Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பில் 500 பேர் பலி – சிக்கலாகும் மனித உரிமை பிரச்னை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

அமெரிக்க முதல் கட்ட தகவலறிகிகை 100-300 பேருக்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது.

வேறு சில அறிக்கைகளோ 100க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவமனை தாக்கப்பட்டது என்பது பொய்செய்தி என்றும் கூறுகிறது.

காசாவுக்குள் இருந்து வரும் செய்திகளை நான் நம்புவதில்லை...'Cuz they always play the victim card!!

இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இல்லை🤩 .கடைசி யுத்தம் நடக்கும் போதும் இப்படித் தான் இலங்கையரசு ஸ்கோர் அறிவித்தது ...நீங்களும் இலங்கையர் தானே 

  • Replies 69
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்+
17 minutes ago, ரதி said:

இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இல்லை🤩 .கடைசி யுத்தம் நடக்கும் போதும் இப்படித் தான் இலங்கையரசு ஸ்கோர் அறிவித்தது ...நீங்களும் இலங்கையர் தானே 

ஓமோம்.... அதே தான்.... 

துல்லியமாகக் கணிச்சியள்... 

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, Justin said:

ரைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்கள் நூற்றுக் கணக்கான உடல்களின் பாகங்களைக் கண்டிருக்கிறார்கள். மேலே, நான் தந்த இணைப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள் அல்லவா?

New யோர்க் ரைம்ஸைல் சொன்னீர்கள் என்றால் அதில் காட்டப்பட்ட இடிபாடுகளின் படிமங்கள் பொய்யானவை. செய்தியும் பொய். வேறெங்கோ எடுக்கப்பட்ட படிமங்களை வைத்து செய்தி வெளியிட்டுள்ளது...

அதன் துவிட்டர் புளூ ரிக்கையும் இந்தப் பொய்ச் செய்திக்காக நீக்கிவிட்டார்கள்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமாஸ் இயக்கம் வளர்க்கபடுகின்றதே தவிர அழிக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2023 at 03:03, Cruso said:

இப்படியான இக்கடடான ஒரு நேரத்தில் இஸ்ரேல் இப்படியான தாக்குதலை செய்திருக்க முடியாது. அவர்கள் எல்லா தாக்குதலுக்கு முன்பும் எச்சரிக்கையின் பின்னரே குண்டுகளை பயங்கரவாதிகள் மீது போட்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜிஹாதி, ஹமாஸ் பயங்கரவாதிகள் இந்த கொடூரமான செயலை செய்துவிட்டு இஸ்ரேல் மீது பழியை போட்டிருக்கிறார்கள். இதட்குரிய ஆதாரத்தையும் இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது.

இந்த குண்டு தாக்குதல் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆர்பாடடமும், கொந்தளிப்பும் அதிகரித்திருக்கிறது. இதட்காகவே இதை அந்த ஜிஹாத், ஹமாஸ் பயங்கரவாதிகள் இதை செய்தார்கள்.இஸ்ரவேலை ஆதரிப்பதட்காக இதை கூற வில்லை. அனால் உண்மை கசக்கத்தான் செய்யும்.

இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பதை இஸ்ரேல் நிறுத்தமாடடாது என்பதை உறுதியாக கூறலாம். 

ஒரு சிங்களவனனின் மனநிலையில் செஞ்சோலை தாக்குதலை நான் சிந்தித்தபொழுது இப்படித்தான் எனக்கும் தோன்றியது..

போர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உலகமே இலங்கையை உற்று நோக்கி கொண்டிருந்த இக்கடடான ஒரு நேரத்தில் எமது அரசு இப்படியான தாக்குதலை செய்திருக்க முடியாது. எமது ராணுவத்தினர் மிகவும் ஒழுக்கமானவர்கள்.. அவர்கள் எல்லா தாக்குதலுக்கு முன்பும் எச்சரிக்கையின் பின்னரே குண்டுகளை பயங்கரவாதிகள் மீது போடுபவர்கள். இறுதி போரின் போது உலகநாடுகள் இலங்கை உற்று நோக்கி கொண்டிருந்ததால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலி பயங்கரவாதிகள் எமது ராணுவத்தின் மீது பொய் பழியை போட்டிருக்கிறார்கள். இதட்குரிய ஆதாரத்தையும் அரசு வெளியிட்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் பயிற்சிக்கு தயாரன புலிப்பயங்கரவாதிகள் என்பதை அரசு ஆதாரத்துடன் சொல்லி இருந்தது..

