கே அரசியல் சித்தாந்தத்தை மேவி நிற்பது ஆணாதிக்க மனோநிலையே.

இதை எழுதினால் இவர் பெரிய முற்போக்கு முனுசாமி என நக்கல் வேறு அடிப்பார்கள்🤣.

உண்மை, ஆனால் ஆச்சரியமில்லை: தீவிர தேசியவாதம், தீவிர மதவாதம், தீவிர இனவாதம்- இவையெல்லாமே அதி வலது சாரிப் போக்குகள். அதி வலது சாரிகளிடம் இருக்கும் ஒரு பொதுக் குணவியல்பு பெண் வெறுப்பு (misogyny). எனவே, இது ஆச்சரியமில்லை.

சில ஆண்டுகள் முன்பு, கல்யாணசுந்தரம் பிரிந்த போது, வெளிநாட்டு தமிழரிடம் நிதி சேகரித்த விடயத்தை விமர்சித்த சில பெண்களையும்  நாம் தமிழர் கட்சி விசுவாசிகள் சிலர் இப்படித் தான் நடத்தினராம் எனக் கதை யாழில் வந்தது. எப்பவும் "நீல வண்ணம் பூசிய" கண்ணாடியோடு அலையும் குழு அவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அதிதீவிர வலதுசாரியம்போல் அதிதீவிர பெண்ணியவாதமும் இந்த கணணியுகத்தில் நல்லதல்ல.. ஆயிரம் ஆயிரம் திட்டமிட்டு நீதிகிடைக்காமல் பாதிக்கப்பட்ட ஆண்களை உதாரணத்தோடு என்னால் எடுத்துகாட்டமுடியும்.. ஏழை ஆதரவற்ற பெண்களுக்கான பெண்ணியம் பணக்கார புத்திசாலி பெண்களுக்கு பணம் புகழ் சம்பாதிக்க எதிர்ப்பாலினத்தை ஏமாற்றுவதற்கானதாக இந்த நூற்றாண்டில் மாறிக்கொண்டிருப்பது வேதனையான ஒன்று.. இது சீமான் மேட்டருக்காக இல்ல பொதுவாக..

  • கருத்துக்கள உறவுகள்

உலக அறிஞர் பெருந்தகைகள் எவ்வளவு எழுதினாலும் ....
தீவிரவாதிகளும் .... அவர்கள் தீவிர ஆதரவாளர்களும்  எதையும் உள்வாங்காமல் இருப்பது 
என்பது மிகுந்த வேதனை தருவதாகவே இருக்கிறது. 

நான் முன்பு காதலித்தவர் இப்போ வேறு கலியாணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் 
அப்போது இனி வரும் ஏழு ஜென்மத்துக்கும் நாம்தான் ஜோடி என்றாள் 
இடதுசாரி தனமா சிந்திச்சு ..... அவர் மீது ஒரு வழக்கை பதிவு செய்து 
மாதம் மாதம் ஒரு $5000 டொலரை வாங்கலாம் என்றால் 

மேலைநாடுகளில் பாழாய்ப்போன போலீசு காரன் எல்லாம் 
வலதுசாரி தனமா சிந்திக்கிறவனா இருக்கிறார்கள் 

உனக்கு என்ன லூசா என்று என்னைத்தான் கடிந்துகொள்வார்கள் 

இந்த இடதுசாரி சிந்தனைகளை எப்போதான் எல்லோரும் புரிந்துகொள்வார்களோ தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நான் முன்பு காதலித்தவர் இப்போ வேறு கலியாணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் 
அப்போது இனி வரும் ஏழு ஜென்மத்துக்கும் நாம்தான் ஜோடி என்றாள் 

இதுதான் தந்திரமாக சுறாவை, நெத்தலியோடு ஒப்பிடும் கதையாடல்.

சீமான் விஜயலக்ஸ்மிக்கு இடையே இருந்தது….

வெறும் முகபுத்தக காதல் அல்ல….

