Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்! இலங்கை தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்! இலங்கை தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம்!

23-652e5adb05943.webp

லியோ' திரைப்படத்தை இலங்கையில் அக்டோபர் 20 ஆம் தேதி, வெளியிட வேண்டாம் என இலங்கையை சேர்ந்த தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்

தளபதி விஜய் நடிப்பில், மாஸான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது லியோ. இந்த படம், அக்டோபர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் இலங்கையில் வரும் 20 ஆம் தேதி ஹர்த்தால் கடைபிடிக்க உள்ளதால் இப்படத்தை வெளியிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள் கடிதம் மூலம் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

IMG-20231018-222644.jpg

இதுகுறித்து வெளியாகியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, "ஜோசப் விஜய் அவர்களுக்கு தங்களது 'லியோ' திரைப்படம் இம்மாதம் 19 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகின்றது. இலங்கையில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தங்களது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை ஈழத் தமிழர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அதேவேளை இலட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் உங்களின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்

அண்மையில் முல்லைதீவு மாவட்ட நீதிபதி சரவணன் ராஜா அவர்கள் மீதான, ஸ்ரீலங்கா அரசின் அழுத்தங்களினாலும், உயிர் அச்சுறுத்தலினாலும் அவர் தனது பதவியை துறந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதற்கு நீதி கோரி பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இம்மாதம் 20ஆம் தேதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால் கடைபிடிக்க தீர்மானித்துள்ளோம்.

இந்நாளில் தங்களது திரைப்படம் வெளியே வெளிவருவது எங்களது போராட்டத்திற்கு பின்னடைவாக இருக்கின்றது. அத்துடன் அது ஈழத் தமிழர்களை அவமதிக்கும் செயல்பாடாகவே இருக்கும். ஈழத் தமிழர்களுக்கும், உங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதாலும், பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள் என்பதாலும், லியோ திரைப்படக் காட்சிகளை இம்மாதம் 20ஆம் தேதி ஸ்ரீலங்காவில் நிறுத்தி வைக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம். என இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் நடிகர் விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

https://tamil.asianetnews.com/cinema/dont-release-leo-movie-sri-lankan-tamil-mps-letter-to-thalapathy-vijay-mma-s2pwap

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லியோ' திரைப்படத்தை இலங்கையில் அக்டோபர் 20 ஆம் தேதி, வெளியிட வேண்டாம் என இலங்கையை சேர்ந்த தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்

நடிகர் விஜய் தனது திரைப்படத்தை இலங்கையில் நேரடியாக வெளியிடுகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தமிழ் அரசியலின் தரம் இதுதான்.

🤣

1 hour ago, Kavi arunasalam said:

நடிகர் விஜய் தனது திரைப்படத்தை இலங்கையில் நேரடியாக வெளியிடுகிறாரா?

தாம் நேரிடையாக மக்களிடம் 20 ஆம் திகதி படத்துக்கு போக வேண்டாம், ஹர்த்தால் அனுஷ்டியுங்கோ எனக்  கோரிக்கை வைத்தால் எடுபடாது என்று படத்தை வினியோகம் செய்கின்றவர்களையும், திரையிடும் தியேட்டர்களையும் விட்டு விட்டு, படத்தில் கதா நாயகனாக நடித்தவரிற்கு கடிதம் எழுதி இருக்கின்றார்கள் (அக் கடிதத்தை விஜய் பார்க்க கூடிய விதத்தில் சேர்த்தும் இருக்க மாட்டார்கள்).

இது தான் கடைந்தெடுத்த வங்குரோத்து அரசியல் என்பது.

இரு கேள்விகள்: விக்கினேஸ்வரன் இப்பவும் ஜஸ்ரிஸ் ஆக இருக்கின்றாரா? அவரது கையொப்பத்தில் Justice என்று இன்னும் போட்டுள்ளது. அத்துடன் இவர் தானே முல்லைத்தீவு நீதிபதி ஆங்கிலம் விளங்காதபடியால் Attorney General சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டார் என்று சொன்னவர்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்நாளில் தங்களது திரைப்படம் வெளியே வெளிவருவது எங்களது போராட்டத்திற்கு பின்னடைவாக இருக்கின்றது.

ஒரு நடிகனை இப்படி போய் கொஞ்ச வெட்கமே இல்லையா?எங்க துரை மாருக்கு.

ஹர்த்தால் செய்யும் போது படங்களையும் சேர்த்து ஹர்த்தால் செய்தாலே உண்மையான வெற்றி.