இந்த பொய்ப்பிரச்சாரங்களுக்கு எல்லாம் அஞ்சி தாக்குதல்களை நிறுத்தாமல் முள்ளிவாய்க்கால்வரை கொண்டுவந்து அங்குவைத்து அனைத்து புலிப்பயங்கரவாதிகளையும் அழித்த எமது ராணுவத்தினர் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.. அதைக்கூட முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழர்கள் என வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய புலிப்பயங்கரவாதிகள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் அடியை வாங்கி விட்டு அதை எடுத்து சொல்ல கூட தெரியாமல் முழுசி கொண்டு நிக்க ஹமாஸ் எம்மை போல் பெக்கோக்கள் இல்லை.

எம்மை போல் ஐரோப்பாவில், வட அமெரிக்காவில்  தமிழில் மட்டும் டிவி நடத்துபவர்களும் இல்லை.

இஸ்ரேலுக்கு நிகரான பிரச்சார வலையமைப்பை வைத்து பின்னி எடுக்கிறார்கள்.

பிரச்சார யுத்தத்தை ஹமாசே வெல்கிறது.

கீழே ஒரு சின்ன சாம்பிள்.

அதே இரு பெண்கள் ஹமாஸ் ஆயுததாரிகளாயும், பாதிக்கபட்ட பெண்களாயும் “நடிக்கும்” இரு வேறு வீடியோக்களாம். இஸ்ரேலின் AI/deepfake ஆகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நன்னிச் சோழன் said:

 அமெரிக்க புலனாய்வுத்துறையின் தகவல்களையே கூறினேன்... 

நீங்கள் கூறிய அதே நூற்றுக் கணக்கைத்தான் நானும் கூறியிருக்கிறேன். என்ன கூடுதலாக இன்னொன்றையும் கூறியுள்ளேன்.

பரப்புரையால் மண்டைகழுவப் படுபனல்ல நான், ஐயனே.

கடடார் நாட்டின் அல் ஜஃஷீரா தொலைக்காட்சி எல்லாவற்றையும் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றது. மற்ற செய்திகளை பார்க்காதவர்கள் இதை அப்படியே நம்பி விடுகிறார்கள். ஹமாஸ் பயங்கரவாதிகள் சொல்வதையே செய்தியாக அல் ஜஸீரா வெளியிடுகின்றது.  என்ன இருந்தாலும் உண்மையை மறைக்க முடியாது. அங்குள்ள வைத்யசாலைமீது இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்தவில்லை என்பதும், ஹமாஸ் ஜிஹாத் பயங்கரவாதிகளின் குண்டு அங்கு விழுந்ததும் உண்மை.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் மருத்துவமனைகளிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் - இஸ்ரேல் தாக்குதல்

Published By: RAJEEBAN    23 OCT, 2023 | 10:11 AM

image
 
காசாவின் மருத்துவமனைகளிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் உள்ள பெரும் மருத்துவமனையான அல்ஷிபா அல்குட்ஸ் இந்தோனேசிய மருத்துவமனை போன்றவற்றிற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்பதாக பாலஸ்தீன ஊடகங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அல்குட்ஸ் மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேலின் விமானதாக்குதல்கள் இடம்பெற்றதை காண்பிக்கும் வீடியோவொன்றை ஹமாஸ் டெலிகிராமில் வெளியிட்டுள்ளது.

தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் ஹமாஸ் வெளியிட்டுள்ளது. அந்த கட்டிடம் குவைத் மருத்துவமனைக்கு அருகில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/167547

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா மருத்துவமனைகள் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு – இப்போது என்ன நிலைமை?

காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தொடர்ந்து நடந்துவரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில், மீண்டும் காஸாவில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மணிநேரங்களில் காஸாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அருகில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த மருத்துவமனைகளில் காஸாவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மற்றும் இந்தோனேசிய மருத்துவமனை ஆகியவை அடங்கும் என்று பாலத்தீனிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தனது டெலிகிராம் சேனலில், அல்-குத்ஸ் அருகே நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது குவைத் மருத்துவமனைக்குப் பின்னால் நடந்ததாகக் கூறி இடிந்த ஒரு கட்டிடத்தின் படங்களையும் அது வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ மற்றும் படங்களை பிபிசியால் இன்னும் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்தப் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதா என்பதை உறுதிப்படுத்துமாறு பிபிசி இஸ்ரேல் தற்காப்புப் படைகளைக் கேட்டுள்ளது, மேலும் அவர்கள் சோதனை செய்வதாக எங்களிடம் கூறியுள்ளனர்.

