Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ் உறுப்பினர்களின் 1500 உடல்கள் காணப்பட்டதாகவும்.....

இனி கணக்கு மட்டும் தான்.....😭

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

உலகம் முழுவதும் வெற்றிக் கோசம் போட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் பெரும்பாலானோரைக் காணவில்லையாம்... 😂

கொஞ்ச நஞ்சப் பேச்சாடா பேசினீங்க😼

காசா கருகத் தொடங்க ஓடிற்றாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, goshan_che said:

ஒருவர் ஹமாஸ் நேற்று செய்ததை - நியாயப்படுத்தும் முகமாம- ஏன் புலிகள் கூடத்தான் பொதுமக்களை திட்டமிட்டு தாக்கினார்கள் என்று எழுதினால் அதை கண்டும் காணாமல் போக வேண்டும் என்கிறீர்களா?

உங்களுக்கு கொஞ்சம் விளக்கம் குறைவா? நான் எழுதியது புலிகளுக்கு கூட அரசாங்கத்தின் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் விளைவு எப்படி இருக்கும் என்பதைக்காட்ட அப்படி ஒரு தாக்குதல் தேவைப்பட்டது என்பதை கூறத்தான்! அத்துடன் பொதுமக்கள் எவ்வளவு soft target என்பதை சிங்களத்திற்கு புரியவைக்கவும்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நன்னிச் சோழன் said:

உலகம் முழுவதும் வெற்றிக் கோசம் போட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் பெரும்பாலானோரைக் காணவில்லையாம்... 😂

கொஞ்ச நஞ்சப் பேச்சாடா பேசினீங்க😼

காசா கருகத் தொடங்க ஓடிற்றாங்கள்.

இப்படித்தான் அவர்களும் எள்ளி நகையாடியிருப்பார்கள் எம்மினம் முள்ளிவாய்க்காலில் அழித்தொழிக்கப்பட்டபோது!
ஆனால் அப்போது எமது மனநிலை எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் யோசித்துவிட்டு எழுதுங்கள்!!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Eppothum Thamizhan said:

உங்களுக்கு கொஞ்சம் விளக்கம் குறைவா? நான் எழுதியது புலிகளுக்கு கூட அரசாங்கத்தின் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் விளைவு எப்படி இருக்கும் என்பதைக்காட்ட அப்படி ஒரு தாக்குதல் தேவைப்பட்டது என்பதை கூறத்தான்! அத்துடன் பொதுமக்கள் எவ்வளவு soft target என்பதை சிங்களத்திற்கு புரியவைக்கவும்தான்!

உங்கள் அளவுக்கு விளக்கம் இல்லைத்தான்.

இத்தனை அழிவுக்கு பிறகும் “புலிகள் மக்களை குறிவைத்தது தவறு” என்பதை காலம் எமக்கு உணர்த்தியது போல், இப்போ ஹமாஸ் மக்களை இலக்கு வைப்பதும் தவறு என எழுதாமல், “புலிகளுக்கு கூட இப்படி ஒரு தாக்குதல் தேவைப்பட்டது”, “ஆகவே ஹமாசுக்கும் தேவைபட்டுள்ளது” என்று எழுதும் அளவுக்கு என்னிடம் விளக்கம் இல்லைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.aljazeera.com/news/2023/10/9/reports-of-mass-casualties-as-israeli-air-attack-hits-refugee-camp-in-gaza

இப்போது தெரிகிறதா சிங்களத்திற்கு யார் சொல்லிக்கொடுத்ததென்று??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

1. இஸ்ரேலியர்கள் காட்டும் வரலாற்றுக் காரணம்: இஸ்ரேல், யூதேயா ஆகிய தேசங்கள் அரசர்களின் கீழ் 2000 ஆண்டுகள் முன்பே இருந்திருக்கின்றன. இந்தத் தேசங்களில் வாழ்ந்தோரே யூதர்கள். எனவே தேசமொன்றாக இருந்த மக்கள் யூதர்கள் என்பது உண்மை. மறுவளமாக, பலஸ்தீனம் பல்வேறு பெயர்களில் பலஸ்ரைன் (Palestain), பெரும் சிரியா (Greater Syria), சிரியா பலஸ்தீன், "Mandatory Palestine" எனும் பெயர்களில் பலஸ்தீன் என்ற பிரதேசத்தில் அரபு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு தனித் தேசமாக இருக்கவில்லை என்பது யூதர்களின் வாதம்.

