Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இஸ்‌ரேலின் அழிச்சாட்டியம்

spacer.png
இஸ்‌ரேலின் அழிச்சாட்டியம்: உலக ஒழுங்கு மாற்றங்களை கவனமாக பயன்படுத்த வேண்டிய முஸ்லிம் உலகு 

மொஹமட் பாதுஷா

இன்னும் ஒரு உலக மகா யுத்தம் வந்து விடுமோ அல்லது அதற்குச் சமமான மனிதப் பேரவலம் இடம்பெற்று விடுமோ என்ற அச்சமும் கவலையும் உலக மக்களை ஆட்கொண்டுள்ளது. அகன்ற பலஸ்தீனத்தில் ஒவ்வொரு நொடியும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற உயிரிழப்புக்களும் இன அழிப்பும் அந்தக் கவலையை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

பலஸ்தீன மண்ணை இஸ்‌ரேல் 75 வருடமாக ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமன்றி அதன் எல்லைகளை அகலமாக்கி இன்னுமின்னும் பலஸ்தீன நிலத்தைச் சூறையாடி வருகின்றது என்பது உலகுக்கே தெரியும். இருப்பினும், இஸ்‌ரேலின் மீது இம்முறை ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் போரைத் தூண்டும் ஒரு நடவடிக்கை என்ற அடிப்படையில் உலகம் அதனைச் சரி காணவில்லை. 

ஆனால், அதற்குப் பதிலடியாக, இன்று வரை சியோனிஸ இஸ்‌ரேல் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது மேற்கொண்டு வருகின்ற  அழிச்சாட்டியத்தை, அதே உலக மக்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றது. குறிப்பாக, குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் துண்டித்து, தொடர்ச்சியாக பொது மக்கள் மீது இஸ்‌ரேல் படைகள் நடத்துகின்ற ஈவிரக்கமற்ற குண்டு மழை இஸ்‌ரேலை உலகின் பொது எதிரியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றது எனலாம்.

ஹமாஸ் இயக்கத்திற்கு 2006 தேர்தலில் கணிசமான பலஸ்தீனர்கள் வாக்களித்திருந்தனர். இருப்பினும், ஹமாஸ் செய்கின்ற எல்லா காரியங்களையும் சரி என்றோ, அவர்கள் போர் விதிகளைச் சரிவரக் கடைப்பிடிக்கின்றார்கள் என்றோ கூற முடியாது. இஸ்‌ரேலில் இறந்த அப்பாவி பொது மக்களது உயிர்களும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பொதுவான அபிப்பிராமயாகும். 

ஆயினும், அது ஒரு பயங்கரவாத இயக்கமென்று கூறுபவர்கள், பிரச்சினையின் அடிவேரை விளங்க வேண்டும். ஹமாஸ் மட்டுமன்றி, பலஸ்தீன விடுதலை இயக்கம் போல பல போராட்ட குழுக்கள் உருவாகுவதற்கு  இஸ்‌ரேலின் ஆக்கிரமிப்பே காரணம் என்பதையும் விளங்கிக் கொள்வது கடினமன்று. 
ஒப்பீட்டளவில் ஒரு ஆயுத இயக்கத்தை விட, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கமான இஸ்‌ரேலின் அரசு மிகப் பொறுப்புடனும் சர்வதேச விதிமுறைகளையும் கடைப்பிடித்து போரை நடத்த வேண்டும் என்பது  இங்கு முக்கியமானது. 

ஆனால், அதனையெல்லாம் பொருட்படுத்தாது, வெண் பொஸ்பரஸ் குண்டுகளைப் பாவித்தமை, அடிப்படை வசதிகளைத் துண்டித்தமை, பொது மக்கள் வசிக்கின்ற இருப்பிடங்கள் மீது தெளிவாகக் குண்டு வீசுகின்றமை போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளின் மூலம் இஸ்‌ரேல் அந்த சட்ட விதிகளை மீறியுள்ளது. 

குறிப்பாக, உலகுக்கே நீதி, நியாயம் போதிக்கின்ற மேற்குலக நாடுகளின் கூட்டாளியும், உலக பொலிஸாரான அமெரிக்காவின் நெருங்கிய சகாவாகவும் இருக்கின்ற இஸ்‌ரேலின் மெதன்யாஹூ அரசாங்கம், அகன்ற பலஸ்தீனத்தில் உள்ள வைத்தியசாலை மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி 500இற்கும் மேற்பட்டோரைக் கொன்றதன் மூலம் பகிரங்கமாகவே மிகப் பெரும் போர்க் குற்றத்தை நிகழ்த்தியுள்ளது. 

ஆரம்பத்தில் இருந்தே இஸ்‌ரேல் மேற்கொண்ட அழிச்சாட்டியமும், சர்வதேச போர் மற்றும் மனிதாபிமான விதிகளை மீறும் விதத்திலான சண்டித்தனமான போக்கும், பலஸ்தீன மக்களுக்காக உலகின் பெரும்பாலான நாடுகளும், மக்களும் குரல்கொடுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம். 

அரபு நாடுகள் ஒன்றுபட்டிருக்கின்றன. மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகளுக்குள்ளும் ஒரு அரசியல் இருக்கின்றது. பலஸ்தீனத்தை ஜோர்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் வரலாற்றில் வஞ்சித்த கதைகளும் உள்ளன. எது எப்படியிருப்பினும், முஸ்லிம்களின் புனிதபூமி என்ற அடிப்படையில் பலஸ்தீனத்தை காப்பாற்றியேயாக வேண்டியது அவர்களின் மதக் கடப்பாடாகவும் உள்ளது. 

இந்தப் பின்னணியில் அரபு நாடுகளின் அமைப்புக்கள் காட்டமான அறிக்கையை விடுத்துள்ளன. இஸ்‌ரேல் மேற்கொள்வது தெளிவான இன அழிப்பு, ஒரு இனத்தை, மதத்தைத் துடைத்தெறியும் ஆக்கிரமிப்பு, பகிரங்கமான போர்க் குற்றம் என நேரிடையாகவே அரபு நாடுகள் சொல்லியுள்ளன. 

மறுபுறுத்தில் சீனா, ரஷ்யா போன்ற பல முக்கிய நாடுகள் பலஸ்தீன மக்களின் பக்கம் நிற்கின்றன. அதுமட்டுமன்றி, இஸ்‌ரேலிற்கு சார்பான நிலைப்பாடுகளை அறிவித்த பல மேற்குலக நாடுகளின் பாராளுமன்றங்களில் உள்ள கணிசமான உறுப்பினர்கள் பகிரங்கமாகவே பலஸ்தீனத்திற்கு ஆதரவையும் இஸ்‌ரேலிற்கு எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

சமகாலத்தில், அமெரிக்கா, பிரித்தானியா என இஸ்‌ரேலின் கூட்டாளி நாடுகளிலும் கூட பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மிக முக்கியமாக இஸ்‌ரேல் உட்பட பல நாடுகளில் உள்ள முற்போக்கான யூதர்களே பலஸ்தீன மக்கள் விடயத்தில் மனிதாபிமானம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வீதிக்கு இறங்கி போராடுவதை காண முடிகின்றது. 
இது ஒரு முக்கிய மாற்றமாகும். முஸ்லிம்கள் பற்றியும் பலஸ்தீனம் பற்றியும் இவ்வளவு காலமும் இருந்த தப்பபிப்பிராயங்கள் விலகத் தொடங்கியுள்ளன. அத்துடன், உலக பொலிஸார், நாட்டாமைகள், நீதியின் காவலர்களின் உண்மை முகம் என்ன என்பதையும், பிணத்தின் மேல் அரசியல் செய்யும் மனநிலையையும் இந்த யுத்தம் வெளிப்படுத்தியிருக்கின்றது. 

இந்தக் காரணத்தினாலேயே அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தமது நிலைப்பாட்டைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டுள்ளன எனலாம். 
ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த மோடி அரசு, அரபு நாடுகளின் நிலைப்பாடு மற்றும் உலக போக்கை அவதானித்து விட்டு நிலைப்பாட்டைச் சற்று மாற்றியுள்ளது. 

கொவிட் வைரஸ் தொற்றுக்குப் பிறகு உலக ஒழுங்கு சற்று மாறத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவும்டொலரும்தான் இவ்வுலக நடத்தையை தீர்மானிக்கின்றன என்ற போக்கை மாற்ற ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் முயற்சித்தன. இந்தியா போன்றனவும் துணைநின்றன. 

