Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் வாழும் வயதுமுதிர்ந்த பெரியவர்களே எச்சரிக்கையாக இருங்கள்!! Readers Digest நிறுவனத்தின் திருவிளையாடல்கள்!!

Featured Replies

தபாலில் உங்கள் வீடு தேடி வரும் சூதாட்டம்!!

சுமார் நான்கு வருடங்களின் முன் எனது தந்தையாரின் பெயரில் எமது வீட்டு முகவரிக்கு ஓர் அழகிய கடிதம் வந்தது. அதை திறந்து பார்த்தால் அதில் விதம்விதமான ஸ்டிக்கர்கள், வண்ணவண்ணமாக பல்வேறு நிறங்களில் மட்டைகள், ஒற்றைகள்...

தனது பெயரில் ஒரு கடிதம் வந்துவிட்டது, அதுவும் கடிதம் முழுவதும் தனது பெயர் அழகாக பல்வேறுவிதமாக அளங்காரங்கள் செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது... என இவற்றை கவனித்த எனது தந்தையார் மிகவும் குசியாகிவிட்டார். கடிதப்பொதியை நீண்டநேரமாக (சில மணிநேரங்கள்) வலு புளுகத்துடன் வாசித்து ரசித்துவிட்டு இறுதியில் என்னிடம் தனது சந்தேகங்களை போக்குவதற்காக தூக்கிக்கொண்டு வந்தார்.

நான் கடிதத்தை யார் அனுப்பியுள்ளார்கள் என்று முதலில் பார்த்தேன். அட... Readers Digest!!! தாயகத்தில் இருந்தபோது நான் விரும்பிவாசிக்கும் புத்தக கம்பனி!!! மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆஆ வென்று பதற்றப்பட்டு அந்தகடிதத்தில் என்ன விசயம் இருக்கின்றது என வாசிக்க தொடங்கினேன்.

அதில் கூறப்பட்டு இருந்தது என்னவென்றால் Readers Digest!!! இன் சுமார் $39 பெறுமதியான புத்தகங்களை நாம் வாங்கினால், எமக்கு $50 பெறுமதியான பரிசுப்பொருட்கள் தபால் பொட்டலத்தில் இலவசமாக அனுப்பப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. பரிசுப்பொருட்களின் படங்களும் இருந்தன. இவையே அனுப்பப்படும் என்று பரிசுப்பொருட்கள் பட்டியல் செய்யப்பட்டு இருந்தன.

நான் ஏற்கனவே Readers Digest இன் வாசகனாகவும், அபிமானியாகவும் இருந்ததாலும், மேலும் Readers Digest நிறுவனத்தின்மீது நான் மிகப்பெரும் மதிப்பு வைத்து இருந்ததாலும் நான் $39 டொலரிற்கு புத்தகங்கள் வாங்குவது நல்லது என்று எனது அப்பாவிற்கு கூறிவிட்டு, பதில் கடிதத்தையும் எழுதி அனுப்பினேன். அன்றில் இருந்து எமது தபால் பெட்டிக்கு பிடித்தது ஏழரைச்சனி!! இன்னும் சனியன் ஏழுஅரையிலேயே நிற்கின்றது.

பின்பு நடந்தது என்ன?

தொடர்ச்சியாக ஒவ்வொரு கிழமையும் அப்பாவின் பெயருக்கு கடிதங்கள் வரத்தொடங்கின. எனக்கு தெரியாமல் அப்பாவே கடிதங்களிற்கு பதில் எழுதி அனுப்பதொடங்கினார். ஒரு மாதத்தின்பின் அடிக்கடி பெரிய தபால் பொதிகள் வரத்தொடங்கின. ஒவ்வொன்றினுள்ளும் ஏராளமான புத்தகங்கள், வீடியோக்கள், ஓடியோக்கள் இருந்தன. எனக்கு விசயம் விளங்கவில்லை. அப்பாவுக்கும் விளங்கவில்லை. நானும் ஏதோ இலவசமாக கிடைக்கின்றதாக்கும் என்று நினைத்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டேன்.

