Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க லொட்டோ விசா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-instructions.html

DV-2025 Program: Online Registration

DV-2025 Program: The online registration period for the DV-2025 Program begins on Wednesday, October 4, 2023, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 7, 2023, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5).  Submission of more than one entry for a person during the registration period will disqualify all entries for that person. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனது டாக்டர் நண்பருக்கு கிடைத்து, UK யில் இருந்து US போய், சோசியல் லைப் இல்லை என்று வந்து விட்டார்.

5 வருடத்துக்கு பின்னர் போனபோது, இமிகிரேஷன் மடக்கிவிட்டார்கள். உன்னை டீபோர்ட் பண்ண சொல்லுது சிஸ்டம். எப்படி விமானத்தில் ஏறினாய் என்று கேட்டு அதகளம் பண்ணிவிட்டார்கள். இவர் கிறீன் கார்ட் எடுத்து, நாட்டினை விட்டு வெளியே போனவர், உள்ளே வரவில்லை என்று, அலெர்ட் flag போட்டு வைத்திருக்கிறார்கள்.

விசா கிடைத்த போது இலங்கை பாஸ்போர்ட், திரும்பிப் போனபோது பிரிட்டிஷ் பாஸ்ப்போர்ட் என்பது தான் டீபோர்ட் சிக்கலுக்கு காரணம் என்றார். பிறகு, எல்லாம் விசாரித்து, flag எடுத்து, கார்டினையும் பறித்து உள்ளே விட்டார்களாம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கிறீன் காட்டாக இருந்தால் ஒரு வருடத்துக்கு மேலே வெளிநாடுகளில் தொடர்ந்து நிற்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

கிறீன் காட்டாக இருந்தால் ஒரு வருடத்துக்கு மேலே வெளிநாடுகளில் தொடர்ந்து நிற்க முடியாது.

ஆம்

5 வருசம் + பாஸ்போட் வேறு

குழம்பிவிட்டினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தானே பதிந்திருக்கு .

இதைப் பார்த்துட்டு நிறைய யுரியூப் காரர்கள் வெளிக்கிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எனது டாக்டர் நண்பருக்கு கிடைத்து, UK யில் இருந்து US போய், சோசியல் லைப் இல்லை என்று வந்து விட்டார்.

வீணாக இன்னொருவரின் வாய்ப்பை பறித்த முட்டாள். படித்த முட்டாள். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

வீணாக இன்னொருவரின் வாய்ப்பை பறித்த முட்டாள். படித்த முட்டாள். 

அப்படி பொதுவா சொல்ல ஏலாது.

போய் வேலைக்கு கடுமையா முயன்றார். குடும்பம் இங்க!

தனிமை வேற.

கையை கடிக்க, வந்தவர் மறுநாளே வேலை. அப்படியும் லீவு போட்டு இன்றவீயூ போனார். சரிவரவில்லை.

சரத் பொன்சேகாவுக்கும் கிடைத்ததே!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

சரத் பொன்சேகாவுக்கும் கிடைத்ததே!

கோத்தாவுக்கும் கிடைத்ததாமே. உள்ளால எத்தனை பேரின் விண்ணப்பங்களை செயலிழக்கச் செய்தார்களோ யார் அறிவார்..... இவர்கள் தெரிவாக.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

கோத்தாவுக்கும் கிடைத்ததாமே. உள்ளால எத்தனை பேரின் விண்ணப்பங்களை செயலிழக்கச் செய்தார்களோ யார் அறிவார்..... இவர்கள் தெரிவாக.

கோத்தா, லாட்டரி விசா வரமுன்பே போய் விட்டார். அவருக்கு உதவியர் கிளி மகேந்திரன். மகாராஜா கம்பெனி சேர்மன்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லொத்தர் முறை மூலம் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் நுழைய முடியாது என்பதால், இலங்கை, பங்களாதேஷ் நாடுகளில் இருந்து ஒவ்வொரு வருடமும் கணிசமானோர் வருகின்றனர். எனவே இதை இல்லாமல் செய்து, வருடத்திற்கு 50,000 பேரை H1B விசா கோட்டா மூலம் வர அனுமதிக்கும் படி அமெரிக்க வாழ் இந்தியர்கள் பல வருடங்களாக முயன்று வருகின்றனர்😂- ஆனால், அமெரிக்க செனட் இதைத் தடுத்து வைத்திருக்கிறது.

