Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தினால் பார்க்கப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு டெஹ்ராடூனனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் வரவேற்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் மற்றும் கண்ணியம் நாளாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 9 அன்று, ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் பாரிய அட்டூழியங்களைத் தடுப்பதற்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி | Shavendra Silva Tamil Eelam Government Across

போர்க்குற்றவாளி

2019 ஆகஸ்ட் 19ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட், லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவின் பதவி உயர்வை கண்டித்தமையை நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதானி உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் 137 பக்கங்கள் கொண்ட விரிவான ஆவணத்தையும், சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் தொகுத்துள்ளது.

இந்தநிலையில் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ள இந்திய இராணுவம், போர்க்குற்றவாளி என்று கூறப்படும் ஒருவரை தலைமை விருந்தினராக வரவழைத்தமை ஏற்புடையதல்ல என்றும் உருத்திரகுமாரன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .

இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இந்திய இராணுவம் சிறப்பு கௌரவத்தினை வழங்கியுள்ளது.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய இராணுவ நிகழ்வு ஒன்றின் பிரதம அதிதியாக சவேந்திர சில்வா அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இராணுவ அகடமியின் பயிலுனர் படையினரின் பயிற்சி நிறைவு நிகழ்வில் சவேந்திர சில்வா பிரதம அதிதியாக பங்கேற்றுள்ளார்.

இதன்போது பயிற்சி முடிவடைந்து செல்லும் படையினர் விசேட இராணுவ அணிவகுப்பொன்றையும் சவேந்திர சில்வாவுக்கு வழங்கியுள்ளனர்.

சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம் (Photos) | Special Honor In India For Shavendra Silva

இந்திய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள்

இந்த இராணுவ பயிற்சியை சிறந்த முறையில் பூர்த்தி செய்து திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கௌரவிக்கும் வகையில் வாள்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா பயிற்சி பெற்று கலைந்து செல்லும் படையினருக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், கடின உழைப்பு மற்றும் கூட்டு முயற்சி என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கியுள்ளார்.

மேலும் இந்திய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் அதி உயர் தரங்களைக் கொண்டது எனவும் அவர் பாராட்டியுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGallery

https://tamilwin.com/article/shavendra-silva-tamil-eelam-government-across-1702698064

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநேக பெரிய நாடுகள் எல்லாம் விரட்டிய ஆளை இந்தியா நடுகூடத்துக்குள் வைத்து தோய வார்த்து அழகு பார்க்குது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தினால் பார்க்கப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு டெஹ்ராடூனனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் வரவேற்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

கடைசி நேரங்களில் நடந்த போர்க் குற்றங்களை மறைப்பதற்கு இதெல்லாம் தேவையாக இருக்கிறது.

இல்லாவிட்டால் இந்தியாவும் எப்போதாவது ஒருநாள் மாட்டுப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வேந்திர சில்வாவின் வாயை அடைப்பதற்குத்தான் இந்த நாடகம். 

ஆனா அவரோ USA யின் கட்டுப்பாட்டிலல்லோ இருக்கிறார் 😀

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

சர்வேந்திர சில்வாவின் வாயை அடைப்பதற்குத்தான் இந்த நாடகம். 

ஆனா அவரோ USA யின் கட்டுப்பாட்டிலல்லோ இருக்கிறார் 😀

அதுதான் விசயமே.

இன்று, இலங்கை முழுவதுமாக, மேற்கின் கைக்குள்.

அது, முற்று முழுவதுமாக, இலங்கை ராணுவத்தினை, பாதுகாப்பு தரப்பினரை கையகப்படுத்தி உள்ளது. ரணில், மிஞ்சினாலும், ராஜபக்சேக்கள் எல்லை மீறினாலும், கதை கந்தல்.

இதனாலேயே, இந்தியா கூப்பிட்டு, குலை அடிக்கிறது.

சவேந்திர சில்வாக்கு அமெரிக்கா ஆதரவு முக்கியம். அவர் எல்லை மீறினால், ஆளை கொண்டு போய், ஹெய்க்கில் நிப்பாட்டி வைக்கும் பலம் உண்டு என்று அவருக்கு தெரியும். அதாலை, போடுற, வடை கறி சாப்பிட்டினை தின்னு போட்டு, வருவார். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

சர்வேந்திர சில்வாவின் வாயை அடைப்பதற்குத்தான் இந்த நாடகம். 

ஆனா அவரோ USA யின் கட்டுப்பாட்டிலல்லோ இருக்கிறார் 😀

ஏற்கனவே தனது நம்பிக்கை நாயகன் கோத்தாவை கையை விட்டவராச்சே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அதுதான் விசயமே.

இன்று, இலங்கை முழுவதுமாக, மேற்கின் கைக்குள்.

