Jump to content

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒருவருக்காவது நியாயத்தைப் பற்றிய சிந்தனை இருக்கு நீதித்துறையில் இருந்தால் நேர்மையாக இருக்கவேண்டுமென

ஆனால் சில ஜென்மங்கள் இருக்கின்றன உதாரணத்துக்கு

தமிழர்க்கு விடுதலை தரவெனப்புறப்பட்ட ரெலோ தலைவர் சிறீகாந்தா பொம்மை வெளிக்காணியக் கள்ள உறுதி முடித்து அபகரித்தவரை பிணையில் எடுக்க யாழ் இந்துக்கல்லூரியில் பாடசாலை அனுமதி பெற்றுக்கொடுக்கக் கையூட்டுப்பெற்று வேலை இடைநிறுத்தன் செய்து விசாரணைக்கு முகம்கொடுத்துவரும் முன்னை நாள் அதிபர் அவருடன் சேர்ந்து ஒரு யாழ்ப்பாணத்துச் சட்டத்தரணி. 

மல்லாகத்தில் வசிக்கும் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு இளவாலையில் காலை வேளையில் கடஙழிக்க வந்த பதிண்ம வயதுப்பெண்ணை களவெடுக்கப்போனவிடத்தில் பாலியல் வன்முறை செய்தவரை பிணையில் எடுத்து மேலும் சமூக வன்முறையை ஊரில சசெய் என விட்டிருக்கும் கீர்த்தனா எனும் வழக்குரைஞர்.

இப்போதுதான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிக்கிட்டு கீர்த்தனாவிடம் யூனியராகச் சேர்ந்து இப்போ அதே ரவுடிக்கூட்டத்தின் வன்முறைக்கு துணை புரியும் கீதா எனும் இளம் வக்கீல் 

இவர்களை விட முல்லைத்தீவு நீதியாளர் இனத்திக்கு நீதியானவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை நான் அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்பது சந்தேகமளிப்பதாகவும் நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1351767

 

###################   ###############   ################

 

நீதிபதியின் பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி

நீதிபதியின் பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் விடுத்துள்ளது.

 

தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திய இந்த செயற்பாடு இலங்கையின் நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த நீதிபதி அச்சுறுத்தப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2023/1351771

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அத்துடன் எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை நான் அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

IMG-4509.jpg

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடகம் ஆடுகிறாராம் நீதிபதி சரவணராஜா! - சிங்கள பெண் அதிகாரி கொட்டம்.

இலங்கை சுற்றுலா அதிகார சபையில் முகாமையாளர் தரத்தில் பணிபுரியும் பெண்ணொருவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சமூக ஊடகங்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழியில் தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவின் இது சிங்கள பௌத்த நாடு என்ற கருத்தினை எதிரொலித்துள்ளதுடன் ஏனையவர்களை அச்சுறுத்தும் விதத்தில் இது அவருக்கான மற்றுமொரு பாடம் இது நாடகம் ஆடுபவர்களிற்கான மற்றுமொரு பாடம் - கற்றுக்கொள்ளப்பட்டுள்ள பாடம் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட பெண் தனது சமூக ஊடக பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்

அவர் தப்பியோடிவிட்டார்- அவர் தான் சர்ச்சைக்குரிய பக்கச்சார்பான தீர்ப்பை வழங்கிய பின்னர் அச்சமடைந்துள்ளார்.

தேசத்தின் அப்பாவித்தனத்தை பாரம்பரியத்தை தாக்கியதன் விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என அவரது மனச்சாட்சி அவருக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

குருந்தூர் மலைக்கான பௌத்தர்களின் உரிமையை அவதூறு செய்த பௌத்தர்களை வேதனைப்படுத்திய முல்லைத்தீவு நீதவான் பதவி விலகியுள்ளார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

குருந்தூர்மலை காரணமாக தான் நாட்டை விட்டு வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிடமிருந்தும் பௌத்த மதகுருமாரிடமிருந்தும் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் அகதியாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.அவரது நாடகம் அவர் அகதியாகியுள்ளதுடன் முடிவடைந்துள்ளது.

சாலிய பீரிசின் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணீருடன் விமானநிலையம் வரை அவருக்கு பாதுகாப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் எங்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ள பாடம் என்னவென்றால் பொய்களிற்கு உயிரில்லை. இது சிங்கள பௌத்த நாடு இது அவர் கற்றுக்கொண்ட மற்றைய பாடம். நாடகங்கள் நடிப்பவர்களிற்கு பாடங்கள் உள்ளன – கற்றுக்கொண்ட பாடம் என பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அந்த பெண் தெரிவித்துள்ளார்.

https://seithy.com/breifNews.php?newsID=307317&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்..... ஆளாளுக்கு விசாரணை செய்ய வேண்டுமாம் என கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்தது அது ஒன்றே. சம்பவ இடத்திற்கு வருகை தந்து சரத் வீரசேகர நடந்து கொண்ட விதம், பாராளுமன்றத்தில் நீதிபதியை விமர்சித்த விதம், சம்பவ இடத்தில சம்பந்தமற்றவர்கள் வாகனத்தில் வந்து அச்சுறுத்தியது, அவர் பிறப்பித்த ஆணைகளை உதாசீனம் செய்த தொல்பொருள் திணைக்களம் நடந்துகொண்ட விதம், அப்போ விசாரணை கோராதவர்கள் இப்போ தங்களை புனிதப்படுத்த விசாரணை கோருகிறார்களா? பொலிஸாருக்கு அறிவிக்க வில்லையாம், பிடியாணை பிறப்பிக்கவில்லையாம், ஆம்! அவர் முறைப்பாடுஅளித்திருக்கலாம், நடைமுறைப்படுத்துவது யார்? போலீசார் முன்னிலையிலேயே குருந்தூர் மலையில் வழிபாடு நடத்தச்சென்றவர்கள் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர், போலீசார் முன்னிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டார், போலீசார் முன்னிலையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீடு முற்றுகையிடப்பட்டது அப்போ போலீசாரும், சட்டமும், அதன் தலைவர்களும் கை கட்டி வேடிக்கை பாத்துக்கொண்டிருந்தார்களே, ஏன் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தவில்லை?அல்லது விரும்பவில்லை? பொய் சொல்லலாம், அதுக்காக ஏக்கர் கணக்கிலெல்லாம் சொல்லக்கூடாது. புகலிட தஞ்சம் தேடுகிறார்கள் என்று சொல்லும்போதே தெரிகிறது, இலங்கையில் சிறுபான்மையினர் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடு என்பதை நீங்களே ஒத்துக்கொள்க்கிறீர்கள். சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்ட அட்டகாசம், விட்ட சவால்  கொஞ்சமா? குடிகாரர் போல் உளறிவிட்டு, இப்போ நான் ஏதும் அச்சுறுத்தவில்லை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம் ஆனால் பண்புள்ள சமுதாயம் இதை சகித்துக்கொண்டிருக்கப்போவதில்லை. நீங்களே அதிகார மிடுக்கில் உங்களை இனங்காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சொல்லும் செயலும் உங்களின் இறந்தகால நிகழ்கால வரலாற்றை உலகுக்கு வெளிப்படுத்துகிறது. இனி நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை நீங்களே சாட்சிகளாய் ஆதாரங்களை சமர்ப்பியுங்கள்! உங்களுக்குள்ளேயே முரண்பட்டு அதிலிருந்து நமக்கான விடுதலை பிறக்கட்டும். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: மனித புதைகுழியை விசாரித்த தமிழ் நீதிபதி உயிர் பயத்தில் நாட்டைவிட்டு வெளியேறினாரா?