அதன் பிறகு, அமெரிக்காவின் துணையுடன் இடம்பெற்ற மற்றுமொரு யுத்தமான உக்ரேன் - ரஷ்யா போரிலும் அமெரிக்கா நினைத்த வெற்றி கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியான சூழலில், பெரும்பாலான நாடுகள் எல்லாம் நீதிக்காக, மனிதாபிமானத்திற்காகக் குரல் கொடுக்கின்ற போது, அந்த பொது ஒழுங்கிற்கு வெளியே தாம் நின்றால் உலகின் தலைமை நாட்டாமை என்ற பதவி பறிபோய்விடும் என்பதால், சுதாரித்துக் கொண்டு ‘பலஸ்தீனம் விடுவிக்கப்பட வேண்டும்’  என அறிக்கை விட்டதன் மூலம் நானும் உங்களோடுதான் எனக் காட்டியுள்ளது.

புலஸ்தீன போர் இன்றோ நாளையோ தணியலாம். ஆனால், முன் கணிக்கப்பட்ட இஸ்லாமிய வரலாற்றின் படி, உலகின் கடைசிக்கால யுத்தம் கூட அந்த மண்ணில் இடம்பெறும் என்பதை முன்னைய பத்தியிலேயே குறிப்பிட்டிருந்தோம். 

எது எவ்வாறிருப்பினும், உலகளவில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. கண்முன்னே அநியாயம் நடக்கின்ற போது  கண்மூடித்தனமாகத் தவறுகளை ஆதரிக்கும் போக்கில் மாறுதல் தெரிகின்றது. அரசாங்கங்களின் நிலைப்பாடுகளை மீறி, இன, மத, நிற பேதங்களைக் கடந்து நியாயத்திற்காகவும் பேசுகின்ற மக்கள் பொது வெளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். 

நவீன ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வருகை இதற்கு முக்கிய காரணமாகியுள்ளது எனக் கூறலாம். இதற்கு முன்னைய காலத்தில் இதுபோன்ற இன அழிப்புக்கள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள், அழிச்சாட்டியங்கள் இடம்பெற்ற போது மேற்குலகம் தனது ஊடகங்கள் ஊடாக தமக்கு விரும்பியவாறு அவற்றைக் காட்சிப்படுத்தி வந்தது. அவர்கள் சொல்வதுதான் செய்தி என்று ஒரு நிலையிருந்தது. ஒரு சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை அவர்களது ஊடகங்கள் சொல்லும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உலக மக்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறியிருக்கின்றது. 

பாலஸ்தீனத்தில் இப்போது என்ன நடக்கின்றது என்பதை நேரடியாகவும் ஒளிப்படமாகவும் பல்வேறு கோணங்களில் இருந்து அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உலகின் கடைநிலை மனிதனுக்கும் கிடைத்துள்ளது. இந்த மாற்றம் அமெரிக்க, இஸ்‌ரேல் போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாகியுள்ளதை பலஸ்தீன யுத்தத்திலும் காண்கின்றோம். 

யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அகன்ற பலஸ்தீனத்தை இஸ்‌ரேல் ஆக்கிரமித்துக் கொண்டு அங்குள்ள மக்கள் மீது குண்டுமழை பொழிகின்றது என்ற செய்தி, எவ்வித ஒளிவுமறைவுமின்றி உலக மக்களுக்குக் கிடைக்கின்றது.

ஆக, பலஸ்தீன விவகாரத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு, மேற்குலகின் ஊடகப் பரப்புரைத் தோல்வியும் ஒரு காரணம் எனலாம். 
எனவே, இந்த மாற்றத்தை, நீதியின் பக்கம் மக்கள் நிற்கின்ற சந்தர்ப்பத்தை முஸ்லிம் நாடுகளும் நீதிக்காக, மனித உரிமைக்காகப் போராடுகின்ற அமைப்புக்களும் சரிவரக் கையாள வேண்டும். நாட்பட்ட பலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு இந்த நல்ல சமிக்கையை மிகக் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

சமகாலத்தில், இலங்கை போன்று சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற நாடுகளில் நிலைமைகளைக் கவனமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது. ஆயினும், அளவுகடந்த உணர்வு வெளிப்பாடும், விவாதங்களும் பரஸ்பர அறிக்கை விடுதலும் தவிர்க்கப்படுதல் வேண்டும். 
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இஸ்-ரேலின்-அழிச்சாட்டியம்/91-326749

Posted
7 hours ago, கிருபன் said:

 


ஒப்பீட்டளவில் ஒரு ஆயுத இயக்கத்தை விட, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கமான இஸ்‌ரேலின் அரசு மிகப் பொறுப்புடனும் சர்வதேச விதிமுறைகளையும் கடைப்பிடித்து போரை நடத்த வேண்டும் என்பது  இங்கு முக்கியமானது. 

ஆனால், அதனையெல்லாம் பொருட்படுத்தாது, வெண் பொஸ்பரஸ் குண்டுகளைப் பாவித்தமை, அடிப்படை வசதிகளைத் துண்டித்தமை, பொது மக்கள் வசிக்கின்ற இருப்பிடங்கள் மீது தெளிவாகக் குண்டு வீசுகின்றமை போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளின் மூலம் இஸ்‌ரேல் அந்த சட்ட விதிகளை மீறியுள்ளது. 

//www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இஸ்-ரேலின்-அழிச்சாட்டியம்/91-326749

மொஹமட் பாதுஷா 2009 தொடக்க மாதங்களில் கள்ள நித்தா கொண்டு இருந்திருப்பார் என நம்புகின்றேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, நிழலி said:

மொஹமட் பாதுஷா 2009 தொடக்க மாதங்களில் கள்ள நித்தா கொண்டு இருந்திருப்பார் என நம்புகின்றேன்.

இலங்கை முஸ்லீம்களை பொறுத்தமாட்டில் தமிழர்களுக்கு வந்தா தக்காளி சட்டினி முஸ்லீம்களுக்கு வந்தா ரத்தம்.. ஆனால் இலங்கை தமிழர்கள் நாம் அப்படி அல்ல.. எங்களுக்கு மதம் இனம் மொழி எல்லாம் இல்லை.. அவர்கள் யாராயிருந்தாலும் நாம் எப்போதும் ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நின்றிருக்கிறோம் இனியும் நிற்போம்… பால்ஸ்த்தீன சகோதரர்களின் கண்ணீரில் நாம் எப்பொழுதும் எம்மை பிரித்து பார்த்ததில்லை..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

பாலஸ்தீனப் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் இஸ்ரேலின் பக்கமே. கமாஸின்ர வாசனையே இருக்கக் கூடாது. இஸ்ரேல் விரைவில் இதை முடித்திட வேண்டும் என்று இறைவனிடம் தொழுகிறேன்.🤪

 

 

ஈவிரக்கமில்லாமல் 1400 அப்பாவி இஸ்ரேல் பொதுமக்களை கமாஸ் பயங்கரவாதம் கொன்ற போது கொண்டாடிய முஸ்லிம்கள் தமக்கு அதே மாதிரி ஆனால், அதை விட பன்மடங்கு வீரியமாக விழும் போது குய்யோ முறையோ என்று கதறுவது வேடிக்கையாக உள்ளது. 

தம் மதத்தவர் கொன்றதைப் பற்றியெல்லாம் பற்றி தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் பேசுவதில்லை. ஆனால், தம் மதத்திற்கு அதே மாதிரி விழுந்தால் ஐயோ அம்மா என்டு கத்த குழற வேண்டியது. 

உங்களுக்கு வந்தால் அரத்தம், இஸ்ரேலியர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா... ****

 


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/10/2023 at 15:51, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் இலங்கை தமிழர்கள் நாம் அப்படி அல்ல.. எங்களுக்கு மதம் இனம் மொழி எல்லாம் இல்லை.. அவர்கள் யாராயிருந்தாலும் நாம் எப்போதும் ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நின்றிருக்கிறோம் இனியும் நிற்போம்…

இதனால் தேவையில்லாமல் எதிரிகளை சம்பாதித்தும் இருக்கிறோம்.

எங்களுக்கு எங்கள் இன சுய நலன் முக்கியம் இல்லை.

பழைய விஜயகாந்த், சரத்குமார் படங்களில் வரும் கிராமத்து நாட்டாண்மைகள் போல “நீதிடா, நேர்மைடா, நியாயம்டா” என கலர் காட்டுவதுதான் எமக்கு முக்கியம்.

எவருக்கு எல்லாம் நாம் குரல் கொடுத்தோமோ அவர்கள் எல்லாம் எமக்கு சொருகிவிட்டு (ஆப்பை) போனதுதான் வரலாறு.

இனியும் சொருகுவார்கள்…..