பிறகு?

சுமார் மூன்று மாதங்களின் பின் $675.00 க்கு Readers Digest இடம் இருந்து ஒரு பெரிய பில் வந்தது. பில்லை தூக்கிக்கொண்டு பதைபதைத்தபடி அப்பா என்னிடம் வந்தார். நான் அதை பார்த்தபின் திகைத்துவிட்டேன். உடனடியாக எதுவும் விளங்கவில்லை. பின்பு அப்பாவிடம் நீண்டநேரம் பல கேள்விகளை கேட்டபோது இறுதியில் என்ன நடந்தது என்று விளங்கியது.

Readers Digest இன் திருவிளையாடல்கள்:

கனடாவில் வாழும் வயது முதிர்ந்த பெரியவர்களின் விலாசங்களை திருட்டுத்தனமாக எங்கிருந்தோ பெற்று, அந்த பெரியவர்கள் மூலம் திருட்டுத்தனமான வகையில் வியாபாரம் செய்வதே இந்த திருட்டு நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

இவர்களின் தமது வியாபாரத்திற்கான Target Segment வயது முதிர்ந்த, ஓய்வு பெற்ற பெரியவர்கள் சீனியர்கள் ஆவர்.

வயது போனவர்களிடம் காணப்படும் பல்வேறு உளவியல் குறைபாடுகளை நன்கு அறிந்து, மிகவும் திட்டமிட்ட முறையில் Readers Digest அவர்களிடம் இருந்து பணம் சம்பாதிக்கின்றது.

பின்விளைவுகள் எவை?

பெரியவர்கள் வீட்டில் இருந்தபடி பணத்தை இழக்கின்றார்கள். திருட்டுத்தனமான முறையில் Readers Digest நிறுவனம் இவர்களிற்கு விற்ற பொருட்களிற்கான பணத்தை கட்டாத பெரியவர்களின் அந்தரங்க விடயங்கள் Credit Collection Agencies இடம் ஒப்படைக்கப்பட்டு இந்த நிறுவனங்கள் பெரியவர்களிற்கு தபால் மற்றும் தொலைபேசி மூலம் நாளும், பொழுதும் தொல்லை கொடுத்து வருகின்றன.

பெரியவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள். பொய்யை, ஒரு பிரமையை உண்மை என நினைக்கின்றார்கள். தமக்கு லட்சக்கணக்கான டொலர்கள் பணம் Readers Digest நிறுவனத்திடம் இருந்து விரைவில் கிடைக்கப்போகின்றது என்று தினமும் கனவு கண்டுகொண்டு இருக்கின்றார்கள்.

தொடர்ச்சியாக Readers Digest நிறுவனம் அனுப்புகின்ற வியாபார தபால்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ளமுடியாமல், தாம் ஏமாற்றப்படுகின்றோம் என்று அறியாமல் பெரியவர்கள் வாழ்கின்றார்கள்.

Readers Digest நிறுவனத்தின் திருட்டுத்தனத்தில் இருந்து பெரியவர்கள் தப்புவது எப்படி?

1. பதில் கடிதம் அனுப்பக்கூடாது.

2. வீட்டிற்கு Register Post - பதிவுத்தபாலில் இல் Readers Digest நிறுவனத்திடம் இருந்து வரும் பார்சல்களை - பொதிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவற்றை திருப்பி அனுப்பவேண்டும்.

3. தபால் அலுவலகத்தில் Readers Digest நிறுவனத்திடம் இருந்து ஏதாவது தபால் வருமாக இருந்தால் அவற்றை திருப்பி அவர்களிற்கே அனுப்புமாறு கூறவேண்டும்.

Readers Digest நிறுவனத்தினால் எனது அப்பா அடைந்த பாதிப்புக்கள் எவை?