நீதிபதி சரவணராஜா

பட மூலாதாரம்,KUMANAN /TWITTER

படக்குறிப்பு,

நீதிபதி ரீ.சரவணராஜா தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 30 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, நீதி சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த கடிதம் தொடர்பில் பிபிசி தமிழ், பல்வேறு தரப்புகளை தொடர்புக் கொண்டு வினவியது.

எனினும், நீதிபதி ரீ.சரவணராஜா தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையினால், குறித்த கடிதம் தொடர்பான தகவலை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் தெரிவிக்கின்றனர்.

 

தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, நீதிபதி ரீ.சரவணராஜா, கடந்த 23 ஆம் தேதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தையே இவ்வாறு நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 
ராஜினாமா கடிதம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,

முல்லைத்தீவு மாவட்ட நீதி ரீ.சரவணராஜா, நீதி சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நீதி அமைச்சரின் பதில்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா ராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பிபிசிக்கு தெரிவித்தார்.

நீதிபதி ரீ.சரவணராஜாவின் ராஜினாமா கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதா?

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில், போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கருத்து தெரிவித்தார்.

அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிய பாதுகாப்பு, அவருக்கும் வழங்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

 

''நீதிபதியை தொடர்பு கொள்ள முடியவில்லை"

குருந்தூர்மலை
படக்குறிப்பு,

நீதிபதி ரீ.சரவணராஜா, தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் உள்நாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

''அவரது தொலைபேசி செயலிழந்துள்ளது. தொடர்ச்சியாக தொடர்பு கொள்ள முயற்சித்தோம். முடியவில்லை. எங்கே போயுள்ளார் என்பதையும் தேடிக்கொள்ள முடியவில்லை" என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

நீதிபதி ரீ.சரவணராஜா, தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் உள்நாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், நீதிபதி ரீ.சரவணராஜா எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது தொடர்பான தகவல்களை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்குகளில் முன்னிலையாகும் வழக்கறிஞர்களையும் பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு வினவியது.

''நீதிபதி பதவி விலகியமை தொடர்பில் அறிந்தோம். ஆனால், எங்குள்ளார் என தெரியவில்லை." என பதிலளித்தார்கள்.

 

'இது பௌத்த நாடு என்பதை நீதிபதிக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும்'

சரத் வீரசேகர

பட மூலாதாரம்,SARATH WEERASEKARA/FB

படக்குறிப்பு,

பூவொன்றை கூட வைத்து வழிபட அனுமதிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் திணைக்கள விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு நீதிபதிக்கு தெளிவு அல்லது அதிகாரம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கடந்த ஜுலை மாதம் 7ம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

''குருந்தூர்மலை விகாரையின் தூபியை புனரமைத்து, புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்வதற்கு சென்ற மஹா நாயக்க தேரர்கள் (பிக்குகள்) மற்றும் பக்தர்களை, தமிழ் அரசியல் குண்டர்கள் விரட்டியடித்துள்ளனர். பூவொன்றை கூட வைத்து வழிபட அனுமதிக்கவில்லை" என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

''அந்த பிரதேசத்திலுள்ள நீதிபதியின் தீர்மானம் தொடர்பில் எம்மால் திருப்தியடைய முடியாது. தொல்பொருள் திணைக்களத்தின் நிபுணர்களே இந்த தூபியை புனரமைக்கின்றனர்.

அதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் தொடர்பில் கதைப்பதற்கு நீதிபதிக்கு அதிகாரம் மற்றும் தெளிவு கிடையாது. அதிலுள்ள பலகை குறித்து கேள்வி எழுப்புவதற்கு நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது. தொல்பொருள் துறை அதிகாரிகளே அதனை செய்வார்கள்" எனவும் அவர் கூறினார்.

''சில தினங்களுக்கு முன்னர் இந்த தமிழ் இனத்தைச் சேர்ந்த நீதிபதி, குருந்தூர்மலை விகாரைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். நானும் அந்த இடத்தில் இருந்தேன். அந்த இடத்தில் அவர்கள் கலந்துரையாடல்களை நடத்தும் போது, அங்கு புனித யாத்திரை சென்றிருந்த விகாராதிபதி உள்ளிட்ட தேரர்களை இடைநிறுத்தினார்கள். கண்காணிப்பு விஜயத்தின் போது, புனித யாத்திரை வந்ததாக தெரிவித்து, அவர் தேரர்களுக்கு எதிராக செயற்பட்டார்."

''இது பௌத்த நாடு என்பதை நீதிபதிக்கு நாம் நினைவூட்ட வேண்டும்"

''நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில், எனக்கும் கருத்து தெரிவித்த நீதிபதி அனுமதி வழங்கவில்லை" என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் அன்றைய தினம் தெரிவித்தார்.