2. நடைமுறைக் காரணம்: பலஸ்தீனம் ஒரு தேசமாக இருந்திருக்கா விட்டாலும் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த மண்ணை தாய் நிலமாகக் கொள்ள வேண்டும், எனவே இரு நாடுகள் அந்தப் பிரதேசத்தில் உருவாக வேண்டும் என்பது ( கோசான் சொல்லியிருப்பது போல) 90 களில் இருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. எனவே, இரு பகுதிக்கும் உரிமை சமனானது என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

3. முட்டுச்சந்து: இரு நாடுகள் உருவாக வேண்டுமானால் இரு பகுதிக்கும் அடிப்படையாக "நிலம்" வேண்டும். இங்கே தான் முட்டிக் கொண்டு நிற்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீனர்களின் கீழ் இருந்த நிலத்தில் 50% இற்கும்சிறிது அதிகமான பகுதி 1948 இல் ஐ.நா தீர்மானம் மூலம் இஸ்ரேலுக்குப் போனது. இதை ஏற்றுக் கொள்ளவோ, சமாதானமாகப் போகவோ விரும்பாத பலஸ்தீனர்களும், அரபு நாடுகளும் இஸ்ரேலைத் தாக்க முனைந்த போது போர் உருவாகி 1949 இல் மிக அதிக அளவிலான பலஸ்தீனப் பகுதி (78%?) இஸ்ரேல் வசமாகியது. 1967, 6 நாள் யுத்தத்தில்  இது இன்னும் அதிகரித்தது.

இதில் பாடம் என்னவெனில், ஒவ்வொரு முறையும் பலஸ்தீன கிளர்ச்சியும், அரபு நாடுகளின் தாக்குதலும் நடந்த போதெல்லாம், இஸ்ரேலுக்கு மேலும் அதிக நிலம் கிடைத்திருக்கிறது. அல்லது, மேலும் பாதுகாப்பு என்ற போர்வையில் பலஸ்தீனத்தைக் கட்டுப் படுத்தும் சாட்டுக் கிடைத்திருக்கிறது.

இந்த முறையும் இதுவே நடக்கும். அனேகமாக, காசவினுள் இஸ்ரேல் படைகள் நுழையாது. அப்படி நுழைய வேண்டுமென்ற ஹமாசின் ஆசைக்கு இஸ்ரேல் பலியாகாது என நினைக்கிறேன்.

ஆனால், காசா, மேற்குக் கரை மீதான இஸ்ரேலின் பிடி இன்னும் இறுகும். மிகக் கடினமான ஒரு வாழ் நிலைக்குள் காசா வாழ் பலஸ்தீனர்கள் தள்ளப் படுவர். அவர்களாகவே ஹமாசை எதிர்த்தாலொழிய வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்த இஸ்ரேல் முயலும்.  

  • Like 5
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Eppothum Thamizhan said:

https://www.aljazeera.com/news/2023/10/9/reports-of-mass-casualties-as-israeli-air-attack-hits-refugee-camp-in-gaza

இப்போது தெரிகிறதா சிங்களத்திற்கு யார் சொல்லிக்கொடுத்ததென்று??

இலங்கை அரசு வாயில் விரலை வைத்தால் கடிக்க கூட தெரியாத பபா. 

கெட்ட இஸ்ரேல்தான் அதை கெடுத்து விட்டது🤣.

விட்டால்1952-83 கலவரங்கள் கூட இஸ்ரேல் சொல்லித்தான் நடந்தது என எழுதுவார்கள் போல உள்ளது விளக்க வீரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, goshan_che said:

இலங்கை அரசு வாயில் விரலை வைத்தால் கடிக்க கூட தெரியாத பபா. 

கெட்ட இஸ்ரேல்தான் அதை கெடுத்து விட்டது🤣.

விட்டால்1952-83 கலவரங்கள் கூட இஸ்ரேல் சொல்லித்தான் நடந்தது என எழுதுவார்கள் போல உள்ளது விளக்க வீரர்கள்.

இனகலவரங்களையும், ஐநா பாதுகாப்பிலுள்ள refugee camp ஐ தாக்குவதையும் ஒரேதட்டில் வைத்துப்பார்க்கும் உங்கள் அறிவு புல்லரிக்கவைக்கிறது!!

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
21 minutes ago, Eppothum Thamizhan said:

இப்படித்தான் அவர்களும் எள்ளி நகையாடியிருப்பார்கள் எம்மினம் முள்ளிவாய்க்காலில் அழித்தொழிக்கப்பட்டபோது!
ஆனால் அப்போது எமது மனநிலை எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் யோசித்துவிட்டு எழுதுங்கள்!!

அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை...