அது, முற்று முழுவதுமாக, இலங்கை ராணுவத்தினை, பாதுகாப்பு தரப்பினரை கையகப்படுத்தி உள்ளது. ரணில், மிஞ்சினாலும், ராஜபக்சேக்கள் எல்லை மீறினாலும், கதை கந்தல்.

இதனாலேயே, இந்தியா கூப்பிட்டு, குலை அடிக்கிறது.

சவேந்திர சில்வாக்கு அமெரிக்கா ஆதரவு முக்கியம். அவர் எல்லை மீறினால், ஆளை கொண்டு போய், ஹெய்க்கில் நிப்பாட்டி வைக்கும் பலம் உண்டு என்று அவருக்கு தெரியும். அதாலை, போடுற, வடை கறி சாப்பிட்டினை தின்னு போட்டு, வருவார். அவ்வளவுதான்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே தனது நம்பிக்கை நாயகன் கோத்தாவை கையை விட்டவராச்சே.

அறகல கலகக்காறர்கள் கொட்டாபயவில் கைவைக்க வெளிக்கிடும்போது சவேந்திர வட அமெரிக்கத் தூதரகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

நிலைமை இப்படி இருக்கையில் சவேந்திர சில்லாவிற்கு "" பாரத ரத்னா"" கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ள இந்திய இராணுவம், போர்க்குற்றவாளி என்று கூறப்படும் ஒருவரை தலைமை விருந்தினராக வரவழைத்தமை ஏற்புடையதல்ல என்றும் உருத்திரகுமாரன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .

ஏதோ இந்தியா முதல்தடவையாகத் தமிழருக்கு எதிராகச் செயற்படுவதுபோல் சுட்டுவது ஏனோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nochchi said:

ஏதோ இந்தியா முதல்தடவையாகத் தமிழருக்கு எதிராகச் செயற்படுவதுபோல் சுட்டுவது ஏனோ?

இதெல்லாம் பெயருக்கு அழுகை 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை எதிர்கொள்ள ஹிந்தியாவிடம் எதுவுமே உருப்படியாக இல்லை. அதனால் தான் சீனச் சிங்களத்துக்கு அரிதாரம் பூசி மகிழ்கிறது. சிங்களத்தை தாஜா பண்ணலாம் என்று கனவு காண்கிறது. சிங்களம்.. இந்த ஹிந்தியாவை.. ஒரு போதும் முழுமையாக நம்பாது. இக்கட்டில்.. சீனப்பக்கமே அது சாயும். ஹிந்தியா.. இந்து சமுத்திரத்தின் பிரதான நண்பனான.. தமிழீழத்தின் நட்பை குறைத்து மதிப்பிட்டு.. இன்று நிர்க்கதியானது தான் மிச்சம். இப்ப செய்ய எதுவுமற்ற சூழலில்.. செய்யக் கூடாததை எல்லாம் செய்து காலம் கழிக்கிறது. இது ஹிந்தியாவை இன்னும் இன்னும் பலவீனப்படுத்துமே அன்றி பலப்படுத்த ஒரு சதவீதத்திற்கும் உதவாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

சீனாவை எதிர்கொள்ள ஹிந்தியாவிடம் எதுவுமே உருப்படியாக இல்லை. அதனால் தான் சீனச் சிங்களத்துக்கு அரிதாரம் பூசி மகிழ்கிறது

இதுதான் உண்மை இதற்காகவே காத்து இருந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

இதெல்லாம் பெயருக்கு அழுகை 

வரலாற்றுத் திரிப்பும், கண்மூடித்தனமான அறிக்கைகளும் கூட தமிழரது  விடியலுக்கு எதிரானதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:
Quote

சிங்களம்.. இந்த ஹிந்தியாவை.. ஒரு போதும் முழுமையாக நம்பாது.

சிங்களம் மட்டுமல்ல, இன, மத பேதம் இன்றி, இலங்கை வாழும் அனைவரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக நம்புவது, எக்காலத்திலும் இந்தியாவை நம்ப முடியாது, கூடாது என்று.

இரண்டு பக்கமும், முதுகில் குத்தி விட்டு, பின்னர், துவாரகா என்று ஒரு கூத்தினை காட்டினால், யாரு நம்புவார்கள்.

மாலைதீவு புட்டுக்கிச்சு, இலங்கையை மடக்கி பறிக்குள்ள போடலாம் எண்டால், சீனா காரன் வேட்டியோட, நயினாதீவுக்குள்ள நிக்குறான்.

என்ன தான் செய்வது?   

சவேந்திராவை கூப்பிட்டு, ஒரு ராணுவ....பு... ஏதாவது செய்ய முகாந்திரம் இருக்கோ எண்டு நூல் விட்டு பாக்கினமோ தெரியாது.

ஆனால் அதிலை திறமையான, மேற்கு ஆட்களும், அநுபவம் மிக்க அம்மணியும் உள்ள இருந்து பார்த்துக்கொண்டெல்லே இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அதிலை திறமையான, மேற்கு ஆட்களும், அநுபவம் மிக்க அம்மணியும் உள்ள இருந்து பார்த்துக்கொண்டெல்லே இருக்கினம்.