On 27/10/2023 at 15:51, பாலபத்ர ஓணாண்டி said:

இனியும் நிற்போம்…

குனிந்து என்ற வார்த்தை விடுபட்டு விட்டது என நினைக்கிறேன்.

On 27/10/2023 at 15:51, பாலபத்ர ஓணாண்டி said:

பால்ஸ்த்தீன சகோதரர்களின் கண்ணீரில் நாம் எப்பொழுதும் எம்மை பிரித்து பார்த்ததில்லை..

என்ன ப்ரோ இதெல்லாம்.

அங்கே அப்பாவிகள் கொலையாகிறார்கள். மனம் பதைக்கிறது ? ஆம். நடக்கும் கொடுமையை தடுக்க நினைக்கிறோம்? ஆம்.

ஆனால் பழைய தமிழரசு கட்சி அரசியல்வாதிகள் போல ஏன் இந்த ஓவர் பில்டப்பு?

முள்ளிவாய்க்காலின் பின் மகிந்தவை ஆரத்தழுவி வீதிக்கு பெயரும் வைத்தவர்கள் எம் சகோதரரா?

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
8 minutes ago, goshan_che said:

முள்ளிவாய்க்காலின் பின் மகிந்தவை ஆரத்தழுவி வீதிக்கு பெயரும் வைத்தவர்கள் எம் சகோதரரா?

ரமலாவிலை (மேற்குக்கரை) இருக்கிற அந்தப் பெயர்ப்பலகை எப்ப சிதறுது என்று காத்திருக்கிறன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, நன்னிச் சோழன் said:

ரமலாவிலை (மேற்குக்கரை) இருக்கிற அந்தப் பெயர்ப்பலகை எப்ப சிதறுது என்று காத்திருக்கிறன்.

 

இஸ்ரேல் பிடித்தாலும் நீக்க மாட்டார்கள்.

இதுதான் சிங்களவரின் கெட்டித்தனம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 minute ago, goshan_che said:

இஸ்ரேல் பிடித்தாலும் நீக்க மாட்டார்கள்.

இதுதான் சிங்களவரின் கெட்டித்தனம்.

அதுவும் உண்மைதான். 

ஆனால் மேற்குக்கரையிலை படைக்கலன்கள் கொண்டு சமரிடும் போது எங்கேனும் அங்கினேக்கிலை பட்டுது என்டால் நல்லாயிருக்கும். பாப்பம்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பலஸ்தீன விடுதலைப் போராட்டம் ஹாமாஸூக்கு முன்னரே தொடங்கிய ஒன்று. அன்றைய காலக்கட்டங்களில் குறிப்பாக ஜே ஆரின் ..பிரேமதாசாவின்.. ஆட்சிக்காலங்களில்.... சந்திரிக்காவின் ஆட்சிக்காலங்களில் சொறீலங்கா இஸ்ரேலின் இராணுவ உதவிகளை பெற்று தமிழர்களை இன அழிப்புச் செய்து கொண்டிருந்த போது.. சொறீலங்கா அமைச்சரவையில் இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள்.. யாருமே.. பலஸ்தீன மக்களின் நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை. மாறாக தமிழர்களை இனப்படுகொலை செய்ய.. இஸ்ரேலிடம் மடிப்பிச்சை கேட்ட சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பக்கமே நின்றனர்.

அத்தகைய பின்னணி கொண்ட... சொறீலங்கா முஸ்லிம்களுக்கும் அவர்களின் இஸ்லாமிய மத அடிப்படைவாத வெறித்தனத்திற்கும்.. பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடிக்கக் கூட அருகதையில்லை என்பது தான் யதார்த்தமாகும். 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழத்தவர்களின் வலியைத் தமிழீழ மற்றும் சிறிலங்காவினது சோனகர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் சிங்களப் படைகளோடு நின்று தமிழின அழிப்பை மேற்கொண்டார்கள். இன்றும் அதன் தொடர்ச்சியைப் பேணுகின்றார்கள் என்ற அடிப்படையில் இன்னுமொரு நாட்டில் சோனகர்கள் கொல்லப்படலாம் அல்லது அழிக்கப்படலாம் என்ற நோக்குநிலை ஏன்? இந்தப் பார்வை சரியானதா? இதற்கான ஏதுநிலையானது எமது அழிவின், எம்மை அழித்தமையின், எம்மை அழித்தவருகின்றனர் போன்றனவற்றின் ஊடான பார்வையின் ஊடாக நகரும் போக்கினைத் தமிழர் கைக்கொள்வதால் ஏதாவது நன்மைகள் விளையுமா? அல்லது சோனகரல்லாத நாடுகளின் ஆதரவு எமக்குக் கிடைக்குமா? இவை இரண்டிலும் ஒன்றும் நிகழப்போவதில்லை. எந்த நன்மையுமற்ற நிலைப்பாட்டைவிட ஒரு நாகரீக உலகில் மனித அழிவுக்கெதிரான நிலைப்பாட்டை கைக்கொள்வது நியாயமற்றதா? 

உலகம் நீதியினச்சில் சூழலவில்லை என்பதையும், உலக மையநீரோட்டதின் போக்கினையும்  தேசியத் தலைவரவர்கள் 2008ஆம் ஆண்டின் மாவீரர் தின உரையிலே  மிகத்தெளிவாகச் சுட்டியுள்ளார். 

எமது தேவை எமது சுயநிர்ணய உரிமைக்கான வழியைத் தேடுவது. போர்களின் சார்புநிலை எமக்கான சுயநிர்ணய உரிமைப்போருக்கு உதவப்போவதில்லை. நாம் வென்றெடுக்க வேண்டிய சக்திகள் எமக்கு மிக அருகிலேயே இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு பயணித்து எதையும் அடைந்தவிட முடியாது. நாம் மேற்கிலே அனைத்து சௌகரியங்களோடும் பாதுகாப்போடும் இருக்கின்றோம். ஆனால், தாயகத்திலே தினமும் அவலத்துள் வாடும் உறவுகளை மனம்கொள்வோமாயின், அவர்களது அவலங்களை வெளிக்கொணரவேண்டிய வரலாற்றுக் கடமை எம்முன்னே உள்ளதை நாம் சிந்திக்கவேண்டியவர்களாக உள்ளோம்.
நன்றி 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, nochchi said:

இன்னுமொரு நாட்டில் சோனகர்கள் கொல்லப்படலாம் அல்லது அழிக்கப்படலாம் என்ற நோக்குநிலை ஏன்? இந்தப் பார்வை சரியானதா? இதற்கான ஏதுநிலையானது எமது அழிவின், எம்மை அழித்தமையின், எம்மை அழித்தவருகின்றனர் போன்றனவற்றின் ஊடான பார்வையின் ஊடாக நகரும் போக்கினைத் தமிழர் கைக்கொள்வதால் ஏதாவது நன்மைகள் விளையுமா?

பலஸ்தீனியர் தனியே இன்னொரு நாட்டின் முஸ்லிம்கள் அல்ல (சோனகர் இலங்கையில் இருப்போர் மட்டுமே). 

இலங்கையின் ஆத்மாத்ம நண்பர்கள்.

ஈழதமிழர் எவரையும் கொல்லப்படாலாம் என்ற நிலை எடுக்கத்தேவையில்லை.

ஆனால் சும்மா பைத்தியகாரத்தனமாக பலன்தீனருக்காக அதுவும் அடிப்படைவாத ஹமாசை ஆதரிக்க தேவையில்லை.

ஏன் என்றால் நாளைக்கே நமக்கு இன்னொரு அநியாயம் நடந்தாலும் இவர்கள் எவரும் ஒரு நாளும் எம்மோடு நிற்க போவதில்லை.

இதனால்தான் சங்கிகள் இஸ்ரேலுக்கு வால் பிடிக்கிறார்கள்.

குறைந்த பட்சம் சங்கிகளுக்கு இருக்கும் சமயோசிதம் கூட ஈழத்தமிழனுக்கு இல்லை.

37 minutes ago, nochchi said:

நாம் வென்றெடுக்க வேண்டிய சக்திகள் எமக்கு மிக அருகிலேயே இருக்கிறார்கள்

மிக அருகில் அல்ல. அவர்கள் நாட்டில்தான் நாம் புலம்பெயர் சமூகமாக இருக்கிறோம். ஆகவே அவர்களை வென்றெடுக்க நியாய தர்மத்தை தூக்கி போட்டு விட்டு, அவர்களோடு அணி சேர்தல் அவசியமாகிறது.

