Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்

Oct 23, 2023 07:00AM IST ஷேர் செய்ய : 
Israel and BJP exploiting using religion

ராஜன் குறை

அறுபதுகள், எழுபதுகளில் கோடை விடுமுறை என்றால் ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ (Ten Commandments, 1956) படத்தை திரையரங்குகளில் திரையிடுவார்கள். பள்ளி மாணவர்களை பெற்றோர் கூட்டிச் செல்வார்கள் என்பதால். எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மோசஸ் கடவுளின் துணையுடன் விடுவித்து அவர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட நிலமான இஸ்ரேலுக்கு கூட்டிச் செல்வதுதான் கதை. மோசஸ் குழந்தையாக ஆற்றில் விடப்பட்டு எகிப்து இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு, அரச குடும்பத்தில் வளர்வார், கர்ணனைப் போல. பின்னர் உண்மை வெளிப்பட்டு, நாட்டை விட்டு துரத்தப்படுவார். அலைந்து திரிந்து சினாய் மலையில் ஏறி கடவுளின் குரலைக் கேட்பார். கடவுள் கட்டளைப்படி எகிப்து சென்று மன்னருடன் வாதாடி, பலவித உற்பாதங்களைத் தோற்றுவித்து, பெருந்திரளான அடிமைகளுடன் வெளியேறுவார். அவர்கள் செங்கடலை நெருங்கும்போது மன்னனின் படைகள் துரத்திக்கொண்டு வரும். மோசஸ் கோலை உயர்த்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிடும். இந்தக் காட்சிக்கு அரங்கில் பெரும் கரவொலி எழும்பும். அந்தக் கடல் பிரிந்து கொடுத்த வழியில் யூதர்கள் கடந்து அக்கரை சென்ற பின், துரத்திக்கொண்டு வரும் மன்னனின் படைகள் அதில் இறங்கியவுடன் கடல் மூடிக்கொண்டு அவர்களை மூழ்கடித்துவிடும். இப்படியாகத் தப்பி வந்த மக்களுக்கு மோசஸ் மூலமாக பத்து கட்டளைகளை கடவுள் கொடுப்பார். அதன்படி வாழ்ந்தால் அவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு நிலத்தைத் தருவதாகக் கூறுவார். அப்படி வாக்களிக்கப்பட்ட நிலம், Promised land என்பதுதான் இஸ்ரேல் என்று இப்போது அழைக்கப்படும் பாலஸ்தீனம் என்பது புராணம், நம்பிக்கை.

யூதர்களின் டோரா, பைபிள் உள்ளிட்ட மத நூல்களில் குறிப்பிடப்படும் இந்த கதைக்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது. கிடைத்துள்ள வரலாற்று ஆதாரங்களின்படி சிந்தித்தால் அப்படியெல்லாம் நடந்திருக்கும் சாத்தியம் அதிகமாக இல்லை. ஆனால், ஏசு கிறிஸ்து பிறந்த நேரத்தில், கிறிஸ்துவ மதம் தோன்றிய நேரத்தில் யூதர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. கிறிஸ்து பிறப்புக்கு பிறகான நானூறு, ஐந்நூறு ஆண்டுக் காலத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி ஐரோப்பா முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் வசிக்கத் தொடங்கினார்கள். பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியர்கள் பெருமளவு இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள்.

பொது ஆண்டு 500 முதல் பொது ஆண்டு 1900 வரை பல்வேறு நாடுகளில் வாழ்ந்த  யூதர்கள் பாலஸ்தீனம்தான் சொந்த ஊர் என்று எண்ணி வந்தார்கள் என்று கிடையாது. அவர்கள் குடியேறிய நாடுகளில் வர்த்தகம் செய்தும், வட்டித் தொழில், வங்கித்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டும் வாழ்ந்தார்கள். ஆனால் இவர்களுக்கும், பொது சமூகத்துக்கும் இடைவெளியும், முரண்பாடுகளும் நிலவி வந்ததும், யூதர்களுக்கு எதிரான வன்முறை, சமூக விலக்கம், கட்டாய வெளியேற்றம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்ததும் உண்மைதான். இதன் உச்சகட்டமாகத்தான் ஹிட்லரால் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் இரண்டாம் உலகப் போர் நேரத்தில் நிகழ்ந்தது.

TbuR1mJm-Rajan-Kurai-1.jpg
புராணத்தை வரலாற்றாக்கிய தீர்வு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே யூதர்களுக்கென ஒரு நாடு தேவை என்ற எண்ணம் உருவாகத் தோன்றியது. கடவுள் யெஹோவாவால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி எனப்படும் இஸ்ரேல்/பாலஸ்தீனம்தான் அது என்ற சிந்தனையும் உருவானது. இந்த சிந்தனையால் பல்வேறு நாடுகளில் வசிக்கும் யூதர்களுக்கும் அவர்கள் பல தலைமுறைகளாக பார்த்தே இராத, நினைத்தே இராத பாலஸ்தீனம் அவர்களது சொந்த ஊர், உரிமையுள்ள நிலம் என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. இதன் உச்சமாகத்தான் இஸ்ரேல் என்ற நாடு இங்கிலாந்தால் உருவாக்கப்பட்டதும், உலகின் பல பகுதிகளிலிருந்தும் யூதர்களுக்கு அந்த நாட்டுக்கு “திரும்பி வரும் உரிமை” (Right to Return) வழங்கப்பட்டதும் நடந்தது. அதாவது எத்தனையோ தலைமுறைகளாக ஃபிரான்சிலோ, அமெரிக்காவிலோ வாழ்ந்து வரும் வம்சாவழியைச் சேர்ந்த யூதர் ஒருவர் இஸ்ரேலுக்குச் சென்று குடியேற நினைத்தால் அது ‘திரும்பிச் செல்வதாக’க் கருதப்படும்.