குருந்தூர்மலை
படக்குறிப்பு,

சில தினங்களுக்கு முன்னர் இந்த தமிழ் இனத்தைச் சேர்ந்த நீதிபதி, குருந்தூர்மலை விகாரைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்

 

''நீதிபதி ரீ.சரவணராஜா விசாரணை செய்த வழக்குகள்"

குருந்தூர்மலை
படக்குறிப்பு,

குருந்தூர்மலை விவகாரம் மற்றும் கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரம் என பல்வேறு சர்ச்சையான வழக்குகளை முல்லைத்தீவு விசாரித்து வந்தார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில காலமாகவே பல்வேறு பிரச்னைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக குருந்தூர்மலை விவகாரம் மற்றும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் என பல்வேறு சர்ச்சையான வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக குருந்தூர்மலை பகுதியில் காணப்படும் பௌத்த விகாரை மற்றும் சிவன் ஆலயம் தொடர்பில் எழுந்த பிரச்னை குறித்து நீதிபதி ரீ.சரவணராஜா விசாரணை செய்து வந்தார்.

அத்துடன், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் நீதிபதி ரீ.சரவணராஜா விசாரணை செய்து வந்துள்ளார்.

இவ்வாறான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற இந்த சூழ்நிலையிலேயே, தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து, நீதிபதி ரீ.சரவணராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.

https://www.bbc.com/tamil/articles/cd1vxn22y97o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி சரவணராஜா கண்காணிக்கப்பட்டுள்ளார் என்பதை நீதி அமைச்சரே உறுதிப்படுத்தியுள்ளார் : வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமென சிரேஷ்ட சட்டத்தரணி இரத்தினவேல் தெரிவிப்பு

30 SEP, 2023 | 08:22 PM
image

ஆர்.ராம்

நீதிபதி சரவணராஜா பின்தொடரப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது கூற்றுக்களின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் நீதிபதி ஒருவர் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு பதவிநிலைகளை தூக்கியெறிந்து நாட்டை விட்டு வெளியேறியிருப்பதையிட்டு அரசாங்கம் வெட்கித் தலை குனிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

உயிரச்சுறுத்தல், அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சம்பந்தமாக  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

அவருடைய கருத்தின் பிரகாரம், நீதிபதி வாகனத்தை விற்பனை செய்தமை, தூதுவர்களைச் சந்தித்தமை போன்ற செயற்பாடுகள் ஊடாக நீதிபதி திட்டமிட்ட வகையில் தான் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக காண்பிப்பதற்கு முயல்கின்றார்.

அத்துடன், நீதிபதிக்கு அச்சுறுத்தல் காணப்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடுகளை செய்யவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதிகாரங்கள் இருப்பதாகவும் கூட நீதி அமைச்சர் கூறியிருக்கிறார்.

அவ்வாறான நிலையில், நீதிபதி சரவணராஜா கொழும்புக்கு வருகை தந்தமை, அவர் வாகனத்தை விற்பனை செய்தமை, தூதுவர்களை சந்தித்தமை உள்ளிட்ட விடயங்கள் சாதாரணமானவை. 

நாட்டில் வாழ முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றபோது, பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளை எடுக்கின்ற ஒரு சதாரண நபர் கூட இவ்விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வார். 

இந்நிலையில், நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சரவணராஜா நிச்சயமாக அமைதியான முயையில் தனது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தி அச்செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 

ஆனால், நீதியமைச்சரின் கூற்றானது மற்றொரு விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, நீதிபதி சரவணராஜா பின்தொடரப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதே அந்த விடயமாகும். 

குருந்தூர்மலை விவகாரத்தில் முக்கியமான தீர்மானங்களை அறிவித்த அவரை, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றுக்குள்ளும், வெளியிலும் அச்சுறுத்தினார்கள். அதனோடு, அவர் புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டும் வந்தார். அதற்கான தகவல்களும் உள்ளன.

இவ்வாறான நிலையில் நீதியமைச்சரின் கூற்று அந்த விடயங்களுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக காணப்படுகின்றது. இவ்விதமான நிலைமையில் உள்ள ஒரு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதும், அதியுச்சமான அழுத்தம் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதவொரு விடயமாகும்.

அதுமட்டுமன்றி, புலனாய்வாளர்களே அவரைப் பின்தொடர்கின்றபோது, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதானது, திருடனின் தயாரிடம் திருடன் குறித்து வெற்றிலைச் சாத்திரம் கேட்பதற்க ஒப்பானதாகும்.

ஆகவே, இலங்கை நீதித்துறையின் நீதிபதி ஒருவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியமைக்காக அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும். 

மேலும், உள்நாட்டு பொறிமுறைகளால் எவ்விதமான நியாயங்களும் கிடைக்காது என்பதும் உறுதியாகிவிட்ட நிலையில் சர்வதேச ரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையின் நியாயம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/165782

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகரவினாலேயே முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகினார்

சரத் வீரசேகரவினாலேயே முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகினார்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத் தீவு நீதிபதியை விமர்சித்த நிலையில், அதற்கு ஐனாதிபதி, பாதுகாப்பு துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களமோ நடவடிக்கை எடுக்காமையினாலேயே முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறக் காரணம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஐனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

 

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் இதுவரையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்காமையினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மேன்;முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து  வழக்குகளில் பிரதிவாதியாக உள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் நீதிபதி சரவணராஜாவுக்கு எதிராக எந்தவித தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர்மலையில் ஆதிசிவன் மலை தொடர்பான வழக்கில் நீதியை வழங்கிய நீதிபதி ஒரு தமிழர் என்பதால் அவர் அச்சுறுத்தப்பட்டதாகவும், ஊடகங்களை சுதந்திரமாக இயங்கவிடமால் செய்வதற்காக பயங்கரவாத சட்டத்தை அமுவ்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் மு.தம்பிராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

https://athavannews.com/2023/1351801

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசேட பகுதியால் நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி கனடாவுக்கு போய்விட்டார் என்று எல்லோரும் நினைத்திருக்க 

குறுகிய கால நாட்களில் அதிரடியான சில வேலைகளைச் செய்து இலங்கை இந்திய புலனாய்வுப் பிரிவுகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு

ஐரோப்பிய நாடொன்றுக்கு அடைக்கலம் சென்றுள்ளார் போல தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி சரவணராஜா பதவி விலகல் அரசாங்கத்தின் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாதமே - கஜேந்திரகுமார்

Published By: RAJEEBAN

01 OCT, 2023 | 07:22 PM
image
 

அண்மையில் நீதிவான் சரவணராஜாவுடைய பதவி விலகலும், நாட்டினை விட்டு வெளியேறி விடயமும் நாட்டினுடைய இன அடக்கு முறையை வெளிப்படுத்தி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இதுவரைக்கும் இலங்கை உலகத்துக்கு தாங்கள் ஒரு ஜனநாயகத்தை பேணுகின்ற நாடாக காட்டிக்கொண்டு சட்டத்தின் ஆட்சியையும், நல்லாட்சியையும் கடைப்பிடிக்கின்ற ஒரு நாடாகவும், தமிழர் விவகாரமானது பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடாகவும், அந்த வகையிலே பயங்கரவாதத்தை ஆதரிப்போரும் தொடர்ந்து 2009க்கு பிறகு மலர்வாக்கம் செய்கின்றவர்களுக்கு எதிராகவும் தான் தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும், ஆனால் அதை தாண்டி தாங்கள் முழுமையாக ஒரு நீதியையும் நியாயத்தையும் ஏற்று செயற்படுகின்ற ஒரு தரப்பாகத்தான் கட்டிக்கொண்டு வந்தார்கள்.

ஆனால் சரவணராஜா அவர்களுடைய பாதூப்பு இந்த கபட நாடகத்தை முற்று முழுதாக அம்பலப்படுத்துவதாகவும், அத்தோடு இலங்கையிலே தொடர்ந்தும் ஒரு சிங்கள பௌத்தத்துடைய இனவாத  போக்கை தவிர்ந்த வேறு எந்தவொரு செயற்பாட்டிற்கும் இடமே கிடையாது. நீதித்துறை உட்பட அந்த சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிணிந்து செயற்படுகின்ற, அதை கடைப்பிடிக்கின்ற பாதுகாக்கின்ற ஒரு துறையாக அமைந்துள்ளது.

ஆகவே தமிழர்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு அல்லது சிங்கள பௌத்தர்களுடைய நலன்கள் அல்லாத வேறு எந்தவொரு தரப்புக்கும் எதிராகவும் வந்து நீதியை நியாயத்தை தேட முடியாது என்ற விடயம் இந்த நீதிவான் சரவணராஜா உடைய பாதிப்பின் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அவருக்கு எதிராக, அவரை குறி வைத்து அவர் உறுதியாகவும் துணிந்து ஒரு நீதிக்காக எடுத்த முடிவுகளுக்கு பாராட்டை தெரிவிக்கின்ற அதே நேரம், அவருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிக மோசமான இனவாத செயற்பாடுகள், அச்சுறுத்தல்கள், அடிபணிய வைக்கக்கூடிய முயற்சிகள் போன்ற அனைத்தையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

அத்தோடு நானும் எங்களுடைய செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும், ஜெனீவாவினுடைய, ஐரோப்பிய நாடுகளுடைய தலைநகரங்களுக்கும் சென்றுகொண்டு இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே நீதிவான் சரவணராஜாவுடைய இந்த சம்பவத்தை நாங்கள் இங்கு பதிவு செய்துகொண்டு வருகின்றோம். எம்மை பொறுத்தவரையில் இது ஒரு கண்துடைக்கின்ற ஒரு செயற்பாடாகத்தான் சர்வதேச சமூகமும் பார்க்கும் என்றொரு கருத்தையும் நாங்கள் வைத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/165830

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அண்மையில் நீதிவான் சரவணராஜாவுடைய பதவி விலகலும், நாட்டினை விட்டு வெளியேறி விடயமும் நாட்டினுடைய இன அடக்கு முறையை வெளிப்படுத்தி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இந்த விடயத்திலாவது கட்சி போதமின்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2023 at 19:29, Nathamuni said:

அடேய், டேய் நடிக்காத!!

 

நன்றி சரத் வீர சேகர! உங்களின் சேவைக்கு. யாரிடம் நீதிபதி முறையிட வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? முறையிடுவதால் என்ன மாற்றமேற்படும் என நினைக்கிறீர்கள்? பாராளுமன்றத்தில் சித்த சுவாதீனமற்றவராக நீங்கள் அவரை விமர்சிக்கும்போது, நாட்டின் தலைவர், சக பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர் எல்லோரும் கேட்டுக்கொண்டுதானே இருந்தார்கள், அவர்கள் உங்களை கேள்விக்குட்படுத்தவில்லை, தடுக்கவில்லை. தமிழ் சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பு செய்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டார்களே, அப்போ ... நீதித்துறை உறங்கிகொண்டுதானே இருந்தது. நீங்களும் உங்கள் பொறுப்பை உணரவில்லை, வரம்புமீறி போனீர்களே, இதற்குமேல் யாரிடம் அவர் முறையிட வேண்டும், அதனால் என்ன பயன் என நீங்களேதான் விளக்க வேண்டும்.  பொருளாதாரத்தில் வீழ்ந்து தடுமாறும் நாடு, சுற்றுலாத்துறையை நம்பி எழுந்திருக்க காத்திருக்கும் நாடு, எப்படி நடந்து சுற்றுலாப்பயணிகளை கவருவது என தெரிந்திராது, அவர்களை அச்சுறுத்தும் நிகழ்வுகளை அரங்கேற்றிக்கொண்டு எப்படி சுற்றுலாப்பயணிகளை எதிர்பார்க்க முடியும்? முற்றுந்துறந்த துறவிகள் தெருவிலே நின்று நாட்டை கொழுத்துவோமென கங்கணம் கட்டுகிறார்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இரத்த ஆறு ஓடும் என எச்சரிக்கிறார்கள், நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். இவ்வளவும் நடக்கும்போது வெளிநாட்டுத்தூதுவர்கள் இதை பாத்துகொண்டிருக்கிறார்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் இங்கு வருகை தந்திருந்ததோடு நேரடியாக களத்தில் நடப்பதை அவதானித்துக்கொண்டே இருந்தார்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் தன் நாட்டுக்கு மீள முடியாமல் உதவி கோருகிறார். சில நாடுகள், தங்கள் பிரஜைகளை எச்சரிக்கிறார்கள், இலங்கைக்கு சுற்றுலா செய்ய இருப்பவர்கள் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறும் மீறி செல்பவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவ்விடங்களில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறார்கள். இதெல்லாம் முட்டாள்களுக்கு விளங்குவதில்லை தெரிந்திருக்க வாய்ப்புமில்லை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அழிவை ஏற்படுத்தும் வழிகளே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of suitcase and text