1. இதுவரை சுமார் $1200.00 க்கு மேற்பட்ட பணத்தை இழந்து உள்ளார்.

2. வீட்டில் எல்லோரிடமும் நல்ல பேச்சு வாங்கி உள்ளார்.

3. உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளார் - அதாவது இப்போதும் கூட தனக்கு Readers Digest நிறுவனம் சுமார் $50,000 ற்கு மேற்பட்ட பணத்தை விரைவில் தனது வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்போகின்றது என்று கனவு கண்டுகொண்டு இருக்கின்றார்.

4. Credit Collection Agency மூலம் மிகவும் துன்புறுத்தப்பட்டு உள்ளார்.

5. வீட்டில் ஒருவருக்கும் தெரியாமல் களவான முறையில் Readers Digest நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அந்த நிறுவனத்திற்கு அடிமைபோல் - Addicted ஆகிவிட்டார்.

கனடாவில் வாழும் வயதுமுதிர்ந்த பெரியவர்களே!! நீங்கள் Readers Digest என்ற இந்த திருட்டு நிறுவனம் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்!!! இந்த நிறுவனம் உங்களுக்கு ஏதாவது கடிதம் அனுப்பினால் அதை அப்படியே திறந்துபடிக்காது குப்பையில் எறிந்துவிடுங்கள். இல்லாவிட்டால் எனது அப்பா பட்ட கஸ்டங்களை நீங்களும் அனுபவிக்கவேண்டிவரும்.

நன்றி!

dscf0142kd8.jpg

dscf0143kl1.jpg

dscf0146wj6.jpg

dscf0147cg0.jpg

dscf0148ze3.jpg

dscf0149wx9.jpg

dscf0156qz0.jpg

dscf0157dm3.jpg

dscf0159jh2.jpg

dscf0160ec4.jpg

Edited by கலைஞன்

நல்ல தகவல். இப்படி பல நிறுவனங்கள் மோசடியிலீடுபடுகின்றன. நாங்கள் தான் கவனமாக இருக்கவேண்டும். பெரிய பெரிய நிறுவனங்களே இப்படியான மோசடிகளில் ஈடுபடுவதுதான் வேதனையிலும் வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இது போன்ற விடயங்களில் முதலில் வாசிக்க வேண்டியது சிறிய எழுத்தில் இருக்கும் அடிக்குறிப்புகளைத் தான். கவனமாக வாசித்துப் பார்த்தால் சட்டப் பிரச்சினையிலிருந்து தப்பும் வகையில் நிறைய டிஸ்கிளைமர்கள் கொடுத்திருப்பார்கள்.எனக்கும வந்த புதிதில் இது போல ரீடர்ஸ் டைஜெஸ்டிடம் அனுபவம் கிடைத்தது.ஆனால் இழந்தது 35 டொலர்கள் மாத்திரம் தான்.பரிசு விடயங்கள் நம்பக் கூடாதவை.இதை விட நல்ல ஜோக்குகள் எல்லாம் உலாவருகின்றன. உனக்கு ஒரு மில்லியன் டொலர் லொத்தரில் விழுந்திருக்கிறது.பரிசை அனுப்ப வேண்டுமானால் நூறு டொலர் கட்டணம் அனுப்பு என்றெல்லாம் ஈ-மெயில்கள் வருகின்றன. அந்த ஒரு மில்லியனில் கழித்துக் கொண்டு கொடுக்கக் கூடாதா என்று தான் சாதாரண புத்தி உள்ளவன் யோசிப்பான். ஆனால் அப்படி யோசிக்க முடியாத ஆட்கள் காசைப் பறி கொடுத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைஞன் அந்த தகவலுக்கு.அப்பாவுக்கு நல்லதொரு படிப்பினை.

