Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் ?- சர்வதேச ஊடகவியலாளரிடம் ரணில் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

03 OCT, 2023 | 08:05 AM
image
 

சனல் 4 ஊடகத்தினை  ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிடபில்யூநியுஸ் உடனான பேட்டியின் போது ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பியவேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்ஃ

நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள் ஏன் அதனை புனிதமாக கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர் நான் அவ்வாறு செயற்படவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து பிரிட்டனில் பலர் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் ஏன் நீங்கள் சனல் 4னை மாத்திரம் கருத்தில் கொள்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர்உறுதியான வலுவான  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என தெரிவித்தமைக்கு ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன என்பதற்காக நான் எதனையும் செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்- சிஐடியின் முன்னாள் அதிகாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ஏன் அது பற்றி கேள்வி எழுப்பகூடாது என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்புகின்றது உங்களுடன் பணிபுரிந்த முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்புகின்றார் என்ற குற்றச்சாட்டிற்கு நீங்கள் அதனை முதலில் என்னிடம் கேட்கவில்லை நான் கேள்வி எழுப்பிய பின்னரே கேட்கின்றீர்கள் நீங்கள் சனல் 4 அறிக்கை முற்றிலும் உண்மையான விடயம் என்பது போல என்னிடம் கேள்வி எழுப்பினீர்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165935

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றம் கேட்காததால் சர்வதேச விசாரணை தேவையில்லை – ஜனாதிபதி ரணில் (VIDEO)

நாடாளுமன்றம் கேட்காததால் சர்வதேச விசாரணை தேவையில்லை – ஜனாதிபதி ரணில் (VIDEO)

பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.

 

ஜேர்மனியை தளமாகக் கொண்ட சர்வதேச ஒளிபரப்பு நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு சாடியுள்ளார்.

பிரித்தானியவோ அல்லது ஜேர்மனியோ அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்ளாத போது எதற்காக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் மாத்திரம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிலர் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருந்தாலும் நாடாளுமன்றம் அதனை கேட்கவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

https://athavannews.com/2023/1352111

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணை குறித்து ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

சர்வதேச விசாரணை குறித்து ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கையினுள் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் Deutsche Welle தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=178256

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி நிராகரிப்பு!

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை தமது அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

https://thinakkural.lk/article/275374

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் இந்த கோபத்தை கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம் காட்டியதற்கு பதிலாக தனது நாட்டு அரச நிர்வாகத்திலும்,  சட்டத்தின் ஆட்சியை நேர்மையாக நிலை நாட்டுவதிலும் காட்டியிருக்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வீடியோக்களை மறக்காமல் பார்த்து அங்கே ரணிலின் முகத்திரையை கிழிப்பது போன்று கருத்துக்கள் பின்னூட்டங்கள் எழுதுவது சிறப்பு. நேற்றிலிருந்து இன்றுவரை  சுமார் 102K வியூஸ் கிடைத்துள்ளது. பெரும்பாலான சிங்களவர்கள் ரணிலை திட்டி தீர்க்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

ரணிலின் இந்த கோபத்தை கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம் காட்டியதற்கு பதிலாக தனது நாட்டு அரச நிர்வாகத்திலும்,  சட்டத்தின் ஆட்சியை நேர்மையாக நிலை நாட்டுவதிலும் காட்டியிருக்க வேண்டும்.  

அவர் குற்றத்திற்கு வெள்ளை அடிக்கும் முயற்சியை செய்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் இந்த ஜனாதிபதி கதிரைக்கு வந்த பின்னர் மாறிவிடுகிறார்கள். இந்த கதிரைக்கு வர முன்னர் எதோ எல்லாம் பேசுவார்கள். ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் , பிரச்சினைகளை தீர்ப்போம் அப்படி இப்படி என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் அங்கு வந்த பின்னர் ஒரு நாளும் அப்படி செய்ததில்லை. மீண்டும் அந்த கதிரையை ஆக்கிரமிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

ரணிலும் அதட்கு விதி விலக்கல்ல. அடுத்த வருடம் தேர்தல் வரப்போகின்றது. இப்படி ஆக்ரோஷமாக பேசி சிங்களவர்களின் , ராணுவ குடும்பங்களின் வாக்குகளை அபகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழர்கள் தனியாக கேட்பதால் அதனை பேச்சு வார்த்தை மூலம் அவருக்கு சாதகமாக்கி கொள்ளுவார். 

ரணில் பார்ப்பதட்கு சாதுவானவராக இருந்தாலும், மிகவும் கடினமான ஒருவர். பட்டலந்த சித்திர வதை முகாமை பலரும் மறந்திருக்க மாடடார்கள் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்றம் கேட்காததால் சர்வதேச விசாரணை தேவையில்லை – ஜனாதிபதி ரணில்.