இதுவரை காலமும்.... தொழிலாளர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், 
மருத்துவர்கள் என்று   நாட்டை விட்டு வெளியேறினார்கள். 
இப்போ... நீதித்துறையிலிருந்தும் வெளியேறுகிறார்கள் என்று, இலங்கை  பத்திரிகையில் வந்த  ஒரு கருத்தோவியம்.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2023 at 04:39, தமிழ் சிறி said:

புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்பது சந்தேகமளிப்பதாகவும்

நாட்டில் நீதிபதிக்கே வாழ்வதற்கு பாதுகாப்பில்லை என்பதை இவரின் இந்தக்கூற்று நிரூபித்துள்ளது. கெட்டிக்காரன் போலவும், தமிழரின் ஏதிலி நிலையை பரிகசிப்பதுபோலவும் இவர் கருத்து வெளியிட்டாலும், இவர் ஒரு பயணியாக கூட வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையை தன்னையுமறியாமல் உருவாக்குகிறார்.  பாவம் இவர் தன் வாயாலேயே அரசியலில் இருந்து தூக்கியெறியப்படப்போகிறார். இன்னும் சிறிது காலத்தில் இவர் வெளியில் நடமாடினாலோ அல்லது போராட அழைப்பு விடுத்தாலோ, மக்கள் இவரை துரத்தியடிக்கும் நிலை உருவாகும்.கம்மன் பிலவுக்கு முன்னாலேயே,  பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள் தமிழ் சங்க காலம் தொட்டு பாரிய பங்களிப்புகளை வழங்கி உள்ளார்கள். அதையிட்டு நாம் பெருமை அடைய வேண்டும் என கொழும்பு undefined பாமன்கடை ஸ்ரீ மகா விகாரையின் பிரதம தேரர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியா லொஸ் ஏஞ்சலஸ் தர்ம விஜய பெளத்த விகாரையின் ஸ்தாபக பிரதம தேரர் கலாநிதி பான்டே வல்பொல பியனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா : பிரதம நீதியரசருடன் சட்டத்தரணிகள் சங்கம் சந்திப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்திக்க தமக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 23 திகதியிட்டு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன உளைச்சல் காரணமாக தான் வகித்து வந்த பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதாக நீதிபதி சரவணராஜா தெரிவித்திருந்தார்.

நீதவான் இராஜினாமா செய்வதற்குரிய காரணிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கூடிய விரைவில் அறிக்கையை பகிரங்கப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபரிடமும் கடிதங்களை கையளிக்க திட்டமிட்டுள்ளனர்.

அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை உள்ளிட்ட அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பாக தீவிர பிரச்சினையை ஏற்படுத்தும் என கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பாக உடனடி விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் ஆகியோர் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

https://thinakkural.lk/article/275144

Link to comment
Share on other sites

நீதிபதியும் – மனசாட்சியும் – பதவி துறப்பும் – சேறடிப்புகளும்!
 