இப்படியும் ஒரு கேடுகெட்ட ஹர்த்தால் தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

விக்கினேஸ்வரன் இப்பவும் ஜஸ்ரிஸ் ஆக இருக்கின்றாரா? அவரது கையொப்பத்தில் Justice என்று இன்னும் போட்டுள்ளது.

பொதுவாக ஒருக்கா ஜஸ்டிஸ் ஆக வந்தால்…சாகும் வரை போட்டு கொள்ளலாம் (டொக்டர் மாதிரி). இலங்கையில் அப்படி என நினைக்கிறேன்.

ஜஸ்டிஸ் என்பது டைட்டில். சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் என்பது வேலையின் பெயர்.

எல்லா நீதிபதிகளும் ஜஸ்டிஸ் என அழைக்கபடும்வதும் இல்லை. பொதுவாக மேன்முறையீட்டு அல்லது உயர் அல்லது உச்ச நீதிமன்றில் இருப்போரே இப்படி விளிக்கப்படுவர்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தங்களது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை ஈழத் தமிழர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அதேவேளை இலட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் உங்களின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்

IMG-4924.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்க்கு கடிதம் எழுதவில்லை

adminOctober 18, 2023
IMG_7185.jpg?fit=1008%2C567&ssl=1

நடிகர் விஜய்க்கு நாம் எந்த கடிதமும் எழுதவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.  எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

அக்கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சி.வி.விக்னேஸ்வரன் , த. சித்தார்த்தன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் , மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களின் கையொப்பமும் கடிதத்தில் காணப்பட்டது.

குறித்த கடிதம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தனர்.  மேலும் தெரிவிக்கையில்,

எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை. அப்படி ஒரு படம் வர போற விடயமே எமக்கு தெரியாது. வடக்கு கிழக்கில் வெள்ளிக்கிழமை பூரண கதைவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அன்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்களும் கதவடைப்புக்கு ஆதரவு தருவார்கள் என மேலும் தெரிவித்தனர்.
 
https://globaltamilnews.net/2023/196228/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

ஆசிய நெட் தமிழ் செய்திகள் தளம் உண்மை என்று பதிவிட்டமைக்கு வருத்தங்கள். நிர்வாகம் இந்த திரியை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

15 hours ago, goshan_che said:

பொதுவாக ஒருக்கா ஜஸ்டிஸ் ஆக வந்தால்…சாகும் வரை போட்டு கொள்ளலாம் (டொக்டர் மாதிரி). இலங்கையில் அப்படி என நினைக்கிறேன்.

ஜஸ்டிஸ் என்பது டைட்டில். சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் என்பது வேலையின் பெயர்.

எல்லா நீதிபதிகளும் ஜஸ்டிஸ் என அழைக்கபடும்வதும் இல்லை. பொதுவாக மேன்முறையீட்டு அல்லது உயர் அல்லது உச்ச நீதிமன்றில் இருப்போரே இப்படி விளிக்கப்படுவர்.

விளக்கத்துக்கு நன்றி.

நான் இவ்வளவு நாளும் MBBS. LLB போன்று படித்து பெற்ற பட்டங்களைத்தான் பெயரின் அருகில் போடுவார்கள் என நினைத்துக் கொண்டு இருந்தேன். 
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

விஜய்க்கு கடிதம் எழுதவில்லை

adminOctober 18, 2023
IMG_7185.jpg?fit=1008%2C567&ssl=1

நடிகர் விஜய்க்கு நாம் எந்த கடிதமும் எழுதவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.  எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

அக்கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சி.வி.விக்னேஸ்வரன் , த. சித்தார்த்தன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் , மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களின் கையொப்பமும் கடிதத்தில் காணப்பட்டது.

குறித்த கடிதம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தனர்.  மேலும் தெரிவிக்கையில்,

எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை. அப்படி ஒரு படம் வர போற விடயமே எமக்கு தெரியாது. வடக்கு கிழக்கில் வெள்ளிக்கிழமை பூரண கதைவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அன்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்களும் கதவடைப்புக்கு ஆதரவு தருவார்கள் என மேலும் தெரிவித்தனர்.
 
https://globaltamilnews.net/2023/196228/

கண்ணுக்குத் தெரிஆடையை உடுத்த அரசனின் நிலையில் எமது டமில் அரசியல்வாதிகள் 🤨

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

விளக்கத்துக்கு நன்றி.

நான் இவ்வளவு நாளும் MBBS. LLB போன்று படித்து பெற்ற பட்டங்களைத்தான் பெயரின் அருகில் போடுவார்கள் என நினைத்துக் கொண்டு இருந்தேன். 
 
