Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?

- வ.ந.கிரிதரன் -

பாரதியார் ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டி வரவேற்று 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/ மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது /அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ". இதன் மூலம் ருஷ்யப் புரட்சியினை இனங்கண்டுகொண்டு முதன்முதலாகப் பாடிய இந்தியக் கவிஞனென்ற பெருமையினையும் பாரதியாரே தட்டிக் கொள்கின்றார். பாரதியின் 'மாதர் விடுதலை' பற்றிய கவிதைகள், கட்டுரைகள், 'கியூசின்' என்னும் வீரமாதினைப் பற்றிய கட்டுரைகள், அம்மாதின் கவிதை மொழிபெயர்ப்புகள், புதிய ருஷ்யாவைப் பற்றிய கவிதை, 'செல்வம்', 'தொழிலாளர்' என்னும் தலைப்பிலான கட்டுரைகள், மற்றுமவர் தத்துவப் பாடல்கள் இவையாவுமே நமக்குக் கூறி நிற்பவை தானென்ன? பாரதி ஒவ்வொரு விடயத்தினைப் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட கருத்துகளையும் வெகு நுணுக்கமாகப் பரிசீலித்துள்ளாரென்பது மட்டுமல்ல, சமகாலத்து நடப்புகளையும் அறிந்துள்ளாரென்பதையும்தான்.

இன்றைய உலகில், முரணான பல்போக்குச் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பார்வைகளில் பாரதியினைக் கண்டு புளகாங்கிதமடைந்து கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியின் உண்மையான நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முயல்வது மிகவும் அவசியம். இது பற்றிய அவனது முரண்பட்ட போக்குகளை, தேடலை அவனது எழுத்துகளினூடே அறிந்து கொள்ள முயலவதே சாலச் சிறந்தது.

'பாரத சமுதாயம்' என்னும் கவிதையில் அவன் பின்வருமாறு பாடுகின்றான்: "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை./ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை/ மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?/மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?/பலனில் வாழ்க்கை இனியுண்டோ?" இவ்விதம் பாரதியின் கவிதைகள் 'பொதுவுடமை'யினையும் 'சமத்துவத்தையும்' வரவேற்றுப் பாடுகின்றன. இவ்விதம் பொதுவுடமைக் கருத்தினை வரவேற்றும், ஆயுதம் தாங்கி நிகழ்த்தப்பட்ட ருஷ்யப் புரட்சியினையும் வரவேற்றுப் பாடிய பாரதியை மார்க்ஸியவாதிகள் புரட்சியினை , ஆயுதப் புரட்சியினை வரவேற்றிடும் ஒரு கவிஞனாக எண்ணி விடுகின்றார்கள். ஆனால் உண்மை இதுவா? பாரதியாரின் ஆவேசத்தினையூட்டிடும் சுதந்திரப்பாடல்களையும், பாப்பாப் பாட்டில் "பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்/பயங்கொள்ளலாகாது பாப்பா!/மோதி மிதித்து விடு பாப்பா! /அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!" என்று பாடுவதையும் பார்த்துவிட்டு அவர் வன்முறையின் மூலம் தீர்வு காண்பதனையே விரும்புவதாக ஒரு சாரார் கருதிவிடுகின்றார்கள். ஆனால் இவை எல்லாவற்றையுமே தவிடு பொடியாக்கி விடுகின்றது பாரதியின் 'செல்வம்' என்ற கட்டுரை. அதில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:

"ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடமையாகி விட்டது. இக்கொள்கை ஜெர்மனியிலும் ஆஸ்த்திரேலியாவிலும் துருக்கியிலும் அளவற்ற வன்மை கொண்டு வருகின்றது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரமாண்டமான பகுதியாக நிற்கும் சைபீரியா தேசம் ருஷ்யாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததால் அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்து விட்டது. அங்கிருந்து இந்தக் கொள்கை மத்திய ஆசியாவிலும் பரவி வருகின்றது. ஐரோப்பாவிலுள்ள பிராண்ஸ் இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைத் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள் புரிந்து வருகின்றார்கள். ஆனால் இந்த முறைமை போர் கொலை பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க ஸமத்வம், ஸகோதரத்துவம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் குத்துவெட்டு பீரங்கி துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கையென்று நான் நினைக்கின்றேன்.."

இதே கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பாரதியார் பின்வருமாறு கூறுகின்றார்:

"..'கொலையாளிகளை அழிக்க கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகின்றது. நியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேருகிறது' என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமேயொழிய குறைக்காது. பாபத்தை புண்ணியத்தாலே தான் வெல்ல வேண்டும். பாபத்தை பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை..." இவ்விதமாகக் கூறுமவர் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:"மேலும் ருஷ்யாவிலுங்கூட இப்போது ஏற்பட்டிருக்கும் 'ஸோஷலிஸ்ட்' ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை. சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரேயடியாகக் குறைந்து போய் மஹாபலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் 'கூட்டு வாழ்க்கை' குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்தில் ருஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த வல்லரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டு...".

இவை எவற்றை எமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஒன்றினை மட்டும் அவை எமக்கு வெகுதெளிவாகவே உணர்த்தி நிற்கின்றன. அதாவது பாரதியார் பொதுவுடமைச் சமுதாயத்தினை ருஷ்ய அமைப்பு முறையினை வரவேற்றிடுகின்றார். ஆனால் ருஷ்யப் புரட்சி நிகழ்ந்த முறையினைத் தான் வரவேற்றிடவில்லை. அதே சமயம் ருஷ்ய நாட்டினைக் கொடுங்கோலன் ஜார் வருத்தி வந்திட்ட முறையினைக் கண்டு மனம் வெதிர்த்திட்ட பாரதியார் அக்கொடுங்கோலனின்றும் ருஷ்ய மக்களை விடுவித்த புரட்சி என்பதற்காக ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டிய போதும் வன்முறைப் புரட்சியினை அவர் மனம் ஒப்பவில்லை.