வெறும் No Strings Attached உறவு முறை அல்ல (இது மேற்கிலும், கிழக்கிலும் உண்டு)…..

சீமானும், விஜய லக்ஸ்மியும் வெறும் f*#% buddies அல்ல….

சீமான் தன்னை கலியாணம் செய்துகொள்வதாக சொல்லி, அதை காரணம் காட்டி தன்னுடன் பாலியல் உறவை ஏற்படுத்தி, மாலையும் மாற்றி, தனது அம்மா, அக்காவுக்கு தானே விஜயலக்சுமியின் கணவர் என்ற நம்பிக்கையை ஊட்டி, தம்பதியாக கூடி வாழ்ந்து, அதன் பின் தன்னை கைவிட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்டார் என்பதுதான் விஜயலக்ஸ்மியின் குற்றசாட்டு.

இது உண்மையா, பொய்யா நாம் யாரும் அறியோம். 

ஆனால் இப்படி நடந்து இருப்பின் …..

இது இந்திய சட்டப்படி குற்றம்.

ஒவ்வொரு சமுதாயமும் தனது விழுமியங்களின் அடிப்படையில் சிலதை குற்றம் என்றும் சிலதை குற்றமில்லை என்றும் வகைப்படுத்துகிறது.

உதாரணமாக இன்னும் இந்த உலகில் ஒரு 14 வயதான சிறுவர்/சிறுமியருடன் 18 வயதுக்கு மேலானவர் பாலியல் உறவு வைப்பது குற்றம் இல்லை எனும் நாடுகள் உள்ளன. ஆனால் நாம் வாழும் நாடுகளில் இந்த எல்லை 16 அல்லது 18.

இதை வைத்து, நாம் ஒரு 14/15 வயதினருடன் உறவு கொண்டு வீட்டு, வேறு நாடுகளில் இது குற்றம் இல்லை என வாதிட முடியாது.

நாம் வாழும் நாடுகளில் இது குற்றமே.

அதேபோல் சீமாம் நடந்து கொண்டவிதம் - இந்தியாவில் சட்டப்படி குற்றம்.

தனக்கு எதிராக ஒரு குற்றம் நிகழ்தப்பட்டிருப்பதாக ஒரு பெண் (எவ்வளவு ஏறுக்குமாறாய் கதைத்தாலும்) பத்தாண்டுக்கு மேலாக சொல்லி திரிகிறது.

இதை ஒருதரம் பக்கசார்பின்றி விசாரித்து விடுங்கள் என கேட்பதுதான் ஒரு ஆணுக்கு அழகு.

மாறாக அந்த பெண்ணையே விலைமாது, விசரி என பட்டம் கட்டுவதும், நடந்தது வெறும் முகபுத்தககாதல் என கதையாடல் புனைவதும் - சம்பந்தபட்ட ஆணை காப்பாற்றி விடும் முஸ்தீபே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 3 காணொளிகளையும் பாருங்கள். இவை அடுத்தடுத்த நாட்களில் எடுக்கப்பட்ட காணொளிகள். திராவிடத்தின் நாடகம் அம்பலம். திராவிடம் கொடுத்த பணத்தை பிரிப்பதில் 2 லட்சுமிகளுக்கும் சண்டை. திராவிட நாடகம் அம்பலம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதிதீவிர வலதுசாரியம்போல் அதிதீவிர பெண்ணியவாதமும் இந்த கணணியுகத்தில் நல்லதல்ல.. ஆயிரம் ஆயிரம் திட்டமிட்டு நீதிகிடைக்காமல் பாதிக்கப்பட்ட ஆண்களை உதாரணத்தோடு என்னால் எடுத்துகாட்டமுடியும்.. ஏழை ஆதரவற்ற பெண்களுக்கான பெண்ணியம் பணக்கார புத்திசாலி பெண்களுக்கு பணம் புகழ் சம்பாதிக்க எதிர்ப்பாலினத்தை ஏமாற்றுவதற்கானதாக இந்த நூற்றாண்டில் மாறிக்கொண்டிருப்பது வேதனையான ஒன்று.. இது சீமான் மேட்டருக்காக இல்ல பொதுவாக..