இதுகுறித்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் எங்களுக்குத் தெரிந்தவுடன் சமீபத்திய மேம்பாடுகளை உங்களுக்குக் கொண்டு வருவோம்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா
படக்குறிப்பு,

சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின

மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்

ஞாயிற்றுக் கிழமை ஒரு அரிய நிகழ்வில், இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

மேற்குக் கரையில் ஹமாஸ் குழு ஒரு மசூதியை ‘பயங்கரவாத வளாகமாகப்’ பயன்படுத்துவதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்குக் கரையின் வடக்கில் உள்ள ஜெனின் நகரத்தில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது.

அல்-அன்சார் என்றழைக்கப்படும் இந்த மசூதி தாக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக பாலத்தீன அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய ராணுவம் மேற்குக் கரையில் உள்ள இலக்குகளைத் தொடர்ந்து சோதனையிட்டாலும், அது காஸாவில் நடத்துவதுபோல வான்வழித் தாக்குதல்களை மேற்குக் கரையில் அரிதாகவே பயன்படுத்துகிறது.

சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின.

கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரு ‘பயங்கரவாதத் தாக்குதலுக்கு’ தயாரகி வந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருக்கிறது.

அவர்கள் பயன்படுத்திய இடம் மசூதியின் கீழ் இருப்பதாகவும், ஜூலை முதல் பயன்பாட்டில் இருப்பதாகவும் அது கூறியது. வளாகத்தின் நுழைவாயில்கள், ஆயுதங்கள், கணினிகள் மற்றும் தளத்தில் படமாக்கப்பட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் புகைப்படங்களுடன் அது கூறிய படங்களை வெளியிட்டது.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாப்டுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம் என்று தெரிவித்துள்ளார்

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை மூன்று மாதங்கள் தொடரலாம்

காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு கேலன்ட் இதைத் தெரிவித்தார்.

"செயல்பாட்டு அம்சங்களைப் பொறுத்தவரை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைத் தடுக்க எதனாலும் முடியாது," என்று அவர் கூறினார்.

"காஸாவில் இதுவே எங்களின் கடைசி நடவடிக்கையாக இருக்கும். இதற்குப் பிறகு ஹமாஸ் இருக்காது," என்றார் அவர்.

மேலும், கேலன்ட், அடுத்த கட்டமாக, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தரைப்படை நடவடிக்கை, ‘விரைவில் வரும்’ என்றார். ஆனால், எவ்வளவு விரைவில் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மனிதாபிமான உதவிகள்

மேலும் 14 டிரக்குகள் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

பாலத்தீனியர்களுக்கு இது ‘மற்றொரு சிறிய நம்பிக்கை’ என்று அவர் கூறினார். ஆனால் இன்னும் அதிகமான உதவிகள் தெவைப்படும் என்று கூறினார்.

தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கும் அதேவேளை வெகுவாக பதிக்கப்பட்டிருகும் காஸா, ‘ஒரு நாளைக்கு ஒரு சில டிரக்குகளை அனுப்புவது மட்டுமே போதுமானதாக இல்லை’ என்று கூறியிருக்கிறது.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர்

‘கைதிகளை விடுவிக்காத வரை காஸாவுக்கு உதவிகள் அனுப்பக் கூடாது’

இந்நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர், "ஹமாஸ், தன் பிடியில் இருக்கும் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிக்கச் சம்மதிக்கும் வரை காஸாவிற்குத் தொடர்ந்து உதவிகள் அனுப்பக் கூடாது" என்று கூறியுள்ளார்.