  • கருத்துக்கள உறவுகள்

அதில் கூறப்பட்டு இருந்தது என்னவென்றால் Readers Digest!!! இன் சுமார் $39 பெறுமதியான புத்தகங்களை நாம் வாங்கினால், எமக்கு $50 பெறுமதியான பரிசுப்பொருட்கள் தபால் பொட்டலத்தில் இலவசமாக அனுப்பப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. பரிசுப்பொருட்களின் படங்களும் இருந்தன. இவையே அனுப்பப்படும் என்று பரிசுப்பொருட்கள் பட்டியல் செய்யப்பட்டு இருந்தன.

இதிலையே தகவல் இருக்கு தானே. எந்த மடையன் 39 டொலருக்கு பொருள் வாங்க 50 டொலருக்கு பரிசு தாறான்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயும் இது போன்ற திருகுதாளங்கள் நிறையவே நடக்கின்றன.

இங்கு ஒரு பிரபலமான புத்தகக்கடையொன்றில் மகனொருவர் அங்கத்தவராகவிருந்தார். நிறையப் படங்கள் உள்ள ஆல்பம் மிகவும் பெரியது ஒன்று 10 பிராங் அனுப்பினால் அனுப்புவதாகச் சொன்னார்கள். (சில காவத்துக்கு முன். இப்போது ஈரோ வந்து விட்டது). இவரும் அனுப்பி வைத்தார். அன்றிலிருந்து தபால் பெட்டிக்கு ஒரே சாப்பாடுதான். பார்சல்கள், பொரிய பெரிய புத்தகங்கள், அழகிய படங்கள் என வந்த வன்னமிருந்தன. அவற்றை நிறுத்தமுடியாமல் வீட்டிலே தவித்துக் கொண்டிருந்தனர். நானும் வேலைப் பிரச்சனையில் கவனிக்கவில்லை. ஒருநாள் மனைவி இதை என்னிடம் கூறினா. நானும் உடனே எல்லாவற்றையும் ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு நேராக அந்தக் கடைக்குச் சென்று அவர்களுடன் மிகவும் பிரச்சனைப்பட்டேன். அவர்களோ அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லையென்றும் அது தமது தலைமை அலுவலகத்திலிருந்துதான் வருவதாகக் கூறியபோதும் நான் விடவில்லை. நான் இதை இப்படியே நுகர்வோர் பிரச்சனைகள் கவனிக்கிற இடத்துக்கு கொன்டுபோய் அறிவிக்கப்பேறேன் எனக்கூறி எல்லாவற்றையும் எடுத்தபோதுதான் அவர்கள் என்னைக் கொஞ்சம் இருக்கச் சொல்லிவிட்டு மேலிடத்துடன் போனில் கதைத்து விடயத்தை சொன்னார்கள். அதன்பின் தாங்கள் எல்லாவற்றையும் திருப்பி எடுப்பதாகக்கூறி பெற்றுக் கொண்டார்கள். அதன்பின் இன்றுவரை இப் பிரச்சனையில்லை.பின் மகனும் அவரது அங்கத்தவர் நிலையையும் நிறுத்திக் கொண்டார்.

இது நல்ல அனுபவம். இதனால் இன்னுமொரு பிரச்சனையையும் தவிர்த்துக் கொண்டேன். அதைப் பிறகு சொல்கிறேன்.

ஜெனரல்!!