அதே சமயம் 'ருஷ்யாவின் விவாக விதிகள்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதுகின்றார்:

"..போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவ்ர்களிலே சிலர் அதன் மீது ராஹரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கட்சியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்ற அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால் 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு'. ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்ஜியத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்க முடியும்? சில தினங்களின் முன்பு இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரஞ் செய்யப்படும் 'மாஞ்செஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிகை நவீன ருஷ்யாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விபரங்களைப் பிரசுரஞ் செய்துள்ளது. அவற்றைப் பார்க்கும்போது நவீன ஐரோப்பிய நாகரிகம் என்று புகழப்படும் வஸ்த்துவின் நியாயமான, உயர்ந்த பக்குவநிலைமை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கின்றதென்று தெளிவாக விளங்குகின்றது. ஆன்பெண் இருபாலாரும் பரிபூர்ண ஸமானம் என்ற கொள்கைக்கு பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டை சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரிகத்தின் உண்மையான நோக்கம். ..அந்த வகையில் பார்த்தால் ஐரோப்பாவின் இதரபகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷ்யா உயர்ந்த நாகரிகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யஷமாகத் தெரிகிறது..."

இவையெல்லாம் நமக்குக் காட்டி நிற்பவைதான் யாதோ? பாரதியார் புதிய ருஷ்ய சமுதாய அமைப்பினை வரவேற்றிடுகின்றார் என்பதையல்லவா?..சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை ஆவேசத்துடன் கண்டித்த பாரதியை நவீன ருஷ்ய அமைப்பு முறை கவர்ந்திட்ட போதிலும் அது ஏற்பட்ட வழியினை அவனால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. அதனால் தான் இவ்விடயம் பற்றிய அவனது கேள்விகள் தேடல் ஆகியன அவனது பல்வேறு கட்டுரைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. அதே சமயம் மேற்படி கட்டுரைகள் அவன் தன் மனதுக்கேற்ற வழியில் இவற்றிற்கான தீர்வுகள் பற்றிச் சிந்தித்திருப்பதையும் புலப்படுத்தி நிற்கின்றன. உதாரணமாக அவனது 'செல்வம்; என்ற கட்டுரையில் பின்வருமாறு அவன் கூறுவான்:

"..முதலாவது இந்தியாவிலுள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள். எனவே கொள்ளைகளும், கொலைகளும், சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டு பிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும். செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் செய்யாது. ஸாத்தியமும் இல்லை.."

மேலுள்ள பாரதியாரின் கூற்றினை வாசிப்பவர் பாரதியாரின் முரண்பட்ட போக்கினை வெகு இயல்பாகவே விளங்கிக் கொண்டிட முடியும். பொதுவுடமையினைப் போற்றிப் பாடிடும் பாரதியார், நவீன் ருஷ்யாவினை, அதன் அமைப்பு முறையினை, அங்குள்ள பெண்களின் நிலையினை வரவேற்ற பாரதியார் "இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. .." என்று கூறுவது 'தனியுடமை'யை ஆதரிப்பதாகுமன்றோ எனக் கேட்கலாம். ஆனால் இன்னுமோரிடத்தில் "செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் பொருந்தாது.." என்று கூறுவது மறைமுகமாகக் கூறி நிற்பது தானெது? செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் கூடாது. ஆனால் அமைதியானதொரு வழியில் இதற்கான தீர்வு காணப்படலாம் என்பதைத்தானே. ருஷ்யப் புரட்சியினை வரவேற்கும் பாரதி, அங்குள்ள பெண்கள் நிலையினை வரவேற்கும் பாரதி ஆயுதப் புரட்சி விடயத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்படுவதை மேற்படி கூற்றுகளால் அவதானிக்க முடிகிறது. இத்தகையதொரு தடுமாற்றத்தின் விளைவினை அவனது 'தொழிலாளர்' என்னும் கட்டுரையிலும் காணக்கூடியதாகவிருக்கிறது. அதிலோரிடத்தில் அவன் பின்வருமாறு கூறுவான்:

"..எனவே இந்தியாவில் முதன் முதலாக தொழிலாளர் கிளர்ச்சி தோன்றியிருக்கும் இந்தச் சமயத்தில் நம்முடைய ஜனத் தலைவர்கள் முதலாளிகள் தொழிலாளிகள் என்று இருதிறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏறவொட்டாதபடி முளையிலே கிள்ளிவிட முயற்சி செய்யவேண்டும். தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி நடத்துவதை உடனே நிறுத்துவதற்குரிய உபாயங்கள் செய்ய வேண்டும்...ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யாவிடின் நாளடைவில் ருஷ்யாவிலுள்ள குழப்பங்களெல்லாம் இங்கு வந்து சேர ஹேது உண்டாய்விடும்... ருஷ்யாவில் சமீபத்திலே அடுக்கடுக்காக நிகழ்ந்து வரும் புரட்சிகளின் காரணத்தால் அவ்விடத்து சைனியங்களில் பெரும்பகுதியார் தொழிற்கட்சியையும் அபேதக் கொள்கைகளையும் சார்ந்தோராய் விட்டனர். இதனின்றும் அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற்கட்சிக்குக் கிடைத்து விட்டது. தேசத்து நிதியனைத்தையும் சகல ஜனங்களுக்கும் பொதுவாகச் செய்து எல்லோரும் தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கின்றார்கள். தேசத்துப் பிறந்த ஸர்வஜனங்களுக்கும் தேசத்து செல்வம் பொது என்பது உண்மையாய் விடில், ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமல் போகும்படி ஸகலரும் தொழில் செய்துதான் ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானால் தேசத்துத் தொழில் மிகவும் அபிவிருத்தியடைந்து ஜனங்களின் சேஷமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும். எனவே ருஷ்யாவிலுள்ள அபேவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடையனவல்ல. ஆனால் அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே தீங்கு தருவனவாம். ருச்க்யக் கொள்கைகள் இப்பொழுது அனுஷ்டிக்கப்படும் ருஷ்யமுறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெற வேண்டுமானால் அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள். வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்தன்று. நாட்டுக்குள்ளேயே செல்வர்களும், ஏழைகளும், ஒருவரையொருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும், தூக்குமரங்களாலும் கொல்லத் தொடங்குவார்களாயின் அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?"

இவையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பவைதான் யாதோ? இவற்றில் காணப்படும் பாரதியின் தடுமாற்றம் நமக்கு உணர்த்துவதுதானெதுவோ? சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ருஷ்யாவின் கோட்பாடுகளை ஓரளவுக்கு பாரதியார் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அதனை அடைவதற்கு ருஷ்யா கைக்கொள்ளும் ஆயுதப் புரட்சியினையும், பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தினையும் தான் அவரால் ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. இந்த எதிர்ப்பின் விளைவே அவரது கற்பனாவாத சோஸலிசமான 'ஏழை', 'பணக்காரன்', 'தொழிலாளி', 'முதலாளி' ஆகியோருக்கிடையிலான இணக்கம் பற்றிய கோட்பாடுகள். இதன் காரணமாகவே செ.கணேசலிங்கன் 'பாரதி கண்ட கனவுப் பெண்' என்னும் கட்டுரையில் கூறுவதைப் போல் ('மேகம்', நவம்பர்-டிஸம்பர் 1982) பாரதியின் போக்கு இந்திய தேசிய முதலாளிகளின் புரட்சியோடு ஒன்றி நிற்பது போல் படுகிறது. ஆனால் உண்மையில் பாரதி முதாளித்துவப் புரட்சியொன்றினை எதிர்பார்த்திடவில்லை என்பதைத் தான் அவரது 'சுதந்திரப்பள்ளு' , 'விடுதலை', 'பாரத சமுதாயம்' போன்ற கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. [ அதே சமயம் மானுடத்தின் முழுவிடுதலை பற்றியும் பாரதி பெரிதும் சிந்தித்திருக்கின்றானென்பத

பாரதியின் மீது எனக்கு இருக்கும் கோபமே அவரின் பொருளாதாரம் பற்றிய கருத்து தான். கண்ணம்மாவை நேசித்தவர் செல்லம்மாவை நேசிக்க வில்லை... குடும்பம் வறுமையின் பிடியில் இருந்து கால் வயித்து கஞ்சிக்கே கஸ்ரப்பட்ட போது மும்பை போய் நிவேதிதா அம்மையாரை சந்தித்து வந்தார்..

மற்றவர்கள் உயரவேண்டும் எண்று அறிவுரை சொல்லிய நல்ல நோக்கம் தன் குடும்பதை காக்க வரவில்லை... இதையும் விட பாரதி ஒரு சிறந்த பொதுநலவாதி... அவன் இருந்த போது இல்லாத மதிப்பை இறந்த பின்னர் பெற்று கொண்டான்..

ஏழ்மை ஒழிய வேண்டும், அதில் ஏற்ற தாள்வு மரைய வேண்டும் எண்று விரும்பிய பாரதி மாக்ஸிய சிந்தனை கொண்டவனாக இருந்ததில் சந்தேகம் இல்லை...

நல்லதொரு இணைப்பு. பாரதியார் பற்றிய ஒரு வித்தியாசமான பார்வை

பாரதி கடைசிக் காலத்தில் கம்யூனிஸ்ட:; கட்சியில் உறுப்பினராக இணைந்து கொண்டார் என்றும் ஒரு தகவல் உண்டு.

பாரதி ஒரு பொதுவுடமைவாதி. ஆனால் அவர் ஒரு இந்துத்துவவாதி என்று நம்பி சிலர் *** தணிக்கை கொண்டிருக்கிறார்கள்.

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

மாக்ஸியம் என்பது சமூக, அரசியல் கொள்கை என்பதாக இனங்காணப்படக் கூடியது. அதை எவரும் பின்பற்றலாம். அதற்கு பாரதி விதிவிலக்கானவன் அல்ல.

ஆனால் பாரதி.. தமிழன் என்பதையும் தமிழ் மொழி என்பதையும்.. முன்னிறுத்தியவன். தமிழர்களின் அடையாளங்களை இனங்காட்டத் தவறாதவன். அதேவேளை தமிழர்களின் (திராவிடர்கள் அல்ல) சமூக விடுதலையை இந்திய தேசிய விடுதலையுடன் சேர்த்து வேண்டி நின்றவன். எப்படி.. தமிழீழ விடுதலையோடு.. தமிழர்களின் சமூக விடுதலை வேண்டப்படுகிறதோ.. அதே நிலைப்பாட்டை பாரதி எடுத்திருந்தவன். அவன் தமிழன்.. தமிழினத்தின் அடையாளத்தை உலகெங்கும் மிளிரச் செய்தவன்.

பாரதியை.. இந்துத்துவவாதியாக யாரும் இனம் காட்டல்ல. அவன் கடவுளை ஏற்றுக் கொண்டது.. இந்துத்துவவாதமல்ல. அவன் கடவுள் என்பதை ஏற்றுக் கொண்டதற்காக மதத்தைக் காட்டி போலியாக உருவாக்கியுள்ள.. சமூக மூடத்தனங்களை மதங்களோடு சேர்த்து அழி ஒழி என்று குரலிடாமல்.. எது சமூகத்தில் சாத்தியமோ..அவசியமோ.. அதை செய்தான். சமூக மூடத்தனங்களை அகற்ற கடவுளைப் பழிக்காமல்.. மூடத்தனங்களை இனங்காட்டி.. அதை வேரறுக்க முனைந்தான். அவனின் சாதி அழிப்பும் அவ்வகையினதே. மதங்களை.. கடவுளை அழித்தால் தான் சாதி அழியும் என்று மதத்தையும் குறித்த ஒரு சமூகத்தையும் திட்டிக் கொண்டு "சமூகப் புரட்சி" என்று சமூகப் பிறழ்வு வளர்த்தவன் அல்ல பாரதி. :P

பாரதி கடைசிக் காலத்தில் கம்யூனிஸ்ட:; கட்சியில் உறுப்பினராக இணைந்து கொண்டார் என்றும் ஒரு தகவல் உண்டு.