ஒரு பெண் தனக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டதாக சொல்கிறது அதை தீர விசாரியுங்கள் என கேட்பது பெண்ணியமோ, அதி தீவிர பெண்ணியமோ இல்லை.

அடிப்படை decency. 

இதே போலவே ஆண்களுக்கு இழைக்கப்பட்ட குற்றமும்.

ஆண்களுக்கு எதிராக பெண்கள் குற்றம் இழைத்துள்ளார்கள் என்பதற்காக, ஒரு பெண்ணுக்கு எதிரான குற்றத்தை விசாரிக்க தேவையில்லை என்ற நிலை எடுத்தால் - உலகில் எந்த குற்றத்தையும் விசாரிக்கத்தேவையில்லை.

7 minutes ago, புலவர் said:

இந்த 3 காணொளிகளையும் பாருங்கள். இவை அடுத்தடுத்த நாட்களில் எடுக்கப்பட்ட காணொளிகள். திராவிடத்தின் நாடகம் அம்பலம். திராவிடம் கொடுத்த பணத்தை பிரிப்பதில் 2 லட்சுமிகளுக்கும் சண்டை. திராவிட நாடகம் அம்பலம்.

நீங்கள் திராவிட நாடகத்தை அம்பலபடுத்தும் அந்தரிப்பில் திரியை முற்றாக வாசிக்கவில்லை என நினைக்கிறேன்.

இந்த வீடியோக்கள் ஏலவே பகிரப்பட்டு - அவை விவாதிக்கப்பட்டும் விட்டன (4,5ம் பக்கங்களை காணவும்).

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

டிஸ்கி

பார்ப்போம் என்ன நடக்குது எண்டு.

இந்த வழக்கை சீமானை “வழிக்கு கொண்டுவரும்” வழியாக பாவிக்காமல் - சுயாதீன விசாரணைக்கு திருட்டு திமுக இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே.

ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு: சீமான் திடீர் அறிவிப்பு

Mathivanan MaranPublished: Sunday, September 3, 2023, 12:32 [IST]

கோவை: தமிழ்நாட்டின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரதமர் மோடி போட்டியிடும் போது எதிர்த்து போட்டியிட்டால் திமுகவை ஆதரித்து அத்தொகுதியில் போட்டியிடாமல் விலக தயார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென அறிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. அதன் கூட்டணி கட்சிகளுக்குதான் பெரும்பாலான தொகுதிகளை ஒதுக்கியது. தூத்துக்குடியில் மட்டுமே எதிர்த்து போட்டியிட்டது.

If PM Modi to contest in Ramanathapuram Naam Tamilar support to DMK: Seeman

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், ராமநாதபுர்ம தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுகின்றனர். அப்படி பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடும் போது திமுக வேட்பாளரை நிறுத்தட்டும். பிரதமர் மோடிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டால் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது; ராமநாதபுரம் தொகுதியில் திமுகவை ஆதரிக்கும் என்றார்.

https://tamil.oneindia.com/news/coimbatore/if-pm-modi-to-contest-in-ramanathapuram-naam-tamilar-support-to-dmk-seeman-535419.html

டிஸ்கி

விஜி அண்ணி பெங்களூருக்கு பெட்டி கட்ட வேண்டியதுதான்.

#மண்டியிடாத….அதென்னது?…ஆ….

மானம்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா தனிப்படை இன்னுமா ஊட்டிக்குப் போய்ச் சேரவில்லை?