ஞாயிறன்று மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற14 டிரக்குகளின் காஸாவில் நுழைய அனுமதிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, X சமூக ஊடகத்தில் பென்-க்விர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதை உறுதிசெய்யாமல் காஸாவுக்குத் தொடர்ச்சியாக உதவிகள் அனுப்புவதுதான் இந்தப் பிரச்னைகள் இவ்வளவு பெரிதாகக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதற்கு ஈடாக மட்டுமே மனிதாபிமான உதவிகள்,’ என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அடுத்த இரண்டு நாட்களில், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்ட மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோரின் இஸ்ரேலுக்குப் பயணம் செய்வர்

இஸ்ரேலுக்குச் செல்லவுள்ள நெதர்லாந்து, ஃபிரான்ஸ் தலைவர்கள்

அடுத்த இரண்டு நாட்களில், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்ட மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோரின் இஸ்ரேலுக்குப் பயணம் செய்வர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வந்து அவரைச் சந்திப்பார்கள் என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெதன்யாகு இன்று இரு ஐரோப்பிய தலைவர்களுடனும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடனும் பேசினார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷேல்ஸ் ஆகியோர் இஸ்ரேலுக்குப் பயணங்கள் மேற்கொண்டனர்.

https://www.bbc.com/tamil/articles/cv2lzp4z17no

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2023 at 03:57, ஏராளன் said:

கைதிகளை விடுவிக்காத வரை காஸாவுக்கு உதவிகள் அனுப்பக் கூடாது’

50 பணய கைதிகள் இஸ்ரேலின் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டமை, இரண்டு விடுவிக்கப்பட்ட வயோதிபர்களை ஏற்க மறுத்தமை என்பன பற்றி என்ன சொல்லப்போகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் மருத்துவமனைகளில் நூற்றுக்கு அதிகமானவர்கள் சிக்குண்டுள்ளனர் - ஐநா

Published By: RAJEEBAN    30 OCT, 2023 | 03:24 PM

image

காசாவின் வடபகுதி மருத்துவமனைகளில் நூற்றிற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்குண்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

வடகாசாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளர்களை வெளியேற்றுமாறு இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது எனினும் இது சாத்தியமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

அருகில் தாக்குதல் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையே நோயாளிகளை வெளியேற்றுமாறு இஸ்ரேல் தங்களை கேட்டுக்கொண்டது என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

பலர் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா அமைப்பின் பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் மருத்துவமனைகளிலும் அவர்கள் தஞ்சமடைகின்றனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான சர்வதேச அமைப்பின்  தலைவர் டொம்வைட் தெரிவித்துள்ளார்.

நான் சமீபத்தில் மருத்துவமனையொன்றிற்கு சென்றேன் அங்கிருந்து வேறு இடங்களிற்கு மாற்ற முடியாத நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

வடபகுதியிலிருந்து வெளியேற்ற முடியாதவர்கள் நோயாளிகள் மாத்திரமில்லை மக்களும் போக்குவரத்து வசதி இல்லாததால் நகரமுடியாத நிலையில் உள்ளனர் அவர்கள் கடும் பசி அச்சம் தண்ணீர் தாகம் போன்றவற்றின் பிடியில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒரு சிலதுண்டு பாணை உண்டு வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168084

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2023 at 02:30, nunavilan said:

50 பணய கைதிகள் இஸ்ரேலின் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டமை, இரண்டு விடுவிக்கப்பட்ட வயோதிபர்களை ஏற்க மறுத்தமை என்பன பற்றி என்ன சொல்லப்போகிறார்.

உயிரோடிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதோடு எவராவது குண்டு தாக்குதலில் உயிரிழந்திருந்தால் அவர்களது உடலை ஆதாரத்துடன் கையளிக்கலாம். எனவே அந்த பொறுப்பு ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இருக்கிறது.

பணயக்கைதிகள் உயிரிழந்ததுபோல இஸ்ரேலிய சிறையில் இருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளும் அவர்கள் காசாவிலிருந்து ஏவும் ராக்கெட் மூலமாக இறப்பதட்கும் சந்தர்ப்பம் உண்டு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்புலன்ஸ்களை தொடர்புகொள்ள முடியாததால் கழுதையில் உடல்களை கொண்டு செல்லும் மக்கள் - காசா மருத்துவர்

Published By: RAJEEBAN   06 NOV, 2023 | 05:18 PM

image

காசாவில் அம்புலன்ஸ்களை அழைப்பதற்கு வழியில்லாததால் கழுதைகளை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்கின்றனர் என வைத்தியர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மொபைல் போன்கள் இயங்காததால் இன்றிரவு காசாவில் மிகவும் நெருக்கடியான நிலைமை காணப்படுகின்றது.

