Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் வழிமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆண்ட்ராய்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1 நவம்பர் 2023, 02:58 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் உள்ள எதிர்கட்சித்தலைவர்கள், எம்பி.க்கள் மற்றும் பிரபல பத்திரிகையாளர்களின் ஐபோன்களை குறிவைத்து சைபர் தாக்குதலுக்கான முயற்சிகள் நடந்ததாக ஐபோன் நிறுவனம் அதன் பயன்பாட்டாளர்களுக்கு நேற்று முன்தினம் இரவு எச்சரிக்கை குறிஞ்செய்தி மற்றும் மின் அஞ்சல் அனுப்பியது.

அந்த எச்சரிக்கை குறுஞ்செய்தியில், “அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல் நடத்தும் நபர்கள், உங்கள் ஐபோனைத் தாக்கலாம். அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல் நடத்தும் நபர்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய உங்கள் ஐபோனை, குறிவைக்கிறார்கள் என்று ஆப்பிள் நம்புகிறது."

"இந்த சைபர் தாக்குதல் நீங்கள் யார் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்களைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துக் தாக்குகிறார்கள். அவர்கள் உங்கள் ஐபோன் பாதுகாப்பு அமைப்பைத் தாக்கினால், உங்களின் தகவல்கள், உரையாடல்கள், கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவையை அணுகி உங்களைக் கண்காணிக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, இது தவறான அலாரமாக இருக்கலாம். இருப்பினும், தயவுசெய்து இந்த எச்சரிக்கையை மிருந்த கவனத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள்,” என காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இந்தத் தாக்குதல் முயற்சி குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி இந்தியாவில் உள்ள ஐபோன் பயன்படுத்தும் பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே வந்துள்ளதால், இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

 

இந்த சைபர் தாக்குதல் குறித்த எச்சரிக்கை உண்மையா பொய்யா என்ற வாதம் போய்கொண்டிருக்கும் அதேவேளையில், இதுபோன்ற சைபர் தாக்குதல்கள், ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்டால், அதனை எப்படி கண்டுபிடிப்பது, அதனை எப்படி தவிர்ப்பது என்பதும் பேசு பொருளாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள்

பட மூலாதாரம்,ANI

 

ஆண்ராய்டு போனில் சைபர் தாக்குதல் நடக்க வாய்ப்பிருக்கிறதா?

சைபர் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுகுறித்து சைபர் கிரைம் வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரையிடம் பிபிசி பேசியது. அப்போது அவர், “எந்தப் போனையும் ஹேக் செய்ய முடியாது என்று கூறவே முடியாது. ஆனால், ஆப்பிள் மற்றும் ஆண்ராய்டு போன் என ஒப்பிட்டால், ஐபோனை ஹேக் செய்வது நிச்சயம் கடினமே. ஆனால், ஆண்ராய்டு போனை சற்று எளிமையாக இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருகு்கிறது,” என்றார் முரளி.

ஒரு ஆண்ராய்டு போன் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதை கண்டுபிடிக்க ஒரு வழியைக் கூறினார்.

“ஆண்ராய்டு போனை முழுமையாக பரிசோசிக்காமல், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால், தற்சமயம் என்ன என்ன செயலிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை பார்த்தால், அவற்றில் சம்மந்தம் இல்லாத செயலிகளின் செயல்பாடு கண்டறிந்தால், அவற்றை உடனே நிறுத்தலாம். அவை சைபர் தாக்குதலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை வைரஸாகக்கூட இருக்கலாம்,” என்றார் முரளி.

 

ஆண்ராய்டு போன் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி?

சைபர் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எளிமையாகக் கண்டுபிடிப்பதற்கான வழியிருப்பதாகவும் முரளி கூறினார்.

“தொழில்நுட்பம் தெரியாதவர்கள் எளிமையாக கண்டுபிடிக்க ஒரே வழிதான். உங்களது செல்போன் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சூடானாலும், உங்கள் போனின் பேட்டரி திடீரென வேகமாக சார்ஜ் இறங்கினாலோ, உங்கள் சென்போனின் பின்னணியில் எதோ செயலி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என சந்தேகிக்கலாம்,” என்றார் முரளி.

அதேபோல, போனில் உள்ள தனியுரிமை அமைப்புகளை(privacy setting) உட்பட ஆண்ட்ராய்டு போனில் உள்ள பொதுவான அமைப்புகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றார், சைபர் குற்றப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற பிஏ ராஜன்.

