Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆமாஞ்சாமி,

பழைய அல்ல, அதரப் பழசு 😁

இந்த அதரப் பழசுக்கு கரண்டு கொடுப்பதில் பலனில்லையே சாமீ...கரண்டை கட் பண்ணிக்கிறேன்   சாமியோவ்

  • Replies 131
  • Views 11.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எனது கருத்து, 1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை.  எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட

  • குமாரசாமி
    குமாரசாமி

    எழுதுங்கள். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் வந்தால் அது ஒட்டுமொத்த பிரச்சனையாகாது.   ஒரு சில பல இடங்களில்  நீங்களும் நானும் முரண்பட்டாலும் உங்கள் எழுத்தின் வாசகன் நான்.

  • ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இரு

  • கருத்துக்கள உறவுகள்

RANIL-1.jpg?resize=697,375&ssl=1

கூட்டு இமாலய பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு !

உலக தமிழ் மன்றமும் முக்கிய பௌத்த துறவிகளும் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது கூட்டு இமாலய பிரகடனத்தை அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

சமூக நல்வாழ்வை முதன்மைப்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்தும் குறித்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1362526

  • கருத்துக்கள உறவுகள்

ulaga.jpg?resize=700,375&ssl=1

உலகத் தமிழர் பேரவையினர் மகாநாயக்க தேரர்களுடன் சந்திப்பு!

நாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட உலகத் தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரன், நாட்டின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்குமாக இருந்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் இலங்கைக்குள் முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவே உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

உலக தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், பவான் பவகுகன், வேலுப்பிள்ளை குகனேந்திரன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், கனடாவிலிருந்து ராஜ் தவரத்னசிங்கம், அமெரிக்காவிலிருந்து கலாநிதி ஜெயராஜா ஆகியோர் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று கண்டி மல்வத்து மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டனர்.

நாட்டில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு, அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து தீர்வினை பெற்றுக் கொள்வது தொடர்பான யோசனைகளையும் இதன்போது இந்தக் குழுவினர் மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்தனர்.

மேலும், நாட்டு மக்கள் அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய வகையிலான யோசனைகளை உள்ளடக்கிய இலங்கையைப் பற்றிய இமயமலைப் பிரகடனம் தொடர்பாகவும் இவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

https://athavannews.com/2023/1362612

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய தமிழர் அமைப்பு ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

புதிய இணைப்பு

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளனர். 

குறித்த சந்திப்பானது நேற்றைய தினம்(07.12.2023) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சந்திப்பில் அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம், மறுசீரமைப்பு

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை “இமயமலைப் பிரகடனம்” உள்ளடக்கியுள்ளது.

இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பில் மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் இங்கு குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானிய தமிழர் அமைப்பு ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு | Representatives Of The World Tamil Council Lanka

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 

பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஆனால், பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்த்தது. வடக்கு - கிழக்கு மக்கள் இதனை பல வருடங்களாக அனுபவித்தனர். 
 
புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் அவசியம். இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை. ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

மேலும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் பாதித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

https://tamilwin.com/article/representatives-of-the-world-tamil-council-lanka-1701941992

பிரித்தானிய தமிழர் அமைப்பு ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு | Representatives Of The World Tamil Council Lanka

  • கருத்துக்கள உறவுகள்

இடது பக்கமிருந்து மூன்றாவதாக நிறபவர் வட கரோலினாவில் இருக்கும் ஜெயராசா என்வபர் நீண்டகால நட்புடையவர்.

மகனும் இங்கு இடம்மாறி வாழ்வதால் அடிக்கடி சந்திப்பதுண்டு.

அனேகமாக அடுத்த வெள்ளிக்கிழமை நத்தார் பாட்டியில் சந்திப்போம் என எண்ணுகிறேன்.

கடந்த வருட நத்தார் பாட்டியிலும் சந்தித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

தீர்வுகள்+ பொருளாதாரம் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ulaga.jpg?resize=700,375&ssl=1

உலகத் தமிழர் பேரவையினர் மகாநாயக்க தேரர்களுடன் சந்திப்பு!

நாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட உலகத் தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரன், நாட்டின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்குமாக இருந்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் இலங்கைக்குள் முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவே உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

உலக தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், பவான் பவகுகன், வேலுப்பிள்ளை குகனேந்திரன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், கனடாவிலிருந்து ராஜ் தவரத்னசிங்கம், அமெரிக்காவிலிருந்து கலாநிதி ஜெயராஜா ஆகியோர் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று கண்டி மல்வத்து மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டனர்.

நாட்டில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு, அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து தீர்வினை பெற்றுக் கொள்வது தொடர்பான யோசனைகளையும் இதன்போது இந்தக் குழுவினர் மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்தனர்.

மேலும், நாட்டு மக்கள் அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய வகையிலான யோசனைகளை உள்ளடக்கிய இலங்கையைப் பற்றிய இமயமலைப் பிரகடனம் தொடர்பாகவும் இவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

https://athavannews.com/2023/1362612

அதென்ன இமயமலை பிரகடனம்? ஒரு சிறிய குன்றையே நகர்த்த முடியாத நாட்டில இமய மலையா?

என்னவோ  மகா நாயக்க தேரர்களின் ஆசிர்வாதம் கிடைத்திருக்குது. சாது சாது சாது ..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினை தீர்வுக்கு எம்மால் தடையில்லை : அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகள் உலகத்தமிழர் பேரவையிடத்தில் தெரிவிப்பு

09 DEC, 2023 | 10:43 AM
image
 
(ஆர்.ராம்)

நாட்டில் இனப்பிரச்சினை உட்பட அனைத்துவிதமான பிரச்சினைகளும் நீடித்துக்கொண்டிருப்பதற்கு பௌத்த தேரர்களே காரணமாக உள்ளனர் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிலையில் நிரந்தரமான சமாதனம் ஏற்படுவதற்கு நாம் எப்போது தடைகளை ஏற்படுத்தவில்லை.

அனைத்து மக்களும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் மற்றும் மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உலகத்தமிழர் பேரவையிடத்தில் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

பௌத்த தேரர்கள் ஒருங்கிணைந்த சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் நேற்றுக்காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டதோடு, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடல்களில் கலந்துக்கொண்டனர் . 

இந்தச் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

முதலில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை குறித்த குழுவினர் சந்தித்தனர். இதன்போது இமயமலைப் பிரகடனம் அவரிடத்தில் கையளிக்கப்பட்டதோடு, அதனடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் சம்பந்தமாக தெளிவு படுத்தப்பட்டது.

அச்சமயத்தில் நிறைவேற்றப்பட்ட இமயமலைப் பிரகடனத்தை தான் ஏற்கனவே அறிந்திருப்பதாக தெரிவித்த மகாநாயக்க தேரர், குறித்த பிரகடனம் மக்களிடையே பிரசாரம் செய்யப்பட்டு உரிய கலந்துரையாடல்கள் பரந்துபட்ட அளவில் செய்யப்பட்டு மக்களுக்கு இடையிலான பிரச்சினைகள் மக்களின் பங்கேற்புடனேயே தீர்க்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் அத்தோடு, நான், சகோதரத்துவம், சமாதானம், சமத்துவம் என்ற நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதையே தொடர்ச்சியாக விரும்புகின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்துரூபவ் மல்வத்து பீடத்துக்குச் சென்ற குறித்த குழுவினர், மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து உரையாடினார்கள். 

இதன்போது, நாட்டில் காணப்படுகின்ற பல பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலமாக தீர்க முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

போர் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டிருந்தேன். சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்திருந்தேன். எனினும் அவை கைகூடியிருக்கவில்லை.

பின்னர் போர் முடிவுக்கு வந்ததையடுத்துரூபவ் திருகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கின் முக்கிய பகுதிகளுக்கு நேரடியாகவே விஜயங்களை மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டேன். அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினேன். 

விசேடமாக, பாடசாலைகள் மீள்கட்டுமானம், குடிநீருக்கான கிணறுகள் நிர்மாணம், உள்ளிட்டவற்றுக்கு உதவிகளை வழங்க முடிந்திருந்தது.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதைய சூழலில் மிகவும் பாதிப்படைந்திருப்பதனால் அவர்களுக்கு உரிய உதவிகளை தெற்கிலிருந்து தான் செய்ய வேண்டும். அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றோம்.