-------------------

முதல்நாளில் 60 இஸ்ரேலியக் குழந்தைகளை வெட்டியும் சுட்டும் ஈரமில்லாமல் படுகொலை செய்தது பாலஸ்தீனப் பயங்கரவாதம்.

அப்படியே தென் தமிழீழத்தில் இலங்கை முஸ்லிம்கள் செய்த படுகொலைகள் கண்முன் வந்து போகிறது.

விரைவில் பாலஸ்தீனப் பயங்கரவாதத்திற்கு இஸ்ரேல் முடிவுகட்ட வேண்டும்.

Image

Image

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Justin said:

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

1. இஸ்ரேலியர்கள் காட்டும் வரலாற்றுக் காரணம்: இஸ்ரேல், யூதேயா ஆகிய தேசங்கள் அரசர்களின் கீழ் 2000 ஆண்டுகள் முன்பே இருந்திருக்கின்றன. இந்தத் தேசங்களில் வாழ்ந்தோரே யூதர்கள். எனவே தேசமொன்றாக இருந்த மக்கள் யூதர்கள் என்பது உண்மை. மறுவளமாக, பலஸ்தீனம் பல்வேறு பெயர்களில் பலஸ்ரைன் (Palestain), பெரும் சிரியா (Greater Syria), சிரியா பலஸ்தீன், "Mandatory Palestine" எனும் பெயர்களில் பலஸ்தீன் என்ற பிரதேசத்தில் அரபு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு தனித் தேசமாக இருக்கவில்லை என்பது யூதர்களின் வாதம்.

2. நடைமுறைக் காரணம்: பலஸ்தீனம் ஒரு தேசமாக இருந்திருக்கா விட்டாலும் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த மண்ணை தாய் நிலமாகக் கொள்ள வேண்டும், எனவே இரு நாடுகள் அந்தப் பிரதேசத்தில் உருவாக வேண்டும் என்பது ( கோசான் சொல்லியிருப்பது போல) 90 களில் இருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. எனவே, இரு பகுதிக்கும் உரிமை சமனானது என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

3. முட்டுச்சந்து: இரு நாடுகள் உருவாக வேண்டுமானால் இரு பகுதிக்கும் அடிப்படையாக "நிலம்" வேண்டும். இங்கே தான் முட்டிக் கொண்டு நிற்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீனர்களின் கீழ் இருந்த நிலத்தில் 50% இற்கும்சிறிது அதிகமான பகுதி 1948 இல் ஐ.நா தீர்மானம் மூலம் இஸ்ரேலுக்குப் போனது. இதை ஏற்றுக் கொள்ளவோ, சமாதானமாகப் போகவோ விரும்பாத பலஸ்தீனர்களும், அரபு நாடுகளும் இஸ்ரேலைத் தாக்க முனைந்த போது போர் உருவாகி 1949 இல் மிக அதிக அளவிலான பலஸ்தீனப் பகுதி (78%?) இஸ்ரேல் வசமாகியது. 1967, 6 நாள் யுத்தத்தில்  இது இன்னும் அதிகரித்தது.

இதில் பாடம் என்னவெனில், ஒவ்வொரு முறையும் பலஸ்தீன கிளர்ச்சியும், அரபு நாடுகளின் தாக்குதலும் நடந்த போதெல்லாம், இஸ்ரேலுக்கு மேலும் அதிக நிலம் கிடைத்திருக்கிறது. அல்லது, மேலும் பாதுகாப்பு என்ற போர்வையில் பலஸ்தீனத்தைக் கட்டுப் படுத்தும் சாட்டுக் கிடைத்திருக்கிறது.

இந்த முறையும் இதுவே நடக்கும். அனேகமாக, காசவினுள் இஸ்ரேல் படைகள் நுழையாது. அப்படி நுழைய வேண்டுமென்ற ஹமாசின் ஆசைக்கு இஸ்ரேல் பலியாகாது என நினைக்கிறேன்.

ஆனால், காசா, மேற்குக் கரை மீதான இஸ்ரேலின் பிடி இன்னும் இறுகும். மிகக் கடினமான ஒரு வாழ் நிலைக்குள் காசா வாழ் பலஸ்தீனர்கள் தள்ளப் படுவர். அவர்களாகவே ஹமாசை எதிர்த்தாலொழிய வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்த இஸ்ரேல் முயலும்.  