Posted

10 தமிழர்களை கொன்றால் ஒரு புலியாவது அதில் இருப்பான் என்று சிறிலங்கா அரசுக்கு திருவாய் மலர்ந்தருளியது மொசாட். சில காலம் மொசாட் சிறிலங்காவில் தங்கி இருந்து வேலை செய்தார்கள் என்று கூறுவோரும் உளர்.( கோட்டேல் ஒபரோயில்  தங்கி இருந்ததாக  கூறுவர்). ஆகவே இஸ்ரேலும் தேவை இல்லாத ஆணி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, nunavilan said:

10 தமிழர்களை கொன்றால் ஒரு புலியாவது அதில் இருப்பான் என்று சிறிலங்கா அரசுக்கு திருவாய் மலர்ந்தருளியது மொசாட்

அதை அருகில் இருந்து கேட்டவர் நுணா🤣

6 minutes ago, nunavilan said:

ஆகவே இஸ்ரேலும் தேவை இல்லாத ஆணி.

இஸ்ரேல் தனியே என்றால் தேவையில்லாத ஆணி.

ஆனால் அவர்கள் இருக்கும் அணி - எமக்கு மிக தேவையான ஆணி.

பிகு

இஸ்ரேல் இலங்கைக்கு ஆயுத, போர் நகர்வுகளை ஒரு வியாபாரமாக வித்தது. நாளைக்கே அவர்களின் நலனுக்கு நாம் தேவை என்றால் எம்மிடமும் அணைவார்கள்.

ஆனால் பலஸ்தீன் இலங்கைக்கு அரசியல் ரீதியாக கவர் கொடுத்தது. நாளைக்கே எமது ஊரில் எந்த இஸ்லாமிய நாட்டுக்கு ஒரு வகிபாகம் வந்தாலும் - அந்த நாடு எம் நண்பராக இராது (இலங்கை சோனகரையே முன்னிறுத்தும்).

Posted
1 minute ago, goshan_che said:

அதை அருகில் இருந்து கேட்டவர் நுணா🤣

எப்படி பக்கம் பக்கமாக எழுதுகிறீர்கள் வரலாறு தெரியாமல் என ஆச்சரியமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nunavilan said:

எப்படி பக்கம் பக்கமாக எழுதுகிறீர்கள் வரலாறு தெரியாமல் என ஆச்சரியமாக உள்ளது.

சரி எனக்கு தெரியவில்லை. பெரியர் நீங்கள் நம்பக தகுந்த ஆதாரத்தை தாருங்களேன் (வாய் மொழி கதைகளை, யூடியூப் குப்பைகளை அல்ல). 

Posted
1 minute ago, goshan_che said:

சரி எனக்கு தெரியவில்லை. பெரியர் நீங்கள் நம்பக தகுந்த ஆதாரத்தை தாருங்களேன் (வாய் மொழி கதைகளை, யூடியூப் குப்பைகளை அல்ல). 

Twiter     குப்பைகள் ஓகேயா??🙃

ஆதாரம் தேடி தருகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, nunavilan said:

Twiter     குப்பைகள் ஓகேயா??🙃

ஆதாரம் தேடி தருகிறேன்.

 

டிவிட்டர் இல்லை எக்ஸ் (அப்டேட் ஆகுங்கோ பெரியவரே).

டிவிட்டர் / எக்ஸ் கணக்குகள் சொல்வதை எந்த தர்க்கத்திலும் நான் ஆதாரம் என காட்டுவதில்லை. அவை பகிரப்படுவது, செய்திகளை விரைந்து கொடுக்கும் நோக்கில்.

தேடித் தருவதற்கு அட்வான்ஸ் நன்றி.

Edited by goshan_che
Posted

Sri Lanka Presses Military Drive on Rebels

 
 
 
By William Claiborne

The government has begun a special military operation and is building an extensive intelligence network to help counter what it sees as a new attempt by Tamil separatists in the north to provoke massive anti-Tamil riots.

The operation includes a combined Army-Navy offensive and the intelligence network is being developed with the help of a team of experts from the Israeli domestic intelligence agency, national security minister Lalith Athulathmudali said in an interview here.

Athulathmudali said the new military action was necessary to "break the back" of terrorism and a newly launched offensive by the separatist Tamil guerrillas in the northern Sri Lankan province of Jaffna. He said the guerrillas hoped to trigger rioting against the nation's Tamils, who are mostly Hindu, by the Buddhist majority Sinhalese in the southern part of the country.

Hundreds were killed in ethnic and sectarian violence in July 1983. Renewed riots, said Athulathmudali, would force the small Sri Lankan Army to redeploy half of its troops here and leave the northern provinces vulnerable to a takeover by the insurgents.

"No country in the world has succeeded by being soft on terrorism," the minister said. When asked if security forces would get tougher in the crackdown on guerrillas, he replied, "Of course, as tough as we can get."

Athulathmudali said the combined military operation, which began Saturday after a guerrilla attack on a naval patrol vessel off the northern peninsula, will be made more effective with the antiterrorist intelligence network being put together with the help agents from Israel's internal security agency, Shin Bet. The agency has gained experience in antiterrorist operations in the Israeli-occupied West Bank and southern Lebanon.

He said the Shin Bet agents are assisting the Sri Lankans in exchange for allowing Israel to set up an interests section in the U.S. Embassy in the Sri Lankan capital. The step is seen as a move by Israel to reestablish diplomatic relations with Sri Lanka. This country broke the ties in 1970 to gain economic aid from Arab nations.

Israel's external intelligence agency, the Mossad, had been widely reported to be advising the Sri Lankan security forces, but Athulathamudali said the assistance was coming from Shin Bet agents instead. "We felt, faced with the situation in Jaffna, we had to get people experienced in this type of thing," the security minister said. He added, "According to our people, they've never had such good training."

The head of the Israeli interests section said tonight that no Mossad agents are in Sri Lanka but that he did not know for certain if Shin Bet agents had been invited here.

"It may be, it's quite possible that I don't know about it, but I don't think so," said David Matnai, the interests section head.

Matnai added, "I am anticipating this clear request. If it comes, it will be considered favorably. But we will not be able to do their work for them. We can advise, improve their system, but it's their work."

Despite Matnai's ambiguity about the presence of Israeli agents, Athulathamudali insisted some Shin Bet advisers were already at work here. Another senior Sri Lankan government source, who asked not to be identified, said the advisers included two intelligence experts and two bomb experts.

The intensified terrorist crackdown by the Army and Navy in the north was ordered after two Navy seamen were killed when their patrol boat was ambushed Saturday off the northern fishing port village of Valvetiturrai. It is a traditional jumping-off point for Tamil guerrillas who ply the narrow Palk Strait between Jaffna province and the south Indian state of Tamil Nadu, smuggling fugitives and weapons, according to the government. Sri Lanka's 2.6 million Tamils share common language and ancestry with the 45 million Tamils of south India.

[Defending the state of emergency imposed on the country since May 1983 and emergency legislation that would affect Sri Lankan law and trial procedures, President Junius Jayewardene said in Colombo that he was emulating Abraham Lincoln, The Associated Press reported. Jayewardene said the assassinated U.S. president, "in order to preserve the union of U.S.A., broke laws, violated the Constitution, usurped arbitrary powers and trampled individual liberties."]

Since the Saturday clash, at least six Sri Lankan soldiers and policemen have been killed in clashes in the northern peninsula. Estimates of the number of guerrillas or civilians killed this week range from less than 50 cited by Athulathamudali to "closer to 100" estimated by a high government official, who spoke on the condition he not be identified.

Leaders of the six major guerrilla groups, who collectively are referred to as the Tamil Tigers, have claimed several hundred civilians were killed in reprisal attacks, many of them when the Army and Navy shelled Valvetiturrai after the ambush of the Navy boat Saturday. The Tamil separatists also allege that at least 2,500 persons have been left homeless in the Army sweep, although the government says the estimate is exaggerated.

The guerrillas have conducted at least eight antigovernment raids since Saturday, and Athulathamudali conceded that their stridency has increased as they have gained popular support on the peninsula.

"No guerrilla movement can survive for long unless it has the support of the population, or the population is cowed by them," he said, adding that both apply to Jaffna.

He said Indian-made explosives have been found in the north, and that guerrillas are trained in camps in southern India by Sri Lankan Tamils and retired Indian Army officers. "Without Tamil Nadu, they would have laid down their arms," Athulathamudali said in the interview. The security minister said his forces intercepted instructions, issued from guerrilla headquarters in southern India, to attempt to trigger a Sinhalese backlash in the south and also to create general unrest during a meeting of the U.N. Commission on Human Rights in Geneva.