 

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை எதிர்கொள்ள திராணியற்றவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க பின்னடித்து, அதிகார திமிர் காட்டுவோர் மற்றவர் மேல் எரிந்து விழுந்து உண்மையை புதைத்துவிடலாமென எண்ணி தம்மைத்தாமே தரம் தாழ்த்திக்கொள்கிறார்கள். நீதியை நிலை நாட்ட முடியாதவர் இந்தபதவியை ஏற்க முன்வந்திருக்கக்கூடாது. இவர்கள் தவறு செய்யவில்லையென்றால் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? கேட்போர் மீது பாய்ந்து விழவேண்டும்? நம்ம கவுரவ தலைவர், இப்படித்தான் பத்திரிகையாளர் மீது பாய்வார், பதில் சொல்ல முடியாதபோது. தாடியர் பத்திரிகையாளரை பேசவே விடார், பேசினால் பதில் சொல்ல முடியாதபடியால். விடுதலைப்போராட்டம் முடிந்த கையோடு கோத்தாவை ஒரு பத்திரிகையாளர் பேட்டி கண்டார் பிரித்தானிய தளத்தை கொண்டவர் என நினைக்கிறன். அப்போ அவர் உண்மைச்சம்பவங்களை கேட்டபோது, கோத்தா அதை மறுத்து பேசினார். அதனால் அதிருப்தியடைந்த பத்திரிகையாளர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தனது மறுப்பை தெரிவித்தபோது, கோத்தா சிரித்தபடியே நீங்கள் ஏன் பதற்றமடைகிறீர்கள்? பதற்றமடைய வேண்டியவன் நான், நானே அமைதியாக இருக்கிறேன் என்றார். இப்போ அந்த பத்திரிகையாலளர் அதை நினைத்துப்பார்ப்பாரோ என்னவோ? பாதிக்கப்பட்டவன், உண்மையை மதிப்பவர் இவற்றை சகித்துக்கொள்ள மாட்டார்கள். நீதியை மிதிப்பவர்களுக்கு இதெல்லாம் பதற்றமடையும் காரியமல்ல, அது அவர்களின் பொழுது போக்கு. ஒரு பத்திரிகையாளருடன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார் என்றால்; அப்பாவி சிறுபான்மையினரின் நிலையை உலகம் அறிய இது ஒரு வாய்ப்பு. பிச்சை வேணும் ஆனால் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. நீங்கள் எத்தனை விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தினாலும், உண்மை வெளிவரவில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடையவில்லை, உங்கள் விசாரணையால் யாருக்கு என்ன லாபம்? இவர்களின் இந்தப் பிடிவாதம், திமிர் எனக்குப்பிடிச்சிருக்கு. இது அதிகரிக்க வேண்டும். இதனாலேயே உதவிகள் மறுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, தாங்களாகவே, நீங்கள் எங்களை விசாரணை செய்யுங்கள், ஆனால் உதவிகளை மட்டும் நிறுத்தாதீர்கள் என்று கெஞ்சும் நிலை வரவேண்டும், வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இவர்களின் இந்தப் பிடிவாதம், திமிர் எனக்குப்பிடிச்சிருக்கு.

எனக்கும் ரொம்பவே பிடிச்சுருக்கு……………  அந்த ஊடகவியலாளருக்கு  நன்றிகள் பல  தமிழர்கள் நாங்கள்  ரணில் பற்றி  உலக நாடுகளுக்கு அறியப்படுத்த வேண்டும்  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்    என்று உலக நாடுகளுக்கு எல்லாம் சொல்லி கொண்டு  திட்டமிடப்பட்ட வகையில்  தீர்வு கிடைப்பதை குழப்பியடிக்கும் முதல் நபர் இந்த ரணில்    இவனுடைய இந்த வேலைகள் பற்றி  ஒரு புத்தகம் பல மொழிகளில் எழுதி  வெளியீடு செய்ய வேண்டும்   

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

எனக்கும் ரொம்பவே பிடிச்சுருக்கு……………  அந்த ஊடகவியலாளருக்கு  நன்றிகள் பல  தமிழர்கள் நாங்கள்  ரணில் பற்றி  உலக நாடுகளுக்கு அறியப்படுத்த வேண்டும்  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்    என்று உலக நாடுகளுக்கு எல்லாம் சொல்லி கொண்டு  திட்டமிடப்பட்ட வகையில்  தீர்வு கிடைப்பதை குழப்பியடிக்கும் முதல் நபர் இந்த ரணில்    இவனுடைய இந்த வேலைகள் பற்றி  ஒரு புத்தகம் பல மொழிகளில் எழுதி  வெளியீடு செய்ய வேண்டும்   

