Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தகம் (நூல்) வெளியிடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@மெசொபொத்தேமியா சுமேரியர்

@வல்வை சகாறா

அக்காமார்!

புத்தங்கள் வெளியிட்ட அனுபவம் உள்ள நீங்கள் அதிலுள்ள அனுபவங்களை பகிர முடியுமா?

நான் எழுதுவதை பற்றி கேட்கவில்லை. Publishing குறித்தே கேட்கிறேன்.

எனது உறவினர் இந்தியா, இலங்கை என்று quotation எடுத்து, £600 முதல் £800 வரை செலவு செய்து 400 புத்தங்களை அடிப்பித்து எடுத்திருக்கிறார்.

இன்னொருவர், சென்னையில் நிறுவனம் ஒன்றுக்கு £500 கொடுத்து அமேசனில் KDP யில் ஏத்துவித்திருக்கிறார். 

இந்த சனியன்று, கனடாவில் இருந்து ஒரு தமிழறிஞர் இலண்டண் வந்து தனது 4 புத்தகங்களை வெளியிட்டிருந்தார். அவரும், புத்தகங்களை அச்சிட்டே கொண்டு வந்திருந்தார். ரொராண்டோவில் வெளியிட்டு இங்கு வந்திருந்தார்.

இவருக்கு பயணச் செலவே கிடைக்குமா என்று தோன்றியது. முக்கியமாக, புதிய தொழில் நுட்பங்கள், self publishing குறித்த விபரம் இல்லையோ என்று தோன்றியது.

உங்களுக்கு தொழில் நுட்பம் தெரியும் என்று எதிர்பார்காவிடினும், புதிய தொழில் நுட்ப உலகின் புத்தக வெளியீடு பற்றி அறிந்துள்ளீர்களா?

அல்லது, இந்தியாவில் அச்சிடுவதே சரியான அல்லது மலிவானது என்று கருதுகிறீர்களா?

விபரம் அறியவே கேட்கிறேன் நன்றி!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

@மெசொபொத்தேமியா சுமேரியர்

அக்கா!!

நானும் இதை பற்றி அறிய விரும்புகிறேன்.

கேள்விக்கு நன்றி நாதம்.

பிகு

இந்த பெக்கோ என்ன புத்தகத்தை வெளியிடும் என நினைக்கக்கூடாது.

1. உடான்ஸ் சாமியார் அருளுரைகள் பாகம் 1-15

2. யாழில் எல்லா திரிகளிலும் எல்லாம் தெரிந்த மாதிரி எழுதுவது எப்படி - கையேடு

3. தலைக்கனம் அதிகரிப்பால் தோள்மூட்டு, முதுகு நோவா? நிவாரணம் தரும் பாட்டி வைத்திய டிப்ஸ்.

இப்படி கைவசம் பல சரக்குகள் உண்டு🤣.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நானும் இதை பற்றி அறிய விரும்புகிறேன்.

கேள்விக்கு நன்றி நாதம்.

பிகு

இந்த பெக்கோ என்ன புத்தகத்தை வெளியிடும் என நினைக்கக்கூடாது.

1. உடான்ஸ் சாமியார் அருளுரைகள் பாகம் 1-15

2. யாழில் எல்லா திரிகளிலும் எல்லாம் தெரிந்த மாதிரி எழுதுவது எப்படி - கையேடு

3. தலைக்கனம் அதிகரிப்பால் தோள்மூட்டு, முதுகு நோவா? நிவாரணம் தரும் பாட்டி வைத்திய டிப்ஸ்.

இப்படி கைவசம் பல சரக்குகள் உண்டு🤣.

3. தலைக்கனம் அதிகரிப்பால் தோள்மூட்டு, முதுகு நோவா? நிவாரணம் தரும் பாட்டி உடான்ஸ் வைத்திய டிப்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

3. தலைக்கனம் அதிகரிப்பால் தோள்மூட்டு, முதுகு நோவா? நிவாரணம் தரும் பாட்டி உடான்ஸ் வைத்திய டிப்ஸ்.