Athulathamudali charged that Tamil groups based in the United States, where there are tens of thousands of Tamil immigrants, have been collecting money, ostensibly for humanitarian purposes, and sending it to the guerrillas to purchase guns and explosives. "American money is being used to kill Sri Lankans," he said.

Of Indian complicity in the insurgency, Athulathamudali said, "I don't think a friendly government can allow people like that to cause trouble for another friendly government. It has become clear that groups in Tamil Nadu are plotting to overthrow the Sri Lankan government. Now is the time for India to act on the facts that have become clear."

Athulathamudali denied persistent reports by Tamils here and in south India that Army officers have lost control of their troops and that mass reprisal killings have been commonplace. He said harsh disciplinary action was taken against soldiers who staged unauthorized reprisal attacks in July 1983.

But government sources here said there have been instances where some soldiers among the more than 3,000 security forces in the northern peninsula have gone out of control following terrorist deaths in their ranks. In one incident, six civilians were murdered in a restaurant after a Sinhalese police superintendent was killed by a bomb in his office.

"They [the soldiers] go out of control when they are attacked," the official said, adding that morale was low in some units.

The official said there has been no anti-Tamil backlash by Sinhalese in the south this summer because the Sinhalese realize how badly those riots hurt the island's economy last year, when unemployment increased, there was a 25 percent inflation rate, a 30 percent drop in tourism and a "drying up" of foreign investment.

Of the drop in foreign investment, a mainstay in Sri Lanka's economy, the official said, "If you had money to invest, would you put it here or in Singapore?"

Athulathamudali said that in addition to tightening pressure on Tamil guerrillas and increasing intelligence efficiency with the help of the Israelis, the security forces would arm more Sri Lankans loyal to the government. "The entire population that is opposed to terrorism we will arm to the teeth. Let [the guerrillas] read that. This country is one and nobody will be allowed to divide it," said the Harvard-educated lawyer and onetime president of the prestigious Oxford Union.

https://www.washingtonpost.com/archive/politics/1984/08/10/sri-lanka-presses-military-drive-on-rebels/3e290081-827e-446f-99d0-6b258df36432/

மொசாட், சின் பெட்டின் பிரசன்னம் பற்றி கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

Posted

Israel’s Role in Sri Lanka’s Dirty War

The West slams Pakistan and China for supplying arms used by Sri Lanka in alleged war crimes against Tamils during the civil war but is silent on Israel’s complicity.

Israel’s Role in Sri Lanka’s Dirty War

Sri Lankan ethic Tamil children walk past debris of burnt vehicles devastated allegedly by aerial bombing in the Tamil Tiger controlled no fire zone in Mullivaaykaal, Sri Lanka, Tuesday, May 5, 2009.

Credit: AP Photo

Israeli human rights lawyer Eitay Mack wrote in a recent article in Al Jazeera that Israeli weapons, including surveillance unmanned aerial vehicles (UAVs) and other military equipment, were likely used by the Sri Lankan Army in atrocities against civilians during the decades-long war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The Sri Lankan government, he writes, also purchased combat aircraft and battleships from Israel that were used in the commission of war crimes.

Calling for criminal investigations into the involvement of Israeli companies, officials, and individuals in the war crimes committed during the Sri Lankan civil war, Mack has accused the United Nations and Western countries of failing to hold accountable those responsible for the horrific atrocities committed against Tamil civilians.

Western governments and human rights organizations often criticize China and Pakistan for providing weapons and financial aid that helped the Sri Lankan government defeat the LTTE, a group that was labeled terrorist by several countries including India and the U.S., and which many experts described as unbeatable. However, little attention has been paid to the role the Israelis played in the Sri Lankan civil war.

Israel and Sri Lanka formally established diplomatic relations in 1956 but Sri Lanka broke off ties several times due to lobbying from the Arab world. However, when the Tamil insurgency gathered momentum in the 1980s, cooperation between the Sri Lankan and Israeli governments grew. While military cooperation goes back several decades, it was during the presidency of the right-wing J. R. Jayawardene that Sri Lanka first established links with Israeli intelligence in the early 1980s, Uditha Devapriya, an International Relations scholar and chief analyst at Factum, a Colombo-based think tank, told The Diplomat.

Apparently, Sri Lanka had sought security help from the U.S., Britain and West Germany to improve the “intelligence system and [for] training troops in counterinsurgency.” Their refusal forced Colombo to turn to Israel.

Enjoying this article? Click here to subscribe for full access.

In August 1984, the New York Times reported that Israeli intelligence agents were training their Sri Lankan counterparts. Sri Lanka’s National Security Affairs Minister Lalith Athulathmudali told the Times that “the training programs were aimed at overhauling the organization of intelligence gathering, building an effective information-gathering network and training a paramilitary unit to combat the Tamil insurgents.” Since Sri Lanka had broken diplomatic ties with Israel in 1970, the Jayawardene government had allowed Israel “to maintain a special interests section under the protection of the United States Embassy” from June 1, 1984.

According to Israeli analyst Shlomi Yass, the Sri Lankan Army purchased “advanced night vision and communications technology, artillery coordination systems, and Gabriel sea-to-sea missiles. In addition, it acquired drones and ground stations, flak jackets, ammunition, thousands of Uzi submachine guns and Galil assault weapons, mortars, and 155-mm cannons” from Israel.

However, it was Sri Lanka’s Navy and Air Force that benefitted greatly from Israeli weapons. As early as the 1950s, Sri Lanka bought Miznak and Mivtach naval vessels from Israel. During the war against the LTTE, the Sri Lankan Navy acquired Sa’ar 6-class corvette, Shaldag, Dvora, and Super Dvora vessels from Israel, and these played a decisive role in battles against the Sea Tigers, the LTTE’s naval wing.

As for the Sri Lankan Air Force, it purchased seven Kfir jets in 1995 and eight more in 2000. Aviation Week stated that one of the Kfir squadrons logged more than 2,800 operational flight hours and released over 3,500 tons of bombs.

According to Yass, Israel froze defense exports to Sri Lanka in the mid-2000s, prior to the last phase of the war against the LTTE, because it feared that Iran, which was close to the Mahinda Rajapaksa government, would get its hands on Israeli technology.

The civil war in Sri Lanka came to an end in May 2009.  Since then, the Sri Lankan government has been under immense pressure from the Western powers to bring to justice those involved in alleged war crimes during the final stages of the war.

Human rights organizations continue to exert pressure on Western governments to impose sanctions against Sri Lankan military and political leaders involved in the war. While the ire of these organizations is often directed at China and Pakistan for providing military and financial aid which ensured Sri Lanka achieve its war objectives, the international community has been silent on Israel’s role.

https://thediplomat.com/2023/07/israels-role-in-sri-lankas-dirty-war/

ஈழப்போரில் இஸ்ரேலின் பங்கு பற்றி கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, nunavilan said:

Sri Lanka Presses Military Drive on Rebels

 
 
 
By William Claiborne
August 10, 1984

The government has begun a special military operation and is building an extensive intelligence network to help counter what it sees as a new attempt by Tamil separatists in the north to provoke massive anti-Tamil riots.

The operation includes a combined Army-Navy offensive and the intelligence network is being developed with the help of a team of experts from the Israeli domestic intelligence agency, national security minister Lalith Athulathmudali said in an interview here.

Athulathmudali said the new military action was necessary to "break the back" of terrorism and a newly launched offensive by the separatist Tamil guerrillas in the northern Sri Lankan province of Jaffna. He said the guerrillas hoped to trigger rioting against the nation's Tamils, who are mostly Hindu, by the Buddhist majority Sinhalese in the southern part of the country.

Hundreds were killed in ethnic and sectarian violence in July 1983. Renewed riots, said Athulathmudali, would force the small Sri Lankan Army to redeploy half of its troops here and leave the northern provinces vulnerable to a takeover by the insurgents.

"No country in the world has succeeded by being soft on terrorism," the minister said. When asked if security forces would get tougher in the crackdown on guerrillas, he replied, "Of course, as tough as we can get."

Athulathmudali said the combined military operation, which began Saturday after a guerrilla attack on a naval patrol vessel off the northern peninsula, will be made more effective with the antiterrorist intelligence network being put together with the help agents from Israel's internal security agency, Shin Bet. The agency has gained experience in antiterrorist operations in the Israeli-occupied West Bank and southern Lebanon.

He said the Shin Bet agents are assisting the Sri Lankans in exchange for allowing Israel to set up an interests section in the U.S. Embassy in the Sri Lankan capital. The step is seen as a move by Israel to reestablish diplomatic relations with Sri Lanka. This country broke the ties in 1970 to gain economic aid from Arab nations.