தொடர்பாடல் துண்டிக்கப்பட்டுள்ளதால் அம்புலன்ஸ்களை தொடர்புகொள்ள முடியாததால் மக்கள் கழுதைகளிலும் தங்கள் வாகனங்களிலும்  உடல்களை கொண்டு செல்கின்றனர் என காசாவில் உள்ள அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் தெரிவிக்கின்றார்.

தொடர்பாடல்கள் மீண்டும் திரும்பியுள்ள போதிலும் காசா நகரிலிருந்து தகவல்களை பெறுவது மிகவும் கடினமானதாக காணப்படுகின்றது என பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/168680

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ளன – குழந்தைகள் இறக்கின்றன – காயம்பட்டவர்கள் இறக்கின்றனர் - இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்துள்ள மருத்துவமனையின் இயக்குநர் கதறல்

11 NOV, 2023 | 03:06 PM
image

காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ளன என்ற நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலிய படையினரின் முற்றுகைக்குள்ளாகியுள்ள மருத்துவமனையிலிருந்து கருத்து தெரிவித்துள்ள முகமட் அல்சல்மியா நாங்கள் உயிர்களை இழக்க ஆரம்பித்துள்ளோம், காயம்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உயிர் இழக்கின்றனர். இன்குபேட்டரில் உள்ள குழந்தைகள் கூட உயிரிழக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை வளாகம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் கட்டிடங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன மருத்துவமனைக்குள் நடமாடும் எவரும் இலக்கு வைக்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியே உள்ள இஸ்ரேலிய படையினர் எவரையும் உள்ளே அனுமதிக்கின்றார்கள் இல்லை, இன்குபேட்டரில் இருந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் முற்றாக உலகில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளோம் எந்தவேளையிலும் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ள எனவும் தெரிவித்துள்ள அவர் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மருத்து விநியோகம் இணையவசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/169053

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்ஷிபா மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல முயற்சிப்பவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம் - சர்வதேச அமைப்பு

Published By: RAJEEBAN    11 NOV, 2023 | 08:50 PM

image

அல்ஷிபா மருத்துவமனையிலிருந்து வெளியே செல்லமுயற்சிப்பவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்கின்றனர் என எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை வெளியிடும் இந்த தருணத்தில் மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல முயல்பவர்கள் இஸ்ரேலிய படையினரால் சுடப்படுவதை எங்கள் பணியாளர்கள் பார்க்கின்றனர்  என எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அல்குட் மருத்துவமனையிலிருந்து 20 மீற்றர் தொலைவில் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுகின்றன என செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையை நோக்கி நேரடி துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுகின்றது இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/169084

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இவ‌ள‌வு ஆதார‌மும் இடுந்து
ஏன் இன்னு. இஸ்ரேல் அதி ப‌ய‌ங்க‌ர‌வ‌தா நாடு என்று மேற்க்கைத்தைய‌ மொக்கை அர‌சுக‌ள் அறிவிக்க‌ வில்லை...........புட்டின் செய்த‌ போரில் கூட‌ இப்ப‌டி செய்திக‌ள்  வ‌ந்த‌து கிடையாது

2009க‌ளில் எம் ம‌க்க‌ள் ப‌ட்ட‌ அவ‌ல‌த்தை விட‌ ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் அதிக‌மாய் அவ‌ல‌ப் ப‌டுகின‌ம் 
புகைப் ப‌ட‌ங்க‌ளை க‌ண்கொடுத்து பார்க்க‌ முடிய‌ வில்லை
 
  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2023 at 21:20, ஏராளன் said:

அல்ஷிபா மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல முயற்சிப்பவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம் - சர்வதேச அமைப்பு

Published By: RAJEEBAN    11 NOV, 2023 | 08:50 PM

image

அல்ஷிபா மருத்துவமனையிலிருந்து வெளியே செல்லமுயற்சிப்பவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்கின்றனர் என எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை வெளியிடும் இந்த தருணத்தில் மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல முயல்பவர்கள் இஸ்ரேலிய படையினரால் சுடப்படுவதை எங்கள் பணியாளர்கள் பார்க்கின்றனர்  என எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அல்குட் மருத்துவமனையிலிருந்து 20 மீற்றர் தொலைவில் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுகின்றன என செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையை நோக்கி நேரடி துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுகின்றது இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/169084