பாரதி ஒரு பொதுவுடமைவாதி. ஆனால் அவர் ஒரு இந்துத்துவவாதி என்று நம்பி சிலர் இங்கே கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாரதி மத நம்பிக்கை இல்லது இருந்தவன் என்பதை உங்களுக்கு யார் சொன்னார்கள்...? மாக்ஸிய வாதி எண்டால் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன் என்பதல்ல பொருள்...!

சிவப்பு சட்டைக்கும் கறுப்பு சட்டைக்கும் வித்தியாசம் இருக்கிறது தோழரே...

வர்க்க வேற்றுமைகான பொருளியல் வேறு பாட்டை நீக்க நினைப்பதே சிவப்பு சட்டைக்கான நோக்கம்... அங்கே பொருள் முதலைகள் , அல்லது முதலாளித்துவ அரசுகளை எதிர்த்து வர்க்க பேத சமன் பாட்டை நோக்கி போரிட்டார்கள்..

முதலாளிகளால், முதலாளித்துவ அரசியல் வாதிகள் சாதி பேத முறையை கொண்டு மற்றவர்களை கீழபடிய வைப்பதற்காக உருவாக்கிய போதும் அதை பிராமனர்கள்தான் உருவாக்கினர் என்பவர்கள் கருப்பு சட்டை காறர்கள்..

அதாவது எய்தவன் இருக்க அம்பை ஆண்டுகணக்காக நோகிறார்கள்...

என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை வேறு. மத நம்பிக்கை வேறு

பாரதிக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால் மதம் சொல்லுகின்ற கட்டுப்பாடுகளை காலில் போட்டு மிதித்தவர் பாரதி. பார்ப்பனர் மீதும், இந்து மத வேதங்கள் மீதும் இந்து மத சாத்திரங்கள் மீதும் தன்னுடைய பாட்டுக்களால் போர் தொடுத்தவர் பாரதி.

பாரதி இந்திய தேசியத்தை நேசித்தவர். நாளை இந்திய தேசியம் இல்லாமல் போகலாம். தமிழ் தேசியம் உருவாகலாம். அப்பொழுது இந்திய தேசியத்தை நேசித்த பாரதியை சிலர் "இந்தியாவிற்குள் தமிழர்களை அடிமையாக இருக்கச் செய்த துரோகி" என்று சொல்லலாம்.

ஆனால் பாரதி துரோகி அல்ல என்பதும் அவர் தமிழர்களால் போற்றப்பட வேண்டிய பெரும் கவி என்பதும் எமக்குத் தெரியும்.

என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை வேறு. மத நம்பிக்கை வேறு

ஒண்று இல்லாமல் மற்றது இல்லை என்பது எனது நம்பிக்கை...!

பாரதி அல்ஹா வையும் பாடி இருந்தால், அல்லது கிறீஸ்துவை பாடி இருந்தால் அவன் கடவுளை மட்டும் நம்புபவன், ஆனால் கண்ணனையும், பராசக்தியையும், பாடிய அவன் நெற்றியில் குங்குமம், சகிதமாக அல்லவா வலம் வந்தான்... அவனை எப்படி மதம் சார்ந்தவன் இல்லை எண்று வரையறுக்கிறீர்கள்...??

கடவுள் என்று யாரையும் நம்பிவிட்டு போகலாம். பாரதி பராசக்தியை நம்பலாம். வேறு சிலர் அல்லாவை நம்பலாம். வேறு சிலர் யேசுவை நம்பலாம்.

ஆனால் இந்தக் கடவுள்களை சார்ந்து மதம் என்று இருக்கிறது. மதம் என்று வருகின்ற போது அதற்குள் சில நடைமுறைகள், கட்டுப்பாடுகள் வருகின்றன.

நான் அல்லாவை நம்பலாம். அல்லாதான் கடவுள் என்று சொல்லலாம். ஆனால் அல்லாவிற்கு ஒரு சிலை அமைத்து வணங்கினால், நான் அப்பொழுது இஸ்லாம் மதத்தவன் அல்ல.

இந்து மதம் தமிழர்களிடம் இருந்தும், ஐரோப்பாவிலிருந்தும், ஈரான் போன்ற நாடுகளில் இருந்தும் களவாடி வைத்திருக்கின்ற கடவுள்களை வணங்கலாம். அப்படி வணங்கிய பல சித்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்வது இல்லை.

யேசுவை ஜெபிக்கின்ற, ஆனால் தாம் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்று சொல்கின்ற பலர் உண்டு.

ஆகவே ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்குவதை வைத்து, ஒருவன் மதம் சார்ந்தவன் என்று தீர்மானிக்க முடியாது.

இந்து மதத்தின் மதகுருக்களாக பார்ப்பனர் இருக்கின்றனர். அவர்களை கண்டபடி திட்டுவதும், தண்டச்சோறு என்பதும், இந்து மத சாத்திரங்கள், சாத்திரங்கள் அல்ல, அவைகள் சதி என்று சொல்வதுமாக உள்ள ஒருவர் மதத்தை ஏற்றுக் கொண்டவராக இருக்க மாட்டார்.

மதத்தின் வேதங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள் என்று அனைத்திற்கு எதிராக நடந்தவர் பாரதி.

அவர் கடவுளுக்கு குறியீடாக "பராசக்தி" என்பதை வைத்திருந்தவர். கடவுளையும், மதத்தையும் நம்பாதவர்கள் ரஸ்யாவில் புரட்சி செய்து வெற்றி பெற்றதையும் பாரதி "பராசக்தியினால் நடந்த புரட்சி" என்றுதான் பாடினார்.

பாரதி சொல்கின்ற கடவுள் வேறு. இந்து மதம் சொல்கின்ற கடவுள் வேறு. பெயர்கள் ஒன்றாக இருப்பதால் நீங்கள் குழம்புகிறீர்கள்.