நீங்கள் சொல்பவை பேருக்கு பின். இந்த வகை பேருக்கு முன். Reverend, Dr, Sir, Lord, His/Her Royal Highness…..

அமரிக்க இலங்கை Presidents கூட இப்படித்தான். இன்றைக்கும் புஷ், சந்திரிகா பெயருக்கு முன் President போட்டுத்தான் அழைக்க வேண்டும்.

ஆனால் professors மட்டும் படிப்பிப்பதை நிறுத்தியவிடன் அந்த பெயரை பாவிப்பதை கைவிட வேண்டும் (மீண்டும்Dr). அல்லது Emeritus Professor. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நன்றி கோசன் நானும் இன்றுதான் இதை அறிந்து கொண்டேன்.

மேலும், சட்டத்தரணியை ஏன் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றார்கள்?

லாயர்
அட்வகேட்
சொலிசிட‌ர்
பரிஸ்டர்

இலங்கையில் இவர்களை செலிசிடர் ஜெனரல் என்று அழைப்பார்கள், 
கட்டாரிலோ இவர்களை பப்ளிக் ப்ரொசிகுட‌ர் என்கின்றார்கள்.
இவற்றின் வேறூபாடு என்ன?
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

லாயர் - மிகவும் பொதுவான generic பெயர். சட்டம் பற்றிய  எந்த ஒரு தகமை உள்ளவரையும் இப்படி அழைக்கலாம். லாயர்கள் பலவகை படுவர் (கீழே காண்க).

அட்வகேட் - இதுவும் ஒரு பொதுப்பதமே. ஏதாவது ஒரு நோக்குக்காக வாதாடுபவர். உதாரணமாக பெண்ணுரிமைக்காக பேசும் மலைலா வை ஒரு women’s rights advocate என்பர். ஆனால் இவர் எந்த வகையிலும் சட்ட தொழிலுடன் சம்பந்த படவில்லை.    

ஆனால் சட்ட களத்தில் (legal field)  பாவிக்கப்படும் போது அட்வகேட் என்பதற்கு ஒரு தனி (specific) அர்த்தம் வரும். இங்கே அர்த்தம் - கோர்ட்டில் போய் வாதாடும் லாயர். கோர்ட்டுக்கு போகாத லாயர்களை அட்வகேட் என்பதில்லை.

சொலிசிட்டர் - இவர்கள் கோர்ட்டுக்கு போவததில்லை (விதி விலக்கை கீழே காண்க). ஒரு வழக்கின் கோர்ட்டுக்கு போகும் வரைக்குமான சகல வேலைகளையும் செய்வது இவர்களே. இவர்கள்  case working இல் சிறப்பு தேர்ச்சி பெற்றோர். அடிப்படை சட்ட படிப்பு + மேலதிக ஒரு வருட படிப்பு (LPC). அதன் பின் 2 வருடம் ஒரு சொலிசிட்டருடன் பயிற்ச்சி. முடிந்தால் சொலிசிட்டர்.

பாரிஸ்டர் - ஒரு வழக்கில் சொலிசிட்டர் கோர்ட்டுக்கு வெளியான வேலையை செய்த பின், கோர்ட்டில் வாதாடும் வேலையை செய்பவர்.

அடிப்படை சட்ட படிப்பு + ஒரு வருடம் bar vocational course. அதன் பின் ஒரு பாரிஸ்டர்ஸ் சேம்பரில் 2 வருட பட்டறை (pupilage). முடித்தால்  பாரிஸ்டர்.

பாரிஸ்டர் = அட்வகேட் எனலாம். ஆனால் எல்லா நாடுகளிலும் இந்த சொல் பாவனையில் இல்லை. உதாரணமாக இலங்கையில் பாரிஸ்டர் இல்லை. அங்கே ஒருவரை பாரிஸ்டர் என அழைத்தால் அவர் இங்கிலாந்து, அல்லது அயர்லாந்து போன்ற நாட்டில் படித்தவராக இருப்பார்.

விதி விலக்குகள் / புள்ளிகள்

1. சொலிசிட்டர் வாதாட கூடாது என்பதில்லை. சகல சொலிசிட்சருக்கும் இங்கிலாந்தில் உயர் நீதி மன்றம் வரை வாதாடும் தகமை உள்ளது. ஆனால் அநேகர் செய்வதில்லை.

2. இப்போ advocate-solicitor என ஒரு வகையும் உள்ளது. இவர்கள் ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கள். தாமே கேஸ் வேர்க்கும் செய்து, வாதாடவும் செய்வார்கள்.