என்ன கோஷான் திமுக சுமானின் சாத்தானின் குழந்தைகள் பேச்சை டிவட்டி ஒட்டினமாதிரி செய்தியைப் போட்டிருக்கிறீர்கள். தமுகவால் செய்ய முடியாத 2 நிபந்தனைகளைப் போட்டிருக்கிறார் சீமான் . நாதக லோக்சபா தேர்தலில் நிச்சயம் போடடியிடும்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை.https://tamil.oneindia.com/news/chennai/seeman-issue-tamil-outfit-leader-veeralakshmi-explains-clash-with-actress-vijayalakshmi-535413.html

சண்டைதான்.. சண்டையே வந்தாலும் சீமானுக்கு எதிரான விஜயலட்சுமிக்கு ஆதரவுதான்.. வீரலட்சுமி திட்டவட்டம்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/seeman-issue-tamil-outfit-leader-veeralakshmi-explains-clash-with-actress-vijayalakshmi-535413.html

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புலவர் said:

வணக்கம் புலவர்,

சீமான் இரெண்டு விடயத்தை கோவையில் வைத்து கூறினார் (செய்தியின் அடிப்படையில், வீடியோ பார்க்க நேரம் இல்லை).

1. இராமநாதபுரத்தில் மோடிக்கு எதிராக களம் காணும் வாய்ப்பை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் - திமுகவே போட்டியிட்டால் - அந்த தொகுதியில் நாதக திமுகவை ஆதரிக்கும்.

இதுவரை திமுக இனத்தின் வைரி, கருவறுக்கப்பட வேண்டியவர்கள் என கூறிய சீமானுக்கு இது 180 நிலைமாற்றம்.

2. ஒட்டுமொத்தமாக 39 லோக்சபா தேர்தல் தொகுதியிலும் நா.த.க விலகி கொள்ளும்;

அ. காங்கிரசுடன் உறவை திமுக முறித்தால்.

ஆ. இஸ்லாமிய கைதிகளை விடுவித்தால்.

இந்த இரெண்டாம் விடயம்தான் நீங்கள் சொல்வது.

ஆனால் இராமநாதபுரத்தில் சீமான் திமுகவை ஆதரிக்க ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை - அவர்கள் வேட்பாளரை களம் இறக்கினால் போதும்.

40 minutes ago, புலவர் said:

என்னப்பா தனிப்படை இன்னுமா ஊட்டிக்குப் போய்ச் சேரவில்லை?

இப்பதானே இராமநாதபுரத்தை விட்டுகொடுத்துள்ளார்….இனி திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

அதில் வரும் சமிக்ஞைகளை வைத்து தனிப்படை விரைவு எடுக்கும் அல்லது தாமதிக்கும்.

சீமான் அதற்குள் சென்னை வந்து விடுவார்.

பிறகு சென்னையில் திமுகவுடன் டீல் இறுதியாகும் (கடும்போக்கை எடுக்க மாட்டார் என்ற டீலாக இருக்கலாம், கூட்டணியில் திமுக சேரக்கேட்க முடியாது) அல்லது வழக்கு வேகம் எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

பாவம் - அவரே நானும் ரவுடிதான் என நிறுவ படாதபாடு பட்ட மனுசன். அதுதான் விட்டு விட்டேன்.

சிலரின் வாதப்படி  எம் ஜி ஆரும் தீவிர வலதுசாரி தான்.

தமிழ் நாட்டு அரசியல் பற்றி வாதிடக்கூடாது என்றவர்கள் ஏன் சீமானின் அரசியல் நகர்வு பற்றி மட்டும் வாதிடுகிறோம்.
என்னய்யா உங்களின் நடுநிலை??

1 hour ago, goshan_che said:

ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு: சீமான் திடீர் அறிவிப்பு

அப்போ  மோடியின்  B Team??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இங்கே எழுதுவோருக்கு - நேரமினக்கேடுதான்.

ம்....

உடான்ஸ் சுவாமியாரும் வந்திட்டார்.

மட்டுக்களும் கத்தி, வீடியோக்களடோ வந்து நிக்கினம்.

நீங்கள் நிண்டு வெளாடுங்கோ.