இந்து மதம் தமிழர்களிடம் இருந்தும், ஐரோப்பாவிலிருந்தும், ஈரான் போன்ற நாடுகளில் இருந்தும் களவாடி வைத்திருக்கின்ற கடவுள்களை வணங்கலாம். அப்படி வணங்கிய பல சித்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்வது இல்லை.

அப்போ அங்கெல்லாம் இந்து கடவுள்கள் சிலைகளாகவும் கோட்பாடாகவும் இருக்கிறது என்பதை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா..??

அதுக்கான ஆதாரம்... ??

இல்லை நாரதர் அண்ணா சொன்ன ஆரியர் என்பவர்கள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்தவார்கள் என்பதை நம்பியா இந்த கூற்று...??

இந்து மதத்தின் மதகுருக்களாக பார்ப்பனர் இருக்கின்றனர். அவர்களை கண்டபடி திட்டுவதும், தண்டச்சோறு என்பதும், இந்து மத சாத்திரங்கள், சாத்திரங்கள் அல்ல, அவைகள் சதி என்று சொல்வதுமாக உள்ள ஒருவர் மதத்தை ஏற்றுக் கொண்டவராக இருக்க மாட்டார்.

பாரதி அந்த மதத்தை சேர்ந்தவன் என்பதால்தான் அவனுக்கு அது சாத்தியமானது... பிராமணர்களை மட்டும் அல்ல பாரதி மூட நம்பிக்கை கொண்ட எல்லாரையும் எதிர்த்தான்...

மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறான் என்பதுக்காக அவன் மதம் சாராதவன் எண்று ஆகாது... அவன் தனது மதத்தை சுத்திகரிக்க நினைத்தவன்... காலம் காலமாம வந்த பழக்க வழக்கங்களை ஒழித்து புதிதாய் ஒரு சமத்துவம் காண புறப்பட்ட பாரதி மத எதிரி அல்ல... அவன் ஏற்ற தாள்வுக்கான எதிரி...

மதத்தை பாரதி எதிர்க்கவில்லை... ஆனால் அதில் சில நம்பிக்கைகளை எதிர்த்தான்... அதனால் முற்று முழுதான மதத்தை எதிர்த்தான் என்பது அல்ல...

மனு தர்மம் சொல்லும் விடயங்கள் எல்லாம் 2400 வருடங்களின் திணிப்பு... அதுக்கு அரசாட்சிதான் காரணம்.. அதை எதிர்த்தல் என்பது அரசியல்.. அதைத்தான் பாரதி செய்தான்... அதை பேணும் அறிவிலிகளாக இருந்த அந்தணர்களுக்கு அறிவுரைசொன்னா.. கோபத்தினூடே...!

Edited by தயா

பாரதி இந்து மதம் சொன்ன அனைத்தையுமே போட்டு உடைத்தவர். அனைத்து மதங்களிலும் மோட்சம் என்று ஒன்று இருக்கும். இது மதங்களிற்கு மிகவும் முக்கியமானது.

இந்துக்கள் "சிவலோகம், வைகுந்தம்" என்று சொல்வர்கள்.

பாரதி இப்படிப் பர்டுகிறார்.

'செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலா மென்றேஎண்ணி யிருப்பர்

பித்தமனிதர் அவர்சொல்லும்

சாத்திரம் பேயுரையாமென்று ஊதடா சங்கம்"

பாரதி ஒரு முஸ்லீம். அதற்கான ஆதாரம்

அல்லா, அல்லா, அல்லா

பல்லாயிரம் பல்லாயிரங் கோடி யண்டங்கள்

எல்லாத் திசையினு மோர் எல்லை யில்லா வெளிவானிலே

நில்லாது சுழன்டே நியமஞ் செய்தருள் நாயகன்

சொல்லாலு மனத்தாலுந் தொட ரொணாத பெருஞ்சோதி (அல்லா)

ஏழைகட்குஞ் செல்வர்கட்கும் இரங்கி யருளும் ஓர் பிதா

கோழைகட்கும் வீரருக்குங் குறை தவிர்த்திடும் ஓர் குரு

ஊழியூ ழி அமரரா யிவ் வுலகின் மீதி லின்புற்றே

வாழ்குவீர் பயத்தை நீக்கி வாழ்த்துவீர் அவன் பெயர் (அல்லா)

பாரதி ஒரு கிறிஸ்தவர். அதற்கான ஆதாரம்

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு முன்றில்

நேச மா மரியா மக்தலேநா

நேரில் யிந்தச் செய்தியைக் கண்டாள்

தேசத்தீர், இதன் உட்பொருள் கேளீர்,

தேவர் வந்து நமக்குட் புகுந்தே

நாச மின்றி நமை நித்தங் காப்பார்

நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் தம்பி

கண்ணதாசன் ஜேசுகாவியம் எழுதினவர் அதலா அவர் ஒரு கிறிஸ்தவன். கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினவர் அதால அவர் இந்து. கண்ணதாசம் திராவிட அமைப்புக்களுக்கு வால் பிடிச்சுத் திரிந்தவர் அதலா அவர் ஒரு நாய்ஸ்திகன்.

பெரியாரும் கோவில் தர்மகத்தா, அதலா அவர் இந்து. முஸ்லீம் சனத்திட்ட கஞ்சி குடிக்க அலைஞ்சவர் அதால அவர் முஸ்லீம். அம்பேத்காரோட பௌத்த விகாரை முழுக்க அலைஞ்சார் அதனால அவர் பௌத்தம். ஐரோப்பா, ரசியா போய்க் கம்னூசியம் கதைச்சார். அதனால அவர் கம்னுசியவாதி.

இப்படி வாதிட்டால் உங்களுக்குளம் கஸ்டமில்லாமல் இருக்கும் கண்டியளோ! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வேடங்களை அணிவிக்கலாம்.