Israel's external intelligence agency, the Mossad, had been widely reported to be advising the Sri Lankan security forces, but Athulathamudali said the assistance was coming from Shin Bet agents instead. "We felt, faced with the situation in Jaffna, we had to get people experienced in this type of thing," the security minister said. He added, "According to our people, they've never had such good training."

The head of the Israeli interests section said tonight that no Mossad agents are in Sri Lanka but that he did not know for certain if Shin Bet agents had been invited here.

"It may be, it's quite possible that I don't know about it, but I don't think so," said David Matnai, the interests section head.

Matnai added, "I am anticipating this clear request. If it comes, it will be considered favorably. But we will not be able to do their work for them. We can advise, improve their system, but it's their work."

Despite Matnai's ambiguity about the presence of Israeli agents, Athulathamudali insisted some Shin Bet advisers were already at work here. Another senior Sri Lankan government source, who asked not to be identified, said the advisers included two intelligence experts and two bomb experts.

The intensified terrorist crackdown by the Army and Navy in the north was ordered after two Navy seamen were killed when their patrol boat was ambushed Saturday off the northern fishing port village of Valvetiturrai. It is a traditional jumping-off point for Tamil guerrillas who ply the narrow Palk Strait between Jaffna province and the south Indian state of Tamil Nadu, smuggling fugitives and weapons, according to the government. Sri Lanka's 2.6 million Tamils share common language and ancestry with the 45 million Tamils of south India.

[Defending the state of emergency imposed on the country since May 1983 and emergency legislation that would affect Sri Lankan law and trial procedures, President Junius Jayewardene said in Colombo that he was emulating Abraham Lincoln, The Associated Press reported. Jayewardene said the assassinated U.S. president, "in order to preserve the union of U.S.A., broke laws, violated the Constitution, usurped arbitrary powers and trampled individual liberties."]

Since the Saturday clash, at least six Sri Lankan soldiers and policemen have been killed in clashes in the northern peninsula. Estimates of the number of guerrillas or civilians killed this week range from less than 50 cited by Athulathamudali to "closer to 100" estimated by a high government official, who spoke on the condition he not be identified.

Leaders of the six major guerrilla groups, who collectively are referred to as the Tamil Tigers, have claimed several hundred civilians were killed in reprisal attacks, many of them when the Army and Navy shelled Valvetiturrai after the ambush of the Navy boat Saturday. The Tamil separatists also allege that at least 2,500 persons have been left homeless in the Army sweep, although the government says the estimate is exaggerated.

The guerrillas have conducted at least eight antigovernment raids since Saturday, and Athulathamudali conceded that their stridency has increased as they have gained popular support on the peninsula.

"No guerrilla movement can survive for long unless it has the support of the population, or the population is cowed by them," he said, adding that both apply to Jaffna.

He said Indian-made explosives have been found in the north, and that guerrillas are trained in camps in southern India by Sri Lankan Tamils and retired Indian Army officers. "Without Tamil Nadu, they would have laid down their arms," Athulathamudali said in the interview. The security minister said his forces intercepted instructions, issued from guerrilla headquarters in southern India, to attempt to trigger a Sinhalese backlash in the south and also to create general unrest during a meeting of the U.N. Commission on Human Rights in Geneva.

Athulathamudali charged that Tamil groups based in the United States, where there are tens of thousands of Tamil immigrants, have been collecting money, ostensibly for humanitarian purposes, and sending it to the guerrillas to purchase guns and explosives. "American money is being used to kill Sri Lankans," he said.

Of Indian complicity in the insurgency, Athulathamudali said, "I don't think a friendly government can allow people like that to cause trouble for another friendly government. It has become clear that groups in Tamil Nadu are plotting to overthrow the Sri Lankan government. Now is the time for India to act on the facts that have become clear."

Athulathamudali denied persistent reports by Tamils here and in south India that Army officers have lost control of their troops and that mass reprisal killings have been commonplace. He said harsh disciplinary action was taken against soldiers who staged unauthorized reprisal attacks in July 1983.

But government sources here said there have been instances where some soldiers among the more than 3,000 security forces in the northern peninsula have gone out of control following terrorist deaths in their ranks. In one incident, six civilians were murdered in a restaurant after a Sinhalese police superintendent was killed by a bomb in his office.

"They [the soldiers] go out of control when they are attacked," the official said, adding that morale was low in some units.

The official said there has been no anti-Tamil backlash by Sinhalese in the south this summer because the Sinhalese realize how badly those riots hurt the island's economy last year, when unemployment increased, there was a 25 percent inflation rate, a 30 percent drop in tourism and a "drying up" of foreign investment.

Of the drop in foreign investment, a mainstay in Sri Lanka's economy, the official said, "If you had money to invest, would you put it here or in Singapore?"

Athulathamudali said that in addition to tightening pressure on Tamil guerrillas and increasing intelligence efficiency with the help of the Israelis, the security forces would arm more Sri Lankans loyal to the government. "The entire population that is opposed to terrorism we will arm to the teeth. Let [the guerrillas] read that. This country is one and nobody will be allowed to divide it," said the Harvard-educated lawyer and onetime president of the prestigious Oxford Union.

https://www.washingtonpost.com/archive/politics/1984/08/10/sri-lanka-presses-military-drive-on-rebels/3e290081-827e-446f-99d0-6b258df36432/

மொசாட், சின் பெட்டின் பிரசன்னம் பற்றி கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

அநியாயமாக இந்த கட்டுரையை வாசித்து என் வாழ்வில் மீள பெற முடியாத 15 நிமிடங்களை இழந்து விட்டேன். எல்லாம் ஏலவே தெரிந்த யாழில் பலரும் பல தரம் எழுதிய தகவல்கள்தான்.

ஏன் இப்படி செய்கிறீர்கள் நுணா?

இதில் எங்கே 10 தமிழரை கொண்டால் ஒரு புலியாவது சாவார் என மொசாட் இலங்கைக்கு ஆலோசனை கொடுத்தது என எழுதப்பட்டுள்ளது.

7 minutes ago, nunavilan said:

ஈழப்போரில் இஸ்ரேலின் பங்கு பற்றி கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

ஈழப்போரில் இஸ்ரேல் இலங்கைக்கு உதவியது என்பது எல்லாருக்கும் தெரியும்தானே. ஆதாரம் கேட்டது அதற்கு அல்ல.

 

Posted
5 minutes ago, goshan_che said:

இதில் எங்கே 10 தமிழரை கொண்டால் ஒரு புலியாவது சாவார் என மொசாட் இலங்கைக்கு ஆலோசனை கொடுத்தது என எழுதப்பட்டுள்ளது.

தேடிக்கொண்டு போகும் போது வந்ததை இணைத்தேன். அதுவும் தவறா அண்ணாச்சி.

7 minutes ago, goshan_che said:

அநியாயமாக இந்த கட்டுரையை வாசித்து என் வாழ்வில் மீள பெற முடியாத 15 நிமிடங்களை இழந்து விட்டேன்.

உள்ள குப்பை கூழங்களை (காணொளிகளை)(not  authenticate)இணைத்து மற்றவர்களின்  நேரத்தை வாங்குவது ஓகேயா??😂

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, nunavilan said:

தேடிக்கொண்டு போகும் போது வந்ததை இணைத்தேன். அதுவும் தவறா அண்ணாச்சி.

உள்ள குப்பை கூழங்களை (காணொளிகளை)(not  authenticate)இணைத்து மற்றவர்களின்  நேரத்தை வாங்குவது ஓகேயா??😂

 

1. சரி கிடைக்கும் போது இணையுங்கள்

2. அவை இணைக்கப்படுவது இப்படி எக்ஸ் இல் இன்ன சார்பு கணக்கு சொல்கிறது என்ற விபரணத்தோடே. அவை உண்மையா, பொய்யா, என்பதை அதையும், ஏனைய தரவுகளையும் வைத்து வாசகர் முடிவு செய்யலாம் அல்லது கடந்து போகலாம். 

3. நீங்கள் இப்பவும் மட்டுறுதினரா? ஆம் எனில், அந்த பதிவுகள் பொய்ப் பிரச்சாரம் செய்கிறன அல்லது விதி மீறுகிறன எனில் நீக்கி விட்டிருக்கலாம்/விடலாம். ஆனால் உங்களுக்கு அசெளகரியமாக இருப்பது மட்டுமே காரணம் எனில் - நீங்கள் ஒன்றும் குருவானவர் இல்லை - எனவே மாற்ற முடியாது.

4. நீங்கள் authentic என எதை சொல்வீர்கள்? - நானே காஸாவில் போய் நின்று போடும் வீடியொவையா? அல்லது பிபிசி, சிஎன் என், அல்ஜசீரா, போன்ற agenda வோடு இயங்கும் தளங்களின் செய்தியையா?