இந்த முரண்பாட்டை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இலங்கையின் மலையகத் தமிழர்களை யோசித்துப் பாருங்கள். அவர்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தேயிலைத் தோட்ட த்தில் வேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களின் வம்சாவழிகள்தான். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு ‘திரும்பி வரும் உரிமை’ கோர முடியுமா? சாஸ்திரி-சிரிமாவோ 1964 ஒப்பந்தத்தின்படி திரும்ப வர ஏற்கப்பட்டவர்களிலேயே பலர் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னும் குடியுரிமை இல்லாமல் அவதிப்பட்ட கதை பேசப்பட வேண்டியது. இப்படி நன்றாக அறியப்பட்ட வரலாற்றில் இடம் பெயர்ந்தவர்களின் சந்ததியருக்கே திரும்பி வரும் உரிமை இல்லாதபோது, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் சென்றிருக்கலாம் என யூகிக்கப்படுபவர்களின் சந்ததியருக்கு ‘திரும்பி வரும் உரிமை’ வழங்குவது எவ்வளவு முரண்பாடானது.

இஸ்ரேல் நாட்டினை எதிர்க்கும் சனாதன யூதர்கள்

சனாதனம் என்றால் மாறாதது என்று பலரும் கூறுவதை சமீப காலங்களில் கேட்டுள்ளோம். அதனால் மாற்றங்களை விரும்பாதவரை சனாதனி என்று கூறுகிறோம். பொதுவாக இவர்கள் பிற்போக்காளர்களாக இருப்பார்கள். ஆனால், யூதர்கள் விஷயத்தில் ஒரு சுவாரஸ்யமான முரண் ஏற்படுகிறது. யூத மத நம்பிக்கையில் ஒரு பகுதி கடவுளின் கட்டளைகளை யூதர்கள் பின்பற்றாததால், அவர்களுக்குத் தருவதாகச் சொன்ன பூமி வழங்கப்படவில்லை என்பதாகும். அதனால் அவர்கள் பல்வேறு நாடுகளிலும் வாழ்வதுதான் சரியே தவிர, தங்களுக்கென ஒரு நாடு என இஸ்ரேலை உருவாக்கியதும், அந்த நிலத்திலிருந்து பாலஸ்தீனியர்களை அகற்றியதும் தவறு என்பது சனாதன யூதர்களில் ஒரு பிரிவினரின் கருத்து.

யூதர்களின் சம்பிரதாயப்படி ஆண்கள் தாடி வளர்த்து கறுப்பு ஆடையும், கறுப்புத் தொப்பியும் அணிய வேண்டும். அவ்வாறு மத வழக்கத்தை தீவிரமாக பின்பற்றும் சனாதன யூதர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி நியூயார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை நான் பலமுறை கண்டுள்ளேன். நீங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம். பல நேரம் இவர்கள் ‘JEWS AGAINST OCCUPATION’ என்ற பதாகையையும் பிடித்திருப்பர். அதாவது இஸ்ரேல் நாடு என்பது பாலஸ்தீனியர்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதே பொருள். கீழேயுள்ள படத்தில் டோரா என்ற யூதர்களின் புனித நூல் பாலஸ்தீனம் முழுவதையும் பாலஸ்தீனியர்களின் இறையாண்மைக்கு விட்டுவிட வேண்டும் எனக் கூறுவதாக ஒரு பதாகையை ஏந்தியுள்ளதைக் காணலாம்.

Israel and BJP exploiting using religion
இந்தியாவில் சனாதனிகள் இப்போது மிகுந்த ஆவேசத்துடன் சனாதன எதிர்ப்பாளர்களைக் கண்டித்துப் பேசுகிறார்கள். சனாதனம் என்றால் அது வர்ணாசிரம தர்மம் அல்ல, தீண்டாமை அல்ல என்று சொல்கிறார்கள். அவர்களெல்லாம் இது போல “ஜாதி மறுப்பே சனாதனம்”, “வர்ண பேதம் கடவுளுக்கே அடுக்காது”, “உங்கள் ஜாதிக்குள் திருமணம் செய்யாதீர்கள்”, “ஜாதிக்குள் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவது அதர்மம்”, “பார்ப்பனர்கள் யாருக்கும் உயர்ந்தவர்கள் அல்ல”, “சனாதனம் ஜாதீயத்தை எதிர்க்கிறது”, “தீண்டாமை என்பது கொடிய பாவம்” என்றெல்லாம் பதாகைகளைப் பிடித்துக்கொண்டு ஊர்வலம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுவும் விபூதி, திருமண் முதலிய சின்னங்களை நெற்றியில் அணிந்து, குடுமி வைத்தவர்கள் இப்படியெல்லாம் பதாகைகளை ஏந்தி வந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் இவர்கள் செய்வதில்லை. சனாதனம் என்றால் இதுதான், சனாதனம் என்றால் அதுதான் என்று வாயினால் பசப்புகிறார்களே தவிர, திட்டவட்டமாக களத்தில் இறங்கி ஜாதி மறுப்பு பிரச்சாரம் செய்வதில்லை. சனாதன யூதர்களைப் பாருங்கள். பாலஸ்தீனத்தை விடுவியுங்கள். பாலஸ்தீனியர்களிடம் இறையாண்மையைக் கொடுங்கள் என்று திட்டவட்டமாக கோருகிறார்கள்.    