இதேநேரம், தமிழ் மக்களிடையே பௌத்த மதகுருமார்கள் தான் இந்த நாட்டில் இனப்பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் நீடிப்பதற்கு காரணமாக இருக்கின்றார்கள். அவர்கள் தான் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் என்ற நிலைப்பாடு விதைக்கப்பட்டுள்ளது. 

நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தடையானவர்களாக இருக்கப்போவதில்லை. நானும் இலங்கையர் என்ற வகையில் தமிழர், முஸ்லிம், சிங்களவர்கள் என் பாரபட்சம் பாராமல் பிரச்சினைகளுக்கு நிரந்தமான முற்றுப்புள்ளி வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் ஊடாக நிரந்தரமான சமாதானமும் சாந்தியும் நாட்டில் தோற்றம் பெற வேண்டும். அதற்காக குறித்த குழுவினரை ஆசீர்வதிக்கின்றேன்.

மேலும், தலதா மாளிகைக்கு சென்று அங்கே வரலாற்று பெருமை மிக்க வணக்க தலத்தினை பார்வையிடுமாறு கோருகின்றேன் என்றார். இதனையடுத்து குறித்த குழுவினர் தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/171298

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20231209-WA0016.jpg?resize=750,375&s

உலக தமிழர் பேரவை யாழ்ப்பாணம் விஜயம்.

உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர்.
 
இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.
 
அத்துடன்,  நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லத்திற்கும் விஜயம் செய்தனர்.
 
IMG-20231209-WA0011.jpg?resize=600,338&s
 
IMG-20231209-WA0016.jpg?resize=600,338&s
 
###############     ##################    ##################   #################

01-11.jpg?resize=750,375&ssl=1

தமிழ் பேரவையினரிடம் தீர்வு கோரிய நல்லை ஆதீன செயலாளர்.

நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் எல்லாருமாக இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. உங்களைப்போல் பலர் இங்கே வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பின்னர் அவ்வாறே போய்விடுவார்கள். அதனால், எந்த முடிவோ எந்த தீர்வோ எட்டப்படுவதில்லை.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட நீங்கள் இருக்கும் கதிரையில் இருந்து என்னிடம் பல பிரச்சினைகளை கேட்டறிந்தார். நாங்களும் பல விடயங்களை கூறினோம். அவ்வாறே போய்விட்டார். எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிவேலைகளை செய்ய முடியாதுள்ளது அங்கே பல இடர்பாடுகள் தொல்பொருள் திணைக் களத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது.

அதேபோல காங்கேசன் துறை பகுதியை எடுத்துக்கொண்டால், எங்களுடைய சித்தர்கள் இருந்த இடங்கள் சமாதிகளை இடித்து புராதன கோவில்களை இடித்து ஜனாதிபதி மாளிகையினை கட்டி விட்டு இன்று அந்த இடத்தை வேறு யாருக்கோ விற்க முற்படுகிறார்கள்.

இது எல்லாம் பிழையான விடயம் தானே ? முதலில் இந்த பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் போது தான் எமக்கு ஒரு நம்பிக்கை வரும். தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று தருவீர்கள் என்று.

எனவே, இந்த விடயத்தை உடனடியாக கருத்தில் எடுத்து இதனை செயல்படுத்த நீங்கள் முன் வாருங்கள் பார்ப்போம். அதேபோல இந்த பிரச்சனை தொடர்பில் அஸ்திரிய பீடத்தினர் கூட இங்கே வருகை தந்து ஆதினத்தை சந்தித்த போது பல விடயங்களை எடுத்துரைத்தோம்.

அவையும் , காற்றில் போய்விட்டது. அதேபோல நீங்களும் போக கூடாது. நீங்களும் இந்த விடயங்களை கருத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் “என தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1362641

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6 தடவைகள் பிரபாகரனை சந்திக்க முயன்றும் அது கைகூடவில்லையென்றார் மல்வத்து மகாநாயக்க தேரர் - உலக தமிழர் பேரவையின் தலைவர்

09 DEC, 2023 | 02:04 PM
image
 
யுத்த காலத்தில் மல்வத்து மகாநாயக்க தேரர் ஆறு தடவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க முயன்றதாகவும் ஆனால், அந்த விடயம் கைகூடவில்லை என தம்மிடம் தெரிவித்ததாகவும் உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். 