“பெரும்பாலும், நாம் ஆண்ட்ராய்டு போனில் எந்த வகையில் தாக்குதல் நடைபெற்றது, எப்போது நடந்தது என்பதை கண்டுபிடிக்க கால தாமதமாகலாம். ஆனால், அப்படி சைபர் தாககுதலுக்கு உள்ளான பிறகு உங்கள் செல்போனில் உள்ள அமைப்புகளில்(setting) மாற்றம் ஏற்படும். அதனை சரியாக கண்டுபிடித்து மாற்றிவிட்டால், தாக்குதலுக்குப் பிறகும், நம் செல்போனில் உள்ள தரவுகளையாவது குறைந்தபட்சம் பாதுகாக்கலாம்,” என்றார் ராஜன்.

 

சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி?

சைபர் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எந்த செல்போன் பயன்படுத்தினாலும், இரண்டு செல்போன்கள் பயன்படுத்துவது நல்லது என்கிறார், முரளி.

“ஒரு செல்போனில் அனைத்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளை வைத்துக்கொண்டு, மற்றொரு செல்போனில் முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய தரவுகளை வைத்துக்கொள்வதுதான் இப்போதைக்கு இருக்கின்ற வழி. இதில், ஒரு செல்போனுடன் மற்றொரு செல்போனுக்கு தொடர்பு இல்லாத வகையில் இ-மெயில் உள்ளிட்டவற்றை பாராமரிக்க வேண்டும்,”என்றார் முரளி.

அதேபோல, நம்பத்தகுந்த மற்றும் அதிகாரப்பூர்வ சைபர் தாக்குதலைத் தடுக்கும் செயலிகளைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறார் ராஜன். “பெரும்பாலும், நாம் பயன்படுத்தும் சமூக ஊடக செயலிகள் மற்றும் அவற்றில் உள்ள லின்க்.களின் மூலம் சைபர் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.

அதேபோல, விபிஎன் பயன்படுத்தி ஆபாச வலைத்தளத்தை பயன்படுத்துவோரும், சைபர் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. அவற்றை தவிர்த்தால், ஓரளவு பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்க முடியும்,” என்றார் ராஜன்.

ஆனால், இருவருமே, 100% சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் இல்லை என்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cz5e568rp26o

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஏராளன் .........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, suvy said:

மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஏராளன் .........!  👍

@ஏராளன்

ஏராளன், என்னிடம் போன் இல்லை, கக் பண்ணியிருக்கா எண்டு எப்படி கண்டுபிடிக்கிறது? 🤨

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

@ஏராளன்

ஏராளன், என்னிடம் போன் இல்லை, கக் பண்ணியிருக்கா எண்டு எப்படி கண்டுபிடிக்கிறது? 🤨

போன் இல்லை என்றால் உலகின் மகிழ்ச்சியான நபர் நீங்கள் தான் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

போன் இல்லை என்றால் உலகின் மகிழ்ச்சியான நபர் நீங்கள் தான் அண்ணை!

மகிழ்சியா இருப்பம் எண்டால், கக் அது, இது எண்டு பயம் காட்டுறீயள், அது தான் யோசீக்கிறன். 🥹

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ஒரு செல்போனில் அனைத்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளை வைத்துக்கொண்டு, மற்றொரு செல்போனில் முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய தரவுகளை வைத்துக்கொள்வதுதான் இப்போதைக்கு இருக்கின்ற வழி. இதில், ஒரு செல்போனுடன் மற்றொரு செல்போனுக்கு தொடர்பு இல்லாத வகையில் இ-மெயில் உள்ளிட்டவற்றை பாராமரிக்க வேண்டும்,”என்றார் முரளி

இதென்ன இரண்டு திருமணம் செய்யிற மாதிரி இருக்கே?

இலங்கையில் கூடுதலானவர்கள் இப்படி பாவிக்கிறார்கள்.

ஒரு பெரிய கைபேசி
ஒரு சிறிய கைபேசி.

6 hours ago, ஏராளன் said:

அதேபோல, விபிஎன் பயன்படுத்தி ஆபாச வலைத்தளத்தை பயன்படுத்துவோரும், சைபர் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. அவற்றை தவிர்த்தால், ஓரளவு பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்க முடியும்,” என்றார் ராஜன்.

ஆண் பெண் வித்தியாசமில்லாமல் இளையோர்கள் இதற்குள் நீண்ட நேரம் மினக்கெடுவதாக சொல்கிறார்கள்.(அப்பாடா நான் தப்பிச்சன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இதென்ன இரண்டு திருமணம் செய்யிற மாதிரி இருக்கே?

