Jump to content

“யாழ் நிலா” ரயில் சேவையில் 27 ஆம் திகதி பயணித்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 OCT, 2023 | 10:10 AM
image

“யாழ் நிலா” ரயில் சேவையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) பயணித்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரால் விடுக்கப்பட்டுள்ளது.

வார இறுதிச் சேவையை விசேடமாக வழங்கவென கொழும்பு - காங்கேசன்துறைக்கு இடையில் 'யாழ் நிலா' என்ற பெயரில் ஒரு ரயில் சேவையைத் திணக்களம் ஆரம்பித்தது.

ஒருவருக்கு ஒருவழி கட்டணம் 4,000 ரூபாவாகும். வெள்ளிக்கிழமை (27) இரவு 10 மணிக்கு கல்கிஸையில் இருந்து புறப்படும் ரயில் சனிக்கிழமை காலையில் காங்கேசன்துறையை சென்றடையும்.

அதுபோல காங்கேசன் துறையிலிருந்து ஞாயிறு மாலை 9.30 மணிக்கு புறப்பட்டு திங்கள் காலை கல்கிஸை வரைப் பயணிக்கும்.

ரயிலின் என்ஜினில் ஏதோ திருத்தப்படுகின்றது என வௌ்ளிக்கிழமை (27) இரவு 10 மணியளவில் கூறப்பட்டுள்ளது.

சுமார் மூன்றரை மணி நேரத்தின் பின்னர் அதிகாலை 1.30 மணிக்கு ரயில் வந்தது. புறப்பட்ட ரயில் நீண்ட இழுபறிக்கு பின்னர் காலை 7.30 மணியளவில் வவுனியாவுக்குச் சற்று தொலைவில் செயலிழந்தது. ஒருவாறு நகர்ந்து வவுனியா ரயில் நிலையத்தை காலை 8:30 மணிக்குச் சென்றடைந்துள்ளது. அத்தோடு சேவை தடைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த ரயிலில் வெள்ளவத்தையில் இருந்து பயணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வவுனியா நகருக்குப் போய், அங்கிருந்து இன்னொரு வாகனத்தில் யாழ் பயணமாகியுள்ளார்.

இதற்கிடையில் ரயில்வே பொது முகாமையாளர் டப்ளியு.ஏ.எஸ்.குணசிங்கவுடன் தொடர்புகொண்டு பயணிகள் அவலத்தை சுமந்திரன் எம்.பி எடுத்துரைத்துள்ளார்.

ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பொது முகாமையாளர் 'யாழ் நிலா'வில் அன்றையதினம் பயணித்த அனைவருக்கும் அவர்களது டிக்கெட் கட்டணமான 4 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168038

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், ரிக்கற்ற கோவத்தில கிழிச்செறிஞ்சு போட்டன்.

இப்ப என்ன செய்யிறது?

எதுக்கும், @goshan_che இந்தப் பக்கம் வந்தா விசாரியுங்க, புத்தி சொல்லுவார்.

நானும் கண்டா கேக்கிறன்.

1 hour ago, ஏராளன் said:
30 OCT, 2023 | 10:10 AM
 

ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பொது முகாமையாளர் 'யாழ் நிலா'வில் அன்றையதினம் பயணித்த அனைவருக்கும் அவர்களது டிக்கெட் கட்டணமான 4 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168038

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

நான், ரிக்கற்ற கோவத்தில கிழிச்செறிஞ்சு போட்டன்.

இப்ப என்ன செய்யிறது?

இப்படி அவசரபட்டு நீங்கள் டிக்கெட்டை கிழித்திருக்க கூடாது..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நான், ரிக்கற்ற கோவத்தில கிழிச்செறிஞ்சு போட்டன்.

இப்ப என்ன செய்யிறது?

எதுக்கும், @goshan_che இந்தப் பக்கம் வந்தா விசாரியுங்க, புத்தி சொல்லுவார்.

நானும் கண்டா கேக்கிறன்.

 

4000ரூபா போய்ச்சா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

4000ரூபா போய்ச்சா?!

@Nathamuni ஆள் கருணாநிதி மாரி வலு சுழியன்🤣. எடுத்தாதானே கிழிக்க🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நான், ரிக்கற்ற கோவத்தில கிழிச்செறிஞ்சு போட்டன்.