இந்த வைத்திய சாலைக்கு கிலேதான் பயங்கரவாதிகளின் வதிவிடம், ஆயுத கிடங்கு எல்லாமே இருக்கின்றது. பொது மக்கள் பாதுகாப்பு கருதி அதன்மீது அவர்கள் குண்டுபோடாமல் இருப்பதே பெரிய காரியம். பயங்கரவாதிகள் தப்பி ஓடும்போது சுடாமல் சும்மா பார்த்துக்கொண்டு இருப்பார்களா? அவர்களது நோக்கமே பயங்கரவாதிகளை அழிப்பது. எப்படி இருந்தாலும் அது முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு அந்த பதுங்குகுழிகள் , ஆயுத கிடங்குகள் எல்லாமே அழிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவமனையுடன் தொடர்புடைய சுரங்கம்: ஆதார வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாலஸ்தீன அரசு, மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகள், ஹமாஸ் போன்றவை இந்த குற்றச்சாட்டை மறுத்தன.

ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து பதுங்கியுள்ள நிலையில், பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர் என இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து கூறி வந்த நிலையில், காசாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையின் அடித்தளத்தில் சுரங்கபாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்ததற்கான ஆதாரமாக 6 நிமிட வீடியோ ஒன்றை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் ஒரு சுரங்கபாதையின் வழியை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து, அந்த சுரங்கத்தின் வழியே உள்ளே செல்கிறார். இந்த சுரங்கத்தின் மறுபக்க வழி ரன்டிசி மருத்துவமனையில் திறக்கப்படுகிறது என அவர் விளக்குகிறார். இதுபோன்றுதான் அல்-ஷிபா மருத்துவமனையிலும் உள்ளது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து வருகிறது.

https://thinakkural.lk/article/281190

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2023 at 03:36, Cruso said:

இந்த வைத்திய சாலைக்கு கிலேதான் பயங்கரவாதிகளின் வதிவிடம், ஆயுத கிடங்கு எல்லாமே இருக்கின்றது. பொது மக்கள் பாதுகாப்பு கருதி அதன்மீது அவர்கள் குண்டுபோடாமல் இருப்பதே பெரிய காரியம். பயங்கரவாதிகள் தப்பி ஓடும்போது சுடாமல் சும்மா பார்த்துக்கொண்டு இருப்பார்களா? அவர்களது நோக்கமே பயங்கரவாதிகளை அழிப்பது. எப்படி இருந்தாலும் அது முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு அந்த பதுங்குகுழிகள் , ஆயுத கிடங்குகள் எல்லாமே அழிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. 

ஓம் ஓம் இவர்தான் IDF இன் கொள்கை பரப்பு செயலாளர்! இவர் சொன்னால் எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

கவுண்டர் சொல்லிறமாதிரி " அடடா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா சாமி"

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Eppothum Thamizhan said:

ஓம் ஓம் இவர்தான் IDF இன் கொள்கை பரப்பு செயலாளர்! இவர் சொன்னால் எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

கவுண்டர் சொல்லிறமாதிரி " அடடா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா சாமி"

குண்டுக‌ள் போட்டு த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்க‌ப் ப‌ட்ட‌ அனைத்து ம‌ருத்துவ‌ம‌னை மீதிலும் ஹ‌மாஸ் போராளிக‌ளின் அன்ட‌ குர‌வுன்ட் இருக்குதாம் அது தான் அழிச்சோமாம் பொய் பொய் இது மகா ப‌ச்சை பொய் ந‌ண்பா 😡

இன‌வாத‌ இஸ்ரேலின் நோக்க‌ம் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று காசாவை பிடிப்ப‌து...............

ஹமாஸ் போராளிக‌ள் இஸ்ரேல் இராணுவ‌த்தின் க‌வ‌ச‌வாக‌ங்க‌ளை சுக்குநூற அழிச்சுப் போட்டின‌ம்.............நெத்த‌னியாவுக்கு உள் நாட்டிலே ப‌ய‌ங்க‌ர‌ எதிர்ப்பு கில‌ம்பிட்டு

இஸ்ரேல் த‌லைந‌க‌ர‌ம் ரெல் அவி 
விமான‌ நிலைய‌ம் பூட்ட‌ ப‌ட்டு விட்ட‌து அங்கு விமான‌ சேவ்வை இல்லை

இவேட்டை தானே ஜ‌டோம் இருக்கு சின்ன‌ காக்கா த‌ங்க‌ நாட்டில் மேல் ப‌ற‌ந்தாலும் சுட்டு வீழ்த்த‌ ப‌டும் என்று வில்டாப் விட்ட‌வை.............