வாவ் பிறகென்ன - எடிடிங் கொண்டிராக்ட் உங்களுக்குதான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

இந்த பெக்கோ என்ன புத்தகத்தை வெளியிடும் என நினைக்கக்கூடாது.

நாங்கள் நினைப்பதெல்லாம் எப்படி உடனுக்குடன் உங்களுக்குத் தெரிகிறது?

1 hour ago, Nathamuni said:

@மெசொபொத்தேமியா சுமேரியர்

அக்கா!!

புத்தங்கள் வெளியிட்ட அனுபவம் உள்ள நீங்கள் அதிலுள்ள அனுபவங்களை பகிர முடியுமா?

நான் எழுதுவதை பற்றி கேட்கவில்லை. Publishing குறித்தே கேட்கிறேன்.

எனது உறவினர் இந்தியா, இலங்கை என்று quotation எடுத்து, £600 முதல் £800 வரை செலவு செய்து 400 புத்தங்களை அடிப்பித்து எடுத்திருக்கிறார்.

இன்னொருவர், சென்னையில் நிறுவனம் ஒன்றுக்கு £500 கொடுத்து அமேசனில் KDP யில் ஏத்துவித்திருக்கிறார். 

இந்த சனியன்று, கனடாவில் இருந்து ஒரு தமிழறிஞர் இலண்டண் வந்து தனது 4 புத்தகங்களை வெளியிட்டிருந்தார். அவரும், புத்தகங்களை அச்சிட்டே கொண்டு வந்திருந்தார். ரொராண்டோவில் வெளியிட்டு இங்கு வந்திருந்தார்.

இவருக்கு பயணச் செலவே கிடைக்குமா என்று தோன்றியது. முக்கியமாக, புதிய தொழில் நுட்பங்கள், self publishing குறித்த விபரம் இல்லையோ என்று தோன்றியது.

உங்களுக்கு தொழில் நுட்பம் தெரியும் என்று எதிர்பார்காவிடினும், புதிய தொழில் நுட்ப உலகின் புத்தக வெளியீடு பற்றி அறிந்துள்ளீர்களா?

அல்லது, இந்தியாவில் அச்சிடுவதே சரியான அல்லது மலிவானது என்று கருதுகிறீர்களா?

விபரம் அறியவே கேட்கிறேன் நன்றி!

முதலில் வாழ்த்துக்கள் நாதம்.

அடுத்து புத்தகம் அடித்ததும் சகாரா மாதிரி யாழில் உள்ளவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

நாங்கள் நினைப்பதெல்லாம் எப்படி உடனுக்குடன் உங்களுக்குத் தெரிகிறது?

முதலில் வாழ்த்துக்கள் நாதம்.

அடுத்து புத்தகம் அடித்ததும் சகாரா மாதிரி யாழில் உள்ளவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கவும்.

அட, சகாறா அக்காவை மறந்து போனன்.

புத்தகம் எழுதுவது வேற.

வெளியிடுவது வேற.

விசயம் தெரியாவிடில் பின்னது, பிரகண்டம் பிடிச்ச வேலை. காசை விழுங்கி விடுவார்கள்.

அதனால் அவர்களது அனுபவம் கேட்கிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

நாங்கள் நினைப்பதெல்லாம் எப்படி உடனுக்குடன் உங்களுக்குத் தெரிகிறது?

அவசரப்படாமல், புத்தகம் வந்ததும், காசு கொடுத்து யாழில் எல்லா திரிகளிலும் எல்லாம் தெரிந்த மாதிரி எழுதுவது எப்படி - கையேடு வாங்கி படியுங்கள். 

நீங்கள் கேட்பதை பற்றி ஒரு தனி chapter உள்ளது🤣

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, Nathamuni said:

விசயம் தெரியாவிடில் பின்னது, பிரகண்டம் பிடிச்ச வேலை. காசை விழுங்கி விடுவார்கள்.

பிரண்டகம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

@மெசொபொத்தேமியா சுமேரியர்

@வல்வை சகாறா

அக்காமார்!

புத்தங்கள் வெளியிட்ட அனுபவம் உள்ள நீங்கள் அதிலுள்ள அனுபவங்களை பகிர முடியுமா?