நல்லூர் கந்தசுவாமி கோயிலை வழிபட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், 

இலங்கைக்கு வருகை தந்து பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். அதேபோல மும்மத தலைவர்கள், மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

கிறிஸ்தவ தலைவர்களையும் சந்தித்திருந்தோம். அவர்களை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும்; நடந்த போர்க்குற்றங்கள் போன்றவற்றுக்கு பொறுப்புக் கூறல் ஒரு முக்கியமான விடயம்; வெளிநாடுகளின் பிரேரணைகளை நிறைவேற்ற வேண்டியதும்  முக்கியமான விடயம் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பிரேரணை ஒன்றை  நாங்கள் ஜனாதிபதி மற்றும் ஏனையோரிடம் கையளித்திருக்கிறோம். 

அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மதகுருமார்களுடன் ஒன்று சேர்ந்து 25 மாவட்டங்களுக்குச் சென்று இந்த பிரச்சினைளுக்கு ஒரு தீர்வினை, ஒன்றிணைந்து மக்களாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களது அடிப்படை நோக்கம். 

நாங்கள் அரசியல்வாதிகளை சந்திப்பதன் நோக்கம், இப்படியான வேலைத்திட்டத்தை நாங்கள் செய்கின்றோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு வெளிப்படையாக கூறுவதற்காகவே ஆகும். இதை குறை கூறக்கூடாது அல்லது குறை கூறும் அமைப்பாக எங்களை பார்க்கக் கூடாது. 

குறிப்பாக, அரசாங்கத்தின் வேலைத்திட்டம் அல்லது பௌத்தர்களின் வேலைத்திட்டம் என்று குறை கூறக் கூடாது என்பதற்காக நாங்கள் அரசியல்வாதிகளுக்கும் திட்டத்தினை தெளிவாக கூறி, இதை மக்கள்மயப்படுத்துவதே எமது நோக்கம். மக்களே தீர்ப்பு கூற வேண்டும் என்பது எமது நோக்கம். 

அரசியல்வாதிகள் குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளையும் அதாவது கோட்டா தவிர ஏனையோரை சந்திக்கவுள்ளோம். 

பலதரப்பட்ட சமூகத்தினரை சந்தித்து வேலைத்திட்டத்தினை மக்கள்மயப்படுத்தி,  மக்கள் மத்தியில் வருகின்ற தீர்வுகள்தான் நிரந்தரமானதாக இருக்கும் என்றே நாங்கள் சிந்திக்கின்றோம். 

அஸ்கிரிய பீடத்தினை நாங்கள் சந்தித்தபோது மகாநாயக்க தேரர், 

'சகோதரத்துவம், சமதர்மம், சமாதானம் என்ற அடிப்படையில் வேலை செய்தால் இலங்கை என்ற நாட்டில் பிரச்சினைகள் இருக்காது. அப்படி அரசியல்வாதிகள் செய்வதில்லை. நீங்கள் இப்படி மக்களிடம் செல்லப் போவதை நான் வரவேற்கிறேன். இதற்கு நான் நிச்சயமாக உறுதுணையாக இருப்பேன். அதனை நான் வெளிப்படையாகவே கூறி, ஆதரவு தருகிறேன்' என்று கூறினார். 

அதேபோல மல்வத்து மகாநாயக்க தேரர், தான் போர்க்காலத்தில் கூட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்காக ஆறு தடவை அப்போதைய அரசாங்கங்களை கேட்டதாகவும், அதற்கு அரசாங்கம் விடாதிருந்தபோது, ஆறாவது தடவையாக பிரபாகரனை காண வேண்டும் என்று வவுனியா வரை தான் வந்ததாகவும், ஆனால் அது கைகூடவில்லை எனவும், போர்க்காலத்தில் கூட ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும், சமாதானத்தை கொண்டு வர வேண்டும் என்ற விடயத்தில் தாங்கள் ஈடுபட்டதாகவும், இப்படி மக்கள்மயமாகி அரசியல்வாதிகளை தவிர்த்து மக்கள் மூலமாக ஒரு தீர்வு வருவதற்கான நோக்கம், ஒரு நல்ல நோக்கம் தான். அதை தான் ஆதரிப்பதாகவும்  வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறி எங்களை வழியனுப்பினார் என்று குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/171317