ஒவ்வொரு முறை போரிடும் போதும் எப்படி பலஸ்தீன நலன்கள், நிலங்கள் பறிபோய் கொண்டே இருக்கிறன என்பதை கண்டும், ஜோர்டானும், எகிப்தும் எல்லையை இறுக்க மூடிய பின்னும்….ஹாமசை விரட்டி விட்டு, மேற்கு கரையில் இருக்கும் பலஸ்தீனர்கள் போல பெட்டாவை மீள அழைக்கும் வரை - காசாவிற்கு மீட்சியில்லை.

3 minutes ago, Eppothum Thamizhan said:

இனகலவரங்களையும், ஐநா பாதுகாப்பிலுள்ள refugee camp ஐ தாக்குவதையும் ஒரேதட்டில் வைத்துப்பார்க்கும் உங்கள் அறிவு புல்லரிக்கவைக்கிறது!!

இனகலவரங்கள், அகதிமுகாம்கள் இல்லாத போது - அப்பாவிகளை அவர்கள் வீடுகளில் வைத்து தாக்கினார்கள்.

போர் முற்றி அப்பாவிகள் அகதி முகாம்களுக்கு போக தொடங்க அதையும் தாக்கினார்கள்.

அப்பாவிகளை, போரிடா தரப்புகளை, சிவிலியன்களை தாக்குவது என்ற முடிவு  ஒன்றுதான், அது கலவரமாக இருப்பினும், அகதிமுகாம் மீதான தாக்குதலாக இருப்பினும்.

இஸ்ரேல் இலங்கைக்கு ஆயுதம் வித்தது, இராணுவ நகர்வுகளை சொல்லி கொடுத்தது உண்மை.

பலஸ்தீனர்கள் எம்மிடம் காசு வாங்கி கொண்டு சொல்லி தந்தார்கள். அதையே இஸ்ரேல் இலங்கைக்கு செய்தது.

ஆனால் அப்பாவிகளை தாக்கும் கொலைவெறியை இலங்கைக்கு யாரும் சொல்லி கொடுக்கத்தேவையில்லை. அது அவர்களுக்கு ரத்தத்தில் ஊறியது. இல்லை இஸ்ரேல் சொல்லி கொடுத்தது என நீங்கள் எழுதுவது - இலங்கக்கு வெள்ளை அடிக்கும் செயல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, நன்னிச் சோழன் said:

அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை...

இதேபோல்தான் இனி எம்மினத்தை பற்றியும் யாரும் கவலைப்படப்போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
Just now, Eppothum Thamizhan said:

இதேபோல்தான் இனி எம்மினத்தை பற்றியும் யாரும் கவலைப்படப்போவதில்லை!

சரி சரி சரி... போட்டு வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 minutes ago, நன்னிச் சோழன் said:

சரி சரி சரி... போட்டு வாங்கோ.

இதை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் சொல்லத்தேவையில்லை!!

இதைத்தான் சொல்வார்கள், சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று!!

Edited by Eppothum Thamizhan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

ஆனால் அப்பாவிகளை தாக்கும் கொலைவெறியை இலங்கைக்கு யாரும் சொல்லி கொடுக்கத்தேவையில்லை. அது அவர்களுக்கு ரத்தத்தில் ஊறியது. இல்லை இஸ்ரேல் சொல்லி கொடுத்தது என நீங்கள் எழுதுவது - இலங்கக்கு வெள்ளை அடிக்கும் செயல்.

100 பொதுமக்களை கொன்றால் அதில் 5 பேராவது போராளிகளாக இருப்பார்கள் என்று சொல்லிக்கொடுத்ததே இந்த  இஸ்ரேல்தான்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Eppothum Thamizhan said:

100 பொதுமக்களை கொன்றால் அதில் 5 பேராவது போராளிகளாக இருப்பார்கள் என்று சொல்லிக்கொடுத்ததே இந்த  இஸ்ரேல்தான்!!

மீண்டும் மீண்டும் இலங்கைக்கு வெள்ளை அடிக்கிறீர்கள்.

போராளிகள் உருவாக முன்பே, தார்பீப்பாக்குள் தமிழர்களை போட்டவர்கள் அவர்கள்.

அதே போல் எந்த போராளி குழுவும் இல்லாத கொழும்பில், பொலிசுக்கு விடுமுறை கொடுத்து விட்டு, அப்பட்டமாக பொதுமக்களை குறி வைத்தவர்கள் அவர்கள்.

இஸ்ரேல் சொல்லி கொடுத்துத்தான் இலங்கை தமிழ் பொதுமக்களை தாக்கியது என்பது நகைபுக்கிடமானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

மீண்டும் மீண்டும் இலங்கைக்கு வெள்ளை அடிக்கிறீர்கள்.

