Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

 
நள்ளிரவு கட்டுநாயக அதிவேக  நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.
 
அவர் பயனித்த வாகனத்தில் 4 பேர் பயனித்துள்ளதாகவும்  அவர்களில் அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளதாக ராகம வைத்தியசலையில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
  • கருத்துக்கள உறவுகள்

விபத்தில் சனத் நிஷாந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இன்று அதிகாலை கந்தானைக்கு அருகில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று அதே திசையில் பயணித்த கொள்கலன் வாகனத்துடன் மோதி பின்னர் வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.

ஜீப்பில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 72542 ஜெயக்கொடி மற்றும் ஜீப் சாரதி ஆகியோர் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1-22.jpg

3.jpeg

https://thinakkural.lk/article/289327

  • கருத்துக்கள உறவுகள்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.

மறைந்த இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணி வரை பொரளை ஜயரத்னவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதேவேளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இறக்கும் போது சனத் நிஷாந்தவிற்கு 48 வயது.

https://thinakkural.lk/article/289377

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் மரணத்தின் பின்னர் குறையாக எழுதுவது சரியில்லைதான். ஆனாலும் சிங்களவர்கள் எழுதுவதை பார்க்கும்போது எவ்வளவு சந்தோச படுகிறார்கள் என்பதை காணலாம். ராஜபக்சேவின் வலது கரமாக திகழ்ந்தவர். நிறைய வழக்குகளும் உண்டு.

34 minutes ago, Cruso said:

ஒருவரின் மரணத்தின் பின்னர் குறையாக எழுதுவது சரியில்லைதான். ஆனாலும் சிங்களவர்கள் எழுதுவதை பார்க்கும்போது எவ்வளவு சந்தோச படுகிறார்கள் என்பதை காணலாம். ராஜபக்சேவின் வலது கரமாக திகழ்ந்தவர். நிறைய வழக்குகளும் உண்டு.

விபத்தால் சிதைந்து இருக்கும் உடலையும் வீடியோவில் காட்டி எழுதுகிறார்கள் (பிரேத அறையில் வளர்த்திய உடலை)

ஒருவர் இறந்த பின் அவர் சமூகத்தை சார்ந்தவர்களே இவ்வாறு தூற்றுவதற்குரிய கேவலமான ஒருவராக அவர் இருந்திருக்கின்றார்.

அண்மையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி தொடர்பாகவும் இப்ப எழுதி இருந்தார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதே அமைச்சர் தான் மது போதையில் சிறையில் இருந்த தமிழ்க் கைதிகளை துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியதாக சொல்கிறார்கள்.

அறகல ஆர்ப்பாட்டத்தின் போதும் கொடூரமாக தாக்கியவர் என்றும் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

இவர் பயணித்த இதே வாகனத்தால்... சில காலங்களுக்கு முன் வீதியால் சைக்கிளில் சென்றவரை விபத்துக்குள்ளாக்கியதில் அவர் வைத்தியசாலையில் இருந்து இறந்து விட்டாராம். அந்த வாகனத்தை அந்த நேரம் செலுத்தியவரும் இவர்தானாம். ஆனால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வேறு ஒருவர் ஓடியதாக காவல்துறையிடம் தெரிவித்து இவர் தப்பி விட்டதாக சொல்கிறார்கள்.

இதனைத்தான்... கர்மா என்பது.  ஆண்டவன் தீர்ப்பில் இருந்து எவரும் தப்ப முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதே அமைச்சர் தான் மது போதையில் சிறையில் இருந்த தமிழ்க் கைதிகளை துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியதாக சொல்கிறார்கள்.

அறகல ஆர்ப்பாட்டத்தின் போதும் கொடூரமாக தாக்கியவர் என்றும் சொல்கிறார்கள்.

அது ரத்வத்தையின் மகன் என்று நினைக்கின்றேன், ஈழப்பிரியன்..!

  • கருத்துக்கள உறவுகள்

இரவு நேரம் மணிக்கு கடுகதி பாதையில் 160 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்தப்பட்டதாம். 

அமைச்சர் அனுமதி இல்லாமல் சாரதி இப்படி வேகமாக ஓட வாய்ப்பு இல்லை.  முன்பும் இப்படி வேகமாக சென்றுள்ளார்கள் என கருதவேண்டி உள்ளது.

கண்மண் தெரியாமல் வாகனம் ஓடினால் சாவு வராமல் வேறு என்ன வரும்.  

தவிர, இலங்கை கடுகதி பாதைகள் இவ்வளவு வேகமாக ஓடல்கூடிய வகையில் இல்லை.  இதே கடுகதி பாதையில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் ஓடுபவர்கள் உள்ளார்கள். 

