Jump to content

பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் : 1978 இல் அங்கு பயிற்சிக்கு சென்ற போதே உணர்ந்தேன் என்கிறார் டக்ளஸ்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நீங்கள் தொடர்பு எடுக்க மொசாட் விடுமா? 

மொசாட் விட்டாலும் நீங்கள் விட மாட்டியளே🤣.

ஆனால் முஸ்லிம்கள்/சிங்களவர்/அரேபியர் நலன் சார்ந்து உங்கள் பார்வை சரிதான்.

யூதனையும் தமிழனையும் இணையவிட்டால் அது அவர்களுடன் நிலத்தை பகிர்ந்து கொள்ளும் ஏனைய இனங்களுக்கு பெரும் ஆபத்தாய் அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Herbrew ஐ விட வழக்கொழிந்து போய் விட்ட Aramaic தான் அப்போ யூதர்கள் அதிகம் பேசிய மொழி என நினைக்கிறேன்.  அதே போல் யேசு பேசியது சங்கத்தமிழ்தான், அரமைக்கும், தமிழும் சகோதர மொழிகள் என passion of the Christ படத்தில் சிலுவையில் அறையப்படும் நேரம் யேசு சொல்லும் வசனங்களை வைத்து ஒரு யூடியூப் வீடியோவும் உள்ளது.

இதை நான் சதிகொள்கை டைப் கதை என்றே பார்கிறேன்.  

11 hours ago, Kadancha said:

ஆகவே, முன்பு, Hebrew, Jew என்று அல்லது அவர்களின் மூதாதையர்  என்று கருத்தப்படாதவர்களால் பாவிக்கப்பட்டு இருக்கலாம்

இதோ அந்த வீடியோ.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

பகிடி எதை சொல்கிறார் என பார்ப்போம்.

ஆம். பொறுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

Herbrew ஐ விட வழக்கொழிந்து போய் விட்ட Aramaic தான் அப்போ யூதர்கள் அதிகம் பேசிய மொழி என நினைக்கிறேன்.  அதே போல் யேசு பேசியது சங்கத்தமிழ்தான், அரமைக்கும், தமிழும் சகோதர மொழிகள் என passion of the Christ படத்தில் சிலுவையில் அறையப்படும் நேரம் யேசு சொல்லும் வசனங்களை வைத்து ஒரு யூடியூப் வீடியோவும் உள்ளது.

இதை நான் சதிகொள்கை டைப் கதை என்றே பார்கிறேன்.  

இதோ அந்த வீடியோ.

"சுமேரியரா தமிழர்?" என்ற யாழ் கள உறவு எழுதி வெளியிட்ட நூலை மறந்து விடாதீர்கள்😎!

பி.கு: தற்போதைய ஈராக்கில் இருந்த சுமேரியா பிராந்தியத்தின் "ஊர்" (Ur) என்ற இடத்தில் தான் யூதர்களின் மூதாதையரான ஆபிரகாம் பிறந்தார். எனவே, யூதர்களின் மூதாதையரே தமிழர் தான் என்ற கருதுகோளை முன்வைத்த புத்தகம் அது. பிரதான திரியில் கிருபன் நாசூக்காக இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் - பலர் கவனிக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டாண்மை விஜயகுமார் மீசையை முறுக்கிகொண்டு எலே நீங்க அப்போ அவங்களிட்ட ஆமை கறியை வாங்கி நல்லா தின்னுபோட்டு இப்போ வெக்கம் ரோசம் இல்லாம நம்மாட்டஉதவி கேட்டு வாறீங்களே என்று கேட்பதாக நினைத்து பார்க்கின்றேன். தமிழ் படங்களுக்கு இப்படியான கதைகள் அதிக பொருத்தம். இஸ்ரேல்/மொசாட் இவ்வளவு பிற்போக்குதனமானது என நான் நினைக்கவில்லை. 

அவர்கள் உங்களுடன் டீல் போடுவதற்கு உங்களிடம் என்ன உள்ளது? தோசையும் சம்பலும் இடியப்பமும் சொதியும் எல்லாருக்கும் வேர்க் அவுட் ஆகுமா? 