சமூக வலைத்தள விவாதங்களில் – மோதல்களில் கலந்துகொள்வதில் எந்த ஆர்வமும் ஏற்படுவதில்லை. காரணம் கருத்தியல் சார்ந்த, யதார்த்தவியலை தொட்டுச்செல்லும் உரையாடலகளை கடந்து, அவை தனிப்பட்ட தாக்குதல்களாகவும், சேறடித்தல்களாகவும் மாறுவதே இயல்பாகிப் போனதால், ஓரமாய் குந்தியிருந்து ஆரோக்கியமானவற்றை உள்வாங்கி, மௌனித்திருப்பேன்.
ஆனாலும் சில சமூகவலைத்தள விவாதங்களை கண்டும் காணாமல் கடந்து செல்ல முடியவில்லை. வலிக்கிறது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. சரவணராஜா உயிர் அச்சுறுத்தல், பதட்டம் காரணமாக தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். இது குறித்து முழுமையான தன்னிலை விளக்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அவர் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள், வலிகள், மிரட்டல்கள், வசைபாடல்கள் முதலானவற்றின் வலியும், அச்சமும் அவரால் மட்டுமே உணர முடியும். அவற்றை எதிர்கொள்ளாதவர்களால் அவற்றின் விளைவுகளை புரிந்துகொள்ள முடியாது.
அதனால், வெளிநாட்டில் தஞ்சம் அடைவதற்கானதும், சாகஸமானதுமாகவே, நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை, மலினமானவர்களால், விளங்கிக்கொள்ள முடியும்.
2006ல் நான் வெள்ளை வானில் கடத்தப்பட்ட போது அதனை அப்போதைய ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டு என்னை விடுவிப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணித்தார்.
ஊடக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தின. இந்திய, பிரித்தானிய, ஐரோப்பிய, அமெரிக்க தூதுவராலையங்கள், ஜே.வி.பி உள்ளிட்ட இலங்கையின் பிரதான கட்சிகள், அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு எனது விடுதலைக்கு உதவினர்.
ஆனால் எனது நட்பு வட்டத்தில் இருந்த என்னுடன் பணியாற்றிக்கொண்டிருந்த சில ஊடக நண்பர்கள், உடக பிரபலங்கள் உள்ளிட்டவர்கள், வெளிநாட்டில் தஞ்சம் அடைவதற்கான நாடகமாக எனது கடத்தலை வர்ணித்தார்கள்.
ஆனால் அவர்களில் இருவர் அந்த நிலையை தாமே சந்தித்த போது அந்த வலியை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள்.
நான் கடத்தப்படுவதற்கு முன்னரே எனக்கு அச்சுறுத்தல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்துகொண்டிருந்தன. அதனால் கடத்தப்படுவதற்கு முன்பாக இரண்டு வாரங்கள் இந்தியாவில் விடுமுறையில் தங்கியிருந்து மீண்டும் பணிக்கு திரும்பினேன்.
இக்காலத்தில் அமெரிக்காவுக்கான 5 வருட மல்றிபிள் விசா என்னிடம் இருந்தது. பிரித்தானியாவுக்கான 5 வருட மல்றிபிள் விசாவில் 2 வருடகாலம் மீதம் இருந்தது. 2002 ற்கும் – 2006க்கும் இடையில் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட 12 ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையில் இருந்து சென்றுவந்தேன். எனது ஒவ்வொரு பயணத்தின் போதும் கையை தூக்கு என்று என்நண்பர்கள் பலர் கெஞ்சுவார்கள். ஆயினும் இலங்கை வாழ்வையும் ஊடக பணியையும் மனதார நேசித்தேன் அதனால் கையை தூக்கவில்லை.
இப்படி இருந்தும் எனது கடத்தலை வெளிநாட்டு அரசியல் தஞ்சத்திற்கானது என பல அறிவுக்கொழுந்துகள் அடையாளப்படுத்தினார்கள்.
அன்றைய காலத்தில் சிலருக்கு ஒரு மனநோய் இருந்தது. கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட வேண்டும், அல்லது காணாமல் ஆக்கப்பட வேண்டும், குறைந்தது கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்க வேண்டும். கடத்தப்பட்டவர் முழுமையாக காயங்கள் இன்றி விடுவிக்கப்பட்டால் அது நாடகமாகிவிடும்.
ஆனால் நான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின், 2006 செப்டம்பரில் இருந்து 2007 நவம்பரில் மீண்டும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும்வரை இலங்கையிலேயே பணியாற்றினேன். அங்கு நிற்க முடியாத சூழல் முழுமையாக ஏற்பட்டதன் பின்பே மீண்டும் விசப்பரீட்சையில் இறங்காது பலரது ஆலோசனையின் பின் நாட்டை விட்டு புறப்பட்டேன்.
2008 ஜனவரி மாதமே பதவியில் இருந்து விலகினே். (அதுவரை லண்டனில் இருந்து என் பணியை தொடர்தேன்) அதன் பின்பே அரசியல் தஞ்ம் கோரினேன்.
கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னான 14 மாதங்கள் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தங்களை சொல்லில் அடக்க முடியாது. இரவு வேளைகளில் எமது கொழும்பு வீட்டு ஒழுங்கையில் நாய்கள் குலைக்கும் போது கடத்தப்பட்ட நாள் ஞாபகம் வரும், தூக்கமின்றிய பதட்டம் தொடரும். வெளியில் செல்கின்ற போதெல்லாம் பின்தொடர்வார்கள். இரத்த அழுத்தம் இல்லாத எனக்கு இரத்த அழுத்த நோய் ஆரம்பமானது.
இந்த வலிகளையெல்லாம் எழுந்தமானமாக வசைபாடும் இந்த அறிவுக்கொழுந்துகளால் விளங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல், அவர்களின் கண்ணை, மனச்சாட்சியை மறைத்து விடுகின்றன.
சொந்த நாட்டில் பாதுகாப்பு, கௌரவம், ஆடம்பர வாழ்வு உள்ளிட்ட மதிப்பு மிக்க நீதிபதி பதவியை துறந்து இந்த வயதில் வெளிநாட்டில் தஞ்சம் கோர ஆசைப்படுவாரா? முனைவாரா? நீதிபதி சரவணராஜா! #ஞாபகங்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

May be an image of suitcase and text

இதுவரை காலமும்.... தொழிலாளர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், 
மருத்துவர்கள் என்று   நாட்டை விட்டு வெளியேறினார்கள். 
இப்போ... நீதித்துறையிலிருந்தும் வெளியேறுகிறார்கள் என்று, இலங்கை  பத்திரிகையில் வந்த  ஒரு கருத்தோவியம்.

தமிழரை அச்சுறுத்தி நாட்டை விட்டு துரத்துவதில் கங்கணம் கட்டி, தங்கள் வீரத்தை காட்டுவதில் மும்முரமாக செயற்படுகிறவர்களுக்கு, தங்களது கல்விமான்கள் புத்திஜீவிகள் வெளியேறுவது கண்ணனுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிவதெல்லாம், நெருப்பு வேண்டுவது தமிழரின் ரத்தம், கலவரம். தமிழரை அழித்தபின் நாட்டில் மிஞ்சப்போவது, இனவாதிகளும் பிக்குகளும் விகாரைகளும். பிக்குகள் வெளியேறுவகற்கு, இவர்களது வயிறு வளர்க்க வெளிநாடுகளில் விகாரைகளுக்கு முக்கியமில்லை, உழைத்தே வாழ வேண்டும். இராணுவத்தை எந்த நாடும் ஏற்காது. அதன்பின் தங்களைத்தானே குற்றம் சாட்டி அடிபடவேண்டும். சொறிஞ்ச கை சும்மா இருக்காதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிய விவகாரம் : உடனடி விசாரணைக்கு பணிப்பு

நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிய விவகாரம் : உடனடி விசாரணைக்கு பணிப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இன்று திங்கட்கிழமை அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
##################   ##################   ####################

 

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

முல்லைத்தீவு நீதிபதி  ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்  முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1351993

 

#################   ################   ###################

 

திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

முல்லைதீவு நீதிபதி டீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

 

இன்று (செவ்வாய்கிழமை) திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் சட்ட ஆட்சியை நிலை நிறுத்து! நீதித்துறையில் தலையிடாதே! நீதித் துறையை சுயமாக இயங்கவிடு, போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2023/1352060

 

#################   ##################   ################

 

நாட்டின் நீதித்துறையில் ஊழல்கள் காணப்படுகின்றன!

நாட்டின் நீதித்துறையில் ஊழல்கள் காணப்படுகின்றன!

இலங்கையின் நீதித்துறையில் ஊழல்கள் அதிகரித்து வரும் நிலையில், முல்லைத்தீவு நீதிபதி  உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்  தெரிவித்துள்ளார்.

 

ஹட்டனில் நடைபெற்ற “ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்” என்ற நூல் வெளியீட்டு  விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிபதி பதவி விலகியுள்ளமை சட்டத்துறையில் ஓர் வீழ்ச்சி. சட்டத்துறையை காப்பாற்ற நாடாளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் பொறுப்பு உள்ளது.