பதவி, அதிகாரம் உள்ளது என்பதற்காக எப்படியும் வாகனத்தை செலுத்தலாம் என நினைப்பவர்கள் உயிரில் ஆசை என்றால் இனியாவது இந்த விபத்தை பார்த்து திருந்தட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

அது ரத்வத்தையின் மகன் என்று நினைக்கின்றேன், ஈழப்பிரியன்..!

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார்.

 

தகவலுக்கு நன்றி புங்கை.

தவறான தகவலுக்கு வருந்துகிறேன்.

6 hours ago, நியாயம் said:

தவிர, இலங்கை கடுகதி பாதைகள் இவ்வளவு வேகமாக ஓடல்கூடிய வகையில் இல்லை.  இதே கடுகதி பாதையில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் ஓடுபவர்கள் உள்ளார்கள். 

கூடுதலான இடங்களில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

ஒரு மோட்டார் சைக்கிளை இவர்கள் ஏற்கனவே முந்தி போகும்போது வாகனம் தளம்பிக் கொண்டு சென்றதாகவும் அந்த நேரமே பொலிசுக்கு தகவல் சொல்ல வேண்டும் போல இருந்ததாகவும் இவர்கள் உருப்படியாக வீடு போய் சேரமாட்டார்கள் என்று தான் கருதியதாகவும் 

பின்னால் வந்து இவர்களது விபத்து பற்றி தகவல் கொடுத்த ஒருவர் சொல்லியிருக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

சனத் நிஷாந்தவின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு! - மஹிந்த ராஜபக்க்ஷ அனுதாபம்

Published By: VISHNU   26 JAN, 2024 | 06:42 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பு. புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் கொழும்பில் உள்ள மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆளும் மற்றும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பூதலுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல நாட்டுக்கும் பேரழிப்பு. அச்சம் என்பது அறியாதவர். பல சவாலான சந்தர்ப்பத்திலும் முன்னின்று செயற்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என்றார்.

https://www.virakesari.lk/article/174855

  • கருத்துக்கள உறவுகள்

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல்!

26 JAN, 2024 | 09:58 PM
image

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி  கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெலிசர நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி  ஆகியோர் பலியான சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

https://www.virakesari.lk/article/174886

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த சனத் நிஷாந்தவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்கள்: விசாரணை முன்னெடுப்பு

முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனிநபர்கள் இதுபோன்ற அவதூறான கருத்துக்களை தொடர்ந்து மற்றும் போலி கணக்குகளின் கீழ் பதிவிடுவது கண்டறியப்பட்டது.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் போன்ற ஏனைய நிகழ்வுகளுடன் இந்தச் சம்பவமும் சமூக ஊடகங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/289491

  • கருத்துக்கள உறவுகள்


 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான்.... சில மாதங்களுக்கு முன்  பிக்கு ஒருவர் தாயும்,மகளுடன் 
ஒரே அறையில் இருந்து சல்லாபம் செய்து கொண்டு இருந்ததை நேரில் கண்ட சிலர் 
அவர்களை கையும் களவுமாக பிடித்து அம்பலப் படுத்திய போது.... 
பிக்குவை விட்டு விட்டு... அதனை அம்பலப் படுத்திய ஆறு பேரை பிடித்து விளக்கமறியலில் வைத்தவர்கள்.  

குற்றவாளிகள் சுதந்திரமாக திரியும் நாட்டில்... 
நல்ல காரியம் ஒரு போதும் நிகழப் போவதில்லை.
மாறாக அரசியல்வாதிகளும், போலி பிக்குகளும், போதை வஸ்து கும்பல்களும், 
துப்பாக்கிதாரிகளும் அதிகரித்தே செல்வார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார்.

 

தகவலுக்கு நன்றி புங்கை.

தவறான தகவலுக்கு வருந்துகிறேன்.

கூடுதலான இடங்களில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

ஒரு மோட்டார் சைக்கிளை இவர்கள் ஏற்கனவே முந்தி போகும்போது வாகனம் தளம்பிக் கொண்டு சென்றதாகவும் அந்த நேரமே பொலிசுக்கு தகவல் சொல்ல வேண்டும் போல இருந்ததாகவும் இவர்கள் உருப்படியாக வீடு போய் சேரமாட்டார்கள் என்று தான் கருதியதாகவும் 

பின்னால் வந்து இவர்களது விபத்து பற்றி தகவல் கொடுத்த ஒருவர் சொல்லியிருக்கிறாராம்.

எனக்கு தெரிந்த வரைக்கும் இந்தப்பாதைகளில் மோர்ட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகள்செல்ல முடியாது. அப்படி என்றால் இவர்கள் அதிவேக நெடுஞ்சாலைக்கு வர முன்னரும் மிக வேகமாகத்தான் வந்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.