இந்துத்துவத்தின் புண்ணிய பூமி கருத்தாக்கம்

யூதர்களுக்கு கடவுள் வாக்களித்த பூமி இஸ்ரேல் என்று சொன்னதால் எப்படி தேசம் என்ற நவீன அரசியல் அடையாளம், மதத்துடன் பிணைந்துகொண்டதோ, அது போன்றதுதான் சாவர்க்கர் புண்ணிய பூமி என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியதும். உண்மையில் இந்துத்துவத்தின் சாராம்சமே அதுதான். அதன்படி யார் ஒருவரின் புண்ணிய தலங்கள் இந்திய எல்லைக்குள் இருக்கிறதோ அவர்தான் இந்தியர். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியவர்களின் புண்ணிய தலங்கள் இந்தியாவுக்கு வெளியே இருப்பதால் அவர்கள் இந்தியாவின் முழுமையான குடிமக்கள் கிடையாது. இவ்வாறு நாட்டின் குடியுரிமையை மதம் என்பதுடன் பிணைப்பதுதான் மத அடையாள தேசியம் ஆகும். அரசாங்கம் அதிகாரபூர்வ மதமாக ஒரு மதத்தை ஏற்பது என்பது கூட பிரச்சினை கிடையாது. குடியுரிமையை, குடிநபரின் வரையறையை மதம் என்பதுடன் இணைப்பதுதான் கடுமையான பிரச்சினை. ஆங்கிலத்தில் தேசம் என்ற வார்த்தையை ‘நேஷன்’ என்று கூறுகிறோம். இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் பிறப்பினை குறிப்பதாகும். ஒருவரின் பிறப்பு சார்ந்ததே அவரது தேசம் என்பது.

உதாரணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பவர் இருக்கிறார். இவரின் தாயார் சியாமளா சென்னையில் பிறந்தவர். தந்தை ஜமைக்காவில் பிறந்தவர். ஆனால், கமலா அமெரிக்காவில் பிறந்ததால் அந்த நாட்டின் குடிநபர் ஆகிறார். அதனால்தான் அவர் தேர்தலில் போட்டியிட முடிகிறது. துணை அதிபராக முடிகிறது. அமெரிக்காவில் பல இந்து கோயில்களைக் கட்டியுள்ளார்கள். இந்து மதத்தினரும் அங்கே அதிபர் தேர்தலில் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ஒரு இந்து, ரிஷி சுனக் இருக்கிறார். அவர் காசியை புண்ணிய தலமாக நினைத்தால் அது குறித்து இங்கிலாந்தில் யாரும் கவலைப்படவில்லை. மதத்துக்கும் குடியுரிமைக்கும் இந்த நாடுகள் முடிச்சுப் போடவில்லை.
Israel and BJP exploiting using religion
ஆனால் சாவர்க்கரின் இந்துத்துவம் முடிச்சுப் போடுகிறது. இந்தியாவை புண்ணிய பூமியாகக் கொள்ளாதவர்கள் இந்திய குடிமக்களாக இருக்க முடியாது என்ற கருத்தை அது விதைக்கிறது. இஸ்ரேலின் அடிப்படையான மோசஸ் கதைபோல சாவர்க்கர் ராமாயணத்தைப் பயன்படுத்துகிறார். ராமர்தான் இந்தியாவை ஒரே நாடாக இணைத்தவர் என்று கூறுகிறார். ராமாயணம் ஒரு புராணக்கதையாகும். ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட வரலாறு அல்ல. மேலும் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை என்பது மத்தியப் பிரதேசத்தில் இருப்பதாகக் கருதும் ஆய்வாளர்கள் பலர் இருக்கிறார்கள்.

புராணத்தை வரலாறாக ஆக்குவதிலும், மதத்தை தேசமாக ஆக்குவதிலும் இஸ்ரேலின் முன்மாதிரிக்கும், இந்துத்துவ சிந்தனைக்கும் நிறைய ஒப்புமைகளைக் காணலாம். உள்ளபடி சொன்னால் குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் என்பது ஒருவகையில் இந்துக்களின் “திரும்ப வரும் உரிமை” எனலாம். பிற நாடுகளில் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டால் கொடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்காமல், இந்துக்களாக இருந்தால் குடியுரிமை வழங்கலாம், இஸ்லாமியர்கள் என்றால் முடியாது என்றெல்லாம் விதிமுறைகள் வகுப்பது குடியுரிமையையும், மதத்தையும் இணைக்கும் செயல் என்பதால்தான் போராட்டங்கள் வெடித்தன.

இந்துத்துவ அணியினரின் வெளிப்படையான இஸ்ரேல் ஆதரவு என்பது, முஸ்லிம்களை பொது எதிரியாக காண்பதிலிருந்து, பலவகையான தொடர்பு புள்ளிகளைக் கொண்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. இஸ்ரேல் மேலும்  வலுப்பெறுவது இந்துத்துவர்களின் வேலை திட்டத்தை ஊக்கப்படுத்தவே செய்யும். ‘மதமே தேசம்! புராணமே வரலாறு’ என்ற முழக்கத்துக்கு இஸ்ரேல் மிகவும் அனுசரணையான சிறந்த முன்மாதிரியாகும்.    