இலங்கையை ஓர் வங்குரோத்து நாடு என்றே உலக நாடுகள் அடையாளப்படுத்துகின்றன. சுமார் 1.37 இலட்சம் தொழிலாளர்களே தற்போது காணப்படுகின்றனர்.  எதிர்காலத்தில் தொழிலாளர் போராட்டங்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை மறைப்பதற்கு பல சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஊடகம் இல்லாமல்  ஒழிக்கப்படும் வகையில்  சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஒன்லைன் சட்டங்கள் மறுதலிக்கப்படுகின்றன. தொழிற்சங்க எதிர்ப்பு சட்டம் மிக மோசமாக பாதிக்கப்படும்.

இவ்வாறான சட்டங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாட்டின் நீதிதுறையில் பல ஊழல்கள் காணப்படும் நிலையில் ஒரு நீதிபதி பதவி விலகியுள்ளார்.

இது சட்டத்துறையில் ஓர் வீழ்ச்சி. சட்டத்துறையை காப்பாற்ற நாடாளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் பொறுப்பு உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1352025

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

தமிழரை அச்சுறுத்தி நாட்டை விட்டு துரத்துவதில் கங்கணம் கட்டி, தங்கள் வீரத்தை காட்டுவதில் மும்முரமாக செயற்படுகிறவர்களுக்கு, தங்களது கல்விமான்கள் புத்திஜீவிகள் வெளியேறுவது கண்ணனுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு தெரிவதெல்லாம், நெருப்பு வேண்டுவது தமிழரின் ரத்தம், கலவரம். தமிழரை அழித்தபின் நாட்டில் மிஞ்சப்போவது, இனவாதிகளும் பிக்குகளும் விகாரைகளும். பிக்குகள் வெளியேறுவகற்கு, இவர்களது வயிறு வளர்க்க வெளிநாடுகளில் விகாரைகளுக்கு முக்கியமில்லை, உழைத்தே வாழ வேண்டும். இராணுவத்தை எந்த நாடும் ஏற்காது. அதன்பின் தங்களைத்தானே குற்றம் சாட்டி அடிபடவேண்டும். சொறிஞ்ச கை சும்மா இருக்காதே. 

 

May be an image of text

 

 

May be an image of aircraft and text

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

எதிர்க்கட்சிக்கு சவால் விடுகிறார் நீதியமைச்சர்

 

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு யாராவது  அழுத்தம் கொடுத்திருந்தால் அரசாங்கத்தை குறைகூறுவதை விடுத்து அது தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருமாறு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.

நீதித்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. வசதிகளை வழங்குதல் மற்றும் சட்டங்களை இயற்றும்  வேலையைத் தான் அரசாங்கம் செய்கிறது என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை மாற்றுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல கூறிய போதே  நீதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தனக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் தான் பதவியை இராஜினாமா செய்வதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அறிவித்ததாக நீதியமைச்சர் தெரிவித்தார்.  

அவருக்கு அவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் அவர் நட்டை விட்டுச் சென்ற பின் முறைப்பாடு செய்திருக்கலாகாது. அரசியலமைப்பின் பிரகாரம், தன்னை அச்சுறுத்திய நபருக்கு அழைப்பாணை விடுத்து அவரை மன்றுக்கு முன் ஆஜராக செய்யவும் அல்லது பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.

மேலும் குறித்த நபருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து அவரைத் தண்டிக்கவோ இல்லாவிட்டால் மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திற்கு இது குறித்து தெரியப்படுத்தியிருக்க முடியும்.

தனது அதிகாரங்களை அவர் பயன்படுத்தாவிட்டால் அதற்கு அவர் தான் பொறுப்புக்கூற வேண்டும்” என நீதியமைச்சர் தெரிவித்தார்.

நீதிபதி சம்பந்தமான விவகாரத்தில் தலையிட அரசாங்கத்திற்கு எதுவித அதிகாரமும் இல்லை. நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கே இதைக் கையாளும் அதிகாரம் உள்ளது. இது  தொடர்பில் யாருக்காவது ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம் என அமைச்சர் விஜயதாஸ தெரிவித்தார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/எதரககடசகக-சவல-வடகறர-நதயமசசர/175-325396

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம் ; நீதித்துறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது - சிறிதரன்

Published By: VISHNU

03 OCT, 2023 | 04:07 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

விடுக்கப்பட்ட கட்டளையை மீளப்பெறுமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவுக்கு  சட்டமா அதிபர் அழுத்தம் பிரயோகித்துள்ளார்.

இந்த நாட்டில் நீதித்துறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலையில் எவ்வாறு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்? இதனால் தான் சர்வதேச விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிரதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற  குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஆகியன மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக பதவி துறந்து நாட்டை  விட்டு வெளியேறுவதற்கு காரணமாக இருந்த ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களின் இனவாத கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பேரினவாத அரசாங்கம் இன்றும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

நாட்டின் நீதித்துறை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2005, 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் நீதியரசர் ஸ்ரீநிதியை இராணுவ வாகனத்தின் ஊடாக கொலை செய்யும் முயற்சி எடுக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க வலுக்கட்டாயமான முறையில் பதவி நீக்கப்பட்டார். இந்த நாட்டில் நீதி இல்லை என்பதற்கு பல விடயங்கள் சான்று பகர்கின்றன. படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராசசிங்கம் உட்பட பல தலைவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுக்கும், கொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு தொண்டர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.

வழங்கிய கட்டளையை மீளப்பெறுமாறு சட்டமா அதிபர் விடுத்த அழுத்தத்தினால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நாட்டில் தொடர்ந்து சுயாதீனமாக செயற்பட முடியாது என்பதை நீதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். சிங்கள பேரினவாத கொள்கையில் இருந்து விடுப்பட்டு அரச தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவார்கள் என்பது கானல் நீராகவே காணப்படுகிறது.

முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நீதி கோரி கிளிநொச்சி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு மகஜர் ஒன்றை   கையளிக்க வலியுறுத்தியுள்ளார்கள்.