பிரித்தானியா, அமெரிக்கா, கனடாவில் தமிழர்கள் குடியுரிமையுடன் வாழ்கின்றார்கள்.  உள்ளூர் அரசியல்வாதிகள், பிரபலங்களை நெருங்க முடியும். 

இது இஸ்ரேலுடன் சரி வருமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நல்லா கேளுங்க எசமான்…

நீங்கள் இப்படி நக்கல் அடிச்ச பிறகாவது இந்த ரோசம் கெட்ட தமிழ் இனத்துக்கு ரோசம் வருதா எண்டு பாப்பம்.

27 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பிரித்தானியா, அமெரிக்கா, கனடாவில் தமிழர்கள் குடியுரிமையுடன் வாழ்கின்றார்கள்.  உள்ளூர் அரசியல்வாதிகள், பிரபலங்களை நெருங்க முடியும். 

இது இஸ்ரேலுடன் சரி வருமா?

நாமே அரசியல்வாதிகள், பிரபலங்களாக வரும் நாள் இப்பவே ஆரம்பித்து விட்டது கண்ணா.

இன்னும் ஒரு தலைமுறைக்கான காலமும், கூட்டு பிரக்னையும் இருந்தால் போதும்.

1 hour ago, Justin said:

"சுமேரியரா தமிழர்?" என்ற யாழ் கள உறவு எழுதி வெளியிட்ட நூலை மறந்து விடாதீர்கள்😎!

பி.கு: தற்போதைய ஈராக்கில் இருந்த சுமேரியா பிராந்தியத்தின் "ஊர்" (Ur) என்ற இடத்தில் தான் யூதர்களின் மூதாதையரான ஆபிரகாம் பிறந்தார். எனவே, யூதர்களின் மூதாதையரே தமிழர் தான் என்ற கருதுகோளை முன்வைத்த புத்தகம் அது. பிரதான திரியில் கிருபன் நாசூக்காக இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் - பலர் கவனிக்கவில்லை!

மறக்கத்தகுமோ🤣

மேலே தந்த வீடியோவை மனம் இறுக்கமாக இருக்கும் வேளையில் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, goshan_che said:

மறக்கத்தகுமோ🤣

மேலே தந்த வீடியோவை மனம் இறுக்கமாக இருக்கும் வேளையில் பாருங்கள்.

காலைக் கோப்பி குடிக்கும் போது பார்த்தேன்! புரையேறிக் கஷ்டப் பட்டேன்! இவ்வளவு சீரியசாகப் பகிடி விடுவதும் ஒரு திறன் தான், எல்லாருக்கும் வராது😂!

இதைப் பார்த்து விட்டு மேலே நியாயம் சுட்டிய  விஜயகுமாரின் "ஏலே.." டயலாக்கை வாசித்த போது இயேசு தமிழ் தான் பேசியிருக்கிறார் என்று நம்ப ஆரம்பித்து விட்டேன்!

@அகத்தான்  இன்னும் இருக்கிறாரா யாழ் களத்தில்?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, Justin said:

நி.கா சொல்லியது மற்றும் வீடியோ அடிப்படையில் யேசு திருநெல்வேலி பக்கம் என்றே அனுமானிக்கிறேன் 🤣

@அகத்தான் தானே “சுட்டால் சாகோணும் நொட்டி கொண்டு இருக்க கூடாது” என்பதை எழுதியவர்? களத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.

ஜனவரி 2021 பொங்கல் வாழ்த்து போட்டுள்ளார்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

Herbrew ஐ விட வழக்கொழிந்து போய் விட்ட Aramaic தான் அப்போ யூதர்கள் அதிகம் பேசிய மொழி என நினைக்கிறேன்.  அதே போல் யேசு பேசியது சங்கத்தமிழ்தான், அரமைக்கும், தமிழும் சகோதர மொழிகள் என passion of the Christ படத்தில் சிலுவையில் அறையப்படும் நேரம் யேசு சொல்லும் வசனங்களை வைத்து ஒரு யூடியூப் வீடியோவும் உள்ளது.