இலங்கையில் கூடுதலானவர்கள் இப்படி பாவிக்கிறார்கள்.

ஒரு பெரிய கைபேசி
ஒரு சிறிய கைபேசி.

நானே 3 சிம் காட் வைச்சிருக்கிறன்.....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ஆனால், இருவருமே, 100% சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் இல்லை என்றனர்.

கடைசியில் தொப்பியை போட்டிட்டியே குமாரூ.

 

அண்மையில் எனது நெருங்கிய நண்பரின் வங்கியில் இருந்து பல தடவைகள் பணத்தை எடுக்க முயற்சி பண்ணியதாகவும் 

இதில் லங்காசிறியில் இருந்து 7 தடவைகள் முயற்சி பண்ணியதாகவும் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

மிருந்த கவனத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள்,”

தமிழ் bbc நன்றாய் தமிழ் எழுதுகின்றது .😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

“தொழில்நுட்பம் தெரியாதவர்கள் எளிமையாக கண்டுபிடிக்க ஒரே வழிதான். உங்களது செல்போன் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சூடானாலும், உங்கள் போனின் பேட்டரி திடீரென வேகமாக சார்ஜ் இறங்கினாலோ, உங்கள் சென்போனின் பின்னணியில் எதோ செயலி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என சந்தேகிக்கலாம்,” என்றார் முரளி.

இவங்கள் இன்னும் அரிவரி பிள்ளைகளுக்கு சொல்லிகொடுப்பது போல் திரும்ப திரும்ப பற்றரி சூடு பற்றரி வேகமாக முடிவது சொல்லிகொடுகிரார்கள் லூசு கூட்டம்கள். சிமார்ட் போனை அது அப்பிளாக இருந்தாலும் அன்ரோயிட்டாக இருந்தாலும் தரவுகளை  இலகுவாக திருடி கொள்கிறார்கள் டார்கெட் தப்ப முடியாது மின்கலம்  முடிவதால் கண்டு கொள்கிறார்கள் என்பதால் remote Juice jacking எனும் முறையில் அதாவது நீங்கள் போனை சார்ச் போடும்போது மட்டும் அன்று நடந்த தரவு பரிமாற்றம் உங்கள்  குரல் வீடியோ போன்ற அனைத்தும்  உள்ளிருந்தே பதிவு பண்ணி சார்ச் வயரை இணைக்கபட்டதும் தனது ரகசிய செர்வருக்கு அனுப்பி விடும் மற்ற நேரம்களில் வழமை போல் அமைதியாக இருந்துகொண்டு இருக்கும் .

இதைவிட ஆபத்தானது   பொது இடங்களில் சார்ச் போடுவது மிகுந்த ஆபத்தானது  உங்கள் போன் ஹாக்கிங் பன்ன இலகுவாகி விடும் இங்கு நிறைய சொல்வது யாழ் விதிகளை மீறுவது போல் உள்ளது இது எப்படி என்பவர்களுக்கு மட்டும் o.mg cable hack iphone என்று மட்டும் கூகிள் பண்ணவும் நிறைய தகவல்கள் உள்ளன அந்த வயர் வெறும் 75 பவுனுக்கு வாங்கலாம் 😀 

சிலமின் சார பொருள்கள்  வேறு எண்ணத்துக்கோ தயாரிக்க பட்டவை அதன் மூல புரோகிராம் வேறு ஒன்றை நிறுவும் போது ஹாக்கர்கள் சொன்னபடி செய்யும் ஹக்கர்ஸ் டூல் ஆகிவிடுகின்றது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜூஸ் ஜக்கிங் நேராக மின்சார இணைப்பின் (electrical outlet)  மூலம் தொலைபேசியை சக்தியூட்டும்  போது சாத்தியமில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பொது இடங்களில் இருக்கும் USB port இல் Juice jacking செய்வது தியரிப்படி சாத்தியம், ஆனால் இது வரை இது நடந்ததாக ஆதரங்கள், முறைப்பாடுகள் இல்லை என்கிறது அமெரிக்க FCC. 

https://www.fcc.gov/juice-jacking-tips-to-avoid-it

தற்போது  பயணத்தில் எடுத்துச் செல்லக்கூடிய power banks மலிவாகக் கிடைக்கின்றன. இவற்றைப் பாவித்தாலும் பாதுகாப்பு.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.