கட்டுரையாளர் குறிப்பு:

 

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
 

https://minnambalam.com/political-news/israel-and-bjp-exploiting-using-religon-rajan-kurai/

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பெயருக்கு ஏற்ற பேராசிரியர் ராஜன் குறை.

இவர் ஒரு சங்கி எதிர்ப்பாளர்.

சங்கிகள் ஆதரிக்கிறார்கள் என்பதாலேயே யூதர்களின் இருப்பை, சுய நிர்ணயத்தை, நில உரிமையை மறுத்து, முடிந்தளவு அவர்கள் வரலாற்றை மறைத்து கட்டுரை வரைகிறார்.

உண்மை என்னவெனில் யூதர் முற்று முழுதாக அந்த மண்ணை விட்டு ஒரு போதும் நீங்கவில்லை.

அங்கே மட்டும் அல்ல, யேர்மன் தொட்டு, சிரியா,  துருக்கிவரை அரபுலகம் எங்கும் அவர்கள் வாழ்ந்தார்கள் (தனியே ஐரோப்பாவில் அல்ல). இஸ்ரேல் உருவாக்கத்தின் பின் எழுந்த வெறுப்புணர்வு அவர்களை இஸ்லாமிய நாடுகளில் இருந்து இஸ்ரேல் நோக்கி விரட்டியது.

புராணத்தை மட்டுமே இஸ்ரேல் வரலாறாக கொண்டுள்ளது என்பது அப்பட்டமான பொய். 

 

1 hour ago, கிருபன் said:

யூதர்களுக்கு கடவுள் வாக்களித்த பூமி இஸ்ரேல் என்று சொன்னதால் எப்படி தேசம் என்ற நவீன அரசியல் அடையாளம், மதத்துடன் பிணைந்துகொண்டதோ, அது போன்றதுதான் சாவர்க்கர் புண்ணிய பூமி என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியதும். உண்மையில் இந்துத்துவத்தின் சாராம்சமே அதுதான். அதன்படி யார் ஒருவரின் புண்ணிய தலங்கள் இந்திய எல்லைக்குள் இருக்கிறதோ அவர்தான் இந்தியர். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியவர்களின் புண்ணிய தலங்கள் இந்தியாவுக்கு வெளியே இருப்பதால் அவர்கள் இந்தியாவின் முழுமையான குடிமக்கள் கிடையாது. இவ்வாறு நாட்டின் குடியுரிமையை மதம் என்பதுடன் பிணைப்பதுதான் மத அடையாள தேசியம் ஆகும். அரசாங்கம் அதிகாரபூர்வ மதமாக ஒரு மதத்தை ஏற்பது என்பது கூட பிரச்சினை கிடையாது. குடியுரிமையை, குடிநபரின் வரையறையை மதம் என்பதுடன் இணைப்பதுதான் கடுமையான பிரச்சினை. ஆங்கிலத்தில் தேசம் என்ற வார்த்தையை ‘நேஷன்’ என்று கூறுகிறோம். இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் பிறப்பினை குறிப்பதாகும். ஒருவரின் பிறப்பு சார்ந்ததே அவரது தேசம் என்பது.

அப்பட்டமான பொய்.

இஸ்ரேல் ஒரு யூத மத அரசு என எங்கும் குறிப்பிடப்படவில்லை.  யூத இனவழி தேசிய அரசு அது. எப்படி ஆங்கிலேயருக்கு இங்கிலாந்து, லத்வியருக்கு லத்வியாவோ, அப்படி யூத இன நாடு இஸ்ரேல்.

பேரா குறைக்கு Islamic republic of Iran, Islamic republic of Pakistan எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் இனவழி தேசியமாக கட்டி எழுப்பபட்டுள்ள இஸ்ரேலை மதவழி நாடு (theocracy) என பொய்யுரைக்கிறார்.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

சனாதன யூதர்களைப் பாருங்கள். பாலஸ்தீனத்தை விடுவியுங்கள். பாலஸ்தீனியர்களிடம் இறையாண்மையைக் கொடுங்கள் என்று திட்டவட்டமாக கோருகிறார்கள்.    

இதென்ன பித்தலாட்டம் சனாதன யூதர்கள்🤣. இவர்களின் பெயர் பழமைவாத யூதர்கள் (ஆர்தடொக்ஸ்). 

இவர்கள் இஸ்ரேலை எதிர்க்கும் காரணம் மேலே பேரா குறை பசப்புவதுபோல் பலஸ்தீனரின் நியாயத்தை ஆதரித்து அல்ல.

மாறாக இவர்கள் நம்பிக்கை படி - இறை செயலால் மட்டுமே இஸ்ரேல் அமையும். அதை மனிதர்கள் முயன்று செய்தால் அது தெய்வ குற்றம். கூடவே, நாடற்றோராய் ஆக்கப்பட்ட யூதர், இறைவன் நாட்டை மீள அமைத்து தரும் வரை, அவர்களை ஆளும் நாட்டுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் (பலஸ்தீன்). 

இந்த நம்பிக்கையால்தான் இவர்கள் இஸ்ரேலை எதிர்க்கிறார்கள்.