யார் யாருக்கு வெள்ளையடிக்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, goshan_che said:

இது ஒரு நம்பிக்கை என முன்பே கூறியுள்ளேன்.

சுருக்கமாக இந்த நம்பிக்கை யாதெனில் ஆபிரகாமுக்கும் அடிமை பெண்ணுக்கும் இஷ்மாயில் பிறந்த பின் எதிர்பாராத வயதில் ஆபிரகாமுக்கும் மனைவி சாராவுக்கும் மகனாக ஐசாக் பிறக்கிறார்.

அதன் பின் சாரா ஈஷ்மாயில்லையும் அவர் தாயையும் ஆபிரகாமின் தேசத்தில் இருந்து விலக்கி வைக்க கோரி, ஆபிரகாம் சஞ்சலபட, கடவுள் ஆபிரகாமை அவ்வாறே செய்யும் படி கூறி, இஷ்மாயிலும் ஆபிரகாமின் ஒரு மகன் என்பதால் அவர் ஒரு பெரும் இனக்குழிவின் தலைவர் ஆவார் எனவும். அந்த இனகுழு செல்வம் படைத்து இருக்கும் எனவும் ஆபிரகாமுக்கு கடவுள் வாக்களிக்கிறார்.

இவ்வாறு இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்ட இஸ்மாயிலின் வழி வந்தவர்கள்களே அரபு மக்கள். இவர்களும் பல உட்பிரிவாக இருந்தனர். அதில் ஒரு பிரிவான குரோசி யில் பிறந்தவரே மொகமட்.

இது மகாபாரதம், இராமாயணம் போல ஒரு இதிகாசம். இதை வைத்து இஸ்ரேலில் அரபு மக்களுக்கு ஆட்சி உரிமை உள்ளது என வாதாட முடியாது.

ஆனால் அப்படியே வாதாடினாலும் கூட - இஸ்மாயிலின் வழி வந்த அரபுகள் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்டோர். எனவே அவர்களுக்கு அங்கே ஆட்சி உரிமை இல்லை.

அனால் இந்த கதைகள் எதுவும் தேவையில்லை.

2023 இல் அங்கே யூதரும், அரபிகளும் உள்ளார்கள். ஆளை ஆள் அழிக்க முனையாத இரண்டு நாடுகளை உருவாக்குவதே செய்ய வேண்டியது.

ஆம் ஆகர் எனும் அடிமைப்பெண்ணுக்கு பிறந்தவனே இஸ்மவேல். 

5 hours ago, ஏராளன் said:

இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் - ஈரானின் ஆன்மீக தலைவர்

Published By: RAJEEBAN

10 OCT, 2023 | 02:22 PM
image
 
இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் என  ஆன்மீக தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈரானிற்கு தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.

எனினும் சியோனிச ஆட்சியாளர்களிற்கு எதிரான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் என அவர் தெரிவித்தார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166555

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, colomban said:

ஆம் ஆகர் எனும் அடிமைப்பெண்ணுக்கு பிறந்தவனே இஸ்மவேல். 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, goshan_che said:

இதை விளங்க, நீங்கள் முதலில் மதங்கள் உருவாகிய டைம்லைனையும், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, குரான் ஆகியவற்றுக்கிடையான வித்தியாசத்தையும் விளங்கி கொள்ள வேண்டும்.

அதற்கு உங்களுக்கும் நேரம் இல்லை. எனக்கும் இல்லை.

ஆகவே ஒரு சின்ன நன்கு தெரிந்த உதாரணம் மூலம் முயற்சிக்கிறேன்.

1. பெரியார் திராவிடர் கழகத்தை ஸ்தாபித்தார்.

2. அண்ணா திமுகவை திகவில் இருந்து சில வேறுபாடுகளுடன் ஸ்தாபித்தார். ஆனால் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார்.

3. எம் ஜி ஆர் அதிமுகவை ஸ்தாபித்தார். அவரும் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார்.

4. வைகோ மதிமுகவை ஸ்தாபித்தார். அவரும் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார். 

இப்போ பெரியார் தி.கவா? திமுகவா? அதிமுகவா? மதிமுகவா?

பெரியார் திக மட்டும்தான்.

அப்படித்தான் ஆபிரஹாமும். அவர் யூதர் மட்டுமே. அவரின் வழியை ஒட்டி பின்பு சில மாற்றங்களோடு வந்த மதங்களே கிறிஸ்தவமும் இஸ்லாமும்.

ஆபிரஹாமுக்கும் முன்பே நான் இருந்தேன் before Abraham was I am என யேசு சொல்கிறார் என்கிறது வேதாகமம்.