என்ன ஐயா இந்த டிஜிட்டல், நியூ மீடியா உலகில் இப்படி பழைய பஞ்சாங்கமா உள்ளீர்கள்?

————

இது ஏனைய கருத்தாளருக்கும்/வாசகருக்கும்  @நியானி நிர்வாகத்துக்கும்.

முக்கியமான விடயங்கள் கார்டியன், பிபிசி போன்ற தளங்களில் Live என போட்டு ஒரு rolling coverage ஆக போய் கொண்டு இருக்கும். அப்படி யாழில் செய்ய முடியாது (வளப்பற்றாகுறை). 

ஆனால் citizens journalism போல - நாம் அறியும் தகவல்களை பகிர்வதன் மூலம் - இதை ஒத்த விரைவாக தகவல்களை பரிமாறும் ஒரு பொறிமுறையாகவே நான் இந்த மற்றும் உக்ரேன் போர் திரிகளை பாவித்து, பதிந்து வருகிறேன்.

இது ஒன்றும் யாழுக்கு புதிதல்ல - இலங்கை தேர்தல் முடிவு திரிகள் இப்படியா முன்னரும் அமைந்துள்ளன.  

இப்படி செய்வது யாழ்களத்கை current ஆக வைத்திருக்கும். சுட சுட தமிழில் செய்தி தேடுவோர் இந்த திரிகளை பார்வையிடுவர். அதனால் யாழிற்கான வரவுகள் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.

அல்லாமல் - பிபிசி தமிழ் அல்லது வீரகேசரி பிரசுரிக்கும் வரை காத்திருந்து  நேற்றைய செய்தியை வாசிப்பதுதான் அநேகரின் இஸ்டம் என்றால் அதில் எனக்கு ஒரு முரணும் இல்லை.

நுணாவின் கருத்தை மட்டும் கருதி நான் முடிவெடுக்க விரும்பவில்லை. அவர் தனிப்பட்ட குரோதங்களை பொது விடயங்களோடு கலக்கும் பாங்குள்ளவர் என்பது கடந்த கால அனுபவம்.

ஆனால் இதுதான் கணிசமானவர்களின் கருத்து என்றால் இந்த பகிர்வுகளை நிறுத்தி கொள்ள சித்தமாய்யுள்ளேன்.

ஒரு நிர்வாகி அல்லது ஐந்து கருத்துகள உறவுகள் நுணாவின் கருத்தை வழிமொழிந்தால் - இப்படியான பகிர்வுகளை நிறுத்தி கொள்கிறேன்.

அறியத்தரவும்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான வாய்மொழி கதைகள் உலாவுவதை தமிழர்களிடம் காணமுடியும். அதில் ஒன்று தான் பலஸ்தீன முஸ்லிம் மண்ணின் மைந்தன் யூதன் காணிபிடிக்க வந்தவன்.. எனது நண்பருக்கு ஒரு தமிழர் சொன்னாராம் இந்த பலஸ்தீன பாவங்களுடன் ஒப்பிட்டால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை.

  • Like 1
Posted

#வெலிஓயா.

மணலாறு என்ற எமது தாயகத்தின் இதய பூமியை கபளீகரம் செய்யும் நோக்குடன் சிங்களம் சூட்டிய பெயர்.

மகாவம்ச சிங்களம் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கப் பெரிய திட்டமொன்றைத் தீட்டியது.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தொப்புள் கொடியாகவிருந்த அந்த வளங்கொழிக்கும் நிலத்தில் "டொலர்" மற்றும் "கென்ற்" என்ற அலுமினிய வாளித் தொழிற்சாலைகளை அமைத்து அந்தத் தொழிற்சாலைகளில் பணி புரிவதற்கென குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையிலிருந்த சிங்களக் காடையர்களை விடுதலை செய்து அவர்களைக் குடும்பத்துடன் கொண்டு சென்று "டொலர்பாம்" மற்றும் "கென்ற்பாம்" என்ற குடியேற்றத் திட்டங்களை அமைத்து தனிச்சிங்களக் கிராமங்களாக மாற்றியமைக்கிறது.

வளத்திற்கும் வீரத்திற்கும் குறைவில்லாத அப்பிரதேசத் தமிழ் மக்கள் மத்தியில் சாதாரணக் கோழித் திருட்டு முதல் பாரிய கொள்ளைகள் வரை இச்சிங்களக் காடையர்கள் செய்து அம்மக்களின் நிம்மதியை சீர்குலைக்கின்றனர். இந்தச் சிங்களக் குடியேற்ற வாசிகளைப் பாதுகாப்பதற்காக கொக்கிளாய், நாயாறு, கொக்குத்தொடுவாய் போன்ற இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டும் பலப்படுத்தவும் படுகிறது. வயலும், கடற்தொழிலும், வேட்டையும், பாட்டும், கூத்துமாக வாழ்ந்த மக்கள் நிம்மதியிழக்கின்றனர்.

தமது தாய் நிலத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில் ஆயுதம் தூக்கியே ஆக வேண்டுமென இளைஞர்கள் ஆயுதம் ஏந்துகின்றனர். இவ்வாறு இயக்கத்திற்கு கொக்குத்தொடுவாயிலிருந்து விடுதலைப் புலிகளுடன் தன்னை இணைத்துக் கொண்ட கந்தையா பாலசேகரனே பின்னாளில் #பிடிகேடியர்_பால்ராஜ்/லீமா வாக உலகம் வியந்த போர்த்தளபதியாக வந்ததும் வரலாறு.

பல குடும்பங்கள் முள்ளியவளை, முல்லைத்தீவு, நெடுங்கேணி நோக்கி இடம்பெயருகின்றனர். 1984 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. இக்காலப் பகுதியில் இஸ்ரேலிய "மொசாட்" பயங்கரவாத ஒழிப்புக்கு ஆலோசனை வழங்கவென சிறிலங்காவுக்கு வரவழைக்கப்படுகிறது. அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுள் ஒன்று தமிழின விடுதலைப் போராட்டம் முளைகொள்ளுவதற்குச் சாதகமான கிராமங்கள், ஆதரவு வழங்குவதாக இனங்காணப்பட்ட கிராமங்களிலுள்ள வயது வந்த ஆண்கள் அனைவரையும் கொன்றொழித்து விடுவதுதான் அது.

1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 01ஆம் திகதி கொக்கிளாய், நாயாறு இராணுவ முகாம்கள் மீதும் "டொலர்பாம்" , "கென்ற்பாம்" ஊர்காலர்கள் மீதும் புலிகள் தாக்குதலைச் செய்து சிங்களத்திற்குப் பாரிய அச்சுறுத்தல் ஒன்றை விடுத்திருந்தனர். மறுநாள் காலை இப்பிரதேசங்கள் உட்பட பல அண்மித்த இடங்களிலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் கிராமமும் சிங்கள அரசின் சந்தேக வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு சதித் திட்டமொன்று தீட்டப்பட்டிருந்தது. ஊரடங்குச் சட்டத்தையறிந்த மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தனர்.

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி ஒதியமலையில் பெரிய படுகொலை நடத்தப்படுகிறது. அதே நாளில் செட்டிகுளம் கிராமத்தினுள் அதிகாலை வேளையில் இராணுவத்தினர் சுட்டுக் கொண்டு நுழைகின்றனர். வீடுகளினுள் புகுந்து அனைத்து ஆண்களையும் பிடித்து ட்ரக்குகளில் ஏற்றுகின்றனர். ஆண்கள் பிடிக்கப்படாத வீடுகளைத் தீவைத்துக் கொழுத்துகின்றனர். அன்றைய தினம் பிடிக்கப்பட்ட 52 ஆண்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை. அதே தினம் சேமமடுவிலும் 50 க்கு மேற்பட்டோர் பிடிக்கப்பட்டனர். ஆசிகுளம் கிராமத்திலும் பல ஆண்கள் பிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஈரப்பெரியகுளம் காட்டுக்குள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களின் சடலங்களைக் கொழுத்துவதற்கென வவுனியா "பஸ் டிப்போ" விலிருந்து கூட சேகரிக்கப்பட்டிருந்த பழைய "டயர்" களை இராணுவத்தினர் வந்து எடுத்துச் சென்றிருந்தனர். இவர்கள் ஐவர் ஐவராக நிறுத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அதையொரு இராணுவ அதிகாரி தமக்கருகில் நின்று "வண்", "ரூ" ....... என எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருந்ததாக ஏற்கனவே பிடிக்கப்பட்டு ஈரப்பெரியகுளத்திலிருந்த கைதியொருவர் பின்னர் விடுதலையாகி சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அறிக்கை கொடுத்திருந்ததும் அக்காலத்தில் நடந்தது. செட்டிகுளத்தில் கைதாகியோர் வீடு வருவார்கள் என்று 34 ஆண்டுகள் கடந்த பின்னரும் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கும் உறவுகளும் இருக்கிறார்கள்.