லட்சுமி விசயத்தில முன்னேற்றம் இருந்தா வாறன், கதைப்பம். 👍

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

தமிழ் நாட்டு அரசியல் பற்றி வாதிடக்கூடாது என்றவர்கள் ஏன் சீமானின் அரசியல் நகர்வு பற்றி மட்டும் வாதிடுகிறோம்.

முதல் பக்கத்தில் இரெண்டு ஒரு வரி நகைச்சுவை பதிவுகளை மட்டும் போட்டு இந்த பதிவை கடந்தே போனேன்.

ஆனால் அதை தொடர்ந்து சீமானின் தம்பிகளும், unconscious misogynistic bias பாதிப்புக்கு உள்ளானவர்களும், அப்படியே பிளேட்டை மாத்தி போட்டு…சீமான் செய்ததாக சொல்லபடுவது ஒரு மேட்டரே இல்லை என்றும், இன்னும் சில கனவான்கள் அடுத்த படிக்கு போய் விஜயலச்சுமிக்கு பட்டமளிப்பு எல்லாம் நடத்தியதால் தொடர்ந்து எழுத வேண்டியாயிற்று.

சீமானின் அரசியல் நகர்வை எடுத்து சொல்ல வேண்டி வந்தது - ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி நடவடிக்கையில் இருந்து தப்ப தன் அரசியலை 180 பாகையால் திருப்புகிறார் என்பதை சுட்டிகாட்டவே.

53 minutes ago, nunavilan said:

என்னய்யா உங்களின் நடுநிலை??

நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடுவுநிலமை என்று எதுவும் இல்லை.

இங்கே நியாயம் - விஜலச்சுமிக்கோ, சீமானுக்கோ ஆதரவாக பேசுவதில்லை.

மாறாக - உண்மை சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவது.

3 minutes ago, goshan_che said:

unconscious misogynistic bias பாதிப்புக்கு

அநேகருக்கு unconscious bias. ஒருவருக்கு conscious misogynistic mindset - யாரென்பதை பல ஆண்டுகால யாழ்கள கருத்துகள் சொல்லும். 

45 minutes ago, Nathamuni said:

ம்....

உடான்ஸ் சுவாமியாரும் வந்திட்டார்.

மட்டுக்களும் கத்தி, வீடியோக்களடோ வந்து நிக்கினம்.

நீங்கள் நிண்டு வெளாடுங்கோ.

லட்சுமி விசயத்தில முன்னேற்றம் இருந்தா வாறன், கதைப்பம். 👍

ஆதாரத்துடன் கூடிய கருத்துக்களுக்கு -இணைந்திருங்கள்🤣🙏

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

முதல் பக்கத்தில் இரெண்டு ஒரு வரி நகைச்சுவை பதிவுகளை மட்டும் போட்டு இந்த பதிவை கடந்தே போனேன்.

ஆனால் அதை தொடர்ந்து சீமானின் தம்பிகளும், unconscious misogynistic bias பாதிப்புக்கு உள்ளானவர்களும், அப்படியே பிளேட்டை மாத்தி போட்டு…சீமான் செய்ததாக சொல்லபடுவது ஒரு மேட்டரே இல்லை என்றும், இன்னும் சில கனவான்கள் அடுத்த படிக்கு போய் விஜயலச்சுமிக்கு பட்டமளிப்பு எல்லாம் நடத்தியதால் தொடர்ந்து எழுத வேண்டியாயிற்று.

சீமானின் அரசியல் நகர்வை எடுத்து சொல்ல வேண்டி வந்தது - ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி நடவடிக்கையில் இருந்து தப்ப தன் அரசியலை 180 பாகையால் திருப்புகிறார் என்பதை சுட்டிகாட்டவே.

நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடுவுநிலமை என்று எதுவும் இல்லை.

இங்கே நியாயம் - விஜலச்சுமிக்கோ, சீமானுக்கோ ஆதரவாக பேசுவதில்லை.