நான் எழுதுவதை பற்றி கேட்கவில்லை. Publishing குறித்தே கேட்கிறேன்.

எனது உறவினர் இந்தியா, இலங்கை என்று quotation எடுத்து, £600 முதல் £800 வரை செலவு செய்து 400 புத்தங்களை அடிப்பித்து எடுத்திருக்கிறார்.

இன்னொருவர், சென்னையில் நிறுவனம் ஒன்றுக்கு £500 கொடுத்து அமேசனில் KDP யில் ஏத்துவித்திருக்கிறார். 

இந்த சனியன்று, கனடாவில் இருந்து ஒரு தமிழறிஞர் இலண்டண் வந்து தனது 4 புத்தகங்களை வெளியிட்டிருந்தார். அவரும், புத்தகங்களை அச்சிட்டே கொண்டு வந்திருந்தார். ரொராண்டோவில் வெளியிட்டு இங்கு வந்திருந்தார்.

இவருக்கு பயணச் செலவே கிடைக்குமா என்று தோன்றியது. முக்கியமாக, புதிய தொழில் நுட்பங்கள், self publishing குறித்த விபரம் இல்லையோ என்று தோன்றியது.

உங்களுக்கு தொழில் நுட்பம் தெரியும் என்று எதிர்பார்காவிடினும், புதிய தொழில் நுட்ப உலகின் புத்தக வெளியீடு பற்றி அறிந்துள்ளீர்களா?

அல்லது, இந்தியாவில் அச்சிடுவதே சரியான அல்லது மலிவானது என்று கருதுகிறீர்களா?

விபரம் அறியவே கேட்கிறேன் நன்றி!

இலத்திரனியல் புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன், அதனையும் இலவசமாக அதன் இணைய தரவிறக்க சுட்டியினையும் இணைத்துவிடுங்கள் பலரை சென்றடைய ஏதுவாக இருக்கும் அத்துடன் சுற்று சூழலுக்கும் பெரிதளவில் பாதிப்பு ஏற்படாது(புத்தகம் அச்சிடுவதால் ஏற்படும்).

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அத்துடன் எதிர்காலத்தில் இந்த முயற்சியில் ஈடுபடவுள்ள அனைத்து கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நன்னிச் சோழன் said:

பிரண்டகம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?

அரியண்டம் : சிறு தொந்தரவு. (அரியண்டம் தராதடா, தம்பி) 

பிரகண்டம்: பெரும் தொந்தரவு.

(இந்த ஆசுப்பத்திரிக்கு போய் சுகப்பிரசவமாகி, பிள்ளையோட வீடு வந்து சேருறது பிரகண்டம் தான்)

(எனது புரிதல்)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, Nathamuni said:

அரியண்டம் : சிறு தொந்தரவு. (அரியண்டம் தராதடா, தம்பி) 

பிரகண்டம்: பெரும் தொந்தரவு.

(இந்த ஆசுப்பத்திரிக்கு போய் சுகப்பிரசவமாகி, பிள்ளையோட வீடு வந்து சேருறது பிரகண்டம் தான்)

(எனது புரிதல்)

நன்றி ஐயனே

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2023 at 18:15, Nathamuni said:

@மெசொபொத்தேமியா சுமேரியர்

இந்தியாவில் அச்சிடுவதே சரியான அல்லது மலிவானது என்று கருதுகிறீர்களா?

விபரம் அறியவே கேட்கிறேன் நன்றி!

நாதமுனி! இந்தியாவில் அச்சிடுவது மலிவுதான் எனினும் அங்கு நாம் நினைத்ததை செயலாக்க முடியாத சிக்கல்கள் இருக்கின்றன. சில சொற்களின் பொருள் விளங்காது எம்மைக் கேட்காது மாற்றி அச்சிடுவதும் நடைபெறும். ஆனால் பார்சலில் நூல்களை அனுப்பும் செலவும் அதிகம். எமது நாட்டில் நாமே எமக்குத் தெரிந்தவரை கதைத்துப் பேசித் திருத்தங்கள் செய்வது இலகுவானது.  ஆனால் தற்போது அங்கு விலை அதிகம். ஆனாலும் பவுண்டஸ் இன் பெறுமதி அதிகரித்திருப்பதால் எமக்கு இலங்கையில்  அடிப்பது பெரிதாகத் தோற்றாது.