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுரேன்தான் சோனியா அம்மையார் கருணையோடு பேசினார். அவர் முகத்தில் கருணையைத்தன்னதால் பார்க்க முடிந்தது என்று அறிக்கை விட்டவர்.இனப்படுகொலைைப் பங்காளிக்கு வக்காலத்து வாங்கின ஆள் பேச்சுவார்ததைக்குப் போனால்என்ன நடக்கும்?. மேலும் உலகத்தமிழர் பேரவையில் இம்மானுவல் அடிகளாரையும் சுரேன் என்ற 2 பேரையும் கொண்ட அமைப்பு. வேறுயாராவுது மக்களுக்கு அறிமுகமானவர்கள் இருக்கின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அதை தான் ஆதரிப்பதாகவும்  வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறி எங்களை வழியனுப்பினார் என்று குறிப்பிட்டார். 

வடகிழக்கில் நாளாந்தம் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கிறதே அதைப்பற்றி மூச்சே விடலைப்போல இருக்கு.

எல்லாவற்றையும் ஆதரிப்பதாக கூறியவர்களுக்கு இந்தப் பிரச்சனை பற்றி எதுவுமே தெரியாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த  ஐ.நா ..சுரேந்திரனிடம்...என் சார்பாகவும்...இந்த அடிகளார் ...சொன்னதையும் ..ஞாபகமூட்டிவிடுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20231209-WA0016.jpg?resize=750,375&s

உலக தமிழர் பேரவை யாழ்ப்பாணம் விஜயம்.

உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர்.
 
இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.
 
அத்துடன்,  நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லத்திற்கும் விஜயம் செய்தனர்.
 
IMG-20231209-WA0011.jpg?resize=600,338&s
 
IMG-20231209-WA0016.jpg?resize=600,338&s
 
###############     ##################    ##################   #################

01-11.jpg?resize=750,375&ssl=1

தமிழ் பேரவையினரிடம் தீர்வு கோரிய நல்லை ஆதீன செயலாளர்.

நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் எல்லாருமாக இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. உங்களைப்போல் பலர் இங்கே வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பின்னர் அவ்வாறே போய்விடுவார்கள். அதனால், எந்த முடிவோ எந்த தீர்வோ எட்டப்படுவதில்லை.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட நீங்கள் இருக்கும் கதிரையில் இருந்து என்னிடம் பல பிரச்சினைகளை கேட்டறிந்தார். நாங்களும் பல விடயங்களை கூறினோம். அவ்வாறே போய்விட்டார். எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிவேலைகளை செய்ய முடியாதுள்ளது அங்கே பல இடர்பாடுகள் தொல்பொருள் திணைக் களத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது.

அதேபோல காங்கேசன் துறை பகுதியை எடுத்துக்கொண்டால், எங்களுடைய சித்தர்கள் இருந்த இடங்கள் சமாதிகளை இடித்து புராதன கோவில்களை இடித்து ஜனாதிபதி மாளிகையினை கட்டி விட்டு இன்று அந்த இடத்தை வேறு யாருக்கோ விற்க முற்படுகிறார்கள்.

இது எல்லாம் பிழையான விடயம் தானே ? முதலில் இந்த பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் போது தான் எமக்கு ஒரு நம்பிக்கை வரும். தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று தருவீர்கள் என்று.

எனவே, இந்த விடயத்தை உடனடியாக கருத்தில் எடுத்து இதனை செயல்படுத்த நீங்கள் முன் வாருங்கள் பார்ப்போம். அதேபோல இந்த பிரச்சனை தொடர்பில் அஸ்திரிய பீடத்தினர் கூட இங்கே வருகை தந்து ஆதினத்தை சந்தித்த போது பல விடயங்களை எடுத்துரைத்தோம்.