மாறாக - உண்மை சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவது.

அநேகருக்கு unconscious bias. ஒருவருக்கு conscious misogynistic mindset - யாரென்பதை பல ஆண்டுகால யாழ்கள கருத்துகள் சொல்லும். 

ஆதாரத்துடன் கூடிய கருத்துக்களுக்கு -இணைந்திருங்கள்🤣🙏

நான் நடுநிலை பற்றி கேட்டது தமிழ் நாட்டு அரசியல் பற்றி விவாதிக்க கூடாது என்று விட்டு சீமானின் அரசியல், தனிப்பட்ட வாழ்வு பற்றி பிரித்து மேய்வது சரியா என்பது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அப்போ  மோடியின்  B Team??

நீங்களாகவே கேள்வியை கேட்டு விட்டு பின்னர் சீமானின் அரசியலை விமர்சிக்கிறேன் என சொல்லக்கூடாது.

சீமான் பி ஜே பி யின் B team தான்.

அதுதான் ஸ்டாலின் பிஜேபி A team ஐ விட்டு விட்டு, B டீமை அடிக்கிறார்.

எப்படி அமித் ஷா ஸ்டாலினை விட்டு விட்டு, செந்தில்பாலாஜியை அடித்தாரோ அப்படி.

அமித் ஷா ஸ்டாலினுக்கு ஒரு செய்தியை சொன்னார்.

இப்போ ஸ்டாலின் அமித் ஷாவுக்கு ஒரு செய்தியை சொல்கிறார்.

ஆளாளின் B டீமை அடிப்பதோடு நிறுத்தி கொண்டால் உங்களுக்கும், எங்களுக்கும் நல்லது - இதுதான் அந்த செய்தி.

அடியின் அகோரத்தை பொறுத்து செந்திலும், கவுண்ட மணியும்…சை…சீமானும் தம் நிலைப்பாடுகளை மாற்றி கொள்வார்கள்.

அடி ஓவராகின் “பிச்சை வேண்டாம் நாயை பிடி” என்பதாக செந்தில் திமுக வையும், சீமான் பிஜேபியின் மறைமுக முகவராக செயல்படுவதையும் கூட கைவிட நேரலாம்.

இதுதான் அரசியல்.

8 minutes ago, nunavilan said:

நான் நடுநிலை பற்றி கேட்டது தமிழ் நாட்டு அரசியல் பற்றி விவாதிக்க கூடாது என்று விட்டு சீமானின் அரசியல், தனிப்பட்ட வாழ்வு பற்றி பிரித்து மேய்வது சரியா என்பது தான்.

மேலே சொல்லி உள்ளேன்.

இது சீமானின் மீதான குற்றசாட்டு பற்றிய திரி.

இதில் வழக்கு சூடு பிடித்ததும், சீமான் திடிரென இராமநாதபுரத்தில் தி.மு.க வை ஆதரிக்க தயார் என அறிவித்தது - இந்த வழக்கில் இருந்து தப்ப கைக்கொண்ட உத்தி.

இந்த வகையில்தான் இங்கே இதை பேசுபொருளாக்கினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை நிணைத்து ரொம்ப பெருமையா இருக்கும் அதே வேலை ரொம்ப கவலையாவும் இருக்குது!

🥹🙏

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ஒருவரை நிணைத்து ரொம்ப பெருமையா இருக்கும் அதே வேலை ரொம்ப கவலையாவும் இருக்குது!

🥹🙏

விடுங்க நாதம் - சீமானை பற்றி இவ்வளவு டீப்பா யோசிக்காதீங்க🤣

—————-

திமுகவுடன் மோதுவது பங்காளி சண்டை.. நானே திராவிட கட்சிகளில் இருந்து வளர்ந்தவன்.. சீமான் அந்தர் பல்டி!

Vignesh SelvarajPublished: Sunday, September 3, 2023, 18:33 [IST]
Dravidian parties vs NTK is a fraternal war: Seeman changing his stand?