1 hour ago, கிருபன் said:

என்ற நாடு இங்கிலாந்தால் உருவாக்கப்பட்டதும்

மறுபடியும் அப்பட்டமான வரலாற்று திரிபு. அப்போ பலஸ்தீன் என அறியப்பட்ட British Protectorate ஐ, அரபு நாடு, யூத நாடு என இரு நாடுகளாக அமைக்க வேண்டும் என்பது ஐநா சபை முடிவு (தீர்மானம் 181).  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கிருபன் said:

இலங்கையின் மலையகத் தமிழர்களை யோசித்துப் பாருங்கள். அவர்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தேயிலைத் தோட்ட த்தில் வேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களின் வம்சாவழிகள்தான். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு ‘திரும்பி வரும் உரிமை’ கோர முடியுமா? சாஸ்திரி-சிரிமாவோ 1964 ஒப்பந்தத்தின்படி திரும்ப வர ஏற்கப்பட்டவர்களிலேயே பலர் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னும் குடியுரிமை இல்லாமல் அவதிப்பட்ட கதை பேசப்பட வேண்டியது. இப்படி நன்றாக அறியப்பட்ட வரலாற்றில் இடம் பெயர்ந்தவர்களின் சந்ததியருக்கே திரும்பி வரும் உரிமை இல்லாதபோது

மலையக தமிழருக்கு திரும்பி வரும் உரிமை இல்லை என்பதை இந்தியா தன் சுய நல நோக்கில் மறுத்தது. ஆனால் தலிபான் கொடுமையில் சிக்கி தவிக்கும் ஆப்கானிய இந்துகள், சீக்கியருக்கு இந்த உரிமையை கொடுக்கிறது.

இத்தனைக்கும் இந்த இந்துக்களும், சீக்கியரும் பலர் இன்றைய இந்தியாவின் பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தான் போனவர் அல்ல. இஸ்லாம் பரவமுன்னர் அங்கே இருந்தோர்.

2 hours ago, கிருபன் said:

யூதர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்தார்கள் என்பது உண்மை

ஆண்டார்கள் என்பதும் உண்மை.

2 hours ago, கிருபன் said:

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் சென்றிருக்கலாம் என யூகிக்கப்படுபவர்களின்

யூகம்🤣…அப்பட்டமான இன வன்மம் இது. மேலே அவரே யூதர் அங்கே வாழ்ந்தார் என்கிறார். பின்னர் அவரே அவர்கள் அங்கிருந்து போனது யூகம் என்கிறார்.

#குறை…..

ஐரோப்பாவில் பல வரலாற்று ஆவணங்கள் உள்ளன. அவை சொல்லி நிற்பது யூதர்கள் ஐரோப்பாவில் வந்தேறிகள் என்பதையே. 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேரா குறையின் சிறப்பு தேர்ச்சி எந்த துறையில்?

இஸ்ரேல் பலஸ்தீன பிணக்கு?

மத்திய கிழக்கு வரலாறு?

அரசியல் விஞ்ஞானம்?

நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Rajan Krishnan aka Rajan Kurai Krishnan was awarded with PhD degree in Anthropology by Columbia University, New York in 2009 for his thesis on Tamil Cinema titled “Cultures of Indices: Anthropology of Tamil and Other Cinemas”. He also earned a certificate from Institute of Comparative Literature and Society, Columbia University. Before pursuing his doctoral degree he had participated for two decades in a range of cultural activity in Tamil Nadu including film society movement, theatre and literary criticism. He had also been part of institutionally funded research projects on cinema and masculinity. Apart from academic writing, he regularly publishes, in Tamil, articles on political theory, philosophy, global affairs, climate change and film theory. Since the publication of his research paper in Tamil on Periyar E.V.Ramasamy in 1993, he continues to have a keen research interest in theories of caste. In the period 2009-12, he was a post doctoral research associate in a multi sited project titled “Caste out of Development” in which he studied Christian Dalit situations.

 

Publications

  • Dec  2011 “John Abraham: Cinema and the Idea of the Collective”,  Journal of theMoving Image, Vol.10, December 2011.
  • June 2009 “From Songs to Speech”, Seminar, Vol.598, June 2009.
  • Jan  2008  "Imaginary Geographies: The Makings of 'South' in Contemporary Tamil Cinema". In Tamil Cinema: The Cultural Politics of India's  Other Film Industry, edited by Selvaraj Velayutham. London: Routledge, 2008.
  • Jul 2007 Rajini’s Sivaji: Screen and Sovereign, Economic and Political Weekly, Vol. XLII, Nos 27 & 28, Jul.14(2007), pp.2861-3.
  • Jan 2007 "The Oddities of Tamilnadu” (Review of Vasanthi's Cut Outs, Caste and Cine Stars), Biblio Vol.XII, Nos1&2, Jan.1(2007), pp.36-37.
  • Jul 2006 The Brahmin and the Citizen: Shankar’s Anniyan, Economic and Political Weekly, Vol. XLI, Nos 27 and 28, Jul (2006) (Co-authored with M.S.S.Pandian), pp.3055-3060.
  • Jun 2006 More Stars than Ever, Economic and Political Weekly, Vol.XLI, Nos 24, Jun.17(2006), pp.2414-5.
  • 2006  "Touching Untouchability? Dalit Situations and Theoretical Horizons." In Home and the World: South Asia in Transition, edited by Helen Fazio (et.al). New Castle: Cambridge Scholars Press,2006, pp.365-378.
  • Oct  2002  Work, Caste and Competing Masculinities: Notes from a Tamil Village, Economic and Political Weekly, Oct 26 (2002) (Co-authored with S. Anandhi and J. Jeyaranjan), pp.4397-4406.
  • Tamil  (Select list of publications; with translated titles)

Books

  • Jan  2010  Muthaleettiyamum Manuda Azhivum (Capitalism and Human Extinction), Pulam, Chennai.
  • Jan  2012  Kathanayakanin Maranam (Death of the Hero), Kayal Kavin Pathippagam, Chennai.