இலங்கையிலும் இந்தியாவிலும் தரமாக நூல்களை அடிக்க முடியும் தான். உயிர்மை, காலச்சுவடு போன்றவை தரமான நூல்களை தாமே அச்சிட்டு வெளியிடுகின்றன. ஆனால் நீங்கக்கள் அவர்களுக்கு உங்கள் ஆக்கணக்களை அனுப்பிவிட்டு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

வடலி, பூவரசி போன்றவையும் மலிவாக அடிக்கக்கூடியாவை. இந்தியாவில் எம்மவர்களது.  இலங்கையில் நான் இருதடவைகள் ஜீவநதி ஊடாக அடித்திருந்தேன்.

நீங்களே எல்லாவற்றையும் வடிவமைத்து - அட்டைப்படம், தலைப்பு, பின்னட்டை, எழுத்துப்பிழை என்பவற்றைச் சரிசெய்து வேண்டுமானால் நீங்களே புதிய ஒரு நிறுவனதின் பெயரில் வெளியீட்டையும் செய்யலாம். முக்கியமாக  ISBN,  வெளியீட்டு உரிமம் எடுப்பது அவசியம். மிகமுக்கியம் எழுத்துக்களின் அளவை சரிபார்க்க வேண்டும்.

நான் முதல்முறை லண்டனில் நூல் வெளியீடு செய்தபோது கிட்டத்தட்ட 100 பேர் வந்திருந்தனர். எனக்கு அதில் செலவு போக 400 பவுண்டஸ் மிஞ்சியது. இரண்டாவது நூலை இலங்கையில் வெளியீடு செய்தபோது நான் யாரிடமும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை.  அதில் எனக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் இலாபமாகக் கிடத்தது. என் ஊரவர்க்கு என்னைப் பற்றித் தெரிவதே எத்தனை பெரிது. 

ஆனால் இந்தியாவில் வெளியிட்டால் எதுவும் இல்லை. யாருக்கும் எம்மைத் தெரியப் போவதில்லை.

நீங்கள் பணம் செலுத்தி அமேசனில் ஏற்றிவிடலாம் தான். ஆனால் ஒரு நூல் வெளியீடு செய்யப்பட்டு விமர்சிக்கப்படும்போது  ஏற்படும் திருப்தி பதிவேற்றிவிட்டு வருமானம் பார்ப்பதில் வராது.

இலங்கையில் அடிப்பதானால் எம் உறவுகள் நான்குபேர் பயனடைவார்கள்.

வேண்டுமானால் இலத்திரணியல் நூலாகவும் நூலாகவும் வெளியிடுவது இன்னும் சிறந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றி அக்கா.

ஒரு நண்பருக்காக, இந்த புதிய தொழில் நுட்பம் குறித்து ஆராய்ந்தேன்.

இந்தியாவில் அல்லது இலங்கையில் இருந்து அடித்து எடுக்கும் போது, கப்பல், clearance என்று எக்கச்சக்க பில் வருகிறது என்று கவலை தெரிவித்தார். அச்சடித்து செலவு செய்து கொண்டு வந்து விற்க முடியாத புத்தங்கள்..... கேள்வியை முடிக்க முன்னர்.... அவை மனம் தளர வைக்கும் பாகங்கள் என்றார்.

இவரது மனைவி, புத்தகம் எழுதி, இந்தியாவில் format செய்வித்து, அமேசானின் ஏத்தி, 20 புத்தகங்களும் அனுப்பிவைக்க £500 வாங்கி இருக்கிறார்கள்.

இரண்டாவது புத்தகத்துக்கு என்னுடன் பேசியபோதே, ஆராய்ந்து அவருக்கு கொடுத்த தகவல் படி £500 அநியாய உருவல் காசு. Ripoff!!