இதை நான் சதிகொள்கை டைப் கதை என்றே பார்கிறேன்.  

இதோ அந்த வீடியோ.

ஓ அதான் இங்கு சிலர்  இஸ்ரேலுக்கு ஆதரவா 🤩
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Maruthankerny said:

சந்திரிகா ஆடசியில் யாசீர் அராபத்தை இலங்கைக்கு அழைத்து இருந்தார்கள் 
அப்போ இவர் விளாசின விலாஸை கேட்டு டின்னருக்கு இவரையும் அழைத்தார்கள் 
இவர் அரபாத் முன்பாக நாங்கள் முன்பு பாலஸ்தீனத்தில் பயிற்சி எடுத்தோம் என்று சொல்ல 
அரபாத் அப்படி நாம் யாருக்கும் பயிற்சி கொடுக்கவில்லை என்றுவிட்டு போனார் 

ஒரு தீவிரவாத அமைப்பிற்கு பயிற்சி கொடுத்ததை பப்பிளிக்காய் அவர் ஒத்துக் கொள்வாரா  ?...கூல்  முட்டை  டக்கி 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ரதி said:

ஓ அதான் இங்கு சிலர்  இஸ்ரேலுக்கு ஆதரவா 🤩
 
இஸ்ரேலுக்கு அல்ல. யூத மக்கள் தம் பாரம்பரிய வாழிடத்தில் தமக்கான நாட்டை அமைக்க தகுதி உடையவர்கள் என்ற கோட்பாட்டுக்கு ஆதரவு.

இந்த கஞ்சா, கப்ஸா வீடியோக்கள் எல்லாம் சும்மா டைம்பாஸுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

இதோ அந்த வீடியோ.

உடனடி யதார்த்த நிலையைத் தன சிந்திக்கிறேன், இயேசு சிந்தித்தா பேசி இருப்பர் என்று. 

இயேசுவின் சிந்திப்பு மொழி தமிழ் ஆயின், அம்மா என்றா அல்லது அப்பா என்றா முதலில் கதறி (உண்மையில் ஓலமிட்டு) இருப்பார்.

வலிந்து ஆக்கப்பட்ட ஒப்பீடாகவே தெரிகிறது.

(இந்த படங்களில் காட்டப்படும் இயேசு அசரிரீ ஒலிப்பது  போல அறைந்து இருக்கும் போது  பேசுவதிலும் எனக்கு  நம்பிக்கை இல்லை. இது இயேசுவையோ அல்லது மதத்தையோ தாழ்த்தும் நோக்கில் இல்லை. சாதாரண மனித உடல் ஆணி அறையும் வேதனையில் எவ்ளவு வதை பட்டு இருக்கும் என்று யோசிக்கும் போது.)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kadancha said:

அது "டப்பிங்" , கனக்க யோசிக்க ஒன்றுமில்லை!😎

22 hours ago, பகிடி said:

இல்லை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இஸ்ரேலுடன் தொடர்பு கொள்ள சில முயற்சிகளை எடுத்தது, ஆனால் பண்டைய காலத்தில் தமிழ் முன்னோர்களுக்கும் யூதர்களுக்கும் இருந்த பிரச்சனையை நாம் மறந்தாலும் ( அல்லது இல்லை என மறுத்தாலும் )வரலாற்றை விட்டு விடாத யூதர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதால் அது போன்ற முயற்சிகள் எடுபடவில்லை.

பகிடி, என்ன மௌனமாகி விட்டீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

இஸ்ரேலுக்கு அல்ல. யூத மக்கள் தம் பாரம்பரிய வாழிடத்தில் தமக்கான நாட்டை அமைக்க தகுதி உடையவர்கள் என்ற கோட்பாட்டுக்கு ஆதரவு.

இந்த கஞ்சா, கப்ஸா வீடியோக்கள் எல்லாம் சும்மா டைம்பாஸுக்கு.