இப்படி ஒவ்வொண்டையும் பிடிச்சு விவாதம் செய்தியள் என்றால் விவாதம் உருப்படும்

பாரதி முஸலீம் மதத்தைப் பற்றி கட்டுரைகளும் எழுதியிருக்கார். கிறிஸ்தவ மதத்தில் உள்ளவை உண்மையான கிறிஸ்தவர் எண்டால் இஸ்லாம் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்லியிருக்கார். ஆனா தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் கண்ணன் மேல கொண்டிருந்த பக்தி தெரியும்.

மதனராசா!

நான் இதை வேண்டுமென்றேதான் இங்கே இணைத்தேன். பாரதி இந்துவும் அல்ல, முஸ்லீமும் அல்ல, கிறிஸ்தவரும் அல்ல. அவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல.

எப்படி இந்தக் கவிதைகளைக் கொண்டு, அவரை முஸ்லீம் என்றோ, கிறிஸ்தவர் என்றோ அடையாளப்படுத்தக் கூடாதோ, அதே போன்று அவர் "பராசக்தி" என்று பாடினார் என்பதற்காக அவரை இந்து என்றும் அடையாளப்படுத்தக் கூடாது

ஆரம்பகாலங்களில் அவரிடம் இந்து மதம் தருகின்ற பாத்திரப் படைப்புக்கள் குறித்து நல்ல அபிப்பிராயம் இருந்தது உண்மை.

ஆனால் அவர் இந்து மத வேதங்களையும், சடங்குகளையும், சாத்திரங்களிற்கும் எதிர்த்துப் போராடியவர். அதனால் அவர் இந்து மதக் குருக்களால் விலக்கி வைக்கப்பட்டவர்.

அவரை பட்டினி போட்டு சாகடித்தவர்கள், இன்றைக்கு அவர் இந்து என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் சாகின்றதற்கு 1 வருடங்களுக்கு முன்னர் தான் கோவிலுக்கு வழிபடச் செல்லக்க யானையில் தாக்குப்பட்டவர். அதுவும் வழமையான இந்துக்கள் பின்பற்றுகின்ற யானையின் ஆசீர்வாதம் வாங்கக்க தான்.

ஆரியஅடிவருடி எண்டு பெரியார் சொன்ன, திருவள்ளுவரைக் கடைசியில் வேறு வழியே இல்லாமல் தமிழ்தேசியத்தின் உருவமாக எப்படித் திராவிட அமைப்புக்கள் காட்ட வெளிக்கிட்ட அதே பாணியைத் தான் இப்ப பாரதியார் மேலேயும் பாவிக்க முனைகின்றியள்.

ஜேசுகாவியம் எழுதியதற்காக எப்படி உங்களால் கண்ணதாசனை கிறிஸ்தவன் என்று சொல்லமுடியவில்லை எண்டால், அவர் பல இடங்களில் தன்i இந்துமதத்தில் பற்றாளனாகச் சொல்லியிருக்கார். அதை விட திராவிட அமைப்புக்களில் என்ன கூத்து நடக்கின்றது எண்டும், அதில் உள்ள ஏமாற்றுவேலைகளால் தான் அதை விட்டுப் பிரிவதாகவும் சொல்லியிருக்கார். அதனால உங்களால் உங்களின் கூடாரத்திற்குள்ள அவரைத் திருப்பி இழுக்கவும் முடியவில்லை.

பாரதியார் தன்னை ஒரு தடவையும் நாய்ஸ்திகனாகச் சொன்னது கிடையாது. அவர் எப்போதும் ஆஸ்திகனாகத் தான் இருந்திருக்கார்.

சபேசன் தம்பி

ஏதோ நீதிமன்றத்தில் வாதிடுகின்ற மாதிரிக் கதைக்கின்றியள். யாதார்த்தின் அடிப்படையில் விவாதியுங்கோ. இடக்குமுடக்காகக் கதைப்பதால் எதுவுமே உண்மையாகப் போறதில்லை.

Edited by mathanarasa

பாரதியார் நாத்திகர் அல்ல. அவர் கடவுளை நம்பியவர். கடவுளை வணங்கியவர்.

ஆனால் அவர் இந்து மதத்திற்கு எதிராக போராடிய ஒருவர். அவர் இந்து மதக் கட்டமைப்பை சிதைத்தவர். அதனால்தான் அவரை இந்து மத குருமார் ஒதுக்கி வைத்து சாகடித்தனர்.

பாரதியை ஆரம்பத்தில் திராவிட இயக்கங்கள் கண்டு கொள்ளவில்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

பாரதி கடவுளை வணங்கியதாலும், பிறப்பால் பார்ப்பனர் என்பதாலும் திராவிட இயக்கங்களும் பாரதியின் படைப்புக்களை கண்டு கொள்ளவில்லை. அத்துடன் பாரதி மதத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுத்து பாடிய பாடல்களை பார்ப்பனர் மறைத்து விட்டனர். பாரதியின் சிந்தனை சரியான முறையில் வெளிக்கொணரப் படவில்லை.

திருவள்ளுவருக்கும் இதுதான் நடந்தது. திருவள்ளுவர் சொன்ன நல்ல கருத்துக்களை பார்ப்பனர்கள் தவறாக பொழிப்புரை வழங்கி கெடுத்து விட்டனர். திருவள்ளுவர் ஏதோ சொல்ல, அதற்கு மதம் சார்ந்த அர்த்தத்தை பார்ப்பனர்கள் வழங்கினர்.

இதனால்தான் பாரதியும், திருவள்ளுவரும் ஆரம்பத்தில் திராவிட இயக்கங்களால் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆனால் அவர்களின் படைப்புக்களை சரியான முறையில் ஆய்வு செய்த போது, ஓரிரு கருத்துக்களை தவிர மற்றயை கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தன. அத்துடன் இந்து மதம் சொல்கின்ற அனைத்துக் கருத்துக்களையும் திருவள்ளுவரும் பாரதியும் மறுத்து முழக்கம் இட்டிருந்தார்கள்.

இதை உணர்ந்த திராவிட இயக்கம் பாரதியினதும், திருவள்ளுவரினதும் கருத்துக்களை நல்ல கருத்துக்களை தயக்கம் இன்றி ஏற்றுக் கொண்டது.