அப்பத்துக் காத்திருக்கும் குரங்குகளாக... 

5 hours ago, Nathamuni said:

மாலைதீவு புட்டுக்கிச்சு, இலங்கையை மடக்கி பறிக்குள்ள போடலாம் எண்டால், சீனா காரன் வேட்டியோட, நயினாதீவுக்குள்ள நிக்குறான்

ஆப்பிழுத்த குரங்காக...

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2023 at 07:48, பெருமாள் said:

போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தினால் பார்க்கப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு டெஹ்ராடூனனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரியில் வரவேற்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் மற்றும் கண்ணியம் நாளாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 9 அன்று, ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் பாரிய அட்டூழியங்களைத் தடுப்பதற்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி | Shavendra Silva Tamil Eelam Government Across

போர்க்குற்றவாளி

2019 ஆகஸ்ட் 19ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட், லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவின் பதவி உயர்வை கண்டித்தமையை நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதானி உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் 137 பக்கங்கள் கொண்ட விரிவான ஆவணத்தையும், சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் தொகுத்துள்ளது.

இந்தநிலையில் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ள இந்திய இராணுவம், போர்க்குற்றவாளி என்று கூறப்படும் ஒருவரை தலைமை விருந்தினராக வரவழைத்தமை ஏற்புடையதல்ல என்றும் உருத்திரகுமாரன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .

இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இந்திய இராணுவம் சிறப்பு கௌரவத்தினை வழங்கியுள்ளது.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய இராணுவ நிகழ்வு ஒன்றின் பிரதம அதிதியாக சவேந்திர சில்வா அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இராணுவ அகடமியின் பயிலுனர் படையினரின் பயிற்சி நிறைவு நிகழ்வில் சவேந்திர சில்வா பிரதம அதிதியாக பங்கேற்றுள்ளார்.

இதன்போது பயிற்சி முடிவடைந்து செல்லும் படையினர் விசேட இராணுவ அணிவகுப்பொன்றையும் சவேந்திர சில்வாவுக்கு வழங்கியுள்ளனர்.

சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம் (Photos) | Special Honor In India For Shavendra Silva

இந்திய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள்

இந்த இராணுவ பயிற்சியை சிறந்த முறையில் பூர்த்தி செய்து திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கௌரவிக்கும் வகையில் வாள்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம் (Photos) | Special Honor In India For Shavendra Silva

இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா பயிற்சி பெற்று கலைந்து செல்லும் படையினருக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், கடின உழைப்பு மற்றும் கூட்டு முயற்சி என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கியுள்ளார்.

மேலும் இந்திய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் அதி உயர் தரங்களைக் கொண்டது எனவும் அவர் பாராட்டியுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGallery

https://tamilwin.com/article/shavendra-silva-tamil-eelam-government-across-1702698064

இந்த கெளரவிப்பு, இராணுவ மரியாதை படங்களை யாழ் முகப்பில் நிரந்தரமாக தெரியும்வண்ணம் செய்ய வேண்டும்.

இந்தியா தமிழீழம் பெற்று தரும், இந்தியா தமிழர்களிக்கு தீர்வு பெற்று கொடுக்கும் என மக்களை ஏய்க்கும் இந்திய அபிமானிகள், மற்றும் இந்தியாவுக்கு அன்னக்காவடி எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் கண்களில் இவை எப்போதும் தென்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2023 at 04:42, நியாயம் said:

இந்த கெளரவிப்பு, இராணுவ மரியாதை படங்களை யாழ் முகப்பில் நிரந்தரமாக தெரியும்வண்ணம் செய்ய வேண்டும்.

இந்தியா தமிழீழம் பெற்று தரும், இந்தியா தமிழர்களிக்கு தீர்வு பெற்று கொடுக்கும் என மக்களை ஏய்க்கும் இந்திய அபிமானிகள், மற்றும் இந்தியாவுக்கு அன்னக்காவடி எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் கண்களில் இவை எப்போதும் தென்படவேண்டும்.

இந்தியா முதலில் தனது நலனைத்தான் முன்னிறுத்தும். இன்னும் இந்திய அரசியல் கொள்கை வகுப்பாளர்கள், வெளி நாட்டு கொள்கை வகுப்பாளர்கள் மலையாளிகளை கொண்ட ஒரு அமைப்பு. அது எப்போதும் இலங்கை அரசு சார்பான தீர்மானங்களையே எடுக்கும்.

எனவே இந்த தீர்மானங்கள் எல்லாம் வெளி நாட்டு கொள்கை வகுப்பாளர்களில் தங்கி உள்ளது. தமிழர் பிரச்சினை எல்லாம் அவர்களுக்கு ஒன்றுமே இல்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.