அதே போல் ஆபிரஹாம், மோசஸ், யேசு அனைவரையும் நபிகளாக ஏற்கிறது இஸ்லாம். அது மட்டும் அல்ல, ஆபிரகாமுக்கும் முன்பே இஸ்லாம் இருந்தது, அது மொகமட்டுக்கு மீள் உரைக்கப்பட்டது என்பதே அவர்களின் நம்பிக்கை. அதாவது இஸ்லாம் மொகட்டுக்கும் முந்தியதாம்.

ஆனால் இவை எல்லாம் தரவுகள் சார் விடயங்கள் அல்ல. பெரும்பாலானவை நம்பிக்கை அடிப்படையிலானவை.

ஆனால் யூத நாடு அங்கே இருந்தது என்பது மறுக்கவியலாத உண்மை. Temple Mount இல்  தேவாலயம், மசூதியை வர பல நூற்றாண்டுகள் முன்பே அங்கு யூத கோவில் இருந்ததும் உண்மை.

அங்கே Semitic tribes பல வாழ்ந்துள்ளன. அதில் இன்நாளைய அரபிகளின் மூதாதையரும் அடங்குவர்.

ஆம் யோவான் புத்தகத்தில் இது குறிப்பிடபட்டுள்ளது. 
அருமை கோசான் இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்மீது விழுந்த உடல்களே என்னை காப்பாற்றின - ஹமாஸ் தாக்குதலில் சிக்கிய பெண்

Published By: RAJEEBAN

10 OCT, 2023 | 04:52 PM
image
 
என்மீது விழுந்த உடல்களே என்னை காப்பாற்றின என ஹமாசின் தாக்குதலில் சிக்குண்டு உயிர்தப்பிய பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

ஹமாசின் தாக்குதலில் சிக்குண்ட  பெண்ணொருவர் தனது  24 வயது மகன் எலியன் கடத்தப்பட்டுள்ளார் என அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

அந்த தருணத்திலிருந்து உண்பதும் உறங்குவதும்; கடினமாக உள்ளது அவர் எங்கிருக்கின்றார் என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையிலேயே நான் எப்போதும் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்தவேளை இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரில் அவரது மகனும் ஒருவர் .

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் 270 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உடல்கள்  என்மீது விழுந்தன உடல்களே  என்னை காப்பாற்றின துப்பாக்கிபிரயோகத்திலிருந்து அவை என்னை காப்பாற்றின என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

நானும் மகனும் ஒருவரையொருவர் இருக்கமாக பிடித்துக்கொண்டு நின்றோம் தீடிரென ஒருவர் மகனை இழுத்துச்சென்றார் நான் அவனை இழந்தேன் என அபுட் என்ற பெண்மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166576

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

2. காசாவில் கண்மூடித்தனமாக இஸ்ரேல் குண்டு வீசுகிறது. சில இடங்களில் அப்பட்டமாக குடியிருப்பு என தெரியும் கட்டிடங்கள் அப்படியே நொருக்கப்படுகிறன.

இவை நிச்சயம் போர்குற்றங்கள்தான். ஆனால் மேற்கோ, ரஸ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ வாய் திறாவா

வடிவாக பார்த்துகொள்ளுங்கள் மக்களே - நான் இஸ்ரேலுக்கும், மேற்குக்கும் வெள்ளை அடித்த தருணம்.

🤡 என நன்னி திண்ணையில் சொன்னது சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, goshan_che said:

அடிப்படை லொஜிக்கல் சிந்தனை கூடவா இல்லை?

ஆபிரகாமுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு அதில் இருந்து ஆரம்பமாவதே யூத மதம்.

அப்படி இருக்க, அந்த ஒப்பந்ததுக்கும் முதல் ஆபிரகாம் யூதர் இல்லை, எனவே அவர் யூதர் இல்லை என்பது சிரிக்கும் படியாகவல்லவா உள்ளது?

ஆபிரகாம் பிறக்கும் போது யூத மதம் இல்லை. ஆனால் அதனை தோற்றுவித்தவர் அவர். 

ஆகவே ஆபிரகாம்தான் முதல் யூத மதத்தவர்.

இப்போ விளங்கி இருக்கும் என நினைக்கிறேன்.

இதுகுள்ள, என் மீது சேறடிக்கும் முயற்சி வேற🤣.

சரி விடுவம்.