அவையும் , காற்றில் போய்விட்டது. அதேபோல நீங்களும் போக கூடாது. நீங்களும் இந்த விடயங்களை கருத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் “என தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இமயமலை பிரகடன சுரேந்திரனுக்கு... இந்த மனித உரிமை செயல்பாட்டாள்ற்... மீனாட்சி கங்குலி  அம்மனீ ..சொன்னதும் தெரியுமோ...{( நன்றீ ...ஒரு பேப்பருக்கு...)

இலங்கை ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின்  அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி விமர்சித்துள்ளார்.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக "மூன்று தசாபத்தங்களாக (1983-2009) நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக இலங்கை அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது தமிழர்களை தடுத்து வைத்துள்ளனர்.

சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு பயங்கரவாத தடுப்பு சட்டம் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்திருந்த போதும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்வது மாத்திரமன்றி அதனை இரத்து செய்யும் வரை அதனை பயன்படுத்த தடை வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இலங்கை அதிகாரிகள் பயன்படுத்துவது கொடூரமான துஸ்பிரயோகம் ஆகும். ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் ஓரங்கட்டுகிறது என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

இந்த சுரேன்தான் சோனியா அம்மையார் கருணையோடு பேசினார். அவர் முகத்தில் கருணையைத்தன்னதால் பார்க்க முடிந்தது என்று அறிக்கை விட்டவர்.இனப்படுகொலைைப் பங்காளிக்கு வக்காலத்து வாங்கின ஆள் பேச்சுவார்ததைக்குப் போனால்என்ன நடக்கும்?. மேலும் உலகத்தமிழர் பேரவையில் இம்மானுவல் அடிகளாரையும் சுரேன் என்ற 2 பேரையும் கொண்ட அமைப்பு. வேறுயாராவுது மக்களுக்கு அறிமுகமானவர்கள் இருக்கின்றார்களா?

யார் யாரெல்லாம்பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளலாம்?  யார் யாரெல்லாம் பங்கெடுக்கக் கூடாது? 

ஏதாவது பரிந்துரை? 

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா, தேரர்களுக்கு நல்லூர் சாமிகள் பீச்சல் பயம்தான் போலை.🤪

யார் வந்தாலும் மேலங்கிகள் இல்லாமல் தான் நல்லூருக்குள்ளை போக வேணும் என்டு சட்டமாக்கும். ஆனால், தேரர் வந்தால் சட்டத்தையெல்லாம் பட்டமாக்கிப் போடுவாங்கள் போலை. 

அந்தப் பயம் இருக்கோணும், மொட்டையளா கொக்காவா!

(மத நல்லிணக்கம் என்டால் ஒருத்தரின்டையை மத்தவர் மதிக்கோணும் எல்லோ! இல்லை?)

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நன்னிச் சோழன் said:

என்னப்பா, தேரர்களுக்கு நல்லூர் சாமிகள் பீச்சல் பயம்தான் போலை.🤪

யார் வந்தாலும் மேலங்கிகள் இல்லாமல் தான் நல்லூருக்குள்ளை போக வேணும் என்டு சட்டமாக்கும். ஆனால், தேரர் வந்தால் சட்டத்தையெல்லாம் பட்டமாக்கிப் போடுவாங்கள் போலை. 

அந்தப் பயம் இருக்கோணும், மொட்டையளா கொக்காவா!

(மத நல்லிணக்கம் என்டால் ஒருத்தரின்டையை மத்தவர் மதிக்கோணும் எல்லோ! இல்லை?)

நன்னி

இது நல்லை ஆதீனம்.

  • கருத்துக்கள உறவுகள்+
12 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்னி

இது நல்லை ஆதீனம்.

ஐயனே நான் கேட்டது, கோவிலுக்குள்ளை போனதைப் பற்றி, மடாலயத்துக்குள்ளை போனதைப் பற்றி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எப்படியோ இங்கு வர முடியாமல் இருந்த சில தமிழர்களுக்கு இங்கு வந்து நாட்டிடை சுற்றி பார்ப்பதட்கு ஒரு சந்தர்ப்பத்தை ரணில் ஐயா வழங்கி உள்ளார். நல்ல ஒரு உல்லாச பயணம் நிறைவேறி உள்ளது. மற்றப்படி பெரிதாக பேசுவதட்கு ஒன்றுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த கோமாளி கூட்டம் சொரிலங்கன் ஜனாதிபதியை சந்தித்து இருந்கான்கள் ம்ம்ம் நடக்கட்டும் அப்புறம் வழக்கம்போல் இரண்டாவது கட்ட ஒலக வங்கி பணம் .......