ஆனால், வருவோர் கவனமாக அமெரிக்கா தங்களுக்கு உகந்ததா என்று ஆலோசித்து விண்ணப்பிக்க வேண்டும்.

1. தெரிவானால், உங்களுக்கு ஒரு விசேட விசா (immigrant visa) மூலம் உள்ளே வர அனுமதிப்பர். அதன் பிறகு இங்கே இருந்த படியே பச்சை மட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பம் (I-485), ஏனைய விண்ணப்பங்கள் போலவே பரிசீலிக்கப் படும் - விசேட கவனிப்பு இல்லை. உரிய காரணங்கள் இருந்தால் அது மறுக்கப் படவும் கூடும்.

2. வளர்ந்த பிள்ளைகளைக் (21?) கூட்டி வர முடியாது. அவர்கள் தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

3. விண்ணப்பம் நிலுவையில் இருக்கும் போது, சாப்பாடு, தங்குமிடம், மருத்துவம் எல்லாம் உங்கள் பொறுப்பு. இதற்காகத் தற்காலிகமாக வேலை செய்யும் அனுமதி (EAD) உங்களுக்குக் கிடைக்கும். உங்களால் முடியாமல் அரசின் உதவியை நாடினால் affordable housing என்ற குற்றவாளிகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் குறைந்த வாடகை வீட்டில் இடம் எடுத்துத் தருவார்கள். புதிதாக அமெரிக்கா வருபவர் இந்தச் சூழலில்  வாழ்வது கடினம்.

4. அங்கே செய்த தொழிலையே இங்கேயும் வந்திறங்கியவுடன் செய்யலாம் என்ற எண்ணத்தில் வந்தால் ஏமாற்றமடைந்து தெருவில் நிற்பீர்கள். யாராயிருந்தாலும் இங்கே அதற்குரிய சான்றிதழ் பெற்ற பின்னர் தான் அந்த தொழிலைச் செய்யலாம். அது வரை எந்த தொழிலையும் செய்து உயிர் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

5. வந்திறங்கும் இடம், நகரம் வாழ்க்கைச் செலவிற்கு மிகவும் முக்கியமான விடயம். பல இலங்கையர்கள்  நேராக தமக்குத் தெரிந்த பிரபல நகரமான  நியூயோர்க் வந்திறங்கி, பின்னர் துண்டைக் காணோம் துணியைக் காணோமென தப்பியோடியிருக்கின்றனர்😎.

6. ஏற்கனவே இங்கே இருக்கும் உறவினர்களோடு தங்கியிருப்பதானால், முழுவதுமாக அவர்களில் தங்கியிருக்க முடியாதென்பதையும் உணர்ந்து கொண்டு வர வேண்டும். உதாரணமாக, அமெரிக்காவில் மருத்துவக் காப்புறுதி மிக அதிகம், இதை உங்கள் உறவினர் , நண்பர்கள் பெற்றுத் தர முடியாது.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான தகவல் .
நன்றி .

ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ளோர் இதற்கும் விண்ணப்பித்து கிடைத்தும் பின்னர் வராமல் இருக்கிறார்களே.(உதாரணம் மேலே நாதம் எழுதியது)
இதைப்பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

@தனிக்காட்டு ராஜா இந்த திரி தொடங்கும் போது உங்களைத் தான் மனதில் எண்ணி பதிந்தேன்.

அலுவல் நடக்குதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2023 at 23:18, ஈழப்பிரியன் said:

பிரயோசனமான தகவல் .
நன்றி .

ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ளோர் இதற்கும் விண்ணப்பித்து கிடைத்தும் பின்னர் வராமல் இருக்கிறார்களே.(உதாரணம் மேலே நாதம் எழுதியது)
இதைப்பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

@தனிக்காட்டு ராஜா இந்த திரி தொடங்கும் போது உங்களைத் தான் மனதில் எண்ணி பதிந்தேன்.

அலுவல் நடக்குதா?

நம்ம அதிஸ்ரம் தலை கீழாக வேலை செய்கிறது எங்க போனாலும் புலி கடந்து போன பற்றைக்காடுகள் போல் இருக்கிறது அதனால்  இனிமேல் எந்த  பிரயோசனமும் இல்லை மிக்க நன்றி அண்ணை 😷

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.