3. அண்மைகாலம் வரை ஒரு பாரிஸ்டர் நேரடியாக ஒரு கிளையண்டுடன் டீல் பண்ண முடியாது. ஒரு சொலிசிட்டர் மூலமாகவே ஒரு கிளையண்ட் ஒரு பாரிஸ்டரின் சேம்பரை அணுகலாம்.

ஆனால் இப்போ direct access barristers என ஒரு வகையை கொணர்ந்துள்ளனர். இவர்களும் கிட்டதட்ட ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள்தான். தாமே வாதாடி, குறிப்பிட்ட அளவு (முழுவதும் அல்ல) கேஸ் வேர்க்கிங்கும் செய்துதருவார்கள்.

4. இலங்கையில் இந்த பகுப்புகள் இல்லை என நினைக்கிறேன் (அமெரிக்காவிலும்?). எல்லாரும் attorney at law. அதன் பின் அவர்களாக, கேஸ் வேர்க் மட்டும் செய்யும் அட்டோர்னியா, அல்லது கோர்ட்மட்டுமா, அல்லது எல்லாமுமா என முடிவு செய்வார்கள் என நினைக்கிறேன்.

5. Public/ crown prosecutor/ state counsel - கிரிமினல் வழக்குகளை அரசே நடத்தும். இதில் அரசு சார்பாக ஆஜர் ஆகும் லாயர் இப்படி அழைக்கப்படுவார்.

6.  சொலிசிட்டர் ஜெனரல் - இதுவும் சொலிசிட்டரும் ஒன்றல்ல.

அட்டோனி ஜெனரல் - இவர்கள் அரசுக்கு/கேபினெட்டுக்கு ஆலோசனை வழங்கும் லாயர்கள்.

அட்டோனி ஜெனரலின் deputy சொலிசிட்டர் ஜெனரல்.

யூகேயில் அட்டோனி ஜெனரல் அரசின் சட்ட ஆலோசகர் மட்டுமே. நீதி பரிபாலன நிர்வாகத்தை அவர் நிர்வகிப்பதில்லை - இதை லோர்ட் சான்சிலர் தலைமையிலான நீதி அமைச்சும், நீதிபதிகளால் அமைந்த judiciary யும் இணைந்து செய்யும்.

அதே போல் அரசு தொடுக்கும் கிரிமினல்  வழக்குகளையும் இவர் நிர்வகிப்பதில்லை. அது பொலிஸ்+ crown prosecution service சேர்ந்து செய்யும்.

இலங்கையில் இவை இரெண்டையும் அட்டர்னி ஜெனரலே நிர்வகிப்பதோடு, உயர் நீதி மன்றில் அரச தரப்பு வக்கீலாகவும் ஆஜர் ஆவார்.

ஆகவே அவரின் deputy ஆன சொலிசிட்டர் ஜெனரலும் இந்த வேலைகளை செய்வார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

லாயர் - மிகவும் பொதுவான generic பெயர். சட்டம் பற்றிய  எந்த ஒரு தகமை உள்ளவரையும் இப்படி அழைக்கலாம். லாயர்கள் பலவகை படுவர் (கீழே காண்க).

அட்வகேட் - இதுவும் ஒரு பொதுப்பதமே. ஏதாவது ஒரு நோக்குக்காக வாதாடுபவர். உதாரணமாக பெண்ணுரிமைக்காக பேசும் மலைலா வை ஒரு women’s right advocate என்பர். ஆனால் இவர் எந்த வகையிலும் சட்ட தொழிலுடன் சம்பந்த படவில்லை.    

ஆனால் சட்ட களத்தில் (legal field)  பாவிக்கப்படும் போது அட்வகேட் என்பதற்கு ஒரு தனி (specific) அர்த்தம் வரும். இங்கே அர்த்தம் - கோர்ட்டில் போய் வாதாடும் லாயர். கோர்ட்டுக்கு போகாத லாயர்களை அட்வகேட் என்பதில்லை.

சொலிசிட்டர் - இவர்கள் கோர்ட்டுக்கு போவததில்லை (விதி விலக்கை கீழே காண்க). ஒரு வழக்கின் கோர்ட்டுக்கு போகும் வரைக்குமான சகல வேலைகளையும் செய்வது இவர்களே. இவர்கள்  case working இல் சிறப்பு தேர்ச்சி பெற்றோர். அடிப்படை சட்ட படிப்பு + மேலதிக ஒரு வருட படிப்பு (LPC). அதன் பின் 2 வருடம் ஒரு சொலிசிட்டருடன் பயிற்ச்சி. முடிந்தால் சொலிசிட்டர்.