அந்த மகஜரில் ' இலங்கைத்தீவில் கடந்த எழுபது (70) ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்ற இன முரண்பாடுகள் தொடர்பிலும், சிங்களத்தின் கட்டமைக்கப்பட்ட இன ரீதியான வஞ்சிப்புகள் தொடர்பிலும், அது இனப்படுகொலையாக வியாபகம் பெற்ற வரலாறு தொடர்பிலும் தங்கள் அறிக்கையாளர்கள் ஊடாக தாங்கள் அறிந்துள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம்.

ஒரு தேசிய இனத்தின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், அதன் கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நீதி, நிருவாகத் துறை ரீதியான பாகுபாடுகள் மற்றும் காலத்துக்குக் காலம் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற வன்பறிப்புகள் என்பவை, உலகத்தில் வாழ்கின்ற எண்ணிக்கையில் குறைந்த ஒரு தேசிய இனக்குழுமத்தை எவ்வாறு நிர்மூலமாக்கும் என்பதை உணர்ந்துகொள்வது அத்தனை சிரமமானதல்ல.

இலங்கைத்தீவில் தமிழ் தேசிய இனம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையும் ஓரவஞ்சகப் போக்கும் இன்று இலங்கைத்தீவில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தினதும் ஜனநாயக நீதித்துறை சார் உரிமைகளைப் பறித்துள்ளது என்பது நிதர்சனமாகும். அரசிற்குப் பலம் கிடைக்கின்ற போதெல்லாம் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு நிருவாகத் துறையின் கைப்பொம்மையாக செயற்படும் விதமாகவே நீதித்துறை உருவாக்கப்பட்டு வருகிறது.

நீதிச்சேவை ஆணைக்குழுவை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கி அதனூடாக நீதிபதிகளின் நியமனங்கள், பதவி உயர்வுகள், நலனோம்பு நயக்கொடைகள், பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு என்பவையெல்லாம் அரசியல் அதிகார விருப்பப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்மூலம் அரசு விரும்பிய தீர்ப்புகளைப் பெறவும், ஆணைகளை வழங்கவும், அரசியல் அதிகாரத்தைக் காபந்து செய்யவும் ஏற்றவகையில் இலங்கையின் நீதித்துறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டத்தின் ஆட்சி பறிக்கப்பட்டு நிருவாகத்துறையின் நோக்கங்களை அடையும் வகையில், விசேடமாக அரசாங்கத்தினது போர்க்குற்றங்கள், இனப்படுகொலை விடயங்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்கள், மனிதப்புதைகுழி விவகாரங்கள், பௌத்தமயமாக்கல், நில மற்றும் பண்பாட்டு ஆக்கிரமிப்பு என்பவற்றை சட்டமுறைமைகளுக்கு முரணாகக் கையாள்வதற்கு நீதித்துறை நிர்ப்பந்திக்கப்பட்டதன் விளைவே  நீதிபதி சரவணராஜா அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய நிகழ்வாகும்.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தனது ஆட்சியின் நோக்காகக் கொண்டு சர்வாதிகார சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஜனநாயக முலாம் பூசிக்கொண்டு திடமான வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகள் எவையுமின்றி, உறுதியான அரசியலமைப்பு ஏற்பாடுகளின்றி வெறும் இனத்துவேச சிந்தனைகளின்மேல் ஏறிநின்று இலங்கையின் நீதித்துறையினையும் இங்கு வாழ்கின்ற தமிழ்த்தேசிய இனத்தையும் கட்டமைக்கப்பட்ட வழிமுறைகளின் ஊடாக அரசு அழித்து ஒழித்து வரும் உச்ச தருணமாகிய இவ்வேளையில் தாங்களும் சர்வதேச சமூகமும் நேரடியாகத் தலையீடுசெய்து அமைதி, சமாதானம், நல்லிணக்கம், நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றைப் பாதுகாக்கவும் சகோதரத்துவம் மிக்க இலங்கையைக் கட்டியெழுப்பவும் தங்கள் எல்லாவகை வல்லமைகளும் அணுகுமுறைகளும் சமரசங்களற்ற வகையில் இலங்கைத்தீவுக்குத் தேவையென தங்களை அழைத்து நிற்கிறோம் என்று வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் வதிவிட பிரதிநிதிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

குருந்தூர் மலையில் உள்ள  சிவன் ஆலயத்தை இடித்தழித்து அங்கு பௌத்த விகாரை கட்டும் போது கட்டுமாண பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று  முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தடையுத்தரவு பிறப்பித்த போது பௌத்த பேரினவாத கொள்கையுடையவர்கள், பௌத்த பிக்குகளை ஒன்று திரட்டி படை பட்டாளத்துடன் ஒன்றிணைந்து குருந்தூர் மலையில் பௌத்த விகாரையை கட்டி முடித்துள்ளார்கள். இது நீதிமன்றத்தை அலட்சியப்படுத்தும் செயற்பாடாகும்.

திருகோணமலையில் அரிசி மலை பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையை புறக்கணித்து பலவந்தமான முறையில் பௌத்த விகாரை கட்டப்படுகிறது. இந்த நாட்டில் நீதி எங்குள்ளது. நாட்டின் நீதித்துறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் மக்களை முடக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது. எவ்வகையான அடக்குமுறையை கொண்டு வரலாம்  என்றே அரச தலைவர்கள் சிந்திக்கிறார்கள்.

இந்த நாடு முன்னேற்றமடைவதற்கு எந்த சாத்தியமும் கிடையாது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை விவகாரம், கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதால் நீதிபதி சரவணராஜா பாரிய நெருக்கடிக்குள்ளானார். தமிழ் நீதிபதி நீதி வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பேரினவாத கருத்தை வெளியிட்டார்.

இலங்கையில் நீதித்துறை இறந்துள்ளது. இந்த நாட்டிலா இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்கப் போகிறது. இதனால் தான் நாங்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணைகளை கோருகிறோம். தீர்வு திட்டங்களுக்காக கொண்டு வரப்பட்ட அறிக்கைகள், திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சகல  இனங்களையும் ஒன்றிணைத்து இந்த நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேச விசாரணை ஊடாக தீர்வு கோருகிறோம். இந்த நாட்டில் நீதி கிடைக்காது, நீதிக்கட்டமைப்பை அரசியல்  தலையீட்டால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/165984

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.