Essays

  • Aug 2007  Rajini en'ra chamooka moolathanam, (Rajini as Social Capital) India Today, Special issue on Rajnikanth, Aug 2007, pp.120-1.
  • Oct  1997  “Adiththaddu makka'l varalaa'rum, ilakkiyap payitsika'lum” (“Subalternity and Litarary Modernism” ), Vilimbu Nilai Aaivugal,  Nirappirigai, Kumbakonam 1997.
  • Jun 1993  Yaanayin uruvamum, vekujana chinimaavin parimaa'nangka'lum (The Uncertain Contours of Popular Cinema), Aaiyvu, Vol.5,1993.
  • Apr 1993 Periyaariyam: Thaththuvaththai varaiya'ruththalum vivaathamum – oru aayvukkaana munvaraivuka’l (The Ideas of Periyar: a few Hypotheses towards Discerning his Philosophy), Nirappirigai, Vol.6, 1993.

https://aud.ac.in/faculty/dr-rajan-krishnan

இதை சொல்லுவது பேரா குறையை, குறை மதிப்பீடு செய்ய அல்ல. அவர் இந்துறை சார் வல்லுனர் அல்ல என்பதை சொல்லவே

மேலும் துறை வல்லமைக்கு அப்பால் - இந்த விடயத்தில் இவர் அரசியல் முனைப்போடு உண்மைக்கு புறம்பாக பக்கசார்பாகவே எழுதுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேரப் பற்றாக்குறை, ஆனால் சுருக்கமாக:

ஓம், சில விடயங்கள் தவறு, சில விடயங்கள் தவிர்ப்பு (omission) என்று அபிப்பிராயத்திற்கேற்ப தரவுகளை வளைத்திருக்கிறார். சில நுட்பமான உள்குத்துக்களும் கூட: "வட்டி, வர்த்தகம் என்று வாழ்ந்தார்கள்" என்கிறார். ஐரோப்பாவில் 1900 இல் யூதர்கள் மருத்துவம், விஞ்ஞானம் , வர்த்தகம் என்று எல்லாத் துறைகளிலும் கோலோச்சினார்கள், இந்த "cunning வியாபாரிகளாக இருந்தனர்" என்பது நாசிகள், யூத எதிர்ப்பாளர்கள்  பாவிக்கும் ஒரு anti-Semitic trope!

1897 இல் முதல் சியோனிஸ்ட் காங்கிரஸ், ஆனால் அது தான் யூதர்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கும் முதல் முன்மொழிவு அல்ல. யூத நாடு இயக்கம் ஆரம்பித்தது 1800 ஆரம்பத்தில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த யூதர்களிடையே. இதைப் பார்த்து வளர்ந்த தியோடர் ஹேர்ஷல் தான் முதல் சியோனிஸ்ட் காங்கிரசை உருவாக்கி யூதப் பணக்காரர்களை நாடி பலஸ்தீனம் நோக்கிச் செல்லும் யூதர்களை அதிகரிக்க வைத்தார்.

டொக்ரர் குறை எதை வாசித்து விட்டு இதை எழுதினாரோ தெரியவில்லை!

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

நேரப் பற்றாக்குறை, ஆனால் சுருக்கமாக:

ஓம், சில விடயங்கள் தவறு, சில விடயங்கள் தவிர்ப்பு (omission) என்று அபிப்பிராயத்திற்கேற்ப தரவுகளை வளைத்திருக்கிறார். சில நுட்பமான உள்குத்துக்களும் கூட: "வட்டி, வர்த்தகம் என்று வாழ்ந்தார்கள்" என்கிறார். ஐரோப்பாவில் 1900 இல் யூதர்கள் மருத்துவம், விஞ்ஞானம் , வர்த்தகம் என்று எல்லாத் துறைகளிலும் கோலோச்சினார்கள், இந்த "cunning வியாபாரிகளாக இருந்தனர்" என்பது நாசிகள், யூத எதிர்ப்பாளர்கள்  பாவிக்கும் ஒரு anti-Semitic trope!

 

இதை வாசித்த போது நானும் இப்படி யோசித்தேன். 

நல்லவேளையாக இவர்களுக்கு மூக்கு கொஞ்சன் கொழுக்கி போல் வளைந்து இருக்கும், சிறார் கடத்தலில் ஈடுபடுவார்கள், மறைவாகா சாத்தானை வழிபட்டார்கள், போன்றவற்றையும் எழுதாமல் விட்டார்🤣.

அல்லது அதை அடுத்த கட்டுரையில் எழுதுவாரோ தெரியாது பார்ப்போம்.

இவர் யாழை வாசிப்பார் அல்லது இதை வாசிப்பர்கள் இதை அவர் கவனத்துக்கு கொண்டு போவார்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்கள் இல்லுமினாட்டிகள் என்பதையும் குறை குறைவிட்டுவிட்டார்! 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

பேரா குறையின் சிறப்பு தேர்ச்சி எந்த துறையில்?

திரைப்படங்கள் பற்றிய ஆராய்ச்சியா? ஆனால் அவரது திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளைவிட யமுனா ராஜேந்திரன் நன்றாக எழுதுவார்.

ஆசான் ராஜன் குறைக்கு இலக்கியம் பற்றியும் எதுவும் தெரியாது என்பார்!

