Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2023-12-08-at-10.51.43-AM

இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு!

இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்களினாலேயே இது கையளிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை இமயமலைப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது.

இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பாக மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் இங்கு குறிப்பிட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.

புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் அவசியம் எனவும், இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் பாதித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

இதன்போது நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்தைப் பாராட்டிய உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், அதற்கு தமது முழு பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் இமயமலைப் பிரகடனம் வெளியிடக் கிடைத்தமை குறித்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

https://athavannews.com/2023/1362618

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு!

தலைப்பைப் என்னடா இமயமலையை கைப்பற்றப் போறாங்களோ என்று பயந்துட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைப்பைப் என்னடா இமயமலையை கைப்பற்றப் போறாங்களோ என்று பயந்துட்டேன்.

எனக்கும் ஒன்றும் புரியலை.கொஞ்சம் பெரிசா இருக்கட்டுமே என்று சொல்லி இருப்பார்களோ?? அதுக்கு இமயமலை???? அடப்பாவிகளா?😂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைப்பைப் என்னடா இமயமலையை கைப்பற்றப் போறாங்களோ என்று பயந்துட்டேன்.

 

14 minutes ago, விசுகு said:

எனக்கும் ஒன்றும் புரியலை.கொஞ்சம் பெரிசா இருக்கட்டுமே என்று சொல்லி இருப்பார்களோ?? அதுக்கு இமயமலை???? அடப்பாவிகளா?😂

அது ஒன்றுமில்லை......சும்மா இமயமலை வரைக்கும் நூல் விட்டுப் பார்க்கிறார்கள்.......வந்தால் மலை போனால் நூல்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

 

அது ஒன்றுமில்லை......சும்மா இமயமலை வரைக்கும் நூல் விட்டுப் பார்க்கிறார்கள்.......வந்தால் மலை போனால் நூல்........!  😂

வந்தா மலை போனால் உரோமம் என்பதற்கு கூட கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கணும். 😭அதுவே இமயமலை என்றால்??? ஆரம்பமே அசத்தல் என்று சொல்லக் கூட நப்பாசை கூட இடம் தருகுதில்லை?😭

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரகடனத்தின் பிரதி எங்கே கிடைக்கும்.

பிகு

தமிழில் நாம் ஒரு கஸ்டமான காரியத்தை செய்ய முயல்வதை, பகீரதபிரயத்தனம் (வட சொல்) என்போம்.

அதையே ஆங்கிலத்தில் ஹேர்கூலியன் முயற்சி Herculean effort என்பார்கள்.

இந்த சொல்லை பாவிக்க விரும்பாத இந்திய சுதேசிகள் (நேரு?) இமாலய முயற்சி (Himalayan effort) என பாவித்தனராம்.

 தீர்வை அடையும் கஸ்டமான முயற்சிக்கான பிரகடனம் என்ற தொனியில் Himalayan Declaration என வைத்தனரோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

 

 தீர்வை அடையும் கஸ்டமான முயற்சிக்கான பிரகடனம் என்ற தொனியில் Himalayan Declaration என வைத்தனரோ?

பிழையான ஊகம்.

பி ரி எப், பெளத்த பிக்குகளிடையான சந்திப்பு நேபாள் நாட்டில் Nagarkot என்ற இடத்தில் நடந்து, அதன் வழி வந்த பிரகடனம் என்பதால் இந்த பெயராம்.

 

https://www.tamilguardian.com/content/gtf-meets-sri-lankan-president-and-signs-joint-declaration-sinhala-buddhist-monks

 

பிரகடனம் 👇

https://www.tamilguardian.com/sites/default/files/Image/pictures/2023/Sri Lanka/231208 GTF Ranil/FINALHimalaya Declaration - English with signatories and titles with the date.pdf

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 4 அல்லது 5  பேர்தான்  பி.டி .எப் .. ஓ இல்லாட்டி லண்டன் காரர் முழுச்சனமுமோ....முந்தியும் இதே பேரோடை பாதிரி ஒருவர் 4 மாதம் அடுகிடு படுகிடையாய் கிடந்துபோட்டு வந்தவர்..இப்ப  இவயிலை ஆர் கிடக்கப் போகினம்...அப்ப இனி சனாதிபதி,மந்திரி,படைதலவர்மார் பயமில்லமல் லண்டன் போகலாமோ.....இனி மாவீரர் நாளும் லண் டனில் இல்லைப்போல...நாங்கள்  இனி ஒண் டுக்குள்ளை ஒன் றலோ...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, alvayan said:

லண்டன் காரர் முழுச்சன்முமோ....

இலண்டன் தமிழ் சனம் இவர்கள் எவர் பின்னாலும் இல்லை.

நினைவேந்தல் உட்பட செய்யவேண்டியதை செய்தபடி - ஒவ்வொரு “தலைமை” அல்லது குழுவினனையும் அவதானித்த படி உள்ளார்கள்.

இதுவரைக்கும் எவரும் நம்பிக்கை வரும் வண்ணம் நடக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன இமயமலைப் பிரகடனம்?  ஏதோ கரிக்குருவி கைலாசம் போன கதைமாதிரித் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இலண்டன் தமிழ் சனம் இவர்கள் எவர் பின்னாலும் இல்லை.

நினைவேந்தல் உட்பட செய்யவேண்டியதை செய்தபடி - ஒவ்வொரு “தலைமை” அல்லது குழுவினனையும் அவதானித்த படி உள்ளார்கள்.

இதுவரைக்கும் எவரும் நம்பிக்கை வரும் வண்ணம் நடக்கவில்லை.

அப்ப இந்த கிருபா..   ஐ. நா . சபையில் நாங்கள் சமாதானமாகிவிட்டோம் என்று முழங்குவாரோ.....காவிமொட்டைகள்  காணி பிடிச்சு விகாரை கட்டமாட்டினமோ...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இந்த பிரகடனத்தின் பிரதி எங்கே கிடைக்கும்.

 

ஏன் இதை தேடி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போ

அப்படியென்றால் இனிமேல் இலங்கை என்ற பழைய நாடு இருக்காது   தமிழர்கள் கூட  புதிய நாட்டை கட்டியெழுப்ப தான் போராடினார்கள் 

13 hours ago, தமிழ் சிறி said:

ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.

ஏன்??  போரை  வென்ற சிங்களவர்களால். முடியாத???  தமிழர்களை வெட்டுவேன். ....தமிழர்கள் இந்தியாவுக்கு போங்கள்   என்ற தேரர்களுக்கு  இந்த பிரகடனம் தெரியுமா??  உங்கள் நண்பர் சரத் வீரசேகர   பிரகடனத்தை ஏற்றுக்கொள்வாரா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.