Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kanja.jpg?resize=300,168&ssl=1

கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில்  கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

பச்சை பொய். அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும்போது அப்படி எல்லாம் அங்கீகாரம் கொடுக்கவில்லையென்றும், அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க வில்லை என்றும் கூறினார். 

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாசெடியை பயிரிட அமைச்சரவை அனுமதி

Published By: VISHNU  05 FEB, 2024 | 11:11 PM

image

ஏற்றுமதி நோக்கத்திற்காக கஞ்சாசெடியை பயிரிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளமை தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாக அவர் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/175662

  • கருத்துக்கள உறவுகள்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயின் கூற்றை மறுக்கும் அமைச்சர் பந்துல!

Published By: VISHNU    06 FEB, 2024 | 11:14 PM

image

கஞ்சா செடியை வளர்ப்பதற்கும் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியுள்ளதனை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, கஞ்சா செடி பயிரிடுவதற்கான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது வேறு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் வாராந்த அமைச்சரவை  ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். 

டயனா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல. அவர் வெளியிட்ட அறிக்கைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அமைச்சரவைக்கு எந்த அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை  என்றும் அவர் கூறினார். 

ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க டயனா கமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175750

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

bandula-3.jpg

கஞ்சா பயிர் செய்கை குறித்து டயானா கூறியதில் உண்மையில்லை : பந்துல!

இலங்கையில் கஞ்சா பயிர் செய்வதற்கும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை எந்த அனுமதியினையும் வழங்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக எந்த அமைச்சரவையில் முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்றைய அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன டயனா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல எனவும் அவர் கூறிய கருத்திற்கு தாம் பொறுப்பல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1368644

  • கருத்துக்கள உறவுகள்

கடைசில இலங்கை கஞ்சா நிலமையில் வந்து நிட்கின்றது,  புத்தரின் மூளைசாலிகளால் . 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழன்பன் said:

கடைசில இலங்கை கஞ்சா நிலமையில் வந்து நிட்கின்றது,  புத்தரின் மூளைசாலிகளால் . 

சிவ மூலிகை என்று நம்மட ஆட்களும் சொல்லி அடிப்பர் எப்ப பாரு அவங்களையே குற்றம் சாட்டி அறிக்கை விடுவது 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அனுமதிக்கலாம் நாங்க என்ன குறைச்சல்??

இவங்களுக்கு கனடாவையும் தெரியவில்லை தங்களது வீக்கமும் புரியவில்லை. அனுமதியுங்கள் புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயின் கூற்றை மறுக்கும் அமைச்சர் பந்துல!

Published By: VISHNU    06 FEB, 2024 | 11:14 PM

image

கஞ்சா செடியை வளர்ப்பதற்கும் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியுள்ளதனை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, கஞ்சா செடி பயிரிடுவதற்கான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது வேறு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் வாராந்த அமைச்சரவை  ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். 

டயனா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல. அவர் வெளியிட்ட அறிக்கைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அமைச்சரவைக்கு எந்த அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை  என்றும் அவர் கூறினார். 

ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க டயனா கமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175750

நாட்டை ஆளும் பொறுப்பு உள்ள பாராளுமன்றத்தில் அமைச்சர்களாக அமைச்சரவையில் இருந்து கொண்டு.   பொறுப்பு அற்றமுறையில். இப்படி மாறி மாறி  பொய் சொல்ல முடியுமா?? இதற்க்கு தண்டணைகள் இல்லையா?? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை   அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பதை மற்ற அமைச்சர்கள் சொல்ல கூடாதா?? எங்கே அமைச்சர் டக்ளஸ்???

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம்........கசிப்புக்கு முன்மொழியுமுன் இது ரத்தாகியது மகிழ்ச்சி......! 😁

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kandiah57 said:

 எங்கே அமைச்சர் டக்ளஸ்???

அவர் ரொம்ப பிசி. (யாருடைய பொய்யை உறுதிப்படுத்தினால் தனக்கு கொமிசன் அதிகம் தருவார்கள் என்ற பேச்சு வார்த்தையில்.)

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் முடிவும் தவறானது.

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிவ மூலிகை என்று நம்மட ஆட்களும் சொல்லி அடிப்பர்

அது நடைபெறும்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கனடாவின் முடிவும் தவறானது.

அது நடைபெறும்.

உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kandiah57 said:

நாட்டை ஆளும் பொறுப்பு உள்ள பாராளுமன்றத்தில் அமைச்சர்களாக அமைச்சரவையில் இருந்து கொண்டு.   பொறுப்பு அற்றமுறையில். இப்படி மாறி மாறி  பொய் சொல்ல முடியுமா?? இதற்க்கு தண்டணைகள் இல்லையா?? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை   அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பதை மற்ற அமைச்சர்கள் சொல்ல கூடாதா?? எங்கே அமைச்சர் டக்ளஸ்???

