Jump to content

முகவர் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்டு இடைத்தங்கல் நாடுகளில் சிக்கித்தவிக்கும் யாழ்ப்பாணத்தவர்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முகவர் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்டு இடைத்தங்கல் நாடுகளில் சிக்கித்தவிக்கும் யாழ்ப்பாணத்தவர்கள்
 
யாழ்ப்பாணத்தில் உள்ள பலரும் பெருமளவு பணத்தை கொடுத்து முகவர்கள் ஊடாக வெளிநாடு செல்ல முயன்று இடைத்தங்கல் நாடுகளில் சிக்கி தவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

பிரான்ஸ்க்கு செல்வதற்காக இருபது இலட்சம் ரூபாய் பணத்தை வெளிநாடொன்றில் உள்ள போலி முகவரிடம் கையளித்து ஏமாந்து போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூதாட்டி தற்போது லெபனான் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலநாட்களுக்கு முன்னர் கொழும்புத்துறை வசந்தபுரம்
பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் போலி முகவரை நம்பி ஏமாந்துபோய் லெபனான் நாட்டின் சிறையில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது.

 வேலணையைச்  சேர்ந்த  64 வயதான மூதாட்டி லெபனான் சிறையில் உள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவரது குடும்பத்தினர்,பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று லெபனான்  ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக இருந்த போது உரிய ஆவணங்கள் இல்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு லெபனான் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜுன் மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்டார். ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லெபனான் அருகில் உள்ள இஸ்ரேல் நாட்டில் யுத்தம் இடம்பெறுவதால் எமக்கு பயமாக உள்ளது. எமது அம்மா சுகயீனம் அடைந்துள்ளார். எமது அம்மாவை நாட்டுக்கு அழைத்து வர உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என அவரது பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.

முகவர் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்டு இடைத்தங்கல் நாடுகளில் சிக்கித்தவிக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

64 வயதில் ஏன் செல்கிறார்? பணமும் அனியாயம். பிள்ளைகள் வருடம் ஒருமுறை வந்து ஊரில் பார்க்கலாமல்ல‌வா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில, கோவில், குளம் எண்டு, சும்மா இருந்த மனிசியை கொண்டு போய் சிறையில போட்டிருக்கினம் பிள்ளையள். 🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

64 வயதில் ஏன் செல்கிறார்? பணமும் அனியாயம். பிள்ளைகள் வருடம் ஒருமுறை வந்து ஊரில் பார்க்கலாமல்ல‌வா?

பிள்ளைகள் இலங்கை போகமுடியாத நிலமையாய் இருக்கலாம்.

1 hour ago, Nathamuni said:

ஊரில, கோவில், குளம் எண்டு, சும்மா இருந்த மனிசியை கொண்டு போய் சிறையில போட்டிருக்கினம் பிள்ளையள். 🥲

மேலோட்டமாக பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த வயதில், இந்த வழியால் எடுப்பிக்க முன் கட்டாயம் யோசித்திருப்பாகள்.

அதையும் மீறி எடுப்பிக்க ஒரு காராணம் இருக்கலாம். முழுவதும் அறியாமல் சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பிள்ளைகள் இலங்கை போகமுடியாத நிலமையாய் இருக்கலாம்.

மேலோட்டமாக பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த வயதில், இந்த வழியால் எடுப்பிக்க முன் கட்டாயம் யோசித்திருப்பாகள்.

அதையும் மீறி எடுப்பிக்க ஒரு காராணம் இருக்கலாம். முழுவதும் அறியாமல் சொல்ல முடியாது.

என்ன காரணம்? அஜெனிசி மேல் அதீத நம்பிக்கை அவ்வளவு தான்.

வரியை ஒழுங்கா கட்டி, ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட முடியாதா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

வரியை ஒழுங்கா கட்டி, ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட முடியாதா என்ன?

பிரான்ஸ் நிலமை தெரியாது - இங்கே எவ்வளவு வரி கட்டினாலும் பெற்றாரை இப்படி எடுப்பது மிக மிக கஸ்டம் (அடல்ட் டிபெண்ட்னட் ரிலேடிவ்). உள்ளதிலேயே வர கஸ்டமான முறைகளில் ஒன்று(2014 இன் பின்) .  

20 hours ago, Nathamuni said:

என்ன காரணம்?

👆🏼👇

On 25/10/2023 at 10:35, goshan_che said:

முழுவதும் அறியாமல் சொல்ல முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

என்ன காரணம்? அஜெனிசி மேல் அதீத நம்பிக்கை அவ்வளவு தான்.

வரியை ஒழுங்கா கட்டி, ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட முடியாதா என்ன?

நீங்க வேற. இப்போ சட்டரீதியாக ஸ்பொன்சர் செய்பவர்களை பேயன் மாதிரி பார்க்கிறார்கள். ஏஜென்சிக்கு காசு கொடுத்தால் வீட்டை கூட்டிக்கொண்டுவந்து விடுவாங்களாம். இலங்கையில் உள்ளவர்களுடன் இந்த விடயத்தில் கொஞ்சம் கதை கொடுத்து பாருங்கள் நிலமை புரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தவர்கள் மட்டும்தானா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்? 

பெயர்தான் புதிய உதயன, ஆனால் எழுத்தோ பழைய உதையன்...🤨

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.