இப்ப என்ன செய்யிறது?

 நாதம்! என்ன பழக்கம் இது? ரிக்கற்ற கிழிக்கிறது....பாஸ்போர்ட்ட கிழிக்கிறது? ஆரிட்ட பழகின பழக்கம் ஆ....? 🤣

Maamannan Faces Backlash As Netizens Praise Fahadh Faasil's 'Casteist'  Character - News18

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

 நாதம்! என்ன பழக்கம் இது? ரிக்கற்ற கிழிக்கிறது....பாஸ்போர்ட்ட கிழிக்கிறது? ஆரிட்ட பழகின பழக்கம் ஆ....? 🤣

Maamannan Faces Backlash As Netizens Praise Fahadh Faasil's 'Casteist'  Character - News18

எல்லாம், எங்கண்ட சாமியார், உடான்சு சாமியார் அருளுரைகளை கேட்டு பெற்ற தெளிவுதான்.🤣

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

வெளிவந்ததும் கதவில் வைத்து ரிக்கற் வாங்கி விடுவார்கள் அல்லவா. 

Edited by appan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, appan said:

வெளிவந்ததும் கதவில் வைத்து ரிக்கற் வாங்கி விடுவார்கள் அல்லவா. 

ஓ அந்த நம்பிக்கையில்த் தான் பணம் திரும்ப தரலாம் என்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

எல்லாம், எங்கண்ட சாமியார், உடான்சு சாமியார் அருளுரைகளை கேட்டு பெற்ற தெளிவுதான்.🤣

சாமியார் அவர்கள் கூறியதை நீங்கள் வன்முறையாக விளங்கி கொண்டு, அடிப்படை வாதமாக செயல்பட்டுவிட்டு சாமியின் போதனைகளை குறை சொல்லக்கூடாது.

சாமியார் அமைதி வழியையே போதித்தார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ அந்த நம்பிக்கையில்த் தான் பணம் திரும்ப தரலாம் என்கிறார்களா?

இப்ப எல்லாம் ஒன்லைன் புக்கிங்.

காசும், கட்டின விதமாகவே, திரும்புமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி அவசரபட்டு நீங்கள் டிக்கெட்டை கிழித்திருக்க கூடாது..

நீங்க வேற??😂

7 hours ago, Nathamuni said:

நான், ரிக்கற்ற கோவத்தில கிழிச்செறிஞ்சு போட்டன்.

இப்ப என்ன செய்யிறது?

எதுக்கும், @goshan_che இந்தப் பக்கம் வந்தா விசாரியுங்க, புத்தி சொல்லுவார்.

நானும் கண்டா கேக்கிறன்.

நீங்க கிழிச்சு எறிஞ்சீங்க???🤣

நம்பிட்டம் அப்புறம்??

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நீங்க வேற??😂

நீங்க கிழிச்சு எறிஞ்சீங்க???🤣

நம்பிட்டம் அப்புறம்??

பிறகென்ன, கிளிச்சதை தேடியெடுத்து பசை போட்டு ஒட்டிக் கொண்டு போய் நிப்பமல்ல!! 😁

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னாப்பா   இது கூட தெரியாத ??????????????    அது வந்து   பெருவாரியா,.......அதிகமான  சிங்களமக்கள்  ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு  தமிழ் ஐனதிபதி ஒருவரை  தெரிவுசெய்கிறார்களா.  என்று பரிசோதித்து பார்ப்பதற்கு 🤣🤣😂😂. இதன் மூலம் இலங்கை சிங்கப்பூரை பின்பற்றுகிறாதா. ???  இலங்கை வரும் காலத்தில் சிங்கப்பூர் போல் மாறும் வாய்ப்புகள் உண்டா??  என்பதை உறுதி படுத்துவதற்காக  
    • உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன்.  பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட,  கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம்.  ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது. 
    • தமிழ் சனாதிபதி வேட்பாளர் வேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் Just Married வாகனங்களின் பின்னர் கட்டித் தொங்கவிடப்படும் வெற்று Tin கள் போன்று சத்தமிடுகின்றனரே தவிர, கனதியான காரணங்களைக் கூறுகிறார்கள் இல்லை.  ☹️
    • அவருக்கு மட்டுமே புள்ளி கிடைக்கும் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.