சிறு போராளி குழுவின் தாக்குத‌லுக்கே இஸ்ரேல் ப‌டை இவ‌ள‌வு அழிவை ச‌ந்திக்கின‌ம் என்றால் 
ர‌ஸ்சியா அல்ல‌து ஈரான் அடிச்சா நில‌மை என்ன‌வாய் இருக்கும் என்று யோசிச்சு பார் ந‌ண்பா 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Eppothum Thamizhan said:

ஓம் ஓம் இவர்தான் IDF இன் கொள்கை பரப்பு செயலாளர்! இவர் சொன்னால் எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

கவுண்டர் சொல்லிறமாதிரி " அடடா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா சாமி"

ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌ போன‌ ஜ‌நாவை சேர்ந்த‌ ப‌ல‌ரையும் இன‌வ‌தா இஸ்ரேல் அர‌சு கொன்று குவிச்சு இருக்கு

இது எந்த‌ப் பெரிய‌ போர் குற்ற‌ம்...........மேற்க்கைத்தைய‌ நாடுக‌ள் இதை க‌ண்டும் காணாத‌ போல் இருப்ப‌த‌ன் மூல‌ம் தெரியுது அவ‌ர்க‌ளின் ந‌டு நிலை எப்ப‌டி என்று

இதே புட்டின் செய்து இருந்தால் ஒரு மாத‌ கால‌த்துக்கு தொட‌ர் செய்தியாய் இதையே ஓட்டி இருப்பின‌ம்...............

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

ஓம் ஓம் இவர்தான் IDF இன் கொள்கை பரப்பு செயலாளர்! இவர் சொன்னால் எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

கவுண்டர் சொல்லிறமாதிரி " அடடா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா சாமி"

நீங்கள் எல்லாம் ஹமாஸ், ஹிஸ்புல்லா, இரான் பயங்கரவாதிகளின் கொளகை பரப்பு செயலாளர்களாக இருக்கும்போது நாங்கள் இஸ்ரவேலுக்கு சார்பாக எழுத கூடாதோ? பயங்கரவாதிகள் பயங்கரவாதிகளுடன்தான் இருப்பார்கள். நிரூபித்து விடடீர்கள்.

நீங்கள் இப்படி எழுதியதட்காக எனது இஸ்ரேவேல் ஆதரவு கருத்துக்கள் தடைபடாது. யார் அந்த கவுண்டர்? அந்த கொசுத்தொல்லை தாங்க முடியாமல்தான் காஸாவில் எல்லோரும் ஓடி கொண்டிருக்கிறார்கள். விளங்கினால் சரி. 

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

நீங்கள் இப்படி எழுதியதட்காக எனது இஸ்ரேவேல் ஆதரவு கருத்துக்கள் தடைபடாது. யார் அந்த கவுண்டர்? அந்த கொசுத்தொல்லை தாங்க முடியாமல்தான் காஸாவில் எல்லோரும் ஓடி கொண்டிருக்கிறார்கள். விளங்கினால் சரி. 

நீங்கள் எவ்வளவுதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக அடித்துவிட்டாலும் ஜெருசலேமிலிருந்து கர்த்தர் வந்து உங்களை ஆசீர்வதிக்கவே மாட்டார்!!🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் எவ்வளவுதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக அடித்துவிட்டாலும் ஜெருசலேமிலிருந்து கர்த்தர் வந்து உங்களை ஆசீர்வதிக்கவே மாட்டார்!!🤣