உண்மையில், format, book கவரும் நாமே செய்து அமேசானில் upload பண்ண கூடியதாக, அவர்கள் சொல்லும் வழிமுறைகளை தொடர்ந்தால், மிக இலகு.

upload பண்ணிய பின்னர், அந்த புத்தகத்தினை print பண்ண மட்டும் எவ்வளவு என்று சொல்வார்கள். உதாரணமாக,  கருப்பு வெள்ளை படங்கள் மட்டும் கொண்ட 200 பக்க புத்தகத்துக்கு £2.83 வரும். அதனுடன் ஒரு £2.75 விநியோக செலவையும் கட்டினால், proof கொப்பி ஆர்டர் பண்ணலாம். (upload பண்ணுபவர் மட்டுமே). இந்த cost புத்தக சைஸ் அளவுக்கு மாறுபடும். 

சில correction இருந்தால், திருத்தி, அதனை மீண்டும் upload பண்ணி, மீண்டும் proof கொப்பி ஆர்டர் பண்ணி பார்க்கலாம். proof கொப்பியில் not for reselling என்று போட்டிருப்பார்கள்.

பைனல் ஆக, திருப்தியானவுடன், publishing approval கொடுக்கலாம். அதன் பின்னர், 72 மணிநேரத்தில், அது (உண்மையில் 24 மணிநேரம்) அது publish ஆகும் என்று சொல்லும்.

உங்களுக்கு ஈமெயில் வந்ததும், authors காப்பி என்று, 25 அல்லது 50 என்று ஆர்டர் பண்ணி, வேண்டியவர்களுக்கு கொடுக்கலாம். விற்கலாம்.

அல்லது லிங்கினை நண்பர்களுக்கு அனுப்பலாம். அவர்களே ஆர்டர் பண்ணி எடுத்துக் கொள்வார்கள். ஆனால், amazon 60% வரை கமிஷன் அடிப்பார்கள். அவர்கள் ஓடர் பண்ணும் போது, விற்பணை விலையில் அறவிடப்படும்.

ஆனால், நஷடம் இராது. உதாரணமாக, கனடாவில் நிழலி ஆர்டர் பண்ணினால் அமேசன் அங்கேயே பிரிண்ட் பண்ணி அனுப்பி விடும். அவர் prime member ஆயின் வினயோகம் இலவசம். இல்லாவிடில் அவரே விநயோக செலவையும் சேர்த்துக் கொடுப்பார். ஆக புத்தகம் எழுதியவருக்கு இந்த செலவு இல்லை. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா என்று நண்பர்கள், உறவுகள் இருந்தால், இது மாபெரும் உதவி தானே!

மேலே சொன்ன நண்பருக்கு, அவர்களே upload பண்ணி, 20 authors கொப்பியினை ஆர்டர் பண்ணி, இங்கிலாந்து விலாசத்தினை கொடுத்து இருக்கிறார்கள். கில்லாடிகள். விசயம் தெரியாதவர்களுக்கு, ஆகா புத்தகம் வந்து விட்டது என்று சந்தோசம்.

இந்த தொழில் நுட்பம், print on demand. அதாவது ஆர்டர் செய்யப்படும்போது மட்டுமே பிரிண்ட் ஆகி அனுப்பப்படும்.

இருந்தாலும், சில தொழில் நுட்ப விடயங்களில் பரீட்ச்சயமாக, கொஞ்சம் நேரம் எடுக்கலாம். ஆனால் பிரயோசனமானது.

100 books = 100 * 2,83 = £283

+ delivery (another £ 40 to £50)

இதுக்கு மேலே ISBN எடுக்க வேண்டும். அதன் விலை ஒன்றுக்கு £92. 10க்கு 172.

மேலும், அதனை எடுத்தால், legal requirement என்று British Library க்கு 6 கொப்பிகள் அனுப்பி வைக்க வேண்டும். 

எனினும் அமேசனில் மட்டுமே புத்தகத்தை விற்பதாக இருந்தால் அவர்கள் தரும் இலவச (ISBN போன்ற) இலக்கத்தைப் பாவிக்கலாம். அந்த வகையில் legal requirement இராது.

@ஈழப்பிரியன்@goshan_che@நிழலி

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.