ஆம் கர்த்தர் ஆபிராகாமுக்கு உன் சந்ததியை மணலைபோலவும், வானத்தின் நட்சத்திரங்களை போலவும் பொருகப் பண்னுவேன் என்றார். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/10/2023 at 05:03, P.S.பிரபா said:

நன்னி!!

இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா?

இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். 
 
போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. 

இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று

இதைத் தான் நானும் ஆரம்பத்திலேயே எழுதினேன் ...அவர் ஆரை ஆதரித்தாலும் எனக்கு அது பற்றி அக்கறை இல்லை ...ஆனால் பாதிக்கப்படட இனத்தில் இருந்து கொண்டு எப்படி மற்றவர்களின் இறப்பை ரசிக்க முடிகிறது?...எதிரியே ஆனாலும் அதற்குரிய மரியாதை கொடுங்கள் என சொல்லியவர் தலைவர்...அவரை மாமா என சொல்லி கொண்டு அப்பாவி மக்களது இறப்பை ரசிக்க எப்படி இவர்களுக்கு  மனம் வருகுது 
 
On 9/10/2023 at 14:32, P.S.பிரபா said:

 எமது மக்கள் தொடர்பான எண்ணங்களிலும் இந்த ஆவணத் தயாரிப்பிலும் ஈடுபடும் நன்னியின் மீதான எனது அபிப்பிராயம் மாறவில்லை அண்ணா!.

நாங்கள் எல்லோரும் வேறுபட்ட சூழலில் வளர்ந்தவர்கள்.. எல்லோரும் எல்லாவிடயங்களிலும் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் எனக் கூறமுடியாது தானே. அதே போன்ற ஒன்றுதான் இந்த திரியில் நன்னியின் கேள்விக்கு எனது கருத்து.  

இவர் மேல் இருந்த மதிப்பு  நன்றாக குறைந்து விட்டது ...  ஓவராய் புலி பாட்டு பாடுபவர்கள் இப்படி தான் சறுக்குவார்கள் என்று எனக்கு முதலே தெரியும் ...அதுக்காக இவரை துரோகி என்று எல்லாம் சொல்ல மாட்டேன்...அது வால்களின்  வேலை 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலின் பேர்ள் ஹாபர் தருணம்? ஏன் இஸ்ரேலின் அதிநவீன எல்லை பாதுகாப்பினால் சனிக்கிழமை தாக்குதலை தடுக்க முடியவில்லை?

Published By: RAJEEBAN

09 OCT, 2023 | 02:41 PM
image

சிஎன்என்

துப்பாக்கிதாரிகள் வான் மூலமும் கடல்வழியாகவும் வான்வெளி மூலமாகவும் வந்தார்கள் அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் பணயக்கைதிகளாக பொதுமக்களை பிடித்துச்சென்றார்கள் மக்களின் உயிருக்கு அஞ்சி வீடுகளிற்குள் முடங்கிஇருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தினார்கள்.

வான்வெளி பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகளுடன் உதயமான அன்றயை தினம் மதியத்திற்குள் இஸ்ரேல் தனது 75 வருட வரலாற்றில் மோசமான நாளை எதிர்கொண்டது.

வறுமையில் சிக்குண்டுள்ள மக்கள் கடும் நெருக்கமாக வாழும் காஜா பள்ளத்தாக்கை சேர்ந்த ஹமாஸ் குழுவை சேர்ந்தவர்கள் அன்றிரவிற்குள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து பல நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்திவிட்டனர்.

iron_dome.jpg

இஸ்ரேலிற்கு பயங்கரவாத தாக்குதல் புதிய விடயம் என்ற போதிலும் சனிக்கிழமை தாக்குதல்  முன்னொருபோதும் இல்லாதது, முன்னெச்சரிக்கை இல்லாதது மாத்திரம் இதற்கு காரணமல்ல - இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதலால் பெரும் ஆச்சரியத்தில் அதிர்ச்சியில் சிக்கவேண்டி வந்ததும் முக்கியமான விடயம்.

பல தசாப்தங்களில் இஸ்ரேல் தொழில்நுட்ப சக்தியாக மாறியுள்ள போதிலும் மிகவும்திறமையான ஆயுதப்படைகள் உலகின் முன்னணி புலனாய்வு பிரிவு போன்றவற்றை கொண்டுள்ள போதிலும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகள் பெருமளவு கேள்விகளை எதிர்கொள்கின்றனர்.

17 வருடங்களிற்கு பின்னர் இஸ்ரேலிற்குள் இடம்பெற்ற தாக்குதலில் போர்வீரர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர், தனது முகாம்களிற்குள் நகரங்களிற்குள் இவ்வாறான ஊருடுவல்களை இஸ்ரேல் எதிர்கொண்டது இல்லை.