பாரதி இந்து மதம் சொன்ன அனைத்தையுமே போட்டு உடைத்தவர். அனைத்து மதங்களிலும் மோட்சம் என்று ஒன்று இருக்கும். இது மதங்களிற்கு மிகவும் முக்கியமானது.

இந்துக்கள் "சிவலோகம், வைகுந்தம்" என்று சொல்வர்கள்.

பாரதி இப்படிப் பர்டுகிறார்.

'செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலா மென்றேஎண்ணி யிருப்பர்

பித்தமனிதர் அவர்சொல்லும்

சாத்திரம் பேயுரையாமென்று ஊதடா சங்கம்"

இத்தனை நாளும் வடமொழி மந்திரங்களை கத்தரிப்பதும் அர்த்தங்களை மாற்றி சித்தரிப்பதுமாக உங்கள் மோடி மஸ்தான் வித்தைகளை எல்லாம் காட்டி கொண்டிருந்தீர்கள். இப்போது பாரதி பாடலுடனும் அதே விளையாட்டா? :D

நீங்கள் மேலே தந்துள்ள பாடல் முழுதாக இதோ கீழே இருக்கிறது. சேர்த்து வாசித்து அர்த்தத்தை விளங்கி கொள்ளுங்கள். அது மட்டும் அல்ல ஆரியர் என்போர் யார் என்றும் இதே பாடலிலேயே பாரதி விளக்குகிறான். அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்

பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்

பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! 1

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்

இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்

சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்

தூய ராமென்றிங் கூதேடா சங்கம்! 2

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,

புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே

ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்

ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! 3

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்

மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே

செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்

சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்! 4

Edited by vettri-vel

கடவுள் என்று யாரையும் நம்பிவிட்டு போகலாம். பாரதி பராசக்தியை நம்பலாம். வேறு சிலர் அல்லாவை நம்பலாம். வேறு சிலர் யேசுவை நம்பலாம்.

ஆனால் இந்தக் கடவுள்களை சார்ந்து மதம் என்று இருக்கிறது. மதம் என்று வருகின்ற போது அதற்குள் சில நடைமுறைகள், கட்டுப்பாடுகள் வருகின்றன.

ஆகவே ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்குவதை வைத்து, ஒருவன் மதம் சார்ந்தவன் என்று தீர்மானிக்க முடியாது.

இந்து மதத்தின் மதகுருக்களாக பார்ப்பனர் இருக்கின்றனர். அவர்களை கண்டபடி திட்டுவதும், தண்டச்சோறு என்பதும், இந்து மத சாத்திரங்கள், சாத்திரங்கள் அல்ல, அவைகள் சதி என்று சொல்வதுமாக உள்ள ஒருவர் மதத்தை ஏற்றுக் கொண்டவராக இருக்க மாட்டார்.

மதத்தின் வேதங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள் என்று அனைத்திற்கு எதிராக நடந்தவர் பாரதி. :D

அவர் கடவுளுக்கு குறியீடாக "பராசக்தி" என்பதை வைத்திருந்தவர். கடவுளையும், மதத்தையும் நம்பாதவர்கள் ரஸ்யாவில் புரட்சி செய்து வெற்றி பெற்றதையும் பாரதி "பராசக்தியினால் நடந்த புரட்சி" என்றுதான் பாடினார்.

பாரதி சொல்கின்ற கடவுள் வேறு. இந்து மதம் சொல்கின்ற கடவுள் வேறு. பெயர்கள் ஒன்றாக இருப்பதால் நீங்கள் குழம்புகிறீர்கள் ?????1. :lol:

வேதம் சொல்லும் விதிகளுக்கு முரணாக பிறப்பால் பிராமணன் என்று வகுத்துக்கொண்டு தன் இனத்தை சேர்ந்தோர் சிலர் பித்தலாட்டம் செய்து வயிறு வளர்ப்பதை தான் பாரதி தன் பாடல்களில் சாடுகிறானே ஒழிய வேதநெறிகளையும் இந்து தத்துவங்களையும் பாரதி சாடவில்லை.

இதோ வேதம் சொல்லும் எல்லாம் ஏகப் பரம்பொருளே எனும் அத்வைதத்தை பாரதி பாடும் பாடல்

1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்

பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;

வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்

2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி

இன்னமு தினையுண்டு களித்தோம்;

கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்

காலன் நடுநடுங்க விழித்தோம்.

3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்;

நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;

நோக்க நோக்கக் களியாட்டம்.

மனதி லுறுதி வேண்டும்,

வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,

காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவுள் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்.

"ஓம்" என்ற மந்திரமும் இந்து மந்திரம் அல்ல. அப்படி அது இந்து மந்திரமாக இருந்திருந்தால் பாரதி அதை தொட்டுக்கூட இருக்க மாட்டான் என்று ஒரு பகுத்தறிவு(?!) விளக்கம் அளித்து உங்கள் மோடி மஸ்தான் வித்தைகளை தொடர்வதானால் தொடருங்கள் :lol: :P :D

Edited by vettri-vel

இந்து மதம் சொல்கின்ற அனைத்துக் கருத்துக்களையும் திருவள்ளுவரும் பாரதியும் மறுத்து முழக்கம் இட்டிருந்தார்கள் ????????.

இதை உணர்ந்த திராவிட இயக்கம் பாரதியினதும், திருவள்ளுவரினதும் கருத்துக்களை நல்ல கருத்துக்களை தயக்கம் இன்றி ஏற்றுக் கொண்டது.

ஆஹா என்ன ஒரு பெருந்தன்மை. பாரதியையும் வள்ளுவனையும் ஏற்றுக்கொண்டால் ஒழிய தமிழன் காதில் பூச்சுற்ற வேறு மார்க்கமே இல்லை என்ற பிறகு அல்லவா இந்த திராவிட(?) இயக்கம் பாரதியையும் வள்ளுவனையும் பற்றிப் பிடித்துக்கொண்டது.