1949க்கு முத‌ல் நாடு இல்லாம‌ உலகம் பூரா அகதிகள் போல் அலைந்த கூட்டம் தான் இந்த‌ யூத‌ர் ............அடைக்க‌ல‌ம் கொடுத்த‌ நாட்டை ஆட்டைய‌ போட்ட‌ யூத‌ர் கூட்ட‌ம்..............ஹிட்ல‌ர் யூத‌ர்க‌ளை கொன்று குவிக்கும் போது ப‌ல‌ஸ்தீன‌ நில‌ப்ப‌ர‌ப்பில் ப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் தான் வாழ்ந்தார்க‌ள்............ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளின் நில‌த்தை ஆட்டைய‌ போட்ட‌தும் ப‌த்த‌மாய் அதுக‌ளை அட‌க்கி ஆளனும் என்ற‌ வெறி யூத‌ர்க‌ளுக்கு எப்ப‌  வ‌ந்திச்சோ அப்ப‌வே அவ‌ங்க‌ள் இன‌ வெறிய‌ர்க‌ள் ஆகி விட்டார்க‌ள் ந‌ண்பா ............இப்ப‌ யூத‌ர்க‌ள் கைப்ப‌ற்றி வைத்து இருக்கும் இட‌த்தை ஒரு முதிய‌வ‌ர் சொல்லுகிறார் இந்த‌ இட‌த்தில் தான் 75வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌து அம்மா வாழ்ந்தா அத‌ற்கான‌ ஆதார‌ம் இதோ என்று வெளிப்ப‌டையாய் ஊட‌க‌த்துக்கு முன் காட்டுகிறார் ............த‌மிழீழ‌த்தில் சொல்லுவின‌ம் காணி ப‌த்திர‌ம் என்று அதே போல் ப‌ல‌ஸ்தீன‌ முதிய‌வ‌ர் அந்த‌ ப‌த்திர‌த்தை காட்டுகிறார்.............இப்ப‌டித் தான் யூத‌ர் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளின் இட‌ங்க‌ளை ப‌ல‌ ஆண்டுக‌ளாய் மெது மெதுவாய் ஆட்டைய‌ போட்ட‌வ‌ங்க‌ள்

எப்ப‌வும் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ இன‌ம் இன்னொரு பாதிக்க‌ப் ப‌ட்ட‌ இன‌த்துக்கு துணையா இருப்ப‌து தான் வ‌ழ‌க்க‌ம்..............ம‌கிந்தா கோமாளிக்கு உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ விருது கொடுத்தா போல‌ நாம் ப‌ல‌ஸ்தீன‌ இன‌ அழிப்பை வேடிக்கை பார்க்க‌ முடியாது .............துருக்கி ஜ‌னாதிப‌தி ஏர்டோக‌ன் சொன்ன‌து போல் இஸ்ரேல் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு நெத்த‌னியா போர் குற்ற‌வாளி ச‌ர்வ‌தேச‌ நீதி ம‌ன்ற‌த்தில் நிறுத்த‌ ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்.............பிஞ்சு குழ‌ந்தைக‌ள் எவ‌ள‌வு வேத‌னை ப‌ட்டு சாகுதுக‌ள்

உக்கிரேனுக்கு முட்டை க‌ண்ணீர் விட்ட‌ கூட்ட‌ம் 

40நாள் போரில் 15ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை இன‌வாத‌ இஸ்ரேல் அர‌சு கொன்று குவிச்சுட்டு............புட்டினின் தாக்குத‌ல் ம‌னித‌ நேய‌த்தோடு முன்னெடுக்க‌ப் ப‌ட்ட‌து............இஸ்ரேல் கொடுர‌ங்க‌ள் த‌ண்ணீருக்கு ப‌தில் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளின் ர‌த்த‌த்தை குடிக்கிறாங்க‌ள்...............இந்த‌ உல‌கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்ப‌து ஒட்டு மொத்த‌ உல‌கிற்கே ஆவ‌த்து ந‌ண்பா..........அமெரிக்கான்ட‌ ட‌வுள் கேம் வெளிச்ச்த்துக்கு வ‌ந்து விட்ட‌து..........இவை தானாம் உல‌கின் பாது காவ‌ல‌ர் தூ தூ தூ இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு  ந‌ண்பா🙈😡........... 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் எவ்வளவுதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக அடித்துவிட்டாலும் ஜெருசலேமிலிருந்து கர்த்தர் வந்து உங்களை ஆசீர்வதிக்கவே மாட்டார்!!🤣

அதாவது எருசலேமிலிருந்து ஆசீர்வாதம் வருமென்று சொல்லுகிறீர்கள் . நல்லது.

இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு சாத்தனிடமிருந்துதான் ஆசீர்வாதம் வரும். கர்த்தரிடம் இருந்து சாபம்தான் வரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.