தவறு அண்ணா

அவர்கள் தமிழர் பிரச்சினை பற்றி ஒன்றும் பேசவில்லை

சேர்ச் பற்றி பேசுகிறார்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

ஒவ்வொருவரும் இந்த ஜனாதிபதி கதிரைக்கு வந்த பின்னர் மாறிவிடுகிறார்கள். இந்த கதிரைக்கு வர முன்னர் எதோ எல்லாம் பேசுவார்கள். ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் , பிரச்சினைகளை தீர்ப்போம் அப்படி இப்படி என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் அங்கு வந்த பின்னர் ஒரு நாளும் அப்படி செய்ததில்லை. மீண்டும் அந்த கதிரையை ஆக்கிரமிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

ரணிலும் அதட்கு விதி விலக்கல்ல. அடுத்த வருடம் தேர்தல் வரப்போகின்றது. இப்படி ஆக்ரோஷமாக பேசி சிங்களவர்களின் , ராணுவ குடும்பங்களின் வாக்குகளை அபகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழர்கள் தனியாக கேட்பதால் அதனை பேச்சு வார்த்தை மூலம் அவருக்கு சாதகமாக்கி கொள்ளுவார். 

ரணில் பார்ப்பதட்கு சாதுவானவராக இருந்தாலும், மிகவும் கடினமான ஒருவர். பட்டலந்த சித்திர வதை முகாமை பலரும் மறந்திருக்க மாடடார்கள் என நினைக்கிறேன். 

ஜே ஆர் காலத்தில் இருந்து அனைத்து இன அழிப்பிலும் பின்னால் இருந்து செயற்பட்டவர். இவரும் ஒரு இனவாதி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தவறு அண்ணா

அவர்கள் தமிழர் பிரச்சினை பற்றி ஒன்றும் பேசவில்லை

சேர்ச் பற்றி பேசுகிறார்கள் 

 

அது எனக்கும் தெரியும்   ஆனால் இந்த ரணில் செய்வது  பல ஆண்டுகளாக   பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று ஏமாற்றுவது  அதை விபரமாக.  ஒரு புத்தகமாக எழுத வேண்டும் உதாரணத்துக்காக  அம்மையார் சந்திரிக்கா  பண்டாரநாயக்க  ஆட்காலத்தில். இவர் பிரதமர்    தீர்வு இந்த வருகிறது என்றார் ஆனால் இவரை  பதவி இறக்கி விட்டார்கள்   பதவியில் இருந்தால்  தமிழருக்கு  தீர்வு வழங்கி இருப்பேன்   என்று புலுகி கொண்டு திரிந்தார்.   இப்ப ஏன் செய்ய முடியவில்லை???? இவன் ஒரு பச்சை கள்ளன்   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தவறு அண்ணா

அவர்கள் தமிழர் பிரச்சினை பற்றி ஒன்றும் பேசவில்லை

சேர்ச் பற்றி பேசுகிறார்கள் 

 

அவர்கள் கதைக்கும் சேச்சுக்குள்ளே மறைந்திருப்பது அப்பாவி தமிழ் கிறிஸ்தவர்களின் உயிர்கள். சில சிங்கள கிறிஸ்தவர்கள்  எதிர்பாராமல் மாட்டிக்கொண்டனர். அதனாற்தான் கர்தினாலும் குரல் காட்டுகிறார். தமிழின அழிப்பை யாரும் பேசுவதில்லை, அது மண்ணோடு புதைந்து வெளிக்கிளம்பும்போதும்  அதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் இந்த சேச்சை கிளறினால் தொடர்ந்து அதுவும் கிளற வாய்ப்பிருக்கிறது, அதனாலேயே  சர்வதேச விசாரணை என்று ஒலித்த குரல் அடங்கிவிட்டது. சேச் மட்டுமானதென்றால் சிங்களம் வரவேற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

தவறு அண்ணா

அவர்கள் தமிழர் பிரச்சினை பற்றி ஒன்றும் பேசவில்லை

சேர்ச் பற்றி பேசுகிறார்கள் 

 தமிழர் பிரச்சினை தமிழர் மீதான துஷ்பிரயோகம் பற்றிபேசுகிறார்கள் என்று நான் நினைத்துவிட்டேன் 🙁

நன்றி அய்யா.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

 

May be an image of text

இங்கே இன்டர்நேஷனல் லோன் என்பதை விட இன்டர்நேஷனல் கிராண்ட் என்று போட்டிருந்தால் இலங்கை இன்னும் சந்தோசப்பட்டிருக்கும். என்னதான் இருந்தாலும் செகண்ட் கிளாஸ் செகண்ட் கிளாஸ்த்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.