அப்போ எல்லாம் அரை குறைதானோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

திரைப்படங்கள் பற்றிய ஆராய்ச்சியா? ஆனால் அவரது திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளைவிட யமுனா ராஜேந்திரன் நன்றாக எழுதுவார்.

ஆசான் ராஜன் குறைக்கு இலக்கியம் பற்றியும் எதுவும் தெரியாது என்பார்!

அப்போ எல்லாம் அரை குறைதானோ!

ஆம் ஆராய்ச்சி பட்டம் சினிமா சம்பந்த பட்ட ஆராய்சியில்தான் எடுத்துள்ளார்.  தமிழ், ஏனைய சினிமாக்களின் பண்பாட்டியல் வளர்ச்சி என ஆராய்ச்சி தலைப்பை மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன்.

ஏனை வெளியீடுகளும் அதிகம் அப்படித்தான், சினிமா சார்ந்தே.

அந்திரபோலொஜி எனப்படும் மானிடவியலில், மனித குமுகாயங்களின் பண்பாட்டு வளர்ச்சி பற்றிய துறையில் சினிமாவை சிறப்பு தேர்ச்சியாக கை கொண்டுள்ளார்.

இந்த துறையில் இவர் வல்லுனராக இருக்க கூடும் என்றே நினைக்கிறேன்.

இஸ்ரேல்-பலஸ்தீன் விடயத்தில் கூட, விடய அறிவு இருக்கிறது, இல்லை என்பதை தாண்டி, இவர் கட்டுரைகள் ஒரு செயற்பாட்டாளர் எழுதுவதை போல, தரவுகளை cherry pick பணனுவதும், தனக்கு உகந்ததை மட்டும் எழுதுவதும், சில இடங்களில் பொய்யாகவே இட்டு கட்டுவதும் என நகர்கிறது.

முதலாவது கட்டுரையிலேயே இதை சுட்டினேன்.

இந்த கட்டுரை அதை விட மோசம்.

சங்கி எதிர்பாளர், திராவிட சிந்தாந்த பிடிப்புள்ளவர் என இருந்த நன்மதிப்பை, இரு கட்டுரைகள் மூலம் சுக்கலாக்கி விட்டார்.

எந்த எல்லைக்கும் போய் இந்துதுவாவை எதிர்பவர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் இப்படி பொய் சொல்லி, அவர்கள் ஆதரிப்பவர் எல்லாம் எமது எதிரி என்ற நிலைப்பாடு அறிவார்ந்த நிலை அல்ல.

ஒரு academic இற்கு நம்பகதன்மை கன்னிமை மாதிரி. போனால் போனதுதான்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை பற்றி சீமான் பேச்சு கேட்டீர்களா அங்கேயும் மோசமான பொய் கதையை  தனது ஆதரவார்களுக்கு தொண்டையால் கத்தி  சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை பற்றி சீமான் பேச்சு கேட்டீர்களா அங்கேயும் மோசமான பொய் கதையை  தனது ஆதரவார்களுக்கு தொண்டையால் கத்தி  சொல்கிறார்.

இனி சின்ராசுகளை கையில பிடித்த மாரித்தான். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யூதர்களின் புனித நூலான டோரா எனப்படுவது பைபிளில் உள்ள முதல் 5 புத்தக‌ங்களுமே. அவையாவன ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்பவயே. மேலும் கிறீஸ்து பிறந்தவுடன் கிறிஸ்த‌வம் தோன்றவில்லை அவர், பிறந்து,வாழ்ந்து ம‌ரித்து, விண்ணேற்றம் அடந்த பின்பு ஒரு மதமாக உருவாகியது. புனித பவுல் இந்த மத்தை பரப்ப ஒரு ஊக்கியாக இருந்தார். இதை அப்பொஸ்தலர்  ந‌டபடிகள் புத்தகத்தில் வாசிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, colomban said:

யூதர்களின் புனித நூலான டோரா எனப்படுவது பைபிளில் உள்ள முதல் 5 புத்தக‌ங்களுமே. அவையாவன ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்பவயே. மேலும் கிறீஸ்து பிறந்தவுடன் கிறிஸ்த‌வம் தோன்றவில்லை அவர், பிறந்து,வாழ்ந்து ம‌ரித்து, விண்ணேற்றம் அடந்த பின்பு ஒரு மதமாக உருவாகியது. புனித பவுல் இந்த மத்தை பரப்ப ஒரு ஊக்கியாக இருந்தார். இதை அப்பொஸ்தலர்  ந‌டபடிகள் புத்தகத்தில் வாசிக்கலாம். 

க்ரெட்டு.

மேலே குறை “டோரா, பைபிள்” யூதரின் நூல்கள் என எழுதியுள்ளார். இதை நானும் யோசித்தேன். ஆனால் டோராவுக்கும் பைபிளுக்கும் இடையில் ஒரு காற்புள்ளியை அவர் இட்டதால், டோராவை மட்டுமே யூதரின் புனித நூலாக அவர் கூறியுள்ளார் என கருதினேன்.

கிறிஸ்தவம் பற்றிய உங்கள் கூற்று மிக சரியே.

உண்மையில் கிறிஸ்தவத்தை நிறுவியர் கிறீஸ்து அல்ல - போல்தான்.

சிலர் கிறிஸ்தவத்தை, போலினிசம் எனவும் கூறுவர்.

