Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸில் மூட்டைப்பூச்சி தொல்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் முழுவதும் பெருகி வரும் பூச்சித் தொல்லைகள் பற்றிய பீதி அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் போது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த வாரங்களில் பூச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - மேலும் அந்த மேல்நோக்கிய போக்கு பல ஆண்டுகளுக்கு முந்தையது.

திரையரங்குகளில் பூச்சியின் உறுதிப்படுத்தப்படாத காட்சிகள் பதிவாகியுள்ளன, மேலும் ரயில்களில் மக்கள் கடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிபிசியின் பாரிஸ் நிருபர் ஹக் ஸ்கோஃபீல்ட் அவர்களை நேரில் சென்று பார்க்கச் சென்றார்.

https://www.bbc.com/news/av/world-europe-67010255

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

 

பிரான்ஸ் சனம் ஒன்றூம் வாயை தொறக்கல்ல மூட்டைப்பூச்சிக்கு @suvy😷

  • கருத்துக்கள உறவுகள்

மூட்டைப்பூச்சி, கரப்பான், இலையான், நுளம்பு, கொசு இல்லாத இடம் என்று ஒன்று இருக்கா சொல்லுங்க தனி.......இப்ப இந்த மீடியாக்கள் கொஞ்சம் மிகைப்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது......!  😁

மூட்டைப்பூச்சி தொல்லை பாராளுமன்ற வாக்குவாதம் வரை சென்றுள்ளது. இன்று காலையில் மகள் படிக்கும் பாடசாலையில் மூட்டைப் பூச்சி ஒன்றைக் கண்டுபிடித்ததால் அந்த வகுப்பறையை மூடி மூட்டைப்பூச்சி வல்லுனர்களை வரவழைத்துள்ளதாக ஈமெயில் வந்துள்ளது.

எங்கள் வீட்டுக்கு இன்னும் வரவில்லை. வந்தால் சுமே அக்காவிடம் ஆலோசனை கேட்க இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

எங்கள் வீட்டுக்கு இன்னும் வரவில்லை

என்ன தம்பி சொல்லிப் போட்டா வரும்?

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிரான்ஸ் சனம் ஒன்றூம் வாயை தொறக்கல்ல மூட்டைப்பூச்சிக்கு @suvy😷

இன்னமும் கடி வாங்கலை என்று எண்ணுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

மூட்டைப்பூச்சி, கரப்பான், இலையான், நுளம்பு, கொசு இல்லாத இடம் என்று ஒன்று இருக்கா சொல்லுங்க தனி.......இப்ப இந்த மீடியாக்கள் கொஞ்சம் மிகைப்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது......!  😁

இங்கும் அப்படித் தான் ஒரு கொட்டேலில் பூச்சியைக் கண்டால் அந்த அறையை மட்டுமல்ல அந்த முழு தளத்தையுமே பூட்டு சோதிப்பார்கள்.

சுற்றிவர மீடியாக்களின் தொல்லை வேறு.

யாருக்காவது கடித்திருக்கான்று சட்டத்தரணிகளின் உதவியாளர்கள் பணம் பார்க்கவென்று 

இப்படி ஒரே அல்லோல கல்லோலம்.

ஒலிம்பிக் நடக்கவிருப்பதால் கூடுதலான நடவடிக்கையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில், உண்ணி (tick), தெள்ளு (flea), நுளம்பு ஆகியவற்றை விட மூட்டைப் பூச்சியினால் வரும் ஆபத்துக்கள் குறைவு. ஏனெனில் மூட்டைப் பூச்சிகள் நோய்களைக் காவுவதில்லை. ஆனால், சிலருக்கு ஒவ்வாமை வரலாம். சிலருக்கு மூட்டைப் பூச்சி கடிப்பதே தெரியாத அளவுக்கு ஒரு விளைவும் இருக்காது.

ஆனால், மூட்டைப் பூச்சி ஏனைய பீடைகளைப் போல அல்லாமல் ஒளித்திருந்து பெருகுவதில் வல்லவை என்பதால் தான் மக்கள் பீதியடைகிறார்கள். கீழே அமெரிக்க CDC சொல்வதைப் பாருங்கள்:

How did I get bed bugs?

Bed bugs are experts at hiding. Their slim flat bodies allow them to fit into the smallest of spaces and stay there for long periods of time, even without a blood meal. Bed bugs are usually transported from place to place as people travel. The bed bugs travel in the seams and folds of luggage, overnight bags, folded clothes, bedding, furniture, and anywhere else where they can hide. Most people do not realize they are transporting stow-away bed bugs as they travel from location to location, infecting areas as they travel.

சுருக்கமாக: "மக்கள் பயணம் செய்யும் போது அவர்களது உடைகள், பயணப் பொதியின் இடுக்கு என பல இடங்களில் ஒளிந்து வந்து சேர்ந்து விடுபவை மூட்டைப் பூச்சிகள்"

தற்போது மக்கள் வர்த்தக ஹோட்டல்களைத் தவிர்த்து Airbnb போன்ற தனியார் வீடுகளில் தங்குவது பிரபலமாகி வருவதால், இது போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன என நினைக்கிறேன். ஹோட்டல்களில் - அவை தரமானவையாக இருந்தால் - படுக்கை முதல் சகலவற்றையும் ஒரு exterminator கொண்டு சுத்தமாக வைத்திருப்பர். காசு கொஞ்சம் கூட கொடுத்தாலும், தரமான ஹோட்டல்களில் தங்குவதால் நன்மைகள் உண்டு!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

மூட்டைப்பூச்சி, கரப்பான், இலையான், நுளம்பு, கொசு இல்லாத இடம் என்று ஒன்று இருக்கா சொல்லுங்க தனி.......இப்ப இந்த மீடியாக்கள் கொஞ்சம் மிகைப்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது......!  😁

நான் துபாயில் இருக்கும் போது மூட்டைப்பூச்சி, கரப்பான் பூச்சி இவற்றின் தொல்லை தாங்க முடியாமல் வேலை இடத்தில் உறங்கிய சம்பவமும் உண்டு 
மூட்டைப்பூச்சி சட்டையில் இருந்ததால் கம்பனியின் கான்ரக்ட் கேன்சல் ஆனது  ஒரு தடவை அது வாங்காளிகள் சட்டையில் சும்மாவே குளிக்க மாட்டாங்கள் குளிர் வந்தால் கேட் கவா வேண்டும்

15 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னமும் கடி வாங்கலை என்று எண்ணுவோம்.

நம்ம சனம் எங்க ஒத்துக்குவாங்க  வரட்டும்பொறுமை காப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.