2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடப் போவதாக ஒரு தகவல் அண்மைக்காலமாக உலவி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கும் நோக்கில், தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட பரிசீலிப்பதாக பரவி வரும் தகவல் அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அவர் தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை என்றால், நான் எம்.பி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து திமுக நேரடியாக களம் கண்டால், நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. திமுகவுக்கு ஆதரவளிக்கும் என சீமான் தெரிவித்துள்ளார். திமுகவிற்கு ஆதரவளிப்போம் என சீமான் தடாலடியாகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுகின்றனர். அப்படி பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடும் பட்சத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தட்டும். பிரதமர் மோடிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டால் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. ராமநாதபுரம் தொகுதியில் திமுகவை ஆதரிக்கும்." எனத் தெரிவித்தார்.

மேலும், அதிமுக திமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டைதான். திராவிட கட்சிகளில் இருந்து வளர்ந்து வந்தவன் தான் நான். திராவிட கழகங்களுக்கும் நாம் தமிழருக்கும் இருப்பது சகோதர யுத்தம். திமுகவை வீழ்த்துவதற்கு எனக்கு அண்ணாமலை எதற்கு? திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது எனது கனவல்ல, தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. நாம் தமிழர் என்பதே சாதி ஒழிப்பு தான் என்றும் சீமான் பேசியுள்ளார்.

நடிகர் விஜயலட்சுமி புகார் மீது சீமான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுகவை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் என்றும், திமுக அதிமுகவுடன் நடப்பது சகோதர யுத்தம் என்றும் சீமான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், சீமானுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. தனித்துப் போட்டியிட்டு தன்னை விட அதிக ஓட்டு வாங்கிக் காட்ட முடியுமா என அண்ணாமலைக்கு சீமான் சவால் விட்ட நிலையில், அவரும் அதை ஏற்றுக்கொள்வதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/coimbatore/dravidian-parties-vs-ntk-is-a-fraternal-war-seeman-changing-his-stand-535489.html

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ சீமான் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தமிழ் நாட்டில் பிடித்துவிட்டார். இனி அந்த இடம் இன்னும் இன்னும் வளரும். 

  • கருத்துக்கள உறவுகள்

34 minutes ago, விசுகு said:

எது எப்படியோ சீமான் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தமிழ் நாட்டில் பிடித்துவிட்டார். இனி அந்த இடம் இன்னும் இன்னும் வளரும். 

ஆங்கிலத்தில் சொல்வதானால் nuisance value.

ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்தால் எம்பி, எம் எல் ஏ என அதிகாரத்தை நோக்கி வளரலாம்.

இல்லை என்றால் - இப்படி காலம் பூரா B team ஆக இருக்க வேண்டியதே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எது எப்படியோ சீமான் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தமிழ் நாட்டில் பிடித்துவிட்டார். இனி அந்த இடம் இன்னும் இன்னும் வளரும். 

நாம எவ்வளவு தான் குத்தி முறிஞ்சாலும், சந்திரனைப் பார்த்து நாய் குழைத்த கதைதான்.

அதால, தேவையில்லாமல், சில்லறையை சிதற விடாமல், நடப்பதை பார்த்து ரசிப்போம், என்ன சொல்லுறியள்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நாம எவ்வளவு தான் குத்தி முறிஞ்சாலும், சந்திரனைப் பார்த்து நாய் குழைத்த கதைதான்.

நாய் என்ன குழைத்தது? புட்டுக்கு மாவா?🤣

4 minutes ago, Nathamuni said:

அதால, தேவையில்லாமல், சில்லறையை சிதற விடாமல், நடப்பதை பார்த்து ரசிப்போம், என்ன சொல்லுறியள்? 🤣

இதில் பூரண உடன்பாடே.

வயிறப்சட் எண்டு இரெண்டு நாளா கிறீம் கிரக்கரும் டயட் கோக்குமாக போன வாழ்க்கையின் ஒரே எண்டெர்டெயின்மெண்ட் அண்ணந்தான்.