  • Like 1
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/10/2023 at 04:28, colomban said:

அவர், பிறந்து,வாழ்ந்து ம‌ரித்து, விண்ணேற்றம் அடந்த பின்பு ஒரு மதமாக உருவாகியது. புனித பவுல் இந்த மத்தை பரப்ப ஒரு ஊக்கியாக இருந்தார்.

அப்படியான நம்பிக்கை கருத்துருவாக்கத்தை தொடக்கி வைத்தது, சீடர்களை உள்வாங்கி போதித்து என்று ..  இயேசுவை தவிர  எவராவது உள்ளார்களா?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பொதுவாக.

ஆங்கிலேயர் எந்த மதமும் இருக்கலாம். அனால், ஆங்கிலேயர் என்ற இன அடையாளம் மாறாது, உ.ம் ஆக ஆர் இஸ்லாம், பௌத்தம் ... போன்று வெவ்வேறு  மதத்தை கொண்டு இருந்தாலும்.

வேறு இனத்தவர் சந்ததி சந்ததியாக வாழ்ந்து ஆங்கிலேயர் ஆக முடியுமா? இல்லை. 

கலந்து ஆக முடியும் , அதாவது கலப்பவரின் சந்ததி இன அடையாளம் ஆங்கிலேய இன அடையாளத்துக்குள்  சீரழிக்கப்பட்டு.

ஆனால், யூதர் என்பவர்கள் யூத மதம்  அவர்களின் மதமாக இருக்காமல் யூதராக முடியாது.

ஆனால், யூதர் என்பதற்கு யூத மதம் மட்டும் போதாது. உடனடியாக மதம்  மாறியும் யூதராக முடியாது.

மத தொடர்ச்சி  இல்லாமல் இருந்து இருக்கலாம், ஆனால், சந்ததிகள் வழியே யூத மதமாக இருக்க வேண்டும்.

அதே போல யூத  (இன) அடியும் இருக்க வேண்டும். 

திருமணத்தில் மாத்திரம் வேறு இனத்தவர் (மதத்தவர்) யூத மதத்துக்கு மாறி, யூதர் ஆகலாம், அதிலும் பெரிய சச்சரவு, பிரச்சனைகள்  இருக்கிறது.

ஏனெனில், dna ஐ  மட்டும் வைத்து யூதர் என்று சொல்ல முடியாது, ஏனெனில் இந்த dna வேறு (மத்தியகிழக்கு) மக்களிலும் இருக்கிறது (அது வேறு ஒரு பிரச்சனைக்கும் வழிபோடுகிறது, இப்போது யூதர் என்பவர்கள்  தான் உண்மையில் முதிச யூதரின் சந்ததியா என்று.).  

யூதர் என்பவர் யார் என்ற (இஸ்ரேல் இன்) இறுக்கமான நிபந்தனைகளால் Ethno-religious (உண்மையில் religio-ethnic என்று, ஆனால் அப்படியான சொல்லாடல் இல்லை) பூமியாக, அரசாக இஸ்ரேல் இருக்கிறது.

(உ.ம்.இஸ்ரேல் இல் இருக்கும் பலஸ்தீனியர் இஸ்ரேல் இன் பிரசைகள், அனல் இஸ்ரயேலியர் அல்ல; அதனால் அவர்களை ஒடுக்க வேறுபாடு காட்டப்படுவது சட்டவிரோதம் அல்ல. ஆம், இஸ்ரேல் இன்  சட்டமன்றம் அதையே செய்யும். சொறிசிங்களம் போல, பௌத்தம் எனும் போது மறுவாதத்துக்கு இடம் இல்லை). 

(மறுவளமாக, இஸ்ரேல் இன் அமைப்பு வார்த்தைகளால் (செய்யப்பட்டு இருப்பது) சரி என்றால், சொறி சிங்களத்தின் அமைப்பும் சரி என்றாகிறது).  

எனவே அவர் சொல்லுது சரி (அவர்  எந்த துறையாக இருந்தாலும்).

(சைவத்திலும் இந்த தன்மை இருக்கிறது.  ஏனெனில், முன்பு சொல்லி இருக்கிறேன் சைவம் (மற்றும் யூதம், வேறு  மதங்களும் இருக்கலாம்) இரத்த சந்ததி  (இன) மதங்கள். இரு மதங்களும் தேடிச் சென்று மாற்றுவதில்லை என்பதும்.). 

கரீபியனில் இருக்கும் அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் (சஞ்சிக்கூலிகளாக சென்றவர்களின் சந்ததி) மீண்டும் தமிழர் என அறிய (உணர) தலைப்படுவது சைவசமயத்தை அவர்கள் விடாதபடியால், அல்லது சந்ததியில் சைவமாக இருந்த படியால். அனால் தமிழை விட்டு விட்டார்கள்.  

சுருக்கமாக, மதம்,  இன அடையாளம் (மறைக்கப்பட்டாலும்) துளிர்ப்பதற்கு ஊற்றாக இருக்கிறது). 

Islamic ... என்பது சமய அடிப்படையில் மாத்திரம் சகோதரத்துவம் (இஸ்லாமுமுக்கு உடனடியாக மாறி  இஸ்லாமியர் ஆகலாம்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யூதர்கள் தொடர்பாக கருத்துரைக்கும் ஒருவரும் இந்துத்துவம் தொடர்பாக வாய் திறக்கவில்லையே. ஏன்? 

இந்துத்துவா தொடர்பாக இறாஜன் குறையின் கருத்துக்கள் சரியானவையா? 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.