அக்காலத்தில் வவுனியாவின் அரசாங்க அதிபராக மாத்திரமல்ல ஜே.ஆர்.அரசின் தீவிர விசுவாசியாகவிருந்து இந்தச் செய்திகளே வெளியுலகத்திற்குச் சென்று விடாது மறைத்தும் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து சென்று விடாது பார்த்துக் கொண்டதே #லோகேஸ்வரன் "ஈழத்தமிழ் மக்கள் ஏற்றமதை உலகுணர்த்தி" ய அந்தச் செயலாகும்.

இந்தச் சம்பவங்களில் எந்த விதத்திலும் பாதிக்கப்படாத பலர் தாம் அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகப் பொய்யுரைத்து இன்று உலகெல்லாம் குடியுரிமை பெற்று வாழுகின்ற கதையுமுண்டு. அவர்களுக்குப் "பெருமை சேர்த்தது" தான் விருது வழங்கக் காரணமாகவிருக்கவும் கூடும்.

வாழ்க #டமிழ் வாழ்க #டமிழர் பெருமை. 

90756845_228335445200813_276115013432560

 

https://www.facebook.com/jaffnatoday2020/photos/a.108969747137384/228335438534147/?type=3

 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்  வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது. போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார். “நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது. ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு. எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”. இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர். குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும்.  புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர். போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது. மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின. புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது. ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது.  அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது. போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது. மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது. அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின. இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார். மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.  இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின. தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின. போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக  தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள். இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர். பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன. மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது.  சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து  தேர்வு செய்யப்பட்ட  ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர். ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது. மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது. குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில்  மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள். போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன.  இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும். உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர். வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார். திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது. உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார். தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர். பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள்.  ( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்) இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது. உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது. “எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்” என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம். https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/
    • கவனமா போய் வா மச்சான் !     புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
    • ன்பானவர்களே! “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது. வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அனைவரும் எம்முடன் இணைந்து எம்முடைய இம் முயற்சிக்கு கரம் தருவீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் இ.இ. கவிமகன் இயக்குனர் முருகு வெளியீட்டகம் முள்ளிவாய்க்கால் மண் முன்னால் வெளியிடப்பட்ட பகிரப்படாதபக்கங்கள். *********************************************** “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நீண்ட கனவு தனது அடைவை பெற்றுக் கொண்டது. எதிர்பார்த்தளவு வருகையாளர்களுடன் மண்டபம் நிறைந்து இருந்தது. காலை 9.30 க்கு தொடங்க வேண்டிய நிகழ்வு 30 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. போராளி மருத்துவர் திரு. தணிகை அவர்களின் தலமையில் நிகழ்வுகள் ஆரம்பித்த போது, ஆனந்தத்தில் விழிகள் கலங்கியதை தவிர்க்க முடியவில்லை. மாவீரங்களின் உன்னத தியாகங்களை, இது மாவீரர்களான போராளிகள் மட்டுமல்லாது, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய போராளிகள் மற்றும் மக்கள் நாட்டுப்பற்றாளர்கள் என பல நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் “பகிரப்படாதபக்கங்கள்” மிக நீண்ட கால உழைப்பின் பெறுபேறாக வெளியில் வந்தது மனம் மகிழ்வுக்குரியது. திருமதி. தீபாவின் நிகழ்வு ஒருங்கிணைப்பில் நிகழ்வு ஆரம்பமாகிய போது ஜேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.,சிறீரவீந்திரநாதன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மகளிர் பிரிவப் பொறுப்பாளர் திருமதி. வசந்தி ஏற்றி வைக்க இப் புத்தகத்தில் இடம்பெற்ற 16 மாவீரர்களின் திருவுருவப்படத்துக்கும் வருகையாளர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து மலர் வணக்கத்தை ஜேர்மனியின் தமிழ் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. லோகன் அவர்கள் ஆரம்பித்துவைக்க வருகையாளர்கள் மாவீரர்களுக்கான மலர்வணக்கத்தை செய்தார்கள். அதன் நிறைவு வந்த போது அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வின் தலமையுரை ஆரம்பித்தது. தலமையுரையினை நிகழ்வின் தலைவர், போராளி மருத்துவர் தணிகை நிகழ்த்தினார். தொடர்ந்து புத்தகத்துக்கான அறிமுகவுரையினை கடற்புலிப் போராளி மருது அவர்கள் நிகழ்த்தி முடித்த போது, மிக முக்கிய நிகழ்வான புத்தக வெளியீடு நடைபெற்றது. பகிரப்படாதபக்கங்கள் என்ற நூலினை வெளியிட்டு வைக்குமாறு நூலாசிரியர் கவிமகனின் தாயாரான, திருமதி. இந்திரப்பிரபா அவர்கள் அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூட போராளி மருத்துவர் தணிகை மற்றும் நூலாசிரியர் கவிமகன் ஆகியோர் கூட இருந்தனர். மாவீரன் லெப். கேணல் மேனனின் துணைவியாரான யசோ அவர்களிடம் முதல் பிரதியை கையளித்து. நூலினை வெளியிட்டு வைத்தார் கவிமகனின் தாயார். வெளியீட்டு நிகழ்வு நிறைவுபெற்றதும் சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது சிறப்புப் பிரதியினை நூலாசிரியர் கவிமகன் வழங்க, சிறப்புப் பிரதியின் முதல் பிரதியை உறவுகளுக்குக் கரங்கொடுப்போம் அமைப்பை சேர்ந்த அமுதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏனையவர்களுக்கான சிறப்புப் பிரதிகள் கவிமகனால் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவையோருக்கான பிரதிகள் வழங்கப்பட்டு சிற்றுண்டி இடைவேளை விடப்பட்டது. தொடர்ந்து உறவுகளை ஒன்றிணைப்போம் அமைப்பை சேர்ந்த திரு. வேணுவின் தேசியத்தலைவர் பற்றிய கவிதை ஒன்று வாசிக்கப்பட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன. நிகழ்வின் முக்கிய பேச்சுக்களான நூல் பற்றிய ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரை ஆகியவை தொடர்ந்த போது, அவற்றை முறையே லண்டன் மாநகரில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கோபிரட்னம் அவர்களும், பெண் எழுத்தாளர் மாலினி மாலாவும் வழங்கினர். பல விடயங்கள் அவர்களால் நிறை குறை என்ற இரு பெரும் வகைக்குள் சுட்டிக் காட்டி, இப் புத்தகம் பற்றிய அலசல் ஒன்றை செய்திருந்தார்கள். அதன் நிறைவில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் சிறீரவீந்திரநாதன் அவர்களின் வாழ்த்துரை நடைபெற்றது. அதில் இன்னும் பல படைப்புக்கள் இவ்வாறு வெளிவருவதற்கு தாம் உதவி புரிவதாக உறுதி வழங்கினார். தொடர்ந்து நூலாசிரியர் கவிமகன் ஏற்புரை வழங்கினார். அதில் ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரையில் சந்தேகிக்கப்பட்ட அல்லது குறைகளை களைவதற்காக கூறப்பட்ட விடயங்களுக்கான விளக்கங்களையும், காரணங்களையும் விளக்கினார். பின் புத்தகத்தில் இருந்த சில விடயங்களைச் சுட்டிக் காட்டி அவற்றை எழுதத் தூண்டிய காரணிகளையும் விளக்கினார். தொடர்ந்து தான் இப் புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்நிகழ்வு நடைபெறும் வரை தன் தோளோடு கூட நின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு தன் ஏற்புரையினை நிறைவு செய்தார் கவிமகன். இந்த இடத்தில் மிக முக்கிய விடயம் ஒன்று நடைபெற்றதை சுட்டிக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச தியாகங்களாக பதிவாகியிருக்கும் இத் தொகுப்பின் வெளியீடு, எமது விடுதலைப் போராட்டம் மௌனித்துப் போன முள்ளிவாய்க்கால் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட மண் வைக்கப்பட்டு அதன் முன் நிலையிலே வெளியீடு செய்யப்பட்டது.     https://eelamaravar.wordpress.com/2019/06/14/ltte-history-book/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.