வடிவா சொல்லுங்க ஸார், “புல்டா போண்டா கஞ்சா கப்ஸா”ன்னு !😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kadancha said:

உடனடி யதார்த்த நிலையைத் தன சிந்திக்கிறேன், இயேசு சிந்தித்தா பேசி இருப்பர் என்று. 

இயேசுவின் சிந்திப்பு மொழி தமிழ் ஆயின், அம்மா என்றா அல்லது அப்பா என்றா முதலில் கதறி (உண்மையில் ஓலமிட்டு) இருப்பார்.

வலிந்து ஆக்கப்பட்ட ஒப்பீடாகவே தெரிகிறது.

(இந்த படங்களில் காட்டப்படும் இயேசு அசரிரீ ஒலிப்பது  போல அறைந்து இருக்கும் போது  பேசுவதிலும் எனக்கு  நம்பிக்கை இல்லை. இது இயேசுவையோ அல்லது மதத்தையோ தாழ்த்தும் நோக்கில் இல்லை. சாதாரண மனித உடல் ஆணி அறையும் வேதனையில் எவ்ளவு வதை பட்டு இருக்கும் என்று யோசிக்கும் போது.)

யேசு தேவ குமாரன் அல்லவா (நம்பிக்கை). அப்போ அவர் தேவனைத்தானே கூப்பிடுவார். அப்போ அப்பாதானே வரும். 

படம் வேதாகமத்தில் யேசு குறுசில் இருந்து பேசியதாக கூறப்பட்டுள்ள வசனங்களை அரைமைக்கில் கூறுகிறது.

இதை அவர் கூறுவது சாத்தியமா இல்லையா என்பதும் விஞ்ஞானம் அன்றி - நம்பிக்கை சார்ந்த விடயம்தானே. இறை சக்தியால் அவர் இறந்து பின் 3 நாளில் உயிர்த்தெழுந்தார் என்றே நம்பலாம் என்றால் - அவர் குறுசில் இருந்து இவற்றை சொன்னார் என நம்புவது கடினம் இல்லை.

இவை சும்மா லொஜிக்கலாக எழுதுகிறேன்.

வீடியோ கஞ்சாகப்ஸா உங்கள் மொழியில் வலிந்து உருவாக்கப்பட்ட ஒப்பீடு என்றே நானும் எண்ணுகிறேன்.

1 minute ago, வாலி said:

வடிவா சொல்லுங்க ஸார், “புல்டா போண்டா கஞ்சா கப்ஸா”ன்னு !😂

🤣 மன்னிச்சுகோங்கோ.

புல்டா போண்டா கஞ்சா கப்ஸா🤣

2 hours ago, Justin said:

பகிடி, என்ன மௌனமாகி விட்டீர்கள்?

அதானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 11/10/2023 at 18:31, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம். இவர் எடுத்த பயிற்சியை வைச்சு அடிச்சாரே ஒரு அடி காரைநகர் சிங்கள கடற்படை முகாம் தகர்ந்து.. தமிழீழம்.. கிடைச்சதெல்லோ. அதை எல்லாரும் மறந்திட்டாங்கப்பா.  அப்பவே நினைச்சிருப்பார்... பலஸ்தீனத்தில் கமாஸ் உருவாகி.. இப்படி இஸ்ரேலின் திட்டமிட்ட குடியேற்றகாரர்கள் மீது பாயும் என்று.

ஆனால்.. இவர் பலஸ்தீனத்தில் எடுத்த பயிற்சியை வைச்சு.. சொந்த மண்ணில் சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களை திறந்து வைப்பதிலும் புத்த கோவில்களில் வழிபாடு செய்வதிலும் குறியாக இருக்கிறார். இதனை எந்த பலஸ்தீனக்காரனும் செய்யமாட்டான். இவர் போன்ற பதவிக்கு ஆசைப்பட்டு எதிரி காலடியில் தவம் கிடக்கும் போலி அமைச்சர்கள் தான் செய்ய முடியும். 