இந்து தத்துவங்களை பாடும் இன்னொரு பாரதி பாடல்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்

கவர்ந்திட மாட்டாவோ?-அடமண்ணில் தெரியுது வானம்,

அதுநம்வசப்பட லாகாதோ?எண்ணி யெண்ணிப்பல

நாளு முயன்றிங்கிறுதியிற் சோர்வோமோ?-

அட,விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும்

எண்ணிலும்மேவு ப்ராசக்தியே!

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,?த்தனை

மேன்மைகளோ!தன்னை வென்றாலவை

யாவும் பெறுவதுசத்திய மாகுமென்றே

முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்முற்று

முணர்ந்த பின்னும்தன்னை வென்றாளும்

திறமை பெறாதிங்குதாழ்வுற்று நிற்போமோ?

சரி வள்ளுவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்

கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்

கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு

உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்

கோமான்இந்திரனே சாலுங் கரி.

வள்ளுவனும் பாரதியும் சொல்லும் மேற்சொன்ன தத்துவங்களுக்கும் உங்கள் திராவிட இயக்கத்திற்கும் என்ன ஐயா சம்பந்தம்???!!! :D:lol::lol:

Edited by vettri-vel

மிக அற்புதமாக உடனே அழகாக பதில் கொடுத்துள்ளீர்.

தொடருங்கள் பணியை.

தேவப்ரியா

560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

The *six-functioned forget their lore

Cows give less if kings guard no more.

* the six functions are: learning, teaching, giving,

getting, sacrificing, kindling sacrifice.

These are duties of Vedic savants.

"பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?" என்கிற இத்தலைப்பின் கீழ் அது தொடர்பான ஆக்கங்களையும் கருத்துக்களையும் மட்டுமே பதிவு செய்யுங்கள். பெரியார், பார்ப்பனர், ஆரியம், இந்துமதம், திராவிடம் போன்ற கருத்துக்களை அவற்றுக்கென ஏற்கனவே உள்ள தலைப்புகளின் கீழ் பதிவுசெய்யுங்கள். அங்கும் இங்குமாக கருத்துக்களையும் முரண்பாடுகளையும் காவித் திரியாதீர்கள். தலைப்புகளை உரியமுறையில் பயன்படுத்தி ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடரவும். தயவுசெய்து கருத்துக்கள நிர்வாகத்துக்கு ஒத்துழையுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

The *six-functioned forget their lore

Cows give less if kings guard no more.

* the six functions are: learning, teaching, giving,

getting, sacrificing, kindling sacrifice.

These are duties of Vedic savants."

தேவபிரியா, இது தமிழ் களமாக வலம் வருவதால், ஆங்கில ஆக்கங்களை தமிழாக்கம் செய்து யாழில் தமிழ் என்னும் அருவியை ஓட விடுங்கள்.

நீங்கள் பாரதி வாழ்ந்த காலத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். அவர் பார்ப்பன சாதியில் பிறந்தவர் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

இன்றைக்கும் தமிழ்நாட்டில் தமிழர்கள் கோயில்களுக்குள் போவதற்கு போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது.

இன்றைக்கும் எத்தனையோ வீதிகளில் மக்கள் நடமாட முடியாத நிலை இருக்கிறது.

இன்றைக்கு பார்ப்பனியத்தை எதிர்த்து கருத்துச் சொல்லுகின்ற போதே, எத்தனையோ எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களிற்கு பூணூல் அணிவித்து பாரதி செய்த புரட்சி அன்றைக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கும் சிலர் அடிமை மனோபாவத்தோடு "பிராமணர்" என்று இங்கு கூட குழைகின்றனர்.

அன்றைக்கு பாரதி "தண்டச்சோறு பார்ப்பு" என்று சொன்ன பொழுது, அது எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டும்.

பாரதி மிகப் பெரிய புரட்சியாளன். இந்து மதம் சொன்ன அனைத்தையும் போட்டு உடைத்தவர்.

அவர் ஒரு இந்துவாக இருந்தார் என்று இந்துக்கள் கருதியிருந்தால், அவரை பட்டினி போட்டு சாகடித்திருக்க மாட்டார்கள். அவருடைய சாவு வீட்டைக் கூட புறக்கணித்திருக்க மாட்டார்கள்

பாரதிக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. ஏதோ ஒரு சக்தியை (பராசக்தி) அவர் வணங்கினார். கடவுளை வணங்குவதற்கு அவர் சில சொற்களை பாவித்திருப்பார்.

ஒருவர் "அமென்" என்று சொல்லி விட்டு பைபிளை எரித்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் பாரதி "ஓம்" என்று சொல்லிவிட்டு இந்து மதத்தை எரித்தார்.

இன்னும் ஒரு முக்கிய விடயம்!

பாரதியே ஆரியத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஏன் இன்னும் அதற்கு குடை பிடிக்கிறீர்கள்?

"பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?" என்கிற இத்தலைப்பின் கீழ் அது தொடர்பான ஆக்கங்களையும் கருத்துக்களையும் மட்டுமே பதிவு செய்யுங்கள். பெரியார், பார்ப்பனர், ஆரியம், இந்துமதம், திராவிடம் போன்ற கருத்துக்களை அவற்றுக்கென ஏற்கனவே உள்ள தலைப்புகளின் கீழ் பதிவுசெய்யுங்கள். அங்கும் இங்குமாக கருத்துக்களையும் முரண்பாடுகளையும் காவித் திரியாதீர்கள். தலைப்புகளை உரியமுறையில் பயன்படுத்தி ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடரவும். தயவுசெய்து கருத்துக்கள நிர்வாகத்துக்கு ஒத்துழையுங்கள்.

என்னாலை அப்பிடி குதிரைக்கு லாடம் கட்டி ஒரே திசையில் போக முடியவில்லை.... ஆகவே அங்கு எல்லாம் பதில் அளிப்பதை தவிர்க்கிறேன்...

நண்றி... வணக்கம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.