நல்ல தகவல் ஒன்றை எல்லா பெரியவர்களிற்கும் தந்து இருக்கிறீங்க குறிப்பாக யாழ்கள் வயசு போனவர்கள் எல்லாம் அலட்டான் ஆட்கள் நெடுக்ஸ் தாத்தாவை பார்த்தா தெரியும் :P !!தற்போது உங்கள் அப்பா ஒகேயா அல்லது என்னும் அதனை நம்புகிறாரா??குறிப்பாக முதியோரை நோக்கியே இவ்வாறான கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் செல்கிறது அவர்களும் அதனை யாரிடமும் ஆலோசனை பெறாம காரியத்தில் இறங்குகிறார்கள் இவ்வாறு பல பிரச்சினைகளை சிட்னியில் கேள்விபட்டிருகிறேன் ;) !!ஆகவே அவர்கள் விழிப்பாக இந்த விடயத்தில் இருக்க வேண்டும்,இங்கு அவுஸ்ரெலியாவில் இவ்வாறான மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்கள் வந்தால் அதனை கொண்டு சென்று அங்குள்ளவர்களிடம் ஆலோசணை பெற என ஒரு நிறுவனம் இருகிறது :rolleyes: அந்த நிறுவனம் மின்னஞ்சல்களுக்கு வரும் லோட்டோவில் உங்களுக்கு இவ்வளவு பரிசு விழுந்திருகிறது என்று எல்லாம் அது உண்மையோ அல்லது பொய்யோ என்று அங்கே செல்வதன் மூலம் அறியமுடியும் ஆகவே முதியோர்கள் இந்த நிறுவனங்களுக்கு சென்று ஆலோசணை பெற்று செய்வது சிறந்தது!! :o

நன்றி..

அப்ப நான் வரட்டா!!! :P

பெரியவர்கள் மட்டுமல்ல விடயம் புரியாத பல இளைஞர்களும் இதில் ஏமாந்துள்ளார்கள். காரணம் பெரிய அளவில் காட்டப்படும் அந்தக் காசோலைதான்

உதாரணமாக எனக்கு சென்ற கிழமை வந்த ஒரு மின்னஞ்சலை இங்கு இணைக்கின்றேன். சிலவேளை இதேபோல் மின்னஞ்சல் உங்களுக்கும் கிடைத்திருக்கும்.

Dear xxxxxxxxxxxx

I am Mrs. Anne Howard, the wife of Mr. James Howard; both of us are

citizens of the united state of America. My husband worked with the

Mobile Petroleum in Ukraine for twenty years before he died in the year

2003.We were married for ten years without a child. My Husband died

after a brief illness that lasted for only a week. Before his death we

both got born-again as dedicated Christians. Since his death I decided not to

re-marry or get a child outside my matrimonial home. When my late husband

was alive he deposited the sum of 8.3 Million Pounds (Eight Million

Three Hundred Thousand Pounds) with a Bank in Europe.

Presently, this money is still with the Bank and the management just

wrote me as the beneficiary that our account has been DORMANT and if I,

as the beneficiary of the funds, do not re-activate the account; the

funds will be CONFISCATED or I rather issue a letter of authorization to

somebody to receive it on my behalf (note that y ou need to activate

this account) as my illness will not allow me come over. Presently, I'm

in a hospital in Ukraine where I have been undergoing treatment for

esophageal cancer. I have since lost my ability to talk and my doctors

have told me that I have only a few weeks to live. It is my last wish to

see this money distributed to charity organizations and orphanages anywhere

in the World.Because my relatives and friends have plundered so much of

our wealth since my illness, I can not live with the agony of entrusting

this huge responsibility to any of them. Please, I beg you in the name

of God to help me Stand-in as the beneficiary and collect the Funds

from the Bank.

I want a person that is God-fearing who will use this money to fund

churches, orphanages and widows, propagating the word of God. I took

this decision because I don'thave any child that will inherit this

money and my husband's relatives are not Christians and I don't want my husband's

hard earned money to be misused by unbelievers. I don't want a

situation where this money will be used in an ungodly manner. Hence the

reasons for taking this bold decision.

I don't need any telephone communication in this regard because of my

soundless voice and presence of my husband's relatives around me

always.

I don't want them to know about this development.I await your quick

response to this mail, as this is my last wish to see this funds

transferred before my Death.

Please my beloved for further communication on how we are going to

conclude this, reach me on my

private E-mail : anne_howard008@yahoo.it

Remain Blessed.

Your Sister in Christ,

Mrs. Anne Howard

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.