பாரிஸ்டர் - ஒரு வழக்கில் சொலிசிட்டர் கோர்ட்டுக்கு வெளியான வேலையை செய்த பின், கோர்ட்டில் வாதாடும் வேலையை செய்பவர்.

அடிப்படை சட்ட படிப்பு + ஒரு வருடம் bar vocational course. அதன் பின் ஒரு பாரிஸ்டர்ஸ் சேம்பரில் 2 வருட பட்டறை (pupilage). முடித்தால்  பாரிஸ்டர்.

பாரிஸ்டர் = அட்வகேட் எனலாம். ஆனால் எல்லா நாடுகளிலும் இந்த சொல் பாவனையில் இல்லை. உதாரணமாக இலங்கையில் பாரிஸ்டர் இல்லை. அங்கே ஒருவரை பாரிஸ்டர் என அழைத்தால் அவர் இங்கிலாந்து, அல்லது அயர்லாந்து போன்ற நாட்டில் படித்தவராக இருப்பார்.

விதி விலக்குகள் / புள்ளிகள்

1. சொலிசிட்டர் வாதாட கூடாது என்பதில்லை. சகல சொலிசிட்சருக்கும் இங்கிலாந்தில் உயர் நீதி மன்றம் வரை வாதாடும் தகமை உள்ளது. ஆனால் அநேகர் செய்வதில்லை.

2. இப்போ advocate-solicitor என ஒரு வகையும் உள்ளது. இவர்கள் ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கள். தாமே கேஸ் வேர்க்கும் செய்து, வாதாடவும் செய்வார்கள்.

3. அண்மைகாலம் வரை ஒரு பாரிஸ்டர் நேரடியாக ஒரு கிளையண்டுடன் டீல் பண்ண முடியாது. ஒரு சொலிசிட்டர் மூலமாகவே ஒரு கிளையண்ட் ஒரு பாரிஸ்டரின் சேம்பரை அணுகலாம்.

ஆனால் இப்போ direct access barristers என ஒரு வகையை கொணர்ந்துள்ளனர். இவர்களும் கிட்டதட்ட ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள்தான். தாமே வாதாடி, குறிப்பிட்ட அளவு (முழுவதும் அல்ல) கேஸ் வேர்க்கிங்கும் செய்துதருவார்கள்.

4. இலங்கையில் இந்த பகுப்புகள் இல்லை என நினைக்கிறேன் (அமெரிக்காவிலும்?). எல்லாரும் attorney at law. அதன் பின் அவர்களாக, கேஸ் வேர்க் மட்டும் செய்யும் அட்டோர்னியா, அல்லது கோர்ட்மட்டுமா, அல்லது எல்லாமுமா என முடிவு செய்வார்கள் என நினைக்கிறேன்.

5. Public/ crown prosecutor/ state counsel - கிரிமினல் வழக்குகளை அரசே நடத்தும். இதில் அரசு சார்பாக ஆஜர் ஆகும் லாயர் இப்படி அழைக்கப்படுவார்.

6.  சொலிசிட்டர் ஜெனரல் - இதுவும் சொலிசிட்டரும் ஒன்றல்ல.

அட்டோனி ஜெனரல் - இவர்கள் அரசுக்கு/கேபினெட்டுக்கு ஆலோசனை வழங்கும் லாயர்கள்.

அட்டோனி ஜெனரலின் deputy சொலிசிட்டர் ஜெனரல்.

யூகேயில் அட்டோனி ஜெனரல் அரசின் சட்ட ஆலோசகர் மட்டுமே. நீதி பரிபாலன நிர்வாகத்தை அவர் நிர்வகிப்பதில்லை - இதை லோர்ட் சான்சிலர் தலைமையிலான நீதி அமைச்சும், நீதிபதிகளால் அமைந்த judiciary யும் இணைந்து செய்யும்.

அதே போல் அரசு தொடுக்கும் கிரிமினல்  வழக்குகளையும் இவர் நிர்வகிப்பதில்லை. அது பொலிஸ்+ crown prosecution service சேர்ந்து செய்யும்.

இலங்கையில் இவை இரெண்டையும் அட்டர்னி ஜெனரலே நிர்வகிப்பதோடு, உயர் நீதி மன்றில் அரச தரப்பு வக்கீலாகவும் ஆஜர் ஆவார்.

ஆகவே அவரின் deputy ஆன சொலிசிட்டர் ஜெனரலும் இந்த வேலைகளை செய்வார்.

அருமை நல்ல விளக்கம்.
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்விகளும் அவற்றுக்கு விளக்கமான கருத்துக்களும்........ நன்றி கோஷன்-சே & கொழும்பான் .......!  👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.