1948 சுதந்திரத்திற்கான போரின் போது கிப்புட்டிஜம் என்ற 

நகரத்திற்குள்  ஊடுருவல் இடம்பெற்றது.

உலகின்  மிகவும் வறுமையான பகுதியை சேர்ந்த பயங்கரவாதிகளால் இவ்வாறான தாக்குதலை மேற்கொள்ள முடியும்?

முழு அமைப்பு முறையும் தோல்வியடைந்தது தனியாக ஒன்று மாத்திரம் இல்லை முழுப்பாதுகாப்பு அமைப்பும் தோல்வியடைந்துள்ளது. இஸ்ரேலின் முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அதன் பொதுமக்களிற்கு பாதுகாப்பை வழங்க தவறிவிட்டது என இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் சர்வதேச பேச்சாளர் ஜொனதன் கொனரிகஸ் தெரிவித்துள்ளார்.

இது இஸ்ரேலிற்கான பேர்ள் கார்பர் துறைமுக தருணம் என குறிப்பிட்டுள்ள அவர் நேற்றுவரை யதார்த்தம் காணப்பட்டதா இன்று முதல் காணப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

சனிக்கிழமை சம்பவங்கள் மற்றும் புலனாய்வு தோல்விகள் குறித்த கேள்விகளை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் தவிர்த்துவருகின்றது.

இஸ்ரேல் தற்போது பொதுமக்களை பாதுகாப்பதிலும்  தற்போதைய மோதல்களிலுமே ஈடுபட்டுள்ளது என இராணுவ பேச்சாளர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

பின்னர் புலனாய்வு தகவல்கள் விடயத்தில் என்ன நடைபெற்றது என்பதை பேசுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

போதியளவு பாதுகாக்கப்படவில்லை.

இந்த தாக்குதல் இன்னுமொரு எதிர்பாராத மோதலின் 50 வருடத்தன்று  இடம்பெற்றுள்ளது.

1973ம் ஆண்டு அராபிய கூட்டணி நாடுகள் இஸ்ரேலிற்கு எதிராக யொம் கிப்பூர் தினத்தன்று தாக்குதலை மேற்கொண்டிருந்தன- யொம் கிப்பூர் என்பது யூதர்களின் முக்கியமான தினங்களில் ஒன்று.

எனினும் அந்த தாக்குதல்கள் இஸ்ரேலிற்கு ஆச்சரியமளித்துள்ளன என முன்னாள் பிரதமர் நவ்டலி பெனெட் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

இராணுவ வரலாற்றில் எப்போதும் பெரிய ஆச்சரியங்கள் உள்ளன - பேர்ள் ஹாபர் பார்பரோசா யொம்கிப்பூர் யுத்தம் என தெரிவித்துள்ள அவர் புலனாய்வுகள் ஒரு அளவிற்குதான் துல்லியமாக செயற்படமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

2005 இல் காசாவிலிருந்து விலகியதிலிருந்து தனது  எல்லையை பாதுகாக்க அது மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளது ,காசாவிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளும் எந்த ஆயுதத்தையும் தாக்கிவந்துள்ள இஸ்ரேல்  பயங்கரவாதிகள் வான்வெளி ஊடாகவோ அல்லது சுரங்கப்பாதை ஊடாகவோ தனது பகுதிக்குள் வருவதை தடுத்துவந்துள்ளது.

ரொக்கட் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஐயன்டொம் என  அழைக்கப்படும்  வலுவான ரொக்கட் பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்கியுள்ளது ,இது அமெரிக்காவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் சென்சர்கள் மற்றும் நிலத்தடி சுவர்களுடன் கூடிய எல்லையை உருவாக்கியுள்ளது.

சனிக்கிழமை இந்த அமைப்புமுறைகள் எங்கு தோல்வியடைந்தன என்பதை இஸ்ரேல் ஆராயும் ஹமாஸ் 2000க்கும் மேற்பட்ட ரொக்கட்களை ஏவியது என தெரிவித்துள்ள  இஸ்ரேல் அவற்றில் எத்தனை இடைமறிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை.

isreak11112.jpg

எல்லை வேலிகள் குறித்தும் இஸ்ரேல் கருத்துக்கூறவில்லை.

காசாவிற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய சமூகங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை என மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சுவார்த்தை அதிகாரி அரோன் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் இதனை எதிர்பார்க்கவில்லை இப்படி நடக்கும் என கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166466

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.