கிடைக்கும் அதை வைத்தே சிங்களவன் விளையாடுவான் 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20231209-WA0042.jpg?resize=750,375&s

யாழ்.மறை மாவட்ட ஆயரை சந்தித்த உலக தமிழர் பேரவை

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில், ஆயரை சந்தித்து கலந்துரையாடினர்

குறித்த சந்திப்பு தொடர்பில், உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவிக்கையில்,

யாழ் மறைமாவட்ட ஆயரை இன்றைய தினம் சனிக்கிழமை சந்தித்து, அவருக்கு நாங்கள் மேற்கொள்ள உள்ள வேலை திட்டம் தொடர்பில் விரிவாக விளங்கப்படுத்தினோம்.

எமது திட்டத்தினை நல்ல ஒரு திட்டம் இதை தான் வரவேற்பதாக தெரிவித்த ஆயர், மக்கள் மயப்படுத்தப்பட்ட திட்டத்தினை தாம் எப்போதும் வரவேற்போம், மேன்மேலும் இந்த விடயத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துமாறு, ஆயர் எம்மிடம் கோரினார் என தெரிவித்தார்.

IMG-20231209-WA0047.jpg?resize=600,280&s

IMG-20231209-WA0042.jpg?resize=600,280&s

IMG-20231209-WA0044.jpg?resize=600,280&s

https://athavannews.com/2023/1362665

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2023 at 05:39, ஏராளன் said:

முதலில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை குறித்த குழுவினர் சந்தித்தனர். இதன்போது இமயமலைப் பிரகடனம் அவரிடத்தில் கையளிக்கப்பட்டதோடு, அதனடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் சம்பந்தமாக தெளிவு படுத்தப்பட்டது.

அச்சமயத்தில் நிறைவேற்றப்பட்ட இமயமலைப் பிரகடனத்தை தான் ஏற்கனவே அறிந்திருப்பதாக தெரிவித்த மகாநாயக்க தேரர், குறித்த பிரகடனம் மக்களிடையே பிரசாரம் செய்யப்பட்டு உரிய கலந்துரையாடல்கள் பரந்துபட்ட அளவில் செய்யப்பட்டு மக்களுக்கு இடையிலான பிரச்சினைகள் மக்களின் பங்கேற்புடனேயே தீர்க்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் அத்தோடு, நான், சகோதரத்துவம், சமாதானம், சமத்துவம் என்ற நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதையே தொடர்ச்சியாக விரும்புகின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதென்னப்பா!இமயமலைப் பிரகடனம். மகாநாயக்கர்களுக்கும் அதுபற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கிறதாம். ஆனால் தெரிய வேண்டிய தமிழ்மக்களுக்குத் தெரியவில்லையே. இமயமலைப் பிரகடனம் என்றால் இந்தியா இதற்குள் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதானே பொருள்.

On 9/12/2023 at 17:53, Kapithan said:

யார் யாரெல்லாம்பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளலாம்?  யார் யாரெல்லாம் பங்கெடுக்கக் கூடாது? 

ஏதாவது பரிந்துரை? 

யாரெல்லாம் இந்தியாவுக்குகாவடி தூக்குகின்றனரோ அவர்கள் பங்கெடுக்கும் பேச்சுவார்தைகளால் எந்தப் பயனும் கிடையாது . ஆகவே அவர்கள் பங்குபெறத்தேவையில்லை. இது பட்டறிவு.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பலவேறு அமைப்புக்கள் இவ்வாறு சிங்கள மக்களுக்குள் இயங்கும் பலவேறு அமைப்புகளை சந்திப்பது உடனடி நன்மைகளை தராமல் விட்டாலும்  நீண்ட காலத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்த வல்லது. ஆகவே தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல அனைத்து அமைப்புகளும் இவ்வாறு தொடர்சசியான சந்திப்புகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.