சமூக ஊடகங்களில் எல்லாரும் வாட்டி எடுக்கிறீர்கள். ஆனால், ஊரில் பலரும் அமைச்சரிடம் உதவி பெறுகின்றார்கள், வியாபார கொடுக்கல் வாங்கல் செய்கின்றார்கள். அமைச்சரிடம் பெறப்படும் உதவிகள் வெளியில் தெரிவிக்கப்படுவது இல்லை. அவர் பதவிக்காக கையை பிடிச்சாரோ, காலை பிடிச்சாரோ ஊரில் உள்ள சனங்கள் அவர் உதவி பெறுகின்றார்கள்.

நான் இலங்கை பல சமயங்கள் சென்று வந்தபின் சொல்லப்படாத செய்திகள் அறிந்தேன். 

என்னைப்பொறுத்தவரை மிஞ்சி உள்ளவர்கள் தமிழ் அரசியல் வாதிகள் சொந்த சனத்துக்காக ஒன்றுபடும் வழியை பார்க்க வேண்டும். இஸ்ரேல்காரனுடன் நட்பை பெறுவதை விட நம்மவர்கள் தமக்குள் ஒற்றுமைப்படுவதே அதிக முக்கியமானதும் தேவையானதும் ஆகும்.  

கவிஞர் காசி ஆனந்தன் கூறுகின்றார் தற்போது விடுதலை புலிகள் அமைப்பில் முப்பது குழுக்கள் உள்ளனவாம். 

சமன்பாடு எங்கேயோ உதைக்கின்றதே!

Edited by நியாயத்தை கதைப்போம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/10/2023 at 11:59, Justin said:

அது "டப்பிங்" , கனக்க யோசிக்க ஒன்றுமில்லை!😎

பகிடி, என்ன மௌனமாகி விட்டீர்கள்?

ஒரு லூசு patient முகத்துக்கு நேரே தும்மி விட்டாள். இரண்டாம் தரமும் Covid பிடியில் சிக்கி இப்ப தான் கொஞ்சம் எழும்பி நிமிர்கிறேன்.

பிறிதொரு தருணம் விரிவாய் எழுதுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/10/2023 at 03:48, Kadancha said:

இது புதிது.

அனால் கேரளத்தில் யூதர் அடி  இருக்கிறது இவர்கள் பேசும் யூத -மலையாளம் தமிழுக்கு கிட்ட என்றும் கேள்வி  (மருவிய மலையாளம்மா ஆக இருக்க வாய்ப்பு),

இது புதிது.

அனால் கேரளத்தில் யூதர் அடி  இருக்கிறது இவர்கள் பேசும் யூத -மலையாளம் தமிழுக்கு கிட்ட என்றும் கேள்வி  (மருவிய மலையாளம்மா ஆக இருக்க வாய்ப்பு)   

Caldwell போன்ற மொழியில் லாளர்களும் சொல்லி இருக்கிறர்கள்,  விவிலிய, விவிலியதுக்கு பின்னான Hebrew இல் தமிழ் சொற்கள் இருக்கின்றன என்று.

கொழும்பிலும் யூத அடி சிறு சமூகம் இருக்கிறது. 

எந்த காலம்? எந்த புவியியல் இடத்தில் பிரச்சனை? 
 
ஆபிரஹாம் புறப்படட  இடத்தின் பெயர் ஊர் என்று அழைக்கப்படுவதாக விவிலியம் கூறுகின்றது. யூதர்கள் எம்மைப்போல தந்தையை அப்பா என்றுதான் அழைக்கிறார்கள். நிறைய தமிழ் சொற்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றது. தமிழ் ஆதி மொழியாக இருப்பதால் அங்கும் பரவி இருந்திருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, பகிடி said:

பிறிதொரு தருணம் விரிவாய் எழுதுகிறேன்

யூதர்- ஈழத்தமிழர் தொடர்பு,   நான் சொல்லிய திசையா - அதாவது தமிழ் சாதிகளில் ஒன்றுக்கு தொடர்பா?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.