டக்ளஸை ஏன் இதுக்குள்ள இழுக்குறியள்? அந்த மனுஷன் தானும் தன பாடும் எண்டு இருக்கிறார். டயன்னாவை பற்றி ஏதும்  சொல்ல போய் எதுக்கு வீண் பிரச்சினை. அவர் பெண் வாசனையையே அனுபவிக்காதவர், கடடை பிரமச்சாரி.😜

இங்கு பிரச்சினை என்னவென்றால் இந்த கஞ்சா வளர்ப்பிட்கு பாராளுமன்றில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவையில் இன்னும்வழங்கப்படவில்லை. இதுதான் இங்கு மாற்றி மாற்றி பேசி குழப்பத்தை உருவாக்குகிறார்கள். டயானா அதட்குரிய அமைச்சரிடம் இது பற்றி பேசி இருக்கிறார். அது அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்ட்தாக பேச்சு வந்துதான் இந்த எல்லா குழப்பங்களும்.

எப்படி இருந்தாலும் காவி இதில் தீவிரமாக இறங்கி இருப்பதால் கஞ்சா வளர்ப்பதட்கு சந்தர்ப்பம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

கடடை பிரமச்சாரி.😜

அப்படியா !! நான் நினைத்தேன்” நிறைய மனைவிமாருடனும்  பிள்ளைகளுடனும். வாழ்கின்றார். என்று 🤣......கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்ப்பதன்  நோக்கம் என்ன??? அமைச்சர் என்றபடியால்.  அவரை கேட்டு பார்த்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

டக்ளஸை ஏன் இதுக்குள்ள இழுக்குறியள்? அந்த மனுஷன் தானும் தன பாடும் எண்டு இருக்கிறார்.

அமைச்சரிடம் ஏதேனும் தொடர்புகள் இருந்தால்  அறிவிக்கவும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் கஞ்சா செய்கை. ஏற்றுமதி.

இன்னொரு பக்கம் போதைவஸ்து ஒழிப்பு.. கைது.

என்னடா பண்ணுறீங்க.

சும்மா.. ஊதிப் பெருத்த இராணுவத்தையும் பொலிஸையும் வைச்சு.. எப்படி சமாளிக்கும்.. வறிய சொறீலங்கா..??!

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகக்  குறிப்பிடவில்லை - டயனா கமகே

Published By: VISHNU    08 FEB, 2024 | 01:07 AM

image

(இராஜதுரை ஹஷான்)

கஞ்சா ஏற்றுமதிக்குக் கடந்த திங்கட்கிழமை (5) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக நான் குறிப்பிடவில்லை. கஞ்சா ஏற்றுமதி செய்தால் நாட்டுக்கு நல்லது. பயனற்ற விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என  சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பெயரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு மத தலைவர்கள், சிவில் அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது  இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன 'ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா தொடர்பில் பேசப்படவுமில்லை,கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் எவ்வித பத்திரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை' என்று குறிப்பிட்டு கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக வெளியான செய்தியை நிராகரித்தார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா  ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதாக நான் குறிப்பிடவில்லை. 2023.11.29 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவே குறிப்பிட்டேன்.இந்த அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சமர்ப்பித்துள்ளார்.

கஞ்சா ஏற்றுமதி செய்தால் நாட்டுக்குப் பயன் கிடைக்கும், ஏற்றுமதி செய்யாவிட்டால் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. காலம் காலமாக வெறும் விமர்சனங்களையும், பழைய கதைகளையும் மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/175849

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அமைச்சரிடம் ஏதேனும் தொடர்புகள் இருந்தால்  அறிவிக்கவும் 

இன்று வரைக்கும் அப்படி இல்லை. இனிமேல் சொல்ல எப்படி என்று சொல்ல முடியாது. அப்படி எதுமென்றால் அறிவிக்கிறேன். 😜

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

இன்று வரைக்கும் அப்படி இல்லை. இனிமேல் சொல்ல எப்படி என்று சொல்ல முடியாது. அப்படி எதுமென்றால் அறிவிக்கிறேன். 😜

நன்றி எந்த பக்கம் போனாலும் வேலை இடமாற்றம்  கிடைக்கவில்லை (7 வருடம் மட்டக்களப்பில சொந்த மாவட்டம் அம்பாறை வருவதும் போவதும் தினமும்) அவரை அணுகியாவது அரசியலை வைத்து இடம் மாற்றம் பெற்றுக்கொள்ளதான் போக்குவரத்து செலவு இதர செலவுக்கே காலம் போகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி எந்த பக்கம் போனாலும் வேலை இடமாற்றம்  கிடைக்கவில்லை (7 வருடம் மட்டக்களப்பில சொந்த மாவட்டம் அம்பாறை வருவதும் போவதும் தினமும்) அவரை அணுகியாவது அரசியலை வைத்து இடம் மாற்றம் பெற்றுக்கொள்ளதான் போக்குவரத்து செலவு இதர செலவுக்கே காலம் போகிறது.

 

இது பரவாயில்லை. எனக்கு தெரிந்து எத்தனையோ பேர் காலி, மாத்தறையில் இருந்து தினமும் கொழும்பு வந்து போகிறார்கள். சிலர் ரயிலிலேயே குடும்பமும் நடத்துகிறார்கள். அது சரி, நம்ம பிள்ளையான், வியாழேந்திரன் எல்லாம் அந்த பக்கம்தான் இருக்கிறார்கள். கொஞ்சம் எட்டி பார்க்கலாம்தானே. மடடகளப்பு அரச அதிபருடன் பேசி செய்யலாம் எண்டால் உதவி செய்யலாம். 

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை நான் அணுக வில்லை நன்றி உங்களுக்கு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.