சும்மா கசவஞ்சி போல ரசிக்க மட்டும் செய்யாமல், இடைகிடை சில்லறையை சிதற விட்டால்தான் - கூத்தும் கெத்தா போகும். 

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடக்கட்சிகளுக்கு தமிழ்த்தேசியவாதிகள் இயக்கமாக இருப்பதில் பிரச்சினை இல்லை.(உதாரணமான நெடுமாறன்>சுபவீ.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும்பல தமிழ்தேpய இயக்கங்கள்.) அவர்கள் தமிழ்த்தேசியம் பேசலாம் ஆனால் மாறிமாறி திமுக .அதிமுக விற்கு அதரவாக தேர்தல் டமடைகளில் பேசலாம். பெச்சாளர்களுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தேர்தல் அரசியலில் இறங்கி வாக்ககளைப் பிரிக்கக் கூடாது.திமுகவின் 15 இற்கும் மேறபட்ட கட்சிக்கூட்டணிக்கும் அதிமுக தனித்தோ கூட்டணியாகவோ போட்டியிட்டால் அவர்களுக்கு இடையான வாக்கு வித்தியாசம் 3 அல்லது 4 சதவிகிதம்தான் எப்போதும் இருக்கும்.தனித்த வாக்குவங்கி திமுகவைை விட அதிமுகவுக்கு அதிகம். திருமா>கம்மினியூஜ்ட்டுகள் வேல்முருகன் கிருஸ்னசுவாமி பொன்றவர்களுக்கு நடாளுமன்றத்தேர்தலில் திருமாவுக்கு 2 சிற்மட்டும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு வற்புறுத்தப்படுவார்கள்.காங்கிரசுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சி என்பதால் மந்திரிப்பதவிகளுக்ககாக  கொஞ்சம் அதிக சீற்கள் ஒதுக்குவார்கள். ஆனால் சிமான் தனித்து நின்று 1>4>7 வீதம் என்று ஜம்பண்ணிக்கொண்டு போகிறார் வருகிற நாடாளுமன்றத்தில் 10 வீத்துக்கு மேல் தனித்து பெற்றால் இரு கட்சிகளின் வெற்றி வாய்ப்பும் கேள்வக்குறியாக்கப்படும் கூட்டணிக்கட்சிகள் இந்த சந்தர்பத்தை பாவித்து அதிக சீற்றுக்கள் கேட்பார்கள். அத்துடன் சொந்தச் சின்னத்தில் நிற்டகபாம் என்று அடம்பிடிப்பார்கள் அணிமாறுவதாக மிரட்டுவார்கள் சிலவேளைகளில் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் கூட்டணி ஆட்சியைக் கோருவார்கள். இதனால் சீமானை தட்டி வைக்க முயல்கிறார்கள். பணம் கொடுத்து சீமானை வாங்க முடியாததால் பெண்களை வைத்து அரசியல் சூதாட்டம் ஆடுகிறார்கள். அதுவும் தேர்தல் நேரத்தில். விஸயலட்சுமி தேர்தல் நேரங்களில் மட்டும் வெளியே வருவார். 2011>2021 இப்பொழுது2023 .நாடளுமன்றத் தேர்தல் முடிந்ததும் உறங்குநிலைக்குப் போய் விடுவார். மீண்டும் சட்டமன்றத் தேர்தலுக்கு வருவார்.திராவிடம் இப்பொழுதுதான் ஓருவலுவான தமிழ்த்தேசிய எதிரியைச்சந்திக்கிறது. அதிலும் இளந்தலைமுறை வாக்குகளை அது கணிசமாகப் பெறுகிறது. அதிலும் விஸய் போன்றவர்கள் அரசியலுக்கு வரும் பொழுது நிலமை மேலும் சிக்கலாகும்.அதுதான் இந்தச் சூதாட்டங்களை ஆடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.